Friday, 28 February 2025

MY GRANDFATHER AZHAGIRISAMI (Biopic Documentary)

வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம்

  

அன்புள்ள, திருவள்ளுவன் மற்றும் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு,

ஆவணப்படத்திற்கான வேலைகளை துவங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகள் 

அதன் முதற்படி ….

முன் தயாரிப்பு வேலைகள் (PRE-PRODUCTION FOR DOCUMENTARY)

ஆவணப்படம் யாரைப் பற்றியது?

ஏன் அவரை பற்றி எடுக்கிறோம்?

அவரை பற்றி எவற்றையெல்லாம் அதில் ஆவணப்படுத்த விரும்புகிறோம்?

அந்த ஆவணப்படத்தின் பார்வையாளர்கள் யார்?

ஆவணப்படம் எந்த வடிவில் (FORMAT) எடுக்கப் போகிறோம்?

ஆவணப்படத்தின் நீளம் எவ்வளவு?

தொழில்நுட்பச் சாதனங்கள் எவை? (CAMERA AND SOUND துணைச் சாதனங்கள்)

படப்பிடிப்பு நடத்த வேண்டிய இடங்களைப் பற்றிய விவரங்கள் : (LOCATION & INDOOR / OUTDOOR)

படப்பிடிப்பில் இடம்பெறும் கட்டிடங்கள் மற்றும் இயற்கை சார் வாழ்விடங்கள் : 

(காடு, ஆறு, குளம், கண்மாய், ஏரி, தோப்பு, துறவு (கிணறு), பம்பு செட் இன்ன பிற.).

வீடுகள் பற்றிய விவரங்கள் மற்றும் வீடுகளைப் பற்றிய அமைப்புகள் 

எந்த மனிதரைப் பற்றியது இந்த ஆவணப்படம்?

பிறப்பு முதல் இறப்பு வரை அவரைப் பற்றிய விவரங்கள்

அவர் என்னென்ன தொழிலை மேற்கொண்டார்? அதில் பிரதான தொழில் என்ன? 

அவருக்கு பிடித்த தொழில் எது?

எதிலெல்லாம் அவருக்கு ஈடுபாடு அதிகம்?

அவருடைய குடும்பம் பற்றிய விவரங்கள் : (பிள்ளைகள் / பேத்திகள் பேரன்மார்கள்) 

அவருடைய சுற்றங்கள் 

அவருடைய நண்பர்கள்

எந்த வருடத்தில் பள்ளியில் சேர்ந்தார்? ( எந்த வயதில் / தேதி-மாதம்-வருடம்)

எந்த ஊர்? எந்த பள்ளிக்கூடம்? இப்போது இருக்கிறதா? அவருடன் படித்த நண்பர்கள் பற்றிய விவரங்கள்? அவருடன் படிப்பு பற்றிய விவரங்கள் :

அவருடைய பால்ய காலம் / அவருடைய இளமைக்காலம் / அவருடைய திருமணம் / அவரின் துணைவியார் பற்றிய விவரங்கள் : சொந்தமா? அல்லது அசலா? திருமணம் நடந்தது (வீட்டிலா அல்லது கோவிலிலா அல்லது மண்டபத்திலா?) அது குறித்து விவரங்கள் / அவருடைய திருமணத்திற்கு பிறகு../ திருமணத்திற்கு முன்-பின்னான காலங்கள் / அவரின் முதுமைக் காலம் (அந்திமக் காலம் / அவரின் மறைவு குறித்த செய்திகள் மற்றும் விவரங்கள் / அவரின் நினைவிடம் / வருடாவருடம் வரும் நினைவு நாள் எப்படி வழிபடப்படுகிறது.

முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை, அடுத்தடுத்த குழந்தைகள் பற்றிய விவரங்கள்

அவரின் நடை உடைகள் மற்றும் அலங்காரம் குறித்த விவரங்கள்: 

அவர் பயன்படுத்திய பொருட்கள் பற்றிய விவரங்கள் / அவர் சேகரித்து வைத்த பொருட்கள் பற்றிய விவரங்கள் 

அவரின் கடிதப் போக்குவரத்துகள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் படித்த புத்தகங்கள் மற்றும் சேகரிப்புகள்

அவருக்கு பிடித்த விலங்குகள்

அவர் சென்ற கோவில்கள் 

அவருக்கு பிடித்த தெய்வங்கள் 

அவர் கலந்து கொண்ட திருவிழாக்கள்

தேசிய தலைவர்களில் அவருக்கு பிடித்தவர் யார்? யார்?

தெருக்கூத்து / நாடகம் / சினிமா பற்றிய அவரின் அபிப்பிராயங்கள் 

அவரின் பொதுவான சுபாவங்கள் 

(குறிப்பாக நகைச்சுவை உணர்வு மற்றும் கோபதாபங்கள்)

அவர் செய்த தான தர்மங்கள் (தனிநபருக்கு, கோவில்களுக்கு, சுற்றங்களுக்கு - பொருளாக ,பணமாக, இடமாக)

அவர் முன்னின்று நடத்தி வைத்த விழாக்கள், வைபவங்கள் மற்றும் திருமணங்கள் மற்றும் வீட்டில் நடந்த விஷேஷங்களில் அவரின் பங்களிப்பு

அவரின் தோரணை மற்றும் சுபாவங்கள் பற்றிய மற்றவரின் கருத்துக்கள் அவரதுக்கு பிடித்தமான பொருட்கள் இடங்கள் தனி மனிதர்கள் மற்றும் சொந்தங்கள்

அப்போது அவருடன் வாழ்ந்த மனிதர்களில் இருப்பவர்களின் பட்டியல் / மறைந்தவர்களின் பட்டியல்

படப்பிடிப்பில் மறு உருவாக்கம் (RE-CREATON) செய்ய வேண்டியவை எவை? எவை?

படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழு

படப்பிடிப்பின் தோராயமான தயாரிப்புச் செலவு

படப்பிடிப்புக்கு தேவையான வாகன வசதிகள்

படப்பிடிப்பின் முதற்கட்ட வேலைகள் மற்றும் பயண விவரங்கள் வழித்தடங்கள் மற்றும் வரைபடங்கள்

நமக்கு உதவப்போகும் நபர்களின் பட்டியல் (ஊர் வாரியாக) மற்றும் தொலைபேசி / முகவரி

படப்பிடிப்பு தொடங்கி முடியும் வரையிலான காலகட்டம்

1. PRE-PRODUCTION

2. SHOOTING

3.POST PRODUCTION (MUSIC / EDITING / SOUND MIXING / VOICE OVER / Etc., Etc.,

4.RELEASE DATE 

5. HOW MANY COPIES OF DOCUMENTARY?

முதலில் … 

தோராயமான ஒரு SCRIPT-ஐ உருவாக்குவது. (APPROXIMATE SCRIPT)

நான் உங்களை பார்ப்பது. அந்த SCRIPT-ஐ வைத்துக்கொண்டு நான் மேலே சொல்லப்பட்ட அனைத்து விவரங்களையும் போதிய அளவில் சேகரித்துக் கொள்வது. (இதனை நமது வசதிப்படி இரண்டு பயணங்களாகக் கூட வைத்துக் கொள்ளலாம்) 

இரண்டாவது …

நீங்கள் இங்கு வருவது. (இதனை முன் பின்னாக வைத்துக் கொள்ளலாம்)

அப்போது மேற்கண்ட பயணத்தில் சேகரித்து வைத்துள்ள விவரங்களைக் கொண்டு (VIDEO / AUDIO / PHOTOS / Etc., Etc.,) FINAL SCRIPT-ஐ தயார் செய்து விடலாம். 

மூன்றாவது …

படப்பிடிப்பு (SHOOTING)

(00.0002024 – லிருந்து 00.0002024-முடிய) 

நான்காவது …

படப்பிடிப்புக்கு பின்னான வேலைகள் 

1. FIRST

APPROXIMATE SCRIPT (DRAFT 1)

2. SECOND (DRAFT 2) (FINAL SCRIPT)

3. THIRD 

SHOOTING

4. FORTH 

POST PRODUCTION 

5. FIFTH

RELEASE DATE 

(மற்றவை அலைபேசியில் மற்றும் நேரில்)

நட்புடன்

விஜயதாஸ் ஆத்மாநாம் B.SC., D.F.Tech

MOBILE : 9841832675

E-MAIL : vijayadask69@gmail.com

No comments:

Post a Comment

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன் பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பற...