Showing posts with label மாயக்கண்ணாடி. Show all posts
Showing posts with label மாயக்கண்ணாடி. Show all posts

Sunday, 4 February 2018

மாயக்கண்ணாடி : தமிழ் சினிமாவின் கதை - தொடர் (பகுதி - 1) ஆத்மாநாம்


நிகழ்ச்சிக் கரு (PROGRAMME CONCEPT)

கி.மு 65-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே உலகின் எங்கோ ஒரு மூலையில் பழங்கால கிரேக்கர்களின் சிந்தனையில் தோன்றி 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் லூமியர் சகோதரர்களால் மாபெரும் விஞ்ஞானக் கலையாக உருவெடுத்த சினிமா எனும் கலைவடிவம் தமிழகத்தில் வேரூன்றிய கதையை அதன் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியோடு சொல்ல வருகிற சுவாரசியமான நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி.



தமிழ் சினிமாவின் கதை என்பது ஒருவகையில் தமிழ்மக்களின் கதையும் கூட. ஆரம்பத்தில் கூத்தாடிகள் என்று கேலிபேசப்பட்டவர்கள் தான் பின்னர் நாடாண்டார்கள் என்பது நாடறிந்த வரலாறு. தமிழ் சினிமாவில் பேசப்பட்ட கதைகளை விட பேசப்படாத கதைகள் ஏராளம். தெருக்கூத்து, நாடகம் என்று வாழ்ந்த தமிழனின் வாழ்வில் சினிமா எனும் மாபெரும் கலைவடிவம் நுழைந்தது வரலாற்றில் அவனுக்கு கிடைத்த பெரும் புதையல். அந்த புதையலை பொத்திப்பொத்தி வளர்த்தெடுத்த திரையுலக ஜாம்பவான்களை, கலையுலக சிற்பிகளை, இசையுலக மேதைகளை திரும்பிப்பார்க்கவைக்கும் நெடுந்தொடர் நிகழ்ச்சிதான் மாயக்கண்ணாடி.




ஒரு புராஜக்டர் மற்றும் சில துண்டுப்படங்களுடன் சாமிக்கண்ணு வின்செண்ட் தமிழகத்திலும், ஆந்திரத்திலும் திரையிடத் தொடங்கிய தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பயணம் இன்றைய 2.0 வரை நீண்ட கதையைத்தான் வரலாற்றுப் பின்னணியோடும், கலாச்சாரக் காரணங்களோடும், அரிய தகவல்கள், புகைப்படங்கள், கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் படக்காட்சிகளுடன் ஆவணப்படுத்தப் போகும் அரிய முயற்சி தான் இந்த மாயக்கண்ணாடி.

தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியாதோ அதேபோல் தமிழ் சினிமாவின் கதையை தெரிந்து கொள்ளாத தமிழனையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் விசிறிகளை மகிழ்விக்க, அது காலந்தோரும் கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்கவைக்கப் போகும் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி.



நிகழ்ச்சி வடிவம் (PROGRAMME FORMAT)

முதலில் இந்த நிகழ்ச்சித் தொடர் குறித்த முன்னோட்டத்தை தொகுப்பாளர் ஒருவர் தொகுத்து வழங்குவார். அவர் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மையமாக இருந்து ஒருங்கிணைத்து செல்வார்.

மாயக்கண்ணாடி நிகழ்ச்சி முழுவதுமே ஒரே Pattern-ல் இருக்காது. இந்த தொடர் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நுழையும்போது அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் மாறுபடும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒருவகையில் சுகாசினியின் AUTOGRAPH போன்றும், மதனின் TALKIES போன்றும் நேர்காணல் வடிவிலும், அதேநேரத்தில் ஆவணப்பட பாணியிலும் மாறி மாறி செல்லும். இந்த தொடர் நிகழ்ச்சி முழுவதும் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையில் கொண்டு செல்லப்படும். 


              மதனின் TALKIES                           சுகாசினியின் AUTOGRAPH

இடையிடையே Visualize செய்யப்பட்ட காட்சிகளுக்கு Dubbing செய்யப்பட்ட Voice Over பொருத்தமான இடங்களில் சேர்க்கப்படும்.  சினிமா எனும் கலை வடிவம் அறிவியல் மற்றும் கலாச்சார வணிக நோக்குடன் உருவான ஒன்று என்பதால், மொத்த நிகழ்ச்சியின் இடையில் கூட்டு விவாதங்களும் இடம் பெறும். Eye Doctor, Film Technicians, Film Critics, Novelists, Politicians, Psychiatrist என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பேட்டிகளும் இடம் பெறும். சினிமாவை உருவாக்கும் கடைக்கோடி வல்லுநருக்கும், உடல் உழைப்பாளிகளுக்கும் கூட முக்கியத்துவம் தரப்படும். சினிமா வளர்ச்சியில் பங்குபற்றிய Audio Voice கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சி பல கட்டங்களாக பிரித்துக் கொண்டு இன்று வரையிலான திரைப்பட வரலாறு ஆவணப்படுத்தப் படுகிறது. 

  1. அரிஸ்டாட்டில் தொடங்கி லூமியர் வரையிலான காலகட்டம்
  2. லூமியர் தொடங்கி கதைப்படங்கள் வரையிலான காலகட்டம்
  3. ஊமைப்படங்கள் தொடங்கி பேசும் படங்கள் வரையிலான காலகட்டம்
  4. பேசும் படங்கள் பாடும் படங்களாக மாறிய காலகட்டம்
  5. பாடும் படங்கள் பல்வேறு வகை படங்களாக மாறிய காலகட்டம்

இந்த நிகழ்ச்சிக்கு தேவையான Meterials, Youtube Visuals and Other Video Sources அன்று தொடங்கி இன்று வரையிலான பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள், பழைய நடிகர்களின் நினைவுக் குறிப்புகள், கடிதங்கள் இன்ன பிற... யாவும் இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சித் தொடர் முடியும் வரையில் தமிழ் சினிமாவின் வரலாற்று ஆய்வாளர்கள் இதன் தொடர்பு வளையத்திலேயே இருப்பார்கள். இந் நிகழ்ச்சிக்காக சினிமா சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். இதன் காரணமாக இயன்ற வரை வரலாற்று பிழையுடைய தகவல்கள் தவிர்க்கப்படும். 

சினிமா வரலாறு குறித்த பழைய, புதிய ஆர்வலர்களின்  அரிய சேகரிப்புகள் கணக்கில் கொள்ளப்பட்டு ஒரு புத்தம் புதிய பொலிவுடன் நிகழ்ச்சி கொண்டு செல்லப்படும். மாயக்கண்ணாடி தொடரின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழ் சினிமா வரலாற்றின் சுவாரஸ்யமான கட்டங்களையே பிரதானமாக கொள்வதால் நிகழ்ச்சித் தொடர் ஆவணப்பட வடிவத்தை அப்படியே பின்பற்றாமல் அதிகபட்சமாக சினிமாப்பட பாணியிலேயே கொண்டு செல்லப்படும்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தவிர்க்க முடியாத அடுத்தடுத்த கட்டங்களான மௌனப்படக்கால இசை சேர்ப்பு முறைகள், நடிப்பு முறையில் நிகழ்ந்த மாற்றங்கள், புதியவகை பாணியை தோற்றுவித்த படங்கள், மறக்க முடியாத மைல்கல் சினிமாக்கள், கதை சொல்லல் முறைகள், தொழில்நுட்ப மாறுதல்கள், பழைய கீற்றுக் கொட்டகையிலிருந்து இன்றைய ‘மால்’ தியேட்டர் வரையிலான மாற்றங்கள் பதிவு செய்யப்படும். 



இந்நிகழ்ச்சித் தொடரில்  நிகழ்ச்சித் தொகுப்பாளர்   Blue or Greenmatte - ல்  தோன்றும் காட்சிகள் நிகழ்ச்சிகள் சிலவற்றில் மட்டுமே இருக்கும். தொடரின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் சினிமாவிற்கேயான கலைப் பொருட்களுக்கான மாதிரிகள் (உதாரணம் : பழைய கிராமஃபோன், 70 RPM இசைத் தட்டுகள், பழைய சினிமா சுவரொட்டிகள், அரிய அந்தக்கால புகைப்படங்கள், பத்திரிகைச் செய்திகள்...) நிரம்பிய ஒரு புராதன சினிமா அறையைப் போன்ற அரங்கம் ஒன்றில் நடந்து கொண்டோ, மாதிரிகளை சுட்டிக்காட்டி பேசியபடியோ அல்லது சில நேரங்களில் உட்கார்ந்து கொண்டோ, சாய்ந்து கொண்டோ இல்லை படுத்துக்கொண்டோ கூட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். ஒரு வகையில் உட்புற/வெளிப்புறக் காட்சிகள் பலவும் Travelling of Photography உத்தியில் படமாக்கப்படும். 



தமிழ் சினிமாவின் வரலாற்றை முழுமையாக பேசப்போகும் மாயக்கண்ணாடி என்கிற இந்த நெடுந்தொடர் நிகழ்ச்சியை வார இறுதியின் இரண்டு நாட்களின் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக பிரித்தால் கூட 100 தொடர்களை சுலபமாக தாண்ட முடியும். இதையே 30 நிமிட நிகழ்ச்சியாக மாற்றினால் 250 தொடர்களையும் தாண்டிச் செல்லலாம். ஏனெனில் தமிழ் சினிமாவைப் பற்றி பேச மற்றும் காட்சிப்படுத்த அவ்வளவு சங்கதிகள் மலைபோல குவிந்து கிடக்கிறது.


(தொடரும்)


மாயக்கண்ணாடி : தமிழ் சினிமாவின் கதை - தொடர் (பகுதி - 3) ஆத்மாநாம்


EPISODE - 02

திரைப்பட வரலாற்றின் ஆரம்பகால புகைப்படங்கள் ஒட்டப்பட்ட கதவை திறந்துகொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் வருதல்.

என்ன நேயர்களே! சென்ற நிகழ்ச்சியில் கண்களின் கவசமாக திகழும் இமைகளின் மூலம் நாம் பார்க்கும் காட்சிகளையும் அதனை கண்கள் உள்வாங்கிக்கொள்ளும் திறன் பற்றியும் தெரிந்துகொண்டோம். ஆனால் இன்றைய நிகழ்ச்சி நம்மை மேலும் பல ஆச்சரியமான உண்மைகளுக்கு அழைத்துச்செல்லப்போகிறது.

Majic Lantern Period Montage 

Anchor பேச முற்பட்டவுடன் நிகழ்ச்சிக்கிடையில் ஒருவர் புத்தகம் ஒன்றை தந்துவிட்டுப்போக அதனை கையில் வாங்கிக்கொண்டு தொகுப்பாளர் பேசுதல்.

இந்த அசையாத படங்களை அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்தும் சலனப்படத்தோற்றம் முதலில் சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டுக் கருவிகளை உருவாக்க மட்டுமே உதவும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அது விழுதுவிட்டு வளர்ந்து நிற்கும் மாபெரும் கலைச்சாதனமாக மாறும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதன் ஆரம்பகட்ட முயற்சிகள் யாவுமே அரேபிய கதைகளில் வரும் இரவுக்காட்சிகளைத் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதைப்பற்றி நமது திரைப்பட திறனாய்வாளர் சொல்வதை சிறிது பார்ப்போம்.

திறனாய்வாளர் ஒருவர் அமர்ந்தவாறு பேசுதல் / Indoor Bite

ஒரு விளக்கையும் சில பொம்மைகளையும் கொண்டு வந்து திரையில் உருவங்களை அசையவைக்கும் நிகழ்ச்சி 1720-களில் ஐரோப்பாவில் நடந்தது. இது இந்தியா அல்லது ஜாவா வழியாக மத்திய கிழக்கு நாடுகளில் பரவியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

செரஃபின் என்பவரால் நிழற்பாவைகூத்து அரங்கம் ஒன்று 1776-லிருந்து 1850 வரை இருந்து வந்தது ஃபெடிஸ் நாட்குறிப்பில் பதிவாகியுள்ளது. அதே   ஃபெடிஸ் நாட்குறிப்புதான் 1800-களில் நாடோடி ஒருவர் எண்ணையால் ஆன Lens உடன் ஊர் ஊராக சென்று இதுபோன்ற காட்சிகளை காட்டி வந்ததையும் கூறுகிறது.

Anchor Cut

மனித நாகரீகத்தின் நிழல்கள் எங்கெல்லாம் நீண்டதோ அங்கெல்லாம் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிசயக் கதைகள் குறித்து திரைப்பட ஒளிப்பதிவாளர் விளக்குவதை பார்க்கலாம்.

Part of Visuals

Cinematographer ஒருவர் மாயவிளையாட்டுக்கருவிகள் படிப்படியாக வளர்ச்சியுற்றதை சொல்லுகிறார். Shooting Spot  அல்லது வீட்டில் எடுக்கப்பட்ட Bite.

ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாயவிளையாட்டுக்கருவிகள் அனைத்தும் சிறுவர்களை மகிழ்விப்பதையே இலக்காக கொண்டிருந்தாலும், இதனைக்கண்ட பெரியவர்கள் பலரும் கூட அதன்பிறகு இதனை வியந்து பாராட்டத் தொடங்கினர். பின்னாட்களில் செல்வம் கொழிக்கும் மாபெரும் தொழிலுக்கான அஸ்திவாரமாக இது மாறப்போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.

Cinematographer Voice Over / Visuals / Images [பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்]

இந்த கண்டுபிடிப்பு கருவிகளின் சரியான துவக்கமாக 1825-ஆம் ஆண்டு ஆங்கில நாட்டைச்சேர்ந்த டாக்டர் பிட்டன் அன்பவர் உருவாக்கிய மந்திர சுழற்சி அட்டையை கூறலாம்.

Thamatrope என்று அழைக்கப்பட்ட அந்த அட்டையில் ஒரு பக்கம் கூண்டும் இன்னொறு பக்கம் கிளியும் வரையப்பட்டிருந்த்து. அதை ஒரு தாங்கியில் பொருத்தி வேகமாக சுற்றும்போது கூண்டுக்குள் கிளி அமர்ந்திருப்பது போல் காணப்பட்ட்து.

Cinematographer Cut and Voice 

கண்களுக்குள்ள பார்வை நிலைப்பு பண்பினால்தான் நமக்கு அந்தக்காட்சி அப்படி காட்சியளித்த்து. இதனை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால் மேலும் சில உதாரணங்களை பார்க்கலாம்.

Cinematographer Voice மற்றும் பகுதிக்காட்சிகள்

ஒரு ரூபாய் ஒன்றை சுழல விட்டுப்பாருங்கள். இப்போது நாணயத்தின் இருபக்கங்களையும் பார்க்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது. சரியாக ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தைத்தானே பார்க்கமுடியும். அது வேறொன்றுமில்லை. நீங்கள் ஏற்கனவே பார்த்த நாணயத்தின் இன்னொரு பக்கத்தை மூளை காட்சியாக காப்பதால் சுழற்சியின்போது இருபக்கத்தையும் ஒருசேர பார்க்கமுடிகிறது.

Visuals

எரிகிற பல்பை பார்த்துவிட்டு சட்டென கண்களை மூடினால் டங்ஸ்டன் இழைகள் நெளிவது தெரிவதும், மின்விசிறியை ஓடவிட்டு பார்க்கும்போது அதன் இறக்கைகள் பல இறக்கைகளாக தெரிவதும் இந்த காட்சி காக்கும் திறனால் தான்.

Anchor Cut

கையிலிருக்கும் புத்தகத்தை பிரித்து அதில் சுட்டிக்காட்டி பேசுதல். (பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)

1832-ல் ஆங்கில பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த டாக்டர் ஜோசப் அந்துவான் பெர்டினண்ட் பிளாட்டோ என்பவர் Phenakistoscope என்ற கருவியை கண்டுபிடித்தார். இரண்டு வட்டவடிவமான தகடுகளை எடுத்துக்கொண்டு ஒன்றின்மீது மனிதன் நடக்கும்போது ஏற்ப்படும் அங்கஅசைவுகளை வரைந்தார். இன்னொரு தகட்டில் நீளமான துளைகளை இடைவெளிவிட்டு வெட்டினார். இந்த இரு தகடுகளையும் ஒரு அச்சில் வைத்து சுழற்றிக்காட்டினார்.அப்போது மனிதன் விரைந்து நடப்பதுபோல் காணப்பட்டது.

Anchor Cut

அவர் பேசுதல் / Images

1832-ல் ஆஸ்ட்ரியன் சைமன் ஸ்டாம்போ என்பவர் கிட்டத்தட்ட முழுமையான ஓர் உதாரணத்தை Stroboscope வெளியிட்டார்.   இந்த விளையாட்டு சாதனங்கள் மேலும் மேலும்  அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிப்போனபோது அந்த கண்டுபிடிப்புகளின் தரமும் கூடிக்கொண்டேபோனது.

Cinematographer பேசுதல் / Voice Over (பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)

1834-ல் வில்லியம் ஜார்ஜ் ஹார்னர் என்னும் கணித அறிஞர் ஒரு கருவியை கண்டுபிடித்தார். அது Daedalum அல்லது Daedatelum என அழைக்கப்பட்டது. மேற்புறம் திறந்த வட்டவடிவிலான ட்ரம் ஒன்றின் உட்புறத்தின்கீழ் மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் சித்திரங்கள் தொடர்நிலைகளாக வரையப்பட்டிருந்தன. 





ட்ரம்மின் வெளிப்புறம் நீளமாயும் சன்னமாயும் துவாரங்கள் இடப்பட்டன. ட்ரம் சுழலத்தொடங்கியதும் துவாரங்கள் வழியாக சித்திரங்கள் உயிர்பெற்று எழுந்து ஓடின. குதிரைகள் வேலியை தாண்டின. நாட்டியக்காரர்கள் பாலன்ஸ் செய்தனர். பல்லிகள் அசைந்து அசைந்து ஓடின. சித்திரக்குள்ளர்கள் பல்டியடித்து விழுந்தனர்.

இதேகருவி ஃபிரான்சில் 1860 வாக்கில் H.C.கிளார்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவில் ஜீவசுழற்சி (Zoetrope) என்ற பெயரில் விற்பனைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றது.
FIilm Critic  இடைமறித்து பேசுதல். (பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)

வட்டவடிவில் அமைந்த இக்கருவி ஒரு தாங்கியில் சுழலும் வித்த்தில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவியின் உட்புறத்திலும் மனித அசைவுகளை குறிக்கும் பல்வேறு உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. வெளிப்புறம் துளையிடப்பட்டு அது சுழற்றப்படும்போது படங்கள் அசைந்தன.

Anchor Cut

Film Book மற்றும் Magazines மேசைமேல் இருக்க அதில் கையூன்றிக் கொண்டு பேசுதல்.
(பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)

1868ஆம் ஆண்டு வின்செண்ட் என்பவர் கீனோகிராஃப் என்ற ஓர் அமைப்பை கண்டுபிடித்தார். பல சித்திரங்கள் அடங்கிய புத்தக வடிவிலான அமைப்பு அது. அதில் உள்ள ஏடுகளை புரட்டினால் அதன் இயக்கம் தெரியும்.

Cinematographer Cut and Voice Over / Visuals / Images

1877ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த  Emile Reynaud என்பவர் Praxinoscope என்ற கருவியை கண்டுபிடித்தார். இது Zoetrope போலவே இயங்கினாலும், இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எமிலிரேனாட் வடிவமைத்த கருவியில் அசையும் படங்கள் ஒரு கண்ணாடியில் பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது. 

Cinematographer Cut and Voice Over / Visuals / Images

ஆனால் இந்த படங்கள் எல்லாமே விகாரமாக தெரிந்ததுஇந்தக் குறையை போக்கவேண்டுமென்று James Clerk Maxwell என்ற அறிஞர் இதற்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை எல்லாம் ஆராய்ந்து புதியதொரு கருவியை வடிவமைத்தார். அதாவது Praxinoscope-லுள்ள கண்ணாடியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் Zoetrope-லிருந்த Lens-ஐ வைத்தார். இப்போது படங்கள் அகன்றோ, குறைந்தோ தெரியும் குறை நீங்கியது.

Anchor Cut

(பகுதிக் காட்சிகளில் புகைப்படக்கலையின்  வளர்ச்சி குறித்த Slide Show)

இதே நேரத்தில் நிழற்படக்கலை என்னும் புகைப்படக்கலை வளர்ச்சியடைந்த நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் ஒன்றை மற்றொன்று பாதித்தபோது திரைப்படம் தனது குழந்தைப் பருவத்தில் காலடி எடுத்து வைத்தது. 

அதாவது கைகளால் வரையப்பட்ட சித்திரங்களுக்கு பதில் நிழற்படங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால்  நிழற்படக்கலை வளர்ந்தவிதம் ஒரு சுவையான தனிக்கதை. அந்த ஒளிப்படவரலாற்றை அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.

Now this Next Programme in Mayakkannaadi.


(தொடரும்)

மாயக்கண்ணாடி : தமிழ் சினிமாவின் கதை - தொடர் (பகுதி - 4) ஆத்மாநாம்


EPISODE - 03

ஒரு அறையிலிருக்கும்  Screen-ல் ஓடிக்கொண்டிருக்கும்  Film History குறித்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் Anchor அதை விட்டு நகர்ந்து பார்வையாளர் பக்கம் திரும்பி பேசுதல்.

நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!

மாயக்கண்ணாடியின் இந்த 3-வது Episode மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற இரண்டு நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவின் ஆரம்பகால பரிசோதனைகளை கண்டு நீங்கள் வியந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

இந்த நிகழ்ச்சியில் நாம் விஞ்ஞான ரீதியாக சினிமா வளர்ந்த காலகட்டத்தையும், அது ஒரு கலையாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்தையும் பார்க்கப்போகிறோம்.

Voice Over / Visuals / Images

ஆதிமனிதன் தன்னைப்போன்ற உருவங்களையும், தான் காண்கின்ற விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கைகாட்சிகளை பாறைகளிலும், மரங்களிலும், விலங்குகளின் தோல்களிலும் வரைந்து பார்த்தான்.

Anchor மேசைமீது உள்ள ஒரு பழைய கேமராவை பரிசோதித்துக்கொண்டே பேசுதல்.

ஆனால் அந்த உருவங்கள் அவன் நினைத்த அளவிற்கு இயற்கையாக அமையவில்லை. உள்ளதை உள்ளபடியே பதிவு செய்யும் ஒரு கருவிக்காக ஏங்கினான்.

1840-ஆம் ஆண்டு அந்த ஏக்கத்திற்கு விடைகிடைத்தது. ஆமாம்! நிழற்படக்கருவியை அந்த ஆண்டுதான் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கியிருந்தார்.

Voice Over / Images / Part of  Visuals

அசையா நிழற்படங்களை பெற்ற மனிதனின் ஆசை மேலும் பெருகி அதனை அசையவைக்க முடியுமா? என்று மேலும் ஏங்கினான். அந்த அடிப்படையில் உலகின் பல பாகங்களிலும் பற்பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 Anchor Cut

ரோஜட்டின் Magazine Article-ஐ காட்டி பேசுதல்.

அதன்வழியாக பெறப்பட்டதுதான் 1824-ல் Peter Mark Roget என்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பாகிய பார்வை நிலைப்புத்தன்மை என்னும் தத்துவம். என்ன நேயர்களே! தொடங்கிய இடத்துக்கே வருகிறோம் என்று பார்க்கிறீகளா?

Persistence of Vision-ன் ஆரம்ப கர்த்தாக்கள் கிரேக்க ஞானிகளும், ரோமானியக் கவிஞன் லூக்ரிடியஸும் தான். ஆனால் அதனை வலுவான ஒரு தத்துவமாக முன்வைத்தது தான் ரோஜட்டின் தனித்தன்மை.

ரோஜட் சொன்ன தத்துவத்தின் அடிப்படை இதுதான்.

Cameraman or Eye Doctor விளக்குதல்.  

(பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்) 

(முடிந்தால் Cameraman / Eye Doctor / Scientist உடன் Anchor கூட்டு விவாதம்)

அதாவது மனிதக் கண்களின் மீது படும் காட்சிகளை உண்மையான நேரத்திற்கும் அதிகமாக (1/16 வினாடிப்பொழுது) விழிகள் அதனை தக்க வைத்துக்கொள்கிறது. அந்தக் காட்சி மறைவதற்கு முன் விழித்திரையில் அது தொடர்பான மற்றொரு காட்சியை விழச்செய்தால் அது தொடர் காட்சிகளாக அமைந்து காட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து அசைவுகள் ஏற்படுகின்றன. இதுதான் ரோஜட் சொன்ன தத்துவம்.

Anchor / Voice Over

இந்த அசையா நிழற்படங்கள் மாயவிளையாட்டு கருவிகளுக்கு பதில் அசையும் நிழற்படங்களாக பரிணமித்ததுதான் சினிமா பிறந்ததற்கான ஆரம்பகால அடிப்படை.

இனி நாம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம்.

Majic Lantern தொடங்கி Lumiere Brothers வரையிலான Montage

Anchor ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு பேசுதல். ( பகுதிக் காட்சிகள் முழுக் காட்சிகளாக மாறுதல்)

திரைப்படத்தை திரையிட்டு பார்ப்பதற்கு அடித்தளமாக அமைந்த கருவி Majic Lantern ஆகும். ஆனால் இக்கருவி சி.எஸ். கிர்ச்சர் என்பவரால் 17-ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. முதலில் கையால் வரையப்பட்ட படங்களையே Slide காண்பிப்பது போல் காட்டினார்கள். பிற்காலத்தில் புகைப்படக்கலை வளர்ந்தபிறகு அதையே திரையிட்டு காட்டத் தொடங்கினார்கள்.

Film Critic பேசுதல் / Visuals / Images

ஒரு டப்பாவினுள் உள்ள படங்களை வெளியில் அமைந்துள்ள கைப்பிடி மூலம் சுழற்றி முன்புறமாக உள்ள லென்ஸின் வழியாக படங்களை காண்பித்தார்கள். இதற்கு ’பயாஸ்கோப்’ என்று பெயர். இதனை ஜெர்மெனியில் உள்ள மேக்ஸ் மற்றும் எமில் ஸ்கால்டானவ்ஸ்கி எனும் இருவர்தான் உருவாக்கினார்கள். இதேகாலகட்டத்தில் இங்கிலாந்தில்கூட ராபர்ட் டபிள்யூ பால் உருவாக்கிய Vitascope புழக்கத்தில் இருந்துவந்தது.

எட்வர்ட் மைபிரிட்ஜின் குதிரை பறந்த கதை

Still Photographer / Cinmatographer / Film Critic உடன் Anchor  ஒரு சுவையான கூட்டு விவாதம். [இடையிடையே பகுதிகாட்சிகள்/முழுக்காட்சிகள்/ Images]

1877-ஆம் ஆண்டு சினிமாவுக்கே அடித்தளம் இடப்பட்ட, தொடர்நிலை காட்சிகள் அசையும் படங்களாக பரிணமித்த முக்கிய நிகழ்வு ஒன்று நடந்தது. கலிபோர்னியா மாநில கவர்னர் ஸ்டான்ஃபோர்டு ஒருமுறை குதிரைப் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குதிரைகள் பாய்ந்தோடுவதைக் கண்ட மக்கள் ‘குதிரைகள் என்னமாய் பறக்கிறது பார்!’ என்று கூச்சலிட்டனர். அதைக்கேட்ட கவர்னருக்கு ஒரு சந்தேகம் உருவாயிற்று. ’குதிரைகளுக்குதான் இறக்கைகளே கிடையாதே. பின் அது எப்படி பறக்கும்’ என்று.

மறுநாள் கவர்னர் பிரபுக்களின் சபையை கூட்டினார். அதில் ’ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் பறக்குமா?’ என்ற கேள்வியை கேட்டார். பலரும் ’குதிரை எப்படி பறக்கும்? பறக்காது’ என்றே பதிலளித்தார்கள். ஆனால் தெளிந்த அறிவுடைய பிரபு ஒருவர் மட்டும் அதை மறுத்து தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தார். ’மைலாட்.. குதிரைகள் வேகமாக பாய்ந்தோடும்போது அதன் நான்கு கால்களும் தரையில் படாமல் அந்தரத்தில் தோன்றும். அது பார்ப்பதற்கு குதிரைகள் பறப்பதுபோல் இருக்கும்’ என்றார்.

இதனை கேட்ட சபையினர் ‘இவனுக்கு என்ன மூளை கெட்டுவிட்டதா? குதிரைகள் ஒரு காலைக்கூட கீழே வைக்காமல் எப்படி அந்தரத்தில் தோன்றும்?’ என்று கேலி செய்தனர்.

இதனால் குழப்பமும் எரிச்சலும் அடைந்த கவர்னர் எட்வர்டுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். இன்னும் இரண்டு நாட்களுக்குள் கூறிய கருத்தை மெய்ப்பித்தால் சன்மானம் இல்லையேல் சிறைத்தண்டனை. இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரபு துரிதமாக செயல்பட்டார். அப்போது உலகில் ஒளிப்படம் பிடிப்பது புழக்கத்தில் வந்துவிட்ட காலம். பிரபு உடனே சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒளிப்படக்காரர்களை எல்லாம் ஓரிடத்தில் கூட்டி குதிரைகள் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி அந்தரத்தில் பறந்த நிலையில் இருக்குமாறு யார் ஒளிப்படம் எடுக்கிறார்களோ அவருக்கு 1000 பணம் பரிசு என்று அறிவித்தார்.

அதைக்கேட்ட பலரும் அடுத்தநாளே எடுத்து வருவதாக சூளுரைத்து விட்டு சென்றனர். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் கலிபோர்னியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஒளிப்படக்கலைஞரான Eadweard Muybridge. அவரிடம் நிறைய கேமராக்கள் இருந்தன. ஒரு பந்தயக் குதிரையை ஜாக்கியுடன் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, அத ஒரு தளத்தில் ஓடவிட்டு பலமுறை விட்டு விட்டு படம்பிடித்தார்.

எல்லா படங்களிலுமே குதிரையின் கால்கள் தரையில் ஊன்றியே இருந்தது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. அவருக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. நண்பர்களிடம் மேலும் பல கேமராக்களை கடன் வாங்கினார். இப்போது குதிரைகள் ஓடும்பாதையில் பத்தடிக்கு ஒரு ஒரு கேமரா வீதம் வரிசையாக 24 கேமராக்களையும் கம்பை ஊன்றி அதில் கட்டினார். பின்பு ஒவ்வொரு கேமராவின் விசையையும் ஒரு நூலில் இணைத்து அதை பாதையின் குறுக்காக கட்டினார்.

குதிரைகள் ஓடும்போது அதன் மார்பில் நூல் இழுபட்டு நூல் அறுந்து போகும். அப்போது இழுக்கப்படும் நூலால் கேமராவின் விசை தட்டப்பட்டு கேமரா இயங்கி குதிரை ஓடுவதை படம் பிடித்தது.

அந்தப் படத்தை டெவலப் செய்து பார்த்த பிரபு ஆனந்தக் கூத்தாடினார். மொத்தப்படங்களின் ஆறு படங்களில் குதிரை அந்தரத்தில் நான்கு கால்களையும் தூக்கிய நிலையில் இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த 24 ஒளிப்படங்கள் புகழ்பெற்ற பிரிட்டானிகா களஞ்சியத்தில் உள்ளது. பிரபுவிடம் அதைக்காட்டியதும் கவர்னரின் சந்தேகமும் தீர்ந்தது. இருவருக்கும் சன்மானமும் கிடைத்தது.

எட்வர்டு அந்த 24 ஒளிப்படங்களையும் வரிசையாக மேசைமீது வைத்து பார்வையை அதன்மீது ஓடவிட்டார். குதிரை மெல்ல அசைந்து ஓடுவது போன்று பிரமை ஏற்பட்டது. இதுதான் சலனப்படம் என்னும் திரைப்படக்கலை உருவாக பிரதான காரணமாக அமைந்தது.

Anchor  ஒரு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு பேசுதல். 

Voice Over / Visuals / Images 

இப்போது சலனப்படம் எடுக்கப்பட்டுவிட்டது. ஒரேயொரு கேமரா மூலமாகவோ அல்லது தனித்தனியாக பல கேமராக்கள் மூலமாகவோ. ஆனால் படம்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் உணரப்பட்டதும் அதற்கான சோதனைகள் படிப்படியாக நடந்தேறிய வண்ணம் இருந்தது. இதனை ஏற்று செயல்வடிவம் கொடுத்தவர்தான் ஃபிரெஞ்ச் விஞ்ஞானி ஜூல்ஸ் மரே. 


விஞ்ஞானத்திற்காக விலங்குகளின் அசைவினை படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மரே இதனை சாத்தியமாக்க எண்ணி ஒரு துப்பாக்கி மீது கேமராவை பொருத்தினார். துப்பாக்கிகுழலில் லென்சை பொருத்தி. சிலிண்டர் சேம்பரில் உலர்ந்த வட்டத்தகட்டினை வைத்தார். துப்பாக்கிவிசை இழுபடும்போது சிலிண்டரில் சுழற்சி ஏற்பட்டு படம் எடுக்கப்பட்ட்து. ஆனால் மரேயின் கேமரா மூவி கேமரா அல்ல. காரணம் அதில் வினாடிக்கு 16 படங்களை படம் பிடிக்க முடியவில்லை. மரேயின் இந்த சோதனையில் வினாடிக்கு 12 படங்களே பதிவானது. ஆனாலும் மூவிகேமரா கண்டுபிடிப்பில் ஒது ஒரு மைல்கல் என்றே கூறலாம்.



Cameraman Cut

Voice Over / Visuals / Images 

முதன்முதலாக மூவிகேமராவை கண்டுபிடித்தவர் W.K.L.Dickson. இவர் எடிசனிடம் உதவியாராக இருந்தவர். KODAK  நிறுவனத்தில் ஃபிலிமில் எடுக்கப்பட்ட படங்களை பார்த்த அவர் அந்த ஃபிலிமை தனது Kinetograph. மூவிகேமராவில் பயன்படுத்தி படங்களை எடுத்தார். இப்படங்களை காண்பிக்க Kinetoscope எனும் சாதனத்தையும் அவரே கண்டுபிடித்தார். Kinetoscope  துவாரத்தின் வழியாக அசையும் படங்கள் தெரிந்தன. ஆனால் இது பியானோவை விட இருமடங்கு பெரிய அளவில் இருந்த்தால், நகர்த்துவது மிகவும் சிரமமாக இருந்த்து மட்டுமல்லாமல் இதில் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே படம் பார்க்க முடிந்தது.

ஆனால் இந்த சலனப்பட்த்தை பலரும் பார்க்கும் வண்ணம் திரையில் விழச்செய்தவர் சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ். ஐக்கிய அமேரிக்க அரசாங்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளராக பணியாற்றிவந்த இவர்தான் பிற்காலத்தில் 1925-ல் அமெரிக்காவில் வீடியோவை கண்டுபிடித்தவர்.

Anchor Cut

Voice Over / Visuals / Images

1894-ல் இவர் தனது நண்பர்களை வரவழைத்து தனது வீட்டில் மேஜிக் லேண்டர்ன் பொருத்தப்பட்ட புரோஜக்டர் துணையுடன் DANCE GIRL ANNABELLY என்ற படத்தை திரையிட்டுக்காட்டினார். ஒருநிமிடமே ஓடும் அந்தப்படத்தில் ஓர் அழகிய இளம்பென் நடனமாடினாள். இதைக்கண்ட அவரின் நண்பர்கள் அதனை நம்பமறுத்து அவர்களுக்கு தெரியாமல் ஒரு பெண்ணை ஹாலில் ஒளித்துவைத்து ஆடச்செய்த்தாகவும். அவர் ஒரு மோசடிக்காரர் என்றும் குற்றம்சாட்டிச்சென்றனர். சிலபேர் முன் நடந்திருந்தாலும் உலகின் முதல் திரைப்படம் இதுதான். ஆனால் வரலாறு இதனை ஏற்காததற்கு இந்த நிகழ்சி செய்தியாளர்கள் மத்தியில் முறையாக பதிவுசெய்யப்படாததே காரணம்.

Film Critic

Voice Over / Visuals / Images 

ஆனால் இதனை எடிசனின் நண்பர் ஆட்வர்ட் கேள்விபட்டு வறிய நிலையில் இருந்த .ஃபிரான்சிஸ் இடமிருந்து அந்தக்கருவியையும், அதன் உரிமைகளையும் 2500 டாலர்கள் விலைக்கு வாங்கிச்சென்றார். அதனை எடிசனிடம் காட்டாவரும் வியந்து அந்தக்கருவியில் இன்னும் சில முன்னேற்றங்களை செய்தார். அதாவது ஃபிலிம் சீராக சுழல்வதற்காக அதன் ஓரத்தில் துளையிட்டார் ஃபிலிம் அளவு 35 மி.மீ என்று நிர்ணயம் செய்தார். இந்தமுறைதான் ஃபிலிம் புரோஜடர் இருக்கும் நாள்வரை பின்பற்றப்பட்டு வந்தது.

இந்தப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த காரணத்தால் தனது அறிவியல் கூடத்திற்கு அருகிலேயே இப்படங்களை தயாரிக்கும் ஸ்டுடியோ ஒன்றை அமைத்தார். உலகின் முதல் ஸ்டுடியோவான இதன் பெயர் பிளாக் மரியா. படம் காண்பிக்கப்பட்ட முதல் திரைப்பட அரங்கு நிக்கோலிடியன் தியேட்டர் என்று அழைக்கப்பட்ட்து.



Cameraman Cut

Voice Over / Visuals / Images 

இப்படி படம் பிடிக்கப்பட்ட படங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது பிஃரட் ஓட்ஸ் தும்மும் காட்சிதான். இதனை எடிசனின் உதவியாளரும். அவரின் கேமராமேனுமாகிய டிக்‌ஷன் மிக அற்புதமாக படமாக்கியிருந்தார். இப்படம் வினாடிக்கு 46 பிரேம்கள் ஓடின. இவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு கிடைத்ததால் எடிசன் மேலும் பல படங்களை எடுத்தார். ஆனால் இதில் முக்கிய குறைபாடு என்னவென்றால் இந்த படங்கள் யாவுமே வினாடிக்கு 40-46 என்ற கணக்கில் ஓடின.

Anchor Cut

எடிசனும் அக்கருவியில் மேலும் சில முன்னேற்றங்களை செய்து உலகின் முதல் திரைப்படத்தை அரங்கேற்றிவிடலாம் என்று முனைந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே முந்திகொண்டனர் லூமியர் சகோதரர்கள்.

A New Entry Film World in Lumiere Brothers 

Watch in Next Programme


(தொடரும்)

மாயக்கண்ணாடி : தமிழ் சினிமாவின் கதை - தொடர் (பகுதி - 2) ஆத்மாநாம்


நிகழ்ச்சிப் பகுப்பு (PROGRAMME SEGMENT)

EPISODE - 01

மாயக்கண்ணாடி Montage

அரங்கம் ஒன்றின் உள்ளிருக்கும் Steps வழியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் இறங்கி வருதல். ஒரு அறைக்குள் அந்த Steps முடிவடைந்ததும் அங்கிருக்கும் நீளமான மேசைமுன் வந்து நிற்கிறார். அங்கிருக்கும் புராதன பொருட்களை நிதானமாக அளவிடுகிறார். மேசையின் மீது தனது பார்வையை செலுத்துகிறார். அங்கு ஒரு பத்திரிகை செய்தியில் Article ஒன்று படங்களுடன் வெளியாகியிருக்கிறது. அதில் Cinema is a Synthetic Art என்று இருக்கிறது. தொகுப்பாளர் நிமிர்ந்து பார்வையாளர்களை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்.

நேயர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் !

மாயக்கண்ணாடி என்ற நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சினிமாவை நேசிப்பவள் என்ற முறையில் அதன் வரலாறு குறித்து பேசுவது எனக்கு பிடித்தமான விஷயமும் கூட. மாயக்கண்ணாடி தமிழ் சினிமாவின் கதை என்ற இந்த நிகழ்ச்சித்தொடர் சொல்லச்சொல்ல குறையாத பல சுவாரசியமான தகவல்களை கொண்டது. ஆம் ! இந்த நிகழ்ச்சி உலக சினிமாவிலிருந்து நமது உள்ளூர் சினிமா வரையில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.

அதைப்பற்றி விரிவான ஓர் அறிமுகம். 

Film History பற்றிய Timeline Documentary காட்டப்படுதல். இந்த Episode-ல் இடம்பெறப்போகும் விஷயங்களை உள்ளடக்கிய Visuals (Episode-க்கான Promo)

Anchor Cut

(ஒரு நாற்காலியில் அமர்ந்து தொகுப்பாளர் பேசுதல்) 

பொதுவாக எந்த ஒரு கலையைப்பற்றி பேசினாலும் நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் திரைப்படம் குறித்து பேச வரும்போது நாம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை. ஒரு நூறு ஆண்டுகள் பின் சென்று பார்த்தாலே போதும். அதன் தோற்றநிலை, படிநிலை ரீதியான அதன் வளர்ச்சி என அனைத்தும் தெரிந்துவிடும். திரைப்படம் தோன்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த கலைவடிவம் நூறு ஆண்டுகளுக்கு உள்ளாகவே நம் கண்முன்னே விஸ்வரூபமாக மாறி எழுந்து நிற்கிறதென்றால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

ஒருவகையில் விஞ்ஞான ரீதியாக அதன் அசுர வளர்ச்சி இன்று உலகையே கட்டிப் போடிருக்கிறது என்று கூட சொல்லலாம். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நன் ஒவ்வொருவருக்குள்ளும் சினிமா இருக்கிறது. சினிமாவுக்குள் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். திரைப்படக்கலை பொழுதுபோக்கு சாதனமாக இருந்த நிலை மாறி அது ஒரு மாபெரும் தொழிலாக மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது. 



இன்று நாம் காணும் திரைப்படத் தொழில் என்பது ஓவியம், ஒப்பனை, ஆடை, அலங்காரம், அணிமணிகள், ஆடல், பாடல், இசை, பாடுவோர், நடிப்போர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பல நூறு பேர்களின் கூட்டு முயற்சி. ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்துவிட்டு சந்தோஷமான மனநிலையோடு வெளியேவரும் நாம் அந்த அருமையான திரைப்படத்தை உருவாக்க அரும்பாடு பட்டவர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அவ்வளவு ஏன்? தொழில்நுட்பரீதியாக அதன் வளச்சி எப்படிப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ளக்கூட முயல்வதில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய அந்த திரைப்படம் எனும் கலை தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை சுவைபடச் சொல்லப்போகும் நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் இந்த மாயக்கண்ணாடி. தமிழ் சினிமாவின் கதை.

இனி நாம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம். 

Voice Over / Visuals / Images

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 65-ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டை சேர்ந்த லூக்ரிடியஸ் என்ற கவிஞன் சிந்தனை செய்தும், சோதித்துப் பார்த்தும் ஓர் உண்மையை சொன்னான். அவன் சொன்ன உண்மை இது தான். “ நாம் ஒரு பொருளை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுமானால் அந்தப்பொருள் உடனே மறைவதில்லை. கொஞ்சம் தாமதமாக மறைகிறது.”



Anchor Cut

தொகுப்பாளர் எழுந்து ஒரு  Glass Board பக்கம் வருகிறார். அவர் கையால் சுண்டிவிட Virtual Screen-ல் Visuals & Images பகுதிக் காட்சிகளாக வருகிறது.

Anchor Cut

கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் தொடங்கி லியனார்டோ டாவின்சி வரை இதை ஏற்கனவே சிந்தித்திருந்தாலும், இந்தக் கருத்தை ஆழமாக முன்வைத்தது லூக்ரிடியஸ் தான்.




Discovery Interview

Anchor Cut

ஆனால் இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவெறால் அந்தப்பொருள் தாமதமாக மறையும் கால அளவை லூக்ரிடியஸ் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டுக் கூறியது தான். அதாவது அந்தப்பொருள் நம் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் வினாடிக்கு 16-ல் ஒரு பங்கு கால அளவு அது நம் கண்களில் தங்கியிருக்கிறது. 

மீன்களுக்கு இமைகள் இல்லை என்பது தெரியுமா? மனிதக் கண்களின் இமைக்கும் பண்பினால் தான் நம்மால் சினிமாவை பார்க்க முடிகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நமக்கு மட்டும் இமைகள் இல்லாமல் இருந்திருந்தால் சினிமா என்னும் கலையும் பிறந்திருக்காது. நம்மால் சினிமாவை பார்க்கவும் முடிந்திருக்காது. திரைப்படம் பிறப்பதற்கு ஆதார சுருதியாக இருந்தது மனிதக் கண்களின் இந்த விசேஷ பண்பு தான். இதைத்தான் Persistence of Vision என்கிறோம். பார்வை நிலைப்புத் தன்மை அல்லது காட்சி காக்கும் திறன் என்று இதையே சொல்கிறார்கள். நம் கண்களுக்கு இயல்பாய் அமைந்த இந்த பண்பை புரிந்து கொள்ள கண்களுக்கேயுரிய அடிப்படை அம்சங்களை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.



Eye Doctor மற்றும் இதனுடன் தொடர்புடைய Cinematographer என்ற இருவர் மூலம் இதனை தெளிவுபடுத்திக்கொண்டு மேலே நாம் செல்லலாம்.

Eye Doctor Expalain / Part of Visuals 

கண்களின் கருப்பு வட்டத்தின் மையத்திலுள்ள புள்ளி கண்மணி. இதன் நடுவே உள்ள நுண்ணிய துளை வெளிச்சம் மிகும்போது சுருங்கியும், குறையும்போது விரிந்தும் அளவிற்கு ஏற்ப இயங்கும் தன்மையுடையது. ஆங்கிலத்தில் இதனை IRIS என்பர். அதன் பின்னே கருவிழியின் உட்பகுதியில் விழிலென்ஸ் அமைந்துள்ளது. அதுதான் நாம் காணும் காட்சியை சரியான வடிவம், வண்ணம் என்ற அளவில் உள்வாங்கி அதன் பின்னே உள்ள விழித்திரையில் பதிவு செய்கிறது. விழித்திரையோடு ஓடி அமைந்த பார்வை நரம்புகள் அந்தக் காட்சியின் அளவு மற்றும் அசைவுகளை மூளைக்கு எடுத்துச்சென்று உணர்த்துகின்றன.

Cinematographer / Part of Visuals



ஒருவகையில் கண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது தான் ஒளிப்படக் கேமரா (Still Camera). விழிலென்ஸ் போலவே கேமராவிலும் லென்ஸ் உண்டு. லென்ஸின் பின்னே ஒளித்துளை உண்டு. அந்த ஒளித்துளையை ஒளியின் அளவுக்கு ஏற்ப சுருங்கவும், விரிவாக்கவும் முடியும். கேமராவின் ஒளித்துளைக்கு Iris, Aperture, Diaphagm என்ற வேறு பெயர்களும் உண்டு. பொருளின் மீது ஒளி விழுந்ததும் லென்ஸ் ஒளித்துளை வழியாக Focus செய்து அந்த பிம்பத்தை கேமராவின் உள்ளேயுள்ள ஃபிலிமில் குவிக்கும். நாம் Click பட்டனை அழுத்தியதும், ஒளித்துளைஅயை மூடியிருக்கும் Shutter திறந்து பிம்பம் உள்ளே உள்ள ஃபிலிமில் சென்று பதியும்.

ஒளிப்படக் கேமராவுக்கும் திரைப்படக் கேமராவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் Still Camera-வில் படத்தை 24 Frame வீதம் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கலாம். 

Anchor Cut 

கண்களுக்குரிய அடிப்படை பண்புகளை வைத்து உருவாக்கப்பட்டது தான் ஒளிப்படக் கேமரா. அதன் விசேஷ இமைக்கும் பண்பின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது திரைப்படக் கேமரா. அதன் முக்கிய காரணியாக விளங்கியது தான் Persistence of Vision.

Voice Over

ரோமானியக் கவிஞன் லூக்ரிடியஸ் சொன்ன இந்த கருத்தை 200 ஆண்டுகள் கழித்து டாலமி என்ற வானவியல் அறிஞனும் வலியிறுத்திக் கூறினான். அதோடு நிற்காமல் ஒரு சோதனையையும் செய்து காட்டினான்.



Visuals

வட்டவடிவமான ஒரு அட்டையை எடுத்துக்கொண்டு அதன் விளிம்பில் ஒரு புள்ளியிட்டு, பின் அட்டையின் மையத்தில் துளையிட்டு, அதில் ஒரு கம்பியை நுழைத்து சுழற்றிக் காண்பித்தான். அப்போது அட்டையின் மையத்தில் இருந்த புள்ளி வட்டமாக தெரிந்தது.



Visuals Frame-ன் ஒரு பக்கமாக நகர்ந்து கொள்ள Anchor Prsistence of Vision Image பின்னணியில் நின்று பேசுதல். கண்களுக்குள்ள காட்சி காக்கும் திறனால் தான் அந்தப்புள்ளி வட்டவடிவமாக தெரிந்தது. அதன்பின்பு பல்வேறு நாடுகளில் பலரும் இதை வைத்து எண்ணற்ற மாய விளையாட்டுக் கருவிகளை உருவாக்கத் தொடங்கினர். மாய விளையாட்டுக்களின் காலம் தொடங்கியது.



Now in Next Programme Majic Lantern Period.

நன்றி ! வணக்கம் !!

(தொடரும்)

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...