பாலா, இதைவிட சிறப்பாக எழுத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள வேறுபாட்டை, கதாசிரியனுக்கும் இயக்குனருக்கும் உள்ள வேறுபாட்டை பல பல வருடங்கள் பழகிய பல படங்களில் உதவி இயக்குனராகவும் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஒரு நண்பனுக்கு, உலக அளவில் கதை சொல்லும் முறை, அதை திரைக்காட்சியாக கொண்டு வருவதில் தோல்நுட்ப ரீதியாக படிப்படியாக ஏற்பட்ட மாற்றங்கள் இவைகளை நுட்பமான அளவில் உள்வாங்கிய உங்களை ராஜன் உள்வாங்கவில்லையே என்று எனக்குத் தெரிகிறது. இது குறித்து முன்னமே பேசித்தான் இருக்கிறோம். இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் ஸ்டீரியோடைப் கதை சொல்லல் அது படமாக்கப்பட்ட விதம் திரைக்கு வந்து தோற்றுக் கொண்டிருப்பது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் இந்த குறிப்பிட்ட இயக்குனர்கள் அவர்கள் பெரிய சினிமா பட்டறை என்று நினைத்து அவர்களிடமிருந்து வரும் உதவி இயக்குனர்கள் திருந்துவதே இல்லை. 90-க்கும் மேற்பட்டவர்களின் நிலை இதுதான். இதை சாபக்கேடு என்பதா? தலைகுனிவு என்பதா? தெரிந்தே சூடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதா? கிராமத்தில் இப்படி சொல்வார்கள். ' ஆமா இன்னமோ பெரிய படிப்பு படிச்சானாம். இது கூட தெரியல ' என்று. மாற்றங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் அடுத்த கட்டத்துக்கான முதல் செயல். 'மாற்றம் ஒன்றே மாறாத விதி' முதலில் இவர்களை கடந்தால் தான். நாம் நினைக்கும் ஒன்றையே உருவாக்க முடியும். நினைத்ததை எல்லாம் சரியாகவே சொல்லி விட்டீர்கள் பாலா.. இதற்கு மேல் நான் என்ன சொல்ல.. உங்கள் வழி தெளிவானது. அறிவானது. அறிவியல் பூர்வமானது. நாளைய சினிமாவுக்கானது. நடை போடுங்கள். நான் இருக்கிறேன். கோபித்துக் கொண்டாலும் நான் நீங்கள் போகும் வழியில் மரித்துக் கொண்டு முன் நிற்பேன். என்னை ஒரு முறை ஏறிட்டு பார்த்துவிட்டு என்னிடம் எதுவுமே நடக்காதது போல் இயல்பாக பேசுவீர்கள். நாமும் அப்போதைக்கான உரையாடலில் தொடங்குவோம். நம்மிடம் தொடர்வது. இதுதான் நமது நட்பு. இதற்கு மேல் வேறு என்ன இருக்கப் போகிறது. ராஜன் நமக்கு என்றும் நண்பன் அவ்வளவுதான். அவன் பேசாமல் போனாலும் அவன் எனக்கு நண்பன் தான். அதுதான் உங்களிடம் என்னிடம் உள்ள பண்பு. ஆரண்ய காண்டத்தில் இப்படி ஒரு வசனம் வரும். சம்பத் அந்தப் பையனிடம் கேட்பார். 'உங்க அப்பாவ உனக்கு ரொம்ப பிடிக்குமா..' 'பிடிக்காது'... 'அப்ப ஏன்டா இவ்வளவு ரிஸ்க் எடுக்குற'... 'ஏன்னா அவரு என் அப்பா' அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பான். இதுதான் பாலா நட்பு இயங்கும் விதமும் குடும்பங்களுக்குள் இருக்கும் நமது உறவுகள் இயங்கும் விதமும். நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன் பாலா. ராஜனுக்கு நீங்கள் புரிய வைக்க நினைத்ததை தமிழில் மொழி பெயர்த்து படித்தபோது இப்போது நான் சொல்லி இருப்பதைவிட இன்னும் ஏராளமானது மனதில் ஓடுகிறது. எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்ல முடியாது அல்லவா? எண்ணற்ற கேள்விகளோடு முடிக்கிறேன்.
இன்னும் ஒன்று :
ராஜன் உங்கள் ஸ்கிரிப்டில் சிலவற்றை மாற்ற சொன்னான் அல்லவா? நீங்களும் இது சரியான ஃபார்மில் தான் இருக்கிறது என்று நினைத்தாலும் ராஜனுக்காக மனதை தேற்றிக்கொண்டு சில மாற்றங்களை உங்கள் ஸ்கிரிப்டை ரீரைட் செய்தீர்கள் அல்லவா? எதை ரீரைட் செய்தீர்களோ. அதை எடுத்துவிட்டு. எதை நீங்கள் எழுதி இருந்தீர்களோ அதை மறுபடியும் அதே இடத்தில் எழுதுங்கள். ஜப்பானிய ஐந்து விதிகள் : 'செய்ரி, செய்டன், செய்ஸோ, செய்கெட்ஸு, ஷிஸுகே' முதல் விதியே இது தான். 'செய்ரி'. எடுத்த பொருளை அதே இடத்தில் வையுங்கள். மாற்றி வைக்கும் போது நீங்களும் குழம்பிப் போவீர்கள். அடுத்தவர்களும் குழப்பிப் போவார்கள். கடைசி விதி பற்றி நான் உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும். நீங்கள் தெளிந்து விட்டீர்கள் என்று சொல்லவில்லை பாலா திரும்பி விட்டீர்கள். பந்து இதயத்தில் மோதவில்லை. சுவற்றில் மோதியது. கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறேன். நிறுத்திக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment