Tuesday 13 February 2018

மரண முக்கோணம் : பெர்முடா தீவு மர்மங்கள் (EPISODE - 2)


வானம் வசப்படும்

Science and  Information Programme


மரண முக்கோணம் : பெர்முடா தீவு மர்மங்கள்

Episode  - 2


Anchor Cut

நேயர்கள் அனைவருக்கும் வானம் வசப்படும் என்ற அறிவியல் மற்றும் பல்சுவை நிகழ்ச்சியின் முதல் வணக்கம் !

சென்ற வாரம் பெர்முடா முக்கோணம் குறித்த பல சுவாரசியமான தகவல்களையும், வியக்கத்தக்க காட்சிகளையும் பார்த்து ரசித்திருப்பீர்கள். அதன் இரண்டாம் அத்தியாயமான இன்றைய நம் நிகழ்ச்சியில் மரண முக்கோணம் பற்றி மேலும் அதிகமான விவரங்களை தெரிந்துகொள்ள நாம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம்.

Programme Title (வானம் வசப்படும்)

Anchor Cut

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீதொலைவில் உள்ளது மியாகேதீவுஇப் பகுதியில் தான் இருக்கிறதுஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என அழைக்கப்படும் பிசாசின் கடல்கேட்டாலே அதிர வைக்கும் பெயர்இந்த டிராகன்முக்கோணத்தின் வழியாக சென்றவர்கள் யாரும் என்னஆனார்கள்என்று இதுவரை தெரியவரவேயில்லை.

1954ம்1952- ஆம்ஆண்டு காலகட்டத்தில் பிசாசுக்கடல் வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்களளின் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறதுஅந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் ஒன்றுமே தெரியவில்லைஇதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர்அவர்களின் கதியும் என்ன ஆயிற்று என்று தெரிய வரவேயில்லை.


Episode Promo


Voice Over

உலக உருண்டையில் பெர்முடா முக்கோணத்தின் மேற்புறம் உள்ள பகுதி தான் இந்த ஜப்பான் நாட்டின் தென்கிழக்கு கடற்கரைப் பகுதி. இந்தப்பக்கம் பெர்முடாமுக்கோணம் என்றால், அந்தப்பக்கம்  டிராகன் முக்கோணம். 

பிசாசுக் கடல் என்று அழைக்கப்படும் அந்தப் பகுதியிலும் பல கப்பல்கள் மாயமாய்மறைந்துபோயிருக்கின்றன. இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும்அதேபோல் திடீர் திடீரென தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.


Dragon Myth Montage

இதற்கெல்லாம் காரணம் நெருப்பை கக்கும் டிராகன்கள்தான் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள்அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர்டிரகன்களைபற்றி அவர்கள் கூறுவது நம்புவதற்கே ஆச்சர்யமாக உள்ளது ‘‘மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தனஅந்த இனம் அழிந்துவிட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறதுமியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றனதங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லைஅந்த வழியாக வரும் கப்பல்கள்படகுகளை அழிக்கின்றன.’’

 Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)



இப்ப இந்த பூமி என்பது ஒரு சுழலும் பந்து. அது வேகமாகவும் சுழலுது. அப்ப அது வேகமா சுழல்கிற போது அது தன்னைத்தானே இயக்கிக்க என்னென்ன செய்யுதுன்னு அறிவியல் பூர்வமா பாக்கறப்போ சில பகுதிகள்ள புவி ஈர்ப்பு விசை அதிகமா இருக்கு. சில பகுதிகளில் புவி ஈர்ப்பு சக்தி குறைவா இருக்கு. சில பகுதிகளில் கடலோட பள்ளத்தாக்குகள் அதிகமா இருக்கு. சில இடங்களில் கடலுக்கு மேல ஆழம் குறைவா இருக்கு. இதையெல்லாம் பாக்கறப்போ உலகத்தையே Control பண்ற விஷயமா 12 பகுதிகள் இருக்கு. இந்த 12 பகுதிகள் தான் இப்ப இந்த பெர்முடா முக்கோணம் என்று சொல்லக்கூடிய பகுதியில் அந்த புனை கதைகள் வாழக்கூடிய பகுதியும் இதே பகுதியா இருக்கு.

Anchor Cut

ஒரு பெர்முடா முக்கோணத்தையே தாங்க முடியவில்லை, இதில் இன்னொரு பெர்முடாவா என்று நீங்கள் ஆச்சரியப்படுவது நன்றாகவே தெரிகிறது. ஆனால் மரங்கள் வெறுமனே இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை. நாம் வாழும் பூமியின் புதிர்களும் அப்படித்தான். பெர்முடா முக்கோணம் மற்றும் டிராகன் முக்கோணம் போலவே கடற்பரப்பில் இன்னும் 12 பிரதேசங்கள் இருப்பதாகவும், அதில் 6 பிரதேசங்கள் அபாயகரமானவை என்றும், அதில் முக்கியமானது தான் நாம் மேலே சொன்ன இரண்டு முக்கோணங்கள் என்றும், மீதமுள்ள பிரதேசங்கள் எப்போது வேண்டுமானாலும் நம் தூக்கத்தை கெடுக்கலாம் என்றும், லண்டனிலிருந்து வரும் ‘சாகா’ என்ற இதழில் இவான் டி. சாண்டர்சன் என்ற ஆராய்சியாளர் குறிப்பிட்டுள்ளார். 

Voice Over


சரியாக திட்டமிட்ட போர் நடவடிக்கைகள் மூலமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்கக்கூடும். பல கப்பல்கள் மூழ்கியதற்கு  உலகப் போர்களின் நீர்மூழ்கி கப்பல்களே காரணம் என்று அதிகாரப்பூர்வமாக பல புத்தகங்களில் பதிவாகியிருக்கிறது. 

மேலும் கப்பல்களும், விமானங்களும் காணாமல் போவதற்கு கடற்கொள்ளையர்களும் காரணமாக இருக்கலாம். கரீபியன் பகுதிகளில் கடற்கொள்ளை என்பது அடிக்கடி நடக்கும் சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்து வந்திருக்கிறது.

 Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்) 

பெர்முடா முக்கோணத்தில் தொலைந்துபோன கப்பல்களும், விமானங்களும் எங்கே போனது என்று எல்லோருக்கும் கேள்வி இருக்கும். ஆனால் இந்த கடல் நீரோட்டத்தின் அடிப்படையில் பாக்கறப்போ ஒரு இடத்தில் விழுந்த பொருள் அதே இடத்துல இருக்கனும்னு அவசியம் கிடையாது. ஏன்னா இதுல அமெரிக்கா பகுதி ஆழம் குறைவான பகுதியாகவும், பெர்முடாவுக்கு பின்பக்கமா இருக்கற பகுதி ஆழம் அதிகமா இருக்கறதால இங்க விழுந்த பொருட்கள் அங்கிருந்து 1000 கிலோமீட்டரோ இல்ல 1000 மைல்களோ தள்ளிப்போய் இருக்க, அதாவது ஆழம் அதிகமான பகுதியில அந்த கப்பல்கள் இருக்க வாய்ப்பிருக்கு.

Voice Over

அது மட்டுமல்லாமல் விமானங்களும், கப்பல்களும் காணாமல் போவதற்கு மனிதர்கள் வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ செய்யும் தவறுகளே காரணமாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்) 

இதெல்லாம் கவனிக்கறப்ப இந்த விபத்துகள் நடந்த எல்லா காலமும் நவம்பர் மாதத்தில் இருந்து பிப்ரவரிக்குள்ள இருக்கு. குறிப்பா வான்வெளி விபத்துகள் எல்லாமே டிசம்பர் மாதத்தில் நடந்திருக்கு. அப்ப இதை கணக்கிட்டு பாக்கறப்போ அப்ப அந்த இடத்துல இருக்கக்கூடிய கடலடி அகழிகள், அங்க இருக்கக்கூடிய கடல் சூழலியல், அங்கிருக்கிற தட்பவெப்ப சூழ்நிலை, அங்க இருக்கக்கூடிய நீர்ச்சுழல்கள் எல்லாமே ஒரு காரணமா இருக்கு. இதை அறிவியல் முறையில் பார்த்தோமானால் பல புதிய தரவுகள் கிடைக்க வாய்ப்பிருக்கு.

Voice Over

அது மட்டுமல்லாமல் இது போன்ற நிகழ்வுகளில் கூறப்படும் இன்னொரு முக்கிய காரணம் திசைகாட்டி குழப்பங்கள். அதாவது பெர்முடா கோட்டுக்குள் எது சென்றாலும் அதன் திசைகாட்டி முட்கள் தலைகீழாக சுற்ற ஆரம்பித்து விடுகின்றன. அளவுக்கதிகமான மின்காந்த அலைகளால் கடிகார முட்களில் குழப்பம் ஏற்பட்டு இவை நடந்திருக்கக் கூடும் என்பது சில ஆய்வாளர்கள் கருத்து. ஆனால் அத்தகைய அலைகள் எதுவும் இருப்பதாக இதுவரை அறியப்படவில்லை. பெர்முடா முக்கோணம் போன்ற ஒரு பெரும் பகுதியில் திசைகாட்டி ’மாறுவதில்’ ஏதோ மர்மம் இருப்பதாகவே மக்கள் நினைக்கிறார்கள்.

Campus Montage

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்) 

இப்ப மிகைப்படுத்துதல் என்பது வரலாற்றில் காலம் காலமாகவே இருக்கு. ஒரு சின்ன சின்ன விஷயங்கள கூட மிக பிரம்மாண்டமா பேசுவாங்க. அப்படி இருக்கறப்ப பொதுவா நம்ம இந்திய நாட்டுல இருக்கற கதைகள விட மேற்கு நாடுகளோட கதைகள் ரொம்ப மிகைப்படுத்தப்பட்டதா இருக்கும். அத ஊடகம் மூலமா வெளிப்படும்போது இன்னும் அளவுக்கதிகமா இருக்கும். அப்படித்தான் இந்த பெர்முடா முக்கோணத்த பத்தி சொல்லப்பட்ட கதைகள் ரொம்ப அதிகமா இருக்கு. இந்த மாதிரி மிரளக்கூடிய விஷயங்கள், மர்மமான விஷயங்கள் பால் நமக்கு எப்படி ஈர்ப்பு வருதுன்னா நாம பேய், பிசாசுன்னு பேசறமே அந்த மாதிரி பெர்முடா முக்கோணத்தில அதிகமா நடந்திருக்கு. ஏன்னா தொலைந்துபோன கப்பல்கள் மற்றும் விமானங்கள் உண்மை தான். ஆனால் அது எந்த அடிப்படையில் தொலைந்து போனது என்பதற்கு புராணக் கதைகள் தான் அதிகமாயிருக்கிறதே தவிர வாழ்வியல் அடிப்படையில ஒரு Research பண்ணி இந்த கப்பல் இந்த காரணத்தினால காணாம போயிருக்குன்னு சொல்லக்கூடிய அளவுக்கு இன்னமும் மக்கள் கிட்ட அந்த நம்பிக்கை வரல.

Anchor cut

இப்படிப் பலர் பல காரணங்களை கூறினாலும் ஆய்வாளர்களில் ஒரு சிலர் இந்த தொல்லைகளுக்கெல்லாம் காரணம் கரையோரப்பகுதி அடுக்குகளில் படிந்துள்ள மீத்தேன் ஹைட்ரேட் தான் என்றும்,அவை நீரின் அடர்த்தியை குறைப்பதால் ஒரு கப்பலைக் கூட மூழ்கடிக்கச் செய்ய முடியும் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.  ஆனால் இதேபோல் மீத்தேன் ஹைட்ரேட்டுகள் உள்ள மற்ற கடல் பகுதிகளில் பெர்முடா முக்கோணம் போன்ற சம்பவங்கள் ஏன் நிகழவில்லை என்பதும் மற்றொரு சாரார் கருத்து. 

அதே நேரத்தில் அமெரிக்க நிலவியல் துறை தங்களின் ஆய்வுப்படி கடந்த பல நூறு வருடங்களாக முக்கோணப் பகுதியில் மீத்தேன் ஹைட்ரேட்டுகளின் வெளியீடுகள் எதுவும் காணப்படுவதில்லை என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. 

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)

பெர்முடா முக்கோணம் மாதிரியே உலகம் முழுக்க நிறைய கதைகள் இருக்கு. இது எல்லாமே கடலோடிகளோட ஒரு சாகசக் கதைகள் போல் தான் நமக்கு தோணுது. கடலோடிகள் போறாங்க. அவங்களோட அனுபவங்கள பகிர்ந்துக்கிறாங்க. அவங்களோட போன மத்த கப்பல் காணாம போகுது. இத வெச்சி நிறைய மர்மக் கதைகள், நிறைய புனை கதைகள் எல்லாம் வந்திருக்கு. இது அந்த கடலோடிகளின் பயணம் (Sea Voyages) அப்படின்னு சொல்லக்கூடிய இந்த விஷயங்கள பாக்கறப்போ, இத உலகளாவிய முறையில பாக்கறப்போ இதெல்லாம் மக்களோட கவனத்தை ஈர்க்கிற விஷயங்களா தான் இருக்கு. அது மட்டுமில்லா மர்மக் கதைகள் கேட்பதற்கு காலம்காலமா மக்களுக்கு பிடிக்கும் இல்லையா..

Anchor cut 

பெர்முடா முக்கோணப் பகுதியில் இப்படி பெரும் எண்ணிக்கையில் கப்பல்கள், விமானங்கள் மூழ்கினவா என்று லாயிட்ஸ் ஆஃப் லண்டன் என்ற கடல் காப்பீடு நிறுவனத்திடம் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக கேட்கட்டபோது அப்படி பெரும் எண்ணிக்கையில் கப்பல்கள் மூழ்கியிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. 

பிபிசி தொலைக்காட்சி  தொடர் ஒன்றிலும் இது குறித்து விமர்சனம் எழுந்த போது, “நாங்கள் உண்மையைத் தேடி அந்த இடங்களுக்கு சென்றால், அந்த மர்மமே காணாமல் போய்விடுகிறது. உலகின் மற்ற எங்கும் போலத்தான் இங்கும் கப்பல்களும், விமானங்களும் செயல்படுகின்றன” என்று விளக்கமளிக்கப்பட்டது.

Voice Over

ஒப்பீட்டளவில் பார்த்தால் மற்ற சம்பவங்கள் நடந்த வேறு எந்த கடல் பகுதிகளை காட்டிலும், இந்த பகுதியில் தொலைந்து போகும் கப்பல்கள் மற்றும், விமானங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு பெரியது அல்ல. சாதாரணமா வெப்ப மண்டல புயல்கள் அதிகமாக நிகழும் ஒரு பகுதியில் நடக்கக்கூடிய செயல்கள் தான் இவை. 

சில சம்பவங்கள் உண்மையிலேயே நிகழவேயில்லை. 1937-ஆம் ஆண்டு புளோரிடாவின் டேடோனோ கடற்கரையில் ஒரு விமான விபத்தை நூற்றுக்கணக்கானோர் பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் உள்ளூர் செய்தித் தாள்களை பார்த்தால் அப்படி எந்த செய்தியுமே வெளிவரவில்லை. இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றே பல ஆய்வாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

Byte 

(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்) 

உலகக் கடல்களில் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் இன்னிக்கி செய்மதிகள் மூலமாகவோ, கப்பல்கள் மூலமாகவோ ஆய்வு பண்ணிட்டிருக்காங்க. அப்படி பாக்கறப்போ அந்த பகுதி வட அட்லாண்டி கடல் என்று சொல்லப்படக்கூடிய அமெரிக்காவையும், இந்த கரீபியன் தீவுகளையும், பெர்முடா இதுக்கு நடுவுல இருக்கற பகுதிகளுடை நீரோட்டங்கள், அந்த பகுதியுடைய வெப்ப சலனங்கள், அந்த பகுதியை தாக்கக்கூடிய புயல்கள், அந்த பகுதியில் வரக்கூடிய நீர்ச்சுழல்கள் எல்லாத்தையுமே ஆய்வு பண்ணிட்டு வர்றாங்க. ஆய்வு பண்ற சமயத்துல இந்த கற்பனைகள் என்று சொல்லப்பட்ட அந்த தரவுகள் அறிவியல் மூலமா எப்படி நடந்திருக்கலாம்னு சொல்ற காலம் வரும்.

Voice Over

இந்த மர்மங்களும், அமானுஷ்ய கருத்துகளும் பிரபலமாகவும், ஆதாயமளிக்கக்கூடிய ஒன்றாகவும் இருப்பதால் தான், ஏராளமான கற்பனை தகவல்களும், பரபரப்புக்கான உள் நோக்கங்களும் பெர்முடா முக்கோண விஷயத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)


வரலாற்றையும், இன்றைக்கிருக்கிற அறிவியலையும் பாக்கறப்போ ரொம்ப வியப்பாயிருக்கு. ஏன்னா இப்ப நான் சொன்ன அந்த பெர்முடா முக்கோண பகுதிகள் எல்லாமே ஒரு கடல் பயணிகள் செல்லக்கூடிய வழிகளிலேயே இருக்கு. அமெரிக்க, தென்னமெரிக்காவிலிருந்து ஐரோப்பா ஆப்பிரிக்கா போகக்கூடிய அந்த வழியில இருக்கக்கூடிய அந்த இடத்துல மூழ்கிப்போன கப்பல்கள் எல்லாமே பெர்முடா பகுதியோட தொடர்பு படுத்தித் தான் பேசியிருக்காங்க. 

Anchor cut 

அப்படியென்றால் இது எவ்வாறு சாத்தியமானது? கப்பல்கள் காணாமல் போக ராட்சச அலைகள் மற்றும் பனாமா கால்வாயின் நீரோட்டம் காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்தபோதும், விமானம் காணாமல் போக என்ன காரணம் என்று வெகுநாட்கள் விஞ்ஞானிகள் குழப்பத்தில் இருந்தார்கள். திசைகாட்டி குளறுபடிகளுக்கு சூரியனின் மின்காந்த அலைகள் காரணமாக இருக்கலாம் என்று கருதினாலும் விமானம் காணாமல் போனது எப்படி? அதாவது விமானம் காலத்தை குறுக்காக வென்றது எப்படி? 

இது குறித்து சமகால விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின்ஸ் சொல்லும் கருத்து மிக முக்கியமானது.

Episode Title

Short Break 

Episode Title

Anchor cut 

'வார்ம் ஹோல்' (Warm Hole) எனும் சூத்திரத்தின் உதவியால் தொலைதூரத்தில் உள்ள கிரகங்களுக்கும் செல்வது சாத்தியம்” என்று ஸ்டீபன் ஹாக்கின்ஸ் கூறுகிறார். வார்ம் ஹோல் என்றால் என்ன என்றும், காலத்தை வெல்ல அதில் எந்த அளவு சாத்தியம் என்பது தெரியாவிட்டாலும் அதனை எளிமையாக இப்படி புரிந்து கொள்ளலாம்.

Episode Promo

Voice Over

புவி ஈர்ப்பு விசையை எதிர்த்து பறவைகள் வானில் பறக்கின்றன. அதற்காக அவை இறக்கைகளை பயன்படுத்துகின்றன. ஆனால் சில நேரம் அவை இறக்கைகளை அசைக்காமல் வெகுநேரம் பறந்து கொண்டேயிருக்கும். அவை காற்றின் விசையை பயன்படுத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். அதே பாணியை பயன்படுத்தித்தான் கிளைடர்களும் பறக்கின்றன. அதாவது பெரிதாக திறன் ஏதும் செலவழிக்காமல் இயற்கையில் இருக்கும் சக்தியை பயன்படுத்திக் கொண்டு பலனடைவது. அதேபோல் வார்ம் ஹோலையும் பயன்படுத்த முடியும் என்பது விஞ்ஞானிகள் கருத்து.

Blirds are Flying Montage

Anchor cut

இந்த பிரபஞ்சம் வளைந்துள்ளது என்பதே பல விஞ்ஞானிகளின் கருத்து. வளைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தை ஒரு படுக்கையை மடிப்பது போல இரு பக்கமும் மடித்து வைத்து, Short cut-ல் ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு செல்லலாம். சாதாரணமாக ஒரு வட்டத்தின் விளிம்பில் சுற்றி வருவது, நேராக பயணம் செய்வது, அதன் குறுக்கு வெட்டில் பயணம் செய்வது எல்லாமே காலத்தையும், தூரத்தையும் வெல்லும் தந்திரம். 

Voive Over

பிரபஞ்சத்தில் இருக்கும் டார்க் மேட்டர், டார்க் எனர்ஜியை ஒரு பொருளின் மீது செலுத்தும்போது அது பயங்கர வேகத்துடன் உந்தப்படுகிறது. ஐன்ஸ்டீன் தியரிப்படி ஒளியை விட வேகமாக செல்ல எதுவாலும் முடியாது. ஆனால் டார்க் எனர்ஜி அது சாத்தியம் என்கிறது. காரணம் அப்பொருளை பின்னிருந்து தள்ளும் அதே நேரத்தில், முன்பக்கமாக உறிஞ்சும் வேலையையும் அது செய்கிறது. ஒரே நேரத்தில் இரு விசையின் பயன்பாட்டுடன், பொருள் ஒளியின் வேகத்தை மிஞ்ச முடியும் என்கிறது விஞ்ஞானம். 

Anchor cut

அடுத்து Black Holes என்று அழைக்கப்படும் கருந்துளைகள். இதனை சுருக்கமாக இப்படி விளங்கிக் கொள்ளலாம். அதாவது சூரியன் போன்ற ஒரு நட்சத்திரம் ப்யூஸ் ஆவதால் உருவாகும் ஒன்று. அதாவது நட்சத்திரம் முற்றுமுழுதாக எரிந்து போன நிலையில், தன்னிடத்தில் இருந்த சக்திகள் அனைத்தும் வெளியிடப்பட்டு சக்தியற்றுப்போன நிலையில் அண்டவெளியில் தன்னை சூழ்ந்திருக்கும் நைத்து பொருட்களையும் அது தன்னுள்ளே ஈர்க்கத் தொடங்குகிறது. இதிலிருந்து எந்த ஒரு விஷயமும் வெளியேற முடியாது. அவ்வளவு ஈர்ப்பு சக்தியுடையது. ஒளி கூட அதிலிருந்து வெளியேற முடியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

Voice Over

கருந்துளை என்பது ஒரு துளையோ இல்லை வெற்றிடமோ அல்ல. அது மிகச்சிறிய இடத்தில் அதிகமாக அடுக்கி வைக்கப்பட்ட பல பொருட்களின் தொகுப்பு. குறைந்த இடத்தில் அதிக பொருட்களை அடக்கி வைக்கும்போது அதன் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அது தம்மை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் அதிக விசையுடன் ஈர்க்கும். அப்போது ஒளி கூட அதன் ஈர்ப்பு சக்தியிலிருந்து தப்ப முடியது. 

நாமறிந்த பொருட்களிலேயே மிக வேகமாக பயணிக்கக் கூடியது ஒளி தான். தோராயமாக ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் செல்லக் கூடியது. இந்த கருந்துளையின் ஈர்ப்பு விசையிலிருந்து ஒளியே தப்ப முடியாதென்றால், வேறு எந்தப் பொருளுமே தப்ப முடியாது என்று தான் அர்த்தம். 

Anchor cut

ஆனால் பிளாக் ஹோலும், வார்ம் ஹோலும் ஒன்று தானா? இல்லை தனித்தனியா? என்று இன்னமும் முடிவுக்கு வர முடியவில்லை. ஒருவேளை இரண்டும் ஒன்றாக இருந்தால் உள்ளே செல்லும் நாம் ஒருபோதும் வெளியே வர முடியாது. சிறுசிறு துகள்களாகி விடுவோம். ஒருவேளை பெர்முடா முக்கோணத்தில் சிக்கிய கப்பல்களுக்கும், விமானங்களுக்கும், அதில் பயணித்த மனிதர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட்டிருக்கலாம். 

Episode Promo

பெர்முடா முக்கோணம் குறித்த கதைகள்மர்மங்கள்புராணவகையான தகவல்கள்ஏராளமாக இருந்தாலும் அறிவியல் ரீதியாக அதன் முடிச்சு இன்னமும் முழுமையாக அவிழ்க்கப்படாமல் அப்படிடியே தான் உள்ளது என்று சொல்லலாம். எது எப்படி இருப்பினும்பெர்முடா பற்றிய தகவல்கள் இன்றும் பலருக்கு பிரமிப்பூட்டும் நிகழ்ச்சியாகவும்மர்மங்கள் அடங்கிய செய்தியாகவும் வலம் வந்து கொண்டே இருக்கிறது

விஞ்ஞானம் இறுதி வரை ஒரு செயலின் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கு அதில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதனை தெரிந்து கொள்வதும், கேள்விக்குள்ளாக்குவதும் தான் அடுத்த கட்ட விஞ்ஞான வளச்சிக்கு வழி வகுக்கும்.

மனிதனால் அறிந்துகொள்ள முடியாத எத்தனையோ விந்தையான புதிர்களுக்கு விஞ்ஞானம் விடை கண்டு பிடித்துள்ளது. பெர்முடா முக்கோணம் குறித்த மர்மங்களுக்கும் ஒரு இறுதியான விடை கிடைக்காமலா போய்விடும்அதுவரை காத்திருப்போம்வானம் மீண்டும் வசப்படும்

நன்றி! வணக்கம்!!

End Credits (Rolling Title)



(முற்றும்)



No comments:

Post a Comment