Sunday, 30 March 2025

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது 


உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலாம் மரபு, பண்ணையும் இராகத்தையும் ஆங்கிலத்தில் Mode என்றும் Scale என்றும் குறிக்கின்றது. ராகம் என்பது அராகம் என்ற பழஞ் சொல்லில் இருந்து வந்தது. இதற்கு பண் என்ற பழம் பெயரும் உண்டு.

முதல் மரபைச் சார்ந்த தமிழ் இசை, தென்னக இசை என்றும் கர்நாடக இசை என்றும் இந்திய இசை என்றும் கீழை இசை என்றும் இன்னிசை என்றும் (Melodic Music) என்றும் குரல் பகுப்பு இசை (just intonation) என்றும் பல பெயர் பெறும்.

இந்த இசை முறை அராபிய, எகிப்திய வட்டாரம் மற்றும் அதற்குக் கிழக்கே உள்ள இந்தியத் துணை கண்ட நாடுகள் சீனா தாய்லாந்து முதலிய கீழ் திசை நாடுகளில் வழங்கி வருகிறது எனவே இது கீழை இசை (Eastern Music) என்றே அழைக்கப்படுகிறது.

இசையில் இரண்டாம் வரவு ஆங்கில இசை என்றும் ஐரோப்பிய இசை என்றும் மேல இசை என்றும் பொருந்திசை அல்லது ஒத்திசை என்றும் (Harmonic Music) சமப்பகுப்பிசை (Equal Temporament) என்றும் பல பெயர் பெறும். இது பண்ணிசை அல்லாத மரபைச் சேர்ந்தது. இத்தாலி, ஜெர்மனி, இங்கிலாந்து முதலிய மேலை நாடுகளில் வழங்குகிறது. எனவே இது மேலை இசை என்று அழைக்கப்படுகிறது. 

ஐரோப்பிய இசையின் மூலமாக கிரேக்க இசையே உள்ளது. பழமையான கிரேக்க இசை பண்முறை இசையே. கி.பி. 15 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய இசை பண்ணிசையாகவே வளர்ந்து வந்தது. பண்டைய கிரேக்க இசை 5 இசை பன்முறையால் ( Pentamatric Scale) ஆனது. 

தமிழகம் கிரேக்கத்தில் மட்டுமல்லாது சீனா போன்ற நாடுகளிலும் இந்த ஐந்து இசை பண்முறை தான் பழங்காலம் தொட்டே வழக்கில் இருந்து வந்துள்ளது.

தமிழர் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் நிலப்பிரிவுகளைக் கொண்டு குறிஞ்சி யாழ், முல்லை யாழ், மறுத யாழ், நெய்தல் யாழ், பாலை யாழ் என்று ஐந்து வகை சிறு பண்களுக்கும் பெயர் வைத்தனர் இதேபோல் கிரேக்கரும் தோரியன், லித்தியன், ஐயோனியன், ஃபிரிட்சியன், ஏயோலியன் என்று நிலப்பெயர் சுட்டி அழைத்தனர்.

நமது ஏழ் பெரும் பண்களுக்கு இணையான கிரேக்க, ஐரோப்பிய பண்கள் ஆவன.

ஐரோப்பிய இசைக்குக் கிரேக்க இசை மூலமானதால், ஐரோப்பிய இசையானது தொடக்கத்தில் பண்ணிசையாகவே வளர்ந்து வந்தது. அதன் மிச்சம், மீதிக் கூறுகள் இன்றும் ஐரோப்பிய இசையில் விளங்கக் காணலாம். ஐரோப்பிய இசையில் நமது பழம்பஞ்சுரம் (சங்கராபரணம்) 'C-major scale' என்று வழங்கப்படுகிறது. அவர்களது இசையில் நடபைரவி, கீரவாணி முதலிய பண்கள் இன்றும் ஒலிக்கக் கேட்கலாம்.

இன்னிசைச் சிறுபண், ஒத்திசைச் சிறுபண், இயற்சிறுபண் (Melodic Minor, Hormonic minior, Natural minior) என்ற பண்கள் நடைமுறையில் உள்ளன.

ஆனால் கி.பி. 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஐரோப்பிய இசை குரல் பகுப்பு இசை (Just intonation) முறையில் இருந்து அதாவது பண்ணிசை முறையிலிருந்து மாற்றம் பெற்று சமபகுப்பு (Equal temprament) முறை என்ற அல் பண்ணிசை முறைக்கு மாறியது.

இந்த முறைக்கு பெரிதும் பங்காற்றி பியானோவின் சுரத்தானங்களை அறுதி இட்டு அமைத்தவர் ஜான் செபாஸ்டின் பாக் என்ற ஐரோப்பிய இசை மேதையே. அக்கால முதல் வாய்ப்பாட்டு இசையாகவும், பண்ணிசையாகவும் வளர்ந்த ஐரோப்பிய இசை. கருவி இசையாகவும், அல்பண்முறை இசையாகவும் மாறியது.

ஏழு சுரங்களில் ஏதாவது ஒரு சுரத்தை அடிப்படைச் சுரமாக அதாவது ஆதாரமாக வைத்துப் பாடுவதை ஆதார சுருதி என்பர். குரல், உழை (ச, ம) போன்று எந்தச் சுரத்தையும் ஆதாரமாக வைத்து இசை பாடலாம். பண்டைத் தமிழிசை முறையில் ஒரே ஆதார சுருதிக்குப் பாடும் முறை கிடையாது. ஆதார சுருதியை மாற்றி மாற்றிப் பாடும் முறையே வழங்கி வந்துள்ளது. அதாவது ச-வையோ, ம-வையோ அடிப்படையாக வைத்துப் பாடினர். குரல் திரிபு, சுருதி பேதம், மாறுமுதல் பண்ணல் ஆகிய இசைச் சொற்களே இதற்கு ஆதாரங்கள்.

அதே சமயத்தில் இம்முறையில் சிறிது மாற்றம் தந்து வளர்ச்சி முகமாக ஒரே ஆதார சுருதிக்கு (Basic tonic note) இசைபாடும் முறையும் தமிழிசையில் வழங்கியதைப் பார்க்கலாம். "குரல் குரலாக வருமுதல் பாலை", "உழை குரலாக வருமுதற்பாலை", "குரல் இளி என்றிறு நரம்பின்" போன்ற செய்திகளால் குரல் (ச) ஆதார சுரமாக மாறிய வரலாறு அறியப்படுகிறது.

நமது வாய்ப் பாட்டுமுறையும், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைமுறையும் குரல் (ச) சுரத்தை ஆதார சுருதியாகக் கொண்டது. நமது நாதசுர இசை உழை (ம) சுரத்தை ஆதார சுருதியாகக் கொண்டது.

நமது தமிழ் இசை மரபைச் சேர்ந்த இந்துஸ்தானி இசையிலும் இவ்வாறே ஆதார சுருதி முறை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு சுரத்தை ஆதார சுரமாக ஏன் வைத்துக் கொள்கிறோம் என்றால் பண்ணுப் பெயர்த்தலை அதாவது பண் உருவாக்கத்தை அது எளிதாக்குகிறது. "ச ரி க ம ப த நி என்ற இசை நிரலில் குரல் (ச) சூரத்தை ஆதாரமாக வைத்தால் குரலுக்கு (ச) ஐந்தாவது சுரமான (ப) சுரம் கிடைக்கும். அந்த இளியை (ப), குரலாக (ச) வைத்தால் ஐந்தாவது சுரம் துத்தம் (ரி) வரும். இந்த துத்தத்திற்கு ஐந்தாம் சுரம் விளரி (த). இந்த விளரிக்கு (த) ஐந்தாவது சுரம் கைக்கிளை (க). இவ்வாறு ஆதார சுருதியாக குரலை (ச) வைத்துக் கொள்ளும் முறையால் ச ரி க ப த என்ற சுரவரிசை கிடைக்கும். இப்படி ஐந்தைந்து சுரமாகக் கண்டுபிடிப்பது இளிக்கிரமம், சட்சம பஞ்சம பாவம் என்று அழைக்கப்படுகிறது.

குரல் - இளி - ச, ப

இளி - துத்தம் - ப, ரி

துத்தம் - விளரி - ரி,த

விளரி - கைக்கிளி - த,க

ச ரி க ப த என்ற இந்த சுரவரிசை ஏறிய சுரவரிசை எனப்படும். இவற்றை வன்மையான, மேற் சுரங்கள் என்றும் கூறலாம். உழை (ம) தவிர்த்து ரி க ம ப த நி' என்ற வரிசையில் உழை (த) தவிர்த்து மற்ற மேற்சுரங்கள் யாவும் இயற்கைச் சுரங்கள் என்றே வழங்கப்பெறும். உழையின் (ம) கீழ்ச்சுரம் சுத்தமத்திமம் என்ற சுத்த சுரமாகும். ஐரோப்பிய இசையிலும் ரி க த நி-யின் மேற் சுரங்கள் Natural என்றும் ம - வின் கீழ்ச்சுரம் F-Natural என்றும் ம - வின் மேற்சுரமான பிரதி மத்திமம் F-sharp என்றும் வழங்கப்படுகிறது.

எனவே மேற்கண்ட ச ரி க ப த என்ற முறையில் ரி க த. சுரங்கள் மேற்சுரங்களாகி, சுத்த சுரங்கள் என்ற இயற்கைச் சுரங்களாக ஆகின்றன.

அச்சுரவரிசை இன்றைய முறையில் ச ரி2 க4 ப த2 என்று அமைகிறது. அதுவே ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகள் காட்டும் முல்லைத் தீம்பாணி என்ற. பின்னாளில் சாதாரி என்று பெயர் பெற்ற மோகன ராகம் ஆகும்.

ஒரே ஆதார சுருதி கொள்வதால் பல்வேறு சுரக் கோவை கொண்டு பல பண்களை எளிதாக அடைய முடிகிறது. எனவே நமது இசைமுறை பண்ணிசை ஆகிறது.

இம்முறை மேற்கொள்ளப் படாத காரணத்தால் பல்வகைப் பண்கள் ஐரோப்பிய இசையில் வளர்த்தெடுக்கப்படவில்லை. எனவேதான் அதை அல்பண்ணிசை முறை என்கிறோம்.

சுருதி மாற்றம்

சுருதிமாற்றம் (Tonic shift) என்பது ஐரோப்பிய இசையில் சிறப்பான ஒன்று. ஐரோப்பிய இசையில் ஏதாவது ஒரு சுரத்தை மட்டுமே ஆதார சுருதியாகக் கொள்வதில்லை. அவர்களது இசைமுறைக்கு அது தேவைப்படவில்லை.

ஆனால் சுருதியை அடிக்கடி சுருதி பேதம் (Tonic shift) மாற்றுவதால் தானநிலை (Octave) மாற்றத்தை ஏற்படுத்தி இசையில் ஓர் அலாதியான இனிமையைக் கொண்டுவருவது ஐரோப்பிய முறையாகும். இசையின் இனிமைக்கு இது ஆதாரமானது.

இந்த தானநிலை மாற்றம் நமது திரை இசையில் பெரிதும் பின்பற்றப்பட்டு இனிய இசைப் பொழிவு நமக்குக் கிடைக்கிறது.

ஆளத்தி

ஆளத்தி இசை என்பது இசையின் சிறப்பு. ஆலம் என்றால் வட்டம் ஆலம்+தீ = ஆலத்தி = ஆளத்தி என்றாகிறது. (ஆலத்தி எடுத்தல் இன்றும் நமது மரபில் உள்ளது). இந்த ஆளத்தி இன்று ஆலாபனை (ஆலம்(தமிழ்) - ஆலாப் (வடமொழி) + அனை = ஆலாபனை) என்று வழங்கப்படுகிறது. இந்த ஆலாபனை என் இந்துஸ்தானியில் ஆலாப் என்றே வழங்கப்படுகிறது.

ஒருபண்ணை எடுத்துக்கொண்டு பாடலே இல்லாமல் சொற்களும் இன்றி உயிர் எழுத்துக்களால் அ,ஆ என்று மணிக்கணக்கில், நாள் கணக்கில் அந்தப் பண்ணை விருத்தி செய்தல் ஆளத்தி எனப்படும். திருவாவடுதுறை ராசரத்தினம் பிள்ளை செவ்வழிப் பண்ணான தோடியை 7 நாட்கள் ஆலாபனை செய்துள்ளார். இதில் சிறப்பு என்னவெனில் "வந்தது வராமல் வாசித்தது' ஆகும்.

இந்த ஆளத்தி (ஆலாபனை) முறை ஐரோப்பிய இசையில் இல்லை. ஏனெனில் அது பண் இசை அன்று. ஆயினும் மேற்குறிப்பிட்ட முறையில் பொருந்து சுரக்கூட்டங்களை (Group of harmonic notes -Chords) கொண்டு மேனாட்டுச் செவ்வியல் இசையும், சிம்பொனியும் நம் ஆளத்தி போன்று மிக நீண்டதாகி செவிக்கு இனிமை தருவதாகும்.

தான நிலை (Octave) என்பது இசையில் அடிப்படையானது. ஏழு சுரங்களும் (Tones / Notes) பன்னிரண்டு சுரத்தானங்களும் (Semi tones) உலகப் பொதுவானவை. ஏழு சுரங்களை அல்லது பன்னிரண்டு சுரத்தானங்களைக் கொண்டது ஒருதான நிலை ஆகும். தானம் என்பது தாயி என்றாகி, ஸ்தாயி (Octave) என்றாகியது. இதுமண்டிலம், வட்டம், வட்டனை என்றும் விரிவடையும்.

நமது தமிழிசை மூன்று தான நிலைகளில் பாடப்படுகிறது.

மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி (சிலம்பு : வேனிற்காதை) 'மேலது உழை கீழது கைக்கிளை' (சிலம்பு : அரங்.) உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி' (சிலம்பு : வேனில்) ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி' (சிலம்பு : அரங்.) மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி (சிலம்பு : வேனில்.) என்பன இதற்குச் சான்று. மூன்று தாயியிலும் 21 சுரங்களைக் கையாண்டு இசை வழங்கும் திறமை மிகக் கடுமையானதாகும். மதுரை சோமு போன்ற மாமேதைகள் மட்டுமே இதைச் செய்துள்ளனர்.

இந்துஸ்தானி இசை, சிற்சில சமயங்களில் ஐந்து தான நிலைகளில் பாடப்படுகிறது. கிரானா கரானா என்ற இந்துஸ்தானி இசைப் பாணியில் பாடும் பர்வீண் சுல்தானா என்ற வாய்ப்பாட்டுக் கலைஞர் மேல் தாயிவரைப் பாடி அதில் பிர்கா அடிப்பது நம்மை அயரவைக்கும். இதே கரானவை, பண்டிட் பீம் சென் ஜோஸி பல் வேறு தானநிலைகளில் பாடுவது சொற்களில் விளக்க முடியாத இனிமை தருவது.

ஆனால் ஐரேப்பிய இசை, கருவி இசையாக (Instrumental Music) ஏழு தானத்திலும் இசைப்பது, மிக இயல்பான ஒன்றாக ஆகிவிடுகிறது. நாம் ஐரோப்பிய இசையைக் கேட்கும் போது அருவியின் ஓசையை, பாய்ந்து வரும் காட்டாற்று ஓசையை, பொழியும் மழையின் தாளோசையை, பெரும்புயலின் சீற்ற ஒலியை, தென்றலின் அசைவோசையைக் கேட்கிறோம். இவையும் ஐரோப்பிய இசையின் சிறப்புகளாகும். இவ்விசையில் ஏழு தானத்திலும் அமைந்த கருவி(பியானோ) இருப்பதால் இசையின் மாயம் சொல்லற்கரியது.


நன்றி : ஒப்புரவு இதழ் 4 முன்பனிக்காலம்


Saturday, 29 March 2025

என் வாழ்க்கையை உயிர்ப்பித்த திரையரங்கள்

விஜயதாஸ்


2ஆம் கிளாஸ் முதற்கொண்டு இது நாள் வரை 

நாகசுரம் என்னும் மரபிசை சுரங்கம்

பக்கிரி சாமி பாரதி

 

தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற இசைக் கருவியாக விளங்குவது நாகசுரம். காற்றிசைக் கருவி வகையைச் சார்ந்த இந்த நாகசுரம் கோட்டு வாத்தியம் போன்றோ அல்லது ஜலதரங்கம் போன்றோ ஓர் அபூர்வ இசைக்கருவியாக இல்லாமல் அன்றாட வாழ்க்கையில் வாசிக்கப்படுகிறது. இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும் ஏற்ற இசைக்கருவி நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.

சங்ககால நாட்டியநூலாகிய கூத்தநூலில் சாத்தனார் "குழலே எனைக் கொணையே, குன்னை, நாக்கே. நீக்கே.நாகம், சுரிகை, வத்தினி ஒன்பான் வங்கியம் என்ப' என்று இசை நூல் 82ஆம் நூற்பாவில் ஒன்பது வகைக் காற்றிசைக் கருவிகளைப் பற்றி குறிப்பிடுகின்றார்.

இரண்டு இசைக் கருவிகளை ஒரே நேரத்தில் சேர்த்து வாசிப்பதற்கு திருச்சின்னம் என்று பெயர் அவ்வாறே நாகசுரமும் ஒத்து நாகசுரமும் சேர்ந்து இசைக்கப்பட்டதால் இதற்கு நாகசின்னம் என்ற பெயரும் உள்ளது. சரபோஜியின் கூளப்ப நாயக்கன் காதல்' என்ற நூலில் 'தாரை, கவுரி, தவண்டை, துடி நாகசுரம்' என்று நாகசுரம் என்றே குறிப்பிடுகின்றனர். பழைய சுல் வெட்டுகளில், 'டொல நாககரத்திற்கு பணம் 2 (TD1. H.NO. 135)" என்று தவில் அடிப்பவர், நாகசுரம் வாசிப்பவர்க்கு பணம் கொடுத்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதேவர் தனது 'சங்கீதரத்னாகரம்' என்ற நூலில் முகவீணை பற்றிக் குறிப்பிடுகிறார். தெலுங்கு மொழியில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வல்லப ராயரின் "கிரித பிராமம் நூலிலும் ஹரிபட்டரின் 'நரசிம்ம புராணம்" நூலிலும் இது நாகசுரம் என்றே அழைக்கப்படுகின்றது. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்குருசியின் தெலுங்கு மொழிப் பாடல்களில் இது முகவீணை என்று அழைக்கப்படுகின்றது. வடமொழியில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகோலபண்டிதர் தனது "சங்கீதபாரிஜாதம்' என்ற நூலில் நாகசுரம், முகவீணை என்ற இரண்டு கருவிகளைப் பற்றியும் தனித் தனியாகக் குறிப்பிடுகின்றார். எனவே இடைக்காலத்தில், இது முகவீணை என்றும் நாகசுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் "நாயனம்", 'நாசனம்" என்றும் கூட கொச்சையாக அழைக்கப்படுகிறது. சங்கக் கால வயிர்' என்ற இசைக்கருவியும், இடைகான 'ஏழில்" என்ற இசைகருவியும், 'வங்கியம்" அல்லது ''பெருவங்கியம்' என்ற இசைக் கருவியும் நாகசுரம் என்று ஆராய்ச்சியாளர் பலரால் அறியப்படுகிறது.

நாககரம், பொதுவாக கருப்பு மரமாகிய ஆச்சாமரத்தினால் செய்யப்படுகின்றது. இது நல்ல உறுதியையும், காற்றகிர்வையும் கொடுக்கிறது இம்மரம் வெட்டிய பின்பு சுமார் ஒரு நாறு வருடமாவது காய்ந்திருக்க வேண்டும் அவ்வாறில்லாமல் வெட்டிய உடனே தாசுகரம் செய்தால் அது வெடித்துவிடும் எனவே மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த நேர் அச்சிலோ, வீடுகளில் ததூண்களிலோ உள்ள ஆச்சாமரத்தைக் எடுத்து நாக்கரம் செய்வர் நரசிங்கன்பேட்டை, தேரெழுத்தார். வாஞ்சூர் திருவானைக்கோவில் போன்ற ஊர்களில் இதற்கொ உள்ள தச்சர்களால் சிறப்பாக நாக்கரம் செய்யப்படுகிறது. ஆச்சாமரம் தனிர தோதகத்தி (ரோஸ்வுட்), பூவரசு, பலர்,கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும். யானைத் தந்தத்தினாலும், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களாலும் இது செய்யப் படுகின்றது. ஆழ்வார் திருநகரி, திருவாரூர், கும்பகோணம், கோயில்களில் கருங்கல்லினால் செய்யப்பட்ட நாகசுரம் உள்ளது.

ஊமத்தம் பூ வடிவில் காட்சியளிக்கும் இந்த நாகசுரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. மேல் பகுதி உளவு அல்லது உடல் என்றும், கீழ் பகுதி அணைக அல்லது அணக என்றும் அழைக்கப்படும். பழங்காலத்தில் பகுதியில் மேல் அணுக என்ற பகுதியைத் தனியாகவே செய்வசுமார் 40 ஆண்டுகளாகத்தான் மேல் அணசைத் தனியாக கழட்ட முடியாதவாறு உடலோடு இணைத்தே செய்து வருகின்றனர்.

மிகப் பழங்காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரை 185 அங்குல நீளமுடையதாகவும், நாலரைக் கட்டை கருதியுடன் இருந்து வந்தது. இது முகவீணைக்கு அடுத்த நிலை, இதில் ஏழு விரல் துவாரங்களும்,ஒரு பிரம்ம கரமும் தவிர, கூடுதலாக இரண்டு இணை ஜீவசரங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். 1909ஆம் ஆண்டு மன்னார்குடி சின்னப் பக்கிரி நாகசுரக்காரர் 21.12 அங்குல நீளமும் நான்கு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தைப் பழக்கத்தில் கொண்டு வந்தார் 1920ஆம் ஆண்டு திருபாம்புரம் சாமிநாதபிள்ளை 23.75 அங்குல நீளமும், மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாகஈரத்தைக் கொண்டு வந்தார். பின்னர் 1932ஆம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி என்பவர் 18 அங்குல நீளமும் மூன்று கட்டை சுருதியும் கொண்ட நாகசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாவரை. நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள சுரங்களுக்கு 'திமிகி நாகரம்' என்று பெயர். 1932ஆம் ஆண்டு, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை 31.25 அங்குல தீனமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட இடைபாரி நாகசுரத்தை கொண்டுவந்தார். பின்னர் அவரே முயற்சிகள் பலவும் மேற்கொண்டு 1941-ஆம் ஆண்டு 34.5 அங்குல நீளமும் இரண்டு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தை உருவாக்கினார். அவரே மேலும் முயன்று மத்திமத்தை ஆதாரமாக வைத்து, மற்ற சுரங்களை அதற்கேற்ப அமைத்துக்கொண்டு 1946ஆம் ஆண்டு மத்திம சுருதி நாகசுரத்தை உருவாக்கினார். இவற்றிற்கு 'பாரி நாகசுரங்கள்" என்று பெயர்.

திமிரி நாகசுரம் வாசிப்பதற்கு மிகவும் அழுத்தமாயிருக்கும். அதில் செருகும் சீவாளி கொஞ்சம் குட்டையாய் இருக்கும். காற்றும் கூடுதலாக வாங்கும். இடைபார். நாகசுரம் வாசிப்பதற்குக் கொஞ்சம் எளிது. ஆனால் அதிக அழுத்தம் இருக்காது. சீவாளி கொஞ்சம் நீளமாய் இருக்கும். பாரி நாகசுரம் வாசிப்பதற்கு மிகவும் சுகமாய் இருக்கும். மிகவும் எளிதாய் வாசிக்கலாம். ஆனால் அழுத்தம் இருக்காது. இவையே திமிரி நாகசுரத்திற்கும். பாரிநாகசுரத்திற்கும் உள்ள வேறுபாடாகும்.

 

திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை

நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளை அமைத்திருப்பர். இதற்கு சப்தசுரங்கள் என்று பெயர். இந்த விரல் துளைகள் மாயாமாளவகவுளை ராக அடிப்படையில் அமைக்கப்பட் டிருக்கும். இதில் எட்டாவதாக உள்ள துளைக்கு பிரம்ம சுரம் என்று பெயர். நாதசுரத்தில் செலுத்தப்படும் காற்று இதன் வழியாகத்தான் வெளியில் செல்லும். இதை அடைத்து விட்டால் மத்திய தாயிலிலும், மந்திர தாயிலும் பஞ்சமம் குறைவாக கேட்கும், அல்லது கேட்காது. இந்த பிரம்ம சுரத்தை மையமாக வைத்து, இரண்டு பக்கத்திலும் இரண்டு இணையாக மொத்தம் 4 துளைகள் இடப்பட்டிருக்கும்.

மங்கள இசையென்று போற்றப்படும் நாதசுர இசையோடுதான் இறைவனின் ஆறுகாலப் பூசைகள் நடைபெறும். நாகசுரக் கலைஞர்கள் அதிகாலையில் திருக்கோயில் கொலுபீடத்தில் வந்தமர்ந்து கொலுமேளம் வாசிப்பர். இதில் பூபாளம், பவுளி போன்ற இராகங்களை வாசிப்பர்.                              

பிறகு கோயில் திறக்கப்பட்டு, பூசைக் காலம் தொடங்கும்.இதற்குக் காலை கொலுமேளம் என்று பெயர். இதனைத் தொடர்ந்து, காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை உதய கால பூசை நடைபெறும். இதில் மலயமாருதம், கேதாரம் போன்ற ராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளும் வாசிக்கப்படும். பின்பு 8.00 மணி முதல் 9.30 மணிவரை, காலசந்திபூசை நடைபெறும். இதில் பிலகரி, தன்யாசி போன்ற இராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பின்பு 11.00 மணி முதல் 12.30 மணிவரை உச்சிக்கால பூசை நடைபெறும். இப்போது சாவேரி, சுத்த சாவேரி, தர்பார் போன்ற ராகங்களையும் அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பின்பு மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை மாலைக் கொலுமேளம் வாசிக்கப்படும். இதில் மந்தாரி, பூர்வகல்யாணி ஆகிய இராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகயையும் வாசிப்பர். இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிமுதல் 6.30 மணிவரை சாயரட்சை நடைபெறும். இதில் கல்யாணி, பைரவி, சங்கராபரணம் போன்ற ராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பின்பு இரவு 7.30 மணிமுதல் 8.30 மணிவரை இரண்டாம் கால பூசை நடைபெறும். இதில் சண்முகப் பிரியா, கரகரப் பிரியா, பவப் பிரியா போன்ற ராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பிறகு 9.30 மணிமுதல் 10.30 அர்த்தயாம பூசை நடைபெறும். இதில் நாகசுரமும் ஒத்தும் மட்டும் சேர்ந்து ஆனந்த பைரவி, கானடா, அடானா, பேகடா, நீலாம்பரி ராகங்கள் மட்டும் இசைக்கப்பெறும். பிறகு பள்ளியறைப் பூசை முடிந்து, திருக்கோயிலின் கதவு சாத்தும்போது அதற்கான கதவடிப் பாட்டு வாசிக்கப்படும். இத்தகைய வழிப்பாட்டு முறைகளுக்கு ஆறுகாலப் பூசை என்று பெயர்.

கோயில் பூசைக்கு நீர் கொண்டு வரும் போது மேகராகக் குறிஞ்சி ராகமும், குடமுழுக்கின் போது தீர்த்த மல்லாரியும் வாசிக்கப்படும். திருமடப்பள்ளியிலிருந்து இறைவனுக்கு தளிகை(உணவு) எடுத்து வரும் போது தளிகை மல்லாரி வாசிக்கப்படும். இறைவனின் திருக்கலியாணம் நிகழும்போது நாட்டைக் குறிஞ்சி ராகம் அல்லது கல்யாண வசந்த ராகம் மட்டுமே வாசிக்கப்படும். பின்பு திருப்பூட்டு முடிந்தவுடன் ஆனந்தம் என்ற பாடலும், மாலை மாற்றும் போது, மாலை மாற்றுப் பாடலும் வாசிக்கப்படும். நலங்கு நிகழ்வின் போது நலங்குப் பாடலும், ஊஞ்சல் நிகழ்வின் போது ஊஞ்சல் பாட்டும் அதன் பிறகு லாலிப் பாட்டும், ஓடப்பாட்டும், கப்பல் பாட்டும் இசைக்கப்படும். இறுதியாக தீபாராதனை நடைபெறும்போது தேவாரம், திருப்புகழ் வாசித்து முடிக்கப்படும். இவ்வாறாக பல நூற்றாண்டுகளாக நாகசுரம் மூலம் இசைமுறை பாதுகாக்கப்பட்டு வருகிறது.

           

                  திருவெண்காடு சுப்பிரமணியம்

இறைவனது திருவீதி உலாவில் வேறு எந்த இசை நிகழ்ச்சிகளிலும் காணமுடியாத மல்லாரி, ரத்தி, ஓடக் கூறு, எச்சரிக் கை போன்ற இசை வகைகளை நாகசுர வாசிப்பில் கேட்கமுடியும். திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக, தவிலில் அலாரிப்பு வாசிக்கப்படும். இது கண்ட நடையில் அமைந்த சொற் கோவையாக இருக்கும். இதனைத் தொடர்ந்து கம்பீர நாட்டை ராகம் வாசிக்கப்படும். இது வீரரசம் பொருந்திய ராகமாகும். இந்த இராக ஆலாபனைக்குப் பிறகு மல்லாரி வாசிக்கப்படும். இந்த மல்லாரியைக் கேட்டு வெகு தொலைவில் இருப்பவர்களும் கூட இறைவன் புறப்பாடு நடைபெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளவர். இந்த மல்லாரி பல வகைப்படும்.

தேர்த்திருவிழாவின் பொழுது வாசிக்கப்படும். மல்லாரிக்கு "தேர் மல்லாரி" என்று பெயர். "தேரின் மேல் ஏறி வரும்" என்ற பாடலும் "தியாகராயப் பெருமாள்" என்ற பாடலும் கண்டஏக தாளத்தில் அமைந்திருக்கும். இறைவன் புறப்படும்போது, அலங்கார மண்டபத்திலிருந்து, யாகசாலைக்கு வரும் வரையில் பெரிய மல்லாரி என்ற ராகம் வாசிக்கப்படும். "உனது பாதமே கதி என்று நினைத்தேன்" என்ற இதற்குரிய பாடல், ஆதிதாளத்தில் அமைந்திருக்கும். இறைவன் யாக சாலைக்கு வந்ததும், தவிலும் தாளமும் இன்றி ஒத்து சுருதியுடன் நாகசுரத்தில் மட்டும் காப்பி, கானடா, கேதாரகௌளை ஆகிய இராகங்கள் வாசிக்கப்படும்.

பின்பு யாகசாலையிலிருந்து கோபுர வாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்போது, திரிபுடைத் தாளத்து மல்லாரி வாசிக்கப்படும். இது தகதிமி - தகிட" என்று ஏழு எழுத்துக் கொண்ட தாளமாகும். பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும், அந்தந்தத் தெய்வங்களுக்கு உரிய சின்ன மல்லாரி வாசிக்கப்படும். இதற்குள் சாமி தேர்முட்டியின் அருகில் வந்துவிடும். அதன் பின்பு காம்போதி, சங்கராபரணம், பைரவி, சக்கரவாகம் போன்ற இராகங்களில் விளம்பமான இராக ஆலாபனை நடைபெறும். இந்த இராக ஆலாபனையோடு சுவாமி கிழக்கு, தெற்கு, மேற்கு வீதிகளைப் பாதி சுடந்து வந்து நிற்கும். அதன் பிறகு ரத்திமேளம் தொடங்கும். இது பல்லவிபோல, "தீந்தக்க தத்தீதை" என்ற மிஸ்ரசாப்பு தாளச் சொற்கட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். இதன்பின்னர் ஆறுகாலத்தில் பல்லவி வாசிக்கப்படும்.

இவ்வாறு கீழவீதியில் நடுபகுதி வரையிலும் இந்தப் பல்லவி, சுரவிளம்பம், இராகமாலிகை என்று வாசிக்கப்படும். உலா கோபுர வாசலை அடைந்ததும் பதம், தேவாரம் ஆகிய பாடல்களை வாசிக்க வேண்டும். பொதுவாக சைவ, வைணவக் கோயில்கள் அனைத்திலும், சுவாமி கோயிலைவிட்டுப் புறப்பட்டு மீண்டும் கிழக்கு வாசலை அடையும் வரையிலும், மல்லாரி தவிர வேறு எந்தப் பாடலையும் வாசிக்க கூடாது என்பது மரபாகும். ஆனால் இப்போது மல்லாரி முடிந்து, வர்ணம் என்ற இசை வகையும், சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும்போது தீர்த்தனை, பதம், ஜாவளி, இல்லானா, காவடிசிந்து, கிளிக்கண்ணி போன்ற இசை வகைகளையும் வாசித்து வருகின்றனர்.

வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்கு உள்ளே நுழையும்போது கண்ணேறு கழிக்கப்படும். அப்போது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள். இவ்வாறு தட்டிச் சுற்றுவதால் இதற்கு தட்டுச்சுற்று என்று பெயர். வைணவக் "கோயில்களில் இதை திருவந்திக்காப்பு என்பர். இக்காலத்தில் இதற்கு பதம் அல்லது திருப்புகழ் வாசிக்கின்றனர், சுவாமி மூலத்தானத்திற்குச் செல்லும் பொழுது எச்சரிக்கை என்னும் வகை வாசிக்கப்படும். இதற்கு படியேற்றம் என்றும் பெயருண்டு.

சில கோயில்களில் இந்த இந்த இடங்களில், இன்ன இன்ன இராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.

சில திருவீதி உலாக்களில், மன்னார்குடி சின்னப் பக்கிரி நாகசுரக்காரர், கேதாரகவுளை, காப்பி, ஆனந்த பைரவி போன்ற ராகங்களை எட்டு நாள், பத்து நாள் என்று தொடர்ந்து வந்த ராகம் திரும்ப வராமல்" வாசித்துப் புகழ் பெற்றுள்ளார். மேலும் மதுரை பொன்னுசாமி நாயனக்காரர் ஐந்து நாள் உற்சவத்தில் தொடர்ந்து சக்கரவாகம் இராகத்தை வாசித்துப் புகழ் பெற்றுள்ளார்.   

அந்தக் காலத்தில் இரவு நேரம் ஆக, ஆக நாகசுரத்தின் ஓசை பழமை தொலைவு கேட்குமாம். தமிழிசையை பல்லாண்டுகளாக நமக்கு கொண்டு வந்து சேர்த்தது இந்த நாகசுரமே.

நன்றி : ஒப்புரவு இதழ் 4 முன்பனிக்காலம்

Friday, 28 March 2025

வேட்டை இலக்கியம் : ஒரு மறு வாசிப்பு

சுதியடோர் பாஸ்கரன்

 

இந்திய வரலாற்றின் ஒரு இருண்ட அத்தியாயம் எவ்வித ஆரவாரமுமின்றி நவம்பர் 1991இல் முடிந்தது. மத்திய அரசின் ஆணையொன்றின் மூலம் வேட்டையாடுவது நாடெங்கும் அறவே தடை செய்யப்பட்டது. காட்டுயிர் பாதுகாப்பில் அக்கறை கொண்டோருக்கு இதன் முக்கியத்துவம் புரியும். உலக அளவில், கடந்த நூற்றாண்டில் அற்றுப்போன உயிரினங்களின் 25 விழுக்காடு துப்பாக்கிக்குப் பலியானவை என்பது கணிப்பு. மனிதர் உணவுக்காக மட்டுமே வேட்டையாடிய போது தீமை ஏதும் ஏற்படவில்லை. அவர்களும் ஒரு இரைக் கொல்லியாக, காட்டுப் பூனை, புலி போன்று இயங்கினார்கள். ஆனால் வணிக நோக்குடனும், விருதுகளுக்காகவும், கொல்வதை ஒரு பொழுது போக்காகவும் கொண்டு வேட்டையாட ஆரம்பித்த போதுதான் வந்தது ஆபத்து.

வேட்டையாடலைச் சார்ந்து வெள்ளை ஏகாதிபத்தியக் காலத்தில் உருவானதுதான் வேட்டை இலக்கியம் என்பது. காலனி நாட்டிலிருந்து வெள்ளை அதிகாரிகள் அன்றாட வாழ்வின் அலுப்பைப் போக்க வேட்டையாட ஆரம்பித்தனர். வெள்ளை எஜமானர்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி பெருமை கண்ட இந்திய கனவான்கள் பலரும் மகாராஜாக்கள், குட்டி ராஜாக்களும் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகளும், துப்பாக்கி தூக்க ஆரம்பித்தனர். கிரிக்கெட், கோல்ஃப் போன்ற விளையாட்டுகளில் அவர்களைப் பின்பற்றியது போல, வேட்டையாடலிலும் இந்திய கனவான்கள் ஈடுபட ஆரம்பித்தனர். வெள்ளைக்கார வேட்டையாடிகள் சிலர் தங்கள் அனுபவத்தை இங்கிலாந்திலிருந்து வெளியான Black woods magazine போன்ற சஞ்சிகைகளில் வெளியிட்டனர். இக்கட்டுரைகள் பிரிட்டனில் வாசகர்கள் ஆதரவைப்பெற்ற பின்வேட்டை இலக்கியம் உருவாக ஆரம்பித்தது. சிக்கிரமே ஒரு பாரம்பரியமாக வளர்ந்தது.

1869இல் சாமுவேல் பேக்கர் என்பவர் "துப்பாக்கி மற்றும் நாயுடன் இலங்கையில் (The Rifle and Hound in ceylon) என்ற நூலை எழுதினார். இதைத் தொடர்ந்து "இந்தியாவில் காட்டு விலங்குகளுடன் 13 வருடங்கள் (Thirteen years among the wild beasts of india) என்ற புத்தகத்தை T.H. சேன்டர்சன் எழுதினார். இவைகளைத் தொடர்ந்து பல நூல்கள் வந்தன. பின்னர், ஹ்யூ ஆலன் மற்றும் ஜிம் கார்பெட் தங்களது நூல்களைத் வெளியிட்ட ஆண்டுகள் தான் வேட்டை இலக்கியத்தின் உச்சக்கட்டம் எனலாம். இலக்கிய விமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்டாலும் இந்நூல்கள் வெகுஜன ஆதரவைப் பெற்றன. பல பதிப்புகள் வெளிவந்தன.

வேட்டை இலக்கியத்திற்கே உரித்தான சில பரிமாணங்கள் உண்டு. நேரிடையாகப் பேசுவது போல (first person) கதை சொல்வது போல அமைந்திருக்கும். தனி மனிதன் ஒருவன், காட்டு விலங்கு ஒன்றைத் தொடர்ந்து சென்று, அதை அது வாழுமிடத்திலேயே கொல்வதுதான் எல்லாக் கதைகளின் கரு. ஒரு திகில் நாவலின் கூறுகளைக் கொண்டிருக்கும். வேட்டை இலக்கியத்தின் நடை விறுவிறுப்பாகவும், படிப்பவரின் கவனத்தைக் கவரும்படியான முறையிலும் அமைந்திருக்கும் வேட்டை இலக்கியம் ஜனரஞ்சகமாயிருப்பதற்குக் காரணம் இவை உண்மையாக நடந்த சம்பவங்கள் என்று நம்பப்படுவதுதான். இவ்வேட்டைகளில் சுடப்பட்டது புலி, அடுத்தாற்போல யானை, காட்டு விலங்குகளைப் கொடிய உயிரினம் போல் வேட்டை இலக்கியம் சித்தரித்தது.

சில இந்திய வேட்டையாடிகளும் இம்மாதிரியான நூல்களை எழுத ஆரம்பித்தனர். அதில் கேசரி சிங்கும், பெங்களூரைச் சேர்ந்த கென்னத் ஆண்டர்சனும் நன்கு அறியப்பட்டவர்கள். ஆண்டர்சன் இந்தியர்தான். ஆங்கிலோ - இந்திய சமூகத்தவர். இவரை ஒரு முறை நான் ஏலகிரியில் சந்தித்திருக்கின்றேன். ஆண்டர்சனின் வேட்டைச் சம்பவங்கள் கர்நாடக தமிழ்நாட்டு பின்னணியில் Maneater of Yelagiri போன்ற கதைகள் எழுதப்பட்டன. அவருக்கு எழுத்தில் முன் மாதிரி ஜிம் கார்பெட் எனலாம். வேட்டை இலக்கியத்திற்கு காலம் கடந்தே வந்த இவர் ஐம்பதுகளில் தான் எழுதினால். 1974 இல் காலமானார். கார்பெட் மற்றும் ஆண்டெர்சனின் சில நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.

காட்டுயிர்கள், காடுகள், உயிர்ச்சுழல் இவை பற்றிய பிரக்ஞை அதிகம் இல்லாத காலகட்டத்தில், காட்டுயிர் பேணல் புறச்சூழலின் சமநிலைக்கு முக்கியம் என்ற பிரக்ஞை ஏற்படாத சமயத்தில், வேட்டை நூல்கள் எழுதப்பட்டன. ஆனால் இப்போது காட்டுயில் பற்றிய விழிப்பு, சுற்றுச் சூழல் பற்றிய புரிதல் ஏற்பட்ட பிறகு, நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. யானைகளைப்பற்றி சுகுமாரும், புலிகளைப்பற்றி உல்லாஸ் கரந்த்தும் சிங்கங்களைப் பற்றி ரவி செல்லமும், செந்நாய்களைப்பற்றி ஜான்சிங்கும் விரிவாக, காட்டிலேயே கள ஆய்வு செய்து, அறிவியல் பூர்வமாக எழுதியிருக்கின்றனர்.

வேட்டையாடிகளிடமிருந்து காட்டுயிர்களைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டிய காலம் மலையேறி விட்டது. அறிவியல் நூல்கள், இயற்கை முகாம்கள். காட்டு வழி நடத்தல் மூலம் காடு பற்றி அனுபவப் பூர்வமாய், நேரிடையாக அறிந்து கொள்ள முடிகின்றது. இன்றைய இளைய தலைமுறையினரிடம் காட்டுயிர் பற்றிக் கதை விட முடியாது. வேட்டையாடல் தடை செய்யப்பட்டதுமில்லாமல் அது ஒரு கெட்ட வார்த்தை மாதிரி ஆகிவிட்டது. பண்புள்ள நால்வர் மத்தியில் யாரும் இப்போது தன் வேட்டைப் பிரதாபங்களை சொல்லி மார்தட்டிக் கொள்வதில்லை. இருபது ஆண்டுகளுக்கு முன் பலர் இப்படிப் பெருமையடித்துக் கொண்டதை நான் கேட்டிருக்கின்றேன்.

இன்று காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் 1972 அமுலில் இருக்கின்றது. கானுறை உயிரினங்களைப் பேண வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒரு இயக்கமாக உலகெங்கும் பரவி விட்டது. வேட்டை இலக்கியம் வளர இனி வழியில்லை. அதனால்தான் கார்பெட், ஆண்டர்சன் இவர்களின் நூல்கள் பல்வேறு தலைப்புகளின் வெவ்வேறு தொகுப்புகளாக மறு அவதாரம் எடுத்து வருகின்றன.

 

வேட்டையாடிகள் காட்டுயிர் பாதுகாப்பிற்கு உதவினார்கள் என்ற கருதுகோள் ஆதாரமற்ற கட்டுக் கதை என்பது ருசுவாகிவிட்டது. விருதிற்காக வேட்டையாடுவர், ஒரு விலங்குத்திரளில் நன்கு வளர்ந்த, முதிர்ந்த ஆண் விலங்கையே கொல்வது வழக்கம். யானைகளில் நன்கு வளர்ந்த தந்தங்களையுடைய ஆண் யானையையும், காட்டெருதுகளில் அகன்ற கொம்புகளையுடைய ஆண் எருதையும், வரையாடுகளின் Nilgiritahr முற்றிய ஆண் வரையாட்டையும், சுட்டுத் தீர்த்தனர். Saddleback என்று குறிப்பிடப்படும் இத்தகைய வரையாட்டுக்கு முதுகு பழுப்பு நிறமாக இருக்கும். அடையாளம் காண்பது எளிது. முதிர்ச்சியடைந்த ஆண் விலங்குகள் தான் இனப்பெருக்கத்தின் முக்கிய அம்சம். அத்தகைய விலங்குகள் தெரிந்தெடுத்து அழிக்கப்பட்டு, அந்த இனம் பெருகுவது தடைப்பட்டது. அந்த இனங்களின் மரப்பணுக்கள் சிதைக்கப்பட்டன.

தாங்கள் வேட்டையாடிக்களிக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக சில ராஜாக்களும், தேயிலைத் தோட்ட அதிபர்களும், மற்றவர்களைக் கிட்ட அனுமதியாமல், சில காட்டுப்பகுதிகளை பாதுகாத்து வைத்தனர். இவர்கள் காட்டுயிர் பாதுகாப்பிற்காக செயல்பட்டார்கள் என்று எவ்வாறு கூற முடியும்.?

சுட்டுக்கொல்வதில் ஆனந்தம் காணும் பொழுதுபோக்கு, வேட்டையாகப் பரிணமித்தது. இந்த நோக்கை தரித்தவர்களே ஜிம்கார்பெட்டும், அவரை ஆதர்சமாகக் கொண்டு எழுதிய கென்னத் ஆண்டர்சனும், வேட்டையாடுதலை ஒரு வீர சாகசம் போல எழுதி வைத்தனர். இந்தக் கதைகளைப் படித்துவிட்டு துப்பாக்கி தூக்கியவர் பலர். வேட்டையை மேன்மைப் படுத்தி, அதற்கு ஒரு அந்தஸ்து அளித்தது வேட்டை இலக்கியம். அதிலும் புலி வேட்டை, மேட்டுக் குடியில் சேருவதற்குரிய ஒரு சடங்கு போல (rite of passaged) நடத்தப்பட்டது. இம்மாதிரியான பல சடங்குகளுக்குத் தலைமைப் பூசாரி ஜிம் கார்பெட்தான். முக்கியமாக லின்லித்கோ பிரபுவை புலி வேட்டைக்கு இட்டுச் சென்றவர் கார்பெட். இன்றைய நாட்களில், வெளிநாட்டுத் தலைவர் வந்தால் அரசு சார்ந்த விருந்து வைப்பது போல, பிரிட்டீஷ் காலத்தில் புலிவேட்டை ஏற்பாடு செய்யப்பட்டது. ஏன் புலி?

ஆங்கிலேயர்கள் காடே இல்லாத நாட்டிலிருந்து வந்தவர்கள். அதிலும் புலி போன்ற பரிணாமத் தகவமைப்பின் ஒரு அற்புத படைப்பு அங்கே இல்லை. உணவுச் சங்கிலியின் உச்சத்திலிருக்கும், இரைகொல்லியான புலி, ஆங்கிலேயர்களுக்கு, அவர்கள் ஆக்ரமித்திருந்த நாட்டில், அச்சத்தை தரும் ஒரு குறியீடாகத் தெரிந்தது. அதைக் கொல்வது - புலி வேட்டை - ஒரு சாகசமாகக் கருதப்பட்டது. புலியைச் சுடுவது ஒரு யாகத்தைச் செய்வது போல அமைந்தது. ரூடியார்டு கிப்ளிங் கூட தனது Jungle Book நூலின் கொடியோன் பாத்திரத்தை ஷெர்கான் எனும் புலியாக அமைத்துள்ளதைக் கவனியுங்கள்.

ஆகவே வேட்டை இலக்கியத்தை மறுபரிசிலனை செய்ய வேண்டிய காலம் வந்து விட்டது. சுற்றி வளைத்துக் சொல்வானேன். இந்த வேட்டை இலக்கியத்தில் கதை எவ்வளவு? கற்பனை எவ்வளவு? ஆண்டர்சனின் புத்தகங்கள் முதன் முறையாக வெளி வந்தபோதே இந்த கேள்வியை பலர் எழுப்பினர். நான் மாணவனாக இருந்த போது ஜிம் கார்பெட் நூல்களை ஆர்வத்துடன் படித்திருக்கின்றேன். பின்னர் .சி.சி.யில் சேர்ந்து, 303 ரைபிள் மற்றும் 22ரைபில் போன்ற ஆயுதங்களை பயன்படுத்த பழகிற பின்னர்தான் கார்பெட் கதை விட்டிருப்பாரோ என்ற லேசான சந்தேகம் என்னுள் எழுந்தது. மறுமுறை வாசித்த போது சந்தேகம் வலுப்பட்டது. பலர் இந்தக் கேள்வியை ஏற்கனவே எழுப்பியுள்ளார்கள் எனவும் தெரிந்துகொண்டேன்.

இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர் எழுதிய நூல்களை ஆய்வு செய்திருக்கும் சுஜித் முகர்ஜி.

ஜிம் கார்பெட்டைப் பற்றி புரிந்துகொள்ள சில விவரங்களை முதலில் அறிய வேண்டும் என்கிறார். 1907இல் தொடங்கி 1939 வரை பல ஆட்கொல்லிப்புலிகளை ஜிம் கார்பெட் சுட்டுக்கொல்கிறார். ஆனால் 1944இல் தான் தனது முதல் நூலை, Man-eater of Kumaon, எழுதுகின்றார். அதற்கும் பல வருடங்கள் கழித்து எழுதிய நான்கு நூல்களை, ஆப்ரிக்காவில் இருக்கும் போது எழுதுகின்றார். இவருக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. வேட்டை பற்றிய குறிப்பு எதுவும் வைத்ததாகக் கூறவில்லை. பின் எப்படி, 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒவ்வொரு செடி, பறவை, ஒலி இவற்றைப் பற்றி எழுத முடிந்தது? இவர் அசாத்திய மனத்திடத்துடன், அந்த ஆட்கொல்லிகளைத் தொடர்ந்து சென்று சுட்டார் என்பதை யாரும் மறுக்கவில்லை. மற்ற விவரிப்புகளைப் பற்றித்தான் கேள்விகள். இவரது வாழ்கை வரலாற்றை எழுதியவரும் இதைத்தான் சொல்கிறார்.

Justified cirticisms were levelled at Jim and one has to accept that he did and one has to accept that he did overwrite but he did not do this for the sake of self-promotion but just to give a better read (P.246) அவர் எழுதியதெல்லாம் ஆங்கிலேய வாசகர்களுக்காக எழுதப்பட்டதுதான் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும். எனது இந்தியா (My India) வின் நூலாசிரியரான கார்பெட், இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், வெளியேறி, மற்றொரு பிரித்தானிய காலனியான கென்யாவில் ஒரு வேட்டைக் கம்பெனிக்கு இயக்குனராகச் சேர்ந்து விட்டார்.

கார்பெட் ஆட்கொல்லிப்புலிகளை மட்டுமே கொன்றார் என்று ஒரு கருத்து உண்டு. திடீரென்று ஒரு நாள் டென்னிஸ் ஆட ஆரம்பித்து, அன்றே சாம்பியன் ஆக யாராலும் முடியுமா? கார்பெட் பள்ளியில் படிக்கும்போது தனது முதல் சிறுத்தையை கொல்கிறார் அதன் தவறு.... அவர் நடந்து போன பாதையில் வந்ததுதான். பிறகு நூற்றுக்கணக்கான புலிகளையும் மற்ற விலங்குகளையும் சுட்டார். ரெயில்வேயில் பணி புரிந்தாலும் அவர் ஒரு Professional வேட்டையாடி, ஒரு முறை ஒரு மரத்தடியில் அவர் உட்கார்ந்திருக்கும் போது, ஒரு மலையாடு (Goral) ஒர் முகட்டின் மீது வந்து நிற்கிறது, சுடுகிறார். கீழே உருண்டு விழுகின்றது. அடுத்தடுத்து மேலும் இரண்டு மலையாடுகள் அதே பாறையில், அதே இடத்தில் வந்து நிற்கின்றன. அவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சுட்டு வீழ்த்துகின்றார். வேட்டையாடுதலை ஒரு சாகச வீரதீரச் செயலாகக் காட்டுவதில் கார்பெட்டுக்கு பெரும் பங்கு உண்டு. இதனல் வேட்டையாடுவோர் எண்ணிக்கை பெருகியது.

வேட்டை இலக்கிய நூல்களின் மறுபதிப்புகள் வந்த வண்ணமிருக்கலாம் காட்டில் நடந்து, அதன் ஒலிகளைக் கேட்டு, காட்டுயிர்களைப் பார்த்து, காட்டை அனுபவித்திருக்காதவர்களுக்கு வேட்டை இலக்கியம் சுவாரஸ்யமானதாக இருக்கலாம். அவை ஜேம்ஸ்பாண்ட் நாவல்களைப் போலத் தான் மதிப்பிடப்பட வேண்டும்.

நன்றி : உயிர்மை

பூவுலகின் நண்பர்கள் பரிந்துரை :

இயற்கை : பொது

1. மழைக்காலமும் குயிலோசையும், மா. கிருஷ்ணன், பதிப்பாசிரியர் சு. தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு

2. இயற்கை: செய்திகள், சிந்தனைகள், . முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை.

3. பல்லுயிரியம், . முகமது அலி, வாசல் வெளியீடு

4. நம்மைச் சுற்றி காட்டுயிர், சு. தியடோர் பாஸ்கரன், தமிழில்: ஆதி வள்ளியப்பன், பாரதி புத்தகாலயம்

5. மனிதர்க்குத் தோழனடி, ஆதி வள்ளியப்பன், அறிவியல் வெளியீடு

6. நெருப்புக் குழியில் குருவி, .முகமது அலி, மலைபடுகடாம்

7. கடற்கரையோரம் ஒரு நடைபயணம், .வி. வெங்கடேஸ்வரன், பாரதி புத்தகாலயம்

இயற்கை : உயிரினங்கள்

1. கானுறை வேங்கை, கே. உல்லாஸ் கரந்த், தமிழில்: சு. தியடோர் பாஸ்கரன், காலச்சுவடு பதிப்பகம்

2. யானைகள்: அழியும் பேருயிர், . முகமது அலி, . யோகானந்த், இயற்கை வரலாறு அறக்கட்டளை

3. பாம்பு என்றால்?, . முகமது அலி, இயற்கை வரலாறு அறக்கட்டளை

4. பூச்சிகளின் தேசம், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு

5. இந்தியப் பாம்புகள், ரோமுலஸ் விட்டேகர், நேஷனல் புக் டிரஸ்ட்

6. பாலூட்டிகள், இராம.சுந்தரம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்

7. மழைக்காடுகளும் சிறு ஊனுண்ணிகளும், .முகமது அலி, மலைப்படுகடாம்

இயற்கை : பறவைகள்

1. தமிழ்நாட்டுப் பறவைகள், முனைவர் . ரத்னம், மெய்யப்பன் தமிழாய்வகம்

2. பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருஷ்ணன், பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்

3. வட்டமிடும் கழுகு, தொகுப்பு: . முகமது அலி, சந்தியா பதிப்பகம்

4. ஊர்ப்புறத்துப் பறவைகள், கோவை சதாசிவம், கஸ்தூரி பதிப்பகம்

5. நாராய் நாராய், ஆதி வள்ளியப்பன், அறிவியல் வெளியீடு

6. ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி, சாலிம் அலி, நேஷனல் புக் டிரஸ்ட்

7. பறவையியல் நிபுணர் சாலிம் அலி, . முகமது அலி, மலைபடுகடாம்

இயற்கை : தாவரங்கள்

1. தமிழரும் தாவரமும், கு.வி. கிருஷ்ணமூர்த்தி, பாரதிதாசன் பல்கலைக்கழகம்

2. அலையாத்திக் காடுகள், முனைவர் பா. ராம் மனோகர், முனைவர் சி. சிவசுப்ரமணியன், அறிவியல் வெளியீடு

3. மழைக்காடுகளின் மரணம். நக்கீரன், பூவுலகின் நண்பர்கள்

4. வனப் பயன்பாட்டியல், .முகமது அலி, மலைபடுகடாம்

இயற்கை : காட்டு உரிமை

1. சுற்றுச்சூழலும் வாழ்வுரிமையும், அர்ச்சனா பிரசாத், பாரதி புத்தகாலயம்

2. வனஉரிமைச் சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை, பெ. சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், பாரதி புத்தகாலயம்

3. வனஉரிமைச் சட்டம் ஒரு வழிகாட்டி, எம்.எஸ். செல்வராஜ், விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம்

இயற்கை : வேட்டை இலக்கியம்

1. எனது இந்தியா, ஜிம் கார்பெட், தமிழில்: யுவன் சந்திரசேகர், காலச்சுவடு

2. குமாயுன் புலிகள், ஜிம் கார்பெட், தமிழில்: தி..., காலச்சுவடு

3. ஏலகிரியில் சிறுத்தை வேட்டை, கென்னத் ஆண்டர்சன், தமிழில்: எஸ். சங்கரன், பாரதி புத்தகாலயம்

இயற்கை : பரிணாமவியல்

1. பீகிள் கடற்பயணம், சார்லஸ் டார்வின், தமிழில்: முனைவர் . அப்துல் ரஹ்மான், அகல் வெளியீடு

2. சார்லஸ் டார்வின் சுயசரிதம், தமிழில்: முனைவர் . அப்துல் ரஹ்மான், அகல் வெளியீடு

3. உயிரினங்களின் தோற்றம், சார்லஸ் டார்வின், தமிழில்: ராஜ் கெளதமன், விடியல் பதிப்பகம்

சுற்றுச்சூழல் : பொது

1. இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்

2. தாமரை பூத்த தடாகம், சு. தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்

3. வானில் பறக்கும் புள்ளெலாம், சு.தியடோர் பாஸ்கரன், உயிர்மை பதிப்பகம்

4. அணுகுண்டும் அவரை விதைகளும், பாமயன், தமிழினி

5. நம்பிக்கையும் நடப்பும், முனைவர் இராமகிருட்டிணன், கஸ்தூரி பதிப்பகம்

6. பூவுலகின் கடைசி காலம், கிருஷ்ணா டாவின்சி, பாரதி புத்தகாலயம்

7. காண் என்பது இயற்கை: எஸ்.ராமகிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்

8. இப்போது அவை இங்கு வருவது இல்லை: கிருஷ்ணன் ரஞ்சனா, உயிர்மை பதிப்பகம்

9. உயிர்ப்புதையல், கோவை சதாசிவம், வெளிச்சம் வெளியீடு

10. அசுரச் சிந்தனைகள், அசுரன், தொகுப்பு:உதயகுமாரன்

11. மெளன வசந்தம், ரேச்சல் கார்சன், சுருக்கம்: தி. சுந்தர்ராமன், பூவுலகின் நண்பர்கள்-வம்சி

12. எண்ணெய் மற, மண்ணை நினை, வந்தனா சிவா-போப்பு, பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு

13. விரட்டப்படவேண்டிய ஸ்டெர்லைட், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு

14. ஞெகிழி, பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு

15. மண்ணுக்கு உயிருண்டு, பூவுலகின் நண்பர்கள்

16. விதை துளிர்த்தால் இன்னும் அழகாகும் வாழ்வு, ஹெர்மான் ஹெஸ்ஸே, டாக்டர் ஜீவா, யூமா.வாசுகி, பூவுலகின் நண்பர்கள்

17. உயிரோடு உலாவ, வந்தனா சிவா, பூவுலகின் நண்பர்கள்

18. ஓகோனிக்கு எதிரான யுத்தம், யூமா.வாசுகி, பயணி வெளியீடு

19. அறிவியல் - வளர்ச்சி - வன்முறை, கிளாட் ஆல்வாரெஸ்- இரா.நடராசன், பயணி வெளியீடு

20. சேதுக் கால்வாய்த் திட்டமும் ராமேசுவரத் தீவு மக்களும்: குமரன்தாஸ், கருப்புப் பிரதிகள்

21. போபால், மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் உண்மை முகம், மருத்துவர் வீ. புகழேந்தி

22. சுற்றுச்சூழலும் தற்சார்பும், யோனா ஃபிரெய்ட்மேன், எடா ஷார், எம்.ஆர்.ராஜகோபாலன், என்.சி.பி.எச்.

23. பூமியை பாதுகாப்போம்: நடாலியா மார்ஷல், விகடன் பிரசுரம்

24. சூழலியல் புரட்சி, ஜான் பெல்லமி ஃபாஸ்டர், தமிழில்: துரை.மடங்கன், விடியல்

சுற்றுச்சூழல் : அணுவாற்றல்

1. அணுவாற்றல்: ஒரு அறிமுகம், பூவுலகின் நண்பர்கள்

2. கூடங்குளம் அணுமின் திட்டம்: மருத்துவர்கள் ரா.ரமேஷ், வீ.புகழேந்தி, வி.டி.பத்மநாபன், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு

3. கல்பாக்கமும் கடல் எரிமலையும், மருத்துவர்கள் வீ.புகழேந்தி, ரா. ரமேஷ், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு

4. அணு ஆட்டம், சுப.உதயகுமாரன், விகடன்

5. இந்திய அணுசக்தித் திட்டம், சுவ்ரத் ராஜு, முகம்

6. கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள், . முத்துக்கிருஷ்ணன், உயிர்மை பதிப்பகம்

7. தேவையா இந்த அணு உலைகள்?, . மார்க்ஸ், பயணி வெளியீடு

8. ஏன் இந்த உலைவெறி, ஞாநி, ஞானபாநு

9. அன்று செர்னோபில், இன்று ஃபுகுஷிமா, நாளை கல்பாக்கமா?, மருத்துவர் வீ.புகழேந்தி, சூழல் பாதுகாப்புக்கான மருத்துவர் குழு

10. அய்யோஅணு உலைகள்!, கா.தமிழ்வேங்கை, ஐந்திணை வெளியீட்டகம்

11. உயிருக்கு உலை வைக்கும் அணு உலைகள் வேண்டாம், கட்டுரைத் தொகுப்பு, வெளிச்சம்

12. கூடங்குளம் அணு மின் உலை: வரமா, சாபமா? சிறில் அலெக்ஸ், நம்ம சென்னை

13. அடிவயிற்றில் அணுகுண்டு, அரிமா வளவன், தமிழர் களம்

14. அபாயம் (அணுஉலை விபத்து பற்றிய நாவல்), ஜோஷ் வண்டேலூ, க்ரியா

சுற்றுச்சூழல் : காலநிலை மாற்றம்

1. கொதிக்கும் பூமி, ஆதி வள்ளியப்பன், ஆழி வெளியீடு

2. சூடாகும் பூமி, பேராசிரியர் பொ. இராஜமாணிக்கம், பாரதி புத்தகாலயம்

3. பூமி சூடேற்றம் சிக்கலா? பேரழிவா?, சேது, தென்றல் மீடியா

4. புவி வெப்பமடைதலும் காலநிலை மாற்றமும் - அவற்றின் அறிவியல், அரசியல், சூழலியல், பூவுலகின் நண்பர்கள்

சுற்றுச்சூழல் : தண்ணீர்

1. அவல நிலையில் தமிழக ஆறுகள், தொகுப்பாசிரியர்: எஸ். ஜனகராஜன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்-காலச்சுவடு

2. தமிழக பாசன வரலாறு, பழ.கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ்

3. தமிழகம், தண்ணீர், தாகம் தீருமா?, பழ.கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ்

4. தாமிரவருணி - சமூக பொருளியல் மாற்றங்கள், பழ.கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ்

5. மணல்கோட்டைகள், சாண்ட்ரா போஸ்டல் - பாமயன், பூவுலகின் நண்பர்கள்-வம்சி

6. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக, சாண்ட்ரா போஸ்டல், பூவுலகின் நண்பர்கள்-வம்சி

7. நன்னீர்ச் செல்வம், சாண்ட்ரா போஸ்டல் - போப்பு, பூவுலகின் நண்பர்கள்-வம்சி

8. தண்ணீர், தண்ணீர், தண்ணீர், பேராசிரியர் சந்திரா, பாரதி புத்தகாலயம்

9. தமிழக ஆறுகளின் அவலநிலை (சுருக்கம்), பேராசிரியர் ஜனகராஜன், பாரதி புத்தகாலயம்

10. தண்ணீர் யுத்தம், சுப்ரபாரதிமணியன், உயிர்மை பதிப்பகம்

சுற்றுச்சூழல் : வேளாண்மை

1. ஒற்றை வைக்கோல் புரட்சி, மசனாபு ஃபுகோகா, பூவுலகின் நண்பர்கள்-வம்சி

2. பசுமைப் புரட்சியின் வன்முறை, வந்தனா சிவா, பூவுலகின் நண்பர்கள்-வம்சி

3. விதைகள், பூவுலகின் நண்பர்கள்-எதிர் வெளியீடு

4. வேளாண் இறையாண்மை, பாமயன், தமிழினி

5. உழவுக்கும் உண்டு வரலாறு, கோ.நம்மாழ்வார், விகடன் பிரசுரம்

6. எந்நாடுடைய இயற்கையே போற்றி, கோ.நம்மாழ்வார், விகடன் பிரசுரம்

7. இனி விதைகளே போராயுதம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம்

8. நோயினைக் கொண்டாடுவோம், கோ. நம்மாழ்வார், இயல்வாகை பதிப்பகம்

9. தமிழ்நாடு வேளாண் மன்றச் சட்டம், கோ.நம்மாழ்வார், வானகம்

10. வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், கோ. நம்மாழ்வார், வானகம்

சுற்றுச்சூழல் : மரபணு மாற்றம்

1. உயிரியல் புரட்சியின் ஒடுக்குமுறை, மு. பாலசுப்பிரமணியம், பூவுலகின் நண்பர்கள் - வம்சி

2. பட்டினி வயிறும் டப்பா உணவும், போப்பு, பூவுலகின் நண்பர்கள் - வம்சி

3. எது சிறந்த உணவு, மருத்துவர் கு.சிவராமன், பூவுலகின் நண்பர்கள்

சுற்றுச்சூழல் : மண்ணியல்

1. மூதாதையரைத் தேடி, சு.கி.ஜெயகரன், காலச்சுவடு

2. குமரி நில நீட்சி, சு.கி.ஜெயகரன், காலச்சுவடு

3. மணல் மேல் கட்டிய பாலம்: சு.கி.ஜெயகரன், காலச்சுவடு

4. கருப்பு கிருஸ்துவும் வெள்ளைச் சிங்கங்களும், சு.கி.ஜெயகரன், உயிர்மை வெளியீடு

5. இரு கிளிகள் இரு வழிகள், சு.கி.ஜெயகரன்

6. தளும்பல், சு.கி.ஜெயகரன்

சுற்றுச்சூழல் : கவிதை

1. இன்னும் மீதமிருக்கிறது நம்பிக்கை, பூவுலகின் நண்பர்கள் - வம்சி

2. கொண்டலாத்தி, ஆசை, க்ரியா பதிப்பகம்

3. நத்தையின் அழுகை, .ரெ. தமிழ்மணி, பாவாணர் பதிப்பகம்

4. காடுறை உலகம், அவைநாயகன், ஓசை வெளியீடு

5. சிதறாத எழுத்துக்கள், பா. சதீசு முத்துகோபால், பதிவுகள் பதிப்பகம்


தொகுப்பு : காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் .சண்முகானந்தம், ஆதி வள்ளியப்பன்



தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...