தன்
தேசத்திற்காக போரிட்டபோது
அவன்
ஒரு கையை இழந்தான்.
அந்த
இழப்பு அவனை புலம்ப வைத்தது.
“இனிமேல் எதிலும் பாதியைத்தான்
என்னால்
செய்ய முடியும்.
பாதி
அறுவடையே என்னால் செய்ய முடியும்.
பியானோவை
பாதிதான் இசைக்க முடியும்.
கதவுகளை
ஒரு கையினாலேயே தட்ட முடியும்.
எல்லாவற்றிலும்
மிக மோசமானது
என்
காதலியை பாதியே தழுவிக்கொள்ள முடியும்.
சில
விஷயங்களை என்னால் செய்யவே முடியாது.
கலை
நிகழ்ச்சிகளை கண்டு கைதட்ட இயலுமா?”
அந்த
கணத்திலிருந்து அவன் மிகுந்த உற்சாகத்துடன்
ஒவ்வொன்றையும்
இருமுறை செய்தான்.
இப்போது
கையிருந்த
இடத்தில்
சிறகு
முளைத்து விட்டது.
நினா காஸீயன்
No comments:
Post a Comment