Tuesday, 24 April 2018

லகான் : பேரரசுக்கெதிராக மட்டை பிடித்து ஆட வருதல்

Emanauele Saccarelli

லகான் : இந்தியாவில், முன்னொரு காலத்தில் 

இயக்கம் : அசுதோஷ்
திரைக்கதை : குமார் தவே, சஞ்சய் தய்மா & அசுதோஷ் கோவாரிகர் 
உரையாடல் : கே.பி.சக்சேனா.

சத்யஜித்ரே -உலகத் திரைப்பட வரலாற்றின் உயர்ந்த இடத்திலுள்ளவர்- தனது நாட்டின் திரையுலகு பற்றி விமர்சனக் குரலெழுப்பியவர், இந்தியத் திரைப்படங்களின் குறைகள் என்ன? எனும் கட்டுரையில் 1948ம் ஆண்டு, நடைமுறையிலிருந்த அனுசரணை மற்றும் தப்பிக்கும் மனப்பான்மையுடன் இந்தியத் திரைப்படங்கள் இருந்ததற்கு வருந்தியுள்ளார். இன்றும் நிலைமை மாறவில்லை.

பாலிவுட்டில் (மும்பையில்) தயாராகும் நூற்றுக்கணக்கான படங்களில் பெரும்பான்மையானவை வழக்கமான பாணிகளிலானவை. அவை, குடும்பத்தின் மிகையுணர்ச்சிகளின் மெய்யான காதல், நிச்சயித்த திருமணம், வெளிநாடு வாழும் இந்தியச் செல்வந்தரின் வாழ்வு - மரபு சார்ந்த தேவைகள் மற்றும் கவர்ச்சிமிகு இளைஞர்களின் கனவு காட்சி இடையே இழிபடுகின்றதாயும் நம்புதற்கரிய இந்திய ராம்போ தனியனாய் நின்று பாகிஸ்தானியப் படையை வெல்வதாயும் இருக்கும். அலுப்பூட்டும், இனிய மற்றும் உவகையூட்டல்கள், கட்டாயமான மற்றும் கோணங்கித்தனமான பாட்டு --நடனங்கள், முட்டாள்தனமான தேசியவெறிக் கூச்சல் -சுருக்கமாகச் சொன்னால்- பொதுவாக கருத்தாழங்கள் தேவைப்படுகிற நிலைமையில் --இந்தியத் திரையை அல்லற்படுத்துகின்றன.

இது வெட்கக்கேடானது, வரலாறும், செறிவுமிக்க இந்திய நூல்கள், பெருமையும் சிக்கலுமான அதன் மக்கள், வெடிக்கும் தன்மைய முரண்பட்ட அதன் சமுதாய வாழ்வு எனத் தாராளமாக தரும் செய்திகளை, பல லட்சம் டாலர்கள் கொட்டப்படும் தொழிற்துறையால் மட்டுமே ஒருவேளை மயக்கத்திலாழ்த்தி உணர்விழக்கச் செய்யமுடியும். இந்தியப் படங்கள் -இன்னமும் மொத்தத்தில்- சிறப்பானதாயில்லை.

இந்த உள்ளடக்கத்தில், ஆஸ்கார் விருதுக்கு -சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் அனுப்பப்பட்ட படமான லகான் புத்துணர்வு தருவதாய்த் தோன்றுகிறது. இந்தியத் தயாரிப்பளவில் இல்லையென்றாலும், மேலைத் தயாரிப்பை ஒப்பிடுகையில் நீளமாய்க் கருதப்படும். லகான், பார்ப்பவரின் பொறுமையைச் சோதியாது, பரிசளிப்பது போல் வந்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாயுள்ளது, அருவருப்பான கிரேசி சிங், தவிர்த்து, பிறர் நடிப்பு ஏற்கக் கூடியதாயுள்ளது. இப்படம் எழுப்பும் கேள்விகள் வெற்றுத்தன்மையினின்று விலகியவை. நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான் தொடக்கம் கலைஞர் அனைவரும் ஈடுபாட்டுடன் ஆழ்ந்து, முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

பிரிட்டிஷ் காலனித்துவ இராணுவத் தளபதி ஆட்சியிலுள்ள சம்பானேர் எனும் கிராமம் வறட்சியாலும், கொடிய நடைமுறைகளாலும், 1893ம் ஆண்டில் இருந்த நிலையைப் பற்றிக் கூறுவதேலகான் தன் விருப்பம்போல் அதிகாரி கிராமத்தினரின் ஆண்டுக்கான வரியை - "லகான்"-ஐ இருமடங்காக்குகிறார். மூர்க்கமான புவன் எனும் வேளாண் இளைஞனின் எதிர்ப்பால் சீற்றமூட்டப்பட்ட தளபதி -தன்னுடன் இந்தியர்களை கிரிக்கட்டில் போட்டியிட அறைகூவுகிறார். தோற்றால் வரி மும்மடங்காகும், வென்றால் வரி நீக்கம். கிராமத்தின் வாழ்வே பணயமாக்கப்பட்ட நிலையில் புவன், வெளிநாட்டு விளையாட்டை அறியாத தொடக்கச் சிக்கலை மற்றும் ஐயுறவாதத்தை சமாளித்து, சாதிமத வேறுபாடுகளையும் களைந்து, இந்தியக் கிராமத்தினரை வெற்றிக்கும் விடுதலைக்கும் அழைத்துச் செல்கிறான். இந்து -இஸ்லாமியர், தீண்டத்தகாதார்- அந்தணர் ஒன்றுபட்டு, பிரிட்டிஷாரை அவர்களது விளையாட்டிலேயே வெல்கின்றனர்.

கிரிக்கெட் பற்றிய அடிப்படை அறிவின்றி, கதையின் நுட்பங்களைப் பாராட்டவியலாது. எடுத்துக்காட்டாக, புதிய பந்தில் சுழற் பந்துவீச்சு (ஸ்பின் பெளலிங்) பயனற்றுப்போவது, அல்லது ஒரு கிராமத்தானின் ஸ்பின் மற்றும் வீசும் விதம் குறித்த மறைமுகமான விதி, இந்த நுட்ப விவரங்கட்கு மேலாக, இவ்விளையாட்டு பற்றிய அரசியற் குழப்பங்கள், கவனிக்கத்தக்கன. தனது, `எல்லைக்கு அப்பால்`, எனும் புத்தகத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சிறிது காலம் ஈடுபட்ட, டிரினிடாடின் குறிப்பிடத்தக்க அறிவாளியான சி.எல்.ஆர்.ஜேம்ஸ், அவற்றை நினைவு கூரத்தக்க வகையில் விவாதித்துள்ளார். இந்தியாவில், மேற்கிந்தியர் போலவே கிரிக்கெட் பெரும்பான்மையானோரால் ஆடப்படுகிறது -எண்ணற்ற இளைஞர், செருப்பில்லாமல், சமன் செய்யப்படா களத்தில், தற்காலிகமாக தயாரித்த பொருட்களை வைத்துக்கொண்டு, விளையாட்டின் மரபார்ந்த, பழக்கம் மற்றும் அது அன்னிய நாட்டில் தோன்றிடினும் அவர்கள் அப்படி ஆடுகிறார்கள். காலனிய பாரம்பரியம் விரிவாக்கிய விளையாட்டு எனும் உணர்வும் தாண்டி வரப்பட்டது. இருந்தும் இப்போது இந்தியாவில் கிரிக்கெட் பிரமாண்டமான தொழில் ஆகும். தேசிய அணியின் விளையாட்டு வீரரது சம்பளம், முன்னுரிமை, மற்றும் வெற்றி நிர்ணய ஊழல் முதலியன விளையாட்டின் மீதான தொடர்ந்து தேசிய அளவில் பரபரப்பும் பிரபலமான வெறியாயுமுள்ளது. லகானின்சிறப்புகளில் ஒன்று, சமூக மற்றும் வரலாற்றுப் பதட்டங்கள், புத்திசாலித்தனமாகக் கிரிக்கட் களத்தில் வெளிப்படுத்தப்படுவதாகும்.

கதை கூட துணிவு, எதிர்த்தாக்குதல் மேலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான வெற்றி என்று உருவகப்படுத்துவதாக இருக்கிறது. இது ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான விஷயத்திற்கானதாக ஆக்கும் என்பது பற்றி கேள்விக்கு இடமில்லை. ஆயின் இப்போதைய சூழலில், ஏகாதிபத்தியத்தின் வீச்சு எங்கும் பயங்கர வலுவுடன் எங்கும் உணர்கையில்லகான்போன்ற படங்கள், சிறப்பான மறைமுக முக்கியத்துவத்துடன் விளங்குகிறது. பாலிவுட்டின் தயாரிப்புகளில் இது ஒன்றே மற்ற அர்த்தமற்றவையினின்று வேறுபடுத்திக்காட்டும்.

இத்திரைப்படத்தின் செல்வாக்கு மற்றும் முக்கியத்துவத்தை உணர்கையில், ஒருவர் தற்போதைய இந்திய அரசியற் சூழலை --பொருளியல் மற்றும் அரசியல் விடுதலையை மேற்கிலிருந்து பெற்றதாய்ப் பேணுகிற நேருவிசம் இல்லாமற் போன சூழலை கருத்திற் கொள்ள வேண்டும். அரசு, தொழிற் துறைகளைத் தனியார்மயமாக்கல், பொருளாதாரத்தின் பல துறைகளை அந்நிய முதலீட்டை வரவேற்றல், பணக்கட்டுப்பாட்டில் தளர்ச்சிகள் போன்ற-- சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் வேலைத் திட்டங்கள்" 1991இல் தற்செயலாக தொடங்கவில்லை, இவை இந்தியச் சமூகத்தில் பேரிடர் தரும் விளைவுகளை ஏற்கனவே வீழ்படிவாக்கியுள்ளன. தேசியம் மற்றும் ஏகாதிபத்தியம் பற்றிய கேள்விகள் புதுப்பிக்கப்பட்ட பலத்துடன் அரசியல் விவாதங்கள் மற்றும் ஆழ்ந்த யோசனைகளிடையே எழும்பும் சூழலை உருவாக்கியுள்ளது. "சீர்திருத்தத்திற்" காக வாதிடுவோர், மறைமுகமாக -சில சமயம் வெளிப்படையாக- மேலை நாட்டிற்கு நாம் இந்தியாவை விற்கின்றோமா என நிச்சயம் கேட்டுக்கொள்வர். அவர்களது பதில் --காங்கிரஸ் ஆட்சியில் தெடங்கி-- தீவிர இந்துத்துவ தேசியவாதத்தை அதிகரித்த அளவில் உறுதிப்படுத்துகின்றது.

இந்த உள்ளடக்கத்தில் பார்க்கையில்லகான்- ஐ விடுதலைக்கான இந்தியர்களின் போராட்டத்தின் அரைகுறையான, சம்பிரதாயமான படப்பிடிப்பாகக் காண்பது கடினம். மேலும் பல, இங்கு பணயமாக வைக்கப்பட்டு உள்ளன. திரைப்படம் -பல குறைகள், அணுகல்கள்- இருப்பினும் கருத்தாய்வுமிக்கது. திரைப்படத்தின் அரசியல் விளைபயன்கள் மற்றும் நோக்கநிலை என்பனவற்றை மிகைப்படுத்தாதிருப்பினும்- நேட்டோ படைகள் காப்பவராயும் உதவுபவராயும் தோன்றும் (மனிதர் இல்லா நிலம் எனும் படம்) வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதை வெல்வது- வியப்பை அளிக்கவில்லை.

படத்தின் குறைகள் காலனியப் பிளவின் இருமருங்கிலும் காணப்படுகின்றன. காலனியாதிக்கத்தைப் பொறுத்தவரை பிரிட்டிஷாரை ஒட்டுமொத்தமாயும் வெறும் தீயவராய் காட்டும் வேலையினைத் தவிர்த்துள்ளது. ஆயினும் எதிர்ப்பக்கமாக, நெடிய தூரத்திற்கு ஊசலாடுகிறது. பிரிட்டிஷ் தளபதி எனும் போக்கிரியின் உருவத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கொடுங்கோன்மைகளும் வன்செயல்களும் தெளிவாகக் காட்டப்படுகின்றன. அவன் துரோகியாயும், பாதுகாப்பற்ற விலங்குகளைக் கொல்வது, உள்நாட்டு அரசரை அவரது மத நம்பிக்கைக்கு எதிராகப் புலாலுன்னச் செய்வது என்றிருக்கிறான். மாறாக, அவனது தலைமையகத்து உயர் அலுவலர்கள், கிரிக்கட் போலவே அரசியலிலும் நேர்மையாயிருக்கிறார்கள். கதையின் முக்கியக் கட்டங்களில், அவர்கள் இழிவாகக்கருதும், தளபதியின் அசிங்கமான தத்திரங்களைத் தடுக்கிறார்கள். கிரிக்கெட்டில், கிராமத்தினர் வென்ற பின்னர் அவர்கள், கன்டோன்மென்டை விட்டு வெளியேறுகின்றனர். பலரும் நன்கு அறிந்த ஒரு காட்சியில், காலனி நிர்வாகத்தின் கணிசமான அளவு நாகரிகம் மற்றும் நியாயமானதன்மையின் உயர் மட்டத்தின் காரணமாக, பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி கம்பத்தை விட்டுக் கீழே இறங்குகையில், கிராமத்தினர் வெற்றிக் களிப்புடன் கூடிநிற்பர்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான இந்தியப் போராட்டத்தைப் பொறுத்தவரை கிராமத்தினரை ஒன்று கூட்டுவதில் புவனின் முயற்சிகள் நியாயமாய்ப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீண்டாமை பற்றிய பேச்சு உணர்வுமிக்கதும் நம்மை அசத்துவதாயும் உள்ளது. ஆயினும் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு எந்திரத்தில், வரலாற்றில் தவிர்க்கவியலாத மோசடியாக இருந்த, இந்திய இடைத்தரகரின் பாத்திரப்படைப்பு மற்றும் முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரசால் தோன்றிய தட்டினர்-முழுமையாக ஏற்கமுடியாதவாறு படைக்கப்பட்டுள்ளனர்.

காதற்கதையின் இயல்புக்கு சாய்வதும் மட்டமான தேசிய அரசியலுக்குள் சறுக்கிச்செல்வதும் பற்றிய சில சந்தேகங்களை இது எழுப்புகிறது. இந்தியச் சமூக அடுக்குகளில் சில -பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகட்கு வழங்கும் ஒத்துழைப்பு பற்றிய வருத்தமான உண்மைகளைப் பூசி மெழுகுவதில் யாருக்கும் பயனில்லை- அதுவும் இன்றைய சூழ்நிலையில்.

லகானில், கிராமத்தாரிடையே பிரிட்டிஷுக்கு உதவும் துரோகியும் உண்டு. ஆயின், அவன் நோக்கமோ அற்பமானவை ஆகையில், அவனும் இறுதியில் தன் தவறுணர்ந்து திருந்துகிறான். இராஜாவின் பாத்திரம் -கிராமத்தினரை பெயரளவில் ஆட்சி செய்தாலும், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலுள்ளார் என்பது திருப்தியான முறையில் காட்டுப்பட்டுள்ளது எனினும், சில கேள்விகளை எழுப்புகிறது.

போட்டி ஆட்டத்தின் தொடக்கத்தில், இராஜா தனது பிரிட்டிஷ் வெறுப்பைக்காட்டி, கிராமத்தாரிடம் அயல் நாட்டினரைத் தோற்கடிக்க, ஊக்குவிக்கிறார். ஒரு சமயம், இராஜா இந்தியன் என்பதால் அவரிடம் செலுத்தப்படும் வரி முறையானது போலக் காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில், புவன் கசக்கிப் பிழிவதை இன, தேச ரீதியில் சிந்திக்கிறான்: "நான் இராஜாவிடம் செலுத்தும் வரியை, அவர் அதனை அவர்களின் கறைபடிந்த கரங்களில் தருகையில் என் இதயம் குமுறுவதை உணர்கிறேன்" என்கிறான்.

ஆயினும், இராஜா எப்போதும் ஆதரவாளராகக் காட்டப்படவில்லை. கிராமத்தினர் முழுமூச்சுடன் அவரைப் பார்க்க வருகையில், அவரோ படம் தீட்டப்படுவதற்காக `போஸ்` கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவர்களைத் திருப்பியனுப்பி விடுகிறார். கிராமத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்ட மற்றும் இராஜாவின் நிலையைக் கண்ட புவன், இராஜாவுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்க விரும்புகிறான்: "இராஜா கவனிக்காவிடிலென்ன? விரல்கள் சேர்ந்தால் முஷ்டி ஓங்கும்" என்கிறான். மேலும் பிரிட்டிஷ் மற்றும் இராஜா இவர்களுக்கு எதிராக, கிராமத்தினரின் உழைப்பின் பலாபலன்களைப் பேணுகிறான்: "வலமோ, இடமோ நம் கையே தருகிறது. விதையிட, இந்நிலத்தை யார் உழுதார்? நாமே! யார் நீர் பாய்ச்சினார்? நாமே! பின் நாம் ஏன் அவர்கள் பெட்டியை நம் விளைச்சலால் நிரப்பவேண்டும்?

"இந்தியத் திரையுலகிற்கு, பொதுவானதும் நீடித்திருப்பதுமான திருப்பத்தைக் காட்டுவதாய்லகான் இராது. உண்மையென்னவெனில், கிடைத்தவற்றுள் தெரிந்தெடுக்கும் நிலையில் திரையுலகு லகானை இந்தியத் தயாரிப்பாக ஆஸ்கார் விருதுக்காக அனுப்பியதில் ஒரு முக்கியத்துவம் உள்ளது. ஆனால் ஒரு விதியாகவே, இத்திரையுலகு தொடர்ந்து எந்திரத்தடையாக, எண்ணற்ற இழிவான, அனுசரித்தும் போகும் படங்களையே தயாரிக்கின்றது. எடுத்துக்காட்டாக`கபி குஷி கபி கம்`, போன்ற உப்பிக் கொளுத்த மற்றும் மோசமான படங்களும் வெட்கமேதுமின்றி சர்வதேச அங்கீகாரத்துக்காக லகான் உடனேயே அனுப்பப்பட்டன. விதிவிலக்காகக் கருதப் பெறினும்லகான், மகிழ்ச்சி தருவதும் மதிப்பானதுமான ஒன்றே.


No comments:

Post a Comment