Saturday, 28 April 2018
அறிவியலும் இசையும் : இசையில் அறிவியலின் இடம்
அயானிஸ் ஸென்னாகிஸுடன் ஓர் செவ்வி (நேர்காணல்)
அயானிஸ் ஸென்னாகிஸ் இசையில் கட்டிடக் கலைஞர். கட்டிடக் கலையில் இசைவாணர். 30 ஆண்டுகளாக இசையமைப்பாளராக இருக்கும் இவரது செல்வாக்கு உலகம் முழுவதும் பரவியுள்ளது. இன்றுள்ள இசையமைப்பாளர் எவரின் படைப்புகளையும் விட, இவருடைய படைப்புகள் இன்றைய இசையின் சுவைநயத்தில் அறிவியல் சிந்தனை பெறும் சிறப்பிடத்தை அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
அயானிஸ் ஸென்னாகிஸ் நீங்கள் ஓர் இசைக்கலைஞர் மட்டுமின்றி ஒரு கட்டிடக் கலைஞரும் கூட. இப்படி ஒரே சமயத்தில் இரண்டு பணிகளில் இருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
தொழில்முறையில் பார்த்தால் என்னை ஓர் கட்டிடக் கலைஞனாக கருத முடியாது. நான் பிரபல கட்டிடக் கலைஞரான லெ கார்பூசியருடன் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பல ஆண்டுகளுக்கு முன்னர், இரண்டு பணிகளிலும் ஈடுபட்டிருந்தேன். மார்சேல்ஸ் நகரின் குடியிருப்புப் பகுதிகளை கட்டும் பணியிலும், லியான் அருகில் எவோ – சூ – ஆர்ப்ரசல் என்னும் இடத்தில் செந்த் மாரி தலா தூரெட் என்ற கட்டிட்த்தையும், இந்தியாவில் சண்டிகர் நகரை அமைக்கும் பணியிலும் பங்கு கொண்டேன். 1958-ல் பிரஸ்ஸல்ஸ் காட்சிக் கட்டிடத்தை வடிவமைத்தேன். அதன் பின்னர் நான் பெரும்பாலும் இசையில் தான் ஈடுபட்டு வருகிறேன். சிற்சில சமயங்களில் மட்டும் கட்டிடக் கலைப் பணியில் ஈடுபடுவதுண்டு.
உங்களுடைய சமீபத்திய திட்டம் எது ?
அயானிஸ் ஸென்னாகிஸுடன் ஓர் செவ்வி (நேர்காணல்)
மைசேன் ஆல்ஃபா (1978) எனும் இசையமைப்பு குறியீடுகள்
இசைக்கும் கட்டிடக் கலைக்குமிடையே ஏன் இத்தகையதொரு நெருங்கிய தொடர்பு உள்ளது ?
இசை வரிசைகளுக்கும் கட்டிடங்களுக்குமிடையே இம்மாதிரி ஒற்றுமையை வரலாற்றில் காட்ட முடியுமா ?
ஆனால் உங்களைப் பொறுத்தவரை இம்முறை தான் எல்லாவற்றுக்கும் அடிப்படையானது அல்லவா ?
இசையமைப்பாளர் என்ற முறையில் பௌதீக இயல் பரிசோதனைகள் மூலம் பயனடைந்தது உண்டா ?
இசைக்கலைஞர் என்ற முறையில் உங்கள் படைப்புகளில் கணித மின் பொறி இயலைப் பயன்படுத்தி புதிய சாதனைகளை ஆற்றியுள்ளீர்கள். உபிக் (UPIC) என்ற இசையமைக்கும் கருவியை உருவாக்கியுள்ளீர்கள். இது பற்றிக் கூற முடியுமா ?
ஒரு குறிப்பிட்ட இசை மொழியை (இப்படிக் கருவி மூலம்) கற்பதன் மூலம் குழந்தைகளின் தனித்தியங்கும் தனமை பாதிக்கப்படுவதில்லையா ?
இப்பொழுது மின் அணுப்பொறியை எப்படி பயன்படுத்துகிறீர்கள் ?
பழமையான இசைக்கும் தற்கால நவீன இசைக்குமிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உண்டா ?
இசைக்கலைஞன் அவன் காலத்திய மற்ற துறைகள் பற்றிய பொது அறிவு பெற்றிருக்க வேண்டியது அவசியமா ?
அறிவியல் பூர்வமான மையக் கருத்து, உங்கள் இசையமைப்பில் சிறந்திருப்பதை விளக்கிச் சொல்ல முடியுமா ?
டா வின்சியின் ‘மாட்ரிட் குறிப்பேடுகள்’
அன்னா மரியா ப்ரிஸியோ
கண்டெடுக்கப்பட்ட சுவடிகள் லியோனார்டோ டா வின்சியினது அறிவின் புதிய இயல்புகளின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது.
அண்மைக் காலம் வரை மறைந்து விட்டதாக நாம் கருதி வந்த இரண்டு பெரிய கையேட்டுச் சுவடிகள் இப்பொழுது கிடைத்துள்ளன. படங்களுடன் குறிப்புகளும் கொண்டு விளங்கும் அவை லியோனார்டோ டா வின்சியின் சிந்தனை பற்றியும், செயல் பற்றியும் விறுவிறுப்பான புதிய அத்தியாயத்தையே தோற்றுவித்துள்ளன.
லியோனார்டோ டா வின்சியின் மாட்ரிட் சுவடிகள் பற்றிய அரிய கதை
பாவ்லோ கல்லூஸி (Paolo Galluzzi)*
லியனார்டோ தம்மையே வரைந்த இந்த ஓவியம் இங்கிலாந்தில் விண்ட்ஸரிலுள்ளது. இதில் அவரது கையொப்பம் காணப்படுகின்றது. அவர் தனது இடது கையால் எழுதியும், வரைந்தும் வந்தார். தமது குறிப்பேடுகளில் பெரும்பாலும் கண்ணாடியில் தெரிவது போன்று வலப்புறத்திலிருந்து இடப்புறமாக எழுதியிருந்தார். இந்த இரு பக்கங்களி காணப்படும் ‘லோ லியோனார்டோ’ எனும் கையொப்பமும் அவ்வாறே எழுதப்பெற்றுள்ளது. அதற்கு மேலே அவரது கையொப்பம் வழக்கம்போல் இடமிருந்து வலமாக எழுதப்பெற்றுள்ளது.
குறிப்பேடுகள் பற்றிய சில குறிப்புகள்
நீண்டகாலமாக மறைந்துபோன இரு குறிப்பேடுகளில் காணப்படும் லியோனார்டோ டா வின்சியின் சாதனைகளை ஒரு அறிமுகம் தான் இக்கட்டுரை. இந்த ஏடுகள் 1965-ல் மாட்ரிட் நகரில் கண்டெடுக்கப்பட்டன. அதனாலேயே ’மாட்ரிட் குறிப்பேடுகள்’ என பெயர் பெற்றன. ’மாட்ரிட் சுவடிகள் I, II எனப்படும் இவை சென்ற நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட அருஞ்சுவடிகள் எனலாம். ’மாட்ரிட் சுவடிகளின்’ 5 தொகுதியுள்ள நகல் பதிப்புகளை ஸ்பெயினிலுள்ள டாரஸ் பதிப்பகமும், மெக்கிரா ஹில் எனும் அமெரிக்க நிறுவனமும், ஸ்பெயின் அரசாங்க துனையுடன் வெளியிட்டுள்ளது. (1) வின்சியை பற்றி ஆய்வுகள் நிகழ்த்திய லடிஸ்லாவ் ரேட்டி இந்நூலை பதிப்பித்தார். இவர் சென்ற ஆண்டு அக்டோபரில் இறப்பதற்கு முன் படி எழுதுவதையும், (இக்கால இத்தாலி மொழியிலும், ஆங்கிலத்திலும்) மொழிபெயர்ப்பதை முடித்து விட்டார். ”இதனை வெளியிட அமெரிக்க நிறுவனம் உதவி செய்தது. படங்களின் மீள் நகல்களை சுவிட்ஸர்லாந்தில் எடுக்கப்பட்டன. அதன் அமைப்பு இங்கிலாந்திலும், பதிப்பு இத்தாலியிலும், அமெரிக்காவிலும், அச்சடித்தல் ஸ்பெயினிலும் நடைபெற்றது. முகப்பு அட்டை ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசில் தயாரிக்கப்பட்டது.” படங்கள் அதிகம் இடம் பெற்ற ’நாம் அறியாத லியனார்டோ’ (20) எனும் 320 பக்க நூல் ஒன்றையும் மெக்கிரா ஹில் பதிப்பகம் வெளியிடுகின்றது. லடிஸ்லாவ் ரேட்டி தான் அதன் பதிப்பாசிரியர். ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மானிய கூட்டாட்சி குடியரசு, நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இது வெளியிடப்பட்டது. அன்மையில் தொகுக்கப்பட்ட மற்றோர் அரிய லியனார்டோ சுவடியாகிய ‘கோடக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ ஃப்ளாரன்ஸ் பதிப்பகமாகிய கியுண்டி – பார்பரா, ஜான்சன் மறுபதிப்பு நிறுவனத்தாரால் (3) 12 தொகுதியுள்ள முழு அளவு மறு நகல் பதிப்பாக வெளியிடப்பட்டது.
லியனார்டோ டா வின்சி சிறந்த ஓவியர் மட்டுமல்ல ; அவர் தேர்ந்த விஞ்ஞானியும், பொறியாளரும் ஆவார். அவர் இறந்த 1519-ஆம் ஆண்டுக்கு பின் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டு காலமாய் அவரது ஏராளமான விஞ்ஞான குறிப்புகளும், பொறியியல் வரைபடங்களும் இருளில் கிடந்தன. பல குறிப்புப் புத்தகங்களிலும், துண்டுக் காகிதங்களிலும் புதைந்து கிடந்த அவை ஒழுங்குபட வைக்கப் பெறாமல், படிக்க இயலாதபடி தாறிமாறாக இருந்தன. எனவே 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை லியனார்டோ ஓர் ஓவியர் என்ற புகழே மேலோங்கியிருந்தது. அவ்ரது கையெழுத்துக் குறிப்புகள் கவனிப்பாரற்றுக் கிடந்தாலும் , பின்பு அவை கிடைத்தபோது அவற்றை வகைதொகையின்றி பிரித்து சிறகடிகடிக்க செய்ததாலும், அவருடைய விஞ்ஞான அறிவு, பொறியியல் திறமை ஆகியவற்றைப் பற்றி வெளியில் தெரியவில்லை. அவரது கையெழுத்துக் குறிப்புகளில் பெரும்பாலானவை அகப்படாமலே போனதும் உண்டு.
லியனார்டோ தன் உயிலில் கையெழுத்துக் குறிப்புகள் யாவும் தன்னுடைய விசுவாசமிக்க மாணவர் பிரான்செஸ்கோ மெல்ஸி என்பவரை சேரவேண்டுமென்று எழுதியிருந்தார். பிரான்செஸ்கோ தனது குருவான லியனார்டோ பல இடங்களுக்கு பிரயாணம் செய்தபோது கூடவே இருந்த்து மட்டுமல்லாமல், லியனார்டோ டா வின்ஸி இறக்கும் தருவாயிலும் உடனிருந்தவர். லியனார்டோ மரணத்திற்கு பின் பிரான்செஸ்கோ தன்னுடைய குழுவின் கையெழுத்துப் பிரதிகளை மிலான் நகரினை அடுத்துள்ள வாப்ரியோ டி அட்டா ஊரிலுள்ள தனது இல்லத்திற்கு கொண்டு கொண்டு சென்றார். 1570ஆம் ஆண்டு பிரான்செஸ்கோ இறந்த பின் அவரது மகனும், வாரிசுமான ஒரேஸியா மெல்ஸி லியனார்டோவின் கையெழுத்துப் பிரதிகளை அவற்றின் முக்கியத்துவத்தை சிறிதும் உணராமல், வேண்டாத சாமன்களை போட்டு வைக்கும் மாடியிலுள்ள ஒரு பரணில் போட்டு வைத்தார்.
அவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தர வரும் லெலியோ கவார்டி என்ற ஆசிரியர் லியனார்டோவின் 13 கையெழுத்துப் பிரதிகளை எடுத்துச் சென்றார். பின்னர் அவற்றை ஃப்ளாரன்ஸ் நகரத்துக்கு கொண்டு சென்ற அவர் அங்கே பிரான்செஸ்கோடி டி மெடிசிஸ் என்ற பிரபுவிடம் நல்ல விலைக்கு விற்க முயன்றார். ஆனால் அந்த பிரபுவின் ஆலோசகர் ஒருவர் ’மேதகு பிரபு அவர்கள் இதனை பொருட்படுத்தத் தேவையில்லை’ எனக் கூறியதையடுத்து விற்பனை முயற்சி வெற்றிபெறவில்லை. எனவே கவார்டி தனது நண்பர் அம்ப்ரோஜியோ மெஸண்டா என்பவரிடம் அவற்றைக் கொடுத்து, ஒரேஸியேவிடமே சேர்த்து விடும்படி சொன்னார். ஆனால் ஒரேஸியோ அதனை பெற்றுக்கொள்ளாமல் அவரிடமே திருப்பியளித்து விட்டார். இது குறித்து மெஸண்டா தனது நினைவுக் குறிப்பில் இப்படி எழுதி வைத்துள்ளார். ”அத்தனை பாடுபட்டு கொண்டு சென்ற பிரதிகளை ஒரேஸியா வேண்டாமென்று சொல்லவும் நான் அசந்துபோய் விட்டேன். அதனை எனக்கே பரிசாக எடுத்துக்கொள்ள சொல்லி விட்டார்.”
இதனை அடுத்து லியோனி என்ற சிற்பி லியனார்டோவின் கையெழுத்துப் பிரதிகளைப் பற்றி கேள்விபட்டு, அக்கறையுடன் அதனை பிரான்செஸ்கோ மெல்ஸியின் வாரிசுகளிடமிருந்து பெற முயன்று வெற்றி பெற்றார். அதனுடன் ஒரேஸியோ மாஸெண்டா வைத்துக்கொள்ளும்படி கொடுத்திருந்த 13 கையெழுத்துப் பிரதிகளில் பத்தை வாங்கிக் கொண்டார். இவ்வாறு 1582-க்கும் - 1590-க்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் அநேகமாக எல்லா கையெழுத்துப் பிரதிகளும் லியோனி வசம் வந்து சேர்ந்தன.
அக் கையெழுத்துப் பிரதிகளை சரிவரத் தொகுத்து கொடுக்க வேண்டுமென்று எண்ணி, லியோனி அவற்றை பலவாறு பிரித்து தனக்கு தோன்றியபடி தொகுதிகளாக்கி வைத்தார். ஆனால் அவர் அத்தகைய தொகுப்பு வேலைக்கு சிறிதும் தகுதி படைத்தவர் அல்லர். அவருடைய இந்த முறையில்லாத முயற்சியால் தீமையே விளைந்தது. கையெழுத்துப் பிரதிகளின் வரிசையமைப்பையே மாற்றி, எப்போது எது எழுதப்பட்டது, எது முந்தியது, எது பிந்தியது என்று எதுவும் தெரிந்து கொள்ள இடமில்லாதபடி குழப்பி விட்டிருந்தார். அதனால் அவசியமான விவரங்கள் ஏதும் தெரிந்துகொள்ள முடியாமலே போயின. பிரதிகளின் ஒழுங்கு முறை கெட்டது மட்டுமல்லாமல் அவை சிதறிப்போகவும் நேரிட்டது.
மேலே : லியோனார்டோ கண்ணாடியில் தெரிவதுபோல் மாற்றி எழுதிய பெரிய எழுத்துக்கள். இவை ‘கோடெக்ஸ் மாட்ரிட் I’ லிருந்து எடுத்து பெரிதாக்கப்பட்டவை. லியோனார்டோவின் எழுத்துக்கள் எல்லாம் இத்தனை அழகாக இருக்கவில்லை. அவர் அடிக்கடி குறிப்பேடுகளின் ஓரங்களில் தமது கருத்துகளை கிறுக்கி வைத்தார். ஒவ்வொரு வாசகத்தின் தொடக்கத்திலுள்ள பெரிய எழுத்துக்கள் கண்ணாடியில் தெரிவது போன்று மாற்றி எழுதப்பட்டிருந்தன.
இந்த மிதி இயந்திரம் ‘கோடெக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ தொகுப்பில் உள்ளது. கால்வாய் வெட்டும்போது தோண்டப்படும் பொருளை வெளியே எடுப்பதற்காக லியோனார்டோ இதனை வரைந்திருந்தார். அவரது காலத்தில் ஃப்ளாரன்ஸுக்கும் கடலுக்கும் இடையிலுள்ள ஆர்னோ நதியின் சில பகுதிகளில் போக்குவரத்து நடைபெற முடியாமல் இருந்தது. ஏனெனில் அதில் பல வளைவுகள் இருந்த்து மட்டுமல்லாமல் நீர் மட்டமும் திடீர் திடீரென மாறியவாறு இருந்தது.
மேலே : ‘மாட்ரிட் கோடக்ஸ் I’ – லிலுள்ள வரைபடம். லியோனார்டோ பொறிகளின் அட்டிப்படைக் கூறுகளை விளக்கும் பல படங்களில் இது ஒன்றாகும். இது திருகாணிகள், சக்கரங்கள் வழியாக ஆற்றலையும், இயக்கத்தையும் கடத்தும் ஒரு கருவியின் மாதிரி. இப்பொருள் பற்றி லியோனார்டோ தனது முன்வைப்புகளில் அடிக்கடி விளக்கி வந்தார்.
ஒரேஸியோவிடமிருந்து கையெழுத்துப் பிரதிகளை வாங்கும்போது லியோனி தான் அவற்றை ஸ்பெயின் தேசத்து மன்னன் இரண்டாம் பிலிப்பிடம் பரிசாகக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தார். அதன்படி லியோனி நடக்காமல், ஒரு சிலவற்றை ஒப்புக்கு மன்னனிடம் கொடுத்துவிட்டு மீதியை தானே வைத்துக்கொண்டார். லியோனொயின் காலத்திற்கு பின்னர் அவருடைய மருமகனும் வாரிசுமான போலிடோரோ கால்ச்சி என்பவரின் கைக்கு அவை வந்தன.
1622ஆம் ஆண்டுவாக்கில் போலிடோரோ கால்ச்சி அக் கையெழுத்துப் பிரதிகளின் பெரிய தொகுப்பு ஒன்றை மிலானைச் சேர்ந்த காலீஸோ அர்கோனாட்டி பிரபுவுக்கு விற்றுவிட்டார். அத் தொகுப்பு இன்று ‘கோடக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ என்று அழைக்கப்படுகின்றது. 1636-ல் அர்கோனாட்டி பிரபு அத் தொகுப்பை மிலானில் உள்ள அம்ப்ரோஸியன் நூலகத்திற்கு அளித்தார். அர்கோனாட்டி பிரபுவிற்கு கிடைத்த வேறு சில கையெழுத்துப் பிரதிகளும் அந் நூலகத்திற்கே அளிக்கப்பட்டன.
லியோனின் கைவசமிருந்த இதர கையெழுத்துப் பிரதிகள் எப்படியோ இங்கிலாந்து தேசம் போய்ச் சேர்ந்தன. அருண்டேல் பகுதிக்கு பிரபுவாக விளங்கிய தாமஸ் ஹோவார்டு என்பவர் லியோனி தொகுத்த இரண்டாவது தொகுதியை வாங்கினார். பல வரைபடங்கள் அடங்கியுள்ள இத் தொகுப்பு இறுதியாக ராயல் விண்ட்ஸர் நூலகத்திற்கு வந்து சேர்ந்தது. அதனால் இத் தொகுப்பு இன்றுவரை ‘விண்ட்ஸர் தொகுப்பு’ என்றே அழைக்கப்படுகிறது. தாமஸ் ஹோவார்டு மற்றொரு தொகுப்பையும் வாங்கியிருந்தார். பின்னர் அவருடைய வாரிசு ஒருவர் அதனை ராயல் சொசைட்டிக்கு வழங்கினார். இத் தொகுப்பின் இன்றைய பெயர் ‘கோடெக்ஸ் அருண்டே 263’ என்பதாகும். தாமஸ் ஹோவார்டு தொகுப்புகளை வாங்கிய காலம் 1630 – 1640 என வரையருக்கலாம்.
18ஆம் நூற்றாண்டில் லியனார்டோவின் கையெழுத்துப் பிரதிகள் சில எங்கெங்கோ சுற்றி வந்தன. 1715-ல் லீசெஸ்டர் பிரபு ஒரு தொகுப்பை வாங்கி இங்கிலாந்து கொண்டு சென்றார். அத் தொகுப்பிற்கு அவரது பெயரே விளங்கி வருகிறது. பல்வேறு சொற்கள் குறிக்கப்பட்டுள்ள இன்னொரு தொகுப்பான ’கோடெக்ஸ் ட்ரைவல்சியானஸ்’ அம்ப்ரோஸியன் நூலகத்திற்கு 1715ஆம் ஆண்டு வாக்கில் வந்து சேர்ந்தது. அந் நூலகத்திற்கு முதலில் இதனை நன்கொடையாக கொடுத்திருந்த அர்கோனாட்டி பின்பு அதை எடுத்துக்கொண்டார். அது சுற்றி வந்து 1750ஆம் வாக்கில் மறுபடியும் அம்ப்ரோஸியன் நூலகத்திற்கே வந்தடைந்தது.
இவ்விரு படங்களும் ரோமின் அருகிலுள்ள க்ரோட்டா ஃபெரட்டா மடாலயத் துறவிகள் அணமையில் கண்டெடுத்த ‘கோடெக்ஸ் அட்லாண்டிக்கஸ்’ சுவடித் தொகுப்பிலுள்ளவை. இப்போது இது 12 தொகுதியுள்ள நகல் பதிப்பாக வெளிவந்துள்ளது.
கால்வாய் வெட்டும் இயந்திரம். இது மண்ணைத் தோண்டி தரையில் குவிக்கிறது.
தொடரும்......
பாவ்லோ கல்லூஸி (Paolo Galluzzi)*
இவர் மேற்கு ஃப்ளாரன்சின் வின்சியிலுள்ள லியோனார்டோ அருங்காட்சியகம் மற்றும் நூலக இயக்குநர்.
Friday, 27 April 2018
புரட்சிகர இயக்குநர் கென் லோச்சுடன் ஓர் உரையாடல்
டேவிட் வால்ஷ்
டேவிட் வோல்ஷூம், ஜோஆன் லோறியரும் சமீபத்தில் நடைபெற்ற டொரொண்டோ திரைப்பட விழாவில் இயக்குனர் கென் லோச்சுடன் அவருடைய சமீபத்திய திரைப்படம் ROUTE IRISH குறித்து உரையாடினார்கள். அவருடன் திரைக்கதை எழுத்தாளர் போல் லாவர்டியும் பங்கு பெற்றிருந்தார்.
கென் லோச்
டேவிட் வால்ஷ் : ஈராக்கிய யுத்தத்தை ஓர் அசாதாரண அணுகுமுறையில் கையாளும் ROUTE IRISH திரைப்படத்தின் கரு எவ்வாறு உருவானது?
கென் லோச் : ஈராக்கிய யுத்தம் பேசப்படாமல் இருக்கும் ஒரு பெரிய பிரச்சினையாகும். மேலும் எங்களைப் பொறுத்த வரையில் அதுவொரு மிகப்பெரிய பிரச்சினை. ஈராக்கிய யுத்தம் குறித்தோ அல்லது ஈராக்கிய யுத்தத்தில் பிரிட்டிஷின் நடவடிக்கைகள் குறித்தோ நீங்கள் ஒரு படத்தை உருவாக்க ஆரம்பித்தால், அதில் பல சதிவேலைகளைக் காண முடியும். அவற்றையும் தாண்டி, யுத்தத்தின் சட்டமீறல்கள் மற்றும் ஈராக்கியர்களின் படுகொலைகள், யுத்தத்திற்கான அரசியல் காரணங்கள் மற்றும் எரிபொருள் தேவை... இது போல எத்தனை எத்தனையோ குறித்து ஒரு படத்தை நீங்கள் உருவாக்க முனைந்தால்... மாறாக, அது அனுமானமாக தான் அமையும்.
ஆகவே தான் யுத்தத்தில் இருந்த தனியார்மயமாக்கம், வன்முறையைத் தனியார்மயமாக்கியது மற்றும் எவ்வாறு அது மறைக்கப்பட்டிருக்கிறது என்பனவற்றையும் குறித்தும் நாங்கள் பேசினோம். அத்துடன் எவ்வாறு எவரும் அதை விரும்பவில்லை என்பதையும், தேர்தல் ஆணையம் "இது தான் எங்களுக்கு வேண்டும்" என்று ஒருபோதும் கூறவில்லை என்பதையும் எடுத்தாண்டோம். ஆனால் எவ்வாறிருப்பினும், அது தான் நடந்திருந்தது, அதாவது இராணுவ நடவடிக்கைகள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
போல் லாவர்டி : அந்த இஃபெர்கஸ் என்ற கதாபாத்திரத்தைப் படைத்திருந்தார். அது தான் தொடக்க-புள்ளி என்று நினைக்கிறேன். ஒரு முன்னாள் சிப்பாயாக இருந்த அவர், ஒரு தனியார் இராணுவ ஒப்பந்த நிறுவனத்திற்காக பணியாற்ற செல்கிறார். அதன்பின்னர் தான் ஒரு நண்பரின் மரணத்தைக் குறித்த யோசனை போலுக்குத் தோன்றியது. அந்த மரணத்தைக் குறித்த விசாரணையும், அந்த விசாரணையின் போக்கும் யுத்தத்தை தனியார்மயமாக்கியதை குறித்து கூற வேண்டிய அனைத்தையும் பொருத்தமாக வெளிக் கொணர்ந்தது.
டேவிட் வால்ஷ் : இதுவொரு சிக்கலான மற்றும் சவாலான அணுகுமுறையாக உள்ளது.
கென் லோச் : உண்மை தான். இதுவொரு கடினமான படமாக, வெளியிடுவதற்கும் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய படமாக அமையும் என்பதை நாங்கள் எப்போதும் புரிந்து கொண்டிருந்தோம் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் உடனடியாக அனுதாபத்தைப் பெற முடியாத ஒரு கதாநாயகனை நீங்கள் கையாள்கிறீர்கள். மேலும் அவருடைய சிதைவு, அவர் பின்னர் பெற்ற உளவியல்ரீதியான அழுத்தம் ஆகிவற்றையும் அது கையாள்கிறது. இறுதியில் அனுமானிக்க முடியாத "பைத்தியக்கார நடிப்பு" நிறைய எங்களுக்குத் தேவைப்பட்டதால், படம் எடுக்கப்பட்டு கொண்டிருந்த போது, நடிகர்களின் நடிப்பை தீர்மானிப்பதில் நான் சிக்கலை உணர்ந்தேன். “பைத்தியக்காரத்தனத்தில்" அம்மாதிரியான நபர்கள் காட்டும் அந்த அனைத்து அறிகுறியையும் மார்க் மிகவும் உள்ளார்ந்த முறையில் நடித்திருக்கிறார்―அது தேவையானதை வெளிப்படுத்தி இருப்பதாகவே நான் நம்புகிறேன்.
வேறொரு விஷயமும் சவாலாக இருந்தது.... யுத்தம் குறித்த திரைப்படங்களில் ―அவை வியட்நாம் குறித்தவையாக இருந்தாலும் சரி அல்லது மேற்கு நாடுகள் ஈடுபட்ட ஏனைய பிற யுத்தங்களாக இருந்தாலும் சரி― உண்மையிலேயே பலவீனமாக இருப்பதாக நாங்கள் நினைத்த விஷயங்களில் ஒன்று என்னவென்றால், எப்போதுமே யுத்தங்கள் மேற்கத்தியவர்களுக்கு, குறிப்பாக அமெரிக்கர்களுக்குத் துக்கத்தை அளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுவதாக நாங்கள் உணர்ந்தோம். உண்மையில், முதலாவதாகவும் முற்றிலுமாகவும், தாக்குதலுக்கு உள்ளான மக்களுக்கு அதுபோன்ற ஒரு யுத்தம் துக்ககரமானது தான்.
ஆங்கிலேயரான நம்முடைய அனுதாபி, அவருடைய சொந்த சோகத்தைக் கொண்டிருக்கிறார். ஆனால் ஈராக்கியர்கள் அதற்கும் மேலாக பாதிப்பை அனுபவித்தார்கள் என்ற உணர்வுடன் பார்வையாளர்கள் வெளியில் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். அதை சம அளவில் கொண்டு வர உண்மையிலேயே மிகவும் கடினமாக இருந்தது... ஏனென்றால் இந்த படத்தை எங்களால் ஈராக்கில் செய்ய முடியவில்லை―எனக்கோ அந்த மொழி பேசத் தெரியாது. அந்த உலகத்திற்குள் ஒரு திரைப்பட இயக்குனராக உங்களால் உள்ளேயே நுழைய முடியாது. ஆனால், இருந்த போதினும், ஈராக்கியர்கள் தான் அந்த சோகத்தை அனுபவித்தார்கள் என்ற உணர்விற்குள் பார்வையாளர்களை நாங்கள் கொண்டு வர விரும்பினோம். அதற்காக தான் அந்த தாயின், குழந்தையின் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டிருந்தன...
கென் லோச், போல் லாவர்டி
போல் லாவர்டி : இங்கே, உண்மையிலேயே முக்கியமான ஒன்றாக நான் கருதும் ஒருவிஷயத்தைச் சேர்க்க விரும்புகிறேன். இந்த பிரச்சினை முடிந்து போன ஒன்றாக, "ஈராக் பலவீனமாகிவிட்டதாக” மக்கள் பேசுவதை நீங்கள் கேட்கக்கூடும். குறிப்பிடத்தக்க தற்பெருமையுடன், டோனி பிளேயர் அவருடைய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன் ஈராக்கில் என்ன நிகழ்ந்ததோ அதற்காக மேற்கு எவ்வாறு அதன் நம்பிக்கையை இழக்காமல் இருக்க வேண்டும் என்பது குறித்து அவர் பேசுகிறார். அவர் நிறைய கூறுகிறார்... மேற்கின் மூலமாக, அவர் அவரையும் இங்கிலாந்தையுமே குறிப்பிடுகிறார்.
“இப்படி நடக்கும் என்று நான் காணவில்லை; இதுவொரு பயங்கரமான சிக்கல் தான்; உண்மையிலேயே இதற்காக நான் வருந்துகிறேன்,” என்று பிளேயர் கூறுகிறார். ஆனால் இதன் விளைவாக, அடுத்த 10 ஆண்டுகளில் என்ன நடக்க இருக்கிறது? நாங்கள் ஒரு பெரும் ஆய்வை மேற்கொண்டோம்; அத்துடன் முன்னாள் சிப்பாய்கள் மற்றும் தொண்டு அமைப்புகளுடன் நிறைய நேரம் செலவிட்டோம். அத்தகைய அமைப்புகளில் ஒன்று COMBAT STRESS என்றழைக்கப்படுவது. ஏனைய யுத்தங்களில் இருந்து, முதல் வளைகுடா யுத்தத்தில் இருந்து, அயர்லாந்தில் இருந்து, இன்னும் ஏனையவைகளில் இருந்து வந்த மக்கள் அதில் இருந்தார்கள் என்பதே குறிப்பிடத்தக்கதாகும். “அடுத்த தசாப்தத்தில் சிகிச்சைக்குப் பிந்தைய அழுத்தத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் பெரும் அலையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று பணியாளர்கள் தெரிவித்தார்கள். மேலும் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதை அவர்கள் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
நம்முடைய சமூகங்களில் உள்ள சிப்பாய்களின் தலைகளில் யுத்தம் திரும்பி வருகிறது. மீண்டும், அது ஈராக்கின் முற்றிலுமான சீரழிவுடன் ஒப்பிட முடியாத ஒரு சோகமாகும். ஆனால் அது தான் நடக்க போகிறது.
டேவிட் வோல்ஷ் : அது தான் நான் கேட்க இருந்த அடுத்த கேள்வியாக இருந்தது. நிச்சயமாக, பிரிட்டனுக்கு யுத்தம் திரும்ப வரப்போகிறது என்பதையே படம் விளக்குகிறது.
கென் லோச் : நாங்கள் வெளிப்படுத்த விரும்பிய இன்னொரு கருத்து இது. நிச்சயமாக போலின் திரைக்கதையின் நோக்கத்தில் அதுவும் இருந்தது. அதாவது, பிரிட்டனுக்கு ஒரு யுத்தத்தைக் கொண்டு வந்து காட்டுவது, உள்நாட்டில் யுத்தத்தின் உண்மையான தாக்கத்தை கொண்டு வந்து காட்டுவது. இதைத் தான் சித்திரவதையும், அதன்பின்னர் வரும் கார் வெடிகுண்டு வெடிப்பும் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இங்கே விளைவுகள் இல்லாமல் அங்கே அவற்றை எல்லாம் நீங்கள் செய்துவிட முடியாது.
டேவிட் வால்ஷ் : “என்னால் வித்தியாசமான மக்களாக இருக்க முடியாது" என்று கதாபாத்திரம் கூறுகிறது. பிராங்கி மற்றும் ஃபேர்கஸூம் அவர்களுக்கு அவர்களே கொடூரமான சுமைகளைச் செய்திருப்பதால், அவர்கள் செய்யும் பயங்கரமான விஷயங்கள் அந்த கதாபாத்திரங்களுக்கு பொருந்தாத வகையில் படத்தின் காட்சிகளில் இருப்பதாக தோன்றுகிறதே.
போல் லாவர்டி சுவாரசியமான கேள்வி. நாங்கள் நிறைய முன்னாள் சிப்பாய்களோடு பேசினோம், தொடக்கத்தில் இத்தகைய மையங்களில் ஒன்றில் நான் நான்கு நாட்கள் தங்கியிருந்தேன். பல்வேறு உரையாடல்கள் மனதிற்குள் வந்தன. ஆனால் ஃபேர்கஸின் கதாபாத்திரத்திற்குப் பொருந்தக்கூடிய பல கருத்துக்களும் அவற்றில் இருந்தன. நான் ஒருமுறை ஒரு வயதான செவிலிய பெண்ணோடு பேசிக் கொண்டிருந்தேன். உணர்வுபூர்வமாக குழம்பிப்போயிருந்த முன்னாள் சிப்பாய்களோடு அவர் அவர்தம் வாழ்க்கையை கழித்திருந்தவர். நான் அவரிடம், 'அவர்கள் அனைவருக்கும் பொதுவான விஷயம் ஏதாவது உண்டா?' என்று கேட்டேன். அவர், “ஆம் உண்டு, அவர்கள் அனைவரும் அவர்களின் முந்தைய நாட்களின் துக்கங்களில் மூழ்கி இருக்கிறார்கள்" என்று சொன்னார்.
முதல் ஈராக் யுத்தத்திலிருந்து இருந்து வரும் ஒருவரை நான் பார்த்தேன். உண்மையில் அவர் கொன்ற மக்களைப் பார்த்து அவரே ஒட்டுமொத்தமாக துக்கத்தில் இருந்தார். அத்துடன் அவர் அவர்களைப் படமும் எடுத்து வைத்திருந்தார். அவற்றிற்கு கீழே, “என்னுடைய பழைய சுயம் எனக்குத் திரும்ப வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
கென் லோச் : நீர் குறிப்பிட்டிருந்த அந்த வரி, பொதுவாக நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. நாம் யாரோடு இருக்கிறோம் என்பதைப் பொறுத்து நாம் வேறுபட்டவர்களாக இருக்கிறோம். நீங்கள் சிலரோடு நன்கு பழகுபவராக இருக்கலாம், ஆனால் எல்லோருடனும் அவ்வாறு முடியாது.
ஆம், மக்களும் கொடூரமான விஷயங்களில் ஈடுபடுவார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட நாங்கள் விரும்பினோம். சூழ்நிலையும், கலாச்சாரமும், பொதுவான நிலைமைகளும் அதைத் தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் போது, நீங்கள் என்ன செய்வீர்கள். இவ்வாறான விஷயங்களை செய்யச் சொல்லி கலாச்சாரமும், சமுதாயமும் அவர்களை நிர்பந்திக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னால், தேசிய சேவைகளில் நாங்கள் ஈடுபட்டபோது, ஓர் எதிர்தரப்பு சிப்பாயைக் குத்துவதென்பது சாதாரணமான ஒரு இராணுவ பயிற்சியாக இருந்தது. அதை நீங்கள் நிறைய முறை செய்திருப்பீர்கள். துப்பாக்கி முனையில் இருக்கும் கத்தியை ஒருவர்மீது சொருகி, அதை திருகி, பின்னர் வெளியில் எடுத்திருப்பீர்கள். அந்த நிலைமை உங்களை அவ்வாறு மாற்றியது... நல்லது. நம்மால் நாம் விரும்பியபடி மாற முடியாது, ஏனென்றால் சவால்களை எதிர்கொள்ள முடியாத சிறுகுழந்தைகளின் நம்பிக்கையற்ற தொகுப்புகளால் நாம் இருக்கிறோம்... ஆனால் நிலைமை உங்களை வேறேதோ ஒன்றிற்குள் மாற்றியது என்பது தான் தத்துவமாக இருந்தது.
ஜோஆன் லோறியர் : ஏனென்றால் யுத்தம் ஒரு கொச்சை மொழியில் காலனித்துவமாக யுத்தமாக இருக்கிறது. ஒரு விதத்தில் சிப்பாய்கள் இதில் வஞ்சிக்கப்படுகிறார்கள். யுத்தத்தின் தன்மை அதற்கே உரிய ஒரு முழுமையான விளைவைக் கொண்டிருக்கிறது. அல்ஜீரியா, வியட்நாம்...
டேவிட் வால்ஷ் : சில காலமாக நான் இந்த வேலையைத் தான் செய்து வருகிறேன். திரைப்பட இயக்குனர்களோடு நான் பேசும் போதும், அவர்கள் வியந்து போற்றும் நபர்களைக் குறித்து அவர்களை கேட்கும் போதும், பெரும்பாலும் உங்களுடைய பெயர் வந்துவிடுகிறது. கொள்கைக்காக நிற்பவராகவும், சமூக பிரச்சினைகளிலும், தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியிலும் ஆர்வம் கொண்டிருப்பவராகவும் நீங்கள் மக்களால் பார்க்கப்படுகிறீர்கள். ஒரு வித்தியாசமான காலக்கட்டத்தில் இந்த பணியைத் தொடர எந்த வரலாற்று, கலைத்துவ முன்னோக்கு உங்களை அனுமதித்தது என்பது குறித்து ஏதேனும் உங்களுக்குக் கருத்து உண்டா?
கென் லோச் : இரண்டு நடைமுறை விஷயங்கள் எனக்கு உதவின என்று நான் நினைக்கிறேன். முன்னர் ஓரளவிற்கு வெற்றிகரமானதாக பார்க்கப்பட்ட இரண்டு விஷயங்களை ஒரேயொருவர் இயக்கி வந்தார், அதாவது தொழில் உலகில் ஏதோவொரு வகையில் நான் வாங்கப்பட்டிருந்தேன் என்பதைத் தான் அது குறித்தது. ஒன்று திரைப்படம் Kes, மற்றொன்று Cathy Come Home தொலைக்காட்சி தொடர். ஆகவே அவை கடந்த பல ஆண்டுகளுக்கு ஓர் அழைப்பு அட்டையாக இருந்தன. அவ்வாறு தான் அவை உதவின.
எழுத்தாளர்களுடன், முதலில் பேரி ஹைன்ஸூடன், பின்னர் ஜிம் அலேனுடன், பின்னர் அங்கே இருந்த அவருடைய கோமானுடன் பணியாற்றி வந்தது தான் அந்த மொத்த நிகழ்ச்சியையும் ஒரே பாதையில் வைத்திருந்த ஓர் ஒழுங்கமைப்பாக இருந்தது. விஷயம் என்னவென்றால், நீங்கள் ஒரு நல்ல குழுவைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் "எனக்கு அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை" என்று நினைக்கும் போது, அது உங்களுக்கு உதவும். ஏனென்றால் அங்கே அதேபோன்ற பகுப்பாய்வை, அதே கருத்தை வேறொருவரும் கொண்டிருப்பார். அது உதவிகரமாக இருக்கும். இரண்டு திசைகளிலுமே இது உண்மை என்று தான் நான் நம்புகிறேன். ஆகவே நீங்கள் எங்கே போய் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் ஒரு சமயோசித உணர்வை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.
அது மிகவும் முக்கியமானது. மற்றொரு விஷயம், சிக்கலான அமைப்புமுறையினூடாக படத்திற்கு நிதியளிக்க தங்களின் பாதையை ஏற்படுத்தும் தயாரிப்பாளர்களுடன் வேலை செய்வது. நிதி ஏற்பாடு செய்வதற்கு நாங்கள் ஒரு முறையைக் கண்டறிந்தோம். ஓரளவிற்கு எங்களுக்குச் சிறப்பைத் தேடித்தந்த நாடுகளில் இருந்து, குறிப்பாக பிரான்ஸ் மற்றும் இத்தாலி, மற்றும் ஓரளவிற்கு ஸ்பெயினில் இருந்தும், ஓரளவிற்கு ஜேர்மனியிலிருந்தும் கூட நிதி கிடைத்தது. ஏனென்றால் நாங்கள் படங்களில் நிறைய பணத்தை வாரி இறைக்கவில்லை. நாங்கள் போதியளிவிற்கு பணத்தைச் சேகரித்தோம். அவை பின்னர் அவற்றிற்குரிய பணத்தையும், அதையும் விட சற்று கூடுதலாகவும் சேகரித்தன. ஆகவே படத்திற்கு தேவையான பொருளாதார ஸ்திரத்தன்மை கிடைத்தது. பின்னர் அது தொடர்ந்து கொண்டிருந்தது. எங்களின் இரண்டு அல்லது மூன்று படங்கள் வர்த்தரீயில் தோல்வி அடைந்திருந்தால், நிச்சயமாக நாங்கள் ஓரங்கட்டப்பட்டு இருப்போம். மேலும் பெரும் அதிஷ்ட கூறுபாடுகள் நம்மை வந்தடையாமலேயே போயிருக்கும்.
ஜோஆன் லோறியர் : உங்கள் படத்திற்கென இரசிகர்கள் இருக்கிறார்கள். மக்கள் உங்கள் படங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு பொறுப்பைக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். வெளிப்படையாக கூற வேண்டுமானால், இதை அவர்களால் வேறெங்கும் பார்க்க முடியவில்லை.
டேவிட் வால்ஷ் : ஆம், நீங்கள் அந்த சிக்கலை தெளிவாகவும் விரைவாகவும் கடந்து விட்டீர்கள். அதுவொரு வரலாற்றுரீதியிலான பகுப்பாய்வு. எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, பெரும்பாலான மக்கள் 1970இல் இருந்து பாதையிலிருந்து விலகிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் அந்த காலகட்டத்தில் இடதுசாரிகளாக இருந்தார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்டளவிற்கு முன்னோக்கைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
கென் லோச் : அந்தளவிற்கு அது கடுமையானதல்ல. அப்போதைய நிகழ்வுகளில் அதற்கு குழிபறிக்கப்பட்டது, அப்படித்தானே? ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடத்திலோ.... நம்பிக்கை காலக்கெடு முடிந்துவிட்டதென்றால், விஷயங்கள் மீண்டும் அதை திணிக்கின்றன. யுத்தம் உங்களின் மீது பகுப்பாய்வைத் திணிக்கிறது; தற்போதைய மாற்றங்கள் அதை திணிக்கின்றன. பொருளாதார பொறிவு அதை திணிக்கிறது. காலத்திற்குக் காலம் அது நிரூபிக்கப்படுகிறது. ஆமாம், வாழ்க்கை அதை எடுத்துக்காட்டுகிறது.
போல் லாவர்டி அவர் மிகவும் எளிமையானவர். 40 ஆண்டுகளுக்கு இதை செய்து கொண்டிருக்க வேண்டுமானால், அதன்மீது நீங்கள் ஓர் ஆழமான உணர்வையும், பொறுப்பையும் ஏற்று கொண்டிருக்க வேண்டும். கடுமையாக நீங்கள் வேலை செய்ய வேண்டியதிருக்கும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.
கென்: சரியான வேலை இல்லாமல் இருப்பது தான் உன்னுடைய பிரச்சினை என்று என் தந்தை சொல்வதுண்டு.
டேவிட் வால்ஷ் : தற்போதைய நிலைமைகளில் சோசலிச திரைப்பட இயக்குனர்களுக்கு ஏதேனும் சிறப்பு பொறுப்புகள் அல்லது கடமைகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
கென் லோச் : அவசரமாக செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவற்றை எல்லாம் நாம் எவ்வாறு கையாளப்போகிறோம் என்பது நமக்கு தெரியவில்லை. நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்தால் இங்கே எல்லாவிதமான விஷயங்களையும் சொல்ல வேண்டும். இதை திரைப்பட வார்த்தைகளில் எப்படி கூறுவதென்று எனக்குத் தெரியவில்லை. எல்லா விஷயங்களுக்கும் அப்பாற்பட்டு, பொறுப்புகளை தோளில் சுமப்பது உங்களுடைய கடமையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
போல் லாவர்டி பல அருமையான கதைகள் உள்ளன. ஆனால் அந்த விஷயத்திற்குள் மனிதப் பாதையை கண்டறிவது... மிகவும் சிக்கலானதாகும்.
கென் லோச் : “விளங்கப்படுத்துவதற்காக" நாங்கள் முன்னனி விமர்சகர்களின் ஏச்சுபேச்சுக்கும் கூட ஆளாகி இருக்கிறோம். ஆனால் நம்பமுடியாத அளவிற்கு விளங்கப்படுத்தக்கூடிய ஜனரஞ்சக படங்களையும் நீங்கள் பார்க்கலாம். அவற்றைக் குறித்து நீங்கள் எதையும் சொல்லவே பயப்படுவீர்கள். ஏனென்றால் அவை பெருங்கூச்சலுடனும், எளிமையாகவும் இருக்கும். அவை அவற்றோடு தான் ஓடுகின்றன.
போல் லாவர்டி வாழ்க்கையின் ஆழமான விஷயங்களைக் கையாளும் எந்த படமும் மந்தமாக தான் இருக்கிறது என்று கூறும் விமர்சகர்களும் இருக்கிறார் என்றே நான் நினைக்கிறேன். அவை வெறுமனே போதிக்கின்றன; அவை விஷயத்திற்குள் இருக்கும் முரண்பாடுகளைக் காண்பதில்லை; நாங்கள் ஒரு படத்தை உருவாக்க முயற்சிக்கும் போது, மல்லுக்கட்ட வேண்டியதிருக்கிறது.
ஜோஆன் லோறியர் : அந்த பிரதிபலிப்பில் ஒரு வர்க்க எதிர்நடவடிக்கை இருக்கிறது. அவர்கள் வேறு ஏதோவொன்றை எதிர்பார்க்கிறார்கள்.
கென் லோச் : நல்லது, மைக்கேல் கோவ் இருக்கிறார்; இப்போது அவர் ஒரு கபினெட் மந்திரியாக இருக்கிறார். THE WIND THAT SHAKES THE BARLEY [அயர்லாந்து உள்நாட்டு யுத்தம் குறித்த திரைப்படம்] வெளியான போது அது குறித்து அவர் என்ன சொன்னார்? அயர்லாந்தினர் எப்போதுமே ஒரு ஜனநாயக வாய்ப்பை மறுத்திருந்தார்கள் என்று கூறினார்.
போல்: அவர் அந்த படத்தைப் பார்த்திருக்கக்கூட மாட்டார். அவர் தலையில் ஏற்றிக்கொண்டிருக்கும் வரலாற்றில் இருந்து அவர் பேசுகிறார். பொய் பேசும் ….. (இங்கே போல் மிகவும் அநாகரீகமான வார்த்தையைப் பயன்படுத்துகிறார்). கென்னையும், லெனி ரிபென்ஸ்டஹிலையும் [நாஜிக்களுக்கு ஆதரவான திரைப்பட இயக்குனர்] ஒப்பிட்ட செய்தியாளரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
டேவிட் வால்ஷ் : சுவாரசியமாக இருக்கிறதே!
கென் லோச் : ஆமாம், நான் லெனி ரிபென்ஸ்டஹிலையும் விட மோசமான பிரச்சாரகர் என்று அவர்கள் எழுதினார்கள். இந்த விமர்சனத்தில் எனக்கு மனவருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், அவர்கள் படத்தின் சாராம்சத்தைக் கையாள மாட்டார்கள். எடுத்துக்காட்டாக, ஈராக் யுத்தத்தைக் குறித்து ஒரு புத்தகம் மதிப்பாய்வு செய்யப்படுகிறது என்றால், அது புத்தகத்தையும், அதன் உள்ளடக்கத்தையும், யுத்தத்தின் உந்துசக்திகளையும், அதன் விளைவுகளையும் சார்ந்தே விவாதத்தைக் கொண்டு செல்லும். ஆனால் அவற்றில் எதைக் குறித்தும் சிறிதும் விவாதிக்காத ஒன்றை, முன்னணி பத்திரிகையின் ஒரு மதிப்பாய்வில் நம்மால் பார்க்க முடியாது.
நிறைய வர்க்க விரோதம் நிலவுகிறது என்று நான் நினைக்கிறேன். அதேநேரத்தில் "இடதில்", தற்போதைய உத்வேகம் மற்றும் தற்போதைய மனோபாவத்தைக் கைக்கொள்ள முடியாத, காலத்திற்குப் பொருந்தாத, பழைய மாதிரியிலான ஓர் அச்சம் இருக்கிறது. “HIP” (உத்வேகம்) என்பதற்கு இப்போதைய வார்த்தை என்னவாக இருந்தாலும், அவ்வாறு இருப்பதற்கான அழுத்தம் இருக்கிறது என்பது இன்றைய நிமிடம் வரைக்கும் புரிந்து வைத்திருப்பது, பற்றற்று இருப்பது, தணிந்து இருப்பது, தீவிர வெறியோடு இல்லாமல் இருப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது என்பதாக இருக்கிறது. அதை தான் நாங்கள் செய்கிறோம்.
Tuesday, 24 April 2018
லகான் : பேரரசுக்கெதிராக மட்டை பிடித்து ஆட வருதல்
Emanauele Saccarelli
லகான் : இந்தியாவில், முன்னொரு
காலத்தில்
இயக்கம் : அசுதோஷ்,
திரைக்கதை : குமார் தவே, சஞ்சய் தய்மா & அசுதோஷ் கோவாரிகர்
உரையாடல் : கே.பி.சக்சேனா.
இயக்கம் : அசுதோஷ்,
திரைக்கதை : குமார் தவே, சஞ்சய் தய்மா & அசுதோஷ் கோவாரிகர்
உரையாடல் : கே.பி.சக்சேனா.
சத்யஜித்ரே -உலகத் திரைப்பட
வரலாற்றின் உயர்ந்த இடத்திலுள்ளவர்- தனது நாட்டின் திரையுலகு பற்றி விமர்சனக்
குரலெழுப்பியவர், இந்தியத் திரைப்படங்களின் குறைகள் என்ன?
எனும் கட்டுரையில் 1948ம் ஆண்டு, நடைமுறையிலிருந்த அனுசரணை மற்றும் தப்பிக்கும் மனப்பான்மையுடன் இந்தியத்
திரைப்படங்கள் இருந்ததற்கு வருந்தியுள்ளார். இன்றும் நிலைமை மாறவில்லை.
பாலிவுட்டில்
(மும்பையில்) தயாராகும் நூற்றுக்கணக்கான படங்களில் பெரும்பான்மையானவை வழக்கமான
பாணிகளிலானவை. அவை, குடும்பத்தின் மிகையுணர்ச்சிகளின்
மெய்யான காதல், நிச்சயித்த திருமணம், வெளிநாடு
வாழும் இந்தியச் செல்வந்தரின் வாழ்வு - மரபு சார்ந்த தேவைகள் மற்றும் கவர்ச்சிமிகு
இளைஞர்களின் கனவு காட்சி இடையே இழிபடுகின்றதாயும் நம்புதற்கரிய இந்திய ராம்போ
தனியனாய் நின்று பாகிஸ்தானியப் படையை வெல்வதாயும் இருக்கும். அலுப்பூட்டும்,
இனிய மற்றும் உவகையூட்டல்கள், கட்டாயமான
மற்றும் கோணங்கித்தனமான பாட்டு --நடனங்கள், முட்டாள்தனமான
தேசியவெறிக் கூச்சல் -சுருக்கமாகச் சொன்னால்- பொதுவாக கருத்தாழங்கள்
தேவைப்படுகிற நிலைமையில் --இந்தியத் திரையை அல்லற்படுத்துகின்றன.
இது
வெட்கக்கேடானது, வரலாறும், செறிவுமிக்க
இந்திய நூல்கள், பெருமையும் சிக்கலுமான அதன் மக்கள், வெடிக்கும் தன்மைய முரண்பட்ட அதன் சமுதாய வாழ்வு எனத் தாராளமாக தரும்
செய்திகளை, பல லட்சம் டாலர்கள் கொட்டப்படும்
தொழிற்துறையால் மட்டுமே ஒருவேளை மயக்கத்திலாழ்த்தி உணர்விழக்கச் செய்யமுடியும்.
இந்தியப் படங்கள் -இன்னமும் மொத்தத்தில்- சிறப்பானதாயில்லை.
இந்த உள்ளடக்கத்தில்,
ஆஸ்கார் விருதுக்கு -சிறந்த வெளிநாட்டுப் படப்பிரிவில் அனுப்பப்பட்ட
படமான லகான் புத்துணர்வு
தருவதாய்த் தோன்றுகிறது. இந்தியத் தயாரிப்பளவில் இல்லையென்றாலும், மேலைத் தயாரிப்பை ஒப்பிடுகையில் நீளமாய்க் கருதப்படும். லகான்,
பார்ப்பவரின் பொறுமையைச் சோதியாது, பரிசளிப்பது
போல் வந்துள்ளது. ஒளிப்பதிவு சிறப்பாயுள்ளது, அருவருப்பான
கிரேசி சிங், தவிர்த்து, பிறர் நடிப்பு
ஏற்கக் கூடியதாயுள்ளது. இப்படம் எழுப்பும் கேள்விகள் வெற்றுத்தன்மையினின்று
விலகியவை. நடிகரும் தயாரிப்பாளருமான அமீர்கான் தொடக்கம் கலைஞர் அனைவரும்
ஈடுபாட்டுடன் ஆழ்ந்து, முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பதைத்
தெரிந்துகொள்ள முடிகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவ இராணுவத் தளபதி ஆட்சியிலுள்ள
சம்பானேர் எனும் கிராமம் வறட்சியாலும், கொடிய
நடைமுறைகளாலும், 1893ம் ஆண்டில் இருந்த நிலையைப் பற்றிக்
கூறுவதே, லகான் தன்
விருப்பம்போல் அதிகாரி கிராமத்தினரின் ஆண்டுக்கான வரியை - "லகான்"-ஐ
இருமடங்காக்குகிறார். மூர்க்கமான புவன் எனும் வேளாண் இளைஞனின் எதிர்ப்பால்
சீற்றமூட்டப்பட்ட தளபதி -தன்னுடன் இந்தியர்களை கிரிக்கட்டில் போட்டியிட
அறைகூவுகிறார். தோற்றால் வரி மும்மடங்காகும், வென்றால் வரி
நீக்கம். கிராமத்தின் வாழ்வே பணயமாக்கப்பட்ட நிலையில் புவன், வெளிநாட்டு விளையாட்டை அறியாத தொடக்கச் சிக்கலை மற்றும் ஐயுறவாதத்தை
சமாளித்து, சாதிமத வேறுபாடுகளையும் களைந்து, இந்தியக் கிராமத்தினரை வெற்றிக்கும் விடுதலைக்கும் அழைத்துச் செல்கிறான்.
இந்து -இஸ்லாமியர், தீண்டத்தகாதார்- அந்தணர் ஒன்றுபட்டு,
பிரிட்டிஷாரை அவர்களது விளையாட்டிலேயே வெல்கின்றனர்.
கிரிக்கெட்
பற்றிய அடிப்படை அறிவின்றி, கதையின் நுட்பங்களைப்
பாராட்டவியலாது. எடுத்துக்காட்டாக, புதிய பந்தில் சுழற்
பந்துவீச்சு (ஸ்பின் பெளலிங்) பயனற்றுப்போவது, அல்லது ஒரு
கிராமத்தானின் ஸ்பின் மற்றும் வீசும் விதம் குறித்த மறைமுகமான விதி, இந்த நுட்ப விவரங்கட்கு மேலாக, இவ்விளையாட்டு பற்றிய
அரசியற் குழப்பங்கள், கவனிக்கத்தக்கன. தனது, `எல்லைக்கு அப்பால்`, எனும் புத்தகத்தில்
ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சிறிது காலம் ஈடுபட்ட, டிரினிடாடின்
குறிப்பிடத்தக்க அறிவாளியான சி.எல்.ஆர்.ஜேம்ஸ், அவற்றை
நினைவு கூரத்தக்க வகையில் விவாதித்துள்ளார். இந்தியாவில், மேற்கிந்தியர்
போலவே கிரிக்கெட் பெரும்பான்மையானோரால் ஆடப்படுகிறது -எண்ணற்ற இளைஞர், செருப்பில்லாமல், சமன் செய்யப்படா களத்தில், தற்காலிகமாக தயாரித்த பொருட்களை வைத்துக்கொண்டு, விளையாட்டின்
மரபார்ந்த, பழக்கம் மற்றும் அது அன்னிய நாட்டில்
தோன்றிடினும் அவர்கள் அப்படி ஆடுகிறார்கள். காலனிய பாரம்பரியம் விரிவாக்கிய
விளையாட்டு எனும் உணர்வும் தாண்டி வரப்பட்டது. இருந்தும் இப்போது இந்தியாவில்
கிரிக்கெட் பிரமாண்டமான தொழில் ஆகும். தேசிய அணியின் விளையாட்டு வீரரது சம்பளம்,
முன்னுரிமை, மற்றும் வெற்றி நிர்ணய ஊழல்
முதலியன விளையாட்டின் மீதான தொடர்ந்து தேசிய அளவில் பரபரப்பும் பிரபலமான
வெறியாயுமுள்ளது. லகானின்சிறப்புகளில்
ஒன்று, சமூக மற்றும் வரலாற்றுப் பதட்டங்கள், புத்திசாலித்தனமாகக் கிரிக்கட் களத்தில் வெளிப்படுத்தப்படுவதாகும்.
கதை கூட
துணிவு, எதிர்த்தாக்குதல் மேலும் பிரிட்டிஷ்
ஏகாதிபத்தியத்திற்கெதிரான வெற்றி என்று உருவகப்படுத்துவதாக இருக்கிறது. இது ஒரு
முக்கியமான மற்றும் சிக்கலான விஷயத்திற்கானதாக ஆக்கும் என்பது பற்றி கேள்விக்கு
இடமில்லை. ஆயின் இப்போதைய சூழலில், ஏகாதிபத்தியத்தின் வீச்சு
எங்கும் பயங்கர வலுவுடன் எங்கும் உணர்கையில், லகான்போன்ற படங்கள், சிறப்பான மறைமுக
முக்கியத்துவத்துடன் விளங்குகிறது. பாலிவுட்டின் தயாரிப்புகளில் இது ஒன்றே மற்ற
அர்த்தமற்றவையினின்று வேறுபடுத்திக்காட்டும்.
இத்திரைப்படத்தின் செல்வாக்கு மற்றும்
முக்கியத்துவத்தை உணர்கையில், ஒருவர் தற்போதைய இந்திய
அரசியற் சூழலை --பொருளியல் மற்றும் அரசியல் விடுதலையை மேற்கிலிருந்து பெற்றதாய்ப்
பேணுகிற நேருவிசம் இல்லாமற் போன சூழலை கருத்திற் கொள்ள வேண்டும். அரசு, தொழிற் துறைகளைத் தனியார்மயமாக்கல், பொருளாதாரத்தின்
பல துறைகளை அந்நிய முதலீட்டை வரவேற்றல், பணக்கட்டுப்பாட்டில்
தளர்ச்சிகள் போன்ற-- சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் வேலைத் திட்டங்கள்" 1991இல் தற்செயலாக தொடங்கவில்லை, இவை இந்தியச்
சமூகத்தில் பேரிடர் தரும் விளைவுகளை ஏற்கனவே வீழ்படிவாக்கியுள்ளன. தேசியம் மற்றும்
ஏகாதிபத்தியம் பற்றிய கேள்விகள் புதுப்பிக்கப்பட்ட பலத்துடன் அரசியல் விவாதங்கள்
மற்றும் ஆழ்ந்த யோசனைகளிடையே எழும்பும் சூழலை உருவாக்கியுள்ளது.
"சீர்திருத்தத்திற்" காக வாதிடுவோர், மறைமுகமாக
-சில சமயம் வெளிப்படையாக- மேலை நாட்டிற்கு நாம் இந்தியாவை விற்கின்றோமா என நிச்சயம்
கேட்டுக்கொள்வர். அவர்களது பதில் --காங்கிரஸ் ஆட்சியில் தெடங்கி-- தீவிர
இந்துத்துவ தேசியவாதத்தை அதிகரித்த அளவில் உறுதிப்படுத்துகின்றது.
இந்த
உள்ளடக்கத்தில் பார்க்கையில், லகான்- ஐ விடுதலைக்கான இந்தியர்களின் போராட்டத்தின் அரைகுறையான, சம்பிரதாயமான படப்பிடிப்பாகக் காண்பது கடினம். மேலும் பல, இங்கு பணயமாக வைக்கப்பட்டு உள்ளன. திரைப்படம் -பல குறைகள், அணுகல்கள்- இருப்பினும் கருத்தாய்வுமிக்கது. திரைப்படத்தின் அரசியல்
விளைபயன்கள் மற்றும் நோக்கநிலை என்பனவற்றை மிகைப்படுத்தாதிருப்பினும்- நேட்டோ
படைகள் காப்பவராயும் உதவுபவராயும் தோன்றும் (மனிதர் இல்லா நிலம் எனும் படம்) வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதை வெல்வது- வியப்பை
அளிக்கவில்லை.
படத்தின் குறைகள் காலனியப் பிளவின் இருமருங்கிலும் காணப்படுகின்றன.
காலனியாதிக்கத்தைப் பொறுத்தவரை பிரிட்டிஷாரை ஒட்டுமொத்தமாயும் வெறும் தீயவராய்
காட்டும் வேலையினைத் தவிர்த்துள்ளது. ஆயினும் எதிர்ப்பக்கமாக, நெடிய தூரத்திற்கு ஊசலாடுகிறது. பிரிட்டிஷ் தளபதி எனும் போக்கிரியின்
உருவத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கொடுங்கோன்மைகளும் வன்செயல்களும்
தெளிவாகக் காட்டப்படுகின்றன. அவன் துரோகியாயும், பாதுகாப்பற்ற
விலங்குகளைக் கொல்வது, உள்நாட்டு அரசரை அவரது மத
நம்பிக்கைக்கு எதிராகப் புலாலுன்னச் செய்வது என்றிருக்கிறான். மாறாக, அவனது தலைமையகத்து உயர் அலுவலர்கள், கிரிக்கட்
போலவே அரசியலிலும் நேர்மையாயிருக்கிறார்கள். கதையின் முக்கியக் கட்டங்களில்,
அவர்கள் இழிவாகக்கருதும், தளபதியின் அசிங்கமான
தத்திரங்களைத் தடுக்கிறார்கள். கிரிக்கெட்டில், கிராமத்தினர்
வென்ற பின்னர் அவர்கள், கன்டோன்மென்டை விட்டு
வெளியேறுகின்றனர். பலரும் நன்கு அறிந்த ஒரு காட்சியில், காலனி
நிர்வாகத்தின் கணிசமான அளவு நாகரிகம் மற்றும் நியாயமானதன்மையின் உயர் மட்டத்தின்
காரணமாக, பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி கம்பத்தை விட்டுக்
கீழே இறங்குகையில், கிராமத்தினர் வெற்றிக் களிப்புடன்
கூடிநிற்பர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான இந்தியப் போராட்டத்தைப் பொறுத்தவரை
கிராமத்தினரை ஒன்று கூட்டுவதில் புவனின் முயற்சிகள் நியாயமாய்ப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக, தீண்டாமை பற்றிய பேச்சு உணர்வுமிக்கதும்
நம்மை அசத்துவதாயும் உள்ளது. ஆயினும் பிரிட்டிஷ் காலனியாதிக்க அரசு எந்திரத்தில்,
வரலாற்றில் தவிர்க்கவியலாத மோசடியாக இருந்த, இந்திய
இடைத்தரகரின் பாத்திரப்படைப்பு மற்றும் முதலாளித்துவ இந்திய தேசிய காங்கிரசால்
தோன்றிய தட்டினர்-முழுமையாக ஏற்கமுடியாதவாறு படைக்கப்பட்டுள்ளனர்.
காதற்கதையின்
இயல்புக்கு சாய்வதும் மட்டமான தேசிய அரசியலுக்குள் சறுக்கிச்செல்வதும் பற்றிய சில
சந்தேகங்களை இது எழுப்புகிறது. இந்தியச் சமூக அடுக்குகளில் சில -பிரிட்டிஷ்
காலனியாதிக்கவாதிகட்கு வழங்கும் ஒத்துழைப்பு பற்றிய வருத்தமான உண்மைகளைப் பூசி
மெழுகுவதில் யாருக்கும் பயனில்லை- அதுவும் இன்றைய சூழ்நிலையில்.
லகானில், கிராமத்தாரிடையே பிரிட்டிஷுக்கு உதவும் துரோகியும் உண்டு. ஆயின், அவன் நோக்கமோ அற்பமானவை ஆகையில், அவனும் இறுதியில்
தன் தவறுணர்ந்து திருந்துகிறான். இராஜாவின் பாத்திரம் -கிராமத்தினரை பெயரளவில்
ஆட்சி செய்தாலும், பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலுள்ளார் என்பது
திருப்தியான முறையில் காட்டுப்பட்டுள்ளது எனினும், சில
கேள்விகளை எழுப்புகிறது.
போட்டி ஆட்டத்தின் தொடக்கத்தில், இராஜா
தனது பிரிட்டிஷ் வெறுப்பைக்காட்டி, கிராமத்தாரிடம் அயல்
நாட்டினரைத் தோற்கடிக்க, ஊக்குவிக்கிறார். ஒரு சமயம்,
இராஜா இந்தியன் என்பதால் அவரிடம் செலுத்தப்படும் வரி முறையானது
போலக் காட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில், புவன் கசக்கிப்
பிழிவதை இன, தேச ரீதியில் சிந்திக்கிறான்: "நான்
இராஜாவிடம் செலுத்தும் வரியை, அவர் அதனை அவர்களின் கறைபடிந்த
கரங்களில் தருகையில் என் இதயம் குமுறுவதை உணர்கிறேன்" என்கிறான்.
ஆயினும்,
இராஜா எப்போதும் ஆதரவாளராகக் காட்டப்படவில்லை. கிராமத்தினர்
முழுமூச்சுடன் அவரைப் பார்க்க வருகையில், அவரோ படம்
தீட்டப்படுவதற்காக `போஸ்` கொடுத்துக்
கொண்டிருக்கிறார். அவர்களைத் திருப்பியனுப்பி விடுகிறார். கிராமத்தினருக்கு
இழைக்கப்பட்ட அநீதியைக் கண்ட மற்றும் இராஜாவின் நிலையைக் கண்ட புவன், இராஜாவுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்க விரும்புகிறான்: "இராஜா கவனிக்காவிடிலென்ன?
விரல்கள் சேர்ந்தால் முஷ்டி ஓங்கும்" என்கிறான். மேலும்
பிரிட்டிஷ் மற்றும் இராஜா இவர்களுக்கு எதிராக, கிராமத்தினரின்
உழைப்பின் பலாபலன்களைப் பேணுகிறான்: "வலமோ, இடமோ நம்
கையே தருகிறது. விதையிட, இந்நிலத்தை யார் உழுதார்? நாமே! யார் நீர் பாய்ச்சினார்? நாமே! பின் நாம் ஏன்
அவர்கள் பெட்டியை நம் விளைச்சலால் நிரப்பவேண்டும்?
"இந்தியத்
திரையுலகிற்கு, பொதுவானதும் நீடித்திருப்பதுமான
திருப்பத்தைக் காட்டுவதாய், லகான் இராது. உண்மையென்னவெனில், கிடைத்தவற்றுள்
தெரிந்தெடுக்கும் நிலையில் திரையுலகு லகானை இந்தியத் தயாரிப்பாக ஆஸ்கார் விருதுக்காக அனுப்பியதில் ஒரு முக்கியத்துவம்
உள்ளது. ஆனால் ஒரு விதியாகவே, இத்திரையுலகு தொடர்ந்து
எந்திரத்தடையாக, எண்ணற்ற இழிவான, அனுசரித்தும்
போகும் படங்களையே தயாரிக்கின்றது. எடுத்துக்காட்டாக, `கபி குஷி கபி கம்`, போன்ற உப்பிக் கொளுத்த
மற்றும் மோசமான படங்களும் வெட்கமேதுமின்றி சர்வதேச அங்கீகாரத்துக்காக லகான் உடனேயே அனுப்பப்பட்டன. விதிவிலக்காகக்
கருதப் பெறினும், லகான், மகிழ்ச்சி தருவதும் மதிப்பானதுமான ஒன்றே.
Subscribe to:
Posts (Atom)
தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்
நா.மம்மது உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...
-
’ஐவகை நிலத்தை கட்டியாண்ட தமிழனின் பெருமை’ என்று எனது ‘தமிழ் நிலம்’ நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒன்றில் கூறியிருந்தேன். அதனை இப்போது ...
-
ஆசிரியர் பற்றிய குறிப்பு : 1931-ல் பிரேஸில் நாட்டிலுள்ள ரியோலில் பிறந்த அகஸ்தோ போவால் 1956-லிருந்து பிரேஸில் உட்பட பல நாடுகளில் ...


















