Tuesday, 24 April 2018

மனநோயின் மொழி

டேவிட் கூப்பர்
தமிழில் : லதா ராமகிருஷ்ணன்



அறுபதுகளில் சம்பிராதய மனநலத் துறைக்கு எதிராக உருவான ‘ஆண்டி சைக்கியாட்ரி’ இயக்கத்திற்குள் முக்கியமான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சிய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்குமுறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் நீட்டித்து வரும் குடும்ப அமைப்பானது உலர்ந்து உதிர்ந்து போகவேண்டும் என ஆசைப்பட்டவர்.

டேவிட் கூப்பர் எழுதிய முக்கிய புத்தகங்கள் :

  1. Psychiatry and Anti Psychiatry 
  2. The Death of the Family 
  3. Grammer of Living 
  4. Editor : The Dialectics of Liberation
‘பைத்தியத்தின் மொழி’ என்று நாம் சொல்வது அதிகார வர்க்க துணைக்கருவியான உளவியல் துறை, மருத்துவச் ‘சாப்பா’ குத்தி ஒதுக்கி வைக்கும் மனச்சிதைவுக்குள்ளான சிலரின் பொது வாழ்க்கை அல்ல. பைத்தியம், பைத்திய மொழி என்று சொல்லும்போது என்னில் உள்ள பைத்தியம், உங்களிடமுள்ள பைத்தியத்திடம் பேசுவதைத் தான் குறிப்பிடுகிறேன். 

No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...