Friday, 28 February 2025

பாலாவுடன் உரையாடல் - 2

கில்லி கோட்டி Vs கிரிக்கெட்


இன்றைக்கு நவீன காலத்தில் ஆடப்படும் முன்னணி ஆட்டங்கள் அனைத்திற்கும் நிகராக எண்பதுகளில் பதின்பருவ சிறுவர்கள் ஆடியோ ஒரு ஆட்டத்தை முன்னிறுத்துவது என்பது ஒரு அசாதாரணமான காரியம். முதலில் இந்த கான்செப்ட்டை சிலர் வரவேற்றனர். அவர்கள் வரவேற்றதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் இதே கான்செப்ட்  சிலர் நக்கலடிக்கவும் செய்தனர். ஆனால் அவர்கள் ஏன் இதனை நக்கலடித்தனர் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இன்றைய உலகத்தில் சாதிக்கப்பட்டவைகள் அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் கேளிக்கைக்குறியதாக பரிகசிக்கப்பட்டவைகள் தான் என்பதும் நமக்கு தெரிந்தே இருக்கிறது.

நாம் இந்த கான்செப்டில் கில்லி கோட்டி வெர்சஸ் கிரிக்கெட் என்பதாக தேர்வு செய்ததற்கான காரணத்தை நாமே உள்வாங்கிக் கொள்வது அவசியம். அது ஆய்வுக்குரிய ஒன்றும் கூட.  

காரணம் கிரிக்கெட்டில் உள்ள கூறுகள் அனைத்தும் கில்லி கோட்டியிலும் இருக்கிறது என்பதே இதன் பிரதான அம்சம்.

கிரிக்கெட்டின் பிரமாண்டம் என்பது உலகமயமாக்களின் பின்னணியில் உருவான பொருளாதார நிலை. தொழில்நுட்ப ரீதியில் அதன் சந்தை மற்றும் உருவாக்கம். டிஜிட்டல் வடிவில் அதன் காட்சி வழியே  விரிவடையும் சர்வதேச அரசியல். காணக் கிடைக்காத உலகளாவிய அதன் பார்வையாளர் மட்டம். 

கில்லி கோட்டியின் கற்பனா ரீதியான பிரம்மாண்டம் என்பது  ஒருங்கிணைந்த கிராமங்களின் வழியாக கட்டமைக்கப்பட வேண்டிய அதன் பிரம்மாண்டமான  இறுதிக் காட்சி வடிவம். உதாரணமாக சங்கமம் படத்தில் வரும் இறுதிப் பாடலின் காட்சி அமைப்பு. 

நாசர் ஒரு பேட்டியில் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான தெருக்கூத்தை பிரம்மாண்டமான வடிவில் அரங்கேற்ற வேண்டும் என்ற தனது வேட்கையை தெரிவித்திருந்தார்.

நிகூகி வா தியாங்கோவின்  சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவலில் பிரம்மாண்டமான சிம்பொனி ஒன்றை கட்டமைக்க வேண்டும் என்ற கனவுடன் மாட்டா டாங்கா வண்டியில் பயணிக்கிறான் ஓர் இசை மாணவன் .


1. Ameros Berros படத்தில் வரும் நாய்ச் சண்டை பந்தயம்.

2. Gangster மத்திய நிகழும் வெட்டுக்கிளி பந்தயம்.

3. தமிழ்நாட்டில் நிகழும் சேவல் சண்டை.

4. ஜல்லிக்கட்டு கூட ஒரு புராதான விளையாட்டு தான்.

5. Spain, Portugal, Southern France, Mexico, Ecuador, Venezuela-வில் நிகழும் காளைச் சண்டை கூட ஜல்லிக்கட்டு தான்.

சிறுபான்மையினர் என்றால் என்ன?

டெயீட்ரே மெயின்டல் 


ஒரு சமுதாயத்தை பொறுத்தவரையில்,  'சிறுபான்மையினர்' என்ற கோட்பாடு எண்ணிக்கை சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குழுமத்தின் சிறுபான்மை தகுதி நிலை பற்றிய உணர்வினை உருவாக்குவது சமூக வரலாற்று காரணிகளே ஆகும். 

ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண் டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாம் நூற் றாண்டின் துவக்கத்திலும் தேசிய இனங் களின் அடிப்படையில் நாடுகள் தோன்றி, குறிப்பிட்ட தேசிய இனங்கள், பிற தேசிய இனங்களை அடக்கி ஆள முற்பட்ட போது மேற்கத்திய நாடுகளில் சிறுபான்மை பிரச்சி னை எழுந்தது, சிறுபான்மை என்றால் என்ன? என்பதற்கு அ ற்கு அநேகமாக மிகப் புகழ் பெற்ற விளக்கத்தை 19454 சமூகவியல் வல்லுநர் லூயிஸ் விர்த் கூறினார். அவர் "தங் கனது உடலமைப்பு அம்சங்கள் அல்லது பண்பாட்டு அம்சங்கள் காரணமாகத் தாங்கள் வாழ்கிற சமூகத்திலிருந்து மற்றவர் மற்றவர்களால் தனிப்படுத்தப்பட்டு, வேறுபாட்டோடும் தாழ் வாகவும் நடத்தப்படும் போது, தாங்கள் அனைவரும் பாரபட்சத்துக்கு இலக்காகி விட்டவர்கள் என்ற எண்ணம் பெறுகின்ற மக்களைக் கொண்ட பிரிவினரே சிறுபான்மை யினர்."

விர்த்தின் விளக்கப்படி, சிறுபான்மையினர் உள்ளனர் என்றால் அதற்கு மாறாக உயர் மதிப்பும் அதிக உரிமைகளையும் பெற்ற பெரும்பான்மையினர் இருந்தாக வேண்டும்; சிறுபான்மை நிலையில் உள்ளவர்கள் அனைத்திலும் முழுப்பங்கு பெறாதவர்களாக் கப்பட்டு, அவ்விதம் நடத்தப்படும் போது அந்த மக்கள் தங்களை "ஒதுக்கப்பட்டவர் கன்" என்று கருதுகின்றனர். சுருங்கக் கூறின், சிறுபான்மைப் பிரிவினர், எளிதில் பார்த்து அறியும் வகையில் அதே சமூகத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையிலான அங்க, அடையாளங் களைக் கொண்டவர்கள்; மற்றவர்களைப் போலன்றி அவர்கள் வேறுபாடாக நடத்தப் படுகிறார்கள். இவ்வித நிலைக்கு உள்ளான பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற அளவில் அவர்கள் தங்களிடம் காட்டப்படுகிற வேறு பாட்டை நன்கு உணர்ந்தவர்கள்.

விர்த்தின் இந்த விளக்கத்துக்கு மானிட வியல் வல்லுநர்களான சார்லஸ் வாக்லே மற்றும் மார்வின் ஹாரிஸ் பின்னர் மேலும் பல திருத்தங்களைக் கூறினர். அவர் களுடைய கருத்துப்படி சிறுபான்மை நிலை என்பது ஒரு சமூகத்தின் வாரிசு விதிமுறை களின்படி பரம்பரையாகப் பெறப்படுவதாகும். 

அதாவது ஒருவரிடம் சிறுபான்மை யினருக்கு உரியதாகக் கருதப்படுகிற அங்க, அடையாளம் இல்லாவிடினும் அவர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர் என ஒதுக்கப்பட்டு விடுகிறார். எடுத்துக்காட் டாக, அமெரிக்க நிற வேற்றுமை முறையில், ஒருவர் அமெரிக்கா -ஆஃப்ரிக்கப் பூர்வீகத் தைக் கொண்டவராக அறியப்பட்டால் அவர் பொதுவில் கருப்பர் அதாவது "நீக்ரோ " வகைப்படுத்தப்பட்டு விடுகிறார். எனவே சிறுபான்மை நிலை என்பது பிறக் கும் போதே கூடவே ஏற்பட்டு விடுவதாகுமே தவிர, வாழ்க்கையின் பிந்தையக் கட்டத்தில் தோன்றுவதல்ல. ஒரு சிறுபான்மைப் பிரிவி னர், பெரும்பான்மை பிரிவைச் சேர்ந்தவர் களுடன் திருமண உறவு வைத்துக் கொள் வது தடை செய்யப்பட்ட காரணத்தால் தங்க ளுக்குள்ளாகவே திருமண உறவுகளை வைத் துக் கொள்பவர்கள் என்று வாக்லேயும். சும் கூறுகின்றனர். இவ்விதத் தடைகள், மாரிசும் சிறுபான்மை - பெரும்பான்மையினர் இடை யில் எல்லைக்கோடுகள் நீடிக்கும்படி செய்வ துடன், பெரும்பான்மையினரின் உரிமைகள் நிரந்தரமாக இருப்பதற்கும் உதவுகின்றன. எனினும் இந்த இரு பிரிவினருக்கும் இடையே பாலுறவு கிடையாது என்பது பொருளல்ல. சட்டப்படியான வம்ச வாரிசும். சொத்து வாரிசும் தான் இதில் கவனிக்கப்பட்ட வேண்டிய விஷயம். பெரும்பான்மையினர் தங்களுக்குள்ளாக மட்டும் திருமண உறவை வைத்துக் கொள்ளும்போது பெரும்பான்மை யினரின் சட்டப்படியான குழந்தைகள் மட்டுமே பெரும்பான்மை மதிப்பைப் பெற அந்த மதிப்பானது, பெரும்பான்மைப் பிரிவைச் சேராத மற்றவர்களுக்கு கிடைக் காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.

வாக்லேயும், மாரிசும் கூறிய திருத்தக் கொள்கையில் பெரும்பான்மை - சிறுபான்மை யினர் சம்பந்தப்பட்ட பல சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் என்றாலும், அவை எல்லா சூழ் நிலைகளுக்கும் பொருந்துவதாகா. "தங்களுக் குள்ளாக மட்டும் திருமண உறவு என்று அவர்கள் கூறிய அடிப்படை அம்சமானது, பின்னர் நடந்த ஆய்வுகளின் விளைவாக சில திருத்தங்களுக்கு உரியதாகி விட்டது. மேட்டுக்குடியினர் தங்களுக்குள்ளாகவே திருமண உறவை வைத்துக் கொள்ளும் போது, உரிமைகளை அனுபவிக்கும் பிரிவி னரால் தங்களது எல்லையை வரையறுத்துக் கொள்ள முடிகிறது உண்மையே என்றாலும் சிறுபான்மைப் பிரிவுகள் பல சமயங்களிலும் வேறு சிறுபான்மைப் பிரிவினருடன் திருமண உறவு வைத்துக் கொள்கின்றனர். எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் வெவ்வேறு இனப் பிரிவுகள் இவ்விதம் "கலப்புத்" திருமணத் தில் ஈடுபடுகின்றன .இதை விட முக்கிய மாக, சமீப ஆண்டுகளில், பல பிரிவுகள் தங்களை சிறுபான்மையினர் என்று உணர்ந்து, அந்த அளவில் ஒன்று திரண் டுள்ளன. ஆனால் அவை வம்ச பரம்பரை காரணமாக அல்லது தங்களுக்குள்ளாக மட்டும் திருமண உறவை வைத்துக் கொள்ள நேர்ந்ததன் காரணமாக அவ்விதம் சிறுபான்மை நிலையை பெற்றவையல்ல.

அண்மைக் கால ஆய்வாளர்கள், விர்த்தை விட அதிக அளவில் பெரும்பான்மைப் பிரிவின் அரசியல் ஆதிக்கத்தை வலியுறுத்தி யுள்ளனர். வாழ்க்கை வள வசதிகளை - நல வாழ்வு வசதிகள், வேலை வாய்ப்பு, உணவு, கல்வி, செல்வம், அதிகம் பெற முடிவதாலும், அவற்றின் மீதான ஆதிக்கத்தாலும் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் வாழ்க்கை வாய்ப்புகளைத் தங்கள் கைக்குள் வைத் திருக்க முடிகிறது. வேறு விதமாகச் சொல்வ தானால் பெரும்பான்மையினருக்குள்ள அதிக அதிகார பலம் காரணமாக அவர்களால் சிறு பான்மையினர் மீது பாரபட்சம் காட்ட முடி கிறது. அவர்களை மிகவும் பாதிக்கும் வகை யில் அழுத்தி வைப்பது முதல் அடியோடு தீர்த்துக் கட்டுவதுவரை - நடத்தவும் முடி கிறது.

அடையாள அம்சங்கள்

விர்த் கூறிய "அடையாள" அம்சத்துக் கும் சில விளக்கங்கள் தேவை. சமூகத்தில் சிறுபான்மையினரின் கட்டமைப்பு அளவி வான நிலையை விட அவர்களது தனித் மையை வைத்தே அவர்களை மட்ட தன்மையை வர்கள் என்று ஒதுக்குவது என்பது ஆதிக்கக் குழுவுக்கு மிகவும் எளிது. இது "இலக்காகிற வர்கள் மீது பழி போடுதல்" எனப்படுகிறது. நிற அடிப்படையிலான சூழ்நிலைகளில் மட்டுமன்றி மதச் சிறுபான்மையினர், தன் பால் விரும்பிகள் மற்றும் பலரும் குறித்தும் இதே போன்று சொல்லப்படுகிறது. இவ் விதம் பிரித்து ஒதுக்க நவீன காலத்தில் கலை, பண்பாடும் ஓர் அளவு கோலாக்கப் பட்டு விட்டது. எடுத்துக்காட்டாக, குடி யேறிகள் அவர்களது கலை. பண்பாட்டு அடிப்படையில் பாரபட்சமாக நடத்தப்பட லாம். இவ்வித நிலைகளில் அவர்களது நெறி முறை,குறிக்கோள், நம்பிக்கைகள், பழக்க வழக்கம் போன்றவை அவர்களது அடிப்படை வேறுபாடுகளாகக் கருதப்பட்டு, அவற்றின் பேரில் அவர்கள் பெரும்பான்மை யினரை விட தாழ்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.

குறிப்பிட்ட பிரிவினரை இவர்கள் இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ளும் தன்மை இந்த விஷயத்தில் தொடர்புள்ள தாகும். குறைந்தபட்சம் வட அமெரிக்காவில் '"அடையாளம் காணத்தக்க சிறுபான்மை யினர்" பற்றி அதிகம் பேசப்படுகிறது. எனினும் அடையாளம் காணும் தன்மையை எப்போதுமே சிறுபான்மையினர் தான் காட்டி வருவதாகச் சொல்ல முடியாது. உதாரண மாக நாஜி ஜெர்மனியில் சிறுபான்மையின ரான யூதர்களை எளி எளிதில் அடைய அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டாயமாக "மஞ்சள் நட்சத்திர" அடையாளத்தை அணியும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். வேறு வகையில் யூதர் களைப் பிற மக்களிடமிருந்து அடையானம் கண்டுபிடித்திருக்க முடியாது.

"புதிய" சிறுபான்மையினர்

அடுத்து "புதிய" சிறுபான்மையினர் என்ற பிரச்சினைக்கு வருவோம். பாரபட்சம் காட் டப்படுகிற சிறுபான்மையினர் என்று தங்களைக் ககுதிக் கொள்வோரிடையே சமீப ஆண்டுகளாக அரசியல் உணர்வு, அதிகரித்துள்ளது.இவர்களில் பலர் இந்த உணர்வுடன் செயலில் ஈடுபட ஒன்று சேர்ந் துள்ளனர். எடுத்துக்காட்டாக, இவர்களில் பெண்கள். விர்த்தின் சிறுபான்மையினர் குறித்த விளக்கத்துக்கு நன்கு பொருத்தமான வர்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் பார்ப்பதற்கு வேறுபட்டவர்கள், பாரபட்சத் துக்கு உள்ளானவர்கள், பெண்கள் என்ற காரணத்துக்காக அவ்விதம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கடந்த பல  பல பத்தாண்டுகளாக நன்கு உணர்ந்தவர்கள் எனினும்  1970களில் தான் சமூகவியல் நிபுணர்கள் பெண்கள் குறித்து கவனம் செலுத்தி, ஆண் களுடன் சேர்ந்து வாழ்ந்த போதிலும், பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட வேறுபட்டது என்று கண்டுணர்ந்தனர். அத்துடன் அவர்கள் சமூக அந்தஸ்து வரிசை. சமூக வரையறு நிலை ஆகியவை பற்றிய ஆய்வில் பெண்களின் நிலையையும் ஆராய முற்பட்டனர். சொல்லப் போனால் சொத்து, பெருமதிப்பு, நல வாழ்வு வசதிகள் சில சமூகங்களில் உணவும்தான் - ஆகிய வற்றைப் பெறுவதில் பெண்களுக்குப் பாதக மான நிலைமை தான் உள்ளது. இவை யெல்லாம், ரோசாலிண்ட் ட்வோர்க் பெண்களின் சிறுபான்மை நிலை பற்றிய தமது கட்டுரைக்கு அளித்த தலைப்பில் "சிறுபான் மையாக்குவது வெறும் எண்ணிக்கை மட்டு மல்ல" என்று கூறியதை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

தங்களது பாலியல் போக்கு காரணமாகத் தங்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற உணர்வினால் தனிப்பிரிவாக அமைந் துள்ளனர் என்ற அளவில் தன்பால் (Homosex) விரும்பிகளாகஉள்ள ஆண்கள் மற்றும்பெண் கள் ஆகியோர் விஷயத்தில் அவர்களை எளி தில்அடையாளம் காண்பது தனிப்பிரச்சினை.

சிறுபான்மையினர் என்று சொல்லத் தக்க, குறைந்தபட்சம் சில சமயங்களில் அப்படி வகைப்படுத்தத்தக்க சமூகப் பிரிவு முதியோர் ஆவர். வேலைக்கு ஆளை அமர்த்திக் கொள் வது, கட்டாயமாக வேலையிலிருந்து ஓய்வு பெறச் செய்வது மற்றும் மற்ற விஷயங்களில் வயது அடிப்படையில் முதியோர் மீது பார பட்சம் காட்டப்படுகிறது. இதன் விளைவாக வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா விலும் முதியோர் இந்த பாரபட்ச அடிப்படை யில் ஒன்று திரண்டுள்ளனர், எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் முதியோர் 'கிரேபாந்தர்" என்னும் பெயரில் அமைப் பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இத்தாலி யில் முதியோர் ஓய்வோதியம் பெறுவோர் சமீப ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காது கேளாதவர்களும் இதே போல சிறுபான்மையினர் என்ற அளவில் ஒன்று திரண்டு வருகின்றனர்.

உரிமை, அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்ட வெவ்வேறான மக்களை நெறி கெட்டவர்கள் என முத்திரை குத்தி அவர்கள் அனைவரை யும் ஒரே பிரிவினர் போல கருதும் போக்கு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக கனடா வில் அகதிகள், விரும்பத்தகாத குடியேறிகள், "சேம நல" மோசடிக்காரர்கள் என்றெல் லாம் வருணிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டு களுக்கு முன் அமெரிக்காவில் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் "வீடற்றவர்கள்" அனைவரும் ஒரே பிரிவினர் போலவும் அவர் கள் நெறி கெட்டவர்கள் என்றும், அவர் 'களது அவலத்துக்கு அவர்களே காரணம் என்பது போலவும் சித்திரிக்கப்பட்டது. இப்படி முத்திரை குத்தும் போக்கு நீடிக்கு மானால் அவர்களிடையே சிறுபான்மையின ருக்குரிய எண்ணம் விரைவில் வளர்ந்து விடும்.

சிறுபான்மை உணர்வு

இந்த எடுத்துக்காட்டுகள், சிறுபான்மையினர் உருவாவது ஒரு சமூக வரலாற்று , அளவிலான செயல் என்பது தெளிவு, இதில் முக்கிய அம்சம், குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற அளவில் பொதுவில் தங்கள் அனைவர் மீதும் பாரபட்சம் காட்டப் படுவதாக அவர்களிடையே உணர்வு உண்டாவதாகும். இவ்விதமாக வரலாற்றின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரே மாதிரி நிலைக் குள்ளாகிறவர்கள் என்று கூறத்தக்கவர்கள் பின்னொரு கட்டத்தில் அரசியல் உணர்வு பெற்ற சிறுபான்மையினர் ஆகிவிடுகின்றனர்.

எனினும் நாம் சிறுபான்மையினர் என்ற உணர்வானது குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பான குறுகிய கண்ணோட்டத்தில் தான் அல்லது சமூக அடையாளத்தின் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் பற்றி நிற்பதில் தான் போல் முடிந்தாக வேண்டும் என்பதல்ல. இதுவே நமது கருத்தாகும். சிறுபான்மை உணர்வானது இதே போன்ற நிலைமைக்கு ஆளான மற்ற பல பிரிவினருடன் ஒன்று பட்டு நிற்பதற்கு அடிப்படையாகவும் விளங்க முடியும். இன சிறுபான்மைகளைப் பொருத்தமட்டில் இவ்வித ஒருமைப்பாடா னது, ஒத்த கலாச்சார அம்சங்கள், சிறுபான் மையினர் என்ற நிலை மற்றும், பிறர் மாதிரி பாரபட்சத்துக்கு உள்ளவது ஆகியவற்றின் அடிப்படையில் பல இனத்தவருக்கு இடையி லான ஒத்துழைப்பாக அமையலாம். ஆல்பெர்ட் மெம்மி கூறுவதாவது- ஒடுக் கப்பட்ட அனைவரும், காலனி ஆட்சியில் உள்ள மக்கள் யூதர்கள், ஏழைகள், பெண் கள் ஒருவரையொருவர் ஒத்த நிலையில் தான் உள்ளனர். ஒரே மாதிரியான துன்பம் பல சமயங்களிலும் ஒரே மாதிரியான விளை வுகளை உண்டாக்குகிறது". சிறுபான்மைப் பிரிவுகளிடையிலான இவ்வித ஒருமைப்பாடு நமது காலத்தில் அவ்வளவாகக் காணப்பட வில்லை. எனினும் வெறும் தொகுப்பாக உள்ள நபர்களிடமும் காணப்படுகின்ற அள வுக்கு, மேலும் மேலும் குறுகிய அடிப்படை யில் அதிக அளவில் சிறுபான்மை உணர்வு வளர்ந்து வருகின்ற இந்த கால கட்டத்தில் இவ்வித ஒருமைப்பாடுகள் தான் மனித சமு தாயத்தைத் தோற்றுவிப்பதற்கான சிறந்த நம்பிக்கையாகத் தோன்றுகிறது.

நன்றி : யுனெஸ்கோ  கூரியர் (ஆகஸ்ட் 1993)

பாலாவுடன் உரையாடல் - 1

பாலா, இதைவிட சிறப்பாக எழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள வேறுபாட்டை, கதாசிரியனுக்கும் இயக்குனருக்கும் உள்ள வேறுபாட்டை பல பல வருடங்கள் பழகிய பல படங்களில் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஒரு நண்பனுக்கு, உலக அளவில் கதை சொல்லும் முறை, அதை திரைக்காட்சியாக கொண்டு வருவதில் தோல்நுட்ப ரீதியாக படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்கள் இவைகளை நுட்பமான அளவில் உள்வாங்கிய உங்களை ராஜன் உள்வாங்கவில்லையே என்று எனக்குத் தெரிகிறது. இது குறித்து முன்னமே பேசித்தான் இருக்கிறோம். இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் ஸ்டீரியோடைப் கதை சொல்லல் அது படமாக்கப்பட்ட விதம் திரைக்கு வந்து தோற்றுக் கொண்டிருப்பது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் இந்த குறிப்பிட்ட இயக்குனர்கள் அவர்கள் பெரிய சினிமா பட்டறை என்று நினைத்து அவர்களிடமிருந்து வரும் உதவி இயக்குனர்கள் திருந்துவதே இல்லை. 90-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். இதை சாபக்கேடு என்பதா? தலைகுனிவு என்பதா? தெரிந்தே சூடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதா? கிராமத்தில் இப்படி சொல்வார்கள். ' ஆமா இன்னமோ பெரிய படிப்பு படிச்சானாம். இது கூட தெரியல ' என்று. மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் அடுத்த கட்டத்துக்கான முதல் செயல். 'மாற்றம் ஒன்றே மாறாத விதி' முதலில் இவர்களை கடந்தால் தான். நாம் நினைக்கும் ஒன்றையே உருவாக்க முடியும். நினைத்ததை எல்லாம் சரியாகவே சொல்லி விட்டீர்கள் பாலா.. இதற்கு மேல் நான் என்ன சொல்ல.. உங்கள் வழி தெளிவானது. அறிவானது. அறிவியல் பூர்வமானது. நாளைய சினிமாவுக்கானது. நடை போடுங்கள். நான் இருக்கிறேன். கோபித்துக் கொண்டாலும் நான் நீங்கள் போகும் வழியில் மரித்துக் கொண்டு முன் நிற்பேன். என்னை ஒரு முறை ஏறிட்டு பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே நடக்காதது போல் இயல்பாக பேசுவீர்கள். நாமும் அப்போதைக்கான உரையாடலில் தொடங்குவோம். நம்மிடம் தொடர்வது. இதுதான் நமது நட்பு. இதற்கு மேல் வேறு என்ன இருக்கப் போகிறது. ராஜன் நமக்கு என்றும் நண்பன் அவ்வளவுதான். அவன் பேசாமல் போனாலும் அவன் எனக்கு நண்பன் தான். அதுதான் உங்களிடம் என்னிடம் உள்ள பண்பு. ஆரண்ய காண்டத்தில் இப்படி ஒரு வசனம் வரும். சம்பத் அந்தப் பையனிடம் கேட்பார். 'உங்க அப்பாவ உனக்கு ரொம்ப பிடிக்குமா..' 'பிடிக்காது'... 'அப்ப ஏன்டா இவ்வளவு ரிஸ்க் எடுக்குற'... 'ஏன்னா அவரு என் அப்பா' அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான். இதுதான் பாலா நட்பு இயங்கும் விதமும் குடும்பங்களுக்குள் இருக்கும் நமது உறவுகள் இயங்கும் விதமும். நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன் பாலா. ராஜனுக்கு நீங்கள் புரிய வைக்க நினைத்ததை தமிழில் மொழி பெயர்த்து படித்தபோது இப்போது நான் சொல்லி இருப்பதைவிட இன்னும் ஏராளமானது மனதில் ஓடுகிறது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முடியாது அல்லவா? எண்ணற்ற கேள்விகளோடு முடிக்கிறேன். 

இன்னும் ஒன்று :

ராஜன் உங்கள் ஸ்கிரிப்டில் சிலவற்றை மாற்ற சொன்னான் அல்லவா? நீங்களும் இது சரியான ஃபார்மில் தான் இருக்கிறது என்று நினைத்தாலும் ராஜனுக்காக மனதை தேற்றிக்கொண்டு சில மாற்றங்களை உங்கள் ஸ்கிரிப்டை ரீரைட் செய்தீர்கள் அல்லவா? எதை ரீரைட் செய்தீர்களோ. அதை எடுத்துவிட்டு. எதை நீங்கள் எழுதி இருந்தீர்களோ அதை மறுபடியும் அதே இடத்தில் எழுதுங்கள். ஜப்பானிய ஐந்து விதிகள் : 'செய்ரி, செய்டன், செய்ஸோ, செய்கெட்ஸு, ஷிஸுகே' முதல் விதியே இது தான். 'செய்ரி'. எடுத்த பொருளை அதே இடத்தில் வையுங்கள். மாற்றி வைக்கும் போது நீங்களும் குழம்பிப் போவீர்கள். அடுத்தவர்களும் குழப்பிப் போவார்கள். கடைசி விதி பற்றி நான் உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும். நீங்கள் தெளிந்து விட்டீர்கள் என்று சொல்லவில்லை பாலா திரும்பி விட்டீர்கள். பந்து இதயத்தில் மோதவில்லை. சுவற்றில் மோதியது. கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன். நிறுத்திக் கொள்கிறேன். 


தமிழ்ச் சினிமா ஓர் அறிமுகம்

The Eye of the Serpent - Books Review


 


ஆசிரியர் : எஸ். தியடோர் பாஸ்கரன். வெளியீடு : ஈஸ்ட் வெஸ்ட் புக்ஸ் (மெட்ராஸ்) பிலிட். 62/அ ஆர்ம்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை 600010. 

தமிழ்ச் சினிமா என்கிற ஊட சுத்தின் வரலாறு, கதிப்போக்குகள், மைல் கற்கள் ஆகியவற்றை நடு நிலையில் நின்று ஓர் ஆய்வு நூலுக் -குரிய இலக்கண அமைதி சற்றும் கெடாமல் நினைவு கூரும் ஆசிரியர் பாஸ்கரன் இந்நூலுக்குத் தமிழ்ச் சினிமா - ஓர் அறிமுகம் என்றே பொதுத் தலைப்பிட்டிருக்கலாம். பெர்னாட்ஷாவின் உருவகத் தலைப்பை விட அதுவே பொருத்தம்.


நூலின் முன்னுரையில் இசை, பரதம், இலக்கியம் போன்ற பிற கலைக் கூறுகளுக்கென்று அடிப் படை நூல்கள் கிடைக்கின்றன. அவற்றைக் காட்டிலும் பொது மக்களின் நாடித் துடிப்பாக இயங் கும் சர்வவல்லமை படைத்த சினி மாவுக்கென்று அறிவுபூர்வமான நூல்கள் (தமிழில்) இல்லை என்கிற ஆதங்கம் தொனிக்கிறது. அந்த ஆதங்கத்தை ஆசிரியரின் இந்நூல் பெருமளவில் நீக்கி விடுகிறது.


தமிழ்ச் சினிமா வரலாறு விமர்சனம் என்கிற துறையில் இது காறும் வெளிவந்த எல்லா நூல் களிலிருந்தும் இந்நூல் தனித்து நிற்கிறது. நூல் முழுதும் இழை யோடும் கருத்துத் தொடர்பு -  பொருளாழம் - விமர்சன நுழை புலம் அத்தகையது சினிமா என்கிற ஊடகத்தின் இலக்கணத்தை இது வரையில் திரையிடப் பெற்ற தமிழ்ப் படங்களில் தேடுகின்ற ஒரு பயணமே இந்நூல், 'இந்து' விமர் சகர் சொல்வது போல் மேலைச் சினிமாவின் இலக்கணத்தைத் தமிழ்ச் சினிமாவில் தேடினால் பின்னையதை ரசிக்க இயலாது என்பதை ஏற்பதற்கில்லை. மேலைச் சினிமா கீழைச் சினிமா என்று வேறு வேறு இலக்கணங்கள் உண்டா என்ன? சினிமா என்பது ஒன்றுதான். அதன் இலக்கணமும் ஒன்றுதான். தெருக்கூத்து, காலட்சேபம், நாட்டிய நாடகம், அமெச்சூர் நாடகம், மேடைப் பிரசங்கம், ரிகார்ட் டான்ஸ், மியூசிக் விடியோ.... இவற்றின் அதிகாரத்திற்கு எடுபிடியாய் நிற்கும் ஒரு கலப்படம் சினிமா அன்று என்கிற தர்க்க நியாயமே இந்நூலின் அடிக்காடு


மென்னப்படம். பேசும்படம். வசன காலம், பாடல் காட்சி. படிக்கற்களாய் நிற்கும் படங்கள். சாதனை படைத்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் இப்படி ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இது 'தேசிய இயக்கச் சினிமாவும் சத்யமூர்த்தியும்' எனகிற கட்டுரை தனித்து அரசியல் தலைவரின் பங்களிப்பை அரிய செய்திகளுடன் நிறுவிக் காட்டுகிறது. அதே போல் திராவிடச் சினிமாவுக்கும் பொதுவுடை மைச் சினிமாவுக்கும் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கியிருக்கலாம். நூலின் வீச்சு இன்னும் பரந்திருக்கும்.


இண்டெக்சுக்கு 50 பக்கமா என்று கேட்கும் இந்துவின் கேள்வியில் பொருள் உண்டு திரைப்பட விவர அட்டைகள், துணை நூற் பட்டியல், கலைச்சொல், பெயர்க் குறிப்புகள் ஆகியவற்றைச் சிறிய எழுத்தில் ஒளியச்சு செய்திருந்தால் ஏராளமான பக்கங்களைக் குறைத்து நூலின் விலையையும் குறைத்திருக்கலாம்.


ஆசிரியரின் கருடப்பார்வைக்குச் சில அடையாளங்கள் :


1. தமிழகம் 1950களில் மின்சாரமயமாகிறது. சிற்றூர்களுக்குச் சினிமாப் பிரவேசம் இப்போதுதான்.

 2. நாடகக் கம்பெனிகளின் கர்நாடக இசையையும், மராத்தி மேடையிலிருந்து கிரகிக்கப்பட்ட இந்துஸ்தானி இசையையும் 1930 களில் நுழைந்த பார்சி இசையையும் தமிழகத்திற்கே உரித்தான நாட்டுப் பாடல் இசையையும் கலந்து பின்னாளில் சினிமா இசை என்கிற புதுவடிவம் புறப்பட்டது.

 3. தமிழ்ச் சினிமாவில் இன்ளவும் பாடலும், நடனமும் படக் கதையோட்டத்தோடு இழையாமல் தனியே முந்திரிக் கொட்டைத்தனமாகத் துருத்திக் கொண்டுதான் நிற்கின்றன.


4. சம்பூர்ண ராமாயணத்தில் இசையும் சினிமாவும் இணைந்து பொருந்தின வட்டார வழக்கு என்கிற இயல்பான பேச்சுத் தமிழ் மக்களைப் பெற்ற மகராசியில் முதன் முதலில் இடம்பெற்றது. (இரண்டு படங்களையும் இயக்கியவர் கே.சோமு. இவர் ஏ.பி. நாகராஜனின் முன்னோடி)

 5. அந்தநாள், உன்னைப்போல் ஒருவன், வீடு போன்ற படங்கள் பாட்டில்லாத படங்கள் இவற்றின் இசை இயல்பான சினிமாவைக் கொண்டு வந்தது. (அதாவது சினிமாவுக்குப் பின்னணி இசை போதும்).

 6. சளசளவென்று பேசிக் கொண்டிருந்த சினிமாவில் காமிரா மொழியை எப்படிக் கையாள்வது என்று 'ஏழை படும்பாடு' மூலம் நயமாகக் காட்டியவர் கே. ராம்நாத் (இவரே சினிமாவைப் புரிந்து கொண்ட முதல் இயக்குநர்)


7. சமுதாய நோக்கில் பிற்போக்காளரான சத்யமூர்த்தி சினிமாவின் வல்லமையை முன்கூட்டியே அறிந்து அதை அனுசரித்துப் போனவர். அவருக்குப் பின் தேசியத் தலைவர்கள் அவரது கருத்தின் எதிரிகளாக இருந்ததால் சமுதாய நோக்கில் முற்போக்காளரான திராவிடத் தலைவர்கள் அந்த ஊடகத்தைத் திறம்படக் கைப்பற்றிச் 'சாதனைகள்' புரிந்தனர்.



Wednesday, 26 February 2025

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence)

ஹைக்கூ

Artificial Intelligence

ஒரு களிமண்ண புடிச்சி பொம்மையாக்கி அத நடக்க வச்சு அழகு பார்த்தேன். கொஞ்ச நாள் கழிச்சி அந்த களிமண்ணு கால் மேல கால் போட்டு உக்காந்துட்டு என்ன நடக்க வச்சு வேடிக்கை பார்க்குது Artificial Intelligence செயற்கை நுண்ணறிவு

Thursday, 23 April 2020

அவசர நிலைக்காலம்


எமர்ஜென்சி என்கிற ஊழிக்காலம் - அரசின் கோர நடன அரங்கேற்றம் 

ஆத்மாநாம்



1975 ஜூன் 26 என்பது இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட நாள் ஆகும். அன்றுதான் இந்தியாவில் எமர்ஜென்சி என்ற அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோருக்கு எமர்ஜென்சி காலத்தைப் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நமது நாட்டின் தற்போதைய சூழ்நிலை எமர்ஜென்சி காலகட்டத்தையும், அப்போது பிறப்பிக்கப்பட்ட புதுப்புது சட்டங்களையும், அந்த சட்டங்களினால் உருக்குலைந்த எண்ணற்ற மனிதர்களைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளது. 






நெருக்கடி நிலைக்காலம் பற்றிய திரை ஆக்கங்கள் :


ஹசாரோன் குவாய்ஷேய்ன் (சுதிர் மிஸ்ரா) 2005
பிறவி (மலையாளம்) இயக்கம் : ஹாஜி எம் காரூன் 1989
வந்தனா குப்தாவின் ஆவணப்படம்


இணைப்பு


இன்று நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் ஊரடங்கு வாழ்வு, கண்காணிப்பு வளையம், தனிமைப்படுத்தப்படல் என்ற சொல்லாடல்களூக்கு பின்னால் எனக்கு மூன்று வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய மூன்று நாவல்கள் நினைவுக்கு வருகிறது.  முதலாவது பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பெர் காம்யூவின் கொள்ளை நோய், அடுத்ததாக அமெரிக்க நாவலாசிரியர் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984, மூன்றாவது ஜோஷ் வண்டேலூ என்ற நாவலாசிரியரின் ஃப்ளெமிஷ் மொழி நாவலான அபாயம். 

01. கொள்ளை நோய் (ஆல்பெர் காம்யூ) 


ஆல்பெர் காம்யூவின் இந்நாவல் 17ஆம் நூற்றாண்டின் பிரான்சில் நிலவிய பண்டைய கிரேக்க இலத்தீன் இலக்கிய பாணியைத் தழுவிய துன்பியல் நாடகம் போன்று அமைந்திருக்கிறது. அவ்விலக்கிய நாடகங்கள் குறிப்பிட்ட இடம், காலம், கருப்பொருள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. கொள்ளை நோய் நாவலின் வடிவமும் குறிப்பிட்ட இடம் (நாவல் நிகழும் களமான ஓரான் நகரம்), குறிப்பிட்ட காலம் (1940களில் நடக்கிறது என்பது பூடகமாக 194...என்று நாவலில் குறிப்பிடப்படுகிறது), குறிப்பிட்ட கருப்பொருள் (நகரத்தில் பரவும் கொள்ளை நோய்) என்பதாய் அமைக்கப்பட்டுள்ளது. நாவலின் உள்ளடக்கம் ஐந்து இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது.


(I)   முதல் இயல்

முதல் இயலின் உட்பிரிவுகள் எலிகளின் வெளிப்பாட்டையும், அதன்மூலம் மக்கள் மத்தியில் மன அழுத்தம் மேலோங்கிக்கொண்டே போவதையும் காட்டுவதாய் உள்ளது. ஒருநாள் மருத்துவரான ரியெக்ச் ஒரு செத்த எலியைக் காண்கிறார். அடுத்த இரண்டே நாட்களில் நகரெங்கும் எலிகள் இறந்து கிடக்கின்றன. மக்கள் மனங்களில் பயமும், அருவெறுப்பும் உண்டாகும்படி எலிகளின் சாவு விரைவாக நாடெங்கும் பரவுகிறது.  “கொள்ளை நோய் வந்துள்ளது என்ற செய்தியை அறிவிக்கவும்.  நகரத்தை அடைத்துவிடவும்” என்னும் வாக்கியத்துடன்  முதல் இயல் முடிகிறது.  


(II)  இரண்டாவது இயல்

இரண்டாவது இயல் கொள்ளை நோய் நகரத்தில் குடிபுகுவதையும் பரவுவதையும் காட்டுகின்றது. கேட்டை விளைவிக்கும் நோயோடு போராட எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அச்சத்தின் படிப்படியான வளர்ச்சியும் நாடு கடத்தப்படலின் உணர்வுகளும் இடம்பெறுகின்றன. கோடைக்காலத்தின் மத்தியில் நோய் உச்சகட்டத்தை அடைகிறது.
 
(III) மூன்றாவது இயல்

மூன்றாவது இயல் கதையின் ஓட்டத்திற்கும் மையப்பகுதியாய் சுருக்கமான முறையில் அமைகின்றது. இதில் உட்பிரிவுகள் ஏதும் இல்லை. புது நிகழ்ச்சிகள் ஏதும் இதில் இல்லையென்றாலும் நோயின் ஆளுமையை உணர்த்துவதில் இது தனித்தன்மை பெற்று விளங்குகிறது.

(IV) நான்காவது இயல்

நான்காவது இயலில் நோயின் வளர்ச்சியும், அதனால் உருவாக்கப்பட்ட பீதியும் வலியுறுத்தப்படுகின்றன. ஒரு சிறுவனின் மரணம் உச்சக்கட்டமாக அமைகின்றது. இருப்பினும் கிறித்து பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, கிரேண்ட் குணமடைவது புதுயுகத்தின் வாயிலை திறப்பதாக சொல்லப்படுகிறது. நோய் நிதானமாக பின்வாங்குகிறது.

(V)  ஐந்தாவது இயல்

ஐந்தாவது இயல் நோய் மறைவதை குறிக்கிறது. ‘வாயிற்கதவுகள் திறக்கப்படுதல்’, ‘மக்கள் கொள்ளை நோயிலிருந்து விடுதலைபெறுதல்’ ஆகிய இரு நிகழ்ச்சிகளை விவரிப்பதன் மூலம் ஆசிரியர் கதையின் சிக்கலுக்கு தீர்வு காண்கிறார்.

இறுதியில் ஒரு சிறு பகுதி சேர்க்கப்பட்டு முடிவுரையாக இடம் பெறுகின்றது. ஆசிரியர் இப்பகுதியை முதல் இயலோடு இணைத்து விடுகிறார். அது நாவலில் கையாளப்பட்ட நடைக்கு விளக்கம் தருவதாயும், நாவலில் இடம்பெறும் சம்பவம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி என்று குறிப்பிட்டதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்துகின்றது. இப்பகுதியில் தான் ஆல்பெர்ட் காம்யூ நாவலில் கையாண்ட நடையில் காணப்படும் தன்மை, படர்க்கை ஆகியவற்றிற்கு விளக்கம் கிடைக்கின்றது. கதைசொல்லி யார் என்பதும், அவர் ஆங்காங்கே வெளிப்பட்டு கதையை கொண்டு செல்வதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

முதலில் இது ஓர் உருவக நாவல். இரண்டாம் உலகப்போர் உருவாக்கிய பேரழிவு, மனித மனங்களில் அது ஏற்படுத்திய உளவியல் தாக்கங்கள், காயங்கள், வடுக்கள், ஆகியவற்றை ’பிளேக்’ எனும் கொள்ளை நோயின் பின்னணியில் வைத்து ஆசிரியர் நம்மோடு உரையாடுகிறார்.  பேரரசோ அல்லது சிற்றரசோ தன்னை நிலைபடுத்திக்கொள்ள மக்களை கருவிகளாகவும், பொம்மைகளாகவும் மாற்றியமைக்கூடிய வல்லமை படைத்தது என்பது இந்நாவலில் வெளிப்படும் ஒரு முக்கியமான செய்தி. ’பிளேக்’ எனும் தொற்று எலிகள் மூலம் அந்நாட்டிலுள்ள மனிதர்கள் மேல் பரவி துரிதவேகத்தில் ஒரு கொள்ளைநோயாக அவர்களை காவுகொள்வது இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் கட்டளைக்கு அடிபணிந்து மூளைச்சலவு செய்யப்பட்ட நாஜிக்கள் நிகழ்த்திய மனித இனப்படுகொலைகளை நினைவுகூர்கிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத ஒரு தருணத்தில் மரணபயம்  மிகப்பெரிய அலைவீச்சாக உருவெடுக்கும்போது அதன் சூத்திரதாரியான அரசு எந்திரத்திடம் கேள்விக்கப்பாற்பட்டு மக்கள் அடிபணிவதும், அடிமை நிலைக்குள்ளாவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போவதை நாவலின் ஊடாக நாம் காண்கிறோம்.






திரை ஆக்கம் 
இணைப்பு


02. 1984 (ஜார்ஜ் ஆர்வெல்)



திரை ஆக்கம் 
இணைப்பு


03. அபாயம் (ஜோஷ் வண்டேலூ)



ஜோஸ் வண்டேலூவின் அபாயம் நாவல் திரை ஆக்கம் செய்யப்பட்டதாக தெரியவில்லை.


கொரோனா என்பது வெறும் குறியீடு மட்டும் தான்

(இக்கட்டுரை இன்னும் முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை) கூடிய விரைவில் முழுமையான ஆக்கமாக உங்கள் வாசிப்புக்கு கிடைக்கும்.



தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...