Monday 12 February 2018

ஹேராம் – சில விமர்சன குறிப்புகள்



கல்கத்தாவுக்கு டாக்ஸியில் வரும்போது முஸ்லீம்கள் கலவரக்காரர்கள்கலவரத் தலைகள் (தொப்பிகள்) – முன்னால் நன்றாக பேசி பின்னால் முதுகில் குத்துபவர்கள் (அல்தாஃப் என்னும் அந்த முஸ்லீம் கதாபாத்திரம் முன்னால் நன்றாக பேசி டாக்ஸியின் பின்னால் சென்று தக்காளி அடித்துவிட்டு ஒளிந்து கொள்ளுதல்)

படுக்கையில் இருக்கும் வயதான சாகேத்ராமின் வாய்வழியே ட்யூப் விடும்போது பாகிஸ்தான் எனும் வார்த்தை உச்சரிக்கப்படுகையில் தொண்டையில் அது முள்ளாய் இடறுகிறது.

கலவர தொடக்கத்தில் சாகேத்ராம் எதிரே ஒரு இந்துப் பெண்ணை துரத்தி வரும் முஸ்லீம் ( வலுவான இந்துப்பெண் vs நோஞ்சானான முஸ்லீம்) அதற்கு பின்னால் ஒரு பெரிய முஸ்லீம் கும்பல் – காப்பாற்றும் இந்து ஆண் / கதாநாயகன் / கமல்ஹாசன் (புலி படுத்தா எலிக்குட்டி கூட ஏறி மேயும் என்பது போல்)

ராமை பிடித்துக் கொள்ளும் முஸ்லீம் உடலை ஆசையாக பார்த்துக்கொண்டே கைகளால் தடவுகிறான். அவுட் ஆஃப் ஃபோகஸில் கூட அந்தக் கை வயிற்றின் மீது தடவிக் கொண்டிருக்கிறது. அவனை ராமின் மனைவி அபர்னாவை புனர கூப்பிடும்போது ’நீங்க அவள கவனிங்க நான் இவன கவனிச்சிக்கறேன்’ என்று சொல்லி ராமை பிடித்துக்கொண்டிருந்த இன்னொருவனையும் போகச் சொல்லி விடுதல். அல்தாஃப் அவனை அர்த்தபுஷ்டியுடன் ‘ம்..நடத்து..நடத்து’ என்ற தொனியில் தலையாட்டுகிறான். பின் வெளியிலிருக்கும் மற்றவர்களை குனிந்து ’சலாம்’ சொல்லி உள்ளிருக்கும் ராம் மனைவியை வன்கலவி செய்ய அழைக்கிறான். அவர்கள் கூட்டாக செல்கின்றனர்.

அபர்னாவை பாலியல் பலாத்காரம் செய்யும்போது (முஸ்லீம்கள் 4 பேர்) புனர்பவனின் மூச்சிரைப்பும், அந்த பெண்ணின் வலியும், முனகல்களும் டிடிஎஸ் ஒலியில் துல்லியமாக கேட்குமாறு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. பலாத்காரத்தின் முடிவில் அந்த இந்துப்பெண்ணை (கதாநாயகனின் ஆசை மனைவியை / கதாநாயகியை / சற்று முன் சாகேத்ராம் கவிதையாய் காதல் செய்து புனர்ந்த அவளை) கழுத்தை அறுத்துவிட்டு செல்கிறார்கள் முஸ்லீம்கள். ரத்தம் பீறிட்டு அடிக்கிறது. ராம் துணி வைத்து அழுத்தினாலும் நிற்கவில்லை. (கழுத்தறுப்பு எதனுடைய குறியீடு)

லிஃடில் பார்த்த முதிய வயதான பெண்ணும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கால்விரித்த நிலையில் சுவரில் சாய்ந்து கிடக்கிறாள் கொல்லப்பட்டு. அது கண்ணாடி வழியே காண்பிக்கப்படுகிறது. கல்யாணமாகாத பெண், கல்யாணமான பெண், வயதான பெண், ஆணைக்கூட பாலியலுக்கு உள்ளாக்கும் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ள முஸ்லீம்கள் என்கிற கருத்தாக்கம் முதலிலேயே காட்சிகளின் வழியே பார்வையாளனின் மனதில் வலிமையாக ஏற்றப்பட்டு விடுகிறது.  ஸ்ரீராம் அபியங்கர் சாகேத்ராமிடம் சொல்கிறான். ”என் அக்காவை 20 பேர் அனுபவிச்சு அப்புறம் கொன்னாங்க. ” பெண்ணை மானபங்கப் படுத்துவது அதிலும் தான் சார்ந்த மதப்பெண்ணை வன்கலவி செய்யும்போது ஏற்படும் வன்மம். முதலிலேயே ஒரு ஆர்.எஸ்.எஸ் பார்வையாளன் முஸ்லீம் இன துவேஷத்துடன் மீதி படத்தை பார்க்கும் வகையில் மூளைச்சலவு செய்யப்பட்டு விடுகிறான். 









(விமர்சனம் முழுமையாக பதியப்படும். இது Just மணியோசை மட்டும். பிறகு யானை. யானையை நான் பாவிப்பதன் அர்த்தம். படத்தில் அது முக்கியமான குறியீடாக வருகிறது என்பதால் தான்.) 

No comments:

Post a Comment