டெயீட்ரே மெயின்டல்
ஒரு சமுதாயத்தை பொறுத்தவரையில், 'சிறுபான்மையினர்' என்ற கோட்பாடு எண்ணிக்கை சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை. ஒரு குழுமத்தின் சிறுபான்மை தகுதி நிலை பற்றிய உணர்வினை உருவாக்குவது சமூக வரலாற்று காரணிகளே ஆகும்.
ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண் டின் பிற்பகுதியிலும், பத்தொன்பதாம் நூற் றாண்டின் துவக்கத்திலும் தேசிய இனங் களின் அடிப்படையில் நாடுகள் தோன்றி, குறிப்பிட்ட தேசிய இனங்கள், பிற தேசிய இனங்களை அடக்கி ஆள முற்பட்ட போது மேற்கத்திய நாடுகளில் சிறுபான்மை பிரச்சி னை எழுந்தது, சிறுபான்மை என்றால் என்ன? என்பதற்கு அ ற்கு அநேகமாக மிகப் புகழ் பெற்ற விளக்கத்தை 19454 சமூகவியல் வல்லுநர் லூயிஸ் விர்த் கூறினார். அவர் "தங் கனது உடலமைப்பு அம்சங்கள் அல்லது பண்பாட்டு அம்சங்கள் காரணமாகத் தாங்கள் வாழ்கிற சமூகத்திலிருந்து மற்றவர் மற்றவர்களால் தனிப்படுத்தப்பட்டு, வேறுபாட்டோடும் தாழ் வாகவும் நடத்தப்படும் போது, தாங்கள் அனைவரும் பாரபட்சத்துக்கு இலக்காகி விட்டவர்கள் என்ற எண்ணம் பெறுகின்ற மக்களைக் கொண்ட பிரிவினரே சிறுபான்மை யினர்."
விர்த்தின் விளக்கப்படி, சிறுபான்மையினர் உள்ளனர் என்றால் அதற்கு மாறாக உயர் மதிப்பும் அதிக உரிமைகளையும் பெற்ற பெரும்பான்மையினர் இருந்தாக வேண்டும்; சிறுபான்மை நிலையில் உள்ளவர்கள் அனைத்திலும் முழுப்பங்கு பெறாதவர்களாக் கப்பட்டு, அவ்விதம் நடத்தப்படும் போது அந்த மக்கள் தங்களை "ஒதுக்கப்பட்டவர் கன்" என்று கருதுகின்றனர். சுருங்கக் கூறின், சிறுபான்மைப் பிரிவினர், எளிதில் பார்த்து அறியும் வகையில் அதே சமூகத்தில் உள்ள மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையிலான அங்க, அடையாளங் களைக் கொண்டவர்கள்; மற்றவர்களைப் போலன்றி அவர்கள் வேறுபாடாக நடத்தப் படுகிறார்கள். இவ்வித நிலைக்கு உள்ளான பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற அளவில் அவர்கள் தங்களிடம் காட்டப்படுகிற வேறு பாட்டை நன்கு உணர்ந்தவர்கள்.
விர்த்தின் இந்த விளக்கத்துக்கு மானிட வியல் வல்லுநர்களான சார்லஸ் வாக்லே மற்றும் மார்வின் ஹாரிஸ் பின்னர் மேலும் பல திருத்தங்களைக் கூறினர். அவர் களுடைய கருத்துப்படி சிறுபான்மை நிலை என்பது ஒரு சமூகத்தின் வாரிசு விதிமுறை களின்படி பரம்பரையாகப் பெறப்படுவதாகும்.
அதாவது ஒருவரிடம் சிறுபான்மை யினருக்கு உரியதாகக் கருதப்படுகிற அங்க, அடையாளம் இல்லாவிடினும் அவர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர் என ஒதுக்கப்பட்டு விடுகிறார். எடுத்துக்காட் டாக, அமெரிக்க நிற வேற்றுமை முறையில், ஒருவர் அமெரிக்கா -ஆஃப்ரிக்கப் பூர்வீகத் தைக் கொண்டவராக அறியப்பட்டால் அவர் பொதுவில் கருப்பர் அதாவது "நீக்ரோ " வகைப்படுத்தப்பட்டு விடுகிறார். எனவே சிறுபான்மை நிலை என்பது பிறக் கும் போதே கூடவே ஏற்பட்டு விடுவதாகுமே தவிர, வாழ்க்கையின் பிந்தையக் கட்டத்தில் தோன்றுவதல்ல. ஒரு சிறுபான்மைப் பிரிவி னர், பெரும்பான்மை பிரிவைச் சேர்ந்தவர் களுடன் திருமண உறவு வைத்துக் கொள் வது தடை செய்யப்பட்ட காரணத்தால் தங்க ளுக்குள்ளாகவே திருமண உறவுகளை வைத் துக் கொள்பவர்கள் என்று வாக்லேயும். சும் கூறுகின்றனர். இவ்விதத் தடைகள், மாரிசும் சிறுபான்மை - பெரும்பான்மையினர் இடை யில் எல்லைக்கோடுகள் நீடிக்கும்படி செய்வ துடன், பெரும்பான்மையினரின் உரிமைகள் நிரந்தரமாக இருப்பதற்கும் உதவுகின்றன. எனினும் இந்த இரு பிரிவினருக்கும் இடையே பாலுறவு கிடையாது என்பது பொருளல்ல. சட்டப்படியான வம்ச வாரிசும். சொத்து வாரிசும் தான் இதில் கவனிக்கப்பட்ட வேண்டிய விஷயம். பெரும்பான்மையினர் தங்களுக்குள்ளாக மட்டும் திருமண உறவை வைத்துக் கொள்ளும்போது பெரும்பான்மை யினரின் சட்டப்படியான குழந்தைகள் மட்டுமே பெரும்பான்மை மதிப்பைப் பெற அந்த மதிப்பானது, பெரும்பான்மைப் பிரிவைச் சேராத மற்றவர்களுக்கு கிடைக் காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
வாக்லேயும், மாரிசும் கூறிய திருத்தக் கொள்கையில் பெரும்பான்மை - சிறுபான்மை யினர் சம்பந்தப்பட்ட பல சூழ்நிலைகளுக்குப் பொருந்தும் என்றாலும், அவை எல்லா சூழ் நிலைகளுக்கும் பொருந்துவதாகா. "தங்களுக் குள்ளாக மட்டும் திருமண உறவு என்று அவர்கள் கூறிய அடிப்படை அம்சமானது, பின்னர் நடந்த ஆய்வுகளின் விளைவாக சில திருத்தங்களுக்கு உரியதாகி விட்டது. மேட்டுக்குடியினர் தங்களுக்குள்ளாகவே திருமண உறவை வைத்துக் கொள்ளும் போது, உரிமைகளை அனுபவிக்கும் பிரிவி னரால் தங்களது எல்லையை வரையறுத்துக் கொள்ள முடிகிறது உண்மையே என்றாலும் சிறுபான்மைப் பிரிவுகள் பல சமயங்களிலும் வேறு சிறுபான்மைப் பிரிவினருடன் திருமண உறவு வைத்துக் கொள்கின்றனர். எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் வெவ்வேறு இனப் பிரிவுகள் இவ்விதம் "கலப்புத்" திருமணத் தில் ஈடுபடுகின்றன .இதை விட முக்கிய மாக, சமீப ஆண்டுகளில், பல பிரிவுகள் தங்களை சிறுபான்மையினர் என்று உணர்ந்து, அந்த அளவில் ஒன்று திரண் டுள்ளன. ஆனால் அவை வம்ச பரம்பரை காரணமாக அல்லது தங்களுக்குள்ளாக மட்டும் திருமண உறவை வைத்துக் கொள்ள நேர்ந்ததன் காரணமாக அவ்விதம் சிறுபான்மை நிலையை பெற்றவையல்ல.
அண்மைக் கால ஆய்வாளர்கள், விர்த்தை விட அதிக அளவில் பெரும்பான்மைப் பிரிவின் அரசியல் ஆதிக்கத்தை வலியுறுத்தி யுள்ளனர். வாழ்க்கை வள வசதிகளை - நல வாழ்வு வசதிகள், வேலை வாய்ப்பு, உணவு, கல்வி, செல்வம், அதிகம் பெற முடிவதாலும், அவற்றின் மீதான ஆதிக்கத்தாலும் ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரின் வாழ்க்கை வாய்ப்புகளைத் தங்கள் கைக்குள் வைத் திருக்க முடிகிறது. வேறு விதமாகச் சொல்வ தானால் பெரும்பான்மையினருக்குள்ள அதிக அதிகார பலம் காரணமாக அவர்களால் சிறு பான்மையினர் மீது பாரபட்சம் காட்ட முடி கிறது. அவர்களை மிகவும் பாதிக்கும் வகை யில் அழுத்தி வைப்பது முதல் அடியோடு தீர்த்துக் கட்டுவதுவரை - நடத்தவும் முடி கிறது.
அடையாள அம்சங்கள்
விர்த் கூறிய "அடையாள" அம்சத்துக் கும் சில விளக்கங்கள் தேவை. சமூகத்தில் சிறுபான்மையினரின் கட்டமைப்பு அளவி வான நிலையை விட அவர்களது தனித் மையை வைத்தே அவர்களை மட்ட தன்மையை வர்கள் என்று ஒதுக்குவது என்பது ஆதிக்கக் குழுவுக்கு மிகவும் எளிது. இது "இலக்காகிற வர்கள் மீது பழி போடுதல்" எனப்படுகிறது. நிற அடிப்படையிலான சூழ்நிலைகளில் மட்டுமன்றி மதச் சிறுபான்மையினர், தன் பால் விரும்பிகள் மற்றும் பலரும் குறித்தும் இதே போன்று சொல்லப்படுகிறது. இவ் விதம் பிரித்து ஒதுக்க நவீன காலத்தில் கலை, பண்பாடும் ஓர் அளவு கோலாக்கப் பட்டு விட்டது. எடுத்துக்காட்டாக, குடி யேறிகள் அவர்களது கலை. பண்பாட்டு அடிப்படையில் பாரபட்சமாக நடத்தப்பட லாம். இவ்வித நிலைகளில் அவர்களது நெறி முறை,குறிக்கோள், நம்பிக்கைகள், பழக்க வழக்கம் போன்றவை அவர்களது அடிப்படை வேறுபாடுகளாகக் கருதப்பட்டு, அவற்றின் பேரில் அவர்கள் பெரும்பான்மை யினரை விட தாழ்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.
குறிப்பிட்ட பிரிவினரை இவர்கள் இன்னார் என்று அடையாளம் கண்டு கொள்ளும் தன்மை இந்த விஷயத்தில் தொடர்புள்ள தாகும். குறைந்தபட்சம் வட அமெரிக்காவில் '"அடையாளம் காணத்தக்க சிறுபான்மை யினர்" பற்றி அதிகம் பேசப்படுகிறது. எனினும் அடையாளம் காணும் தன்மையை எப்போதுமே சிறுபான்மையினர் தான் காட்டி வருவதாகச் சொல்ல முடியாது. உதாரண மாக நாஜி ஜெர்மனியில் சிறுபான்மையின ரான யூதர்களை எளி எளிதில் அடைய அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் கட்டாயமாக "மஞ்சள் நட்சத்திர" அடையாளத்தை அணியும்படி கட்டாயப் படுத்தப்பட்டனர். வேறு வகையில் யூதர் களைப் பிற மக்களிடமிருந்து அடையானம் கண்டுபிடித்திருக்க முடியாது.
"புதிய" சிறுபான்மையினர்
அடுத்து "புதிய" சிறுபான்மையினர் என்ற பிரச்சினைக்கு வருவோம். பாரபட்சம் காட் டப்படுகிற சிறுபான்மையினர் என்று தங்களைக் ககுதிக் கொள்வோரிடையே சமீப ஆண்டுகளாக அரசியல் உணர்வு, அதிகரித்துள்ளது.இவர்களில் பலர் இந்த உணர்வுடன் செயலில் ஈடுபட ஒன்று சேர்ந் துள்ளனர். எடுத்துக்காட்டாக, இவர்களில் பெண்கள். விர்த்தின் சிறுபான்மையினர் குறித்த விளக்கத்துக்கு நன்கு பொருத்தமான வர்கள் என்று தோன்றுகிறது. அவர்கள் பார்ப்பதற்கு வேறுபட்டவர்கள், பாரபட்சத் துக்கு உள்ளானவர்கள், பெண்கள் என்ற காரணத்துக்காக அவ்விதம் பாரபட்சமாக நடத்தப்படுவதாக கடந்த பல பல பத்தாண்டுகளாக நன்கு உணர்ந்தவர்கள் எனினும் 1970களில் தான் சமூகவியல் நிபுணர்கள் பெண்கள் குறித்து கவனம் செலுத்தி, ஆண் களுடன் சேர்ந்து வாழ்ந்த போதிலும், பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட வேறுபட்டது என்று கண்டுணர்ந்தனர். அத்துடன் அவர்கள் சமூக அந்தஸ்து வரிசை. சமூக வரையறு நிலை ஆகியவை பற்றிய ஆய்வில் பெண்களின் நிலையையும் ஆராய முற்பட்டனர். சொல்லப் போனால் சொத்து, பெருமதிப்பு, நல வாழ்வு வசதிகள் சில சமூகங்களில் உணவும்தான் - ஆகிய வற்றைப் பெறுவதில் பெண்களுக்குப் பாதக மான நிலைமை தான் உள்ளது. இவை யெல்லாம், ரோசாலிண்ட் ட்வோர்க் பெண்களின் சிறுபான்மை நிலை பற்றிய தமது கட்டுரைக்கு அளித்த தலைப்பில் "சிறுபான் மையாக்குவது வெறும் எண்ணிக்கை மட்டு மல்ல" என்று கூறியதை நன்கு எடுத்துக் காட்டுகிறது.
தங்களது பாலியல் போக்கு காரணமாகத் தங்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற உணர்வினால் தனிப்பிரிவாக அமைந் துள்ளனர் என்ற அளவில் தன்பால் (Homosex) விரும்பிகளாகஉள்ள ஆண்கள் மற்றும்பெண் கள் ஆகியோர் விஷயத்தில் அவர்களை எளி தில்அடையாளம் காண்பது தனிப்பிரச்சினை.
சிறுபான்மையினர் என்று சொல்லத் தக்க, குறைந்தபட்சம் சில சமயங்களில் அப்படி வகைப்படுத்தத்தக்க சமூகப் பிரிவு முதியோர் ஆவர். வேலைக்கு ஆளை அமர்த்திக் கொள் வது, கட்டாயமாக வேலையிலிருந்து ஓய்வு பெறச் செய்வது மற்றும் மற்ற விஷயங்களில் வயது அடிப்படையில் முதியோர் மீது பார பட்சம் காட்டப்படுகிறது. இதன் விளைவாக வட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பா விலும் முதியோர் இந்த பாரபட்ச அடிப்படை யில் ஒன்று திரண்டுள்ளனர், எடுத்துக் காட்டாக அமெரிக்காவில் முதியோர் 'கிரேபாந்தர்" என்னும் பெயரில் அமைப் பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இத்தாலி யில் முதியோர் ஓய்வோதியம் பெறுவோர் சமீப ஆண்டுகளாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். காது கேளாதவர்களும் இதே போல சிறுபான்மையினர் என்ற அளவில் ஒன்று திரண்டு வருகின்றனர்.
உரிமை, அல்லது வாய்ப்பு மறுக்கப்பட்ட வெவ்வேறான மக்களை நெறி கெட்டவர்கள் என முத்திரை குத்தி அவர்கள் அனைவரை யும் ஒரே பிரிவினர் போல கருதும் போக்கு காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக கனடா வில் அகதிகள், விரும்பத்தகாத குடியேறிகள், "சேம நல" மோசடிக்காரர்கள் என்றெல் லாம் வருணிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டு களுக்கு முன் அமெரிக்காவில் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் "வீடற்றவர்கள்" அனைவரும் ஒரே பிரிவினர் போலவும் அவர் கள் நெறி கெட்டவர்கள் என்றும், அவர் 'களது அவலத்துக்கு அவர்களே காரணம் என்பது போலவும் சித்திரிக்கப்பட்டது. இப்படி முத்திரை குத்தும் போக்கு நீடிக்கு மானால் அவர்களிடையே சிறுபான்மையின ருக்குரிய எண்ணம் விரைவில் வளர்ந்து விடும்.
சிறுபான்மை உணர்வு
இந்த எடுத்துக்காட்டுகள், சிறுபான்மையினர் உருவாவது ஒரு சமூக வரலாற்று , அளவிலான செயல் என்பது தெளிவு, இதில் முக்கிய அம்சம், குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற அளவில் பொதுவில் தங்கள் அனைவர் மீதும் பாரபட்சம் காட்டப் படுவதாக அவர்களிடையே உணர்வு உண்டாவதாகும். இவ்விதமாக வரலாற்றின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்ட ஒரே மாதிரி நிலைக் குள்ளாகிறவர்கள் என்று கூறத்தக்கவர்கள் பின்னொரு கட்டத்தில் அரசியல் உணர்வு பெற்ற சிறுபான்மையினர் ஆகிவிடுகின்றனர்.
எனினும் நாம் சிறுபான்மையினர் என்ற உணர்வானது குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பான குறுகிய கண்ணோட்டத்தில் தான் அல்லது சமூக அடையாளத்தின் ஒரே ஒரு அம்சத்தை மட்டும் பற்றி நிற்பதில் தான் போல் முடிந்தாக வேண்டும் என்பதல்ல. இதுவே நமது கருத்தாகும். சிறுபான்மை உணர்வானது இதே போன்ற நிலைமைக்கு ஆளான மற்ற பல பிரிவினருடன் ஒன்று பட்டு நிற்பதற்கு அடிப்படையாகவும் விளங்க முடியும். இன சிறுபான்மைகளைப் பொருத்தமட்டில் இவ்வித ஒருமைப்பாடா னது, ஒத்த கலாச்சார அம்சங்கள், சிறுபான் மையினர் என்ற நிலை மற்றும், பிறர் மாதிரி பாரபட்சத்துக்கு உள்ளவது ஆகியவற்றின் அடிப்படையில் பல இனத்தவருக்கு இடையி லான ஒத்துழைப்பாக அமையலாம். ஆல்பெர்ட் மெம்மி கூறுவதாவது- ஒடுக் கப்பட்ட அனைவரும், காலனி ஆட்சியில் உள்ள மக்கள் யூதர்கள், ஏழைகள், பெண் கள் ஒருவரையொருவர் ஒத்த நிலையில் தான் உள்ளனர். ஒரே மாதிரியான துன்பம் பல சமயங்களிலும் ஒரே மாதிரியான விளை வுகளை உண்டாக்குகிறது". சிறுபான்மைப் பிரிவுகளிடையிலான இவ்வித ஒருமைப்பாடு நமது காலத்தில் அவ்வளவாகக் காணப்பட வில்லை. எனினும் வெறும் தொகுப்பாக உள்ள நபர்களிடமும் காணப்படுகின்ற அள வுக்கு, மேலும் மேலும் குறுகிய அடிப்படை யில் அதிக அளவில் சிறுபான்மை உணர்வு வளர்ந்து வருகின்ற இந்த கால கட்டத்தில் இவ்வித ஒருமைப்பாடுகள் தான் மனித சமு தாயத்தைத் தோற்றுவிப்பதற்கான சிறந்த நம்பிக்கையாகத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment