The Eye of the Serpent - Books Review
ஆசிரியர் : எஸ். தியடோர் பாஸ்கரன். வெளியீடு : ஈஸ்ட் வெஸ்ட் புக்ஸ் (மெட்ராஸ்) பிலிட். 62/அ ஆர்ம்ஸ் ரோடு, கீழ்ப்பாக்கம், சென்னை 600010.
தமிழ்ச் சினிமா என்கிற ஊட சுத்தின் வரலாறு, கதிப்போக்குகள், மைல் கற்கள் ஆகியவற்றை நடு நிலையில் நின்று ஓர் ஆய்வு நூலுக் -குரிய இலக்கண அமைதி சற்றும் கெடாமல் நினைவு கூரும் ஆசிரியர் பாஸ்கரன் இந்நூலுக்குத் தமிழ்ச் சினிமா - ஓர் அறிமுகம் என்றே பொதுத் தலைப்பிட்டிருக்கலாம். பெர்னாட்ஷாவின் உருவகத் தலைப்பை விட அதுவே பொருத்தம்.
நூலின் முன்னுரையில் இசை, பரதம், இலக்கியம் போன்ற பிற கலைக் கூறுகளுக்கென்று அடிப் படை நூல்கள் கிடைக்கின்றன. அவற்றைக் காட்டிலும் பொது மக்களின் நாடித் துடிப்பாக இயங் கும் சர்வவல்லமை படைத்த சினி மாவுக்கென்று அறிவுபூர்வமான நூல்கள் (தமிழில்) இல்லை என்கிற ஆதங்கம் தொனிக்கிறது. அந்த ஆதங்கத்தை ஆசிரியரின் இந்நூல் பெருமளவில் நீக்கி விடுகிறது.
தமிழ்ச் சினிமா வரலாறு விமர்சனம் என்கிற துறையில் இது காறும் வெளிவந்த எல்லா நூல் களிலிருந்தும் இந்நூல் தனித்து நிற்கிறது. நூல் முழுதும் இழை யோடும் கருத்துத் தொடர்பு - பொருளாழம் - விமர்சன நுழை புலம் அத்தகையது சினிமா என்கிற ஊடகத்தின் இலக்கணத்தை இது வரையில் திரையிடப் பெற்ற தமிழ்ப் படங்களில் தேடுகின்ற ஒரு பயணமே இந்நூல், 'இந்து' விமர் சகர் சொல்வது போல் மேலைச் சினிமாவின் இலக்கணத்தைத் தமிழ்ச் சினிமாவில் தேடினால் பின்னையதை ரசிக்க இயலாது என்பதை ஏற்பதற்கில்லை. மேலைச் சினிமா கீழைச் சினிமா என்று வேறு வேறு இலக்கணங்கள் உண்டா என்ன? சினிமா என்பது ஒன்றுதான். அதன் இலக்கணமும் ஒன்றுதான். தெருக்கூத்து, காலட்சேபம், நாட்டிய நாடகம், அமெச்சூர் நாடகம், மேடைப் பிரசங்கம், ரிகார்ட் டான்ஸ், மியூசிக் விடியோ.... இவற்றின் அதிகாரத்திற்கு எடுபிடியாய் நிற்கும் ஒரு கலப்படம் சினிமா அன்று என்கிற தர்க்க நியாயமே இந்நூலின் அடிக்காடு
மென்னப்படம். பேசும்படம். வசன காலம், பாடல் காட்சி. படிக்கற்களாய் நிற்கும் படங்கள். சாதனை படைத்த தயாரிப்பாளர்கள். இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் இப்படி ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு இது 'தேசிய இயக்கச் சினிமாவும் சத்யமூர்த்தியும்' எனகிற கட்டுரை தனித்து அரசியல் தலைவரின் பங்களிப்பை அரிய செய்திகளுடன் நிறுவிக் காட்டுகிறது. அதே போல் திராவிடச் சினிமாவுக்கும் பொதுவுடை மைச் சினிமாவுக்கும் தனித்தனி அத்தியாயங்கள் ஒதுக்கியிருக்கலாம். நூலின் வீச்சு இன்னும் பரந்திருக்கும்.
இண்டெக்சுக்கு 50 பக்கமா என்று கேட்கும் இந்துவின் கேள்வியில் பொருள் உண்டு திரைப்பட விவர அட்டைகள், துணை நூற் பட்டியல், கலைச்சொல், பெயர்க் குறிப்புகள் ஆகியவற்றைச் சிறிய எழுத்தில் ஒளியச்சு செய்திருந்தால் ஏராளமான பக்கங்களைக் குறைத்து நூலின் விலையையும் குறைத்திருக்கலாம்.
ஆசிரியரின் கருடப்பார்வைக்குச் சில அடையாளங்கள் :
1. தமிழகம் 1950களில் மின்சாரமயமாகிறது. சிற்றூர்களுக்குச் சினிமாப் பிரவேசம் இப்போதுதான்.
2. நாடகக் கம்பெனிகளின் கர்நாடக இசையையும், மராத்தி மேடையிலிருந்து கிரகிக்கப்பட்ட இந்துஸ்தானி இசையையும் 1930 களில் நுழைந்த பார்சி இசையையும் தமிழகத்திற்கே உரித்தான நாட்டுப் பாடல் இசையையும் கலந்து பின்னாளில் சினிமா இசை என்கிற புதுவடிவம் புறப்பட்டது.
3. தமிழ்ச் சினிமாவில் இன்ளவும் பாடலும், நடனமும் படக் கதையோட்டத்தோடு இழையாமல் தனியே முந்திரிக் கொட்டைத்தனமாகத் துருத்திக் கொண்டுதான் நிற்கின்றன.
4. சம்பூர்ண ராமாயணத்தில் இசையும் சினிமாவும் இணைந்து பொருந்தின வட்டார வழக்கு என்கிற இயல்பான பேச்சுத் தமிழ் மக்களைப் பெற்ற மகராசியில் முதன் முதலில் இடம்பெற்றது. (இரண்டு படங்களையும் இயக்கியவர் கே.சோமு. இவர் ஏ.பி. நாகராஜனின் முன்னோடி)
5. அந்தநாள், உன்னைப்போல் ஒருவன், வீடு போன்ற படங்கள் பாட்டில்லாத படங்கள் இவற்றின் இசை இயல்பான சினிமாவைக் கொண்டு வந்தது. (அதாவது சினிமாவுக்குப் பின்னணி இசை போதும்).
6. சளசளவென்று பேசிக் கொண்டிருந்த சினிமாவில் காமிரா மொழியை எப்படிக் கையாள்வது என்று 'ஏழை படும்பாடு' மூலம் நயமாகக் காட்டியவர் கே. ராம்நாத் (இவரே சினிமாவைப் புரிந்து கொண்ட முதல் இயக்குநர்)
7. சமுதாய நோக்கில் பிற்போக்காளரான சத்யமூர்த்தி சினிமாவின் வல்லமையை முன்கூட்டியே அறிந்து அதை அனுசரித்துப் போனவர். அவருக்குப் பின் தேசியத் தலைவர்கள் அவரது கருத்தின் எதிரிகளாக இருந்ததால் சமுதாய நோக்கில் முற்போக்காளரான திராவிடத் தலைவர்கள் அந்த ஊடகத்தைத் திறம்படக் கைப்பற்றிச் 'சாதனைகள்' புரிந்தனர்.
No comments:
Post a Comment