Sunday 4 February 2018

மாயக்கண்ணாடி : தமிழ் சினிமாவின் கதை - தொடர் (பகுதி - 2) ஆத்மாநாம்


நிகழ்ச்சிப் பகுப்பு (PROGRAMME SEGMENT)

EPISODE - 01

மாயக்கண்ணாடி Montage

அரங்கம் ஒன்றின் உள்ளிருக்கும் Steps வழியாக நிகழ்ச்சித் தொகுப்பாளர் இறங்கி வருதல். ஒரு அறைக்குள் அந்த Steps முடிவடைந்ததும் அங்கிருக்கும் நீளமான மேசைமுன் வந்து நிற்கிறார். அங்கிருக்கும் புராதன பொருட்களை நிதானமாக அளவிடுகிறார். மேசையின் மீது தனது பார்வையை செலுத்துகிறார். அங்கு ஒரு பத்திரிகை செய்தியில் Article ஒன்று படங்களுடன் வெளியாகியிருக்கிறது. அதில் Cinema is a Synthetic Art என்று இருக்கிறது. தொகுப்பாளர் நிமிர்ந்து பார்வையாளர்களை நோக்கி பேச ஆரம்பிக்கிறார்.

நேயர்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் !

மாயக்கண்ணாடி என்ற நிகழ்ச்சியின் மூலம் உங்களை சந்திப்பதில் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சினிமாவை நேசிப்பவள் என்ற முறையில் அதன் வரலாறு குறித்து பேசுவது எனக்கு பிடித்தமான விஷயமும் கூட. மாயக்கண்ணாடி தமிழ் சினிமாவின் கதை என்ற இந்த நிகழ்ச்சித்தொடர் சொல்லச்சொல்ல குறையாத பல சுவாரசியமான தகவல்களை கொண்டது. ஆம் ! இந்த நிகழ்ச்சி உலக சினிமாவிலிருந்து நமது உள்ளூர் சினிமா வரையில் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது.

அதைப்பற்றி விரிவான ஓர் அறிமுகம். 

Film History பற்றிய Timeline Documentary காட்டப்படுதல். இந்த Episode-ல் இடம்பெறப்போகும் விஷயங்களை உள்ளடக்கிய Visuals (Episode-க்கான Promo)

Anchor Cut

(ஒரு நாற்காலியில் அமர்ந்து தொகுப்பாளர் பேசுதல்) 

பொதுவாக எந்த ஒரு கலையைப்பற்றி பேசினாலும் நாம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கும். ஆனால் திரைப்படம் குறித்து பேச வரும்போது நாம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டியதில்லை. ஒரு நூறு ஆண்டுகள் பின் சென்று பார்த்தாலே போதும். அதன் தோற்றநிலை, படிநிலை ரீதியான அதன் வளர்ச்சி என அனைத்தும் தெரிந்துவிடும். திரைப்படம் தோன்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த கலைவடிவம் நூறு ஆண்டுகளுக்கு உள்ளாகவே நம் கண்முன்னே விஸ்வரூபமாக மாறி எழுந்து நிற்கிறதென்றால் நம்ப முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. 

ஒருவகையில் விஞ்ஞான ரீதியாக அதன் அசுர வளர்ச்சி இன்று உலகையே கட்டிப் போடிருக்கிறது என்று கூட சொல்லலாம். நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நன் ஒவ்வொருவருக்குள்ளும் சினிமா இருக்கிறது. சினிமாவுக்குள் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். திரைப்படக்கலை பொழுதுபோக்கு சாதனமாக இருந்த நிலை மாறி அது ஒரு மாபெரும் தொழிலாக மக்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்டது. 



இன்று நாம் காணும் திரைப்படத் தொழில் என்பது ஓவியம், ஒப்பனை, ஆடை, அலங்காரம், அணிமணிகள், ஆடல், பாடல், இசை, பாடுவோர், நடிப்போர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்ற பல நூறு பேர்களின் கூட்டு முயற்சி. ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்துவிட்டு சந்தோஷமான மனநிலையோடு வெளியேவரும் நாம் அந்த அருமையான திரைப்படத்தை உருவாக்க அரும்பாடு பட்டவர்களை நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அவ்வளவு ஏன்? தொழில்நுட்பரீதியாக அதன் வளச்சி எப்படிப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ளக்கூட முயல்வதில்லை. உலகின் எங்கோ ஒரு மூலையில் தோன்றிய அந்த திரைப்படம் எனும் கலை தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை சுவைபடச் சொல்லப்போகும் நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் இந்த மாயக்கண்ணாடி. தமிழ் சினிமாவின் கதை.

இனி நாம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம். 

Voice Over / Visuals / Images

கிறிஸ்து பிறப்பதற்கு முன் 65-ஆம் நூற்றாண்டில் ரோம் நாட்டை சேர்ந்த லூக்ரிடியஸ் என்ற கவிஞன் சிந்தனை செய்தும், சோதித்துப் பார்த்தும் ஓர் உண்மையை சொன்னான். அவன் சொன்ன உண்மை இது தான். “ நாம் ஒரு பொருளை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அது மறைந்து விடுமானால் அந்தப்பொருள் உடனே மறைவதில்லை. கொஞ்சம் தாமதமாக மறைகிறது.”



Anchor Cut

தொகுப்பாளர் எழுந்து ஒரு  Glass Board பக்கம் வருகிறார். அவர் கையால் சுண்டிவிட Virtual Screen-ல் Visuals & Images பகுதிக் காட்சிகளாக வருகிறது.

Anchor Cut

கிரேக்க ஞானி அரிஸ்டாட்டில் தொடங்கி லியனார்டோ டாவின்சி வரை இதை ஏற்கனவே சிந்தித்திருந்தாலும், இந்தக் கருத்தை ஆழமாக முன்வைத்தது லூக்ரிடியஸ் தான்.




Discovery Interview

Anchor Cut

ஆனால் இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னவெறால் அந்தப்பொருள் தாமதமாக மறையும் கால அளவை லூக்ரிடியஸ் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கிட்டுக் கூறியது தான். அதாவது அந்தப்பொருள் நம் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் வினாடிக்கு 16-ல் ஒரு பங்கு கால அளவு அது நம் கண்களில் தங்கியிருக்கிறது. 

மீன்களுக்கு இமைகள் இல்லை என்பது தெரியுமா? மனிதக் கண்களின் இமைக்கும் பண்பினால் தான் நம்மால் சினிமாவை பார்க்க முடிகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? நமக்கு மட்டும் இமைகள் இல்லாமல் இருந்திருந்தால் சினிமா என்னும் கலையும் பிறந்திருக்காது. நம்மால் சினிமாவை பார்க்கவும் முடிந்திருக்காது. திரைப்படம் பிறப்பதற்கு ஆதார சுருதியாக இருந்தது மனிதக் கண்களின் இந்த விசேஷ பண்பு தான். இதைத்தான் Persistence of Vision என்கிறோம். பார்வை நிலைப்புத் தன்மை அல்லது காட்சி காக்கும் திறன் என்று இதையே சொல்கிறார்கள். நம் கண்களுக்கு இயல்பாய் அமைந்த இந்த பண்பை புரிந்து கொள்ள கண்களுக்கேயுரிய அடிப்படை அம்சங்களை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.



Eye Doctor மற்றும் இதனுடன் தொடர்புடைய Cinematographer என்ற இருவர் மூலம் இதனை தெளிவுபடுத்திக்கொண்டு மேலே நாம் செல்லலாம்.

Eye Doctor Expalain / Part of Visuals 

கண்களின் கருப்பு வட்டத்தின் மையத்திலுள்ள புள்ளி கண்மணி. இதன் நடுவே உள்ள நுண்ணிய துளை வெளிச்சம் மிகும்போது சுருங்கியும், குறையும்போது விரிந்தும் அளவிற்கு ஏற்ப இயங்கும் தன்மையுடையது. ஆங்கிலத்தில் இதனை IRIS என்பர். அதன் பின்னே கருவிழியின் உட்பகுதியில் விழிலென்ஸ் அமைந்துள்ளது. அதுதான் நாம் காணும் காட்சியை சரியான வடிவம், வண்ணம் என்ற அளவில் உள்வாங்கி அதன் பின்னே உள்ள விழித்திரையில் பதிவு செய்கிறது. விழித்திரையோடு ஓடி அமைந்த பார்வை நரம்புகள் அந்தக் காட்சியின் அளவு மற்றும் அசைவுகளை மூளைக்கு எடுத்துச்சென்று உணர்த்துகின்றன.

Cinematographer / Part of Visuals



ஒருவகையில் கண்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டது தான் ஒளிப்படக் கேமரா (Still Camera). விழிலென்ஸ் போலவே கேமராவிலும் லென்ஸ் உண்டு. லென்ஸின் பின்னே ஒளித்துளை உண்டு. அந்த ஒளித்துளையை ஒளியின் அளவுக்கு ஏற்ப சுருங்கவும், விரிவாக்கவும் முடியும். கேமராவின் ஒளித்துளைக்கு Iris, Aperture, Diaphagm என்ற வேறு பெயர்களும் உண்டு. பொருளின் மீது ஒளி விழுந்ததும் லென்ஸ் ஒளித்துளை வழியாக Focus செய்து அந்த பிம்பத்தை கேமராவின் உள்ளேயுள்ள ஃபிலிமில் குவிக்கும். நாம் Click பட்டனை அழுத்தியதும், ஒளித்துளைஅயை மூடியிருக்கும் Shutter திறந்து பிம்பம் உள்ளே உள்ள ஃபிலிமில் சென்று பதியும்.

ஒளிப்படக் கேமராவுக்கும் திரைப்படக் கேமராவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் Still Camera-வில் படத்தை 24 Frame வீதம் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்கலாம். 

Anchor Cut 

கண்களுக்குரிய அடிப்படை பண்புகளை வைத்து உருவாக்கப்பட்டது தான் ஒளிப்படக் கேமரா. அதன் விசேஷ இமைக்கும் பண்பின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது திரைப்படக் கேமரா. அதன் முக்கிய காரணியாக விளங்கியது தான் Persistence of Vision.

Voice Over

ரோமானியக் கவிஞன் லூக்ரிடியஸ் சொன்ன இந்த கருத்தை 200 ஆண்டுகள் கழித்து டாலமி என்ற வானவியல் அறிஞனும் வலியிறுத்திக் கூறினான். அதோடு நிற்காமல் ஒரு சோதனையையும் செய்து காட்டினான்.



Visuals

வட்டவடிவமான ஒரு அட்டையை எடுத்துக்கொண்டு அதன் விளிம்பில் ஒரு புள்ளியிட்டு, பின் அட்டையின் மையத்தில் துளையிட்டு, அதில் ஒரு கம்பியை நுழைத்து சுழற்றிக் காண்பித்தான். அப்போது அட்டையின் மையத்தில் இருந்த புள்ளி வட்டமாக தெரிந்தது.



Visuals Frame-ன் ஒரு பக்கமாக நகர்ந்து கொள்ள Anchor Prsistence of Vision Image பின்னணியில் நின்று பேசுதல். கண்களுக்குள்ள காட்சி காக்கும் திறனால் தான் அந்தப்புள்ளி வட்டவடிவமாக தெரிந்தது. அதன்பின்பு பல்வேறு நாடுகளில் பலரும் இதை வைத்து எண்ணற்ற மாய விளையாட்டுக் கருவிகளை உருவாக்கத் தொடங்கினர். மாய விளையாட்டுக்களின் காலம் தொடங்கியது.



Now in Next Programme Majic Lantern Period.

நன்றி ! வணக்கம் !!

(தொடரும்)

No comments:

Post a Comment