Friday, 28 February 2025

அதிகாரத்தின் செயல்பாடு எத்தகையது?

மிஷேல் ஃபூக்கோ

(1976 ஜனவரி 14-ஆம் தேதி பாரீஸிலுள்ள College de France-இல் நிகழ்த்தப்பட்ட உரை. பிரெஞ்சு மொழியில் வெளியாகாமல் இருந்த இவ்வுரையை இத்தாலிய மொழியில் Qatar Alessandro Fontana. Pasquale Pasquino watah Michel Foucault, Micro Fisica del Potere (Turin. 1977) புத்தகத்தில் வெளியான இவ்வுரை ஆங்கிலத்தில் இடம் பெறும் புத்தகம்: Michel Fuocault. Power/ Knowledge: Selected Interviews and Other Writings 1972-77 (ed) Colin Gorden. 

தமிழில் நாகார்ஜுனன்.


1970-71 காலகட்டத்திலிருந்து இன்று வரையிலான எனது ஆய்வுகளின் பாதையிலிருந்து ஒன்று புலனாகிறது: அதிகாரத்தின் செயல்பாடு எத்தகையது (how of power) என்பதைப் பற்றியதாக எனது ஆய்வுகள் அமைந்து வந்துள்ளள எனலாம். அதிகாரத்தின் இயக்கப் போக்குகளை, குறிப்பாக இரண்டு எல்லைகளுக்கிடையில், இரண்டு புள்ளிகளுக்கிடையில், வைத்துப் புரித்து கொள்ள முற்பட்டு வந்துள்ளேன் நான். இந்த எல்லைகளைப் பின்வருமாறு விவரிக்கவாம்:

1. அதிகாரத்தின் எல்லைகளை வடிவ ரீதியாக (Formal), நிறுவன ரீதியாக வரையறுத்துக் கொள்ள வழி செய்கிற உரிமைகள் (rights); மற்றும் இவ்வுரிமைகள் குறித்த விதிமுறைகள் (rules of right).

2. அதிகாரத்தால் உற்பத்தி செய்யப்பட்டு பரவலாக்கப்படுகிற உண்மைகளின் விளைவுகள்; இந்த விளைவுகள் அதிகாரத்தை மறு உற்பத்தி செய்வதாக உள்ளன.

ஆக அதிகாரம், உண்மை, உரிமை என்ற முக்கோணத்தைச் சுற்றி எனது ஆய்வுகள் அமைத்துள்ளன என்று கூறுவேன்.

அரசியல் என்பதைப் பற்றி தத்துவவாதிகள் இதுவரை எப்படிக் கேள்வி கேட்டு வந்துள்ளார்கள் என்பதைப் பார்ப்போம் : அதிகாரத்துக்கென சில பிரத்தியேக உரிமைகள் உண்டு என்பதை தத்துவவாதிகள் உணர்கிறார்கள். அப்படி உணர்ந்தவுடன் அவர்களுக்கு ஒரு பிரச்சினை தோன்றுகிறது. உண்மை - அல்லது மெய்ம்மை - பற்றிய பிரத்தியேகமான சொல்லாடல், தத்துவம் : அச்சொல்லாடலைக் கைக்கொள்ளும் தத்துவவாதிகளுக்கு, "தத்துவத்தால் எப்படியெல்லாம் அதிகாரத்தின் உரிமைகளை வரையறுக்க முடியும்" என்று சிந்தித்தாக வேண்டிய தேவை வருகிறது.

இதே கேள்வியை மீண்டும் கேட்கும் நபராக நான் இருக்கப் போவதில்லை. என்னுடைய கேள்வி சற்றே வித்தியாசமானது, தந்துவவாதிகள் இதுநாள் வரை கேட்டு வந்துள்ள மேற்கண்ட கேள்வியுடன் ஒப்பிட்டால் என்னுடைய கேள்வி மிகவும் சாதாரணமானது : பருண்மையானது எனலாம்.

என்னுடைய பிரச்னைப்பாடு பின்வருமாறு:

உண்மை குறித்த சொல்லாடல்கள் உற்பத்தி செய்யப் படுவதன் மூலம் குறிப்பிட்ட சில அதிகாரத்துவ உறவுகள் நிலைநிறுத்தப்படுகின்றன : குறிப்பிட்ட சில உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அவை யாவை?

இதே கேள்வியை வேறு மாதிரியாகவும் கேட்டுப் பார்ப்போம் :

நமது இன்றைய சமுதாயத்தில், உண்மைகள் என்பனவற்றுக்கான விளைவுகள் மிகவும் வன்மையானதாக (potent) இருக்கின்றன : எனவே இவ்வுண்மைகள் குறித்த சொல்லாடல்களை உற்பத்தி செய்யவல்ல அதிகாரமானது, எப்படிப்பட்டது?


இன்னும் சொல்லப்போனால்- தமது இன்றைய சமுதாயத்தில் மட்டுமின்றி எல்லா சமுதாயங்களிலும் அதிகாரத்துவ உறவுகள் விரவிக்கிடக்கின்றன : சமுதாய உடற்கூற்றை நிர்ணயிப்பவையாக இருக்கின்றன எனலாம். குறிப்பிட்ட ஒரு சொல்லாடலின் உற்பத்தி பெருக்கம் மற்றும் சுழற்சியின்றி அதிகாரத்துவ உறவுகள் நிலைநிறுத்தப்பட்டுச் செயல் படுத்தப்பட முடியாது. ஆக, உண்மை குறித்த சொல்லாடல்களின் பருண்மையான இயக்கமின்றி அதிகாரம் செயல்படுத்தப்பட முடியாது எனலாம். எனவே அதிகாரத்துக்கு உட்பட்டு உண்மைகளை உற்பத்தி செய்கிறோம்; உற்பத்தி செய்பவர்களாக வாழ்கிறோம். மேலும் உண்மைகளை உற்பத்தி செய்வதன் மூலமே அதிகாரத்தை செயல்படுத்திக் கொள்பவர்களாக இருக்க முடிகிறது நம்மால்.

மேற்கண்ட நிகழ்வு எல்லா சமுதாயங்களுக்கும் பொருந்தும் ஒன்றுதான்.இருந்தாலும் தமது இன்றைய சமுதாயத்தைப் பொறுத்தவரையில் அதிகாரம், உரிமை, உண்மை ஆகியவை மிகவும் பிரத்தியேகமான முறையில் தமக்குள்  பின்னப்பட்டிருக்கின்றன, அமைப் பாக்கம் பெற்றிருக்கின்றன என்று கூற இடமிருக்கிறது. அதாவது, நமது இன்றைய சமுதாயத்தில், அதிகாரத்தின் பல்வேறு வகைப்பட்ட இயங்குபோக்குகளை விடவும் அதன் கூர்மையான மற்றும் நிலைபெற்ற தன்மைகளைப் பார்க்க முடிகிறது என்று சொல்ல முடியும்.

இதையே இன்னும் விளக்கமாக பார்ப்போம்; தமது இன்றைய சமுதாயம் இயங்கிக் கொண்டிருப்பதற்கு அதற்கு ஒரு விஷயம் நிச்சயமாகத்தேவை தனது அதிகாரம் குறித்த உண்மைதான் அந்த விஷயம். இந்த உண்மையை தேவைப்படும் போதெல்லாம் உற்பத்தி செய்துதர வேண்டியவர்களாக நாம் வைக்கப்பட்டிருக்கிறோம். அதாவது, உண்மையையே பேசியாக வேண்டியவர்களாக நாம் இங்கே நிறுத்தப்படுகிறோம். உண்மை என்பதை நமது வாக்குமூலமாகவோ, கண்டுபிடிப்பாகவோ முன் நிறுத்த நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலை ஒரு கெடுபிடி, அல்லது தண்டனை.

உண்மை என்பதை அதிகாரமானது, இடைவிடாமல் தேடி அலைகிறது. ஆக. தேடலின் மூலம் அடையப் பெறுவதாகவோ விசாரணையின் மூலம் வெளிக் கொணரப்படும் தாகயோ பதிவு செய்யப்படுவதாகவோ உண்மை அமைந்து கொள்கிறது. இதனால்தான் நமது இன்றைய சமுதாயத்தில் உண்மையைத் தேடுகிற செயல்பாட்டை அதிகாரம் அங்கீகரித்திருக்கிறது. இதற்கான பிரத்தியேக நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன : உண்மையை அடைவது தொழில் முறையாக்கப்பட்டு அதற்கான பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஆக. செல்லத்தை, பணத்தைப் பெருக்கியாக வேண்டிய நிலையில் வைக்கப்பட்டுள்ளதைப் போலவே உண்மையையும் உற்பத்தி செய்தாக வேண்டிய நிலையில் வைக்கப்பட்டிருக் கிறோம். இன்னும் சொல்லப்போனால், உண்மை என்பதை உற்பத்தி செய்வதன் மூலம்தான் செல்வத்தை, பணத்தை உற்பத்தி செய்யவும் தம்மால் முடிகிறது!

வேறோரு விதத்தில் இதே பிரச்னையை அணுகுவோம் உண்மை என்பதாக அறியப் படுவதன் அடிப்படையில்தான் சமுதாயச் சட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. சட்டம் என்பது உண்மை குறித்த ஒரு சொல்லாடல் என்கிற பட்சத்தில், அது அதிகாரத்தின் விளைவு களைக் கொஞ்சமேனும் திர்ணயிப்பதாக உள்ளது. இப்படியாகத்தான் நாம் கூண்டில் நிறுத்தப்படுகிறோம்; தம்மைப் பற்றிய தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன: தம்மைப் பற்றிய உண்மைகள் பதிவு செய்யப்படுகின்றன: இப்படித்தான் வாழவேண்டும், இப்படித்தான் சாக வேண்டும் என்றெல்லாம் நமக்குச் சொல்லப்படுகிறது.. இதற்கெல்லாம் அடிப்படைச் காரணம், அதிகாரத்தின் பிரத்தியேக விளைவுகளைத் தம்மும் கொண்டவையாக உண்மை குறித்தான சொல்லாடல்கள் செயல்படுவதுதான்.

அதிகாரத்தின் இயங்குபோக்குகள் பற்றிய நேரடியான ஆய்வுகளாக மட்டுமின்றி. அதிகாரத்தின் பிரத்தியேக உரிமைகளுக்கான விதிமுறைகள் மற்றும் அதிகாரம் செயல்படுவதற் கான விடுமுறைகள்) (அதாவது உண்மை என்பதன் வினைவுகள்) பற்றியதாகவும் உண்மை குறித்த சொல்லாடல்களின் அதிகாரம் பற்றியதாகவும் என் புத்தகங்கள் அமைந்துள்ளன. இதுதான் என் ஆய்வுப்புலம் நான் மேற்கொண்டுவிட்ட இப்பாதை நேரானதல்ல என்பது எனக்குப் புரிகிறது கரடுமுரடாகவும் குறுக்கு வெட்டாகவும் உள்ள இப்பாதையில் கொஞ்சி தூரமே நான் சென்றுள்ளேன் என்பதும் எனக்குப் புகிறெது. இருந்தாலும் என் ஆய்வுகள் பற்றியும் அவற்றைநான் மேற்கொண்டதற்கான அடிப்படையான கோட்பாடு பற்றியும் ஆய்வுகளுக்கென நான் எடுத்துக்கொண்ட வழிமுறைகள் மற்றும் எச்சரிக்கைகள் பற்றியும் இங்கே சில விஷயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.

மேற்கத்திய சமுதாயங்களின் வரலாற்றை எடுத்துக்கொண்டு பார்த்தால், சட்டம் குறித்த சித்தனையானது மத்திலக் காலகட்டத்திலிருந்து (Medieval Times) அரசனின் அதிகாரம் பற்றியே பேசுவதாக இருந்து வந்தது. அரசுஅதிகாரம் என்பதே அரசனின் அதிகாரமாகக் கருதப்பட்டு வந்தது. இச்சமுதாயங்களின் நீதிஅமைப்பானது. அரசனின் அதிகாரத் தேவைகளுக்கான எதிர் விளையாகவும் அரசனின் அதிகாரத்தைப் பலப்படுத்துவதற்காகவும் கட்டியெழுப்பப்பெற்றது.இங்கே உரிமை என்றாலே அது அரசனின் உரிமை; அவ்வளவுதான் அரசலின் அதிகாரம் பற்றிய தத்துவப்பின் புலத்தைக் கட்டியெழுப்பியதில் சட்டவல்லுனர்களும் சிந்தனையாளர்களும் அன்று வகித்து விட்ட பணி மிக முக்கியமானதாகக்கொண்டாடப்பது இப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்.

ரோமானியப் பேரரசு வீழ்ச்சியுற்ற பின்பு 12-ஆம் நூற்றாண்டில்தான் மீண்டும் ரோமானிய சட்ட -அமைப்புக்குப் புத்துயிர் கிட்டியது. ரோமானிய சட்ட- அமைப்புக்கும் நீதிபரிபாலன அமைப்புக்கும் புத்துயிர் அளிக்கப்பட்டதன் மூலமாகத்தான் முடியாட்டி அதிகாரத்துக்கான ஏகபோக உரிமை (absolute right) நிறுவப்பட முடிந்தது. பின்வரும் கால கட்டத்தில் மேற்கத்திய சமுதாயங்களில் முடியாட்சியானது தூக்கியெறியப்பட்டது. உண்மைதான் : அரசனின் கட்டுப்பாட்டிலிருந்து நீதிபரிபாலன அமைப்பு தழுவிப் போய் விட்டது உண்மைதான் முடியாட்சிக்கே எதிராக இந்த நீதிபரிபாலனஅமைப்பு திருப்பி விடப்பட்டதும் உண்மைதான்.

ஆனால் இந்த நீதிபரிபாலன-அமைப்பே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு விட்டதா என்றால் அங்கேதான் பிரச்னை வருகிறது ஆக மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளால் கப்பட்ட விஷயங்கள் எவை எலை என்று பார்த்தால் அலை அரசனில் இறையாண்மை (Sovereignty) பற்றிய எல்லைகள் மட்டுமாகவே இருந்து வந்துள்ளன, அதாலது,

"அரசனின் (அரசின்) அதிகாரத்துவ எல்லைகள் யாவை ?" என்ற கேள்வி மட்டுமே திரும்பத் திரும்ப எழுப்பப்படும் பிரச்னையாக இருந்து வந்துள்ளது. இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால் இன்று வரையிலும் கூட அரசனானவன் "யாகுக்கும் தெரியாமலேயே" மேற்கத்திய சமுதாயங்களின் நீதிபரிபாலன - அமைப்பில் உட்கார்ந்தி குப்பதாகத்தான் கூறவேண்டும்! சட்டத்துறைச் சிந்தனை, சட்ட-அறிவு பற்றி விவாதிக்கிற ஒவ்வொரு முறையின் போதும் உண்மையில் முடியாட்சியைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்திருப்போம்:இருப்போம் சட்ட வல்லுனர்கள், சட்டத்துறை அறிஞர்கள் போன்றோர் (அரசனின் கையாட்களாக இருந்தாலும் சரி, எதிரிகளாக மாறிப் போயிருந்தாலும் சரி) விவாதங்களில் இருக்கும்போதெல்லாம் அரசனின் (அரசின்) அதிகாரத்துவ எல்லைகள் பற்றி மட்டுமே விவாதமானது இருந்து வந்துள்ளது : இருக்கும்.

இரண்டு வழிகளில் இப்போக்கு சாத்தியமாகிறது; சாத்தியப்படும் விதத்தில் நமது பேச்சு நடந்து கொண்டிருக்கிறது முடியாட்சியின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் அடிப் படையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காகவும் அரசனின் அதிகாரத்துவ இயக்கத்தை விளக்கிக் காட்டுவதற்காகவும் அரசனது அடிப்படை ஏகபோக உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் நடக்கும் பேச்சு ஒருபுறம், இதற்கு நேர்மாறாக, ஏகபோக அதிகாரத்தின் எல்லைகளை வரையறுத்து விடுவதற்காகவும் அந்த எல்வைகளை குறிப்பிட்ட சில உரிமைகள் பற்றிய விதிமுறைகளுக்கு உட்படுத்துவதற்காகவும் (அவ்வாறு உட்படுத்துவதன் மூலம் தான் அரசனின் அதிகாரம் நியாயப் படுத்தப்பட முடியும் என்பதாலும்) நடந்தேறுகிற பேச்சு இவ்வொரு புறம் 1 ஆக, (அரச) அதிகாரத்தின் நியாயப்பாட்டை நிலை நிறுத்துவதன் உரிமை மற்றும் இறையாண்மை குறித்த கோட்பாட்டின் பணியாக, மத்தியக் காலகட்டத்தி விருந்தே, இருந்து வந்திருக்கிறது.

உரிமை என்றாலே இறையாண்மை பற்றிய பிரச்னையாக மட்டுமே அன்று அது கருதப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம் ? உரிமை குறித்த தொழில் நுட்பங்கள் மற்றும் சொல்லாடல்கள் போன்றவை அதிகாரத்தின் மேலாதிக்கத்தை மறைத்து வந்துள்ளன என்று அர்த்தம். மேலாதிக்கத்தை மறைத்ததோடு அல்லாமல் அதிகாரத்தை அதன் தோற்றமான அரசன் என்ற உருவத்தின் மேல் அவை குவிமையப்படுத்தின. இதுவும் இரண்டு வழிகளில் சாத்தியமாக்கப்பட்டது:

1. இறையாண்மையின் நியாயமான உரிமைகள்

2. இறையாண்மைக்குக் கீழ்படிய வேண்டிய கடமைகள்

மத்தியக் கால கட்டத்திலிருந்து இயங்கி வந்துள்ள உரிமை குறித்த இந்தச் சொல்லாடலை பின்னோக்கி எடுத்துச் சென்று பார்ப்பதாக என் ஆய்வுகள் அமைந்திருக் கின்றன. இந்தச் சொல்லாடலை தலைகீழாக்கி விட நான முயன்றிருக்கிறேன்.சமுதாயத்தில் நிலவி வருகிற மேலாதிக்கத்தை, அதன் மறைமுக இயக்கத்தை, கொடூரத் தன்மையை. வெளிச்சம்போட்டுக் காட்ட பலவாறு முயன்றிருக்கிறேன். இப்படியாக. உரிமை என்பது மேலாதிக்கத்துக்கான கருவியாக செயல்பட்டு வந்திருப்பதை - அது ஏற்கனவே சொல்லப் பட்டு விட்டாதும் - வெளிச்சம் போட்டுக் காட்ட விரும்பினேன் அது மட்டுமின்றி, உரிமை என்பது எப்படியெல்லாம் பலவேறு சமுதாய நிறுவனங்கள், விதிமுறைகள் வழியாகச் செயல் பட்டு வருகிறது என்று விளக்கவும் முயன்றுள்ளேன்இப்படி உரிமை குறித்த சொல்லாடல் பரவியதன மூலம் இறையாண்மை - ரீதியான உறவுகளின்றி மேலாதிக்க உறவுகளே நிறுவப் படுகின்றன என்பதை திருபிக்கவும் முயன்றிருக்கிறேன்.

இங்கே மேலாதிக்கம் என்று கூறும் போது, தனிமனிதன் ஒருவன் இதர மனிதர்கள் மீது செயல்படுத்தும் மேலாதிக்கத்தை நான் குறிப்பிடுவதாக எண்ணி விடக் கூடாது. மேலாதிக்கம் என்பது நடுநாயகமாக அமர்ந்திருக்கும் அரசன் ஒருவனின் கையிலுள்ள அதிகாரம் அல்ல: மாறாக, குடிமக்கள் எனப்படுவோரின் பரஸ்பர உறவுகளினூடே செலுத்தப்படும் ஒரு விஷயம் தான் மேலாதிக்கம். மேலாதிக்கம் என்பது இறையாண்மையின் பிரம்மாண்டமான ஆதிக்கக் கட்டமைப்பள்ள: மாறாக, சமுதாய உடற்கூற்றுக்குள் விரயிக் காணப்படும் பல்வேறு வகையான அடக்கியாளும் முறைகள்தாம் மேலாதிக்கம் உரிமைகளின் தொகுப்பும் சரி, சட்டத்தின் களமும் சரி இம்மேலாதிக்க உறவுகளின் நிரந்தர ஏஜெண்டுகளாகத்தான் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றன : பல்வேறுவகையான அடக்கியாளும் முறைகளின் ஊடகங்ளாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உரிமை என்பது அது கோருகிற விஷயத்தின் நியாயப்பாட்டின் அடிப்படையில் புரிந்து கொள்ளப்படக் கூடாது மாறாக, அது தொடுக்க வைக்கிற மேலாதிக்க வழிமுறைகள் மூலமாகத்தான் உரிமையானது புரிந்து கொள்ளப்பட முடியும்.

இறையாண்மை கீழ்ப்படிதல் என்றில்லாமல் மேலாதிக்கம் மற்றும் அடக்கி ஆளுதலுக் கான வழிமுறைகளைக் கண்டறிவதையே என்னுடைய ஆய்வுகளின் பிரச்னைப்பாடாக எடுத்துக் கொண்டேன். எனவே வழிமுறை ரீதியான சில முன்னெச்சரிக்கைகளை நான் கைக்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றைப் பின்வருமாறு விவரிக்க முடியும்:

1.முறைப்படுத்தப்பட்ட, நியாயப்படுத்துகிற வடிவங்களில் இயங்குகிற அதிகார மையங்கள் பற்றியதாக எனது ஆய்வு இருக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டேன். மாறாக. தான் இயங்குகிற இடங்களின் விளிம்புகளில் (extremities) அதிகாரம் எப்படிச் செயல்படுகிறது என்பதையே ஆய்வுக்கான பொருளாக எடுத்துக் கொண்டேன் ; அதிகாரம் செயல்படும் புள்ளிகள், அதன் அறுதி இலக்குகள் பற்றிய பரப்பியல் ஆய்வாக அதைச் செய்தேன். எந்தெந்த இடங்களில் அதிகாரம் மெல்லியக் கண்ணாடிக் குழாயில் அடைக்கப் பட்ட திரவம் போலச் செயல்படுகிறதோ அந்த இடங்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டேன். அதாவது, அதிகாரம் செயல்படுகிற பிராத்திய ரீதியான வடிவங்கள், சிறிய நிறுவனங்கள் பற்றியே ஆய்வுகளைச் செய்தேன்.

உதாரணமாக, தண்டனை பற்றிய எனது ஆய்வுகளை எடுத்துக் கொள்வோம்: தண்டிக்கும் உரிமையானது அரசனின் உரிமையாகவோ, ஜனநாயக - அரசமைப்பின் உரிமை யாகவோ கருதப்படுவது ஏன், எப்படி என்ற ஆய்வை நான் செய்யமில்லை. அதை விட்டு விட்டு, தண்டனை வடிவங்களும் தண்டனை வழங்குகிற அதிகாரமும் குறிப்பிட்ட நில பிராத்திய ரீதியான நிறுவனங்களில் உறைந்து போனது எப்படி என்று ஆராயத் துவங்கினேன். இத்தகைய நிறுவனங்களில் நடத்தேறுகிற சித்திரவதைகள் மற்றும் கொடூரச் செயல்களை ஆராய்வடுமிருத்து என் வேலை துவங்கியது. இத்தகைய செயல்களை நியாயப்படுத்து வதாக இந்நிறுவனங்களின் பேச்சுக்களங்கள் செயல்படுவதை அறிந்து, அக்களங்களை ஆராய்வதாக என் வேலை தொடர்கிறது. இப்படியாக, சட்டத்தைத்தாண்டி இயங்கு வதாகவே விளிம்புகளில் செயல்படும் ஒன்றாகவே அதிகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. என்பதைப் புரிந்து கொண்டேன்.

2. அதிகாரம் செலுத்துகிற நபரின் பிரக்ஞாபூர்வமான நோக்கம் அல்லது தீர்மானம் பற்றி என் ஆய்வு அமையக்கூடாது என்பதிலும் கருத்தோடு இருந்தேன். "அதிகாரம் யாரிடம் உள்ளது? அப்படி அதிகாரத்தைக் கைக்கொள்பவளின் மனத்தில் இருப்பது என்ன? அவரு டைய உண்மையான நோக்கம்தான் என்ன?" என்பது போன்ற பதில் சொல்ல முடியாத, பதிலற்ற அற்ற கேள்விகளைத் தவிர்க்க வேண்டிய தேவையைப் புரிந்துகொண்டேன். அதிகாரத்தின் வினைவாக்க ரீதியான செயல்பாடுகளை ஆராய்வதன் மூலம்தான். அதிகாரத் தைக் கைக்கொள்பவர் யாராக இருந்தாலும் அவருடைய நோக்கம் எதுவாக இருந்தாலும் எதையுமே புரித்துகொள்ள இயலும் அதிகாரம் எத்தப் புள்ளியில், களத்தில் செயலாக்கம் பெறுகிறது : எங்கேயெல்லாம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதுதான் முக்கியம்.


"சிலர் மட்டும் ஏன் எப்போதுமே மேலாதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார்கள்? அவர்களுடைய அறுதி இலக்குகள் எப்படிப்பட்டவை ? அவர்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்? " என்றுமட்டுமே கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லை இனி ! நடப்பியல் சிதியாக அடக்கியாளுதல் என்பது எப்படி நடக்கிறது ? இடைவெளியின் வெளியின்றி. தொடர்ச்சியாக நமது உடல்கள் எவ்வாறு அடக்கி ஆளப்படுகின்றன ? தமது சைகைகள் எவ்வாறெல்லாம் ஆளப்படுகின்றன? பழக்கவழக்கங்கள் எப்படி வரையறுக்கப்படுகின்றன என்பதுபோன்ற கேள்விகளைக் கேட்கவேண்டியுள்ளது, இதையே வேறுவார்த்தைகளில் சொல்லப்போனால் அரசன் தனது ஏகாந்தத் தனிமையில் எப்படியெல்லாம் நமக்குக் காட்சியளிக்கிறான் என்ற கேள்வியைத் தயிர்த்துவிட்டு, குடிமக்களாகியவர்கள் பல்வேறுவகைப்பட்ட சக்திகள். வேட்கைகள், சித்தனாமுறைகள், பருப்பொருட்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டமைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியை முதன்மையான கேள்வியாக மாற்ற வேண்டி, யுள்ளது அதாவது அடக்கியாளப்படுதல் என்கிற நிகழ்வைப் பருண்மையான ஒன்றாகப் புரிந்துகொள்ளவேண்டிய தேவை உருவாகிவிட்டது.

Leviathan புத்தகத்தில் ஹாப்ஸ் * செய்த ஆய்வுக்கு நேர்மாறானது எனது ஆய்வுத் திசை என்று புரித்துகொண்டேன். ஹாப்ஸுக்கும் அவரைப் போன்ற சட்டத்துறை-வல்லுனர்களுக்கும் இருந்த பிரச்னை பின்வருமாறு ! தனிமனிதர்கள் பலரிடமிருந்து எப்படி குறிப்பிட்ட ஒருமையான அரசியம்-சக்தி உருவாகிறது ? இவ்வாறான உருவாக்கத்துக்கு இறையாண்மை தரும் ஊக்கம் எத்தகையது? போன்ற கேள்விகளையே ஹாப்ஸ் கேட்டுக் கொண்டிருந்தார். Leviathan எப்படிப்பட்ட ஒரு மனிதன் என்று பார்போம். Leviathan கட்டமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மனிதன் ; தனிமனிதர்கள் பலரின் கூட்டியக்கத்தால் விளைத்தவன்:பல்வேறு வகைப்பட்ட அலகுகளால் அரசு என்ற அமைப்பை உருவாக்குகிற திசையில் அவர்கள் செய்யவேண்டியிருப்பதாக ஹாப்ஸ் கூறுகிறார். அதே சமயத்தில், அரசு என்பதன் இதயத்தில்-அல்லது முளையில் - ஏதோ ஒன்று இருப்பதாகவும் அதுதான் இறையாண்மை -அதாவது Loviathan -இன் ஆத்மா-என்றும் ஹாப்ஸ் விளக்குகிறார். இந்த மைய ஆத்மாவைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட, அதிகாரத்தின் விளைவுக் களால் விளிம்புகளில் தன்னிலைகளாகக் (Subjects) கட்டமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கண கான உடங்களைப் பற்றியதாக நமது ஆராய்ச்சி இருக்க வேண்டும் என்று அடித்துச் சொல்லு வேன்.


3.அதிகாரம் என்பது. தனிமனிதன் ஒருவன் இதரமனிதர்கள்மீது செலுத்துகிற நியை நிறுத்தப்பட்ட உடைக்கப்பட முடியாத மேலாதிக்கம் அல்ல: ஒரு குழு இன்னொரு குழயின் மீது செலுத்துகிற விஷயம் மட்டும் அல்ல; ஒரு வர்க்கம் இதர வர்க்கங்கள் மீது செலுத்துகிற விஷயம் மட்டும் அல்ல அதிகாரம் என்பது, அதனை ஏகபோக உரிமையாகத் கைக்கொள்பவர்களுக்கும் அது இல்லாமல் அதற்கு அடிபணிய வேண்டிய நிலையில் நிறுத்தப் பட்டிருப்பவர்களுக்குமான வித்தியாசமாக மட்டும் இயங்குவதல்ல. உண்மையில் இப்படி அதிகாரம் ஒரு சங்கிலி போல செயல்படுவதில்லை; மாறாக ஒருவிதமான சுழற்சியின் மூலமே அதிகாரமானது தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது.

அதிகாரம் என்பது, இன்னும் சொல்லப்போனால், இங்கே அங்கே என்று ஓரிடத்தில் தங்கியிருந்துவிடும் சமாச்சாரமல்ல; அது யார் கையிலும் சிக்குவதுமில்லை பண்டம் சுளையும் செல்வத்தையும் போல அதிகாரத்தைக் குவித்து வைத்துக் கொள்ள முடியாது. மாறாக, ஒரு வலைப் பின்னலாகவே அதிகாரம் செயல்படுகிறது. அதன் வெவ்வேறு இழை சுளினூடே மனிதர்கள் சுழன்று கொண்டு விடுகிறார்கள் அதுமட்டுமின்றி அதிகாரத்துக்கு அடிபணித்தும் அதனைச் செயல்படுத்தியுமே வாழ்கிறார்கள். அதிகாரத்தின் சாதரான இலக்குகளாக, வெறும் சாமானிய ஐடங்களாக மட்டும் மனிதர்கள் இருப்பதில்லை அதிகாரத்தின் பேச்சுக்கான (articulation) சாத்தியப்படாகவும் அதே மனிதர்கள்தாம் எப்போதும் இருக்கிறார்கள். இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால்- அதிகாரம் செயல்படுகிற புள்ளிகளாக மட்டும் மனிதர்கள் இருப்பதில்லை அதிகாரத்தில் ஊடகள் களாக இருப்பவர்களும் அதே மனிதர்கள்தாம்.

மனிதன் என்பவனை அதிகாரத்தால் மேலிருந்து தாக்கிச் சிதறடிக்கப்படுபவனாக மட்டும் கருதிவிடக்கூடாது: தாக்கிச் சிதறடிக்கப்படுகிற மூல அணுவாக, ஜடப்பொருளாக மட்டும் அவனைக் கருதிவிடக்கூடாது. மாறாக, குறிப்பிட்ட சில உடல்கள், சைகைகள், சொல்லாடல்கள், ஆசைகள் மற்றும் வேட்கைகள் கொண்டவர்களை "தனிமனிதர்கள்" என்று வகைப்படுத்துவதே அதிகாரத்தின் பல முக்கிய விளைவுகளில் ஒன்று என அடித்துக் கூறிவிட முடியும் ஆக. "தனிமனிதன்" என்ற கருத்தாக்கத்தின் தோற்றமும் இயக்கமுமே அதிகாரத்தின் பல முக்கிய விளைவுகளில் ஒன்றுதான். அதே சமயத்தில், எந்த அளவுக்கு அதிகாரத்தின் பல விளைவுகளில் ஒன்றாக மனிதன் நிறுத்தப்பட்டுள்ளாளோ அதே அளவுக்கு அதிகாரத்தைப் பேசுகிற முக்கிய அலகாகவும் அவன் இருக்கிறான். இப்படித்தான் மனிதர்கள் அதிகாரத்தின் ஊடகங்களாக செயல்படுகிறார்கள்.


4. அதிகாரமானது தனது சுழற்சிக்கான பிரத்தியேகமான ஒரு வலைப்பின்னலை ஏற்படுத்திக்கொண்டு விடுகிறது என்பதைப் பார்த்தோம். இந்த நிலையும்கூட ஓர் எல்லைவரை மட்டுமே உண்மை என்பது எனக்குப் புரிந்துபோனது. அதாவது, "பாசிசமானது வெளியில் எங்கும் இல்லை: தமது மண்டைகளில்தான் உள்ளது" என்றோ, "நமது எல்லோர் உடல்களிலும் ஏதோ ஓர் அதிகாரம் உறைந்திருக்கிறது" என்றோ யாரும் கூறிவிட முடியும்.இருந்தாலும் இப்படி யாராவது கூறிவிடுவதால் மட்டுமே சமுதாயத்தில் இயங்குகிற அதிகார-அளவின் மட்டம் (level) குறைந்து போய்விட்டது என்றோ, இருக்கும் அதிகார மானது பருண்மையாக வினியோகிக்கப்பட்டுவிட்டது என்றோ ஆகிவிடுமா! ஆகாது.

அதிகாரத்தை மேலிருந்து இயங்குகிற ஒரு விஷயமாக எடுத்துக்கொண்டு உடல்களினூடான ஜனநாயகம் பரவலாக்கம் அல்லது கலகரீதியான அதிகாரப் பரவலாக்கல் பற்றி நாம் இங்கே பேச வரவில்லை. இப்படி மை மையத்தில் துவங்கி கீழ்நோக்கிப் பயணிக்கிற "அதிகாரம்" பற்றிய ஆய்வு முறை நமக்குத் தேவையில்லை. மேலிருந்து கீழ்நோக்கிப் பாய்வதான "அதிகாரம்" அடித்தளத்திலுள்ள துளித்துளி அலகுகளை என்னவெல்லாம் செய்கிறது என்பதாக நிலைமையை அலசுவது நமது கடமையுமல்ல.

மாறாக, அதிகாரம் பற்றிய எந்த ஒரு ஆய்வுமுறையுமே கீழிருந்து தொடங்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும். இத்தகைய ஆய்வுமுறைகள் அடித்தளத்தில் காணப்படுகிற. எண்ணிலடங்கா இயக்கங்க இயக்கங்களிலிருந்து (dynamics) துவங்கப்பட வேண்டும். இவ்வியக்கங்கள் ஒவ்வொன்றுக்குமான வரலாறு, இயங்குதிசை, நுட்பங்கள் மற்றும் உத்திகள் இருக்க முடியும் என்பது உணரப்பட வேண்டும். இவ்வியக்கங்கள் ஒவ்வொன்றும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. மாற்றப்பெறுகின்றன, தலைகீழாக்கப்படுகின்றன.

தள்ளிவிடப்படுகின்றன , அழிக்கப்படுகின்றன. விரிவாக்கப்படுகின்றன எப்படியெல்லாம் உ தழுவிய மேலாதிக்க அமைப்புக்களால் உள்வாங்கப்படுகின்றன என்பது ஆராயப்பட வேண்டும்.

இங்கே மிக முக்கியமாக ஒரு விஷயம் சுவ்னிக்கப்பட்டாக வேண்டும்.உலகு தழுவிய வேளாதிக்க அமைப்புக்கள எடுத்துக்கோண்டு "அவை எப்படி தாமாகவே அதிகாரத்தைச் செலுத்தி அடித்தன- அமைப்புக்களை வழிக்குக் கொண்டு வருகின்றன, தமது மேலாதிக் கத்தைத் தக்கவைத்துக் கொள்ன்ெறன்" என்ற ரீதியில் ஆராய்ச்சியைத் தொடங்கிவிடக் கூடாது, முதலில் அடித்தன- அளவில் அதிகாரத்துவ நிகழ்வுகள், அவற்றுக்கான உத்திகள் மற்றும் வழிமுறைகள் செயல்படும் விதமானது ஆராயப்பட வேண்டும். இவ்வுத்திகள் மற்றும் வழிமுறைகள் எப்படியெல்லாம் இடமாற்றம் செய்யப்படுகின்றன, விரிவாக்கம் பெறுகின்றன. மாற்றப்படுகின்றன என்பது ஆராயப்பட வேண்டும்: இறுதியில் தான் இவை எப்படி உலருதழுவிய மேலாதிக்க அமைப்புக்களால் உள்வாங்கப்படுகின்றன என்கிற ஆய்வு செய்யப்பட வேண்டும்அடித்தள-அமைப்புகளுக்கான உத்திகள். நுட்பங்களை பெரும் அரசியல் பொருளாதார சக்திகள் தமக்கானவையாக மாற்றியமைத்துக் கொள்கின்றன என்பது ஆராயப்பட வேண்டும்.


உதாரணமாக,பைத்தியக்காரத்தனத்தை (madness) எடுத்துக் கொள்வோம். அப்பொது தான் சொல்வவரும் விஷயம் புரியும் என்று நினைக்கிறேன். இங்கே மேலிருந்து கீழ் நோக்கியதாக ஆய்வு முறையைக் கைக்கொண்டால் விளைவுகள் பின்வருமாறு இருக்கும் "பதினாறாம், பதினேழாம் நூற்றாண்டுகளில் பூர்ஷ்வா வர்க்கம் மேலாதிக்கத்தை எய்தத் அவங்கியது" என்ற இடத்திலிருந்து ஆய்வு துவங்கி, படிப்படியாக வளர்ந்து,"இதனால் தான் பைத்தியக்காரர்கள் அடைத்து வைக்கப்பட வேண்டி வந்தது" என்று முடியும். மிகச் சுலபமாக இத்தகைய முடிவுகளை நாம் வந்தடைந்துவிட முடியும்! இதனால்தான் இத்தகைய ஆய்வு முறையைத் தவிர்ப்பது நல்லது என்று நான் வளியுறுத்தி வருகிறேன்! மேலும் இத்தகைய முடிவுகளை திரூபிப்பதும் ஒன்றும் சிரமமல்ல. பைத்தியக்காரர்களை எடுத்துக்கொண்டால், தொழில்- உற்பத்தி முறைக்குத் தேவையற்றவர்களாக அவர்கள் இருப்பது,வாழ்வது சட்டென்று தெரிந்துவிடுகிறது. *இப்படித் தேவையற்றவர்களாக இருப்பதால்தான் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டார்கள்" என்று முடிவுகட்டுவது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியமல்ல.

சிறுவர்களின் பாலியும் நிலையை முன் நிறுத்தியும் இத்தகைய ஆய்வு முறைகள் செய்யப்படுகின்றன. வில்ஹெம் ரெய்ச் உட்பட சில முக்கியமான சிந்தனையாளர்கள் பூர்ஷ்வா வர்க்கத்தால் பாவியல்நிலை - அதுவும் சிறுவர்களின் பாலியல்நிலை - ஓடுக்கப்பட்டு அந்துள்ளதை ஆய்வு செய்ய முயன்றிருக்கிறார்கள். இத்தகைய முடிவுகட்டுதலை விரித்துப் பார்த்தால் பின்வருமாறு கூறமுடியும்: பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளி விருந்து மனித உடலானது பிரதானமாக உழைப்புச் சக்தியாக, உற்பத்திக்கான சக்தியாக ஆகிவிட்டதால், உற்பத்தி தவிர்த்த இதர செலவினங்களுக்கு எங்காவது உடல் பயன்படுத்தப் பட்டாம் அவ்வாறான செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன, விலக்கி வைக்கப்பட்டன அல்லது ஒடுக்கப்பட்டன."

மேற்கண்ட முடிவைத் தவறு என்று யாரும் கூறிவிட முடியாது : அதே சமயத்தில் அது சரியானதும் அல்ல) இன்னும் சொல்லப்போனால், இந்த முடிவு எடுக்கப்பட்ட வழி முறை பிரச்னைக்குரியது என்று நிச்சயமாகக் கூறமுடியும்? இதுமட்டுமின்றி பூர்ஷ்வா வர்க்கத்தின் மேலாதிக்கம்" என்ற கருத்தாக்கத்தை முன் வைத்துக் கொண்டு "சிறுவர்களின் பாலியல் நிலை கட்டுப்படுத்தப்படுகிற வழிமுறைகள் ஏற்கனவே வருத்துக்கொள்ளப் பட்டிருக்க முடியாது" என்றுகூட திருபித்துவிட முடியும். அல்லது, இதை வழிமுறையைக் கைக்கொண்டு சிறுவர்களுக்கு பாலுறவு பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுத்தால் அது பிரச்னையைத் தீர்த்துவிடும்" என்பது போன்ற முடிவுகளுக்கும் வரமுடியும்! * பாலுறவுப் பாடங்கள் பாலுறவு நெருக்கத்தை ஊக்குவிக்கக் கூடும்அதன்மூலம் ஜனப் பெருக்கம் ஏற்பட்டு, தொழிலாளர்களுக்குக் குறைவேற்படாத நிலை இருக்கும்" என்று ஒருவர் தமக்கான முடிவுகளை எடுத்துக்கொண்டு போனாய் அவரை யார்தான் தடுக்க முடியும்!

"பூர்ஷ்வா வர்க்கத்தின் மேலாதிக்கம்" என்ற இடத்திலிருந்து தமது ஆய்வை சௌகர்யமாக ஆரம்பித்துக் கொண்டாய் எதை வேண்டுமானாலும் திருபித்துக் கொள்ள லாம். அதனால்தான் ஆய்வு முறையையே வேறொரு இடத்திலிருந்து துவங்குவோம் என்று நான் வலியுறுத்தி வருகிறேன் : அடித்தள - அமைப்புகளிலிருந்து ஆரம்பித்து, வரலாற்று ரீதியாக ஆராய்ச்சியை மேற்கொண்டு, அதிகாரத்தின் இயக்கங்கள் எத்தகையதாக இருக்கின்றன என்று நாம் செல்ல வேண்டும். உதாரணமாக, பைத்தியக்காரர்களை அடக் வைக்கும் போக்கை எடுத்துக் கொள்வோம் பைத்தியக்காரர்களாக அழைக்கப்படுபலர் களின் குடும்பங்களில், சுற்றுச் சூழலில், அவர்கள் புழுங்குகிற உடனடி சமுதாயல் களங்களில் ஒடுக்குமுறைகளும் விளக்கப்படல்களும் எப்படியெல்லாம் நடக்கின்றன என்பதை முதலில் நாம் ஆராய வேண்டும். சிறுவர்களின் பாலியல் நிலை பற்றிய ஆய்வு முறையும் இப்படித் தான் இருக்க வேண்டும் இருக்க முடியும். ஓடுக்கு முறைகளுக்கும் விலக்கப்பட்டல்களுக்குமா கருவிகளும் தர்க்க நியாயங்களும் இப்படித்தான் அசைப்பட வேண்டும். இவற்றைச் செயல் படுத்துபவர்களாக இருப்பவர்கள் யார் யார் என்பதைப் பருணமையாக நாம் கண்டறிய வேண்டும். இவர்கள் பெற்றோர்களாகளோ சக மாணவர்களாகவோ மருத்துவர்களாகவோ ஆசிரியர்களாகவோ இருக்கக்கூடும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எனவே "பொதுவான பூர்ஷ்வா வர்க்கம்" என்கிற வகைப்படுத்தலுக்குள் (formula) இவர்களை வைத்துக்கொண்டு ஆய்வைத் துவங்கிக் கொள்ள முடியாது.

இந்த ஒடுக்குமுறைகளும் விலக்கப்படல்களும் உலகு தழுவிய மேலாதிக்கத்தால் உள் வாங்கப்படும் குறிப்பிட்ட ஒரு தருணத்தில், காலகட்டத்தில், அவை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பயன்தரக் கூடியதாக ஆகிவிடுகின்றன. எனவே இந்த நிகழ்வு நடப்பது எப்படி என்பதை நாம் கண்டறிய வேண்டும் இதைக் கண்டறியும்போது நமக்கு ஓர் உண்மை புலப்படும். பைத்தியக்காரர்களை அடைத்து வைப்பதையோ சிறுவர்கள் சுய இனபம் பெறுவதையோ விலக்கி வைப்பதை தனது நலலாக பூர்ஷ்வா வர்க்முதலில் அடையாளங் கண்டுகொள்ளவில்லை அதற்கான தேவையும் பூர்வைா வாக்கத்துக்கு முதலில் ஏற்படவு மில்லை. (பூர்ஷ்வா வர்க்கமானது, பைத்தியக்காரர்கள் சுதந்திரமாகத் திரிவதையும் சிறுவர் சன் சுயஇன்பம் அடைவதையும் ஒருவேளை பொறுத்துப் போயிருக்கவும் கூடும் ) மாறாக, இவ்வகையான விலக்கப்படலுக்குத் தோதாக இருந்த நுட்பங்களும் உத்திகளும் பின்பு பூர்ஷ்வா வர்க்கத்துக்குத் தேவைப்பட்டன் என்பதுதான் உண்மை. பைத்தியக்காரர்களை யும் சிறுவர்களையும் செய்ததைப் போன்ற கண்காணிப்பு-இயந்திரங்கள் பூர்ஷ்வா வர்க்கத் துக்குத் தேவைப்பட்டன ; அத்தேவையைத் தனதாக பூர்ஷ்வா வர்க்கம் உணர்த்து கொண்டது. பாலியல் நிலையானது மருத்துவ- அறிவுக்கு உட்படுத்தப்பட்டதும் பைத்தியக் காரத்தனமும் குற்றமியல் தன்மையும் உளவியல் - ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதும் தனது நலன்களுக்கு உசந்த செயல்பாடுகளாக பூர்ஷ்வா வர்க்கம் புரிந்துகொண்டு விட்டது என்பாம். ஆக, பைத்தியக்காரர்களை அடைத்து வைப்பதும் சிறுவர்களது பாலியல் நிலையை ஒடுக்குவதும் பூர்ஷ்வாக்களின் முன்கூட்டிய திட்டமிடுதலால் திட்டமிடுதலால் நடத்துவிடவில்லை மாறாக விலக்கப் படல். ஓடுக்கப்படல் ஆகியவற்றின் உத்திகள், நுட்பங்களைத் தனது நலன்களுக்கு உகந்தவை பால் மாஷ்வா வர்க்கம் புரிந்துகொதிகள்த நுட்பங்கள புரிந்துகொண்டதன் மூலம், அதன் பொதுவான மேலாதிக்கம் நிலைநிறுத்தப்பட்டது என்று கூறலாம். அவ்வாறு பூர்ஷ்வா வர்க்கத்தின் மேலாதிக்கம் நிலைநிறுத்தப்படும்போது, பொருளாதார ரீதியாகவும் இவ்வுத்திகள், துட்பங்கள் லாபத்தை வரவழைப்பனவாக இருப்பது பூர்ஷ்வா வர்க்கத்துக்குத் தெரிய வருகிறது இதன் விளைவாக, உலகு தழுவிய அமைப்புக்கள் கட்டியெழுப்பப் படுகின்றன: அரசு-இயந்திரங்கனால் அவை பராமரிக்கவும் படுகின்றன இன்றுவரை.

ஆக, அதிகாரத்தின் நுண்- உத்திகளையும் குறிப்பிட்ட ஒரு சமுதாயப் பின்புலத்தில் அவ்வுத்திகளால் ஏற்படுகிற பொருளாதார- பொருளாதார-அரசியல் பயன்பாடுகளையும் புரிந்துகொண் டால் மட்டுமே அதிகாரத்தில் செயல்பாடுகள் சமுதாயத்தால் உள்வாங்கப்படுகிற வழி முறைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்பேன்.

இதையே வேறு வார்த்தைகளில் கூற முயற்சிப்போம் : பைத்தியக்காரர்களால் பூர்ஷ்வா வர்க்கத்துக்கு எந்தவிதப் பயனும் இல்லை. ஆனால் பைத்தியக்காரர்களை அடைந்து வைக்கப்படுகிற, விலக்கி வைக்க வைக்கப்படுகிற வழிமுறைகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டி லிருந்து அவ்வழிமுறைகளில் ஏற்பட்டுள்ள தெசிய மாற்றங்களும் அரசியல் பயன்பாடு ஒன்றை சில சமயங்களில் ஒரு பொருளாதாரப் பயன்பாட்டை காட்டுவதாக உள்ளன. இப்பயன்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் மொத்த அமைப்பின் பலம் அதிகமாகிறது என்பதும் தெரிகிறது.

ஆக. பூர்ஷ்வா வர்க்கம் எப்போதுமே பைத்தியக்காரத்தனத்தைப் பற்றி உண்மை யான கவலை கொண்டிருக்கவில்லை : அதற்கு அதிகாரம் பற்றித்தான் கவலை, அடுத்ததாக, பூர்ஷ்வா வர்க்கத்துக்கு சிறுவர்களின் பாலியல் நிலை பற்றி எந்தவிதக் கவலையும் இருந்தது. கிடையாது; அப்பாலியல் நிலையைக் கட்டுப்படுத்திய வழிமுறைகள் பற்றித்தான் சுவலை, பூர்ஷ்வா வர்க்கத்துக்குக் குற்றம் புரிறெவர்கள் மீதான எத்தலிதக் கவலையும் இருக்கவில்லை? இன்னும் சொல்லப்போனால், குற்றம் புரிபவர்களை தண்டித்துவிடுவதா, சீர்திருத்துவதா என்பது கூட பூர்ஷ்வா வர்க்கத்தின் பிரச்னையாக ஆகவில்லை மாறாக, குற்றம் என்பது எப்படியெல்லாம் சுட்டுப்படுத்த முடியும், தண்டனையானதை எப்படியெல்லாம் வழங்கப்பட முடியும், சீர்திருத்த நடவடிக்கைகள் எப்படியெல்லாம் மேற்கொள்ளப்பட முடியும் என்றுதான் பூர்ஷ்வா வர்க்கம் யோசித்து வந்தது; இந்த வழிமுறைகள் பற்றித்தான் அது கவலைப்பட்டது.

5. இறுதியாக,அதிகாரத்தின் பிரதானமான இயங்கு முறைகள் அத்தனையுடனும் சுருத்துருவ உருவாக்க உற்பத்தி என்பதும் நடந்திருக்க வேண்டும். உதாரணமாக, கல்வி பற்றிய கருத்துருவத்தை முன் வைத்து, கருத்துருவ உருவாக்க உற்பத்தி பற்றி நம்மால் போ முடிகிறது அதேபோல. தாடாளுமனற - இயக்கம் குறித்த கருத்துருவம் எப்படி உருவாகிறது என்று நம்மால் பேச முடிகிறது. இப்படிப் பல துறைகளிலும் கருத்துருவ உருவாக்கம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது என்று இன்று நம்மால் பேச முடிகிறது.

அதே சமயத்தில் எல்லாவற்றையுமே கருத்துருவ உருவாக்கம் என்று நம்மால் சொல்லி விட முடிகிறதா? உதாரணமாக, அறிவு சேகரிப்பு-இயந்திரங்கள் எக்கச்சக்கமாக இன்று உருவாகிக்க கொண்டிருக்கின்றன. கண்காணிப்பு -இயந்திரங்கள், பதிவு செய்வதற்கான புதிய வழிமுறைகள், ஆராய்ச்சிக்கால புதிய கருவிகள் போன்றவை நான்தோறும் உற்பத்தி யாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் நாம் எப்படித்தான் புரிந்து கொள்வது?

மேற்கண்ட ஐந்து வழிமுறைகளையும் கொண்டுதான் அதிகாரம் தொடர்பான அலசலை மேற்கொள்ள முடியும். அரசு இயந்திரங்கள் பற்றியதாகவும் அவை தொடர்பான கருத்துருவங்கள் பற்றியதாகவும் மட்டும் இருந்தால் போதாது. அதிகாரம் பற்றிய அலசல் ஆனது மேலாதிக்கம் குறித்ததாகவும் அதிகாரத்தை பருமையாக செயல்படுத்துபவர்கள் பற்றியதாகவும் இருக்க வேண்டும் அடக்கியாளும் வடிவங்கள் பற்றியதாகவும் அவ்வடிவங்களில் நூல் இயக்கங்கள் பற்றியதாகவும் இருக்க வேண்டும் ஆக Leviathan போன்றதான அதிகாரத்துவ அலசலை விட்டொழித்து விட்டு மேலாதிக்க உத்திகளின் நுட்பங்களின் அலசலைத் துவக்க வேண்டும். 

உளவியம் துறை,பாலியல்துறை மற்றும் அரசியம் அமைப்புகளை ஆராய்வதில் மேற்கண்ட வழிமுறைகளையே நான் பயன்படுத்தி வந்துள்ளேன். இவ்வாதான் ஆய்வுகளின் மூலம் ஏகப்பட்ட வரலாற்று ரீதியான உண்மைகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன என்று நான் கூறுவேன் இவ்வுண்மைகளில் மிக முக்கியமானது, இறையாண்மை குறித்த அரசியல் மற்றும் நீதிபரிபாலனம் குறித்த கோட்பாடாகும்.

இக்கோட்பாட்டைப் பின்வருமாறு விவரிக்கலாம் :

1.நிலப்பிரபுத்துவ ரீதியில் அமைந்திருந்த முடியாட்சியை விவரிக்க இக்கோட்பாடு முன் வைக்கப்பட்டது: படுகிறது.

2. முடியாட்சி அமைப்புகளின் அதிகாரவர்க்கங்களைக் கட்டியமைக்கிற கருவி யாகவும் நியாயப்பாடாகவும் இக்கோட்பாடானது பயன்பட்டிருக்கிறது.

3. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளிலும் நிலப்பிரபுத்துவ எச்சங்களிலும் முடியாட்டுகளிலும் இக்கோட்பாடானது செயல்பட்டிருப்பதைக் காணமுடிகிறது : கத்தோலிக்க முடியாட்சிக்காரர்களும் சரி, புராட்டஸ்டன்ட் மதவாதிகளாயிருந்து முடியாட்சியை எதிர்ப்பவர்களும் ச இதே கோட்பாட்டைக் கையாண்டுள்ளனர் : பிரபுக் களும் சரி. நாடாளுமன்ற வாதிகளும் ச இதே கோட்பாட்டின் அடிப்படையில் செயம் பட்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனாம். அதிகார அமைப்புகளைச் சுற்றி திகழ்த்த அரசியல் போராட்டங்களில் அப்போறுக்கருவியாகச் செயல்பட்டது இக்கோட்பாடே எனலாம்.

4. 18-ஆம் நூற்றாண்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்கிற அமைப்பு ழான் மாசி ஞ்ன் ே(Jean-Jacques Rousseau) முதலான அரசியல் சிநதனையாளர்களால் நிறுவப்பட்ட போதும் இதே கோட்பாடு மறு உருவாக்கம் பெறுவதைக் காண முடிகிறது. முடியாட்சியில் எதேச்சதிகாரத்துக்கு ஒரு மாற்றாக, பிரெஞ்சுப் புரட்சியின் மூலமாக. நாடாளுமன்ற ஜனநாயகம் நிறுவப்படுவது இப்படித்தான்.

மேற்கண்ட நான்கு முறைகளினூடாகவும் ஒரே கோட்பாடானது செயல்பட்டு வந்துள்ளது.என்பதுதான் இங்கே முக்கியமாகும் இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது: திலப்பிரபுத்துவ சமுதாயம் இருந்த வரையின் அதிகாரத்தின் இயக்கமானது குறிப்பிட்ட ஒரு விதத்தில் மட்டுமே ஆராயப்பட்டது: சமுதாயத்தின் உயர்மட்டங்களில் செலுத்தப்பெற்ற அதிகாரமானது, அதன் கீழ்மட்டத்தில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது என்ற அளவில் மட்டுமே ஆய்வு செயல்பட்டது. ஆக மொத்தச் சமுதாய உடற்கூற்றையும் முன் வைத்து ஆய்வானது செய்யப்பட முடிந்தது, அன்று. அரசனுக்கும் ஆளப்படுகிற குடிமகனுக்குமான (Sovereign. Subject) உவாகவே ஆராயப்பட்ட அரசியல் அன்று இருந்தது, ஆனால் 18-ஆம் நூற்றாண்டுக்கு பின்பாக அதிகாரத்தில் புதிய இயக்கமாக (now machanism) ஒன்று வருகிறது : குறிப்பிட்ட சில வழிமுறைகளின் உத்திகளின் நுட்பங்களின் ஊடாகச் செயல்படுவதாக அதிகாரம் ஆகிவிட்டது. புதிய கருவிகள், இயந்திரன்களின் அடிப்படையில் இயங்குவதாக அதிகாரம் ஆகிவிடுகிறது இப்புதிய வழிமுறைகள், கருவிகளுக்கும் இறையாண்மை ரீதியான உறவுகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை தான் புரித்துகொண்டேன்

அதிகாரத்தின் இப்புதுவகை இயக்கமானது. உடல்களையும் உடல்கள் உலகுக்கு உழைத்துத் தருகிற விளை பொருட்களையும் பொறுத்து அமைகிறது. உடல்களிலிருந்து உறிஞ்சிப் பெறப்படுபவை நேரமும், உழைப்பும் ஆகும். (முன்பு இவ்வாறு உடல்களிலிருந்து உறிஞ்சிப் பெறப்பட்டவை, செல்வமும், பண்டங்களும் எனலாம்). இவ்வாறு நேரமும் உழைபபும் உறிஞ்சப்படுவதற்காக உடல்களின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பு (surveillance) தேவையாகிறது, 

(முன்பு கண்காணிப்பு என்பது தொடர்ச்சியற்றதாக இருந்ததையும் வரி விதிப்பு மற்றும் கடமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதுமாக இருந்ததையும் நினைவு கூற வேண்டும்). ஆக, இப்புதியவகை அதிகாரத்துக்கு அரண் என்பதாகிய பௌதிக உருவம் எதுவும் தேவையில்லை; மாறாக, வலைப்பின்னலான கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் இவ்வதிகாரம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வகையில் பார்த்தால், அதிகாரத்துக்கான புதிய தொரு பொருளாதாரம் (economy) உருவாக்கப்படுகிறது என்னாம் ஆக. ஆளப்படுகிற சக்திகள் விரிவுபடுத்தப்படுகிற அதே நேரத்தில் அச்சக்திகளின் மீதான அதிகாரமும் அதன் செயல் திறனும் பெருக்கப்படுகிறது எனலாம்.

இறையாண்மையில் அடிப்படையில் அமைத்திருந்த அதிகாரத்துக்கும் இப்புதுவகை அதிகாரத்துக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருப்பதைக் காணமுடிகிறது. பின்வருமாறு. அவை

1. இவை இரண்டும் தேர் எதிரானவை. இறையாண்மைக்கோட்பாடானது இவ்வுலகின் மீதான, உலகின் விளைபொருட்கள்மீதான உரிமையைப் பற்றிப் பேசியது: புதுவகை அதிகாரக் கோட்பாடோ மனித உடல்கள் பற்றியும் அவற்றின் இயக்கங்கள் பற்றியும் பேசிவருகிறது.

2. இறையாண்மைக் கோட்பானது, செல்வத்தையும் பண்டங்களையும் அதிகாரம் எப்படி கையகப்படுத்துகிறது என்பதைப் பற்றிப் பேசியது மாறாக, புதுவகை அதிகாரமோ உடங்களிலிருந்து நேரமும் உழைப்பும் எவ்வாறு உறிஞ்சப் படுகின்றன என்று பேசுகிறது.

3. இறையாண்மைக் கோட்பாடானது. தொடாச்சியான கண்காணிப்பைச் செயல்படுத்துவதில்லை; மாறாக, தொடர்ச்சியற்ற வகையில், குடிமக்களுக்கு இருக்க வேண்டிய கடமைகள் பற்றிய சட்ட - அமைப்பை வடிவமைந்தது.

இறையாண்மைக் கோட்பாட்டுக்கு அரச என்பது போன்ற பௌதிகரீதியான உருவம் ஒன்று தேவைப்படுகிறது: "அதிகாரம், அரசன் போன்றதொரு உருவத்தில் வழியாக, முழுமையாகச் செலவழிக்கப்பட முடியும்" என்ற நம்பிக்கையின் அடிப்படைபில் இக்கோட்பாடு செயல்பட்டது. மாறாக, புதுவகை அதிகாரக் கோட்பாடோ, குறைந்த முதலீட்டைச் செய்து அதிக வருவாயை ஈட்டுகிற அடிப்படையில் செயல்படுகிறது.

பூர்ஷ்வா சமுதாயத்தின் மிக முக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இப்புதுவகை அதிகாரப் கோட்பாட்டைச் கூற முடியும்! தொழிற்புரட்சியை ட்சியை ஒட்டிய முதலாளித்துவம் வளர்ச்சிபெற்று அதனடிப்படையிலான ஒரு சமுதாயம் கட்டமைக்கப்பட்டதை ஒட்டியே இக்கோட்பாடு வருகிறது : அதற்கான பிரத்தியேகக் கருவியாகச் செயல்படுகிறது. இறையாண்மையை மீறிய, தாண்டிய அளவில் செயல்படுகிற இந்த அதிகாரம், ஒழுங்கமைப்பு (discipline) பற்றியதாகும். ஒழுங்கமைப்பு குறித்த இப்புதிய அதிகாரக் கோட்பாடு உருவானபின்பு, இறையாண்மை ரீதியிலான கோட்பாடானது அழித்துபட்டிருக் வேண்டும்! ஆனால், இறையாண்மை ரீதியிலான கோட்பாடு இன்றும் தொடர்கிறது: சட்டங்களும் விதிகளும் அதன் அடிப்படையிலேயே இயற்றப்படுகின்றன. இது ஏன் என்று யோசிக்கும்போது இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன.

1. முடியாட்சியையும் விமர்சிக்கிற கருவியாகவும் அதேநேரத்தில் அப்போது வளர்ச்சியடைந்து கொண்டிருந்த ஒழுங்கமைவுச் சமுதாயத்தை இதை எதிர்க்கும் அத்தனை விஷயங்களை விமர்சிக்கும் கோட்பாடாகவும் இறையாண்மைக் கோட்பாடானது 18-ஆம் 19-ஆம் நூற்றாண்டுகளில் இயங்கியது.

2. ஒழுங்கமைப்புகளுக்கான உத்திகளின் மீதே, அவற்றை மறைக்கும்வகையில், இறையாண்மைக் கோட்பாடானது Superimpose செய்யப்பட்டுள்ளது. இறையாண்மை என்பது இப்படியாகப் பொதுக்களத்தில் நிலைபெறுகிறது. இதன்மூலம் "மக்கள்", "வெகுஜனங்கள்", "சமுதாயம்" என்பனவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சிலர் பேச வருகிறார்கள்; ஒவ்வொருவரும் இந்நாட்டு மன்னர் : குடிமக்களே ஆளுகிறார்கள்* என்பதான வாக்கியங்கள் அர்த்த அளவில் நிலைநிறுத்தப்பெறுகின்றன: நாடாளுமன்ற-ஜனநாயகம் என்பதற்கான அரசியல் - சட்ட அமைப்பு, தொகுப்பு, வடிவமைப்பு ஏற்படுத்தப் படுகிறது: மனித உரிமைகள் வருகின்றன...ஆனால் இறையாண்மை இவ்வாறு ஜனநாயக் படுத்தப்படுவதன் அடியில் ஒழுங்கமைப்புக்களுக்கான மேலாதிக்கம் கட்டமைக்கப்படுவதும் தடந்து கொண்டு தானிருக்கிறது ; இன்னும் சொல்லப்போனால் இறையாண்மையின் ஜனநாயக மயப்படுத்தலே ஒழுங்கமைப்புக்களின் மேலாதிக்கத்துக்கான இயக்கத்தின் மூலம் தான் சாத்தியமாகிறது..ஒழுங்கமைப்புகள் தம்மை மறைத்துக்கொண்டு இயங்குவதற்கு ஏதுவாக, இறையாண்மைக் கோட்பாடானது தன்னை நீதி பரிபாலன - இயந்திரமாகவும் அவ்வியந்திரத்துக்கான திருத்தி வரையப்பட்ட விதிமுறைகளாகவும் வெளிப்படுத்திக் கொள்கிறது

ஆக 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து உருவாகியுள்ள நவீன சமுதாயம் பின்வருமாறு கட்டமைக்கப்பட்டு வந்துள்ளது. ஒரு புறம், சட்டங்களும் சட்டங்களுக்கான பேச்சும் அப்பேச்சு இடம்பெறும் வகையிலான பொதுக்களமும் அக்களத்தில் இயங்கவல்ல "குடிமக்களாக" மனிதர்களும் உருவாகியுள்ளனர் ; இன்னொரு புறம் இச்சமுதாயம் தீர்மானகரமான ஒத்திசைவுடன் இயங்குவதற்கான கடுமையான ஒழுங்கமைப்பு-வலைப் பின்னல்கள் உருவாகின்றன. நவீன சமுதாயத்தில் அதிகாரம் நிலைநிறுத்தப்படுவது இந்த இரண்டு போக்குகளின் மூலம்தான். இவ்விரு போக்குகளும் அதிகாரம் செயல்படமுடிகிற எல்லைகளை வகுப்பனவாக இருக்கின்றன என்றும் கூறமுடியும். ஆனால் இவ்விரு எல்லை களும் ஒன்றே அல்ல என்பதையும் இங்கே விளக்கித்தான் ஆக வேண்டும் இவ்விரு எல்லை கனில் ஒன்றை இன்னொன்றாகக் குறிக்கிக்கொண்டுவிட முடியாது என்பதையும் இங்கே நான் கூறியாக வேண்டும்.

அதிகாரத்தின் நுண்- இயக்கங்களுக்கான பிரத்தியேக சொல்லாடல்கள், நிச்சயமாக, உள்ளன. இச்சொல்லாடல்கள் மூலம் அறிவு - உற்பத்தி இயந்திரங்களின் இயக்கம் சாத்திய மாகிறது; அதேபோய், பன்முகப் புரிதல் களங்களும் சாத்தியமாகின்றன. அறிவு-உற்பத்தி இயத்திரங்களில் இச்சொல்லாடல்கள் மிகக் கடுமையாகப் பங்கேற்க விழைகின்றன என்பேன்.

ஒழுங்கமைப்புகள் சொல்லாடல்களைத் தாங்கியே வருகின்றன என்றாலும் அச் சொல்லாடல்கள் உசீமை குறித்த சொல்லாடல்களாக இருக்க முடியாது. ஏனென்றால். எந்த ஒரு குறிப்பிட்ட ஒழுங்கமைப்பின் சொல்லாடலும் சட்டம், விதி, இறையாண்ம் இவத்தின் அடிப்படையில் இயங்குவழில்லை ! குறிப்பிட்ட ஒரு சாலாடல் ஏதோ ஒரு விதியை வரையறுப்பதாக இருக்கலாம் : ஆனால் அவ்வியானது உரிமை குறித்ததல்ல; தியமம் (norm), அவ்வளவுதான். இந்தே எந்த ஒரு நிகழ்வும் இந்த விடுக்குக் நிழப்படிந்தோ,மீழியோ நடப்பதல்ல மாறாக எத்த ஒரு நிகழ்வும் நியமவாத அடிப்படையில் (normalization) இங்கே நடக்கிறது என்பேன்,

ஆக. மனித வாழ்க்கையின் போக்குகளை, வழக்கங்களை சமூகவியலோ, உளவியலோ, வரலாற்றியலோ கண்டறிந்துவிட்டதாகக் கொள்ள முடியாது: அறிவுத்திறன் (reason) மனிதர்களிடையே கொஞ்சங் கொஞ்சமாக வளர்த்து, இத்துறைகளின் வளர்ச்சி மூலம், மனிதன் தன்னைப் பற்றிக் காண விரும்பிய அறுதி உண்மையைக்" கண்டுவிட்டதாகக் கொள்ள முடியாது.. மாறாக, இத்துறைகளின் வளர்ச்சியின் மூலமாக நியமவாத அடிப்படை யிலான ஒரு சமுதாயம் உருவாக்கப்படுகிறது உலகு தழுவிய (global) அளவில் இத்தகைய சமுதாயம் உருவாக்கப்படுகிறது என்பேன். இன்னும் சொல்லப்போனால், நீதிபரிபாலன அமைப்புகளுக்கும் ஒழுங்கமைப்பு ரீதியாக முன் வைக்கப்படும் நியமங்களும் இடையில் கடுமை யான முரண்பாடுகள் உருவாகின்றன ; இம்முரண்பாடுகள் உலகு தழுவிய அளவில் வளர்ச்சி பெற்றுக் கொண்டு விடுகின்றன என்பேன். எனவேதான், இவ்விரண்டுக்கும் இடையிலான விவாதம் பரிமாற்றம் தேவைப்படுகிறது என்று கூற முடிகிறது. மனிதப் பழக்க வழக்கங்கள், பேச்சுகள்,சொல்லாடல்கள், வேட்கைகள் குறித்ததான இன்றைய அலசல்களில் இப் பசிமாற்றத்தை, விவாதத்தைக் காண முடிகிறது. அதே சமயத்தில், இந்த அலசல்களை ஒழுங்கமைப்புக்களின் மேலாதிக்கமானது தனதாக ஆக்கிக்கொள்ளும் வழி போக்குக்கு எதிராக விஞ்ஞான - அறிவுடன் பின்னிப் பிணைந்துவிட்ட அதிகாரத்துக்கு எதிராக, இன்று நமக்குத் துணையாக இருப்பதற்கு எதுவுமில்லை இறையாண்மை குறித்த பழைய கோட்பாட்டை ஒரு துணையாக, நமக்கான ஒரு கருவியாகக் கொள்ள முடியுமா என்றால் முடியாது: ஒழுங் கமைப்புக்களையும் அவற்றுடன் தொடர்பு கொண்ட அறிவு மற்றும் அதிகாரத்தை ஏதோ ஒரு வகையில் எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் சிக்கியுள்ளவர்களுக்கான வழிதான் என்ன ? உரிமைகள்" என்பதைத் தமதாகப் பேசி பூர்ஷ்வாத்தனமான, ஏன் அதற்கும் முற்பட்ட இறையாணமை குறித்த கோட்பாட்டை இவர்கள் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டுமா?

இங்கேதான் நாம் நன்றாகச் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தெரிகிறது. ஒழுங்கமைப்புக்களின் அதிகாரத்துக்கு எதிராக "உரிமைகளை” முன்வைத்து நாம் இயங்கிக் கொள்ள முடியாது என்பது இப்போது புரித்திருக்கும். ஏனென்றால், நமது நவீன சமுதாயத்தில் அதிகாரம் செயல்படுவதற்கு ஒழுங்கமைப்பு இயக்கங்களும் தேவை ; "உரிமைகள்" குறித்த கருத்தாக்கங்களும் தேவை ! ஆக, ஒழுங்கமைப்புக்களைத் தாண்டிய தோர் அதிகாரத்தை நோக்கிச் சொல்ல வேண்டுமானால் ஒழுங்கமைப்புக்களை எதிர்த்துவிட வேண்டுமானால்- பண்டைய இறையாண்மை குறித்த கோட்பாட்டை நோக்கிப் போய்க் கொள்ள முடியாது. ஆக. ஒழுங்கமைப்புக்களுக்கு எதிரானதொடு, புதியதொரு "உரிமை" பற்றி இங்கே பேச வேண்டியுள்ளது: இதற்கு "பெறும் ஒடுக்குமுறை" (repression) என்கிற கருத்தாக்கத்திலிருந்து நாம் விடுபட்டாக வேண்டியுள்ளது இதற்கான காரணம் பின் வருமாறு, 

ஓடுக்கு முறை என்று சொல்லிவிட்டாலே இறையாண்மை குறித்த பண்டைய கருத்தாக்கத்துக்குப் போயாக வேண்டியுள்ளது. அதே சமயத்தில் ஓடுக்கு முறை என்பது, ஒழுங்கமைப்புக்களுக்கேற்ற கோட்பாட்டுப் பின்புலத்தை சமூகவியல், உளவியல் மற்றும் வரலாற்றியல் போன்ற துறைகளிலிருந்து கடன் வாங்கவும் செய்கிறது ! ஆக ஒடுக்குமுறை என்றாகப்பட்ட கருத்தாக்கத்தை எவ்வளவு விமர்சனரீதியாக பயன்படுத்தினாலும் அது சிக்கல் மிகுந்த ஒன்றாகவே மிஞ்சும் என்றுதான் கருதவேண்டும்.

குறிப்புகள் :

1. Discipline and Punish (1973) என்ற நவீன சிறைச்சாலை- அமைப்பின் தோற்றம் குறித்த ஆய்வுநூல் : Birth of the Clinic என்ற நவீன மருந்துவக்கட்டமைப்பின் தோற்றம் குறித்த ஆய்வுநூல் மற்றும் The History of Sexuality : Volume-1 (19:6) என்ற பாலியல் நிலை பற்றிய வரலாற்று ரீதியான ஆய்வுநூல்,

இவற்றுடன் Madness and Civilization (1962) என்ற பைத்தியக்காரத்தனம் குறித்த வரலாற்று ரீதியான ஆய்வுநூலையும் ஃபூக்கோவின் நுண் - அரசியல் ஆய்வுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

2. அரசனுக்கும் அரசு - இயந்திரத்துக்கும் இலக்கணம் வகுக்கும் பிரதிகள் அத்தனையும் இதில் அடங்கும்.

3. மேற்கத்திய சமுதாயம் மட்டுமின்றி அரசன் என்கிற உருவம் தோன்றிய சமுதாயங்கள் அத்தனைக்குமே ஃபூக்கோ கூறுவது பொருத்தும் என்று எடுத்துக்கொள்ளலாம்.

4. Hobbes என்கிற பிரிட்டிஷ் சிந்தனையாளர் 17-ஆம் நூற்றாண்டில் எழுதிய அரசியல் ஆய்வுநூல்.

5. Wilhelm Reich மார்ச்சிய நோக்கில் உளவியல் - அலசலை மேற்கொண்டவர். இவரது Mass Psycholosy of fascism நூலின் ஒரு பகுதி ஏற்கவே நிறப்பிரிகை -2 இதழில் வெளியாகியுள்ளது. (ஜூன் 1991).

6. இங்கே ஃபூக்கோ, அல்தூஸர் கொண்டுவந்த Ideology and Ideological State Apparatues என்ற ஆய்வுக்கட்டுறையைக் குறிப்பிடுகிறார் என்று தெரிகிறது.

தமிழில் : நாகார்ஜுனன் 

நன்றி : ஆய்வு (இதழ் - 1) 

No comments:

Post a Comment

பறவை நோக்குதல் எனும் ரசனையான பணி

ராஜேந்திரன் பறவை என்பதை இப்படி எளிமையாக விளக்கலாம். உலகிலேயே சிறகு உடைய பிராணி பறவைதான். நமது பெருவிரல் பருமனே உள்ள மிகச் சிறிய ரீங்காரப் பற...