Showing posts with label திரைப்படம் பற்றி .... Show all posts
Showing posts with label திரைப்படம் பற்றி .... Show all posts

Saturday, 15 March 2025

திரைப்படம் பற்றி ...

மூன்று திரைப்படைப்பாளிகளின் கருத்துக்கள் 


1

"ஒவ்வொருவருக்கும் தான் செய்ய விரும்பும் ஏதோ ஒன்றைப் பற்றிய ஒரு எண்ணம் இருக்கும். கற்பனையினால் மெருகேற்றப்பட்ட இந்த எண்ணத்திற்கும் இறுதியாக அவர் சாதித்து பெற்ற வடிவத்திற்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து கொண்டே இருக்கும். இந்த இடைவெளியை குறைப்பதற்கு தான் மீண்டும் மீண்டும் முயல வேண்டி இருக்கிறது."

                                                                                                                                    - லூயி மால் 


2

"நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்கியம் குன்றியிருக்கும் போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள் மனதை ஒளிர்விக்கும். ஒரு காட்சியுயோ, ஒரு வசனமோ போதும், நமக்கு தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு.

இது போன்ற சக்தியை கொண்ட திரைப்படங்கள் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. அவை ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவையாக இருந்தாலும் அவற்றுக்கு பொதுவான ஒரு தன்மை இருக்கிறது. பாடலின் மெட்டுப் போன்ற பொதுவான ஒரு தன்மை.

இந்தக் காரணத்திற்காகவே த்ரூஃபோவின் படைப்புகளில் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட படங்களை விரும்பியவர்கள் உலகில் பல பாகங்களில் இருக்கிறார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். "

                                                                                                                                - ழான் கோலே  


 3

"திரைப்படம் என்கிற படைப்பில் பிம்பங்களின் ஒளி - நிழல், ஒலிப் பின்னணியின் சப்தம் - சப்தமின்மை, நடிப்பின் அசைவுகள் - அசைவின்மை என்ற கூறுகள் ஒன்று சேர்ந்து ஒரு இயக்கம் ஏற்படுகிறது. இந்த இயக்கத்தினுள்ளே ஒரு குறிப்பிட்ட தாளகதி அதை இயக்குகிறது. படத்தின் உள்ளே பொதிந்திருக்கும் அதன் லயம் திரைப்படம் ஒரு தொடர் நிகழ்ச்சியாக திரையில் ஓடும் போது வெளிப்படுகிறது. இதுதான் ப்ரெஸ்ஸோன் குறிப்பிடும் அகச்சலனம்."

"மனிதனின் முகத்தைச் சித்தரிக்கும் கலைஞன் மனிதனுக்கு ஆற்ற வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. அவனுடைய இயல்பான கண்ணியத்தை காட்டக் கலைஞன் தவறினாலும், குறைந்தபட்சம் அவனுடைய மேலோட்டமான தன்மையையும், அவனுடைய அறிவீனத்தையும் மறைக்கவாவது முயல வேண்டும். இந்த உலகத்தில் எந்த மனிதனுமே அறிவீனனாகவோ, மேலோட்டமானவனாகவோ இருக்க மாட்டான் என்பது சாத்தியமே. சஞ்சலமுற்று இருப்பதால் அவன் அப்படித் தோன்றக்கூடும். ஏனென்றால் அவன் நிம்மதியாக இருப்பதற்கு ஏற்ற ஒரு சிறு மூலை கூட அவனுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும்." 

                                                                                            - ஜோசப் வான் ஸ்டெர்ன்பெர்க்

Friday, 28 February 2025

சினிமாவை கற்றுக்கொள்ளுங்கள்

ஹெய்லே கெரீமா


"சினிமாவை, நீங்கள் சினிமாப் பள்ளிகள் கல்லூரிகளுக்குச் சென்று கற்கத் தேவையில்லை. ஒரு நல்ல கலைஞன் சினிமாவை கல்லூரிகளில் கற்றுக் கொள்ளவும் முடியாது. இன்றும் பொருளாதார ரீதியில் பிற்பட்ட நாடுகளிலிருக்கும் ஒடுக்கப்பட்ட மக்கள் சினிமாவை வேறெங்கு சென்றும் கற்றுக் கொள்வது. அவ்வளவு சுலபமில்லை.

நீங்கள் இருக்கும் இடத்திலேயே சினிமாவை உருவாக்க முயலுங்கள். நண்பர்களோடு கை கோர்த்துக் கொள்ளுங்கள். தோள் போட்டுக் கொள்ளுங்கள். உனது பாட்டி, மற்றவரின் தாய், மற்றொருவரின் மகன், இன்னொருவரின் மாமா இவர்கள்தான் பாத்திரங்கள். இவர்கள் வாழ்வைத் தேடிப் போங்கள். இவர்கள் வாழ்வில் காதல் இருக்கிறது, துக்கம் இருக்கிறது, கோபம் இருக்கிறது, அடிமைத்தனம் இருக்கிறது, எதிர்ப்புணர்வு, சாவு, இசை, நடனம், பாடல், பறவைகள், மரம் செடி கொடி, பிராணிகள், இயற்கை எல்லாம் இருக்கிறது. இவர்கள் வாழ்ந்ததை, வாழ்விருந்து கனவைச் சொல்லுங்கள்.

சினிமா, ஒரு கருவி. ஒரு சாதனம். ஒரு ஆயுதம். உங்கள் சிந்தனையின் நீட்சி. உங்கள் செயலின் நீட்சி. நீங்கள் நினைப்பதை தோழர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சினிமா அப்போது தோன்றும்"

- ஹெய்லே கெரீமா

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...