Friday, 28 February 2025

பாலாவுடன் உரையாடல் - 2

கில்லி கோட்டி Vs கிரிக்கெட்


இன்றைக்கு நவீன காலத்தில் ஆடப்படும் முன்னணி ஆட்டங்கள் அனைத்திற்கும் நிகராக எண்பதுகளில் பதின்பருவ சிறுவர்கள் ஆடியோ ஒரு ஆட்டத்தை முன்னிறுத்துவது என்பது ஒரு அசாதாரணமான காரியம். முதலில் இந்த கான்செப்ட்டை சிலர் வரவேற்றனர். அவர்கள் வரவேற்றதற்கான காரணத்தை நாம் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் இதே கான்செப்ட்  சிலர் நக்கலடிக்கவும் செய்தனர். ஆனால் அவர்கள் ஏன் இதனை நக்கலடித்தனர் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இன்றைய உலகத்தில் சாதிக்கப்பட்டவைகள் அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் கேளிக்கைக்குறியதாக பரிகசிக்கப்பட்டவைகள் தான் என்பதும் நமக்கு தெரிந்தே இருக்கிறது.

நாம் இந்த கான்செப்டில் கில்லி கோட்டி வெர்சஸ் கிரிக்கெட் என்பதாக தேர்வு செய்ததற்கான காரணத்தை நாமே உள்வாங்கிக் கொள்வது அவசியம். அது ஆய்வுக்குரிய ஒன்றும் கூட.  

காரணம் கிரிக்கெட்டில் உள்ள கூறுகள் அனைத்தும் கில்லி கோட்டியிலும் இருக்கிறது என்பதே இதன் பிரதான அம்சம்.

கிரிக்கெட்டின் பிரமாண்டம் என்பது உலகமயமாக்களின் பின்னணியில் உருவான பொருளாதார நிலை. தொழில்நுட்ப ரீதியில் அதன் சந்தை மற்றும் உருவாக்கம். டிஜிட்டல் வடிவில் அதன் காட்சி வழியே  விரிவடையும் சர்வதேச அரசியல். காணக் கிடைக்காத உலகளாவிய அதன் பார்வையாளர் மட்டம். 

கில்லி கோட்டியின் கற்பனா ரீதியான பிரம்மாண்டம் என்பது  ஒருங்கிணைந்த கிராமங்களின் வழியாக கட்டமைக்கப்பட வேண்டிய அதன் பிரம்மாண்டமான  இறுதிக் காட்சி வடிவம். உதாரணமாக சங்கமம் படத்தில் வரும் இறுதிப் பாடலின் காட்சி அமைப்பு. 

நாசர் ஒரு பேட்டியில் நாட்டுப்புற கலைகளில் ஒன்றான தெருக்கூத்தை பிரம்மாண்டமான வடிவில் அரங்கேற்ற வேண்டும் என்ற தனது வேட்கையை தெரிவித்திருந்தார்.

நிகூகி வா தியாங்கோவின்  சிலுவையில் தொங்கும் சாத்தான் நாவலில் பிரம்மாண்டமான சிம்பொனி ஒன்றை கட்டமைக்க வேண்டும் என்ற கனவுடன் மாட்டா டாங்கா வண்டியில் பயணிக்கிறான் ஓர் இசை மாணவன் .


1. Ameros Berros படத்தில் வரும் நாய்ச் சண்டை பந்தயம்.

2. Gangster மத்திய நிகழும் வெட்டுக்கிளி பந்தயம்.

3. தமிழ்நாட்டில் நிகழும் சேவல் சண்டை.

4. ஜல்லிக்கட்டு கூட ஒரு புராதான விளையாட்டு தான்.

5. Spain, Portugal, Southern France, Mexico, Ecuador, Venezuela-வில் நிகழும் காளைச் சண்டை கூட ஜல்லிக்கட்டு தான்.

No comments:

Post a Comment

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன் பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பற...