நிகழ்ச்சிக் கரு (PROGRAMME CONCEPT)
கி.மு 65-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே உலகின் எங்கோ ஒரு மூலையில் பழங்கால கிரேக்கர்களின் சிந்தனையில் தோன்றி 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் லூமியர் சகோதரர்களால் மாபெரும் விஞ்ஞானக் கலையாக உருவெடுத்த சினிமா எனும் கலைவடிவம் தமிழகத்தில் வேரூன்றிய கதையை அதன் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியோடு சொல்ல வருகிற சுவாரசியமான நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி.

தமிழ் சினிமாவின் கதை என்பது ஒருவகையில் தமிழ்மக்களின் கதையும் கூட.
ஆரம்பத்தில் கூத்தாடிகள் என்று கேலிபேசப்பட்டவர்கள் தான் பின்னர் நாடாண்டார்கள் என்பது நாடறிந்த வரலாறு.
தமிழ் சினிமாவில் பேசப்பட்ட கதைகளை விட பேசப்படாத கதைகள் ஏராளம். தெருக்கூத்து,
நாடகம் என்று வாழ்ந்த தமிழனின் வாழ்வில் சினிமா எனும் மாபெரும் கலைவடிவம் நுழைந்தது வரலாற்றில் அவனுக்கு கிடைத்த பெரும் புதையல். அந்த புதையலை பொத்திப்பொத்தி வளர்த்தெடுத்த திரையுலக ஜாம்பவான்களை, கலையுலக சிற்பிகளை, இசையுலக மேதைகளை திரும்பிப்பார்க்கவைக்கும் நெடுந்தொடர் நிகழ்ச்சிதான் மாயக்கண்ணாடி.
ஒரு புராஜக்டர் மற்றும் சில துண்டுப்படங்களுடன் சாமிக்கண்ணு வின்செண்ட் தமிழகத்திலும், ஆந்திரத்திலும்
திரையிடத் தொடங்கிய தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பயணம் இன்றைய 2.0 வரை நீண்ட கதையைத்தான் வரலாற்றுப் பின்னணியோடும்,
கலாச்சாரக் காரணங்களோடும், அரிய தகவல்கள்,
புகைப்படங்கள், கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் படக்காட்சிகளுடன் ஆவணப்படுத்தப் போகும் அரிய முயற்சி தான் இந்த மாயக்கண்ணாடி.
தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் எப்படிப் பிரித்துப்பார்க்க முடியாதோ அதேபோல் தமிழ் சினிமாவின் கதையை தெரிந்து கொள்ளாத தமிழனையும் விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அப்படி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் விசிறிகளை மகிழ்விக்க,
அது காலந்தோரும் கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்கவைக்கப் போகும் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி.
நிகழ்ச்சி வடிவம் (PROGRAMME FORMAT)
முதலில் இந்த நிகழ்ச்சித் தொடர் குறித்த முன்னோட்டத்தை தொகுப்பாளர் ஒருவர் தொகுத்து வழங்குவார். அவர் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மையமாக இருந்து ஒருங்கிணைத்து செல்வார்.
மாயக்கண்ணாடி நிகழ்ச்சி முழுவதுமே ஒரே Pattern-ல் இருக்காது. இந்த தொடர் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நுழையும்போது அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் மாறுபடும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒருவகையில் சுகாசினியின் AUTOGRAPH போன்றும், மதனின் TALKIES போன்றும் நேர்காணல் வடிவிலும், அதேநேரத்தில் ஆவணப்பட பாணியிலும் மாறி மாறி செல்லும். இந்த தொடர் நிகழ்ச்சி முழுவதும் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையில் கொண்டு செல்லப்படும்.
இடையிடையே Visualize செய்யப்பட்ட காட்சிகளுக்கு Dubbing செய்யப்பட்ட Voice Over பொருத்தமான இடங்களில் சேர்க்கப்படும். சினிமா எனும் கலை வடிவம் அறிவியல் மற்றும் கலாச்சார வணிக நோக்குடன் உருவான ஒன்று என்பதால், மொத்த நிகழ்ச்சியின் இடையில் கூட்டு விவாதங்களும் இடம் பெறும். Eye Doctor, Film Technicians, Film Critics, Novelists, Politicians, Psychiatrist என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பேட்டிகளும் இடம் பெறும். சினிமாவை உருவாக்கும் கடைக்கோடி வல்லுநருக்கும், உடல் உழைப்பாளிகளுக்கும் கூட முக்கியத்துவம் தரப்படும். சினிமா வளர்ச்சியில் பங்குபற்றிய Audio Voice கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சி பல கட்டங்களாக பிரித்துக் கொண்டு இன்று வரையிலான திரைப்பட வரலாறு ஆவணப்படுத்தப் படுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு தேவையான Meterials, Youtube Visuals and Other Video Sources அன்று தொடங்கி இன்று வரையிலான பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள், பழைய நடிகர்களின் நினைவுக் குறிப்புகள், கடிதங்கள் இன்ன பிற... யாவும் இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சித் தொடர் முடியும் வரையில் தமிழ் சினிமாவின் வரலாற்று ஆய்வாளர்கள் இதன் தொடர்பு வளையத்திலேயே இருப்பார்கள். இந் நிகழ்ச்சிக்காக சினிமா சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். இதன் காரணமாக இயன்ற வரை வரலாற்று பிழையுடைய தகவல்கள் தவிர்க்கப்படும்.
சினிமா வரலாறு குறித்த பழைய, புதிய ஆர்வலர்களின் அரிய சேகரிப்புகள் கணக்கில் கொள்ளப்பட்டு ஒரு புத்தம் புதிய பொலிவுடன் நிகழ்ச்சி கொண்டு செல்லப்படும். மாயக்கண்ணாடி தொடரின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழ் சினிமா வரலாற்றின் சுவாரஸ்யமான கட்டங்களையே பிரதானமாக கொள்வதால் நிகழ்ச்சித் தொடர் ஆவணப்பட வடிவத்தை அப்படியே பின்பற்றாமல் அதிகபட்சமாக சினிமாப்பட பாணியிலேயே கொண்டு செல்லப்படும்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தவிர்க்க முடியாத அடுத்தடுத்த கட்டங்களான மௌனப்படக்கால இசை சேர்ப்பு முறைகள், நடிப்பு முறையில் நிகழ்ந்த மாற்றங்கள், புதியவகை பாணியை தோற்றுவித்த படங்கள், மறக்க முடியாத மைல்கல் சினிமாக்கள், கதை சொல்லல் முறைகள், தொழில்நுட்ப மாறுதல்கள், பழைய கீற்றுக் கொட்டகையிலிருந்து இன்றைய ‘மால்’ தியேட்டர் வரையிலான மாற்றங்கள் பதிவு செய்யப்படும்.
இந்நிகழ்ச்சித் தொடரில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் Blue or Greenmatte - ல் தோன்றும் காட்சிகள் நிகழ்ச்சிகள் சிலவற்றில் மட்டுமே இருக்கும். தொடரின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் சினிமாவிற்கேயான கலைப் பொருட்களுக்கான மாதிரிகள் (உதாரணம் : பழைய கிராமஃபோன், 70 RPM இசைத் தட்டுகள், பழைய சினிமா சுவரொட்டிகள், அரிய அந்தக்கால புகைப்படங்கள், பத்திரிகைச் செய்திகள்...) நிரம்பிய ஒரு புராதன சினிமா அறையைப் போன்ற அரங்கம் ஒன்றில் நடந்து கொண்டோ, மாதிரிகளை சுட்டிக்காட்டி பேசியபடியோ அல்லது சில நேரங்களில் உட்கார்ந்து கொண்டோ, சாய்ந்து கொண்டோ இல்லை படுத்துக்கொண்டோ கூட நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். ஒரு வகையில் உட்புற/வெளிப்புறக் காட்சிகள் பலவும் Travelling of Photography உத்தியில் படமாக்கப்படும்.
தமிழ் சினிமாவின் வரலாற்றை முழுமையாக பேசப்போகும் மாயக்கண்ணாடி என்கிற இந்த நெடுந்தொடர் நிகழ்ச்சியை வார இறுதியின் இரண்டு நாட்களின் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக பிரித்தால் கூட 100 தொடர்களை சுலபமாக தாண்ட முடியும். இதையே 30 நிமிட நிகழ்ச்சியாக மாற்றினால் 250 தொடர்களையும் தாண்டிச் செல்லலாம். ஏனெனில் தமிழ் சினிமாவைப் பற்றி பேச மற்றும் காட்சிப்படுத்த அவ்வளவு சங்கதிகள் மலைபோல குவிந்து கிடக்கிறது.
முதலில் இந்த நிகழ்ச்சித் தொடர் குறித்த முன்னோட்டத்தை தொகுப்பாளர் ஒருவர் தொகுத்து வழங்குவார். அவர் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மையமாக இருந்து ஒருங்கிணைத்து செல்வார்.
மாயக்கண்ணாடி நிகழ்ச்சி முழுவதுமே ஒரே Pattern-ல் இருக்காது. இந்த தொடர் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நுழையும்போது அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் மாறுபடும். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது ஒருவகையில் சுகாசினியின் AUTOGRAPH போன்றும், மதனின் TALKIES போன்றும் நேர்காணல் வடிவிலும், அதேநேரத்தில் ஆவணப்பட பாணியிலும் மாறி மாறி செல்லும். இந்த தொடர் நிகழ்ச்சி முழுவதும் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையில் கொண்டு செல்லப்படும்.
மதனின் TALKIES சுகாசினியின் AUTOGRAPH |
இந்த நிகழ்ச்சி பல கட்டங்களாக பிரித்துக் கொண்டு இன்று வரையிலான திரைப்பட வரலாறு ஆவணப்படுத்தப் படுகிறது.
- அரிஸ்டாட்டில் தொடங்கி லூமியர் வரையிலான காலகட்டம்
- லூமியர் தொடங்கி கதைப்படங்கள் வரையிலான காலகட்டம்
- ஊமைப்படங்கள் தொடங்கி பேசும் படங்கள் வரையிலான காலகட்டம்
- பேசும் படங்கள் பாடும் படங்களாக மாறிய காலகட்டம்
- பாடும் படங்கள் பல்வேறு வகை படங்களாக மாறிய காலகட்டம்
இந்த நிகழ்ச்சிக்கு தேவையான Meterials, Youtube Visuals and Other Video Sources அன்று தொடங்கி இன்று வரையிலான பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள், பழைய நடிகர்களின் நினைவுக் குறிப்புகள், கடிதங்கள் இன்ன பிற... யாவும் இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படும்.
நிகழ்ச்சித் தொடர் முடியும் வரையில் தமிழ் சினிமாவின் வரலாற்று ஆய்வாளர்கள் இதன் தொடர்பு வளையத்திலேயே இருப்பார்கள். இந் நிகழ்ச்சிக்காக சினிமா சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்படும். இதன் காரணமாக இயன்ற வரை வரலாற்று பிழையுடைய தகவல்கள் தவிர்க்கப்படும்.
சினிமா வரலாறு குறித்த பழைய, புதிய ஆர்வலர்களின் அரிய சேகரிப்புகள் கணக்கில் கொள்ளப்பட்டு ஒரு புத்தம் புதிய பொலிவுடன் நிகழ்ச்சி கொண்டு செல்லப்படும். மாயக்கண்ணாடி தொடரின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழ் சினிமா வரலாற்றின் சுவாரஸ்யமான கட்டங்களையே பிரதானமாக கொள்வதால் நிகழ்ச்சித் தொடர் ஆவணப்பட வடிவத்தை அப்படியே பின்பற்றாமல் அதிகபட்சமாக சினிமாப்பட பாணியிலேயே கொண்டு செல்லப்படும்.
தமிழ்த் திரைப்பட வரலாற்றின் தவிர்க்க முடியாத அடுத்தடுத்த கட்டங்களான மௌனப்படக்கால இசை சேர்ப்பு முறைகள், நடிப்பு முறையில் நிகழ்ந்த மாற்றங்கள், புதியவகை பாணியை தோற்றுவித்த படங்கள், மறக்க முடியாத மைல்கல் சினிமாக்கள், கதை சொல்லல் முறைகள், தொழில்நுட்ப மாறுதல்கள், பழைய கீற்றுக் கொட்டகையிலிருந்து இன்றைய ‘மால்’ தியேட்டர் வரையிலான மாற்றங்கள் பதிவு செய்யப்படும்.
(தொடரும்)
No comments:
Post a Comment