Sunday, 21 January 2018

சமாதானப் புறாக்கள்





நாங்கள் ஒத்துப்போகவில்லை
சொல்லிக்கொண்டனர் அவர்கள்.
சிறிது காலம் சென்றது.
உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
இன்னும்
சிறிது காலம் ஆனது.
சமாதானப் புறாக்களை
வானில் பறக்க விட்டனர்.
காலம் சுழன்று
மறுபடியும் அதே இடத்துக்கு
வந்து நின்றது.
இப்போதெல்லாம்
புறாக்களை காணவில்லை.
போர் விமானங்கள்
பறந்து கொண்டிருக்கின்றன.
அதன் எச்சங்களாய்
ஆங்காங்கே ஷெல்கள்
விழுந்து கொண்டிருக்கின்றன.
உடன்படிக்கைகளோ
கிழித்தெறியப்பட்ட
ஆவணங்களுக்குள்.
புறாக்கள் மட்டும்
முட்டையிட்டு
குஞ்சு பொறிக்கும் அவசரத்துடன்
எப்போதைக்குமான
அதனதன் கூண்டுக்குள்.



No comments:

Post a Comment

தமிழ் இசையும் ஐரோப்பிய இசையும்

 நா.மம்மது  உலகில் பண்முறை இசை (Modal system of Music), அல்பண்முறை இசை (non modal system of music) என்று இருபெரும் இசை மரபுகள் உள்ளன. முதலா...