EPISODE - 02
திரைப்பட வரலாற்றின் ஆரம்பகால புகைப்படங்கள் ஒட்டப்பட்ட கதவை திறந்துகொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் வருதல்.
என்ன நேயர்களே! சென்ற நிகழ்ச்சியில் கண்களின் கவசமாக திகழும் இமைகளின் மூலம் நாம் பார்க்கும் காட்சிகளையும் அதனை கண்கள் உள்வாங்கிக்கொள்ளும் திறன் பற்றியும் தெரிந்துகொண்டோம். ஆனால் இன்றைய நிகழ்ச்சி நம்மை மேலும் பல ஆச்சரியமான உண்மைகளுக்கு அழைத்துச்செல்லப்போகிறது.
Majic Lantern Period Montage
Anchor பேச முற்பட்டவுடன் நிகழ்ச்சிக்கிடையில் ஒருவர் புத்தகம் ஒன்றை தந்துவிட்டுப்போக அதனை கையில் வாங்கிக்கொண்டு தொகுப்பாளர் பேசுதல்.
Anchor பேச முற்பட்டவுடன் நிகழ்ச்சிக்கிடையில் ஒருவர் புத்தகம் ஒன்றை தந்துவிட்டுப்போக அதனை கையில் வாங்கிக்கொண்டு தொகுப்பாளர் பேசுதல்.
இந்த அசையாத படங்களை அசைவது போன்ற பிரமையை ஏற்படுத்தும் சலனப்படத்தோற்றம் முதலில் சிறுவர்களை மகிழ்விக்கும் விளையாட்டுக் கருவிகளை உருவாக்க மட்டுமே உதவும் என்று பலரும் நினைத்தனர். ஆனால் அது விழுதுவிட்டு வளர்ந்து நிற்கும் மாபெரும் கலைச்சாதனமாக மாறும் என்று யாரும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதன் ஆரம்பகட்ட முயற்சிகள் யாவுமே அரேபிய கதைகளில் வரும் இரவுக்காட்சிகளைத் தான் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இதைப்பற்றி நமது திரைப்பட திறனாய்வாளர் சொல்வதை சிறிது பார்ப்போம்.
திறனாய்வாளர் ஒருவர் அமர்ந்தவாறு பேசுதல் / Indoor Bite
ஒரு விளக்கையும் சில பொம்மைகளையும் கொண்டு வந்து திரையில் உருவங்களை அசையவைக்கும் நிகழ்ச்சி 1720-களில் ஐரோப்பாவில் நடந்தது. இது இந்தியா அல்லது ஜாவா வழியாக மத்திய கிழக்கு நாடுகளில் பரவியிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
செரஃபின் என்பவரால் நிழற்பாவைகூத்து அரங்கம் ஒன்று 1776-லிருந்து 1850 வரை இருந்து வந்தது ஃபெடிஸ் நாட்குறிப்பில் பதிவாகியுள்ளது. அதே ஃபெடிஸ் நாட்குறிப்புதான் 1800-களில் நாடோடி ஒருவர் எண்ணையால் ஆன Lens உடன் ஊர் ஊராக சென்று இதுபோன்ற காட்சிகளை காட்டி வந்ததையும் கூறுகிறது.
Anchor Cut
மனித நாகரீகத்தின் நிழல்கள் எங்கெல்லாம் நீண்டதோ அங்கெல்லாம் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிசயக் கதைகள் குறித்து திரைப்பட ஒளிப்பதிவாளர் விளக்குவதை பார்க்கலாம்.
Anchor Cut
மனித நாகரீகத்தின் நிழல்கள் எங்கெல்லாம் நீண்டதோ அங்கெல்லாம் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அதிசயக் கதைகள் குறித்து திரைப்பட ஒளிப்பதிவாளர் விளக்குவதை பார்க்கலாம்.
Part of Visuals
Cinematographer ஒருவர் மாயவிளையாட்டுக்கருவிகள் படிப்படியாக வளர்ச்சியுற்றதை சொல்லுகிறார். Shooting Spot அல்லது வீட்டில் எடுக்கப்பட்ட Bite.
ஆரம்பகாலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாயவிளையாட்டுக்கருவிகள் அனைத்தும் சிறுவர்களை மகிழ்விப்பதையே இலக்காக கொண்டிருந்தாலும், இதனைக்கண்ட பெரியவர்கள் பலரும் கூட அதன்பிறகு இதனை வியந்து பாராட்டத் தொடங்கினர். பின்னாட்களில் செல்வம் கொழிக்கும் மாபெரும் தொழிலுக்கான அஸ்திவாரமாக இது மாறப்போகிறது என்று அப்போது யாருக்கும் தெரியாது.
Cinematographer Voice Over / Visuals / Images [பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்]
இந்த கண்டுபிடிப்பு கருவிகளின் சரியான துவக்கமாக 1825-ஆம் ஆண்டு ஆங்கில நாட்டைச்சேர்ந்த டாக்டர் பிட்டன் அன்பவர் உருவாக்கிய மந்திர சுழற்சி அட்டையை கூறலாம்.
Thamatrope என்று அழைக்கப்பட்ட அந்த அட்டையில் ஒரு பக்கம் கூண்டும் இன்னொறு பக்கம் கிளியும் வரையப்பட்டிருந்த்து. அதை ஒரு தாங்கியில் பொருத்தி வேகமாக சுற்றும்போது கூண்டுக்குள் கிளி அமர்ந்திருப்பது போல் காணப்பட்ட்து.
Cinematographer Cut and Voice
கண்களுக்குள்ள பார்வை நிலைப்பு பண்பினால்தான் நமக்கு அந்தக்காட்சி அப்படி காட்சியளித்த்து. இதனை சரியாக விளங்கிக்கொள்ள வேண்டுமானால் மேலும் சில உதாரணங்களை பார்க்கலாம்.
Cinematographer Voice மற்றும் பகுதிக்காட்சிகள்
ஒரு ரூபாய் ஒன்றை சுழல விட்டுப்பாருங்கள். இப்போது நாணயத்தின் இருபக்கங்களையும் பார்க்கிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது. சரியாக ஒரு சமயத்தில் ஒரு பக்கத்தைத்தானே பார்க்கமுடியும். அது வேறொன்றுமில்லை. நீங்கள் ஏற்கனவே பார்த்த நாணயத்தின் இன்னொரு பக்கத்தை மூளை காட்சியாக காப்பதால் சுழற்சியின்போது இருபக்கத்தையும் ஒருசேர பார்க்கமுடிகிறது.
Visuals
எரிகிற பல்பை பார்த்துவிட்டு சட்டென கண்களை மூடினால் டங்ஸ்டன் இழைகள் நெளிவது தெரிவதும், மின்விசிறியை ஓடவிட்டு பார்க்கும்போது அதன் இறக்கைகள் பல இறக்கைகளாக தெரிவதும் இந்த காட்சி காக்கும் திறனால் தான்.
Anchor Cut
Anchor Cut
கையிலிருக்கும் புத்தகத்தை பிரித்து அதில் சுட்டிக்காட்டி பேசுதல். (பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)
1832-ல் ஆங்கில பெல்ஜியம் நாட்டைச்சேர்ந்த டாக்டர் ஜோசப் அந்துவான் பெர்டினண்ட் பிளாட்டோ என்பவர் Phenakistoscope என்ற கருவியை கண்டுபிடித்தார். இரண்டு வட்டவடிவமான தகடுகளை எடுத்துக்கொண்டு ஒன்றின்மீது மனிதன் நடக்கும்போது ஏற்ப்படும் அங்கஅசைவுகளை வரைந்தார். இன்னொரு தகட்டில் நீளமான துளைகளை இடைவெளிவிட்டு வெட்டினார். இந்த இரு தகடுகளையும் ஒரு அச்சில் வைத்து சுழற்றிக்காட்டினார்.அப்போது மனிதன் விரைந்து நடப்பதுபோல் காணப்பட்டது.
Anchor Cut
அவர் பேசுதல் / Images
Anchor Cut
அவர் பேசுதல் / Images
1832-ல் ஆஸ்ட்ரியன் சைமன் ஸ்டாம்போ என்பவர் கிட்டத்தட்ட முழுமையான ஓர் உதாரணத்தை Stroboscope வெளியிட்டார். இந்த விளையாட்டு சாதனங்கள் மேலும் மேலும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிப்போனபோது அந்த கண்டுபிடிப்புகளின் தரமும் கூடிக்கொண்டேபோனது.
Cinematographer பேசுதல் / Voice Over (பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)
1834-ல் வில்லியம் ஜார்ஜ் ஹார்னர் என்னும் கணித அறிஞர் ஒரு கருவியை கண்டுபிடித்தார். அது Daedalum அல்லது Daedatelum என அழைக்கப்பட்டது. மேற்புறம் திறந்த வட்டவடிவிலான ட்ரம் ஒன்றின் உட்புறத்தின்கீழ் மனிதர்கள் மற்றும் மிருகங்கள் ஆகியவற்றின் சித்திரங்கள் தொடர்நிலைகளாக வரையப்பட்டிருந்தன.
ட்ரம்மின் வெளிப்புறம் நீளமாயும் சன்னமாயும் துவாரங்கள் இடப்பட்டன. ட்ரம் சுழலத்தொடங்கியதும் துவாரங்கள் வழியாக சித்திரங்கள் உயிர்பெற்று எழுந்து ஓடின. குதிரைகள் வேலியை தாண்டின. நாட்டியக்காரர்கள் பாலன்ஸ் செய்தனர். பல்லிகள் அசைந்து அசைந்து ஓடின. சித்திரக்குள்ளர்கள் பல்டியடித்து விழுந்தனர்.
ட்ரம்மின் வெளிப்புறம் நீளமாயும் சன்னமாயும் துவாரங்கள் இடப்பட்டன. ட்ரம் சுழலத்தொடங்கியதும் துவாரங்கள் வழியாக சித்திரங்கள் உயிர்பெற்று எழுந்து ஓடின. குதிரைகள் வேலியை தாண்டின. நாட்டியக்காரர்கள் பாலன்ஸ் செய்தனர். பல்லிகள் அசைந்து அசைந்து ஓடின. சித்திரக்குள்ளர்கள் பல்டியடித்து விழுந்தனர்.
இதேகருவி ஃபிரான்சில் 1860 வாக்கில் H.C.கிளார்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் அமெரிக்காவில் ஜீவசுழற்சி (Zoetrope) என்ற பெயரில் விற்பனைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றது.
FIilm Critic இடைமறித்து பேசுதல். (பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)
வட்டவடிவில் அமைந்த இக்கருவி ஒரு தாங்கியில் சுழலும் வித்த்தில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கருவியின் உட்புறத்திலும் மனித அசைவுகளை குறிக்கும் பல்வேறு உருவப்படங்கள் வரையப்பட்டிருந்தன. வெளிப்புறம் துளையிடப்பட்டு அது சுழற்றப்படும்போது படங்கள் அசைந்தன.
Anchor Cut
Film Book மற்றும் Magazines மேசைமேல் இருக்க அதில் கையூன்றிக் கொண்டு பேசுதல்.
(பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)
Anchor Cut
Film Book மற்றும் Magazines மேசைமேல் இருக்க அதில் கையூன்றிக் கொண்டு பேசுதல்.
(பகுதிக்காட்சிகள் முழுக்காட்சிகளாக மாறுதல்)
1868ஆம் ஆண்டு வின்செண்ட் என்பவர் கீனோகிராஃப் என்ற ஓர் அமைப்பை கண்டுபிடித்தார். பல சித்திரங்கள் அடங்கிய புத்தக வடிவிலான அமைப்பு அது. அதில் உள்ள ஏடுகளை புரட்டினால் அதன் இயக்கம் தெரியும்.
Cinematographer Cut and Voice Over / Visuals / Images
1877ஆம் ஆண்டு ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த Emile Reynaud என்பவர் Praxinoscope என்ற கருவியை கண்டுபிடித்தார். இது Zoetrope போலவே இயங்கினாலும், இரண்டுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் எமிலிரேனாட் வடிவமைத்த கருவியில் அசையும் படங்கள் ஒரு கண்ணாடியில் பிரதிபலிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
Cinematographer Cut and Voice Over / Visuals / Images
ஆனால் இந்த படங்கள் எல்லாமே விகாரமாக தெரிந்தது. இந்தக் குறையை போக்கவேண்டுமென்று James Clerk Maxwell என்ற அறிஞர் இதற்கு முன்னால் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை எல்லாம் ஆராய்ந்து புதியதொரு கருவியை வடிவமைத்தார். அதாவது Praxinoscope-லுள்ள கண்ணாடியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் Zoetrope-லிருந்த Lens-ஐ வைத்தார். இப்போது படங்கள் அகன்றோ, குறைந்தோ தெரியும் குறை நீங்கியது.
Anchor Cut
(பகுதிக் காட்சிகளில் புகைப்படக்கலையின் வளர்ச்சி குறித்த Slide Show)
இதே நேரத்தில் நிழற்படக்கலை என்னும் புகைப்படக்கலை வளர்ச்சியடைந்த நிலையை நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்த இரண்டு கண்டுபிடிப்புகளும் ஒன்றை மற்றொன்று பாதித்தபோது திரைப்படம் தனது குழந்தைப் பருவத்தில் காலடி எடுத்து வைத்தது.
அதாவது கைகளால் வரையப்பட்ட சித்திரங்களுக்கு பதில் நிழற்படங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் நிழற்படக்கலை வளர்ந்தவிதம் ஒரு சுவையான தனிக்கதை. அந்த ஒளிப்படவரலாற்றை அடுத்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
Now this Next Programme in Mayakkannaadi.
Now this Next Programme in Mayakkannaadi.
(தொடரும்)
No comments:
Post a Comment