Saturday, 20 January 2018

பயோ - ரோபோடிக்ஸ் : இது கண்டுபிடிப்புகளின் காலம் ( பகுதி – 2 ) - ஆத்மாநாம்



உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் பயோ-ரோபோடிக்ஸ் துறை மூலம் பல மில்லியன் கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று எல்லா துறைகளிலுமே ரோபோடிக்ஸ் டெக்னாலஜி காலூன்றத் தொடங்கிவிட்டது.  விஞ்ஞானத்தின் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சி பயோ-ரோபோடிக்ஸ் மூலம் மானுடத்தின் விதிகளை மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது என்று சொல்லலாம்.

பயோரோபோடிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழும் போதெல்லாம் அத்துறை மேலும் ஒரு துணைப்பிரிவாக பரிணமிப்பது தான் அதன் முக்கிய பண்புகளில் ஒன்றாக இருக்கிறது. அதற்கான சிறந்த உதாரணமாக இத்தாலிய விஞ்ஞானிகள் உருவாக்கிக் காட்டிய செயற்கைத் தோல்களை (Prosthetic Skin Pads) சொல்லலாம்.


செயற்கைத் தோல்களை உருவாக்கி கைகளில் பொருத்துகின்றனர்

இந்த கண்டுபிடிப்பு Bio-Robotics துறைக்குள் Artificial Skin Sensing என்ற துணைப்பிரிவை கொண்டு வந்துவிட்டது. Hapticsஎனப்படும் Sense of Touch மூலம் இன்றைய ரோபோட்கள் அறுவை சிகிச்சைகளில் அதன் விதிமுறைகளுக்கு ஏற்றார்போல் இயங்கி வெற்றிகரமான ஆப்பரேஷன்களை செய்து வருகிறதுஉதாரணமாக வயிற்றில் ஆபரேஷன் செய்யும்போது அதன் தோல் பிரதேசத்தில் மென்மையான, கடினமான பகுதி எது என்று பிரித்து பார்த்து கத்தியை எவ்வளவு ஆழத்திற்கு செலுத்த வேண்டும் என்று புரிந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


’Prometheus’ படத்தில் Haptics முறையில் ஆபரேஷன் செய்யும் 
தானியங்கி ரோபோ

Interactive Therapy

இப்ப நாம பேசறதுசொல்லுறது எல்லாமே ஒரு  Interactive செயல்தான்நம்ம உடம்புல இருக்கற ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மெமெரி இருக்குஇதை ‘Muscle Memory’-ன்னு சொல்வாங்கஇப்ப கண்ணுன்னா பாக்ககாதுன்னா கேக்கநாக்குன்னா ருசிக்க.  அந்த உறுப்பு குறிப்பிட்ட வேலையையே திருப்ப திரும்ப செய்து அதுக்கு பழக்கப்பட்டு போயிருக்கும்சில சமயங்களில் அந்த குறிப்பிட்ட பகுதி இயங்காமல் போய்விடும்.


Virtually Interactive Environments Game மூலம் 
உறுப்புகளை செயல்பட வைத்தல்

இப்ப கால் ஒன்று இயங்காமல் போய்விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்நாம் காலை இயக்கும்போது மூளை அதற்கு கட்டளையிடாததால் அது இயங்கவில்லைஆக கால் செயலிழந்து விடவில்லைகாலை இயக்கும் மூளையின் பகுதிதான் செயலிழந்துவிட்டதுஇப்ப இந்தவகை நோயாளிகளுக்கு அந்தப் பகுதியை செயலாற்ற வைக்க பயோ-ரோபோடிக்ஸ் மூலம் ஒரு Virtually interactive environments-ஐ கேம் மாதிரி கிரியேட் செய்து அந்த அப்ளிகேஷன் மூலம் காலை இயங்க வைக்கிறார்கள்.

Wearable and Implantable Technologies

இதயத்தை செயல்பட வைக்ககிற cardiac pacemaker மாதிரியான கான்செப்ட்தான் இதுஇப்ப நம்மோட இதயத்துல ஒரு Pacemaker-அ பொருத்திட்டா அது இதயத்துக்கு சிக்னல் அனுப்பி அதனை செயல்பட வைக்கிறா மாதிரி பயோ-ரோபோடிக்ஸின் Wearable and Implantable Technologies மூலமா அதனை மூளைக்கும் பயன்படுத்தலாம்.  Parkinsonism, Epilepsy and Depression போன்ற நோய்களுக்கு இந்த Pacemaker கான்செப்டையே ரோபோடிக்ஸுடன் இணைத்து மூளையை செயல்பட வைக்கிறாங்க.


Pacemaker Concept - ல் மூளையை Activate செய்தல்

இதை அறுவை சிகிச்சைகளின் போது வேறொரு விஷயத்திற்கும் பயன்படுத்துறாங்கமுன்பெல்லாம் Anaesthesia குடுத்தா அது உடல் முழுவதையும் மயக்கநிலைக்கு கொண்டு போகும்.  ஆனால் பயோ-ரோபோடிக்ஸ் மூலம் குறிப்பிட்ட இடத்தை மட்டும் செயலிழக்க வைக்கமுடியும்இப்பநாம ஆப்பரேஷன் பண்ற இடத்துக்கும் மூளைக்கும் ஒருலிங்க் இருக்குமில்லியாஅந்த இடத்த ஸ்விட்ச்-ஆஃப் செஞ்சிடுவாங்கஅப்ப அந்த இடத்துக்கு முளையிலிருந்து சிக்னல் போகாதுஅதுனால அங்கயிருந்து  ரிப்ளையும் இருக்காது.  இதனை எப்படி செயல்படுத்துறாங்கன்னா நாம முன்னர் குறிப்பிட்டது போல் மூளையை கண்ட்ரோல் பண்ற நியூரான் மாதிரியே ஒரு செயற்கையான நியூரானை உருவாக்கி மூளையின் குறிப்பிட்ட பகுதியை கண்ட்ரோல் பண்ணலாம்.

MICRO AND NANOTECHNOLOGY

இந்த துறையில் ரொம்ப சின்ன சின்ன உயிரிகளை உருவாக்க பயோ-ரோபோடிக்ஸ பயன்படுத்தறாங்கஅமீபா மாதிரி ஒரு செல் உயிரி ஒண்ண செயற்கையா உருவாக்குறாங்கஅது வந்து அமீபா செய்யற எல்லா வேலையையும் அந்த செயற்கை அமீபாவும் செய்யும்ஏறக்குறைய குட்டியூண்டு நேனோ ரோபோட் மாதிரி.


நேனோ ரோபோ உருவாக்கம்

இந்த மாதிரி தான் நியூரான்களையும் உருவாக்குறாங்க.  நியூரான்ஸ் மூளையை கண்ட்ரோல் பண்ற முக்கிய காரணிகள் அப்படிங்கறதால உடலை இயங்க வைக்கும் மூளையின் எந்தப் பகுதியையும் நாம் இந்த செயற்கையாக உருவாக்கப்பட்ட நியூரான்கள் மூலமாக கண்ட்ரோல் செய்யலாம்.


TARGET DRUG DELIVERY / SUSTAINED-RELEASE DRUG DELIVERY

இந்த Method-ல நம்ம உடம்புல ஏதாவது ஒரு இடத்துல பிரச்சினைன்னா அதுக்கான மருந்த Polymer Mould மாதிரி செய்து ரோபோட்டோட சேர்த்து உடலுக்குள் செலுத்தி விடுகிறார்கள்அந்த ரோபோட் அந்த மருந்தை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு கொண்டு போகும்டார்கெட் செய்யப்பட்ட இடத்தில் மட்டும் தான் மருந்து ஓபன் ஆகும்இப்ப நமக்கு DNA-வில பிரச்சினைன்னா சரியாக அது DNA-க்கு போய் தான் சரி செய்யும்கால்மூட்டுல உள்ள Cell-ல பிரச்சினைன்னா அது நேரா அந்த Cell-க்கே போய் சரி செய்யும்.


டார்கெட் பண்ணப்பட்ட இடத்தில் மருந்தினை ரிலீஸ் செய்யும் 
நேனோ ரோபோ

முதலில் நமது உடலில் சுகரின் அளவை கட்டுப்படுத்த அதற்கான மருந்தை பாதிக்கப்பட்ட பகுதிக்கு ரோபோட்டுடன் சேர்த்து நம் உடலுக்குள் செலுத்தி விடுகிறார்கள்அந்த ரோபோ எந்த இடத்துக்கு அனுப்பப்பட்ட தோசரியாக அந்த இடம் சென்று அமர்ந்து கொள்ளும்அது நம்மோட சுகர் லெவலுக்கு தகுந்தா மாதிரி மருந்தை ரிலீஸ் பண்ணும்தினமும் 1 ml  கொடுக்கணும்னு கட்டளை இருந்தா அதுக்கு தகுந்தா மாதிரி தினமும் கொடுத்து கிட்டேயிருக்கும்சுகர் லெவல் குறைஞ்சா அதுவே மருந்தோட அளவை குறைச்சி கொடுக்க ஆரம்பிச்சிடும்இப்போதைக்கு இந்த ரோபோவை வருடத்துக்கு ஆக்டிவேட் பண்ணலாம்.

அடுத்து பயோ-ரோபோடிக்ஸ் முறையில் செயற்கையாக வைரஸ்களை உருவாக்கி குறிப்பிட்ட சில பிரச்சினைகளின் போது மனிதர்களை காக்க முடியும்.


ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பெருகிய 
முயல் கூட்டம்

உதாரணமாக ஆஸ்திரேலியாவில் ஒருமுறை முயல்கூட்டம் கட்டுக்கடங்காமல் பெருகியதால்அங்குள்ள புல்வெளிகள்அழியும் நிலைக்கு தள்ளப்பட்டதுஇப்படி சின்ன தாவரங்களோட அழிவினால மற்ற உயிரினங்களும் இதனால் பாதிப்புக்குள்ளாகிஉயிரியல் சுழற்சியில் பாதிப்பு ஏற்படும். அதனால் பயோ-ரோபோடிக்ஸ் முறையில Myxomatosis என்கிற செயற்கையான வைரஸ் ஒன்றை உருவாக்கிஅந்த வைரஸை முயல்களின் உடம்பில் செலுத்தி அதை அழிச்சாங்கஇதுபோன்ற இக்கட்டான தருணங்களில் பயோ-ரோபோடிக்ஸின் செயற்கை வைரஸை பயன்படுத்தி மனிதகுலத்துக்கு ஆக்கபூர்வமான நன்மைகளையும் நம்மால் கொண்டு வரமுடியும்.

இறுதியாக

எதிர்காலத்தில் பயோ-ரோபோடிக்ஸ் என்பது இன்னும் கூட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய துறையாக மாறப்போவதற்கான நிரூபணங்கள் தற்போது உறுதியாகிவிட்டது.  இந்நிலையில் பல்துறை வல்லுநர்களும்விஞ்ஞானிகளும்பொறியியலாளர்களும் கூட்டாக இணைந்து ஓர் அப்பழுக்கற்ற முழுமையான பயோ-ரோபோடிக்ஸை உருவாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுகிட்டிருக்காங்க.

வருங்காலத்தில் எந்த சூழ்நிலையிலும் மனிதன் வாழ்வதற்கான சூழலை பயோ-ரோபோடிக்ஸ் ஏற்படுத்தி கொடுக்கும்அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக மனிதனைப்போல் சிந்திக்கும் ரோபோட்டை உருவாக்குவதும்மனிதனையும் ரோபோட்டையும் கலந்துரையாட வைப்பதும்மனிதனின் உற்ற நண்பனாக ரோபோட்டை உருமாற்றுவதும்மேலும் இருவருக்குமிடையேயான சிந்தனை மற்றும் செயல்கள் என்பதாக பயோ-ரோபோடிக்ஸ் துறையின் ஆய்வுகள் நீண்டுகொண்டே இருக்கின்றன.

இத்தகைய ஆராய்ச்சிகளின் விளைவாக மனிதனைப் பற்றி உடலியல் ரீதியாகஉயிரியல் ரீதியாக மேலும் பல உண்மைகளை அரிய வாய்ப்பு ஏற்படுகிறதுஅந்த உண்மைகளின் மீதான கண்டுபிடிப்புகள் மானுடவளர்ச்சியை மேன்மேலும் வலுவான ஒன்றாக பரிணமிக்க வைக்கிறதுஅறிவியல் என்பதே இடையறாத கண்டுபிடிப்புகள் மற்றும் சோதனைகளின் இயங்கியல் தானே.

உலகெங்கிலும் இன்று பல்வேறு துறைகளை பாதித்தும்புனரமைத்தும் கொண்டிருக்கும் பயோ-ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் இந்த உண்மையைத் தான் நமக்கு வெளிச்சமிட்டு காட்டுகிறது.


மனித ரோபோ உருவாக்கம்


’புரோட்டோ லைஃப்’ என்ற இத்தாலிய நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் பெடோ ஒருமுறை சொன்னார்.

கடவுளின் ஏரியா என்று கருதப்படும் பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கிறோம்உயிர் என்பது மிகவும் வலிமையானதுநாம் நினைத்ததை செய்யும்படி ஒரு உயிரைப் படைக்க முடியுமானால்எல்லாவிதமான நல்ல காரியங்களையும் நம்மால் செய்யமுடியும்நாம் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளும் பட்சத்தில் ‘கடவுளின் வேலையை” நாம் மேற்கொள்வதில் தவறில்லை.”

மேற்கண்ட கூற்று பயோ-ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் மீது அனைவருக்கும் இருக்க வேண்டிய பொறுப்புணர்வை அடிக்கோடிட்டு காட்டுவதாய் உள்ளது. 


(முற்றும்)



No comments:

Post a Comment