அது போராட்டமடா கண்ணா !
வீரர்கள் சண்டை போடுவார்களே .. அதுவா ?
ஆமா குழந்தை !
போரிடுவாங்க, கொல்லுவாங்க, சாவாங்க.
நாம் அன்னியனை எதிர்த்து போர் செய்கிறோமா ?
ஆமா கண்ணு அப்படித்தான் நினைக்கிறேன்.
நாம ஏன் அவங்களோடு போரிடனும் அம்மா ?
ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள்.
அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா ?
ஆமாண்டா அது அப்படித்தான்.
அப்படியென்றால் நான் அடிமையாக மாட்டேன் அம்மா.
எனக்குத் தெரியும் மகனே – நாங்கள்
ரொம்ப நாளைக்கு இப்படி இருக்க மாட்டோம்
கண்ணே தூங்கு !
புரட்சிவரும் இல்லையா அம்மா ?
ஆமாம் மகனே புரட்சி வரும்
வாயை மூடித் தூங்கடா.
ஏய் … அம்மா ! எப்போ புரட்சி வரும் ?
சீக்கிரம் மகனே … சீக்கிரம்
ஆனால் அம்மா ! நம்மிடம் ராணுவம் இல்லையே ?
சொன்னால் கேளடா தூங்கு
நாம் ராணுவம் அமைப்போம் கவலைப்படாதே.
ரொம்ப நாளாகுமா ராணுவம் அமைக்க ?
இல்லையடா மகனே அப்படி நினைக்கல்லே.
நம்ம படையிலே யாரு இருப்பினம் ?
ஓ … நம்ம அப்பா உன்னோட மாமன்மார்
நம்ம சனங்கள் எல்லோரும்
வாயை மூடித் தூங்கடா கண்ணு.
நானும் கூட … நானும் கூட
பெரியவனானதும் சேரலாமா ?
நீ அதிலே சேர முடியாது
வாயை மூடித் தூங்கடா
வீரன் பலசாலியா இருக்கணும்
ராத்திரி முழுதும் கண் முழிச்சிருந்தா
எப்படித் தான் நீ பலசாலியாவே
சொல்வதைக் கேளடா
உன் துப்பாக்கியை எடுத்துக்கோ
அதோட கொடியையும் எடுத்துக்கோ
தூங்கி அதையே கனவில பாரு
சரிதானே கண்ணு.
ச..ரி…ம்மா.
நன்றி : பாலம்
இதழ்