Thursday, 23 April 2020

அவசர நிலைக்காலம்


எமர்ஜென்சி என்கிற ஊழிக்காலம் - அரசின் கோர நடன அரங்கேற்றம் 

ஆத்மாநாம்



1975 ஜூன் 26 என்பது இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட நாள் ஆகும். அன்றுதான் இந்தியாவில் எமர்ஜென்சி என்ற அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோருக்கு எமர்ஜென்சி காலத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நமது நாட்டின் தற்போதைய சூழ்நிலை எமர்ஜென்சி காலகட்டத்தையும், அப்போது பிறப்பிக்கப்பட்ட புதுப்புது சட்டங்களையும், அந்த சட்டங்களினால் உருக்குலைந்த எண்ணற்ற மனிதர்களைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. 






நெருக்கடி நிலைக்காலம் பற்றிய திரை ஆக்கங்கள் :


ஹசாரோன் குவாய்ஷேய்ன் (சுதிர் மிஸ்ரா) 2005
பிறவி (மலையாளம்) இயக்கம் : ஹாஜி எம் காரூன் 1989
வந்தனா குப்தாவின் ஆவணப்படம்


இணைப்பு


இன்று நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஊரடங்கு வாழ்வு, கண்காணிப்பு வளையம், தனிமைப்படுத்தப்படல் என்ற சொல்லாடல்களூக்கு பின்னால் எனக்கு மூன்று வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய மூன்று நாவல்கள் நினைவுக்கு வருகிறது.  முதலாவது பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யூவின் கொள்ளை நோய், அடுத்ததாக அமெரிக்க நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984, மூன்றாவது ஜோஷ் வண்டேலூ என்ற நாவலாசிரியரின் ஃப்ளெமிஷ் மொழி நாவலான அபாயம். 

01. கொள்ளை நோய் (ஆல்பெர் காம்யூ) 


ஆல்பெர் காம்யூவின் இந்நாவல் 17ஆம் நூற்றாண்டின் பிரான்சில் நிலவிய பண்டைய கிரேக்க இலத்தீன் இலக்கிய பாணியைத் தழுவிய துன்பியல் நாடகம் போன்று அமைந்திருக்கிறது. அவ்விலக்கிய நாடகங்கள் குறிப்பிட்ட இடம், காலம், கருப்பொருள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. கொள்ளை நோய் நாவலின் வடிவமும் குறிப்பிட்ட இடம் (நாவல் நிகழும் களமான ஓரான் நகரம்), குறிப்பிட்ட காலம் (1940களில் நடக்கிறது என்பது பூடகமாக 194...என்று நாவலில் குறிப்பிடப்படுகிறது), குறிப்பிட்ட கருப்பொருள் (நகரத்தில் பரவும் கொள்ளை நோய்) என்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. நாவலின் உள்ளடக்கம் ஐந்து இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


(I)   முதல் இயல்

முதல் இயலின் உட்பிரிவுகள் எலிகளின் வெளிப்பாட்டையும், அதன்மூலம் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மேலோங்கிக்கொண்டே போவதையும் காட்டுவதாய் உள்ளது. ஒருநாள் மருத்துவரான ரியெக்ச் ஒரு செத்த எலியைக் காண்கிறார். அடுத்த இரண்டே நாட்களில் நகரெங்கும் எலிகள் இறந்து கிடக்கின்றன. மக்கள் மனங்களில் பயமும், அருவெறுப்பும் உண்டாகும்படி எலிகளின் சாவு விரைவாக நாடெங்கும் பரவுகிறது.  “கொள்ளை நோய் வந்துள்ளது என்ற செய்தியை அறிவிக்கவும்.  நகரத்தை அடைத்துவிடவும்” என்னும் வாக்கியத்துடன்  முதல் இயல் முடிகிறது.  


(II)  இரண்டாவது இயல்

இரண்டாவது இயல் கொள்ளை நோய் நகரத்தில் குடிபுகுவதையும் பரவுவதையும் காட்டுகின்றது. கேட்டை விளைவிக்கும் நோயோடு போராட எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அச்சத்தின் படிப்படியான வளர்ச்சியும் நாடு கடத்தப்படலின் உணர்வுகளும் இடம்பெறுகின்றன. கோடைக்காலத்தின் மத்தியில் நோய் உச்சகட்டத்தை அடைகிறது.
 
(III) மூன்றாவது இயல்

மூன்றாவது இயல் கதையின் ஓட்டத்திற்கும் மையப்பகுதியாய் சுருக்கமான முறையில் அமைகின்றது. இதில் உட்பிரிவுகள் ஏதும் இல்லை. புது நிகழ்ச்சிகள் ஏதும் இதில் இல்லையென்றாலும் நோயின் ஆளுமையை உணர்த்துவதில் இது தனித்தன்மை பெற்று விளங்குகிறது.

(IV) நான்காவது இயல்

நான்காவது இயலில் நோயின் வளர்ச்சியும், அதனால் உருவாக்கப்பட்ட பீதியும் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு சிறுவனின் மரணம் உச்சக்கட்டமாக அமைகின்றது. இருப்பினும் கிறித்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, கிரேண்ட் குணமடைவது புதுயுகத்தின் வாயிலை திறப்பதாக சொல்லப்படுகிறது. நோய் நிதானமாக பின்வாங்குகிறது.

(V)  ஐந்தாவது இயல்

ஐந்தாவது இயல் நோய் மறைவதை குறிக்கிறது. ‘வாயிற்கதவுகள் திறக்கப்படுதல்’, ‘மக்கள் கொள்ளை நோயிலிருந்து விடுதலைபெறுதல்’ ஆகிய இரு நிகழ்ச்சிகளை விவரிப்பதன் மூலம் ஆசிரியர் கதையின் சிக்கலுக்கு தீர்வு காண்கிறார்.

இறுதியில் ஒரு சிறு பகுதி சேர்க்கப்பட்டு முடிவுரையாக இடம் பெறுகின்றது. ஆசிரியர் இப்பகுதியை முதல் இயலோடு இணைத்து விடுகிறார். அது நாவலில் கையாளப்பட்ட நடைக்கு விளக்கம் தருவதாயும், நாவலில் இடம்பெறும் சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்று குறிப்பிட்டதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகின்றது. இப்பகுதியில் தான் ஆல்பெர்ட் காம்யூ நாவலில் கையாண்ட நடையில் காணப்படும் தன்மை, படர்க்கை ஆகியவற்றிற்கு விளக்கம் கிடைக்கின்றது. கதைசொல்லி யார் என்பதும், அவர் ஆங்காங்கே வெளிப்பட்டு கதையை கொண்டு செல்வதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

முதலில் இது ஓர் உருவக நாவல். இரண்டாம் உலகப்போர் உருவாக்கிய பேரழிவு, மனித மனங்களில் அது ஏற்படுத்திய உளவியல் தாக்கங்கள், காயங்கள், வடுக்கள், ஆகியவற்றை ’பிளேக்’ எனும் கொள்ளை நோயின் பின்னணியில் வைத்து ஆசிரியர் நம்மோடு உரையாடுகிறார்.  பேரரசோ அல்லது சிற்றரசோ தன்னை நிலைபடுத்திக்கொள்ள மக்களை கருவிகளாகவும், பொம்மைகளாகவும் மாற்றியமைக்கூடிய வல்லமை படைத்தது என்பது இந்நாவலில் வெளிப்படும் ஒரு முக்கியமான செய்தி. ’பிளேக்’ எனும் தொற்று எலிகள் மூலம் அந்நாட்டிலுள்ள மனிதர்கள் மேல் பரவி துரிதவேகத்தில் ஒரு கொள்ளைநோயாக அவர்களை காவுகொள்வது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கட்டளைக்கு அடிபணிந்து மூளைச்சலவு செய்யப்பட்ட நாஜிக்கள் நிகழ்த்திய மனித இனப்படுகொலைகளை நினைவுகூர்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் மரணபயம்  மிகப்பெரிய அலைவீச்சாக உருவெடுக்கும்போது அதன் சூத்திரதாரியான அரசு எந்திரத்திடம் கேள்விக்கப்பாற்பட்டு மக்கள் அடிபணிவதும், அடிமை நிலைக்குள்ளாவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போவதை நாவலின் ஊடாக நாம் காண்கிறோம்.






திரை ஆக்கம் 
இணைப்பு


02. 1984 (ஜார்ஜ் ஆர்வெல்)



திரை ஆக்கம் 
இணைப்பு


03. அபாயம் (ஜோஷ் வண்டேலூ)



ஜோஸ் வண்டேலூவின் அபாயம் நாவல் திரை ஆக்கம் செய்யப்பட்டதாக தெரியவில்லை.


கொரோனா என்பது வெறும் குறியீடு மட்டும் தான்

(இக்கட்டுரை இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை) கூடிய விரைவில் முழுமையான ஆக்கமாக உங்கள் வாசிப்புக்கு கிடைக்கும்.



No comments:

Post a Comment