A BRIEF ENCOUNTER
ஒரு குறுகிய கால சந்திப்பு
தி பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் (1957)
லாரன்ஸ் ஆஃப் அரேபியா (1962), டாக்டர் ஷிவாகோ (1966) போன்ற பிரம்மாண்டமான, திகிலூட்டும் வீரசாகசம் நிறைந்த படங்களை பின்னாளில்
தயாரித்த டேவிட் லீன் இப்படியொரு எளிமையான நளினமான உள்ளத்தின் மென்மையான உணர்வுகளை
வெளிப்படுத்தும் குடும்பக்கதையை, அதுவரை திரைக்கு வராத ஆழமான காதல்
கதையை அற்புதமாகப் படைத்துள்ளார் என்பதை எண்ணும் போது வியப்பாக உள்ளது. இருமுறை
ஆஸ்கார் விருது பெற்ற டேவிட் லீனின் மென்மையான உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்தும் உத்திகள் கொண்ட திரைப்படம் இது.
புறநகர்ப் பகுதிகளில் வாழும் சாராவும், டாக்டர் அலெக்சும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நடுத்தர வயதை நெருங்கும் இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள். லாராவுக்கு நல்ல கணவனும் இரண்டு குழந்தைகளும்’ டாக்டர் அலெக்ஸ் மனைவியும் குழந்தையும் உள்ளவர். மில் போர்ட் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் லாராவின் கண்ணில் விழும் கரித்தூளை தற்செயலாக அங்கிருந்த டாக்டர் அலெக்ஸ் அகற்றி உதவுகிறார். இச்சந்திப்பு பழக்கமாகி, நட்பாக மலர்ந்து காதலாகக் கனிகின்றது. திருமணமாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒருவரை ஒருவர் சந்திப்பது என்பதே அவர்களது வாழ்க்கையின் உன்னத வேளையாக இருப்பதை உணர்கின்றனர். இப்படி பொது இடத்தில் சந்திப்பதையும் மீறி தனிமையில் சந்தித்து மகிழத் திட்டமிடுகின்றனர். ஆனால் அச்சந்திப்பின்போது ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்ச்சியால் அதிர்ச்சியுற்ற அவர்கள் தங்களது தனிப்பட்ட கடமைகளையும் பொறுப்புகளையும் அறிவுபூர்வமாக உணர்கின்றனர். சுமூகமான நட்புறவுடன் பிரிவது என்றும் முடிவு செய்கின்றனர். லாரா தன் குடும்பத்திற்கும் அலெக்ஸ் நிரந்தரமாக வேற்றிடத்திற்கும் திரும்புவது என்பதே அம்முடிவு, ஆனாலும் அந்த இறுதிப் பிரிவுதான் எவ்வளவு வேதனையானது.
ANTARJALI YATRA
முடிவற்ற பயணம்
வங்காளம் / 1987 / 134 நி / வண்ணம்
இயக்குநர் : கௌதம் கோஷ்
19-ஆம் நூற்றாண்டு வங்காளம். உடன்கட்டை ஏறுதல் - தடைசெய்யப்பட்டும் சமூகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் அவலம். சீதாராம் என்ற 80 வயது பிராமணக் கிழவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். புனித நதி தீரத்தில் உயிரைப் போக்குவதற்காக உறவினர்கள் அவரை கங்கைக் கரைக்குக் கொண்டு வருகின்றனர். உயிர் போகாமல் இழுத்துக் கொண்டிருக் கிறது. நிவாரணம் காண வந்த சோதிடன் அவருக்குத் திருமணயோகம் இருப்பதாகவும், கணவராக ஆனால் தான் அவரால் சொர்க்கத்திற்குப் போக முடியும் என்றும் சொல்கிறான். பணத்திற்கு ஆசைப்பட்ட ஒரு ஏழைப் பிராமணன் தன் மகளை மணம் செய்விக்கிறான். மயானம் காக்கும் தீண்டத் தகாதவனான பைஜூ இந்தக் கொடுமையை எதிர்த்தும் பயனில்லை. சாவு வராமல் அடம் பிடிக்க, உறவினர்கள் ஊர் திரும்பி வருகின்றனர். மரணத்திற்குத் துணை நிற்கும் இளம் பெண் கோபத்திற்கும் காமத்திற்கும் ஆட்பட்ட காவல்காரன் அங்கே வரவிருக்கிறது உணர்ச்சிகளுக்கும் சமூக நியதிகளுக்கும் இடையேயான முடிவற்ற போராட்டம்.
BREATHLESS
மூச்சுமுட்டல்
பிரான்ஸ் / 1959/90 நி/க.வெ
இயக்குநர் : ழான் லுக் கோதார்
அன்றைய ஹம்ரே பொசார்டோவை
நினைவூட்டும் நடை உடை பாவனைகளைக் கொண்ட மைக்கேல் (பெல் மாண்டோ) கார் ஒன்றைத்
திருடிக் கொண்டு எவ்வித குற்ற உணர்வோ படபடப்போ இல்லாமல் பாரீசை நோக்கி பயணமாகிறான். வழியில் காவலர் ஒருவரை எதிர்பாராமல் சுட்டுவிட்டுத் தப்பி விடுகிறான். பாரீசில் பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பழைய அமெரிக்கத் தோழியுடன் தொற்றிக்
கொண்டு காலம் கழிக்கிறான். தோழி பாட்ரீசியா கருவுறக் காரணமாகிறான். தேடி வரும்
காவல் துறையினரிடமிருந்து பலமுறை காதலியால் தப்புவிக்கப்படுகிறான். மீண்டும் ஒரு
காரைத் திருடி விற்ற பணத்துடன் பாரீசைவிட்டு ஓடிவிடத் திட்டமிடும்போது அதை
விரும்பாத பாட்ரீசியாவால் காட்டிக் கொடுக்கப்படுகி றான். அவள் அவனுக்கு
துரோகியாகத் தோன்றினாலும் சூழ்நிலை இருவரையுமே சமூகத்திடமிருந்து அந்நியப்பட்டவாகளாகவே காட்டுகிறது.
அதுவரை கையாளப்பட்ட சீரான கதை சொல்லல் பாணியையும் பல்வேறு திரைப்பட இலக்கணங்களையும் உடைத் தெறிந்து உருவாக்கப்பட்ட திரைப்படம் இது.
BATTLESHIP POTEMKIN
பொடம்கின் போர்க் கப்பல்
ரஷ்யா / 1925 / 70 நி / க.வெ
இயக்குநர்: செர்ஜி ஐஸன்ஸ்டீன்
வெற்றியடைந்த 1917 ரஷ்யப் புரட்சிக்கு முன்பே 1905-இல் ஒரு புரட்சி வெடித்தது. ஆனால் அது அடக்கப்பட்டு விட்டது. தோல்வியடைந்தாலும் அது பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. சக்கரவர்த்தி ஜாருக்கு எதிராக படையணிகளும் மக்களும் ஒன்று சேர்ந்தனர்.
அதில் முக்கியமானது ஓடேஸ்ஸா துறைமுகத்தில் நின்றிருந்த பொடம்கின் என்ற போர்க் கப்பலும் மக்களும் சேர்ந்து அரசுக்கு எதிராகச் செய்த கலகம். அந்தக் கலகத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக புதிய சோவியத் அரசின் ஏற்பாட்டின்படி ஐஸன்ஸ்டீன் இப்படத்தை தயாரித்தார்.
திரைப்படம் பற்றி ஐஸன்ஸ்டீன் எழுதிய கோட்பாடுகளின் மிக வெற்றிகரமான வடிவம் இப்படம். சில கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் அதன் கதை அந்தத் தனிநபர்களின் பிரச்சனை பற்றியதல்ல. அடக்கப்படும் சமூகம் தன்னை ஒன்றிணைத்துக் கொண்டு போராடும் பரந்த அரசியல் களம் பற்றியது. அதனாலேயே இப்படம் ஒடேஸ்ஸாவையும் தாண்டி உலகளாவியதாக எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துவதாக அமைகிறது.
THE BICYCLE THIEVES
சைக்கிள் திருடர்கள்
இத்தாலி / 1949 /90 நி / க.வெ
இயக்குநர் : விட்டோரியோ டிசிகா
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு
பிரான்சில் எழுந்த ’பதிய அலை’ திரைப்படங்களைப் போலவே இத்தாலியிலும் ’புதிய
யதார்த்த’ திரைப்படங்கள் தோன்றின. எளிமையான அதே நேரத்தில் யதார்த்தத்தை படம்
பிடித்தல், மனித நேயம், வாழ்க்கையைப் பற்றிய
ஆழ்ந்த அக்கறை ஆகியவையே இதன் ஆணிவேர்கள். 'ஷூஷைன்' என்னும் திரைப்படத்தின் மூலம்
உலகப் புகழ் பெற்ற டிசிகாவின் 'சைக்கிள் திருடர்கள்'
கதையில் வரும் உண்மையான இடங்களிலேயே படமாக்கப்பட்டது. சூழ்நிலைகளும் யதார்த்தமானவை. அண்டோனியோ பாத்திரம் ஏற்றவர்
அதுவரை நடிப்பென்றால் என்னவென்றுகூட தெரியாத ஒரு தொழிலாளி. தற்செயலாக தெருவில்
எதிர்ப்பட்ட சிறுவன், கதாநாயகளின் மகனாக்கப்பட்டான். அவ்வச்சூழலில் இருந்த உண்மை மனிதர்களே மற்ற
பாத்திரங்கள்.
போருக்குப் பின்பு ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவில் இத்தாலி நலிந்திருந்தபோது வேலை தேடி அலையும் கூட்டத்தில் அண்டோனியும் ஒருவன். கடைசியில் கிடைத்த சுவரொட்டி ஒட் டும் வேலைக்கு சைக்கிள் ஒன்று தேவைப்படுகிறது. மனைவி தான் அருமையாக பாதுகாத்துவந்த போர்வையை விற்று கணவனின் அடகு வைத்த சைக்கிளை மீட்டுத் தருகிறாள். வேலை செய்யும் இடத்தில் தன் சைக்கிள் களவு போக அதைத் தேடி அண்டோனியோ அலைகிறான். சைக்கிள் திருடியதாகச் சந்தேகப்பட்ட நபரை பிடித்தும் அவன் மூன்று முறை தப்பிவிடுகிறான். மனம் வெறுத்துப் போன அண்டோனியோ தானும் ஒரு சைக்கிள் திருடினால் என்னவென்று யோசித்து செயல்படுகிறான். ஆனால் திருடும்போது பிடிபட்டு கூட்டத்தில் அவமானப்பட்டு மகனின்ன் அழுகையால் மன்னிக்கப்படுகிறான். பாரமான இதயத்தோடு மகனுடன் கூட்டத்தில் கரைகிறான்.
யதார்த்தமான நடிப்பு,
சூழல், சம்பவங்கள், படப்பிடிப்பு ஆகியவையே இப்படத்தை உலகப்புகழ் பெற்ற படமாக்கியது. இடையில் வரும் கணவன் மனைவி உறவு தந்தை மகன் பாசம்,வாழ்க்கை சாவு ஆகியவற்றின் பெருமை, நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ராசிபலன் பார்த்தல் போன்றவை.
எளிய சிறந்த யதார்த்தமான திரைக்கதைக்கு எடுத்துக்காட்டு.
BARI THEKE PALIYE
பாரி தேக்கே பாலியே
அடக்கியாளும் தகப்பன்,
அன்பான தாய் இருவரையுமே விட்டு விட்டு பரபரப்பான
கல்கத்தாவுக்கு ஓடி விடுகிறான் சிறுவன் காஞ்சன். ஆனால் இறுதியில் நகரத்தைப் பற்றிய
பயங்கரமும் வேதனையும் கொண்ட பல கசப்பான உண்மைகளுடன் வீடு திரும்புகிறான். கல்கத்தாவில் காஞ்சனின் அனுபவங்களை மட்டும் படம் சித்தரிக்கவில்லை. நகரத்தின்
வெறுமையை அதன் ஆழத்தில் வெளிப்படுத்துகிறார் கடக். வேர்க்கடலை விற்கும் ஹரிதாஸ்
இந்த தறிகெட்ட நகரத்தில் அதன் போக்கை மறுதலிக்கும் பெரிய ஆற்றலாகவே தோன்றுகிறான்.
அவனது குழந்தையைப் போன்ற கள்ளங்கபடமற்ற போக்கினாலும் இனிமையான பாடல்களினாலும்
சுவையான வேர்க்கடலையாலும் எல்லாச் சிறுவர்களையுமே தன்பால் ஈர்த்துக் கொள்கிறான். கல்கத்தாவின் மறைந்திருக்கும் மனசாட்சி அவன் கல்கத்தாவின் ஆத்மா அவன். ஒரு
மாறுவேடத்திற்குள் நம்மை மறைத்துக் கொண்டால் மட்டுமே இந்த நகரம் நம்மை உயிர்
வாழ்வதற்காவது அனுமதிக்கும். கிரேக்க நாடகத்தில் கோரஸ் போல ஹரிதாஸ் தன்னைச்
சுற்றி நிகழும் எல்லாவற்றைப் பற்றியும் விவரிக்கும் மனச்சான்றுள்ள வர்ணனையாளன். குழப்பமான இந்த நகரத்தின் நியதிகளுக்குள் காஞ்சன் வளர்வதற்கு ஹரிதாஸ் தவிர்க்க
முடியாத துணைவனாகிறான். எனவேதான் ஹரிதாசின் முகமுடியை சுமந்து காஞ்சன் தன்
கிராமத்திற்குத் திரும்புகிறான்.
THE CONDUCTOR
கண்டக்டர்
போலந்த் / 1980 / 101 நி/ வண்ணம்
இயக்குநர் : ஆந்த்ரே வாய்தா
மார்தா ஒரு வயலினிஸ்ட போலந்தில் உள்ள
ஒரு சிறுநகரத்தில் வசிப்பவள். அவள் ஒருமுறை நியூயார்க்கிற்கு சென்ற போது லசோக்கி
என்ற உலகப்புகழ் பெற்ற, இசைக்குழு நடத்துபவரைச்
சந்திக்கிறாள். அவர் மார்தாவின் ஊரில் பிறந்து இளமையில் அங்கே வாழ்ந்தவர்.
மார்த்தாவின் தாயாரோடு அந்தக் காலத்தில் காதல் வயப்பட்டிருந்தவர். மார்த்தா ஊர்
திரும்புகிறாள். மார்த்தாவின் கணவன் ஆதம் உள்ளூரிலுள்ள இசைக்குழுவின்
இயக்குநர். லசோக்கியின் திறமையின் மீது மார்தா கொள்ளும் ஆர்வம் தம்பதிகளுக்கிடையே
பிரச்சினைகளை உருவாக்குகிறது. எதிர்பாராதவிதமாக லசோக்கி மார்த்தாவின் நகரத்திற்கு
பீதோவனின் 5-வது சிம்பொனியை ஊள்ளூர்
இசைக்குழுவின் மூலம் நடத்துவதற்கு வந்து சேர்கிறார். 50 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஊருக்குத் திரும்பும்
இசைமேதையைப் பற்றிய செய்திகள் பரபரப்பாக அடிபடுகின்றன. மேதை நிகழ்ச்சியை நடத்த
மறுக்கிறார்.
CONFIDENCE
நம்பிக்கை
ஹங்கேரி / 117 நி / வண்ணம்
இயக்குநர் : இஸ்ட்வான் ஸ்சாபோ
இரண்டாம் உலக யுத்தம் முடிவுக்கு
வந்து கொண்டிருந்த கால கட்டத்தில் 1944-இல் இலையுதிர் காலத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக
நடிக்க நேர்கிறது. காதா முன்பு வசதியான, சுகமான வாழ்க்கையில் மிதந்தவள். யானூஸ் தலைமறைவு
வாழ்க்கையின் கடினத்தையும் துன்பத்தையும் அனுபவித்தவன். அவள் அவனிடம் அன்பையும்
அனுதாபத்தையும் எதிர் பார்க்கிறாள். அவர்களுக்குள் நெருங்கிய உறவு ஏற்பட்ட பின்னும் அவன் வாழ்க்கை கற்பித்த பாடங்களை நினைவில் கொண்டு, அவளை முற்றாக நம்பாமல் மனதளவில் தனித்தே நிற்கிறான்.
யுத்தம் முடிந்து நாடு விடுதலை பெற்ற பின் அவர்கள் சேர்ந்திருப்பதா,
பிரிந்துவிடுவதா என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயம்.
எதுவாயிருந்தாலும் சேர்ந்திருந்த காலத்தை ஒரு போதும் அவர்களால் மறக்க முடியாது.
CRIES AND WHISPERS
வேதனையும், கண்ணீரும்
ஸ்வீடன்/ வண்ணம்
இயக்குநர்: இங்மர் பெர்க்மன்
ஒரு மாளிகை. கடும் நோயால் அவதியுறும் பெண். அவளைக் காண வந்துள்ள அவளது இரு சகோதரிகள். அவர்களது கணவன்மார்கள். அவர்களது கசந்த மணவாழ்வு. பொய்மை, போலித்தனம், குரூரம், தனிமை, சிகிச்சையளிக்க வரும் மருத்துவர். அவருக்கும் ஒரு சகோதரிக்குமான உறவு. நோய்வாய்ப்பட்ட பெண்ணை மிகுந்த அன்புடன் பராமரிக்கும், பல காலமாக அந்தக் குடும்பத்துடனேயே வசித்து வரும் பணிப்பெண். வலி, ஆதரவின்மை, உரையாடலின் சாத்தியமின்மை. இறுதியில் நோய்வாய்ப்பட்ட பெண் இறக்க, சகோதரிகள் கிளம்புகின்றனர். மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இப்படம் எப்படிப்பட்ட வாழ்விலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டு என்பதை இறுதியாக வலியுறுத்துகிறது. இப்படத்தில் வண்ணம் பயன்படுத்தப் பட்டுள்ள விதம் குறிப்பிடத்தக்கது
1
DANTON
டாண்டன்
இயக்குநர்: ஆந்த்ரே வாய்தா
சில வரலாற்று உண்மைகளை
அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்ட இக்கதை. 16-ஆம் லூயி மன்னனைத் தூக்கியே நிந்த புரட்சிக் குழுவின் இரு
தலைமை உறுப்பினர்களுக்கிடை யில் நடைபெறும் கயமைத்தனமான அதிகாரப் போட்டியை
நாடகமாக்குகிறது.
டாண்டன், உணர் ஊக்கமுள்ள ஒரு புகழ் பெற்ற லட்சிய வாதி மதுவிலும் மங்கையிடமும் நாட்டமுள்ளவன் புரட்சிக் குப் பின் அமைத்த அரசின் ஊழல் போக்கை வெறுப்பவன் ரோபெஸ் பீரே புதிய அரசின் தலைவன் கொள்கைப் பிடிப்புள் ளவன் ஆனாலும் தற்போது என்ன விலை கொடுத்தேனும் தன் அதிகாரத்தைக் காத்துக் கொள்வதிலேயே முழுமையாக ஈடுபட் டிருப்பவன், பிரான்ஸ் முழுவதும் வறுமையும் பற்றாககுறையும் அதிருப்தியைப் பரப்பிக் கொண்டிருக்கும் அவ்வேளையில் துடிப்பு மிக்க டாண்டனே தனக்கு கடுமையான பகைவன் என் பதை ரோபெஸ் பீரே உணர்கிறான் டாண்டன் தன் முடிவிற்கா சுத் திட்டமிடுவதைக் கேள்விப்பட்டு தேசத் துரோகக் குற்றம் சாட்டி அவனை சிறையிலடைக்கிறான் முடிவில் டாண்டன். கில்லட்டினையே (தலை வெட்டும் கருவி) சந்திக்க நேர்கிறது. வழக்கு நடக்கும் போக்கில் அடுத்தவன் எப்படி புரட்சியின் நோக்கத்தை கைவிட்டு அதை வஞ்சித்துவிட்டான் என்று இருவ ருமே ஒருவர்மீது ஒருவா பொதுவில் குற்றம் சாட்டுகின்றனர்
போலந்தின் சமகால அரசியல் நிகழ்வுகளோடு ஒப்புமைப் படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட படம்
DEATH OF A BUREAUCRAT
அரசு ஊழியனின் மரணம்
கியூபாவில் ஒரு தொழிலாளி
விபத்தொன்றில் இறந்து விடுகிறார். அவருக்கு மரியாதை செய்யும் விதமாக அவரது தொழில்
அடையாள அட்டையையும் அவருடன் சேர்ந்தே புதைத்து விடுகின்றனர் அவரது மனைவிக்கு
பென்சன் வாங்கு வதற்கான விண்ணப்பத்திற்கு அதே அடையாள அட்டைதாஸ் தேவைப்படுகிறது.
இறந்தவரின் மருமகன் இந்த விஷயத்தை கமுகமாக முடிக்க ஒரு வழி தேடுகிறார் திட்டத்தை
விட செயல் கடினமாகிறது. புதைத்த பிணத்தை ரகசியமாக தோண்டி எடுக் கின்றனர். அதைவிட
கஷ்டமாக இருக்கிறது பிணத்தை மீண்டும் புதைப்பது அதைத் தொடர்ந்து விரித்திரமான
குழப்பங்கள். அரசு நிர்வாக அமைப்பை நகைச்சுவை கலந்த கடுமையுடன் சாடுகிறது இப்படம்
துவிதா (பெண்)
இந்தி / 1973 / 82 நி / வண்ணம்
இயக்குநர் : மணி கெளல்
1965-களுக்குப் பிறகு தோனறிய இந்தியப்
புதிய அலை" திரைப்பட இயக்குநர்களில் சிறப்பானவராகக் கருதப்படும் மணி கௌல்
பூனா திரைப்படக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர்
ராஜஸ்தான் நாட்டுப் புறக் கதையொன்றை அடிப்படையா கக் கொண்டு மிக நுட்பமாக மாற்றியமைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம் "துவிதா கிராமதது செல்வந்தரான வியாபாரி ஒரு வளின் மகனுக்கு திருமணம் முடித்து இருவரும் ஊருக்கு வருகின் றனர் வணிகம் செய்வதற்காக வியாபாரியின் மான் வெளிநாட டுகளுப் போனதும், ஒரு பூதம புதிதாக மணமான அவள் மீது மையல் கொண்டு வெளிநாட்டுக்குப் போனவனின் உருவத்தில் வீட்டிற்கு வந்து, எல்லோரையும் ஏமாற்றிவிட்டு அவளுடன் வாழத் தொடங்குகிறது காலப்போக்கில் அவள் கருவுற்று 'பூதக் குழந்தை யைப் பெற்றெடுக்கப் போகும் வேளையில், எல்லாவற றையும் அறிந்து கொண்ட உண்மையான கணவன் வீட்டிற்குத் திரும்புகிறான் வீட்டாருக்கும் ஊராருக்கும் குழப்பமேற்படுகி றது கிராமத்து அறிவாளியான இடையன் தந்திரமாக பூதத்தை சிறைப்படுத்துகிறான் உண்மைக கணவன் வீட்டில் தன பழைய இடத்தைப் பெற்று விடுகிறாள் ஆனால் அவளோ இவ்வளவு நாட்களும் உடன் வாழ்ந்த 'பூதக் கணவனை இழந்து துக்கம் காக்கிறாள்
மேலோட்டமாக நாட்டுப்புற புதிர்க்கதை போல் தோன்றி வாலும் படிப்படியாக வளர்ந்த சமூகமாற்றத்தில் பெண் அடிமை யாக்கப்பட்டு ஆண்களின் கௌரவமான சொத்தாக மாறி தன் தனித்துவத்தை இழந்து நிற்பதை மிக நுட்பமாகவும் தனிபாணியி வான இயக்கத்திலும் மணிகௌல் சித்தரிக்கின்றார்
FANNY AND ALEXANDER
ஃபான்னியும் அலெக்சாண்டரும்
ஸ்வீடன் / வண்ணம்
இயக்குநர் : இங்மர் பெர்க்மன்
தனது இறுதிப் படமென்று உலக
சினிமாவின் மிகப் பெரிய சாதனையாளர்களில் ஒருவராகிய இங்மர் பெர்க்மனால் அறிவிக்
கப்பட்ட இப்படம், அவரது படங்களின் சாராம்சங்களையே
தொகுத்தளித்தது போன்ற ஒரு அபூர்வ நிகழ்வு எனலாம் அலெக் ஸாண்டர் என்ற சிறுவன்,
அவனது சகோதரி ஃபாவனி இப்படத்தின் மையம் அவர்களது
தந்தை, பெரிய குடும்பத்தின் முத்து மகள்
தியர் மரணமடைந்தபின் தாய் ஒரு பாதிரியாரை மகைம் நாள் பாதிரியாரின் கோட்டையினுள்
கிட்டத்தட்ட சிறைப்படு கின்றனர் அங்கு கிடைக்கும் அனுபவங்களும்,
அவர்கள் அ கிருந்து தப்புவதும் மையமான சம்பயங்கள்
இவையும் அவாக எது சிறிய தந்தையர் பாட்டி ஆகியோருடைய வாழ்விற்கான அணுகுமுறைகளும்
ஆழ்ந்த தத்துவப் பரிசினைகளை பிரதா னப்படுத்துகின்றன அதே சமயம் மனிதர்கள் குறித்த
பரிவும், அனுநாடமும் நிரைந்த நோக்கினை படம்
வெளிப்படுத்துகிறது. வனிமையான கதையோட்டம் கொண்ட படம் அர்த்த கமை பொருத்திய
குறியீடுகளால் நிறைந்தது. படத்தின் சிவபருதிகள் யதார்த்த தலத்தினை கடந்து பூடகமான
சில நிகழ்வுகளைக் சித்தரிக்கிறது தொடர்ந்த விவாதத்தைக் கோரும் நுட்பங்கள் நிறைந்த
படம்
THE GREAT DICTATOR
பெரும் சர்வாதிகாரி
அமெரிக்கா / 1940 / 129 / க. வெ
இயக்குநர் : சார்லஸ் சாப்ளின்
உலகத்தையே தன் சர்வாதிகாரப்
போக்கால் ஆட்டிப் படைத்த ஹிட்லரைப் பற்றிய நோடியான நையாண்டிச் சித்திரம் இது
நாடுகளின் பெயர்களும் ஆட்களின் பெயர்களும் மாறியி குந்தாலும் சாராம்சத்தில்
இட்லரின் ஆரிய இன மேவாண்மைக் கொள்கையை வளமையாகக் கண்டித்து,
மனிதகுலத்தின் உரி மைகளையும் சுதந்திர வாழ்க்கையையும்
மனித நேய உறவை யும் தூக்கிப் பிடிக்கும் சார்லஸ் சாட்னினின் முதல் பேசும திரைப்
படம் 'தி கிரேட் டிக்டேட்டர்.
சர்வாதிகாரியைப் போலவே உருவமுள்ள பூத நாவிதன் போரில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் டய காணாமல் அங்கிருந்து தப்பி தன் கடையைச் சேர்கிறான். கடை முன்பு சர்வாதிகாரியின் படையால் இடப்பட்டிருக்கும் இன அடையாளத்தை அழிக்கப் போக போலீசால் சிறை பிடித் கப்பட்டு பக்கத்து வீட்டு சலவைக்காரப் பெண்ணால் காட்பா றப்படுகிறான். இப்படியே சர்வாதிகாரியின் அரசால் பல கொடு மைகளுக்கும் ஆளாக, சிறையில் பழகிய நண்பனோடு தந்திர மாக தப்பி சர்வாதிகாரியால் கைப்பற்றப் பட்ட அடுத்த நாட்டுக் குள் நுழைகிறான் அங்கு சர்வாதிகாரியை வரவேற்கக் காத்தி ருந்த கூட்டம் யூத்நாவிதனை சர்வாதிகாரியெனக ககுதி அழைத்துச் சென்று பெரிய மேடையொன்றில் ஏத்திவிடுகின்ற னர் என்ன நடந்தது என்பதை அறிய முடியாவிட்டாலும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சாவாதிகாரத் திற்கெதிராகவும் மனித குமத்தின் கமூக உறவுகளுக்கு ஆதரவா கவும் கோமாளித்தனமாக ஆனால் ஆணித்தரமாக ஒரு பெரி உரை நிகழ்த்துகிறான்.
GLASS
கண்ணாடி
நெதர்லாண்ட்ஸ் / வண்ணம்
இயக்குனர் : பெர்ட் ஹான்ஸ்ட்ரா
ஒரு சிறிய கவிதையைப் போன்ற இப்படம்
ஏராளமான அர்த்தங்கள் உற்பத்தி செய்யக்கூடிய நுட்பமான படைப்பு கண் ணாடிப் பொருட்கள்
மனிதரால் நேரடியாக உருவாக்கப்படுவது. இயந்திரங்களால் பெரிய அளவில்
தயாரிக்கப்படுவது என்ற இரண்டு நடைமுறைகளை அருகருகே கொண்டுவரும் இப்படம்
படைப்பாற்றல்,உழைப்பு. இயந்திரமயமாதல்,
உற்பத்தி, நுகர்வு குறித்த கேள்விகள் எழுப்பி சிந்தனையைத்
தூண்டவல்லது. ஒரே இடத்தைத் தவிர வசனங்கள் ஏதுமின்றி இசையின் துணையுடன்
அமைக்கப்பட்டுள்ள இப்படம் திரைப்பட மொழியின் சாத்தியங் களையும் நமக்கு
உணர்த்தவல்லது.
HANNA .K
ஹன்னா. கே
பிரான்ஸ் / அமெரிக்கா/ 1983/ 111 /நி / வண்ணம்
இயக்குநர் : கான்ஸ்டான்டைன் கோஸ்டா காவ்ராஸ்
ஜெருசலேமில் வாழும் அமெரிக்க யூத
வழக்கறிஞரான ஹன்னா காப்மான், செலிம் என்னும் பாலஸ்தீன 'பயங்கரவாதி யாக கருதப்பட்டவனுக்காக வழக்காட வழக்கு
மன்றத்தால் அமர்த்தப்படுகிறாள். பாலஸ்தீனிய மக்களின் உண்மையான நிலைமையைப் புரிந்து
கொள்வதோடு தான் செலிம் மீது காலப் போக்கில் காதல் வயப்பட்டிருப்பதை உணரும் அதே
வேளை யில் அவன் உண்மையிலேயே பயங்கரவாதிதாளோ என்று ஐயப் பட்டுக் குழம்பிப் போகிறாள்
ஹன்னா அரசு வழக்கறிஞளான ஜோகவுடனான உறவில் தான் கருவுற்றிருப்பதை அறிகிறாள். அதே
வேளையில் கைவிட்டு விட்டுப் போன அவளது பிரெஞ்சுக் கணவன் இப்போது திரும்பி வந்து
தன்னுடன் வரும்படி வற்புறுத் துகிறான்.
பாலஸ்தீன மக்களின் நிலைமை, அவளது யூத இன குற்ற உணர்வு, வெவ்வேறு போக்குகள் கொண்ட மூன்று ஆண்களுட னான மாறுபட்ட உற்றநிலைகள் ஆகிய உணர்வுகளுக்கிடையில் அவள் அலைக்கழிக்கப்படுகிறாள். அராபியர்கள் குறித்த யூதர்க ளின் மனப்போக்கு, குடிபெயர்ப்புக் கொடுமைக்குள்ளாகும் பாலஸ்தீனிய மக்களின் நிலைமை போன்ற அடிப்படை பிரச்சி னைகளையும் அரசியல் நிகழ்வுகள் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புக்களையும் மிக நுணுக்கமாக வும் கலை நேர்த்தியுடனும் வரைந்து காட்டியுள்ளார் காவ்ராஸ்.
JALSAGAR
இசைக்கூடம்
இந்தியா/ க.வெ
இயக்குநர்: சத்யஜித்ரே
ஒரு சமூக அமைப்பு மாறும்போது,
வணிமமாயமாகும் போது கலாச்சார விழுமியங்கள்
சிதிலமடைவதையும், மதிப்பீ டுகள் மாறுவதையும்
சித்தரிக்கிறது சத்யஜித்ராயின் 'இசைக்கூ டம் என்ற இப்படம்
விஸ்வாம்பர் குர்னே என்ற நிலப்பிரபு வறுமையடைவதையும், தனிமைப்படுவதையும் கதையாகக் கொண்டது. புதிய பணக்காரனை
கங்கூலியுடனை, தனது பாரம் பர்யத்தைக் குறித்து
கர்வம் கொண்ட விஸ்வாம்பர் சூர்னேயின் வரவு இப்படத்தின் விவாதத்திற்குரிய அம்சம்
காட்சியமைப்பு. இசை, நடிப்பு போன்ற சினிமாக்கலையின்
அம்சங்கள் பலவற் றில் சிறந்து விளங்கும் இப்படம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற
சத்யஜித்ராயின முக்கியமான படங்களின் ஒன்று. ஒரு தனி மனிதனின் வீழ்ச்சி குறித்த
துன்பியல் பாங்கிலான இக்கதை மிக மென்மையாகக் கூறப்பட்டுள்ளது.
KNOCK OUT
நாக் அவுட்
தமிழ் / 19 நி / 1992
இயக்கம் : பி. லெனின்
சஞ்சீவி ஒருகாலத்தில் ஏராளமான
பதக்கங்களையும் கோப் பைகளையும் வென்று புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரன் இன்று
அனைத்தையும் இழந்து, அனைவராலும் மறக்கப்பட்டு
நகரவீதிகளில் உழலும் ஓட்டாண்டி அனாதையாக இறக்கும் அவனது உடல் சடங்கு
மரியாதைகளின்றி புதைக்கப்படுகிறது.
பல வருடங்களுக்குப் பின் அரசு விளையாட்டுத் துறை யில் சஞ்சீவியின் சாதனைகளை கௌரவிக்கிறது ஒருநினைவா லயமும் அமைக்கிறது அவன் புதைக்கப்பட்ட இடமோ யாரா லும் கவளிக்கப்படாமல் புதர் மண்டி சீர்கெட்டுக் கிடக்கிறது.
THE LAST EMPEROR
கடைசிச் சக்கரவர்த்தி
இங்கிலாந்து /1989 / வண்ணம்
இயக்குநர் : பெர்னார்டோ பெர்டோலூசி
சீனாவின் குயிங் வம்சத்தின்
சக்கரவர்த்தியாக பாலகனாக இருந்த போது தத்தெடுக்கப்பட்டு, இருபதாம் நூற்றாண்டு சீன வரவரற்றுச் சூழலில் தக்கையாக
அலைக்கழிக்கப்பட்டு, செஞ்சீ னத்தில் ஒரு சாதாரணத்
தோட்டத் தொழிலாளியாக இறந்துபோன புயி என்ற கடைசிச் சக்கரவர்த்தியின் கதையிது. 1912-இல் சீனா குடியரசான போது 3000 ஆண்டு மன்னராட்சி மரபு முடிவுக்கு வந்தது. அரண்மனை
வளாகத்தை விட்டு வெளியே வராது தடுக்கப்பட்டு பெயருக்கு மட்டும் சக்கரவர்த்தி யாக
தன் இளமைக் காலத்தைக் கழிக்கிறான் புயி 1924-இல் மற்றொரு குடியரசுவாதிகள் பீகிங்கை கைப்பற்றிய போது புயியை
டியன்டின் என்ற இடத்திற்கு நாடு கடத்துகின்றனர்.
மேலை நாட்டு நாகரீக மோகத்தில் உல்லாசியாக வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு ஜப்பான் மஞ்சூரியாவை ஆக்கிரமித்த போது புது வாழ்வு கிடைக்கிறது. மஞ்சூரியாவின் அரசராக ஜப் பானால் முடி சூட்டப்படுகிறார். இரண்டு மனைவியரில் ஒருத்தி தன் வழியே போகிறாள் இன்னொருத்தி போதைக்கு அடிமைய கிறாள், ஜப்பானின் அரசியல் ஆட்டத்தில் தான் வெறும் பகடை என்று உணர்ந்த போது தன் குழந்தை தன்னுடையதல்ல என்ற அதிர்ச்சியும் காத்திருக்கிறது. உலக யுத்தத்தில் ஜப்பானின் தோல் வியோடு மஞ்சூரியா மீண்டும் சீனாவிடம் வருகிறது. கம்யூனிஸ் அரசால் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டு புயி, 10 ஆண்டு சிறைத் தண்டைனக்குப் பிறகு, மன்னித்து விடுவிக்கப் படுகிறார். தனி மனிதனாக பீகிங்சாலையில் போகும் ஆயிரமாயி ரம் சைக்கிள்களுக்கிடையே தானும் ஒரு சைக்கிளில் போகும் நிலையிலிருக்கிறார். 1967-இல் மரணமடைகிறார்.
MY FAVOURITE THING
எனக்குப் பிடித்த விஷயம்
இன்றைய தனி மனிதன் விளம்பர
வாசகங்களின் பிடியில் சிக்கிவிட்டானா?
மனித மனதில் நேர்மை இன்னும் மிஞ்சியிருக்கிறதா?
19 பேர் தங்களுக்கு விருப்பமான விஷயங்களைப் பற்றிச் சொல்வதன் மூலம் இக்கேள்விகளுக்கான தருகின்றனர். விடையைத்
MY FIRST WIFE
என் முதல் மனைவி
ஆஸ்திரேலியா/ 1984 / 95 நி / வண்ணம்
இயக்குநர்: பால் காக்ஸ்
வானொலி செவ்வியல் இசையமைப்பாளரான ஜோன் இசை யுலகில் பெரும் வெற்றியாளராகத் திகழ்ந்தாலும், சொந்த வாழ்க் கையில் தன் சொந்த மனைவியுடன் உடலுறவு கொள்வதில் கூட வெற்றி பெற முடியாமல் மனம் வெதும்பிப் போனவன் மனைவி ஹெலனோ மற்றொருவருடன் தொடர்பு வைத்திருப்பதை ஒப்புக் கொண்டு மணவிலக்கு கோருகிறாள். அவள் தன்னை விரும்பவில்லை என்பதை நம்ப மறுக்கும் ஜோன், அவள் அவனை விட்டுப் போய் விட்டதும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு முய என்று கருதும் வெட்ளை தன்னுடன் ஏடும்பம்த கௌாகிநான் அவளோ அவனது செஞ்சதஇத தான் விடுபட்டுப் போவயேயே பிடிவாதல் காட் அவள் மனதை மசத்துவாகஅவளது குடும்பத்தார் நண்பர்களின் உதவியை நாடியும் பலனளிக்காமல் போகவே இறுதியில் அவளை அடைய முயற்சிக்கின்றான்.
ஜோன் வஞ்சிக்கப்பட்டுவிட்டதாக உணர்வான னங்கள் இருப்பதைப் போலவே ஹெய்னின் விடுதலை லையிலும் நியாயமிருப்பதாகத் தோன்றுகிறது
MAMMO
மம்மோ
இந்தி / 1994 / 120 நி / வண்ணம்
இயக்குநர் : ஷியாம் பெனகல்
தனது முதல் படமான 'அங்கூர் (1974) தொடங்கி நிஷாந்த் (1975)
மந்தன் (1976) பூமிகா (1977) மண்டி (1983) சூரஜ்கா அசவான் கோடா (1995) போன்ற ப படங்களுக்கும் பல்வேறு விருதுகளைப் பெற்ற ஷியாம்
பென் கல் சமீபத்தில் இயற்றிய சிறந்த படங்களில் ஒன்று பாகிஸ்தான் பிரிவினையின்
பாதிப்பை ஒரு பெண்னுக்கு ஏ டும் அவலத்திலிருந்து அசைவதே இத்திரைப்படத்தின் அடிப்ப
டைக் கரு.
"மம்மோ" என்று செல்லமாக அவளது சகோதரிகளால் அழைக்கப்பட்ட மெஹுமுதா பேகம் லாகூரைச் சார்ந்த ருக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறார் நாட்டுப் பிரிவி னைக்குப் பிறகு கனவம் மனைவியும் பாகிஸ்தானின் குடிமக களாக்கப்படுகின்றனர். அவள் கணவர் இறந்தவுடன் சொத்துத் தகராறில் வெற்றி பெற்ற கணவரின் உறவினர்கள்அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகின்றனர்.
எப்படியெல்லாமோ பம்பாய் வந்து இப்போது எஞ்சிவி ருக்கும் அவளது ஒரே உறவான சகோதரியிடம் அடைக்கலம் பெறுகிறாள். அவள் தொடர்ந்து தனது விசாவை பதுப்பித்து வந்தும் இனியும் தொடர்ந்து புதுப்பிக்க முடியாத நிலையில் ஒரு ஏமாற்றுக்காரனுக்கு மஞ்சம் கொடுத்து வெளிநாட்டவரின் பெயர்ப்பதிவு பட்டியலிலிருந்து தன் பெயரை அழித்துவிடர் செய்கிறாள்.
அந்த நிம்மதியும் சிறிது காலமே நீடிக்கிறது விசாரணை யில் ஏமாற்றுப் பேர்வழி பிடிபட்டு, எல்லா வெளிநாட்டவரும் சுற்றி வளைக்கப்படுகின்றனர். இருபத்து நான்கு மணி நேரத்திர குள்ளாக தனக்கு எந்த ஆதரவும் பகவிடமும் இல்லாத பாகிஸ் தானுக்கு நாடு கடத்தப்படுகிறான்.
NAZARIN
நசாரின்
மெக்சிகோ /1958 /94 /க. வெ
இயக்குநர் : லூயி புனுவல்
லட்சியவாதியான பாதிரி நசாரில்
தன்னைச் சுற்றியுள்ள மோசமான சேரியையும் அதில் மோசமான வாழ்க்கையை மேற் கொண்டுள்ள
மக்களையும் சீர்திருத்த முனைந்து லேயே கேவலப்படுத்தப்படுகிறார்.
கொலைகாரப் பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து அவ மானப்படுகிறார். பாதிரி தொழிலைவிட்டு தொழிவாளியாக மாற முயலும்போதும் தோல்விதான் மிஞ்சுகிறது இப்படி அவன்மேற் கொள்ளும் பலமுயற்சிகளும், அவனுக்கு எதிராகவே அமைகின் றன சிறையிலும் அடைபடுகிறார்
அவரது நேர்மையும், கருணையும் மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் போது கூட அவன் மனம் தளரவில்லை. அவனது உத்தம் குணத்திற்கும், செய்த தொண்டுகளுக்கும் பிரதி பலனாக இல்லாமல், இறுதியில் தற்செயலாக ஒரு புன்னகையும் வாழ்த்தும் பரிசாகக் கிடைக்கிறது இது புனுவலின் மிகச் சிறந்த படம்
PADMA NADHIR MANJHI
பத்மா ஆற்றுப் படகோட்டி
பெங்காலி/1992/13/ வண்ணம்
இயக்குநர் : கௌதம் கோஷ்
கல்கத்தா பல்கலைக்கழகப்
பட்டதாசியான கௌதம் கோஷ். 1974 இல் 'பசித்த இலையுதிர்காலம்' (Hungry
Autumn) டாகு மென்ட்ரி படத்தை உருவாக்கி 1978-இல் நடந்த ஓபெர் சென் திரைப்பட விழாவில் விருது பெற்று தனது
திரைப்பட வாழ்க்கை யைத் துவக்கினார். அவரது மாபூமி (1979) தாக்கல் (1982) பார் (1984) அந்தர் ஜூலியாத்ரா (1987) ஆகியவை தேசிய, அனைத்து லக விருதுகளைப் பெற்ற திரைப்படங்களாகும்.
மாணிக் பந்தே பாத்யாயாவின் நாவலை அடிக்கருவாக கொண்ட இத்திரைப்படம் இயற்கை மற்றும் சமூக நியதிகளால் நொறுங்கிப் போகும் வாழ்க்கையைப் பற்றி அலசுகிறது. பத்மா ஆற்றின் கரையோர கிராமத்தில் வாழும் மீனவன் ருபேர்,கடுமை யான உழைப்பாளி, தன் மனைவி, மக்கள் மைத்துனி கபிலா. உற்றார் உறவினர் சுற்றத்தாருடன் அமைதியாக வாழ்ந்து வருகி நான்.
அக்கிராமத்தில் வாழும் பெரும் வியாபாரி ஹுசேன் மியான் அவனுக்கு சொந்தமான மொய்னா தீவில் கிராம மக்க ளைக் குடியேற்றி கடுமையாக உழைக்க வைத்து கிராமத்து மக்க ளுக்கு கெட்ட கனவாக இருந்து வருகிறான்.
ஒரு நாள் மொய்னா தீவிலிருந்து தப்பி ஓடிவந்த ஒருவன் மூலம் கிராம மக்கள் அங்குள்ள நிலைமையை அறிந்து அதிச்சி புறுகின்றனர் ஹுசேன் மியானின் திட்டத்திற்கு எதிராகச் செயல்படத் துவங்குகின்றனர். ஓடி வந்தவன் மியானைக் கண்ட தும் மௌனியாகிவிடுவதால் கிராம மக்களுக்கு மேலும் சந்தேகம் வலுக்கிறது
திடீரென்று ஏற்பட்ட புயலாலும் ஆற்று வெள்ளத்தாலும் பல படகுகளும் குடிசைகளும் அழிய குபோ, மியானிடமே படகோட்டியாக நேரிடுகின்றது மொய்னா தீவுக்கு மியானுடன் போய் அத்தீவின் நிலைமையை நேரில் அறிந்த பிறகு குபேரின் வாழ்க்கைப் போக்கே மாறிவிடுகின்றது. மைத்துளியுடனான உறவில் மாற்றம், தன் மகளுக்கு ஏற்பாடு செய்திருந்த மணமக லுடன் முரண்பாடு; அதனால் ஏற்பட்ட தகராறில் போலீசின் தேடல் உற்றார் உறவினருடன் மோதல் இப்படிப் பல, எல்லா வற்றிலிருந்தும் தப்பிக்க ஒரே வழிதான் அவன் முன்பு உள்ளது. மொய்னா தீவுக்கு ஓடி விடுவது
RAJA HARICHANDRA
ராஜா ஹரிச்சந்திரா
இந்தி / 1913/1475/க. வெ
இயக்குநர்: D. G. பால்கே
மகாபாரதத்திலிருந்து எடுக்கப்பட்ட
ஹரிச்சந்திரனின் கதை எல்லோரும் அறிந்ததுதான் பொய் சொல்லமாட்டேன் என்று பிடிவாதமாக
நின்ற மனனன் அரிச்சந்திரன் அதனால் நாடு நகரங்களை இழந்து மனைவி மக்களை இழந்து
அல்லல்படுகி றான் அவனது உறுதியைக் கண்ட கடவுளர்கள் அவனைப் புகழ்ந்து அவனது பழைய
வாழ்க்கையை அவனுக்களித்து கௌரவிக்கின்றனர்.
கதை சொல்லும் பாணி இந்திய நாட்டுப்புற நாடக வடி வைப் பின் பற்றியது கிளைக் கதைகள் நிறைந்த பழைய நாவல் பாணியையும் நினைவுபடுத்துவது ஊமைப் படக் காலத்தில் தயாரிக்கப்பட்ட முதல் படமான இதுவே பேசும் படம் வந்த போதும் முதல் இந்திப் படமாக சாந்தாராமால் தயாரிக்கப்பட்டது.
ரவிவர்மாவின் ஓவியங்களில் காணப்படும் ஆடையணிக ளும் மேடை அலங்காரங்களுமே பெரும்பாலும் இப்படத்திற்கு மாதிரிகளாக அமைந்துள்ளன. பெரும்பாலும் கேமரா அசையா மல் நிலையாக நின்று படம் பிடித்திருந்தாலும் ஓரிரு படமாக்கங் கள் பக்கவாட்டு அசைவு கொண்டு படமாக்கப்பட்டிருப்பதை யும் காணலாம். இன்றைய சில படங்களின் அரங்கில் காணப்ப டும் சிலை வடிவங்கள் அந்நாளிலேயே இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
RED SORGHUM
செஞ்சோளம்
சீனம் / 1988 / வண்ணம்
இயக்குநர்: ஷாங் இமோ
1930 ஆம் ஆண்டுவாக்கில் நடைபெற்ற
ஜப்பானுக்கு எதி ரான போரின் போது வடசீனத்தின் தரிசு நிலக்காடுகளில் இக்கதை
நிகழ்கிறது. எங்கு பார்த்தாலும் ஆளுயரத்திற்கும் மேலாக வளர்த் திருக்கும் செஞ்சோளக்
காட்டில் வழியாக ஒரு இளம் மணப் பெண் பல்லக்கில சென்று கொண்டிருக்கிறாள் ஒரு மட்டக்
குதி ரைக்கு ஈடாக அவள் ஒரு 50 வயது தொழுநோயாளிக்கு மணமக ளாக
விற்கப்பட்டவள் திடீரென்று ஒருவன தோன்றி அவளைக் கடத்திச் செல்வ முற்படுகின்றான.
பல்லக்குத் தூக்கிகளில் ஒரு வன் அவளைக் காப்பாற்றுகிறான் ஆனால் சீன மரபுப்படி
மூன்று நாள் கழித்து தாய் வீட்டுக்கு அவள் திரும்பும்போது அன் அவளை கவர்ந்து
கொள்கிறான் அவளும் தடுக்கவில்னை தொழுநோயாளி யாராலோ கொலை செய்யப்பட,
மணப்பெண் ணும் பல்லக்குத் தூக்கியும் தொழுநோயாளியின்
மது வடிக்கும் சோவைக்கு சொந்தக்காரர்களாகின்றனர்.
அவர்களின் எளிய இனிய வாழ்க்கை ஜப்பானிய ஆக்கிர மிப்பாளர்களால் நொறுங்கிப் போகிறது வந்தவர்கள் முதலில் சோளத்தை அழித்து பிறகு கிராமத்தவர்களையும் கொல்லுகின்ற னா தங்களின் சுதந்திரத்தைக் காத்துக் கொள்வதற்காக பல்லக்குத் தூக்கியும் அந்த பெண்ணும் மற்றவர்களுடன் இணைந்து இறுதி வரை அடிபணியாமல் போராடுகின்றனர் சோளம் மீண்டும் மீண் டும் தலை தூக்கி வளர்வதைப் போலவே.
ROSA LUXEMBERG
ரோஸா லக்ஸம்பர்க்
ஜெர்மனி / வண்ணம்
இயக்குநர் : மார்கரட் வோன் டிராட்டா
1898 கரும் 1919 க்கும் இடையே ஜெர்மனியின் அரசியல் களம் சோசலிசவாதியான ரோஸா
லக்ஸம்பர்க் அந்த சமயத்தில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை ஜெர்மனியில் கழித்தார்
ஒரு ஆசிரியையாக பேச்சாளராக, எழுத்தாளராக,
அரசியல் விமர்சகராக சித்தாந்தவாதியாகப்
பிரபலமடைந்தார் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டபோது பல முறை சிறையிலிடப்பட்டார்.
அரசாங்கத்தின் அடக்குமுறை கடுமையானபோது கொலை செய் யப்பட்டார்.
எப்போதும் அமைதியை விரும்பம் ரோஸா இயற்கையிட மும் மிருகங்கள் பறவைகளிடமும் அளவற்ற அன்பு கொண்டிருந் தார் எவ்வித சமரசமும் இல்லாமல் நினைத்ததைச் சாதிப்பதில் உறுதியோடிருந்த அவர் நட்பிலும், காதலிலும்,ஏன் தனக்குத் தானே கூட நிர்த்தாட்சண்யமாக இருந்தார்.
RULES OF THE GAME
விளையாட்டு விதிகள்
பிரான்ஸ் / 1939 /110 நி
இயக்குநர் : ழான் ரென்வார்
ஆந்த்ரே ஜூரி தனியாகவே
விமானத்தையோட்டி அட் வாண்டிக் கடலைக் கடந்து சாதனை புரிந்ததற்காக அவனை பாராட்ட
வந்த கூட்டம் விமான தளத்தில் நிரம்பி வழிகிறது. ஆனாலும் அக்கூட்டத்தில் அவனது
காதலியைக் காணாமல் முகம் வாடுகிறான் அவள் தற்போது வாழும், அவளது கணவனின் மாடிகைக்கு வருகிறான் அதே பெண்ணை காதலித்து
தனக்காக விட்டுக் கொடுத்த தன் நண்பனுடன் வருகிறான்.
அங்கு விருந்து கோலாகலமாக நடந்து
கொண்டிருக்கிறது எல்லோருமே ஏதோ ஒரு வகையில் யாருடன் ஆவது காதல் களியாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
ஜூலியும் தன் காதலி கிரிஸ்டீனின் நெருக்கத்தில்
மகிழ்த்திருக்கிறான் பிறகு பாத்த வெளியிட முயக்களை வேட்டையாடுகின்றவர் ம
படுகின்றனமெளஉசுப்போக்கு காதல் களியாட்டத்தில் மிதந்தார்கள் பொதாமையில் வெது
சூழ்நிலையே கணமேதிட போகின்றது ஜூரியும் அயனதன் பனும் கொள்லப்படுகின்றனர்
சீமான்களின் மனோபாவத்தில் காதல் வேட்டை கொலை எல்லாமே துச்சமானதுநாள் பொரும் கூட
அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்குதான் என் தையே இயக்குநர் வலியுறுத்துகிறார்
27 DOWN
27 டௌன்
இந்தி / 1973 / 115 /
அவ்தார் கிருஷ்ண கெளல்
ஓவியக் கலைஞனாக வரவேண்டும் என்ற
வேட்கையுடன் இருந்த சஞ்சய் தந்தையின் நிர்ப்பந்தத்திற்கிணங் யில் வேலைக்குச்
சர்கிறான்
எந்திரந்தனமாக வேலைக்குச் செல்லும் போது ஒரு ரயிலில் சாலினியைச் சந்திக்கிறான் ரயிலிலேயே அவர்களது தட்பு வளர்கிறது. இவ்விஷயத்தை அறிந்த அவனது தந்தை அவனை வற்புறுத்தி ஒரு கிராமத்துப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கிறார்
வாழ்க்கை மேலும் சகிக்க முடியாததாகிறது நிம்மதி தேடி மது பெண்கள் என்று அவைகிறான் சாலினியோடு வாழ என் ணும் அவனுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. அதன் போக்கிலேயே அயன் செய்கிறான்
THE THIRTYNINE STEPS
39 படிகள்
பிரிட்டன் /1935/100 நி / க.வெ
இயக்குநர் : ஆல்பிரட் ஹிட்ச்காக்
கனடாவிலிருந்து அறிமுகமில்லாத
வண்டன் நகருக்கு வந்த டோடை ஒரு கேளிக்கை அரங்கில் வேடிக்கை பார்த் கொண்டிருக்கும்போது,
ஏற்பட்ட கலவரத்தினிடையில், திக ரென்று அவன் முன் வந்து நின்ற பெண் தன்னை காப்பாற்றும்
படி கெஞ்சுகிறாள் அவன் அவளுக்கு தன் அறையில் அடை லம் கொடுத்தும் இரவில் அவள்
குத்துபட்டு இறப்பதை காணச் நசன் இறக்கும் முன்பாக அவள் 39 படிகள் அவன் கையில் ஒரு விரல் இல்லை என்று கூறிவிட்டு
சாகிறாள்.
போலீசுக்கும், மாமமாக துரத்தும் ஒற்றர்களுக்கும் பயற்றி போட்ை அறிமுகமில்லாத பகுதிகளின் ஊடாக ஓடஓட மேலும் மேலும் பல மர்மங்கள் அதிர்ச்சிகள் ஒரு பெரிய வீட்டி அடைக்கலம் கொடுத்த சீமானின் கையில் ஒரு விரல் இல்லா விருப்பதைக் கண்டு அங்கிருந்து தப்பியோட முயலும் போது அவனுடன் ஒரு பெண் கைவிலங்கால் இணைக்கப்பட்டிரு நாள் முடிவு, தகைர்களை கவந்த அதிர்ச்சியூட்டும் வெளிப்படுகிறது.
UGETSU MONAGATARI
உகேட்ஸுவின் கதை
ஜப்பான் / 1953 க.வே / 96 நி
இயக்குனர் : கெஞ்சி மிஸோகுச்சி
16ஆம் நுற்றாண்டு ஜப்பான் குறுதில்
மன்னடைமே நிரந்தரமாக போர் நடந்து கொண்டிருந்த காலம் கொள்ளையும் கொலையும்
வேட்டையாடுகிறது அந்த சூழலில் ஒரு கிராமத்தி விருக்கும் இரண்டு குடும்பங்களைச்
சித்தரிக்கிறது கதை எந்தோ மும் அந்த ஊர் சூறையாடப்படனசம் ஒரு ருயவனும் ஒருவிா
வியும் அந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு தமது ே களைசாதிக்க முனைகின்றனர்
குயவனுக்கு பணம் சேர்க்கவேண டும் விவசாயிக்கு புகழ்மிக்க சமுராய் [மறவன்) ஆக
வேண்டும் அருகிலிருந்து நகரத்திற்கு இரு குடும்பங்களும் செய்கி வழியிலேயே குயவளின்
மனைவியும் குழந்தையும் பயத்தான் மீண்டும் வீடு திரும்புகின்றனர் நகர விவசாயி தன்
மனைவியை கவனிக்காமல் சமுராயாகும் வெறியில் திரிகிறான் மனைவி காணாமல் போகிறாள்
வீரத்தால் அல்லாமல் விதியின் சாநாத நால் சமுராய் ஆகிவிடும் அவள் மீண்டும் மனைவியை
தற்செய லாக சந்திக்கிறான் ஒரு விலை மகளிர் வீட்டில் நகரச்சந்தையில் பாண்டம்
விற்கும் குயவன் ஒரு மோகினியின் காம வலையில் சிக்கி எல்லாவற்றையும் இழந்து வீடு
திரும்பும் போது சிதிமை டைந்த அவனது வெற்றுக் குடிசை மட்டுமே காத்திருக்கிறது.
ஜப்பானிய நாடோடிக் கதையை மூலமாகக் கொண்டு எடுக் கப்பட்ட இப்படம் உலகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக விமர்சகர்களால் கருதப்படுகிறது.
WOMAN OF THE DUNES
மணற் குழியில் ஒரு மாது
ஜப்பான் 1964 / 127 நி /
டோக்கியோ நகரத்தைச் சேர்ந்த பூச்சியியல் நிபுணன் ஆராய்ச்சிக்காக கிராமப்புற மணல் வெளிகளில் அலைந்து திரிந்த பிறகு திரும்பிப் போகும் கடைசிப் பேருந்தையும் தவற விடும் றான் கிராமத்தினர் சிலர் அவனை அன்றிரவு தங்குவதற்காக ஒரு பெரிய மணற்குழிக்குள் இருக்கும் குடிசைக்கு நூலேணி மூலம் இறக்கி விடுகின்றனர். அங்கே ஒரு விதவை தனித்து திக வாழ்கிறாள் மறுநாள் தான் வஞ்சகமாக அந்த மணற்குழியில் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை உணர்கிறான் குழியிலிருந்து மேலேறித் தப்பிக்க எடுத்த அத்தனை முயற்சிகளும் வீனாகின் கி றன மணல்மூடலில் இருந்து குடிசையைக் காக்க சரியும் மணலை தினமும் அப்பறப்படுத்தும் வேலையையும் செய்ய வேண்டியதி ருக்கிறது நாளாக ஆக தப்ப முடியாத ஆத்திரத்தில் அவளுடன் சண்டையிட்டு துன்புறுத்துகிறான் மேலும் நாடகள் நகரும்போது அந்த வாழ்க்கை பழகிப் போகிறது அவள் மீது தோன்றும் பரிவு உடலாலும் இணைய வைக்கிறது நிரந்தரமாகத் தங்கி விடுகிறான்
இது ஒரு உருவகக் கதை பார்வையாளன் தன் அறிவுக்கும். அனுபவத்திற்கும் ஏற்ப எப்படி வேண்டுமானாலும் அதற்கு அர்த்தம் கொள்ளலாம்.
WILD STRAWBERRIES
காட்டு நாவற்பழங்கள்
ஸ்வீடன் / 1957 / 95 நி / க. வெ
இயக்குநர் : இங்மர் பெர்க்மன்
அறிவியலில் ஆற்றிய பணிக்காக
டாக்டரேட் விருது பெற மருமகளுடன் பல்கலைக் கழக நகரமான லுண்டுக்குச் சென்று
கொண்டிருக்கும் பேராசிரியர் ஐக் ப்ரோக் வழியில் மூன்று வழிப்போக்கர்களுக்கு காரில்
இடம் தருகிறார். வழியில் தான் முன்னொரு காலத்தில் வாழ்ந்த வீட்டில் சற்றுநேரம்
நின்றபோது பழைய நினைவுகள் அவர் கண் முன்னே மீண்டும் தோன்றுகி றது. உடன்
வந்தவர்களின் பேச்சும் போக்கும், அவரது இறுகிய துணையற்ற
வாழ்க்கையையும், அவரது குறைகளையும் தவறுக ளையும்
உணர வைக்கின்றன. அறிவியல் துறையில் தான் எவ் வளவுதான் மேதாவியாக இருந்தாலும் தன்
சொந்த மருமகளே தன்னை ஒரு உயர்ந்த மனிதனாக மதிப்பதில்லை என்பதையும் உணர்கிறார் தன்
மகனுக்கும் தனக்கும் கூட இணக்கம் இல்லை யென்பதை அறிகிறார்.
ZOO
மிருகக்காட்சி சாலை
பெர்ட் ஹான்ஸ்ட்ரா / நெதர்லாந்து / 1958/ க.வெ
இது மேலோட்டமாகப் பார்க்கும் போது
விலங்குகளின் சரணாலயம் பற்றிய திரைப்படம் அங்கிருக்கும் வகைவகை யான விலங்குகள்
அவைகளின் முகத் தோற்றங்கள், நடைமுறைகள் பழக்க வழக்கங்கள்
ஆகியவற்றில் வெளிப்படும்.
வியக்க வைக்கும் உணர்ச்சி மாறுபாடுகள் முதலியவற்றை வெவ் வேறு கோணங்களில் தொலைவுகளில் படமாக்கப்பட்ட படப்பி டிப்புகள், முற்றும் பொழுது போக்காக விலங்குகளைப் பார்க்க வந்த பார்வையாளர் / மனிதர்களைப் படமாக்கியுள்ள முறை; ஆண்கள் பெண்கள் இளையவர் முதியவர் குழந்தைகள் ஆகிய பல்வேறு கட்டங்களிலான மனிதர்கள், மனித மனங்கள், ஆட்டம் பாட்டம் வேடிக்கை விளையாட்டு, ஆர்வம், களைப்பு, ஓய்வு. களிப்பு, உணவு, கொரிப்பு. ஒருவருக்கொருவர் அறிமுகம், உதவி ஆகியவற்றில் ஆழ்ந்து போனவர்கள்; பார்க்க வந்ததையே மறந்து போனார்களோ என்னும்படி தங்களுக்குள்ளாகவே சிந்த னையில் மூழ்கிப் போனவர்கள்;ஓய்ந்து போய் தனிமையை நாடிப் போனவர்கள்; மீண்டும் தேவையான தேவையற்ற சரி யான சரியற்ற கோணங்களில், தொலைவுகளில் நிலைகளில் படக் காட்சிகள். இக்குறும்படம் முடிவதற்குள் நம்முள்ளே மனிதருக்கும் விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடே முழுவதுமாக மறந்து போய்விடுகிறது. முகங்கள், பாவங்கள், உணர்வு வெளிப்பாடு கள், தோற்றங்கள், இருப்புகள் ஆகியவற்றின் மகத்தான படைப் பின் மகத்துவத்தையே அச்சிறு நிலப்பரப்பிற்குள் நாம் கண்டு கொள்கிறோம் எல்லாவற்றையும் மறந்த உயிர்ப்புள்ள பரிணா மத்தின் /உயிர்களின் படிம வளர்ச்சியின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்து போகிறோம். விலங்கு பறவைகள் - மனித இனங்களின் கற்பனையையே மறக்க வைத்து உயிரினம் என்ற ஒன்றையே கண்முன் காட்டும் திரைப்படம் இது.
"ஒரு குறிப்பிட்ட சூழலில், குறிப்பிட்ட பின்னணியில் மனிதர்களின் நடவடிக்கைப் போக்குகள் எப்படிப் பட்டவை யாக இருக்கும் என்பதை நேரில் சோதித்துப் பார்க்கும் முயற் சியே இத்துண்டுப் படத்திற்கான அடிப்படை இது என்னைப் பொருத்தவரையும் ஒரு புதிய பரிமாணம்.''
No comments:
Post a Comment