பக்கிரி சாமி பாரதி
தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற இசைக்
கருவியாக விளங்குவது நாகசுரம். காற்றிசைக் கருவி வகையைச் சார்ந்த இந்த நாகசுரம்
கோட்டு வாத்தியம் போன்றோ அல்லது ஜலதரங்கம் போன்றோ ஓர் அபூர்வ இசைக்கருவியாக இல்லாமல்
அன்றாட வாழ்க்கையில் வாசிக்கப்படுகிறது. இது திறந்த வெளியில் இசைப்பதற்கு மிகவும்
ஏற்ற இசைக்கருவி நெடுந்தூரம் வரையில் இதன் ஓசையைக் கேட்கலாம்.
சங்ககால நாட்டியநூலாகிய கூத்தநூலில் சாத்தனார் "குழலே எனைக் கொணையே, குன்னை, நாக்கே. நீக்கே.நாகம், சுரிகை, வத்தினி ஒன்பான் வங்கியம் என்ப' என்று இசை நூல் 82ஆம் நூற்பாவில் ஒன்பது வகைக் காற்றிசைக் கருவிகளைப் பற்றி குறிப்பிடுகின்றார்.
இரண்டு இசைக் கருவிகளை ஒரே நேரத்தில் சேர்த்து வாசிப்பதற்கு திருச்சின்னம் என்று பெயர் அவ்வாறே நாகசுரமும் ஒத்து நாகசுரமும் சேர்ந்து இசைக்கப்பட்டதால் இதற்கு நாகசின்னம் என்ற பெயரும் உள்ளது. சரபோஜியின் கூளப்ப நாயக்கன் காதல்' என்ற நூலில் 'தாரை, கவுரி, தவண்டை, துடி நாகசுரம்' என்று நாகசுரம் என்றே குறிப்பிடுகின்றனர். பழைய சுல் வெட்டுகளில், 'டொல நாககரத்திற்கு பணம் 2 (TD1. H.NO. 135)" என்று தவில் அடிப்பவர், நாகசுரம் வாசிப்பவர்க்கு பணம் கொடுத்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாரங்கதேவர் தனது 'சங்கீதரத்னாகரம்' என்ற நூலில் முகவீணை பற்றிக் குறிப்பிடுகிறார். தெலுங்கு மொழியில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வல்லப ராயரின் "கிரித பிராமம் நூலிலும் ஹரிபட்டரின் 'நரசிம்ம புராணம்" நூலிலும் இது நாகசுரம் என்றே அழைக்கப்படுகின்றது. 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பல்குருசியின் தெலுங்கு மொழிப் பாடல்களில் இது முகவீணை என்று அழைக்கப்படுகின்றது. வடமொழியில் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அகோலபண்டிதர் தனது "சங்கீதபாரிஜாதம்' என்ற நூலில் நாகசுரம், முகவீணை என்ற இரண்டு கருவிகளைப் பற்றியும் தனித் தனியாகக் குறிப்பிடுகின்றார். எனவே இடைக்காலத்தில், இது முகவீணை என்றும் நாகசுரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலத்தில் "நாயனம்", 'நாசனம்" என்றும் கூட கொச்சையாக அழைக்கப்படுகிறது. சங்கக் கால வயிர்' என்ற இசைக்கருவியும், இடைகான 'ஏழில்" என்ற இசைகருவியும், 'வங்கியம்" அல்லது ''பெருவங்கியம்' என்ற இசைக் கருவியும் நாகசுரம் என்று ஆராய்ச்சியாளர் பலரால் அறியப்படுகிறது.
நாககரம், பொதுவாக கருப்பு மரமாகிய ஆச்சாமரத்தினால் செய்யப்படுகின்றது. இது நல்ல உறுதியையும், காற்றகிர்வையும் கொடுக்கிறது இம்மரம் வெட்டிய பின்பு சுமார் ஒரு நாறு வருடமாவது காய்ந்திருக்க வேண்டும் அவ்வாறில்லாமல் வெட்டிய உடனே தாசுகரம் செய்தால் அது வெடித்துவிடும் எனவே மிகப் பழங்காலத்தைச் சேர்ந்த நேர் அச்சிலோ, வீடுகளில் ததூண்களிலோ உள்ள ஆச்சாமரத்தைக் எடுத்து நாக்கரம் செய்வர் நரசிங்கன்பேட்டை, தேரெழுத்தார். வாஞ்சூர் திருவானைக்கோவில் போன்ற ஊர்களில் இதற்கொ உள்ள தச்சர்களால் சிறப்பாக நாக்கரம் செய்யப்படுகிறது. ஆச்சாமரம் தனிர தோதகத்தி (ரோஸ்வுட்), பூவரசு, பலர்,கருங்காலி, சந்தனம் போன்ற மரங்களாலும். யானைத் தந்தத்தினாலும், வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களாலும் இது செய்யப் படுகின்றது. ஆழ்வார் திருநகரி, திருவாரூர், கும்பகோணம், கோயில்களில் கருங்கல்லினால் செய்யப்பட்ட நாகசுரம் உள்ளது.
ஊமத்தம் பூ வடிவில் காட்சியளிக்கும் இந்த நாகசுரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. மேல் பகுதி உளவு அல்லது உடல் என்றும், கீழ் பகுதி அணைக அல்லது அணக என்றும் அழைக்கப்படும். பழங்காலத்தில் பகுதியில் மேல் அணுக என்ற பகுதியைத் தனியாகவே செய்வசுமார் 40 ஆண்டுகளாகத்தான் மேல் அணசைத் தனியாக கழட்ட முடியாதவாறு உடலோடு இணைத்தே செய்து வருகின்றனர்.
மிகப் பழங்காலத்திலிருந்து சென்ற நூற்றாண்டு வரை 185 அங்குல நீளமுடையதாகவும், நாலரைக் கட்டை கருதியுடன் இருந்து வந்தது. இது முகவீணைக்கு அடுத்த நிலை, இதில் ஏழு விரல் துவாரங்களும்,ஒரு பிரம்ம கரமும் தவிர, கூடுதலாக இரண்டு இணை ஜீவசரங்களும் அமைக்கப்பட்டு இருக்கும். 1909ஆம் ஆண்டு மன்னார்குடி சின்னப் பக்கிரி நாகசுரக்காரர் 21.12 அங்குல நீளமும் நான்கு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தைப் பழக்கத்தில் கொண்டு வந்தார் 1920ஆம் ஆண்டு திருபாம்புரம் சாமிநாதபிள்ளை 23.75 அங்குல நீளமும், மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட நாகஈரத்தைக் கொண்டு வந்தார். பின்னர் 1932ஆம் ஆண்டு கீரனூர் சின்னத்தம்பி என்பவர் 18 அங்குல நீளமும் மூன்று கட்டை சுருதியும் கொண்ட நாகசுரத்தை அறிமுகம் செய்தார். இத்தகைய நாவரை. நான்கு, மூன்றரை, மூன்று ஆகிய கட்டையுள்ள சுரங்களுக்கு 'திமிகி நாகரம்' என்று பெயர். 1932ஆம் ஆண்டு, திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை 31.25 அங்குல தீனமும் மூன்றரைக் கட்டை சுருதியும் கொண்ட இடைபாரி நாகசுரத்தை கொண்டுவந்தார். பின்னர் அவரே முயற்சிகள் பலவும் மேற்கொண்டு 1941-ஆம் ஆண்டு 34.5 அங்குல நீளமும் இரண்டு கட்டைச் சுருதியும் கொண்ட நாகசுரத்தை உருவாக்கினார். அவரே மேலும் முயன்று மத்திமத்தை ஆதாரமாக வைத்து, மற்ற சுரங்களை அதற்கேற்ப அமைத்துக்கொண்டு 1946ஆம் ஆண்டு மத்திம சுருதி நாகசுரத்தை உருவாக்கினார். இவற்றிற்கு 'பாரி நாகசுரங்கள்" என்று பெயர்.
திமிரி நாகசுரம் வாசிப்பதற்கு மிகவும் அழுத்தமாயிருக்கும். அதில் செருகும் சீவாளி கொஞ்சம் குட்டையாய் இருக்கும். காற்றும் கூடுதலாக வாங்கும். இடைபார். நாகசுரம் வாசிப்பதற்குக் கொஞ்சம் எளிது. ஆனால் அதிக அழுத்தம் இருக்காது. சீவாளி கொஞ்சம் நீளமாய் இருக்கும். பாரி நாகசுரம் வாசிப்பதற்கு மிகவும் சுகமாய் இருக்கும். மிகவும் எளிதாய் வாசிக்கலாம். ஆனால் அழுத்தம் இருக்காது. இவையே திமிரி நாகசுரத்திற்கும். பாரிநாகசுரத்திற்கும் உள்ள வேறுபாடாகும்.
திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
நாகசுரத்தில் வாசிப்பதற்காக ஏழு விரல் துளைகளை அமைத்திருப்பர். இதற்கு சப்தசுரங்கள் என்று பெயர். இந்த விரல் துளைகள் மாயாமாளவகவுளை ராக அடிப்படையில் அமைக்கப்பட் டிருக்கும். இதில் எட்டாவதாக உள்ள துளைக்கு பிரம்ம சுரம் என்று பெயர். நாதசுரத்தில் செலுத்தப்படும் காற்று இதன் வழியாகத்தான் வெளியில் செல்லும். இதை அடைத்து விட்டால் மத்திய தாயிலிலும், மந்திர தாயிலும் பஞ்சமம் குறைவாக கேட்கும், அல்லது கேட்காது. இந்த பிரம்ம சுரத்தை மையமாக வைத்து, இரண்டு பக்கத்திலும் இரண்டு இணையாக மொத்தம் 4 துளைகள் இடப்பட்டிருக்கும்.
மங்கள இசையென்று போற்றப்படும் நாதசுர இசையோடுதான் இறைவனின் ஆறுகாலப் பூசைகள் நடைபெறும். நாகசுரக் கலைஞர்கள் அதிகாலையில் திருக்கோயில் கொலுபீடத்தில் வந்தமர்ந்து கொலுமேளம் வாசிப்பர். இதில் பூபாளம், பவுளி போன்ற இராகங்களை வாசிப்பர்.
பிறகு கோயில் திறக்கப்பட்டு, பூசைக் காலம் தொடங்கும்.இதற்குக் காலை கொலுமேளம் என்று பெயர். இதனைத் தொடர்ந்து, காலை 6.30 மணி முதல் 7.30 மணிவரை உதய கால பூசை நடைபெறும். இதில் மலயமாருதம், கேதாரம் போன்ற ராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளும் வாசிக்கப்படும். பின்பு 8.00 மணி முதல் 9.30 மணிவரை, காலசந்திபூசை நடைபெறும். இதில் பிலகரி, தன்யாசி போன்ற இராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பின்பு 11.00 மணி முதல் 12.30 மணிவரை உச்சிக்கால பூசை நடைபெறும். இப்போது சாவேரி, சுத்த சாவேரி, தர்பார் போன்ற ராகங்களையும் அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பின்பு மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை மாலைக் கொலுமேளம் வாசிக்கப்படும். இதில் மந்தாரி, பூர்வகல்யாணி ஆகிய இராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகயையும் வாசிப்பர். இதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணிமுதல் 6.30 மணிவரை சாயரட்சை நடைபெறும். இதில் கல்யாணி, பைரவி, சங்கராபரணம் போன்ற ராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பின்பு இரவு 7.30 மணிமுதல் 8.30 மணிவரை இரண்டாம் கால பூசை நடைபெறும். இதில் சண்முகப் பிரியா, கரகரப் பிரியா, பவப் பிரியா போன்ற ராகங்களும், அதற்குரிய கீர்த்தனைகளையும் வாசிப்பர். பிறகு 9.30 மணிமுதல் 10.30 அர்த்தயாம பூசை நடைபெறும். இதில் நாகசுரமும் ஒத்தும் மட்டும் சேர்ந்து ஆனந்த பைரவி, கானடா, அடானா, பேகடா, நீலாம்பரி ராகங்கள் மட்டும் இசைக்கப்பெறும். பிறகு பள்ளியறைப் பூசை முடிந்து, திருக்கோயிலின் கதவு சாத்தும்போது அதற்கான கதவடிப் பாட்டு வாசிக்கப்படும். இத்தகைய வழிப்பாட்டு முறைகளுக்கு ஆறுகாலப் பூசை என்று பெயர்.
கோயில் பூசைக்கு நீர் கொண்டு வரும் போது மேகராகக் குறிஞ்சி ராகமும், குடமுழுக்கின் போது தீர்த்த மல்லாரியும் வாசிக்கப்படும். திருமடப்பள்ளியிலிருந்து இறைவனுக்கு தளிகை(உணவு) எடுத்து வரும் போது தளிகை மல்லாரி வாசிக்கப்படும். இறைவனின் திருக்கலியாணம் நிகழும்போது நாட்டைக் குறிஞ்சி ராகம் அல்லது கல்யாண வசந்த ராகம் மட்டுமே வாசிக்கப்படும். பின்பு திருப்பூட்டு முடிந்தவுடன் ஆனந்தம் என்ற பாடலும், மாலை மாற்றும் போது, மாலை மாற்றுப் பாடலும் வாசிக்கப்படும். நலங்கு நிகழ்வின் போது நலங்குப் பாடலும், ஊஞ்சல் நிகழ்வின் போது ஊஞ்சல் பாட்டும் அதன் பிறகு லாலிப் பாட்டும், ஓடப்பாட்டும், கப்பல் பாட்டும் இசைக்கப்படும். இறுதியாக தீபாராதனை நடைபெறும்போது தேவாரம், திருப்புகழ் வாசித்து முடிக்கப்படும். இவ்வாறாக பல நூற்றாண்டுகளாக நாகசுரம் மூலம் இசைமுறை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
திருவெண்காடு சுப்பிரமணியம்
இறைவனது திருவீதி உலாவில் வேறு எந்த இசை நிகழ்ச்சிகளிலும் காணமுடியாத மல்லாரி, ரத்தி, ஓடக் கூறு, எச்சரிக் கை போன்ற இசை வகைகளை நாகசுர வாசிப்பில் கேட்கமுடியும். திருவீதியுலாவில் இறைவனின் புறப்பாட்டிற்கு முன்பாக, தவிலில் அலாரிப்பு வாசிக்கப்படும். இது கண்ட நடையில் அமைந்த சொற் கோவையாக இருக்கும். இதனைத் தொடர்ந்து கம்பீர நாட்டை ராகம் வாசிக்கப்படும். இது வீரரசம் பொருந்திய ராகமாகும். இந்த இராக ஆலாபனைக்குப் பிறகு மல்லாரி வாசிக்கப்படும். இந்த மல்லாரியைக் கேட்டு வெகு தொலைவில் இருப்பவர்களும் கூட இறைவன் புறப்பாடு நடைபெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளவர். இந்த மல்லாரி பல வகைப்படும்.
தேர்த்திருவிழாவின் பொழுது வாசிக்கப்படும். மல்லாரிக்கு "தேர் மல்லாரி" என்று பெயர். "தேரின் மேல் ஏறி வரும்" என்ற பாடலும் "தியாகராயப் பெருமாள்" என்ற பாடலும் கண்டஏக தாளத்தில் அமைந்திருக்கும். இறைவன் புறப்படும்போது, அலங்கார மண்டபத்திலிருந்து, யாகசாலைக்கு வரும் வரையில் பெரிய மல்லாரி என்ற ராகம் வாசிக்கப்படும். "உனது பாதமே கதி என்று நினைத்தேன்" என்ற இதற்குரிய பாடல், ஆதிதாளத்தில் அமைந்திருக்கும். இறைவன் யாக சாலைக்கு வந்ததும், தவிலும் தாளமும் இன்றி ஒத்து சுருதியுடன் நாகசுரத்தில் மட்டும் காப்பி, கானடா, கேதாரகௌளை ஆகிய இராகங்கள் வாசிக்கப்படும்.
பின்பு யாகசாலையிலிருந்து கோபுர வாசல் வழியாக சுவாமி வெளியில் வரும்போது, திரிபுடைத் தாளத்து மல்லாரி வாசிக்கப்படும். இது தகதிமி - தகிட" என்று ஏழு எழுத்துக் கொண்ட தாளமாகும். பின்பு கோபுர வாசலில் தீபாராதனை முடிந்ததும், அந்தந்தத் தெய்வங்களுக்கு உரிய சின்ன மல்லாரி வாசிக்கப்படும். இதற்குள் சாமி தேர்முட்டியின் அருகில் வந்துவிடும். அதன் பின்பு காம்போதி, சங்கராபரணம், பைரவி, சக்கரவாகம் போன்ற இராகங்களில் விளம்பமான இராக ஆலாபனை நடைபெறும். இந்த இராக ஆலாபனையோடு சுவாமி கிழக்கு, தெற்கு, மேற்கு வீதிகளைப் பாதி சுடந்து வந்து நிற்கும். அதன் பிறகு ரத்திமேளம் தொடங்கும். இது பல்லவிபோல, "தீந்தக்க தத்தீதை" என்ற மிஸ்ரசாப்பு தாளச் சொற்கட்டை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். இதன்பின்னர் ஆறுகாலத்தில் பல்லவி வாசிக்கப்படும்.
இவ்வாறு கீழவீதியில் நடுபகுதி வரையிலும் இந்தப் பல்லவி, சுரவிளம்பம், இராகமாலிகை என்று வாசிக்கப்படும். உலா கோபுர வாசலை அடைந்ததும் பதம், தேவாரம் ஆகிய பாடல்களை வாசிக்க வேண்டும். பொதுவாக சைவ, வைணவக் கோயில்கள் அனைத்திலும், சுவாமி கோயிலைவிட்டுப் புறப்பட்டு மீண்டும் கிழக்கு வாசலை அடையும் வரையிலும், மல்லாரி தவிர வேறு எந்தப் பாடலையும் வாசிக்க கூடாது என்பது மரபாகும். ஆனால் இப்போது மல்லாரி முடிந்து, வர்ணம் என்ற இசை வகையும், சுவாமி கிழக்கு வாசலுக்கு வரும்போது தீர்த்தனை, பதம், ஜாவளி, இல்லானா, காவடிசிந்து, கிளிக்கண்ணி போன்ற இசை வகைகளையும் வாசித்து வருகின்றனர்.
வீதியுலா முடிந்து சுவாமி கோயிலுக்கு உள்ளே நுழையும்போது கண்ணேறு கழிக்கப்படும். அப்போது தாளத்தோடு தவில் மட்டும் தட்டிக் கொண்டு வருவார்கள். இவ்வாறு தட்டிச் சுற்றுவதால் இதற்கு தட்டுச்சுற்று என்று பெயர். வைணவக் "கோயில்களில் இதை திருவந்திக்காப்பு என்பர். இக்காலத்தில் இதற்கு பதம் அல்லது திருப்புகழ் வாசிக்கின்றனர், சுவாமி மூலத்தானத்திற்குச் செல்லும் பொழுது எச்சரிக்கை என்னும் வகை வாசிக்கப்படும். இதற்கு படியேற்றம் என்றும் பெயருண்டு.
சில கோயில்களில் இந்த இந்த இடங்களில், இன்ன இன்ன இராகங்களைத்தான் வாசிக்க வேண்டும் என்ற நியதியும் உள்ளது.
சில திருவீதி உலாக்களில், மன்னார்குடி சின்னப் பக்கிரி நாகசுரக்காரர், கேதாரகவுளை, காப்பி, ஆனந்த பைரவி போன்ற ராகங்களை எட்டு நாள், பத்து நாள் என்று தொடர்ந்து வந்த ராகம் திரும்ப வராமல்" வாசித்துப் புகழ் பெற்றுள்ளார். மேலும் மதுரை பொன்னுசாமி நாயனக்காரர் ஐந்து நாள் உற்சவத்தில் தொடர்ந்து சக்கரவாகம் இராகத்தை வாசித்துப் புகழ் பெற்றுள்ளார்.
அந்தக் காலத்தில் இரவு நேரம் ஆக, ஆக நாகசுரத்தின் ஓசை பழமை தொலைவு கேட்குமாம். தமிழிசையை
பல்லாண்டுகளாக நமக்கு கொண்டு வந்து சேர்த்தது இந்த நாகசுரமே.
No comments:
Post a Comment