Thursday 22 February 2018

தமிழ் நிலம் : தாய் நிலத்தின் வழியே ஓர் நெடும் பயணம் (தொடர்) பகுதி - 2


பழவேற்காடு : சரித்திரச் சின்னங்களுடன் ஓர்  நெய்தல் நிலம்
EPISODE - 2

Anchor Cut

வணக்கம்! சென்ற நமது நிகழ்ச்சியில் புலிகாட் என்று ஆவணங்களில் பதியப்பட்டிருக்கும் பழவேற்காடு என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊரைப்பற்றி பல விஷயங்களை பார்த்தோம். அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பகுதி நிகழ்ச்சியில் மேலும் பல சுவாரசியமான விஷயங்களை பார்க்கப் போகிறோம்.
Pazhaverkadu Episode Promo

Anchor Cut

பழவேற்காட்டுக்கு புலிகாட் என்று பெயர் வந்ததற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். பொதுவாகவே வெளிநாட்டவர்கள் தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை வேறு மாதிரி உச்சரிப்பார்கள். ஜெல்ரியா கோட்டையின் அதிகாரபூர்வமான வரைபடத்தில் பழவேற்காடு பலியகேட் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் அவர்கள் அதனை புலிகாட் என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

Voice Over

கிட்டத்தட்ட சென்னை மாநகரின் பரப்பளவு கொண்ட ஏரியின் கரையில் அமைந்துள்ள இந்த பழவேற்காடு நீண்ட போராட்டத்திற்கு பிறகு தற்போது யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்ன அடையாளத்தை பெறுவதற்காக தமிழகம் பரிந்துரைக்கும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட பழவேற்காட்டில் இன்னமும் மக்கள் பொருளாதார அளவிலும், சமூக அளவீட்டிலும் சமத்துவம் பெறாமல் பின்தங்கிய நிலையில் தான் காணப்படுகின்றனர்அரசு இந்த விஷயத்தில் அதிக முனைப்பை காட்டினால் யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில் பழவேற்காடும் இணைய வாய்ப்புகள் ஏதுவாக இருக்கும். யுனெஸ்கோவின் அங்கீகாரம் மட்டும் கிடைத்து விட்டால் பழவேற்காடு அசுர வளர்ச்சி அடைவது மட்டுமல்லாமல் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
Anchor Cut

யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைப்பது அவ்வளவு எளிதில்லை என்றாலும், அப்படி ஒருவேளை பழவேற்காடு அங்கீகரிக்கப்பட்டால் அதனால் உண்டாகும் வளர்ச்சி அவர்களின் சுய அடையாளத்தை சிதைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.
Voice Over
பழவேற்காட்டை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க காட்டப்படும் அதிமுக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்று தான் பழவேற்காட்டின் கட்டிடக்கலை. இங்கு இருக்கும் பள்ளிவாசல்கள் இரண்டும் முற்றிலும் தமிழக கட்டிடக்கலை வடிவில் கட்டப்பட்டுள்ளன. இதற்கு முக்கிய காரணம் இங்கு வசிக்கும் தமிழ் இஸ்லாமியரான மரைக்காயர்கள். ஏழாம் நூற்றாண்டில் இருந்து தமிழகத்தில் வசிக்கும் இவர்கள் முகலாயர்களின் வருகைக்கு முன்னாலேயே மண்ணின் மைந்தர்களாக மாறிவிட்ட அளவுக்கு மிகப் பழமையான வரலாறு கொண்டவர்கள். பனை ஓலைகளில் பொருட்கள் செய்வதை பரவலாக்கியவர்கள் இவர்கள் தான்.

பனை ஓலைகளில் கைவினை பொருட்கள் செய்தல் Montage

நிஜாம் மற்றும் முகலாயர்களின் வாசனை கூட இல்லாமல் இவர்களது கலாச்சாரமும், வாழ்க்கையும் தமிழகத்தோடு பின்னிப் பிணைந்துள்ளது. அதற்கு சான்றாக இருப்பது தான் பழவேற்காட்டின் அந்த பள்ளி வாசல்கள். அதன் மேற்குப் பகுதியில்டோம்எனப்படும் பாரசீக விதானம் இல்லாமல் தூண்களில் பல்வேறு பூக்களின் சிற்பங்களுடன் முகலாய கட்டிடக் கலையின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழக கட்டிடக் கலையில் கட்டப்பட்ட பள்ளி வாசல்கள் அவை
Anchor Cut

முந்தைய காலங்களில் நமது முன்னோர்கள் சூரிய ஒளியை கொண்டு நேரத்தை கணக்கிட்டு வந்தது நம்மில் சில பேருக்கு தெரிந்திருக்கும். இதன் அடிப்படையில் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சின்ன பள்ளிவாசலில் சூரிய ஒளியிலிருந்து விழும் நிழல் கடிகாரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நவீன கடிகாரங்களுக்கு இணையாக காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை துல்லியமாக நேரத்தை காட்டுவதாக இந்த சூரிய நிழல் கடிகாரம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.
Voice Over
பழவேற்காட்டின் மற்றொரு சிறப்பம்சம்அர்விமொழி. தமிழும் அராபிய மொழியும் கலந்த 7ஆம் நூற்றாண்டு மொழியானஅர்விஉருது மொழியிலிருந்து நிறையவே மாறுபட்டது. முகலாய மன்னர்கள்  உருது மொழியை ஊக்குவித்தது போல்அர்விமொழியை யாரும் ஊக்குவிக்காததால்அர்விமொழி பெரிய அளவில் வெளியே தெரியவேயில்லை. ஆனால் சுதந்திரப் போராட்ட காலத்தில் முகம்மதியர்கள் இதை ரகசிய மொழியாக உபயோகித்திருக்கிறார்கள். இன்று அழியும் நிலையில் உள்ளஅர்விமொழி மிகக்குறைந்த அளவில் காரைக்கால், ராமநாதபுரம், இலங்கை என உலகிலேயே நான்கைந்து இடங்களில் மட்டும் பேசப்படுகிறது. இந்தஅர்விமொழி தெரிந்த ஓரிறு முதியவர்கள் பழவேற்காட்டிலும் இருக்கிறார்கள் என்பது சற்று ஆச்சரியமான விஷயம் தான்.
Anchor Cut

பெரிய பள்ளி வாசலுக்கு அருகில் 100 குடும்பங்கள் ஒற்றுமையாக வாழ்ந்தற்கான  சாட்சியமாக 980 வருடத்துக்கு முன்னர் கட்டப்பட்ட பாரம்பரியமிக்க வீடு ஒன்று உள்ளது. அப்போது அவர்கள் பயன்படுத்திய 831 ஆண்டுகள் கொண்ட மழைத் தண்ணீர் ஜாடிகளை இன்றும் நம்மால் பார்க்க முடிகிறது.

Bite

இது பெரியோர்களாகிய எங்கள் முன்னோர்களின் வீடு. இந்த வீடு வந்து கிட்டத்தட்ட 980 வருட்த்துக்கு முன்னர் கட்டப்பட்டது. இந்த வீட்ல சுமார் 100 குடும்பங்கள் ஒற்றுமையா வாழ்ந்து வந்தாங்க. இவர்கள் பயன்படுத்தியது தான் இந்த ஜாடிகள். இதுக்கு ஒரு பெரிய சிறப்பு என்னவென்றால் மழைத்தண்ணீர். அந்த மழைத்தண்ணீர்ல வந்து இந்த இரும்பு ஆணிய எடுத்து நல்லா சூடாக்கி, நெருப்பு மாதிரி ஆக்கி அந்த நெருப்பு ஆணிய அப்படியே இந்த மழைத்தண்ணி ஜாடிக்குள்ள போட்டுடுவாங்க. கிட்டத்தட்ட வந்து இது ஒரு ஆண்டு வரைக்கும் இந்த மழைத்தண்ணிய சாப்பிடுவாங்க. அந்த மழைத்தண்ணிய எடுத்து வேற பானையிலையோ அல்லது செம்பிலயோ அல்லது தவலையிலயோ போட்டா கூட அந்த கிருமிகள் அந்த பூச்சிகள் உருவாகாது. கிட்ட்த்தட்ட பாத்தா இந்த ஜாடிகள் வந்து 831 ஆண்டுகள் ஆகியிருக்குது.

Anchor Cut

பழவேற்காட்டு கட்டிடக்கலைக்கு ஆதாரங்களாக 10ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமய ஈஸ்வரர் கோயிலும், 13ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட ஆதிநாராயணப்பெருமாள் கோயிலும் திகழ்கிறது
Voice Over

No comments:

Post a Comment