எழுத்து வடிவம் : ஆத்மாநாம்
இது இந்தியாவுக்கு எதிரான
போராட்டமுன்னு சொல்றாங்க. அப்படின்னா போராட்டம் நடத்தனவங்களே உக்காந்து பேசணும்.
ஏன் சார்
நீங்க லாரன்ஸ் கிட்ட கேக்க வேண்டியது தானே
இல்லை... என்று ஆரம்பித்து ராம் ஏதோ பேச வருகிறார். எதிரிலிருப்பவர்களின் கேள்விகள் இரைச்சலாவதால்
அவர் பேச வருவது கேட்க முடிவதில்லை. சிலர் மேடம் கொஞ்சம் அமைதியாக இருங்கள் லைவ் போய்க்
கொண்டிருக்கிறது என்கிறார்கள்.
(அநேகமாக
இந்த வீடியோவுக்கான லைவாகத்தான் அது இருக்கும். இந்த வீடியோ மொபைல் கேமராவில் ஷூட்
செய்ததாகத் தான் தெரிகிறது.)
முதல்ல
நான் ஒரு தடவை சொல்றத கேளுங்க.
சார் நீங்க
பேசுங்க லைவ் போகுது
நாம எதுக்காக
போராடனும்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.
நாம சல்லிக்கட்டுக்கு
போராடணும். நிரந்தரத் தடையை நீக்கணும்னு இவங்க தான் நமக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அதத்
தான் அந்த ஐயா வந்து மூணு நாளுக்கு முன்னாடி வந்து சொல்லிட்டு போனாரு. மத்த்துக்கப்புறம்
இதுவே போதும்னு சொன்னாங்க. நம்ம எல்லோரும் மாட்டோம்னு சொன்னதுக்கப்புறம், அவங்க அங்கிருந்து
போனதுக்கப்புறம், நேத்து ஈவ்னிங் வரைக்கும் பிரச்சினை தெரியல. இன்னிக்கி ஈவ்னிங் தான்
பிரச்சினை தெரியுது. ஆனா ஒரு நாள் முழுக்க நாம இருந்தோம். நேத்து கைய வெச்சிருந்தா
கூட நாம இதே சண்டையை போட்டு கலைஞ்சி போயிருப்போம்.
இன்னிக்கி
ஈவ்னிங்கா நேத்து ஈவ்னிங்கா..
இல்ல..இல்ல..
நேத்து ஈவ்னிங்..என்ன நேரம்னே தெரியல.. அடிச்சதுக்கு முன்னாடி என்னா பன்னாருன்னா ஹிப்ஹாப்
ஆதி ஒரு இண்ட்ரி கொடுத்தாரு..என்ன கொடுத்தாருன்னா.. அதாவது மொத்த இந்தியாவுக்கு எதிரா..அதாவது
கொயம்புத்தூர்ல வந்து ஒரு முஸ்லீம் வந்து இந்தியாவை எதிர்த்து பேசுனாரு..
நேஷனல்
ஃப்ளாக்கை இது பண்ணாங்கன்னு..
இல்ல.. அது
இல்ல.. ஒரு முஸ்லீம் வந்து இந்தியாவில சரியா நடந்துக்கிறதில்லன்னு பேசுனாரு.. அதுக்கும்
இதுக்கும் இன்னா சம்பந்தம்னு கேட்டாரு..மத்திய அரச கேட்டாரா.. சாயங்காலம் பேசுனப்ப
என்ன சொன்னாரு ஈவ்னிங் நைட் பேசுனப்போ என்ன பேசுனார்னா.. முஸ்லீம்க எல்லாம் சாப்படு
கொடுத்தாங்க..இவுங்க ஏன் சாப்பாடு கொடுத்தாங்கான்னு இந்து கேட்டாங்கன்னு சொல்றாரு..கோயம்புத்தூர்ல
இந்து முஸ்லீம்க ஒற்றுமையா நின்னு நடத்துன போராட்டத்த.. நம்ம போராட்டத்தை முன்னெடுத்து
கொடுத்த ஒருத்தர்..அங்க ஒருத்தர்.. அதுப்பறம் என்ன சொன்னாங்கன்னா.. தேசியக் கொடியை யாரோ
ஒருத்தர் எரிக்க முயற்ச்சி பன்னாங்கன்னு.. ஆனா நாம இங்க பல லட்சம் பேர் தமிழ்நாடு முழுக்க
ஒவ்வொரு நாளும் எல்லோரும் இருந்துட்டு தான் இருந்தோம். அத வெச்சி
என்னா ஆச்சின்னா.. மீடீயா ஃபுல்லா என்னா பிராண்ட் பண்ணாங்கன்னா.. ஃபேஸ்புக் முழுக்க
என்னா போயிடட்டிருக்குன்னா.. இந்தியாவுக்கு எதிரான ஆட்கள் இங்க உக்காந்துக்கினு போராட்டம்
பண்ணிக்கிட்டிருக்காங்க..
நம்ம இந்தியாவுக்கு எதிரானவங்க கிடையாது இல்ல..
அப்ப இங்கிருக்கறது..
இல்ல..இல்ல.. இப்ப
நம்ம இங்கிருக்கோம்.. நாம பேசுறது வெளில தெரியல.. இங்கிருக்கறது லைவ்லயே வரல..நான்
இங்க உள்ளுக்குள்ள வர்றதுக்கு மூணு மணி நேரம் போராடி தான் உள்ளுக்குள்ள வந்தேன். ஏன்னா..எல்லா
ரோடும் ரெண்டு மணியிலயிருந்தே ப்ளாக். திரும்பி போய்ட்டு சாப்பிட்டு வரலாம்னு போனேன்..போன
நான் திரும்பி வர்ற முடியில.. நான் எதுக்காக வந்திருந்தன்னா…நான் பல போராட்டத்த பாத்துட்டேன்..
ஒவ்வொரு போராட்டத்திலயும்..முத்துக்குமார் இறுதி ஊர்வலத்திலயும் தான் சொல்றேன்.. இப்பிடி
தான் கடைசியா நான் ஏமாந்து போயிருக்கேன்.. நான் உங்க போராட்டத்தை முன்னெடுக்கல.. நீங்களா
தான் முன்னெடுத்தீங்க.. நான் பேச வந்த்தே நீங்க ஏமாற வேணாமின்னு தான் பேசத்தான் வந்தேன்..
அங்க வந்து சண்டை போட்டேன் லாரன்ஸ் கிட்ட..எதுக்கு சண்டை போட்டேன்னா அந்த மேடையை மாணவர்கள்
கிட்ட கொடுங்கன்னு..
அதத்தான்
நாங்க கேக்கறோம்..இந்த பீச்சிலயே..
எல்லோரும்
பேச மறுபடி இரைச்சலாகிறது…ராம் பேச முயல்கிறார்
பேசட்டும்
பேசட்டும் வெயிட் பண்ணுங்க..
ஓர் இடையீடு :
நாம என்ன பேசணும்னு எதிரிலிருப்பவங்க தான் தீர்மானிக்கறாங்க. இயக்குநர் ராம் இந்தியாவுக்கு எதிரானவங்க தான். நான் உட்பட. அதனால் தான் இந்த பதிவிடல். ஆனா எந்த இந்தியாவுக்கு?
ஓர் இடையீடு :
நாம என்ன பேசணும்னு எதிரிலிருப்பவங்க தான் தீர்மானிக்கறாங்க. இயக்குநர் ராம் இந்தியாவுக்கு எதிரானவங்க தான். நான் உட்பட. அதனால் தான் இந்த பதிவிடல். ஆனா எந்த இந்தியாவுக்கு?
நம்ம இந்தியாவுக்கு எதிரானவங்க கிடையாது இல்ல..
கண்டிப்பா..
கிடையாதில்ல..
(எல்லோரும்) கிடையாது..
இங்க போராட்றவன் எவனும் இந்தியாவுக்கு எதிரா நின்னமா..
(எல்லோரும்) இல்ல..
தமிழன்னு சொன்னது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
ராமேஸ்வரம் மீனவன் செத்தத கேட்டது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
விவசாயி தற்கொலையை பத்தி பேசுனது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
ஐநூறு ரூபா, ஆயிரம் ரூபாவ வெச்சி நம்மள வயித்தில அடிச்சிட்டான்னு சொன்னது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
மோடிய எதிர்த்து கோஷம் போட்டது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
இத வெச்சி தான் சொல்றாங்க நாம இந்தியாவுக்கு எதிரானவங்கன்னு.. இப்ப இங்க என்ன நடந்திச்சின்னா.. அவங்க எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவானவங்க.. நாம வந்து அவுங்களோட போராட்டத்துல பூந்து இந்த போராட்டத்த திசை திருப்பிட்டோம்னு நம்மள..
கிடையாதில்ல..
(எல்லோரும்) கிடையாது..
இங்க போராட்றவன் எவனும் இந்தியாவுக்கு எதிரா நின்னமா..
(எல்லோரும்) இல்ல..
தமிழன்னு சொன்னது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
ராமேஸ்வரம் மீனவன் செத்தத கேட்டது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
விவசாயி தற்கொலையை பத்தி பேசுனது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
ஐநூறு ரூபா, ஆயிரம் ரூபாவ வெச்சி நம்மள வயித்தில அடிச்சிட்டான்னு சொன்னது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
மோடிய எதிர்த்து கோஷம் போட்டது குத்தமா..
(எல்லோரும்) இல்ல..
இத வெச்சி தான் சொல்றாங்க நாம இந்தியாவுக்கு எதிரானவங்கன்னு.. இப்ப இங்க என்ன நடந்திச்சின்னா.. அவங்க எல்லாம் இந்தியாவுக்கு ஆதரவானவங்க.. நாம வந்து அவுங்களோட போராட்டத்துல பூந்து இந்த போராட்டத்த திசை திருப்பிட்டோம்னு நம்மள..
அப்போ
தமிழ்நாட்டை தனியா திருப்பி கொடுக்கச் சொல்லுங்க..
இல்ல..இல்ல.. ராம்
திரும்பி எதோசொல்ல முயல அவர் முன்னாலிருப்பவர்கள் எல்லோரும் பேச முயல மறுபடியும் இரைச்சலாகிறது.
உங்களுக்கு
புரிய வெக்கறதுக்கு வந்தது என்னன்னா..நான் சொல்றேன் நல்லா கேளுங்க..ஒரே நிமிஷம்..ஒரு
நிமிஷம் கேளுங்க..கேளுங்க..
நீங்க
சொல்லுங்க சார்..
இந்த போராட்டத்தில
நீங்கல்லாம் இருந்தீங்க.. நான் ஒவ்வொரு நாளும் வந்து வேடிக்கை தான் பாத்துட்டு போனேன்..நான்
உள்ளுக்குள் வந்து ஒண்ணு ரெண்டு தடவை உக்காந்தாலும் தள்ளி நின்னு ஒவ்வொரு இடமா பாத்துட்டு
தான் போனேன்.. எல்லாரும் எப்பிடி போராடினீங்கன்னு தெரியும்..எல்லாரும் எப்பிடி ஆன்ம
பலத்தோட இருந்தீங்கன்னு தெரியும்.. தமிழ்நாட்டுக்கு இவ்ளோ பெரிய எழுச்சிய கொண்டு வந்தீங்கன்னு
தெரியும்.. ஆனால்..இதுதான் வரலாற்றில நடக்கும்..நாம இன்னிக்கி இங்க உக்காந்துகிட்டு
இருக்கறப்ப யாருமே லைவ்ல இல்ல..உங்களுக்கு தெரியாது..
மறுபடியும்
ஒரு பெண் ஏதோ பேச முயல அது இரைச்சலாகிறது.
இல்ல..இல்ல..இரு
செகண்ட் புரிஞ்சுக்கோங்க..மொத்தமா..ஸ்டேட் சொல்லி மீடியா செய்யறது..நம்ம செய்யல.. உங்களுக்கு
புரியுதா..ஏன்னா.. இந்த போராட்டத்த அவங்க முடிக்கனும்னு சொல்லி முடிச்சிட்டாங்க.. முடிச்சிட்டாங்க..
நாம போராட வந்தது வந்து..உங்க வீட்ல காள இருக்கா..
இல்ல..
ஆனா அவரு
சொல்றாரு.. ஹிப்ஹாப் ஆதி அவங்க வீட்ல காள இருந்திச்சாம்.. அதனால போராட வந்தார்னு..அதுக்கு
தான் போராட வந்தேன்..அதுக்கு தான் வந்தேன்..இதுல ஏன் மிச்சத்த பத்தியெல்லாம் பேசுறாங்கன்னு
கேக்கறாரு.. புரியுதா..அப்ப நம்ம வந்து நம்ம வீட்ல காள கிடையாது..நானெல்லாம் சல்லிக்கட்டு
பாத்த்து கிடையாது.. இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு சல்லிக்கட்டுன்னா என்ன்ன்னு தெரியாது..அப்ப
நாம எதுக்கு வந்தோம்..
தமிழருங்கறதுக்காக
(எல்லோரும்)
தமிழருங்கற
உணர்வுக்காக வந்தோம்.. தமிழருங்கற உணர்வுன்னா அதுக்கு அர்த்தம் இந்தியாவுக்கு அதிரி
கிடையாது.. இந்தியாவுக்கு எதிரியா தமிழர் உணர்வுன்னு சொல்றது..
இல்லவே
இல்ல.. (எல்லோரும்)
இந்தியாங்கறது
இங்கு பன்முகப்படுத்தப்பட்ட பல காலாச்சாரம், பண்பாடு கொண்டது..
கரெக்டு..கரெக்டு..
(எல்லோரும் இரைச்சலாக கைதட்டலுடன்)
இப்ப நாம
பாடம் கத்துகிட்டமா..
இப்ப என்ன
பண்ணலாம்..
இல்ல..இல்ல..ஒரு
செகண்ட்.. இந்த காவல் துறை கிட்ட போராடறது.. அவங்களுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்ல..நல்லா
புரிஞ்சுக்கோங்க.. அவங்க ஸ்ப்டேட்ஸ் சொல்றத செய்யறாங்க.. நம்ம மேல கேஸ் போடுவாங்க.. அடிப்பாங்க.. கலைப்பாங்க..இதோட இது முடிஞ்சுடும்.. நம்மள என்னா சொல்லுவாங்கன்னா.. வெறி பிடித்தவர்கள்..சுப்பிரமணிய
சுவாமி சொன்ன வார்த்தையை அவங்க சொல்றாங்க மாத்தி.. இப்ப புரியுதா.. மொத்த தமிழருன்னு
சொன்னவங்கல..மிச்சம் இருக்கற நம்மள பாத்து அவங்க சொல்லிட்டிருக்காங்க..ஒரு செகண்ட்
புரிஞ்சுக்கோங்க..மிச்சம் இருக்கற நாம வெறியர்களா இருப்போம்.. நீங்க என்னா சொல்லனும்னா
யார் உண்மையானவன்.. எதுக்கு போராடினோம்..கடைசியில இவ்ளோ மனித சக்திகளையும் கூட்டினது
உங்க வீட்டு காள மாடு வெளில வர்றதுக்கு தானா..
(சில கணங்களுக்கப்புறம்) இல்ல..இல்ல..(எல்லோரும்)
இல்லல்ல.. (ராம்
ஆக்ரோஷமாக) காள மாடு வெளில வர்றதுக்கா நாம போராடினோம்..
இல்ல..இல்ல..
(ஒரு குரல் சத்தமாக) பதில் சொல்லு இப்போ..
இருங்க..
நான் என்னா கேக்குறேன்.. இந்த முதலமைச்சரும் பி.எம்மும் நம்ம எந்திரின்னு சொறாங்க இல்ல..
அப்ப போராட்டம் நடத்துற முதல் நாள் வந்து சொல்லியிருக்கலாமில்ல..
கண்டிப்பா..
கண்டிப்பா..
முதல்
நாள் பத்து நாள்.. எல்லாத்தோட கேள்விக்கெல்லாம் பதிலில்ல.. இதத் தான் முதல் நாள் பத்து
பேர் போய்ட்டு வந்து சொன்னாங்க..சி.எம்..பாத்துட்டு வர்றோம்னு...அப்ப போயிருந்தா பிரச்சினையே
இல்லயே..அப்போ ஆறு நாள் உக்காந்து உங்களுக்கு தேவாயான சட்டம் வந்துட்டா நீங்க போன்னா
போய்டுவீன்னு சொல்லுவீங்க.. நம்ம கிட்ட வந்து நெகோஷியேட் பண்ணக்கூட அவங்க தயாராயில்ல..
அவங்க என்ன சொல்லிடாங்கன்னா.. வங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல..ஏன்னா அவங்க
வேற போராட்டம் போட்றாங்க..நாங்க வெறும் சல்லிக்கட்டுக்காக தான் வந்தோம்..
(ஒரு பெண்
குரல்) அப்போ இங்க இருக்கறவங்கல்லாம் பைத்தியமா…
அத்தான்
சொல்றாங்க..
(அதே பெண்
குரல்) இப்ப என்ன பண்ணனும்..
(ஒரு ஆண்
குரல்) இருங்க..இருங்கா..
நாம பைத்தியம்
இல்லன்னு நிரூபிக்கனும்னா..இந்த போலிஸ் கிட்ட போராட்றதோ..இந்த மீடியா குரலும்..நாம
பேசுன எல்லா நல்லதையும் வெளியில சொல்லணும்..
மீடியா
பவர்..
ஃபேஸ்புக்
லைவ் போகுது..எல்லாம் லைவ் போகுதுங்க சார்..
இப்ப எல்லாத்தையும்
ஜாம் பண்ணிட்டாங்க..என்ன பண்ணிட்டாங்க.. நாம ஃபேஸ்புக் யூஸ் பண்ணல..வாட்ஸ்-அப் யூஸ்
பண்ணல.. நாம என்ன நெனக்கிறோம்னு வெளில தெரியல..நம்ம மேல அக்கறை இல்ல.. இல்ல..
யெஸ்..யெஸ்..
உள்மை..உண்மை..
நாம கடைசி
வரைக்கு பொறுமையா இருந்தோம்.. (தொண்டை அடைக்க ராம்) முத்துக்குமார் வந்து..அவனோட.. எல்லோரும்
சொல்றாங்க நான் சாப்பாடு வாங்கி போட்டேன்.. கழுத்து வலி.. எத்தனையோ பேர் இங்க உயிர்
நீத்திருக்கான்..
(ஒரு பெண்
குரல் அதனை வழிமொழிந்து ஏதோ கூறுகிறது..ஒரு பொண்ணு அங்க இதுல விழுந்து செத்திருக்கா...
அதுக்கு யாரு பதில் சொல்லுவா..)
இது தான்..இதே
தான்.. முத்துக்குமார் இறுதி ஊர்வலத்துலயும் இப்பிடித்தான் வீணா போனோம். இந்த தடவையும்
வீணாயிடுச்சி..அட்லீஸ்ட் இப்ப புரிஞ்சிகிட்டோம்ல நாம யாரு என்னன்னு.. அடுத்த தடவ போராட்றப்ப..
ஒரு குழு அமைக்கணும்…நம்ம தான் பேசணும்..
கண்டிப்பா..
இருங்க..இருங்க..ஒண்ணே
ஒண்ணு..ஒரு நொடி..இந்த போராட்டத்துல என்ன சொன்னோம்னா இதையெல்லாம் தாண்டி..இந்தியாவுல
தமிழன்னு ஒருத்தன் இருக்கான்னு நாம தான் பதிவு பண்ணோம்..
கண்டிப்பா..
ஆனா இன்னிக்கி நம்மள நாய் மாதிரி தொரத்தி விட்றாங்க..
இல்ல..இல்ல..தொரத்தல.. நல்லா
தெரிஞ்சுக்கோ..நீ தான் இங்க நின்னு பேசிக்கிட்டிருக்க.. அவன் முடிஞ்சிடிச்சின்னு நெனச்சிட்டிருக்கான்..ஏன்னா
நாம தமிழனா இருக்கோம்..
கொஞ்ச
நேரம் பேசுனா இங்க வருவாங்க அப்போ..
(ஒரு பெண்
குரல்) வரட்டும்..வரட்டும்..
இப்ப நாம
அவங்கள எதிர்த்து போராட்றது இல்ல...இன்னக்கி சொன்னாலும் சொல்லாட்டியும்..இங்க உக்காந்த
ஹோல் டீம் இருக்குல்ல.. இங்க பாத்திட்டிருக்க இந்த நூறு பேரால தான் சென்னைல இவ்ளோ கூட்டம்
வந்து சேந்துச்சி..இவங்கல்லாம் எதுக்கு வந்தாங்க..என்ன பேசுனாங்க..சந்தோஷமா பேசுனாங்க..நேத்து
நைட் நான் வந்தேன்..எல்லோரும்..அப்பா மட்டும் குழந்தைகளை மேல உக்கார வச்சி ‘சல்லிக்கட்டு
எங்கள் இன உரிமை’ன்னு சொல்லி போட்டோ எடுத்தாங்க..’தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து
நில்லடா’ இந்தியன்னு ஒரு குழந்தை சொல்லுது..அவங்க அப்பா போட்டோ எடுக்கறாரு..ஒரு இடத்துல
என்ன பேசறாங்க..விவசாயி தற்கொலைய பத்தி பேசறாங்க.. ஒரு இடத்துல விவசாயிங்கள பத்தி பேசறாங்க..
ஒரு இடத்துல நம்மாழ்வார பத்தி பேசனாங்க..ஒருத்தன் மின்சாரத்த பத்தி பேசனான்..ஒருத்தர்
சல்லிக்கட்டு வேணும்னு பேசறாரு.. அப்ப நாம எல்லோரும் ஒண்ண தான் சொன்னோம்.. தமிழனா இருந்து
நாங்க நெறைய பிரச்சினைய சந்திச்சிட்டோம்டா..எங்களுக்கு இந்தியனா இருக்கறதுல பிரச்சினையே
இல்ல..
ஆமா பிரச்சினையே
இல்ல..
ஏன்னா
உன்ன விட இந்தியாவ நாங்க நேசிக்கறோம்..
கண்டிப்பா..
ஏன்னா.. அவன
விட இந்தியான்னு சொல்லி பேர் வாங்கறவன விட நாங்க நெறைய நேசிக்கறோம் இந்தியாவ..ஆனா..
தமிழன்ன்னு இன்னிக்கி நாம வந்து சேந்திட்டோம்.. ஏன்னா.. இவ்ளோ நாள் நேஷனல் மீடியாவுல
உங்களுக்கெல்லாம் ஒரு செகண்ட் நியூஸ் கிடையாது. இந்த நாலு பேர் பேசறதுக்கெல்லாம் ஒரு
செகண்ட் அளவு நியூஸ் கிடையாது. தமிழன்னா பொறுக்கிகள்.. தமிழ் பிரச்சினையே கிடையாது..
ஆனா இன்னிக்கி தான் நேஷனல் மீடியா மாறியிருக்கு.. ஏன்னா நாம இப்ப உக்காந்த்து.. இந்த
புரட்சி நம்ம பண்ணினது.. நாம் என்ன புரட்சி பண்ணியிருக்கோம்.. தமிழ்நாட்டுல ரொம்ப வருஷத்துக்கப்புறம்
’தமிழண்டா’ன்னு ஒரு கோஷம் நம்மளால கேட்டிச்சி..
கண்டிப்பா..கண்டிப்பா..
முடிஞ்சி
போனது ஒகே.. இப்ப..
முடியல.. முடியல.. கேளுங்க
என்ன பண்ணனும்..
என்ன பண்ணனும்.. அங்க லத்தி சார்ஜ் பண்றவங்களுக்கு என்ன பண்ணனும்..சொல்லுங்க சார்..
அதாங்க.. அதாங்க.. இது
முடியல.. இதுதான் ஆரம்பம்..இப்ப நீங்க வந்தீங்க.. முதல் பொலிட்டிக்கல் போராட்டம்.. அது
என்னன்னு பாத்தோம்..இப்ப நம்ம அடுத்த பொலிட்டிக்கல் போராட்டம் என்னன்னு சொல்லணும்.. இங்க
நடந்தது என்னன்னு பதிவு பண்ணனும்..இந்த வரலாற்றை வெளில சொல்லணும்.. இத்த்தான் நான் உங்க
கிட்ட சொல்லிட்டிருக்கேன்.. திரும்பவும் வரலாற்றை விட்டுட்டு நாம ஏமாளிகளா போகக்கூடாது..
(குரல்கள்)
இப்ப என்ன பண்ணனும்…
(ராம்
ஏதோ கையமர்த்தி சொல்ல வருகிறார். வீடியோ முடிவடைகிறது. ராம் இளைஞர்களின் இத்தகைய எழுச்சிமிகு
போராட்ட வடிவங்கள் குறித்து தொடர்ந்து எதிரொலிப்பு செய்வார் என்று எமக்கு நம்பிக்கையுண்டு)
No comments:
Post a Comment