EPISODE - 03
ஒரு அறையிலிருக்கும் Screen-ல் ஓடிக்கொண்டிருக்கும் Film History குறித்த படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் Anchor அதை விட்டு நகர்ந்து பார்வையாளர் பக்கம் திரும்பி பேசுதல்.
நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்!
மாயக்கண்ணாடியின் இந்த 3-வது Episode மூலம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சென்ற இரண்டு நிகழ்ச்சிகள் மூலம் சினிமாவின் ஆரம்பகால பரிசோதனைகளை கண்டு நீங்கள் வியந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இந்த நிகழ்ச்சியில் நாம் விஞ்ஞான ரீதியாக சினிமா வளர்ந்த காலகட்டத்தையும், அது ஒரு கலையாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதத்தையும் பார்க்கப்போகிறோம்.
Voice Over / Visuals / Images
ஆதிமனிதன் தன்னைப்போன்ற உருவங்களையும், தான் காண்கின்ற விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கைகாட்சிகளை பாறைகளிலும், மரங்களிலும், விலங்குகளின் தோல்களிலும் வரைந்து பார்த்தான்.
Anchor மேசைமீது உள்ள ஒரு பழைய கேமராவை பரிசோதித்துக்கொண்டே பேசுதல்.
ஆனால் அந்த உருவங்கள் அவன் நினைத்த அளவிற்கு இயற்கையாக அமையவில்லை. உள்ளதை உள்ளபடியே பதிவு செய்யும் ஒரு கருவிக்காக ஏங்கினான்.
1840-ஆம் ஆண்டு அந்த ஏக்கத்திற்கு விடைகிடைத்தது. ஆமாம்! நிழற்படக்கருவியை அந்த ஆண்டுதான் தாமஸ் ஆல்வா எடிசன் உருவாக்கியிருந்தார்.
Voice Over / Images / Part of Visuals
அசையா நிழற்படங்களை பெற்ற மனிதனின் ஆசை மேலும் பெருகி அதனை அசையவைக்க முடியுமா? என்று மேலும் ஏங்கினான். அந்த அடிப்படையில் உலகின் பல பாகங்களிலும் பற்பல ஆராய்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Anchor Cut
ரோஜட்டின் Magazine Article-ஐ காட்டி பேசுதல்.
அதன்வழியாக பெறப்பட்டதுதான் 1824-ல் Peter Mark Roget என்ற விஞ்ஞானியின் கண்டுபிடிப்பாகிய பார்வை நிலைப்புத்தன்மை என்னும் தத்துவம். என்ன நேயர்களே! தொடங்கிய இடத்துக்கே வருகிறோம் என்று பார்க்கிறீகளா?
Persistence of Vision-ன் ஆரம்ப கர்த்தாக்கள் கிரேக்க ஞானிகளும், ரோமானியக் கவிஞன் லூக்ரிடியஸும் தான். ஆனால் அதனை வலுவான ஒரு தத்துவமாக முன்வைத்தது தான் ரோஜட்டின் தனித்தன்மை.
ரோஜட் சொன்ன தத்துவத்தின் அடிப்படை இதுதான்.
Cameraman or Eye Doctor விளக்குதல்.
Persistence of Vision-ன் ஆரம்ப கர்த்தாக்கள் கிரேக்க ஞானிகளும், ரோமானியக் கவிஞன் லூக்ரிடியஸும் தான். ஆனால் அதனை வலுவான ஒரு தத்துவமாக முன்வைத்தது தான் ரோஜட்டின் தனித்தன்மை.
ரோஜட் சொன்ன தத்துவத்தின் அடிப்படை இதுதான்.
Cameraman or Eye Doctor விளக்குதல்.
(பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)
(முடிந்தால் Cameraman / Eye Doctor / Scientist உடன் Anchor கூட்டு விவாதம்)
அதாவது மனிதக் கண்களின் மீது படும் காட்சிகளை உண்மையான நேரத்திற்கும் அதிகமாக (1/16 வினாடிப்பொழுது) விழிகள் அதனை தக்க வைத்துக்கொள்கிறது. அந்தக் காட்சி மறைவதற்கு முன் விழித்திரையில் அது தொடர்பான மற்றொரு காட்சியை விழச்செய்தால் அது தொடர் காட்சிகளாக அமைந்து காட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து அசைவுகள் ஏற்படுகின்றன. இதுதான் ரோஜட் சொன்ன தத்துவம்.
Anchor / Voice Over
இந்த அசையா நிழற்படங்கள் மாயவிளையாட்டு கருவிகளுக்கு பதில் அசையும் நிழற்படங்களாக பரிணமித்ததுதான் சினிமா பிறந்ததற்கான ஆரம்பகால அடிப்படை.
இனி நாம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம்.
Majic Lantern தொடங்கி Lumiere Brothers வரையிலான Montage
Anchor ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு பேசுதல். ( பகுதிக் காட்சிகள் முழுக் காட்சிகளாக மாறுதல்)
(முடிந்தால் Cameraman / Eye Doctor / Scientist உடன் Anchor கூட்டு விவாதம்)
அதாவது மனிதக் கண்களின் மீது படும் காட்சிகளை உண்மையான நேரத்திற்கும் அதிகமாக (1/16 வினாடிப்பொழுது) விழிகள் அதனை தக்க வைத்துக்கொள்கிறது. அந்தக் காட்சி மறைவதற்கு முன் விழித்திரையில் அது தொடர்பான மற்றொரு காட்சியை விழச்செய்தால் அது தொடர் காட்சிகளாக அமைந்து காட்சிகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் மறைந்து அசைவுகள் ஏற்படுகின்றன. இதுதான் ரோஜட் சொன்ன தத்துவம்.
Anchor / Voice Over
இந்த அசையா நிழற்படங்கள் மாயவிளையாட்டு கருவிகளுக்கு பதில் அசையும் நிழற்படங்களாக பரிணமித்ததுதான் சினிமா பிறந்ததற்கான ஆரம்பகால அடிப்படை.
இனி நாம் நிகழ்ச்சிக்குள் செல்லலாம்.
Majic Lantern தொடங்கி Lumiere Brothers வரையிலான Montage
Anchor ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு பேசுதல். ( பகுதிக் காட்சிகள் முழுக் காட்சிகளாக மாறுதல்)
திரைப்படத்தை திரையிட்டு பார்ப்பதற்கு அடித்தளமாக அமைந்த கருவி Majic Lantern ஆகும். ஆனால் இக்கருவி சி.எஸ். கிர்ச்சர் என்பவரால் 17-ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. முதலில் கையால் வரையப்பட்ட படங்களையே Slide காண்பிப்பது போல் காட்டினார்கள். பிற்காலத்தில் புகைப்படக்கலை வளர்ந்தபிறகு அதையே திரையிட்டு காட்டத் தொடங்கினார்கள்.
Film Critic பேசுதல் / Visuals / Images
ஒரு டப்பாவினுள் உள்ள படங்களை வெளியில் அமைந்துள்ள கைப்பிடி மூலம் சுழற்றி முன்புறமாக உள்ள லென்ஸின் வழியாக படங்களை காண்பித்தார்கள். இதற்கு ’பயாஸ்கோப்’ என்று பெயர். இதனை ஜெர்மெனியில் உள்ள மேக்ஸ் மற்றும் எமில் ஸ்கால்டானவ்ஸ்கி எனும் இருவர்தான் உருவாக்கினார்கள். இதேகாலகட்டத்தில் இங்கிலாந்தில்கூட ராபர்ட் டபிள்யூ பால் உருவாக்கிய Vitascope புழக்கத்தில் இருந்துவந்தது.
எட்வர்ட் மைபிரிட்ஜின் குதிரை பறந்த கதை
Still Photographer / Cinmatographer / Film Critic உடன் Anchor ஒரு சுவையான கூட்டு விவாதம். [இடையிடையே பகுதிகாட்சிகள்/முழுக்காட்சிகள்/ Images]
1877-ஆம் ஆண்டு சினிமாவுக்கே அடித்தளம் இடப்பட்ட, தொடர்நிலை காட்சிகள் அசையும் படங்களாக பரிணமித்த முக்கிய நிகழ்வு ஒன்று நடந்தது. கலிபோர்னியா மாநில கவர்னர் ஸ்டான்ஃபோர்டு ஒருமுறை குதிரைப் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது குதிரைகள் பாய்ந்தோடுவதைக் கண்ட மக்கள் ‘குதிரைகள் என்னமாய் பறக்கிறது பார்!’ என்று கூச்சலிட்டனர். அதைக்கேட்ட கவர்னருக்கு ஒரு சந்தேகம் உருவாயிற்று. ’குதிரைகளுக்குதான் இறக்கைகளே கிடையாதே. பின் அது எப்படி பறக்கும்’ என்று.
மறுநாள் கவர்னர் பிரபுக்களின் சபையை கூட்டினார். அதில் ’ஓடிக்கொண்டிருக்கும் குதிரைகள் பறக்குமா?’ என்ற கேள்வியை கேட்டார். பலரும் ’குதிரை எப்படி பறக்கும்? பறக்காது’ என்றே பதிலளித்தார்கள். ஆனால் தெளிந்த அறிவுடைய பிரபு ஒருவர் மட்டும் அதை மறுத்து தெளிவான விளக்கம் ஒன்றை அளித்தார். ’மைலாட்.. குதிரைகள் வேகமாக பாய்ந்தோடும்போது அதன் நான்கு கால்களும் தரையில் படாமல் அந்தரத்தில் தோன்றும். அது பார்ப்பதற்கு குதிரைகள் பறப்பதுபோல் இருக்கும்’ என்றார்.
இதனை கேட்ட சபையினர் ‘இவனுக்கு என்ன மூளை கெட்டுவிட்டதா? குதிரைகள் ஒரு காலைக்கூட கீழே வைக்காமல் எப்படி அந்தரத்தில் தோன்றும்?’ என்று கேலி செய்தனர்.
இதனால் குழப்பமும் எரிச்சலும் அடைந்த கவர்னர் எட்வர்டுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். இன்னும் இரண்டு நாட்களுக்குள் கூறிய கருத்தை மெய்ப்பித்தால் சன்மானம் இல்லையேல் சிறைத்தண்டனை. இந்த சவாலை ஏற்றுக்கொண்ட பிரபு துரிதமாக செயல்பட்டார். அப்போது உலகில் ஒளிப்படம் பிடிப்பது புழக்கத்தில் வந்துவிட்ட காலம். பிரபு உடனே சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒளிப்படக்காரர்களை எல்லாம் ஓரிடத்தில் கூட்டி குதிரைகள் நான்கு கால்களையும் ஒரே நேரத்தில் தூக்கி அந்தரத்தில் பறந்த நிலையில் இருக்குமாறு யார் ஒளிப்படம் எடுக்கிறார்களோ அவருக்கு 1000 பணம் பரிசு என்று அறிவித்தார்.
அதைக்கேட்ட பலரும் அடுத்தநாளே எடுத்து வருவதாக சூளுரைத்து விட்டு சென்றனர். அப்படி சென்றவர்களில் ஒருவர் தான் கலிபோர்னியாவை சேர்ந்த புகழ்பெற்ற ஒளிப்படக்கலைஞரான Eadweard Muybridge. அவரிடம் நிறைய கேமராக்கள் இருந்தன. ஒரு பந்தயக் குதிரையை ஜாக்கியுடன் வாடகைக்கு அமர்த்திக்கொண்டு, அத ஒரு தளத்தில் ஓடவிட்டு பலமுறை விட்டு விட்டு படம்பிடித்தார்.
எல்லா படங்களிலுமே குதிரையின் கால்கள் தரையில் ஊன்றியே இருந்தது. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. அவருக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. நண்பர்களிடம் மேலும் பல கேமராக்களை கடன் வாங்கினார். இப்போது குதிரைகள் ஓடும்பாதையில் பத்தடிக்கு ஒரு ஒரு கேமரா வீதம் வரிசையாக 24 கேமராக்களையும் கம்பை ஊன்றி அதில் கட்டினார். பின்பு ஒவ்வொரு கேமராவின் விசையையும் ஒரு நூலில் இணைத்து அதை பாதையின் குறுக்காக கட்டினார்.
குதிரைகள் ஓடும்போது அதன் மார்பில் நூல் இழுபட்டு நூல் அறுந்து போகும். அப்போது இழுக்கப்படும் நூலால் கேமராவின் விசை தட்டப்பட்டு கேமரா இயங்கி குதிரை ஓடுவதை படம் பிடித்தது.
அந்தப் படத்தை டெவலப் செய்து பார்த்த பிரபு ஆனந்தக் கூத்தாடினார். மொத்தப்படங்களின் ஆறு படங்களில் குதிரை அந்தரத்தில் நான்கு கால்களையும் தூக்கிய நிலையில் இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த 24 ஒளிப்படங்கள் புகழ்பெற்ற பிரிட்டானிகா களஞ்சியத்தில் உள்ளது. பிரபுவிடம் அதைக்காட்டியதும் கவர்னரின் சந்தேகமும் தீர்ந்தது. இருவருக்கும் சன்மானமும் கிடைத்தது.
எட்வர்டு அந்த 24 ஒளிப்படங்களையும் வரிசையாக மேசைமீது வைத்து பார்வையை அதன்மீது ஓடவிட்டார். குதிரை மெல்ல அசைந்து ஓடுவது போன்று பிரமை ஏற்பட்டது. இதுதான் சலனப்படம் என்னும் திரைப்படக்கலை உருவாக பிரதான காரணமாக அமைந்தது.
Anchor ஒரு துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு பேசுதல்.
Voice Over / Visuals / Images
Voice Over / Visuals / Images
இப்போது சலனப்படம் எடுக்கப்பட்டுவிட்டது. ஒரேயொரு கேமரா மூலமாகவோ அல்லது தனித்தனியாக பல கேமராக்கள் மூலமாகவோ. ஆனால் படம்பிடிக்க வேண்டிய நிர்பந்தம் உணரப்பட்டதும் அதற்கான சோதனைகள் படிப்படியாக நடந்தேறிய வண்ணம் இருந்தது. இதனை ஏற்று செயல்வடிவம் கொடுத்தவர்தான் ஃபிரெஞ்ச் விஞ்ஞானி ஜூல்ஸ் மரே.
விஞ்ஞானத்திற்காக விலங்குகளின் அசைவினை படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மரே இதனை சாத்தியமாக்க எண்ணி ஒரு துப்பாக்கி மீது கேமராவை பொருத்தினார். துப்பாக்கிகுழலில் லென்சை பொருத்தி. சிலிண்டர் சேம்பரில் உலர்ந்த வட்டத்தகட்டினை வைத்தார். துப்பாக்கிவிசை இழுபடும்போது சிலிண்டரில் சுழற்சி ஏற்பட்டு படம் எடுக்கப்பட்ட்து. ஆனால் மரேயின் கேமரா மூவி கேமரா அல்ல. காரணம் அதில் வினாடிக்கு 16 படங்களை படம் பிடிக்க முடியவில்லை. மரேயின் இந்த சோதனையில் வினாடிக்கு 12 படங்களே பதிவானது. ஆனாலும் மூவிகேமரா கண்டுபிடிப்பில் ஒது ஒரு மைல்கல் என்றே கூறலாம்.
Cameraman Cut
Voice Over / Visuals / Images
முதன்முதலாக மூவிகேமராவை கண்டுபிடித்தவர் W.K.L.Dickson. இவர் எடிசனிடம் உதவியாராக இருந்தவர். KODAK நிறுவனத்தில் ஃபிலிமில் எடுக்கப்பட்ட படங்களை பார்த்த அவர் அந்த ஃபிலிமை தனது Kinetograph. மூவிகேமராவில் பயன்படுத்தி படங்களை எடுத்தார். இப்படங்களை காண்பிக்க Kinetoscope எனும் சாதனத்தையும் அவரே கண்டுபிடித்தார். Kinetoscope துவாரத்தின் வழியாக அசையும் படங்கள் தெரிந்தன. ஆனால் இது பியானோவை விட இருமடங்கு பெரிய அளவில் இருந்த்தால், நகர்த்துவது மிகவும் சிரமமாக இருந்த்து மட்டுமல்லாமல் இதில் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே படம் பார்க்க முடிந்தது.
ஆனால் இந்த சலனப்பட்த்தை பலரும் பார்க்கும் வண்ணம் திரையில் விழச்செய்தவர் சி.ஃபிரான்சிஸ் ஜென்கின்ஸ். ஐக்கிய அமேரிக்க அரசாங்கத்தில் ஒரு சுருக்கெழுத்தாளராக பணியாற்றிவந்த இவர்தான் பிற்காலத்தில் 1925-ல் அமெரிக்காவில் வீடியோவை கண்டுபிடித்தவர்.
Anchor Cut
Voice Over / Visuals / Images
1894-ல் இவர் தனது நண்பர்களை வரவழைத்து தனது வீட்டில் மேஜிக் லேண்டர்ன் பொருத்தப்பட்ட புரோஜக்டர் துணையுடன் DANCE GIRL ANNABELLY என்ற படத்தை திரையிட்டுக்காட்டினார். ஒருநிமிடமே ஓடும் அந்தப்படத்தில் ஓர் அழகிய இளம்பென் நடனமாடினாள். இதைக்கண்ட அவரின் நண்பர்கள் அதனை நம்பமறுத்து அவர்களுக்கு தெரியாமல் ஒரு பெண்ணை ஹாலில் ஒளித்துவைத்து ஆடச்செய்த்தாகவும். அவர் ஒரு மோசடிக்காரர் என்றும் குற்றம்சாட்டிச்சென்றனர். சிலபேர் முன் நடந்திருந்தாலும் உலகின் முதல் திரைப்படம் இதுதான். ஆனால் வரலாறு இதனை ஏற்காததற்கு இந்த நிகழ்சி செய்தியாளர்கள் மத்தியில் முறையாக பதிவுசெய்யப்படாததே காரணம்.
Film Critic
Voice Over / Visuals / Images
ஆனால் இதனை எடிசனின் நண்பர் ஆட்வர்ட் கேள்விபட்டு வறிய நிலையில் இருந்த .ஃபிரான்சிஸ் இடமிருந்து அந்தக்கருவியையும், அதன் உரிமைகளையும் 2500 டாலர்கள் விலைக்கு வாங்கிச்சென்றார். அதனை எடிசனிடம் காட்டாவரும் வியந்து அந்தக்கருவியில் இன்னும் சில முன்னேற்றங்களை செய்தார். அதாவது ஃபிலிம் சீராக சுழல்வதற்காக அதன் ஓரத்தில் துளையிட்டார் ஃபிலிம் அளவு 35 மி.மீ என்று நிர்ணயம் செய்தார். இந்தமுறைதான் ஃபிலிம் புரோஜடர் இருக்கும் நாள்வரை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்தப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்த காரணத்தால் தனது அறிவியல் கூடத்திற்கு அருகிலேயே இப்படங்களை தயாரிக்கும் ஸ்டுடியோ ஒன்றை அமைத்தார். உலகின் முதல் ஸ்டுடியோவான இதன் பெயர் பிளாக் மரியா. படம் காண்பிக்கப்பட்ட முதல் திரைப்பட அரங்கு நிக்கோலிடியன் தியேட்டர் என்று அழைக்கப்பட்ட்து.
Cameraman Cut
Voice Over / Visuals / Images
இப்படி படம் பிடிக்கப்பட்ட படங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது பிஃரட் ஓட்ஸ் தும்மும் காட்சிதான். இதனை எடிசனின் உதவியாளரும். அவரின் கேமராமேனுமாகிய டிக்ஷன் மிக அற்புதமாக படமாக்கியிருந்தார். இப்படம் வினாடிக்கு 46 பிரேம்கள் ஓடின. இவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு கிடைத்ததால் எடிசன் மேலும் பல படங்களை எடுத்தார். ஆனால் இதில் முக்கிய குறைபாடு என்னவென்றால் இந்த படங்கள் யாவுமே வினாடிக்கு 40-46 என்ற கணக்கில் ஓடின.
Voice Over / Visuals / Images
இப்படி படம் பிடிக்கப்பட்ட படங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது பிஃரட் ஓட்ஸ் தும்மும் காட்சிதான். இதனை எடிசனின் உதவியாளரும். அவரின் கேமராமேனுமாகிய டிக்ஷன் மிக அற்புதமாக படமாக்கியிருந்தார். இப்படம் வினாடிக்கு 46 பிரேம்கள் ஓடின. இவற்றிற்கு பொதுமக்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பு கிடைத்ததால் எடிசன் மேலும் பல படங்களை எடுத்தார். ஆனால் இதில் முக்கிய குறைபாடு என்னவென்றால் இந்த படங்கள் யாவுமே வினாடிக்கு 40-46 என்ற கணக்கில் ஓடின.
Anchor Cut
எடிசனும் அக்கருவியில் மேலும் சில முன்னேற்றங்களை செய்து உலகின் முதல் திரைப்படத்தை அரங்கேற்றிவிடலாம் என்று முனைந்தார். ஆனால் அவருக்கு முன்பாகவே முந்திகொண்டனர் லூமியர் சகோதரர்கள்.
Watch in Next Programme
(தொடரும்)
No comments:
Post a Comment