சிறுகதை
ஆத்மாநாம்
புழுதி படிந்த மாலை நேரம். காற்று வீசிக் கொண்டிருந்தது. டாக்டரின் மனதில் பல்வகை எண்ணங்கள் அலையெனப் புரண்டு கொண்டிருந்தன. பற்றற்ற உணர்வோடு தம் பணியைத் தொடங்க வேண்டுமென்று என்று தான் அவர் முயன்று கொண்டிருந்தார். ஆனால் அவரையும் மீறி அவர் உள்ளத்தில் அந்த நோயாளி புகுந்து சிந்தனையைக் கிளறி வேடிக்கைப் பார்த்தான். அவன் வலது கையில் அதென்ன கோளாறு? பொறுக்க முடியாத வேதனையிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதற்காக அவன் அடிக்கடி கையைக் கிழித்துக் கொண்டுவந்து நிற்கிறானே?
அன்றும் டாக்டரைக் காண அந்த நோயாளி வந்து சேர்ந்தான். நோயாளிக்கு நம்பிக்கையே போய் விட்டாற் போலிருந்தது. இயற்கைச் சூழலும் அவனுக்கு விபரீதமாக் அமைந்திருந்தது ; ஆறுதல் அளிக்கக் கூடியதாயில்லை. ஆயினும் அவன் எப்படியோ டாக்டரின் வீட்டை அடைதான். வாசலில் காவலுக்கு அமர்ந்திருந்த வேலையாள் அவனைத் தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால் நொந்துபோன அவன் உணர்வுகளை படித்த அவன், அவனைத் தடுக்க முடியாமல் தவித்து நின்றான்.
அவனைப் பார்த்ததும் டாக்டர், “உனது உடல்நிலை இப்பொழுது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.
”என்ன செய்வேன் டாக்டர்? ஏறகுறைய ஒரு வார காலமாக நான் உறங்கவே இல்லை. இஎன் வலது கையில் முன்போலவே பொறுக்க முடியாத வலி கண்டிருக்கிறது. இந்தக் கைக்குள் அப்படி வலிக்க என்ன இருக்கிறது என்றே விளங்கவில்லை. புற்றுநோயாக அல்லது அதைக்காட்டிலும் பயங்கரமான வேறு ஏதாவது நோயாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அறுபது நாழிகையும் (1 நாள் / 24 மணி நேரம்) தணலை (நெருப்பை) வைத்துக் கட்டினாற் போன்ற எரிச்சல்! ஒரு கணம்கூட நான் உயிர் வாழ விரும்பவில்லை. நான் இந்த நகரத்துக்கு வந்ததே உங்களிடம் சிகிச்சை பெறத்தான். வேண்டுமானால் என் இந்தக் கையை வெட்டி விறகாக்கி எரித்து விடுங்கள். இந்த வேதனையிலிருந்து நான் விடுபட நீங்கள் எது செய்தாலும் எனக்கு சம்மதமே. எப்படியாவது வேதனை தீர்ந்தால் சரி.” இதைக் கூறும்பொழுது அவன் கண்களில் நீர் பொங்கி வழிந்தது.
டாக்டர் மீண்டும் அவன் கையைப் பரிசோதித்தார். ஆனாலும் அவரால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. நோயாளியைப் போன்றே டாக்டரின் உள்ளமும் அவன் வேதனையை உணர முடியாமல் அழுதது. அதனால் அவர் நெற்றியில் வியர்வை திட்டுதிட்டாக துளித்து நின்றது. ஆனாலும் நோயாலிக்கு ஆறுதல் சொல்லும் முயற்சியில் “இதற்கு அறுவைச் சிகிச்சை தேவையில்லை என்றே எனக்கு படுகிறது. பரிசோதித்துப் பார்க்கவும் ஒரு முடிவுக்கு வரவும் இன்னும் எனக்கு சிறிது அவகாசம் கொடு. நம்பிக்கை இழக்காதே. சீக்கிரமே குண்மாகி விடும் !” என்றார்.
ஆனால் அந்த நோயாளியோ அடிக்கடி ’கிழித்துப் போடுங்கள் டாக்டர் ! கிழித்துப் போடுங்கள்’ என்றே சொல்லிக் கொண்டிருந்தான். அறுவை இல்லாமல் இதர்கு சிகிச்சையே கிடையாது என்பது போன்ற எண்ணம் அவன் உள்ளத்தில் வேரூன்றி விட்டது. டாக்டர் ’அவகாசம் கொடு’ என்று சொல்லவே, பொறுமை இழந்து அவனே டாக்டரின் மேசை மேலிருக்கும் ஒரு பொருளைக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கையை கீறி காயமேற்படுத்திக் கொண்டான். டாக்டர் அவனது இந்த செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்து சற்று சுதாரித்துக் கொண்டு அவனை அதட்டியவாறு கடிந்து கொண்டார். அதே நேரத்தில் காயம்பட்ட இடத்திற்கு மருந்திட்டு கட்டுப்போட்டு அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
பல மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் அந்த நோயாளி வரவில்லை. டாக்டரோ அவனை எந்த நிமிஷமும் எதிர்பார்த்தார். அவன்நினைவு அவருக்கு எந்த நாளும் மறந்ததே இல்லை.
குறிப்பு :
டாவின்சி கோட் படத்தில் தன்னையே சாட்டையால் அடித்து துன்புறுத்திக் கொள்ளும் பக்தன்.
ஒருநாள் டாக்டர் காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு எழுந்தபோது வேலையாள் அவர் கையில் ஓர் உறையைக் கொடுத்தான். அத்தனை பெரிய உறையைப் பார்த்த டாக்டர் அதனை வியப்போடு பிரித்தார். முழுதாக மூன்று பக்கங்கள் நீண்டிருந்தது அந்தக் கடிதம். பற்றாக்குறைக்கு அதன் ஆரம்பமும் வியப்பை வளர்ப்பதாக இருந்தது. அதில் எழுதியிருந்தது :
”டாக்டர் சார்! வணக்கம், தங்களுக்கு வெகுநாட்கள் நான் துன்பம் தந்துவிட்டேன். அதற்காக மன்னிப்பு கோருகிறேன். நான் வசதியான வீட்டைச் சேர்ந்தவன். என் தந்தையும் பெரும் பணக்காரர். அவருடைய ஆதரவிலும், பலத்திலும் தான் நான் மிகப்பெரும் சொத்துக்கு உரிமையுள்ளவனாக ஆக முடிந்தது. எத்தனையோ தொழிர்சாலைகள் எனக்கு சொந்தமாக இருந்தன. ஆரம்பத்தில் எனது வாழ்க்கை ஆடம்பரமிக்க பணக்காரர்களுக்கே உரிய பண போதையில் மிதந்தது. எப்படியெல்லாமோ இன்பம் காண முயன்றேன். பிறகு நல்ல நண்பர்களின் அறிவுறுத்தலினால் மனம் திருந்தி நல்ல பண்புகளை கொண்ட ஒரு பெண்ணை மனந்து கொண்டேன். மூன்று வருட மண வாழ்க்கையில் ” இல்லறம் இல்லாத வாழ்க்கை நல்லறமில்லாத வாழ்க்கை” என்பதைக் கண்கூடாகக் கண்டேன். திருமண பந்தத்தில் உள்ள மணத்தை நுகர்ந்து, அதன் சிறப்ப உணர்ந்தேன். மனித வாழ்வில் திருமணம் அவசியம். அதைக் காட்டிலும் சிரந்த உறவு கிடையாது என்பதையும் கண்டேன். மனைவியின் எல்லையில்லாத அன்பில் முக்குளித்து எழுந்தவனுக்கு இன்பத்தின் எல்லையைக் கண்டாற் போன்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. காலையிலிருந்து மாலை வரையில் தொழிற்சாலை வேலைகளில் ஈடுபட்டிருப்பேன். உழைப்பினால் ஏற்பட்ட களைப்போடு வீடு திரும்புவேன். வரவேற்கும் மனைவியின் புன்னகை அத்தனை களைப்பையும் பனியாக மறைத்து விடும். களைப்பு கலிப்பாக மாறி இன்பம் தரும்.
எனது இந்த மகிழ்ச்சியைக் காண விதிக்கே பொறுக்கவில்லை போலும்!
ஒருநாள் தொழிற்சாலையிலிருந்து நண்பகலில் சிறிது சீக்கிரமாகவே வீடு திரும்பினேன். என் மனைவி வீட்டில் இல்லாததால் வேலைக்காரனை கேட்டேன். எங்கோ வெளியில் போயிருப்பதாக கூறினான்.
அவள் எங்கே போயிருப்பாள்? உள்ளத்தில் இந்தக் கேள்வி கள்ளத்தனமாக புகுந்துவிடவே, மறுநாளும் அலுவலகத்தில் இருப்புக் கொள்ளாமல் சீக்கிரமாகவே வீடு திரும்பினேன். அன்றும் என் மனைவியை வீட்டில் காணவில்லை. எனது ஐயம் வேர் விடத்தொடங்கவே, வேலைக்காரனைக் கூப்பிட்டு விசாரித்தேன்.
”என் மனைவி ‘தினமும் இப்படி வெளியில் போகிறார்களா?”
“ஆமாங்க சார்!”
”எப்போ திரும்பறாங்க?”
”நீங்க அலுவலகத்தில இருந்து வர்றதுக்கு கொஞ்சம் முன்னாலே”
”சரி நீ போ. நான் வந்தது போனது உன்கிட்ட இப்ப கேட்டது எதையும் காட்டிக்காதே” என்று சொல்லி அவனை அனுப்பினேன்.
கிட்டத்தட்ட மாலை நெருங்கும் நேரத்தில் (5 மணி) என் மனைவி வீட்டுக்கு வந்தாள். என்னைக் கண்டதும் ஆர்வம் பொங்க ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். எம்பொழுதும்போல் அனபுமழை பொழிந்தாள். என் உலர்ந்த மனம் மலர்ந்தது. ஆனால் என் உள்ளத்தில் புகுந்துவிட்ட சந்தேகப் பேய்க்கு தான் நிம்மதியே ஏற்படவில்லை. சந்தேகம் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விட்டு ஆலமரம் போல் வளர்ந்து விடவே மனம் இல்லாதது பொல்லாதது எல்லாம் எண்ணலாயிற்று.
பெண் என்பவள் ஒரு வேஷக்காரி. ஆண்கள் ஒருசில வேஷங்கள் போட்டு நடித்தாலும் நாளடைவில் அந்த வேஷம் அவர்களுக்கு அலுத்து சலித்துப் போகக்கூடும். ஆனால் பெண்? உள்ளொன்று வைத்து புறமொன்று காட்டி நடிப்பதில் கை தேர்ந்தவர்கள். அவர்கள் காட்டும் வர்ணஜால வேஷங்களை புரிந்துகொள்ள முடியவே முடியாது.
பெண் படுமோசக்காரி. பெண்ணின் மாற்றுப் பெயரே மோசம் என்று சொல்லலாம். ஆம்; மோசமே தான்!
அன்றிரவு நான் படுக்கையில் புரண்டு புரண்டு அவளைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். தூக்கமே வரவில்லை. கொஞ்சநஞ்சம் வந்த தூக்கத்தை தெருநாய்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் குரைத்து விரட்டி விட்டன.
மூன்றாவது நாளும் நான் தொழிற்சாலையிலிருந்து வீட்டுக்கு சீக்கிரமாகவே திரும்பினேன். நான் நினைத்தாற் போலவே நடந்திருந்தது. என் மனைவி அன்றும் வீட்டில் இல்லை.
நான் அவளுடைய அறையிலுள்ள ஒவ்வொரு பொருளையும் சந்தேகக் கண்கொண்டு நோட்டம் விட்டேன். அவள் எங்கே போகிறாள் என்பதை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்று துடித்தேன். அவளுடையது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு பொருளையும் குடைந்து குடைந்து பார்த்தேன். அவளது தையல் மிஷினில் உள்ள ட்ராயர் பூட்டுப்போட்டு பூட்டியிருந்தது. நான் மறு சாவி போட்டு எப்படியோ அதை திறந்து விட்டேன். ட்ராயருக்குள் 40-50 கடிதங்கள் சிவப்பு ரிப்பனால் மொத்தமாக கட்டி வைக்கப் பட்டிருந்தன. அதை பிரித்து படித்துப் பார்த்தால் அத்தனையும் காதல் கடிதங்கள்! நான் சந்தேகப்பட்டது உண்மை என்பது அப்போது உறுதியாயிற்று. நான் அந்தக் கடிதங்களை பழையபடியே ட்ராயரில் வைத்துப் பூட்டினேன். எனக்கு என் மனைவி மீதிருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது. அவள் நச்சுப்பாம்பாக தோன்றினாள். என் நம்பிக்கைகளை குழிதோண்டி புதைத்த வஞ்சகி அவள் என்ற முடிவுக்கு வந்தேன்.
அன்றிரவு அவள் என் அருகில் படுத்தாள். அதை என்னால் பொறுக்க முடியவில்லை. நள்ளிரவு இரண்டு மனி சுமாருக்கு எழுந்தேன். நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த அவள் கழுத்தில் கைவைத்தேன். சிறுகச் சிறுக அவள் கழுத்தை அழுத்தினேன். விழிப்புக் கொடுத்த அவள் என்னைக் கண் திறந்து பார்த்தாள். உலர்ந்த ஒரு புன்னகை அவள் முகத்தில் மின்னி மறைந்தது. பிறகு ஒன்றும் பேசாமல் கண்களை மூடிக் கொண்டாள். மிகுந்த வெறியுடன் இருந்த நான் அவள் கழுத்தை என் பலம் கொண்ட மட்டும் இறுக அழுத்தி விட்டேன். நான் அழுத்திய அழுத்தத்தில் அவள் வாயிலிருந்து குபுக்கென்று ரத்தம் கொப்பளித்து வாய் வழியே வழிந்தது. அந்த ரத்தம் முழுவதும் என் வலது கையில் வந்து விழுந்து மூட்டுப்பகுதியிலிருந்து மணிக்கட்டு வரை முழுவதுமாக நனைத்தது. சில வினாடிகளுக்கு பிறகு அவள் தொண்டையிலிருந்து ‘கிறீச்’ என்ற ஒலியுடன் அவள் வாயிலிருந்து சிறுதுளி ரத்தம் ஒன்று தெறித்து என் கழுத்தின் முன் பகுதியில் கோடிட்டாற் போல் (. . . . . . . . Dot.. Dot.. Dot.. Dot என்று) ஒரு நான்கு அங்குல அளவிற்கு வந்து படிந்தது. அடுத்த நிமிடங்களில் உயிரற்ற சடலமாக என்னருகில் அவள் படுக்கையில் கிடந்தாள்.
நான் நடுநடுங்கிப் போனேன். பதறிப்போய் வேலைக்காரனுக்கு குரல் கொடுத்தேன். நான் செய்த முட்டாள்தனத்தை அவனிடம் மறைக்காமல் கூறினேன்.
என் மேல் விசுவாசமுள்ள அவன் “முதலாளி! நடந்தது நடந்து விட்டது. இந்த சடலத்தை இங்கிருந்து எடுத்து வாருங்கள். அதற்குள் நான் காரேஜிலிருந்து காரை எடுத்து வருகிறேன். இரவுக்கிரவே இதை எரித்து விடுவோம். உங்கள் பேருக்கு எந்த கலங்கமும் வந்து விடக் கூடாது” என்றான்.
என் உள்ளுணர்வு என்னை எச்சரிக்கவே”நான் செய்த இந்த கொலைக்காக போலிசில் சரண்டர் ஆவது தான் சரி!” என்று அவனிடம் சொன்னேன்.
“முதலாளி! நீங்கள் ரொம்பவும் இப்படி அப்பாவியாக இருக்கிறீர்களே. உங்கள் அந்தஸ்துக்காக இல்லாவிட்டாலும் உங்கள் அப்பா, தாத்தா குலப்பெருமைக்கு இதனால் இழுக்கு ஏற்படாதா? கொஞ்சம் நினத்துப் பாருங்கள்! நல்ல பெயர் எடுப்பது சிரமம். ஆனால் அதனை கெடுத்து கொள்வது நிமிஷ நேர வேலை!”
“ஆனாலும்...”
அவன் கொடுத்த தைரியத்தில் என் மனைவியின் சடலத்தை இரவுக்கிரவே எரித்துவிட்டு வந்தோம். அதன் விளைவாக ரகசியம் ரகசியமாகவே இருந்து விட்டது. யாருக்கும் உண்மை நிலை பற்றி எதுவுமே தெரியவில்லை. மரடைப்பினால் என் மனைவி மரித்து விட்டதாக ஊரெல்லாம் என் வேலைக்காரன் செய்தியை பரப்பி விட்டான்.
காலப்போக்கில் நினைவுகள் கூட மங்கித்தானே போகின்றன! ந்நளடைவில் என் செயல்களே எனக்கு மறந்தாற் போல் ஆகி விட்டன. நான் செய்தது எத்தகைய பாவச்செயல் என்பதையே நான் மறந்து விட்டேன்.
ஒருநாள் இரவு நான் என் அறையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த பொழுது வெள்ளையாடை அணிந்த ஒரு பெண் என்னைப் பார்க்க வந்திருப்பதாக வேலைக்காரன் தெரிவித்தான். நான் அவளைப் பார்க்க ஹாலுக்கு சென்றேன். அழகிய அந்த பெண்ணைப் பார்த்ததும் எனக்கு ஒருசேர வியப்பாகவும், குழப்பமாகவும் இருந்தது. இந்த நேரத்தில் இந்தப் பெண் என்னைக் காண வருவானேன்? என்னிடம் அவளுக்கு அப்படியென்ன பேச இருக்கிறது? என்று மனதுக்குள் கேள்வி மேல் கேள்வி எழுந்தது. அதனை கலைப்பது போல் முதலில் அவளே முந்திக்கொண்டு பேசினாள்.
“உங்களுக்கு என்னைத் தெரியுமா?”
”தெரியாது” என்று குழறினேன்.
”ஆனால் எனக்கு உங்களைத் தெரியும்”
அதைக் கேட்டதும் எனக்கு சற்று வியப்பாக இருந்தது. “என்னை எப்படி உங்களுக்கு தெரியும்? என்று கேட்டேன்.
“நான் உங்கள் மனைவியின் தோழி. அவர்கள் என் மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தார்கள். நானும் அவர்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தேன். அவர்கள் இறந்த செய்திகேட்டு துடிதுடித்துப் போய்விட்டேன்!”
என் மனைவியின் தோழி என்றதும் எனக்கு சிறிது ஆசுவாசமேற்பட்டது. நின்று கொண்டிருந்த அவளை ஷோபாவில் அமரச் சொன்னேன். உட்கார்ந்த அவள் “நான் உங்களிடம் ஒரு உதவி கேட்க வந்திருக்கிறேன். எனக்காக அதை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும்” என்றாள்.
”என்னால் முடிந்ததை கண்டிப்பாக செய்கிறேன். என்ன உதவி என்று சொல்லுங்கள்”
“எனது தோழி அவர்களுடைய தையல் மிஷினிலுள்ள ட்ராயரில் எனது கடிதங்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். எனது ஒவ்வொரு கடிதத்திலும் ’நீலம்’ என்ற என் பெயர் எழுதப்பட்டிருக்கும். உண்மையில் எனக்கு கல்யாணம் ஆவதற்கு முன்னால் நான் வேறு ஒருவரை காதலித்து வந்தேன். இந்த விஷயம் என் வீட்டிர்கு தெரிந்துவிடவே என்னை வேறு ஒருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். நானும் எனது மானத்தை காத்துக்கொள்ளும் வேகத்தில் அந்த காதல் கடிதங்கள் அத்தனையையும் கட்டி உங்கள் மனைவியாகிய எனது தோழியிடம் கொடுத்து வைத்தேன். அதனை தனது தையல் மெஷினின் ட்ராயரில் ஒளித்து வைத்திருப்பதாக அப்போதே என்னிடம் சொன்னார்கள். அப்புறம் சிறிது நாட்களுக்குப் பிறகு நான் எனது கணவருடன் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டேன். திரும்பி வந்து விசாரித்தபொழுது எனது தோழி இறந்துவிட்டாள் என்று கேள்விப்பட்டு கதிகலங்கிப் போனேன். அதிலிருந்து மீண்டபோது என் கடிதங்களை பற்றிய நினைவு வந்தது. அது வேறு யார் கையிலும் கிடைத்து விடக்கூடாது என்ற பதட்டத்தில் ஓடி வந்தேன்” என்று சொல்லி முடித்தாள்.
அவள் அந்தக் கடிதங்கள் தன்னுடையவை என்று சொன்னதுமே என் தலை சுற்ற ஆரம்பித்திருந்தது. அவள் மேலும் பேசப்பேச என் தலை சுக்கு நூறாக வெடிப்பது போலிருந்தது. அவள் பேசி முடித்த மறுகணமே நான் தையல் மெஷின் இருக்கும் திசையை நோக்கி ஓடினேன். ட்ராயரைத் திறந்து ஒரு கடிதத்தை பார்த்தேன். இரண்டாவது கடிதத்தை பார்த்தேன். மூன்றாவது கடிதத்தை பார்த்தேன். எல்லாக் கடிதங்களிலும் ‘என் அன்பிற்குரிய நீலம்’ என்றே தொடங்கியிருந்தது. எனக்கு பித்துப்பிடித்தாற் போன்ற நிலை ஏற்பட்டது. நான் எனது மனைவியின் பெயரைக் கூறியவாறு சத்தமிட்டு அலறினேன். சிறிது பின்னால் அங்கு ஓடி வந்த அவள் என் கையிலிருந்த கடிதங்களை எடுத்துக் கொண்டாள். சத்தம் கேட்டு ஓடிவந்த வேலைக்காரன் கீழே விழவிருந்த என்னை தாங்கிப் பிடித்துக்கொண்டான். என்னுடைய இந்த செயலைக் குழப்பமுடன் பார்த்துக் கொண்டிருந்த அவளை “ஐயாவுக்கு எப்பவாச்சும் இப்படி ஆகும். கொஞ்ச நேரத்துலயே அது சரியாயிடும். நீங்க வீட்டுக்கு கிளம்புங்க. நான் பாத்துக்கறேன்” என்று அவளை அங்கிருந்து அனுப்பி வைத்தான்.
அன்றிலிருந்து ஓவ்வொரு நாளும் நான் என் மனைவிக்கு செய்த துரோகத்தை நினைத்து துடிதுடிக்க ஆரம்பித்தேன். குற்றவுணர்வு நாளுக்குநாள் என்னை வதைக்க ஆரம்பித்தது. உறக்கம் வரவில்லை. அப்படி தப்பித்தவறி வந்தாலும் கனவின் கொடூரத்தன்மை என்னை அலறியடித்துக் கொண்டு எழுப்பிப் போட்டது.
அப்பழுக்கற்ற எனது அன்பு மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்ற இந்தக் கை எனது முழு எதிரியாக எனக்குப் பட்டது. என் மனைவியின் கழுத்தை இந்தக் கையினால் நெரித்தபோது அவல் எப்படியெல்லாம் துடித்திருப்பாளோ? அவள் மனதில் இந்த நயவஞ்சகனைப் பற்றி என்னவெல்லாம் நினைத்திருப்பாளோ? அவளின் அத்மார்த்தமான அன்புக்கு நான் கொடுத்த அந்த துரோகப்பரிசை நினைத்து அந்த மரண வலியிலும் தன் மனதுக்குல் எவ்வளவு தூரம் அழுதிருப்பாள்? அதிலிருந்து என்னுடைய அந்த வலது கை வலியால் துடிக்க ஆரம்பித்தது. நாள் செல்லச்செல்ல அந்த வலி கூடிக்கொண்டே போனது. சொல்லொணாத் துயரம் அனுபவித்த நான் அந்தக் கையை அடிக்கடி கத்தியினால் கீறி காயமேற்படுத்திக் கொண்டேன். ஆனால் தாங்கள் எனக்கு அளித்த சிகிச்சையினால் ஒவ்வொரு முறையும் குணம் அடைந்தது. அப்படியும் எனக்கு நிம்மதி ஏற்படவில்லை.
நான் இப்பொழுது வாழ்க்கையின் கடைசிக் கோட்டில் நிற்கிறேன். எனது பாவச்செயலுக்கான இறுதி தீர்ப்பை நானே எழுதும் நேரம் வந்து விட்டது. டாக்டர் இனி என்னை காப்பாற்ற எவராலும் முடியாது. டாக்டர் நீங்கள் எவ்வளவோ கேட்டும் நான் உங்களிடம் மறைத்தது இதைத்தான். டாக்டர் நீங்கள் என் கையை காப்பாற்றத் தான் அப்படி கேட்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் எனது உயிரை உங்களால் ஒருபோது காப்பாற்ற முடியாது. இறுதியாக உங்களிடம் வேறொரு உண்மையை சொல்லிவிட்டு விடைபெறுகிறேன். எனது மனைவியின் கழுததை நெரித்து கொன்றபோது அவள் வாயிலிருந்து வெளிப்பட்ட ரத்தம் எனது கை மீது மட்டும் விழவில்லை. அவள் ஆத்மாவிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தின் இறுதித்துளி எனது கழுத்தில் சுருக்குக் கயிறாக தெரித்து விழுந்தது. அதுவே தினம்தினம் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் எனது வலியைப் போக்க அவள் கொடுத்த இறுதிப்பரிசு. இனி எனக்கு வலி என்பதே இல்லை. இது எனது அன்பு மனைவி சாவின் பரிசு. மறுபடியும் என்னை மன்னித்து விடுங்கள் டாக்டர். இனி என்னால் உங்களுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது. கண்ணுக்கு தெரியாத என்னுடைய காயத்தின் கதையை உங்களுக்கு சொல்லிவிட்டேன். சென்று வருகிறேன் டாக்டர்.
அந்தக் கடைசி வாக்கியங்களை படிக்கும்போதே டாக்டரின் விழிகளை கண்ணீர் திரை மூடி மறைத்தது.
அல்லது
அந்தக் கடைசி வாக்கியங்களை படிக்கும்போதே பொறுமையிழந்து போலிஸாரின் உதவியுடன் அவன் வீட்டுக்கு சென்று பார்த்தபோது அவன் கழுத்தை இடது கையினால் அறுத்துக்கொண்டு உயிரற்றுக் கிடந்தான். இனி என்றென்றும் கலையாத அவன் உறக்கத்தை கண்ட டாக்டரின் விழிகளை கண்ணீர் திரை மூடி மறைத்தது.
No comments:
Post a Comment