தமிழ் நிலம்
தாய் நிலத்தின் வழியே ஓர் நெடும் பயணம்
TAMIL NILAM TITLE
Anchor
Cut
நேயர்கள் அனைவருக்கும் தமிழ்நிலம் என்ற நெடுந்தொடர் நிகழ்ச்சியின் முதல் வணக்கம் !
உலகெங்கிலும் உள்ள சமூகங்களில் தமிழ் சமூகம் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை பல்லாயிரம் ஆண்டுகளாகவே பேணிப் பாதுகாத்து வந்துள்ளது. அது தனது வரலாற்று அலகுகளை, பிம்பங்களை மறக்காமல் வெவ்வேறு வடிவங்களில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளது. அது ஆவணங்களாக, கல்வெட்டுகளாக, வாய்மொழி வழக்காறுகளாக, நாட்டுப்புற பாடல்களாக, நிகழ்கலை வடிவங்களாக, பாறை ஓவியங்களாக தொன்றுதொட்டு வாழ்ந்து வருகிறது. அதில் கண்டெடுத்தது, காணாமல் போனது, பதிய வைத்தது, பேச்சு வழக்கில் இருப்பது என அதன் பல்வேறுபட்ட அமைப்பு வடிவங்களை ஒருசேர தொகுத்து தமிழக வரலாறு பற்றிய அழகான சரம் ஒன்று தொடுப்பதே இத்தொடரின் நோக்கம்.
GENERAL PROMO
Anchor
Cut
உலகின் மூத்த குடிகளில் ஒன்றான தமிழ் இனம் அதன் ஆதி கலாச்சாரத்திலிருந்து அறிவியல் கலாச்சாரம் வரை கடந்து வந்த பாதையை வரலாற்று தகவல்களோடும், அரிய பல காட்சிகளோடும் உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தப் போகும் நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் தமிழ் நிலம்.
தாய் நிலத்தின் வழியே ஓர் நெடும் பயணம்.
Tamil Nilam Title Repeat
பழவேற்காடு : சரித்திரச்
சின்னங்களுடன் ஓர் நெய்தல் நிலம்
EPISODE - 1
தமிழக வரலாற்றுச் சுவடுகளின் வழியாக நாம் மேற்கொள்ளப்போகும் பயணத்தை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பழவேற்காட்டிலிருந்து தொடங்கலாம்.
Pazhaverkadu
Road Shots Montage
Anchor
Cut
தமிழகம் முழுக்க
மேற்கொள்ளப் போகும் நமது நெடும் பயணத்துக்கான முதல் அச்சாரம் தான் இந்த பழவேற்காடு. இந்திய வரைபடத்தில் தமிழகத்தின் வடகோடியில் வங்கக்கடலால் தாலாட்டப்படும் சரித்திரச் சின்னங்கள் நிறைந்த ஒரு ஊர்தான் இந்த பழவேற்காடு. கடலும் கடல் சார்ந்த ஒரு நெய்தல் நிலம்.
Pazhaverkadu Episode Promo
Voice
Over
தமிழக கடற்கரையில் சென்னைக்கு அருகே அமைந்துள்ள கண்கவரும் சிறு கடலோர நகரம் தான் புலிகாட் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பழவேற்காடு. 17–ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்களின் புகலிடமாக இருந்த பழவேற்காடு அதிர்வுகள் மற்றும் மாறுபாடுகள் நிறைந்த கலாச்சார பாரம்பரியத்தை கொண்டது. டச்சுக்காரர்களால் பெருமளவில் ஆளப்பட்ட இந்த நகரத்தின் வரலாறு அவர்களோடு மட்டும் நின்று விடாமல் போர்த்துகீசியர்கள் மற்றும் ஆங்கிலேயர்களும் கூட பல்வேறு காலகட்டங்களில் தங்களுடைய வலிமையான எல்லைகளை இந்நகரத்தை சுற்றி அமைத்துக் கொண்டு இதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பங்களித்திருக்கின்றனர். சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பழவேற்காடு முந்தைய நூற்றாண்டுகளில் கடல் துறைமுகமாகவும், வர்த்தக மையமாகவும் இருந்து தமிழ் நாட்டின் வியாபாரம் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் பங்காற்றியுள்ளது.
Anchor
Cut
சென்னைக்கு அருகே 53 கிலோ
மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள
இயற்கை வளம் மிக்க
இந்த பழவேற்காட்டில் ஒளிந்திருக்கும் சில வரலாற்று
உண்மைகள் நம்மை ஆச்சரியத்தின்
எல்லைக்கே கொண்டு போகும்.
அதுக்கு ஒரு சின்ன
உதாரணம் சொல்லனும்னா இன்னக்கி
நாம் காண்கிற சென்னை
என்கிற பிரம்மாண்டமான நகரம் உருவாக
காரணமாக இருந்ததே இந்த
பழவேற்காடு என்கிற சின்ன
கிராமம்தான். என்ன ஆச்சரியமா
இருக்குங்களா? அந்த வரலாற்று
உண்மையைதான் இப்ப நாம
பார்க்கப் போகிறோம்.
Voice
Over
1502-ஆம்
ஆண்டு பழவேற்காட்டில் வியாபாரத்துக்காக வந்திறங்கிய போர்த்துகீசியர்கள் சில ஆண்டுகளிலேயே
அதிகாரத்தை கையிலெடுத்துக் கொண்டனர்.
இங்கிருந்து பல நாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்யப்பட்ட வாசனை
திரவியங்களும், மஸ்லின் துணிகளும்
தான் போர்த்துகீசியர்கள் இங்கு
வருவதற்கு காரணமாக இருந்தது.
அது மட்டுமல்லாமல் வைரம்
இங்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதும் ஒரு முக்கிய
காரணமாக அமைந்திருக்கலாம். பழங்கால
தென் இந்தியாவில் பூம்புகாருக்குப் பிறகு மிகப்பெரும்
துறைமுக நடவடிக்கைகள் நடக்கும் செல்வச் செழிப்புமிக்க இடமாக
பழவேற்காடு விளங்கியது. அதற்கு
பிறகு ஏற்பட்ட அரசியல் மற்றும்
நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக
1570-ஆம் ஆண்டுகளில் போர்த்துகீசியர்கள் பழவேற்காட்டிலிருந்து வெளியேறி கோவாவுக்கு
சென்றுவிட்டனர். அதை தொடர்ந்து
1607ல் மசூலிப்பட்டினத்தின்வழியாகபழவேற்காட்டுக்கு வந்த
டச்சுக்காரர்கள் அப்போது
இங்கு ஆண்டு கொண்டிருந்த
நாயக்க மன்னர் இரண்டாம்
வேங்கடரின் மனைவி இறைவியிடம்
அனுமதி பெற்று ஒரு
தொழிற்சாலையை தொடங்கினர். அவர்களின்
இந்த நடவடிக்கை ஏற்கனவே
இங்கு தொழில் செய்து
கொண்டிருந்த போர்த்துகீசியர்களுக்கு எரிச்சலை
ஏற்படுத்த அவர்கள் டச்சுக்காரர்களின் தொழிற்சாலையை தாக்கினர்.
அப்போது தான் டச்சுக்காரர்களுக்கு தங்களுக்கென ஒரு
கோட்டை வேண்டியதன் அவசியம்
புரிந்தது. அதன் விளைவாக
உருவானது தான் ’ஜெல்டிரியா’
கோட்டை.
Voice
Over Continue …
இந்தியாவிலேயே முதன்முதலாகபழவேற்காட்டின் ’ஜெல்ட்ரியா’
கோட்டையில் தான் மேற்கத்திய
நாணயங்கள் செய்யப்பட்டு நெதர்லாந்துக்குக் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டது.
ஜெல்டிரியா கோட்டை
PROMO
Anchor
Cut
1613-ஆம்
ஆண்டு டச்சுக்காரர்களால் கட்டப்பட்டதுதான் இந்த ஜெல்டிரியா கோட்டை.
டச்சுக்காரர்களால் தென் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டையும் இதுதான்.
அப்போது இங்கிருந்த டச்சுக்காரர்கள் ஈஸ்ட் இந்தியா
கம்பெனியை ஆரம்பித்த செல்வச்
செழிப்புடன் இருந்தார்கள். அதன்
பிறகு சில வருடங்கள்
கழித்து இங்கு வந்து சேர்ந்த ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்களின் ’ஜெல்ட்ரியா’கோட்டையை கைப்பற்ற நினைத்து தொடர்ந்து
தோல்வியை சந்தித்தார்கள். ஆனால் எவ்வளவு
முயன்று சண்டை போட்டும்
ஆங்கிலேயர்களால் ’ஜெல்ட்ரியா’கோட்டையை கைப்பற்றவே முடியவில்லை.
Voice
Over
பழவேற்காட்டைக் கைப்பற்ற முடியாத
ஆங்கிலேயர்கள் இன்றைய மைலாப்பூருக்கு வடக்கே இருந்த
சென்னிராயர் பட்டினத்தை சென்னப்ப
நாயக்கரிடமிருந்து வாங்கி
புனித ஜார்ஜ் கோட்டையை
1644-ஆம் ஆண்டு கட்டினார்கள்.
பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் அன்று
கட்டிய ஜெல்டிரியா கோட்டையை
பார்த்து ஆங்கிலேயர்கள் உருவாக்கியது
தான் இன்றைய செயிண்ட்
ஜார்ஜ் கோட்டை. அப்படி
உருவானது தான் மதராசப்பட்டினம்.
ஜெல்டிரியா கோட்டை vs செயிண்ட் ஜார்ஜ்
கோட்டை Compare
( Split Screen )
ஒருவேளை ஜெல்டிரியா கோட்டையை
ஆங்கிலேயர்கள் கைப்பற்றியிருந்தால் பழவேற்காடு
தான் தமிழ்நாட்டின் தலைநகராக
விளங்கியிருக்கும். வரலாறும் வேறு
மாதிரியாக இருந்திருக்கும்.
டச்சு அரசுக்கு இந்தியாவில்
ஒரு மிகப்பெரிய துறைமுக
மையமாக செயல்பட்ட பழவேற்காட்டில்
1650-களில் மிகக்கொடுமையான பஞ்சம்
ஏற்பட்டது. தொடர்ந்து புயல்
மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட
பழவேற்காடு, கொஞ்சம் கொஞ்சமாகத்
தன் வணிக முக்கியத்துவத்தை இழந்தது. 1825-ஆம்
ஆண்டு ஐரோப்பாவில் நடந்த
ஆங்கிலோ-டச்சுப் போரில்
டச்சு தோற்க, வேறு
வழி இல்லாமல் டச்சு
அரசாங்கம் பழவேற்காட்டிலிருந்து வெளியேறியது.
ஆனால் அப்பொழுது மதராசப்பட்டினம் ஆங்கிலேயருக்குத் தென்னிந்தியாவின் வணிக மையமாக
மாறிப் போயிருந்தபடியால் இங்கிலாந்தும்
பழவேற்காட்டை நிராகரித்தது. ஏற்கனவே
’ஜெல்ட்ரியா’ கோட்டையை கைப்பற்றுவதில் தோல்வியை சந்தித்திருந்த ஆங்கிலேயர்கள் இந்த
வாய்ப்பை பயன்படுத்தி டச்சு
இருந்த சுவடே தெரியக்கூடாது
என்பதற்காக ’ஜெல்ட்ரியா’ கோட்டையை
இடித்து தரைமட்டமாக்கினர்.
Anchor
Cut
இப்படி வரலாற்றையே மாற்றி
அமைத்த ‘ஜெல்ட்ரியா’ கோட்டையின்
மிச்சமுள்ள செங்கற்களை இன்று
விரல் விட்டு எண்ணிவிடலாம்.
அந்த அளவிற்கு கோட்டையோட கொஞ்ச நஞ்ச
மிச்சமும் முழுக்க முழுக்க
முள்ளுக்காடால் சூழப்பட்டு, இருந்த
சுவடே இல்லாத அளவிற்கு
அரசாங்கத்தின் பராமரிப்பற்று இருக்கிறது.
’ஜெல்ட்ரியா’
கோட்டையின் சுவடுகள் Montage
பழவேற்காட்டில் டச்சுக்காரர்களோட சம்பந்தம்
இதோட மட்டும் முடியவில்லை.
காரணம் மூன்று நூற்றாண்டுகள்
அதாவது 15ஆம் நூற்றாண்டு
முதல் 18ஆம் நூற்றாண்டு
வரை பழவேற்காடு அவங்களோட
ஆட்சி அதிகாரத்தின் கீழ்
தான் இருந்தது. அதுக்கு
முக்கிய அத்தாட்சிதான் இப்ப
இருக்கற டச்சுக் கல்லறைத்
தோட்டம்.
டச்சுக் கல்லறைத் தோட்ட Montage
Voice
Over
ஏறக்குறைய 300 ஆண்டுகள் வரை
பழவேற்காட்டை ஆண்ட டச்சுக்காரர்கள் அப்போது இறந்தவர்களுக்காக மட்டும் 50க்கும்
மேற்பட்ட பிரம்மாண்டமான கல்லறைகளை
அங்கு கட்டியிருக்கிறார்கள். பழைய
கல்லறைத் தோட்டம் பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்பட்டாலும்,
பேருந்து நிலையம் அருகில்
இருக்கும் பிரதான டச்சுக்
கல்லறைத் தோட்டம் அருகில்
சென்று பார்க்கையில் பிரம்மாண்டமாக
காட்சியளிக்கிறது. அழகிய கலைநயத்துடன்
கூடிய சிற்பங்களுடன் வடிவமைக்கப்பட்ட அந்தக் கல்லறைகளின்
மீது அடக்கம் செய்யப்பட்டவர்களின் பிறப்பு, இறப்பு
பற்றிய தகவல்களை பொறித்து
வைத்திருக்கிறார்கள். சுமார் 400 ஆண்டுகள்
பழமை வாய்ந்த இந்த
கல்லறை தோட்டத்துக்கு இன்னொரு
சிறப்பு அம்சமும் இருக்கிறது. இந்தக் கல்லறைகளின் மீதுள்ள
சிற்பங்களை பெரும்பாலும் செதுக்காமல்
Emboss என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்
புடைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
பழவேற்காட்டில் உள்ள கல்லறைகளில்
காணப்படும் இந்த சிற்பக்கலை
இன்று உலகில் எங்குமே
இல்லை. அந்த குறிப்பிட்ட
கலை நுணுக்கம் இன்று
அடியோடு அழிந்து போய்விட்டது.
ஆனால் டச்சுக்காரர்கள் அன்று
வடித்த சிற்பங்கள்
நிறைந்த இக்கல்லறைகள் தகுந்த
பராமரிப்பின்றி இன்று ஏறக்குறைய
அழியும் நிலையில் இருப்பது
தான் இதன் தற்போதைய
நிலை. அரசு இவற்றை
பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் இப்படியொரு கலை
இருந்ததற்கான அடையாளமே இல்லாமல்
போய்விடும் அபாயம் உள்ளது.
Anchor
Cut
என்ன நேயர்களே! டச்சுக்காரர்களுக்கு இவ்வளவு பெரிய கல்லறைகளா? என்று ஆச்சரியம் வருகிறதா? துரதிருஷ்டவசமாக அவர்களின் தென்னிந்திய முதல் கோட்டையான ஜெல்ரியா கோட்டை அழிக்கப்பட்டு விட்டதால் இப்போது மிஞ்சியிருப்பது இந்த டச்சுக் கல்லறை மட்டும் தான். சரி நாம் அடுத்த விஷயத்திற்கு வருவோம். முதலில் இந்த ஊருக்கு பழவேற்காடு என்று பெயர் வந்ததற்கு கூறப்படும் காரணங்கள் சிலவற்றை பார்க்கலாம்.
Voice Over
சோழர்கள் ஆண்ட 1435-ஆம் ஆண்டுகளில் விஜயநகரப் பேரரசு காலத்தில் அப்போது ஆண்டு கொண்டிருந்த அனந்தராயா மன்னரின் பெயரால் இப்போதுள்ள பழவேற்காடு அனந்தராயபட்டினம் என்று அழைக்கப்பட்டது. ‘பிரளய காவேரி’ என்றும் இந்தப் பகுதி அழைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால் அதற்கும் பழவேற்காடு என்பதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவரவில்லை. வேல மரங்கள் நிறைந்த பகுதி ஆதலின் ‘வேலங்காடு’ என இருந்து, அது ‘வேல்காடு’ - ‘வேற்காடு’ என மாறி பிறகு ‘பழைய வேற்காடு’ - ‘பழவேற்காடு’ என வந்திருக்கலாம். பழவேற்காடு ஏரியில் தொல் மகரந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது சில 1000 ஆண்டுகளுக்கு முன் இங்கு ‘சதுப்பு நிலக்காடுகள்’ இருந்தது உறுதி செய்யப்பட்டது. சதுப்பு நிலக்காடுகளில் பூமிக்கு வெளியே வேர்கள் பல நீட்டிக் கொண்டிருக்கும். அதனால் இது ’பலவேற்காடு’ - ’பழவேற்காடு’ என பெயர் பெற்றிருக்கலாம். சதுப்பு நில மரங்களில் பழம் கீழே விழும் முன்னரே அதில் வேர் உருவாகி விடும். அந்த வேருடன் கூடிய பழம் கீழே விழும்போது அதிலுள்ள வேர் பூமியில் குத்தி செடி முளைக்கும். எனவே பழவேற்காடு என பெயர் வந்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
Anchor Cut
அப்பப்பா ! ஒரு ஊருக்கு இத்தனை பெயர்களா? அதனால் தான் ஆரம்பத்திலேயே பழவேற்காட்டை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஊர் என்று குறிப்பிட்டோம். சரி பழவேற்காடு எப்படி புலிகாட் ஆனது என தெரிய வேண்டாமா? அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்தும், பழவேற்காடு பற்றி மேலும் பல அரிய விஷயங்கள் பற்றியும் நமது அடுத்த நிகழ்ச்சியில் பார்க்கப் போகிறோம். பயணம் தொடரும்! அதுவரை காத்திருப்போம். நன்றி! வணக்கம்!!

(தொடரும்)
No comments:
Post a Comment