Tuesday 30 January 2018

புரட்சி வரும் இல்லையா அம்மா ?




ஏய் … அம்மா ! புரட்சியென்றால் என்ன ?
அது போராட்டமடா கண்ணா !
வீரர்கள் சண்டை போடுவார்களே .. அதுவா ?
ஆமா குழந்தை !
போரிடுவாங்க, கொல்லுவாங்க, சாவாங்க.
நாம் அன்னியனை எதிர்த்து போர் செய்கிறோமா ?
ஆமா கண்ணு அப்படித்தான் நினைக்கிறேன்.
நாம ஏன் அவங்களோடு போரிடனும் அம்மா ?
ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள்.
அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா ?
ஆமாண்டா அது அப்படித்தான்.
அப்படியென்றால் நான் அடிமையாக மாட்டேன் அம்மா.
எனக்குத் தெரியும் மகனே – நாங்கள்
ரொம்ப நாளைக்கு இப்படி இருக்க மாட்டோம்
கண்ணே தூங்கு !
புரட்சிவரும் இல்லையா அம்மா ?
ஆமாம் மகனே புரட்சி வரும்
வாயை மூடித் தூங்கடா.
ஏய் … அம்மா ! எப்போ புரட்சி வரும் ?
சீக்கிரம் மகனே … சீக்கிரம்
ஆனால் அம்மா ! நம்மிடம் ராணுவம் இல்லையே ?
சொன்னால் கேளடா தூங்கு
நாம் ராணுவம் அமைப்போம் கவலைப்படாதே.
ரொம்ப நாளாகுமா ராணுவம் அமைக்க ?
இல்லையடா மகனே அப்படி நினைக்கல்லே.
நம்ம படையிலே யாரு இருப்பினம் ?
ஓ … நம்ம அப்பா உன்னோட மாமன்மார்
நம்ம சனங்கள் எல்லோரும்
வாயை மூடித் தூங்கடா கண்ணு.
நானும் கூட … நானும் கூட
பெரியவனானதும் சேரலாமா ?
நீ அதிலே சேர முடியாது
வாயை மூடித் தூங்கடா
வீரன் பலசாலியா இருக்கணும்
ராத்திரி முழுதும் கண் முழிச்சிருந்தா
எப்படித் தான் நீ பலசாலியாவே
சொல்வதைக் கேளடா
உன் துப்பாக்கியை எடுத்துக்கோ
அதோட கொடியையும் எடுத்துக்கோ
தூங்கி அதையே கனவில பாரு
சரிதானே கண்ணு.
ச..ரி…ம்மா.


நன்றி : பாலம் இதழ்

எழுத்தாயுதம்


எழுதுதல் என்பது எழுதுதல் மட்டுமன்று, அது ஒரு செயல்பாடு. தீமைக்கு எதிராக மனிதன் நடத்தும் தொடர்ச்சியான போராட்டத்தில் எழுதுதல் என்பது திட்டமிடப்பட்ட முறையில் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஓர் எழுத்தாளன் இதை புரிந்து கொள்வது மிகவும் இன்றியமையாதது.

ழீன் பால் சார்த்தர் 

நிமிர்


நிமிர்

சலுகை வெறு
திணித்தலை எதிர்
மிரட்டலை சந்தி
அடங்க மறு
திமிறு நிமிரு
சுவாசம் என்பது
உரிமைக்கு பிறகு

அறிவுமதி

இக் கவிதையின் கடைசி இரு வரிகள் விஞ்ஞானத்துக்கு புறம்பானவை தான். ஆயின் என்ன? எமது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஒரு வீச்சை இது உட்கொண்டிருப்பதால் எமக்கு இது கவிதையாகிறது. எமக்கான கவிதைகளைக் கூட இப்படித்தான் பார்க்கிறோம்.

விஞ்ஞானப் பயன்கள் கூட
தலித்துகளுக்கு அந்நியமே.

எனையும் கொல்வீரோ ?



தெறித்து விழுந்த ஒரு
தணல் துண்டாய்

தோப்பை விட்டு
விலத்தி நிற்கும்
ஒற்றைக் கரும்பனையாய்

குழு தவிர்த்து
தனித்தேயலையும்
ஒரு கரும் புலியாய்

ஒரு உதிரித் தமிழனாய்

நான் மட்டுமேனும் …

உமது தலைமையை
மறுத்து நிற்பேன்.


சக்கரவர்த்தி

Saturday 27 January 2018

மாயக்கண்ணாடி : தமிழ் சினிமாவின் கதை - தொடர் (பகுதி - 1) ஆத்மாநாம்


நிகழ்ச்சிக் கரு ( PROGRAMME CONCEPT)

கி.மு 65ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே உலகின் எங்கோ ஒரு மூலையில் பழங்கால கிரேக்கர்களின் சிந்தனையில் தோன்றி 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் லூமியர் சகோதரர்களால் மாபெரும் விஞ்ஞானக் கலையாக உருவெடுத்த சினிமா எனும் கலை வடிவம் தமிழகத்தில் வேரூன்றிய கதையை அதன் அறிவியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியோடு சொல்ல வருகிற சுவாரசியமான நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி.

தமிழ் சினிமாவின் கதை என்பது ஒருவகையில் தமிழ் மக்களின் கதையும் கூட. ஆரம்பத்தில் கூத்தாடிகள் என்று கேலி பேசப்பட்டவர்கள் தான் பின்னர் நாடாண்டார்கள் என்பது நாடறிந்த வரலாறு. தமிழ் சினிமாவில் பேசப்பட்ட கதைகளை விட பேசப்படாத கதைகள் ஏராளம். தெருக்கூத்து, நாடகம் என்று வாழ்ந்த தமிழனின் வாழ்வில் சினிமா எனும் மாபெரும் கலை வடிவம் நுழைந்தது வரலாற்றில் அவனுக்கு கிடைத்த பெரும் புதையல். அந்த புதையலை பொத்திப்பொத்தி வளர்த்தெடுத்த திரையுலக ஜாம்பவான்களை, கலையுலக சிற்பிகளை, இசையுலக மேதைகளை திரும்பிப் பார்க்கவைக்கும் நெடுந்தொடர் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி.

ஒரு புராஜக்டர் மற்றும் சில துண்டுப் படங்களுடன் சாமிக்கண்ணு வின்செண்ட் தமிழகத்திலும், ஆந்திரத்திலும் திரையிடத் தொடங்கிய தமிழ் சினிமாவின் வரலாற்றுப் பயணம் இன்றைய கோச்சடையான் வரை நீண்ட கதையைத் தான் வரலாறு மற்றும் கலாச்சார, தொழில்நுட்ப காரணங்களோடும், அரிய தகவல்கள், புகைப்படங்கள், கலைஞர்களின் பேட்டிகள் மற்றும் படக்காட்சிகளுடன் ஆவணப்படுத்தப்போகும் அரிய முயற்சி தான் இந்த மாயக்கண்ணாடி.

தமிழ் சினிமாவையும் தமிழர்களையும் எப்படிப் பிரித்துப் பார்க்க முடியாதோ அதேபோல் தமிழ் சினிமாவின் கதையை தெரிந்து கொள்ளாத தமிழனையும் விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் விசிறிகளை மகிழ்விக்க, அது காலந்தோரும் கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்கவைக்கப் போகும் நிகழ்ச்சி தான் மாயக்கண்ணாடி

நிகழ்ச்சிக் கரு (PROGRAMME FORMAT)

முதலில் இந்த நிகழ்ச்சித் தொடர் குறித்த முன்னோட்டத்தை தொகுப்பாளர் ஒருவர் வழங்குவார். அவர் மட்டுமே இந்த நிகழ்ச்சியின் மையமாக இருந்து ஒருங்கிணைத்து செல்வார்.

மாயக்கண்ணாடி நிகழ்ச்சி முழுவதுமே ஒரே Pattern-ல் இருக்காது. இந்த தொடர் நிகழ்ச்சி தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நுழையும்போது அதன் வடிவம் மற்றும் உள்ளடக்கம் (Form & Content) மாறுபடும். கண்டிப்பாக சொல்லவரும் விஷயத்தை பொருத்த மட்டில் சுஹாசினியின் 'Autograph' மாதிரியும், மதனின் ‘Talkies' போலவும் நேர்காணல் வடிவிலும், ஆவணப்பட பாணியிலும் நிகழ்ச்சி மாறி மாறி செல்லும். இந்த தொடர் நிகழ்ச்சி ஒவ்வொன்றும் சுவாரஸ்யமான கதை சொல்லல் முறையில் கொண்டு செல்லப்படும். இடையிடையே Visualize செய்யப்பட்ட காட்சிகளுக்கு Voice-Over சேர்க்கப்படும். இது தனியாக Dubbing செய்யப்பட்டு பொருத்தமான இடங்களில் இணைக்கப்படும். 

சினிமா எனும் கலை வடிவம் அறிவியல் மற்றும் கலாச்சார வணிக நோக்குடன் உருவான ஒன்று என்பதால் மொத்த நிகழ்ச்சியின் இடையில் பல கூட்டு விவாதங்களும் இடம்பெறும். திரைப்படம் குறித்து Eye Doctor, Film Technicians, Novelists, Politicians, Psychologists என்று சமுகத்தின் பல்வேறு தரப்பினரின் பேட்டிகளும், கருத்துக்களும் இடம்பெறும். சினிமாவை உருவாக்கும் கடைக்கோடி வல்லுநருக்கும், உடல் உழைப்பளிகளுக்கும் கூட முக்கியத்துவம் தரப்படும். சினிமாவை பாதித்த Audio Voice கூட கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 

இந்த நிகழ்ச்சி பல கட்டங்களாக பிரித்து அமைக்கப்படுகிறது.

நிகழ்ச்சிக் கரு ( PROGRAMME CONCEPT)
  1. அரிஸ்டாட்டில் தொடங்கி லூமியர் வரையிலான காலகட்டம் 
  2. லூமியர் தொடங்கி கதைப்படங்கள் வரையிலான காலகட்டம்
  3. ஊமைப்படங்கள் தொடங்கி பேசும் படங்கள்  வரையிலான காலகட்டம்
  4. பேசும் படங்கள் பாடும் படங்களாக மாறிய காலகட்டம்
  5. பாடும் படங்கள் பல்வேறு திரைப்படங்களாக மாறிய காலகட்டம்
இப்படி பல கட்டங்களாக ஆரம்பம் முதல் இன்று வரையிலான திரைப்பட வரலாறு ஆவணப்படுத்தப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கு தேவையான Meterials : Youtube Visuals and Images (இணையம் வழியான பரிவர்த்தனை), அன்று தொடங்கி இன்று வரையிலான பத்திரிகைச் செய்திகள், புகைப்படங்கள், பழைய திரைக் கலைஞர்களின் நினைவலைகள், நாட்குறிப்புகள், கடிதங்கள், இன்ன பிற.. யாவும் கணக்கில் கொள்ளப்படும்.
இந்த நிகழ்ச்சி தொடர் முடியும் வரையில் தமிழ் சினிமாவின் வரலாற்று ஆய்வாளர்கள் இதன் தொடர்பு வளையத்திலேயே இருப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்காக சினிமா சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்படும். இதன் காரணமாக முடிந்தவரை வரலாற்று பிழையுடைய தகவல்கள் தவிர்க்கப்படும். 

சினிமா வரலாறு குறித்த பழைய / புதிய ஆர்வலர்களின் அரிய சேகரிப்புகள் கணக்கில் கொள்ளப்பட்டு ஒரு புத்தம்புது பொலிவுடன் நிகழ்ச்சி கொண்டு செல்லப்படும். மாயக்கண்ணாடி தொடரின் ஒவ்வொரு நிகழ்ச்சியும் தமிழ் சினிமா வரலாற்றின் சுவாரஸ்யமான கட்டங்களையே பிரதானமாக கொள்வதால் நிகழ்ச்சித்தொடர் ஆவணப்படத்தினை முழுக்கவும் பின்பற்றாமல் புதியதொரு காட்சியனுபவமாக இருக்கும். திரைப்பட வரலாற்றின்  அடுத்தடுத்த கட்டங்களான புதிய பாணி படங்கள், நடிப்பு முறையில் நிகழ்ந்த மாற்றங்கள், மிகச்சிறந்த படங்கள், மறக்க முடியாத படங்கள், கதை சொல்லல் முறைகள், தொழில்நுட்ப அளவில் சினிமாவை மடைமாற்றம் செய்தவர்கள், பழைய கீற்றுக் கொட்டகையிலிருந்து இன்று நடைமுறைக்கு வந்திருக்கும் மால் தியேட்டர் வரையிலான மாற்றங்கள் பதிவு செய்யப்படும்.

இறுதியாக இந்த நிகழ்ச்சித் தொடரின் வடிவத்தில் கவனம் கொள்ள வேண்டிய விஷயம், நிகழ்ச்சி தொகுப்பாளர் Blue or Green Matte -ல் படம்பிடிக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றில் மட்டுமே தோன்றுவார். தொடரின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் சினிமாவிற்கேயான கலைப்பொருட்களுக்கான மாதிரிகள் நிரம்பிய அறையிலோ (உதாரணம் : பழைய கிராமஃபோன், 70 RPM இசைத்தட்டுகள், Old Cinema Poster, Film Reels. அரிய புகைப்படங்கள், பத்திரிகை செய்திகள்...) இல்லை ஒரு புராதன சினிமா அறையைப்போன்ற அரங்கில் நடந்துகொண்டோ, மாதிரிகளை சுட்டிக்காட்டி பேசியபடியோ, சில நேரம் உட்கார்ந்து கொண்டோ, சாய்ந்து கொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ கூட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார். ஒரு வகையில் Travelling of Photography உத்தி அதிக அளவில் பயன்படுத்தப்படும். உட்புற / வெளிப்புற படப்பிடிப்புகளும் இதே மாதிரி படம் பிடிக்கப்படும். 

தமிழ் சினிமாவின் வரலாற்றைப் பேசும் மாயக்கண்ணாடி இந்த நெடுந்தொடர் வார இறுதியின் இரண்டு நாட்களின் 1 மணி நேர நிகழ்ச்சியாக பிரித்தால் கூட 100 தொடர்களை சுலபமாக தாண்ட முடியும். இதையே அரை மணி நேர நிகழ்ச்சியாக மாற்றினால் 250 தொடர்களையும் தாண்டிச் செல்லலாம். தமிழ் சினிமாவை பற்றிச்சொல்ல அவ்வளவு விஷயங்கள் இருக்கிறது.

(தொடரும்)











3D பிரிண்டர் (முப்பரிமாண நகலி) - மனித மதிப்பீடுகளை மாற்றியமைத்த கண்டுபிடிப்பு (பகுதி - 2) ஆத்மாநாம்




3D Printing செயல்படும் முறையை கூட்டல் முறைச் செயல்பாடு (Additive  Manufacturing) என்று கூறலாம்உருவாக்கப்படும் மூலப்பொருளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினார் போல் வைத்து லேயர் லேயராக உருவாக்கப்படும் ஒரு கட்டமைப்பைத்தான் Additive  Manufacturing என்றுசொல்லுகிறோம். Additive Manufacturing கீழ்கண்ட 7 முறைகளில் செயலாற்றுவதாய் உள்ளது.

  1. VAT Photopolymerisation
  2. Material Jetting
  3. Binder Jetting
  4. Material Extrusion
  5. Powder Bed Fusion
  6. Sheet Lamination
  7. Directed Energy Deposition.


Additive Manufacturing என்ற கூட்டல் முறைச் செயல்பாட்டின் எதிர்ப்பதமாக இருப்பது கணினி எண் கட்டுப்பாடு கருவிகளின் (CNC Machines) கழித்தல் முறைச் செயல்பாடு. அந்த கருவிகளில் முதலில் செய்யப்பட வேண்டிய பொருளின் கொள்ளளவை விட அதிகமான மூலப் பொருளை எண்ணியல் வரைமுறைகளுக்கு ஏற்ப செதுக்கி அதாவது கழித்து இறுதி வடிவம் எட்டப்படும்.

அடுத்து 3D பிரிண்டரில் ஒரு பொருளை அச்சிட என்னவெல்லாம் தேவைப்படுகிறது என்று பார்க்கலாம்.



முதலாவது கம்யூட்டர் ஒன்றில் நமது கற்பனைக்குரிய பொருளை Virtual Design-ல் வரைந்து கொள்ள வேண்டும்இதுதான் நீங்கள் தயாரிக்கப்போகும் முப்பரிமாண வடிவமாதிரி (3D Digital Designing Model).  Design செய்யப்பட்ட இந்த File-ஐ முதலில் கம்ப்யூட்டருக்கு கொடுக்க வேண்டும்.  இந்த Design-ஐ இணையத்தில் உள்ள சில தளங்களுக்கு சென்று நாமே வடிவமைத்துக் கொள்ளலாம்அல்லது ஓப்பன் சோர்ஸ் முறையில் யார் யாரோ செய்து வைத்திருக்கும் டிசைன்களை சில மாறுதல்களுடன் பயன்படுத்திக்கொள்ளலாம்.  




அதேவேளை இதற்கு மாற்றாக 3D ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட அந்த பொருளின் டிஜிட்டல் காப்பியை Printer-க்கு அனுப்பியும் இந்த முறையை கையாளலாம்.  பயன்பாட்டு வகைகளை பொறுத்து முழு உடலையும் ஸ்கேன் செய்யும் ஸ்கேனர் முதற்கொண்டு ஏராளமான 3D ஸ்கேனர்கள் இன்று சந்தைக்கு வந்துள்ளதுநம்மிடம் 3D பிரிண்டர் இல்லையென்றால் கூட டிசைன் செய்யப்பட்ட நமது டிஜிட்டல் ஃபலை அப்லோட் செய்து பிரிண்டர் வைத்திருக்கும் வேறு யாரிடமாவது அதனை அச்செடுத்துக் கொள்ளலாம்.






இப்போது நமக்கு என்ன வேண்டும் ?

ஒரு பிளாஸ்டிக் கூம்புஉலோகத்தினால் ஆன ஒரு சல்லடைமின் விசிறியின் இறக்கைஅல்லது மோட்டார் வாகனத்தின் உதிரிபாகம்நாம் விரும்பும் ஒரு ஆடைஒரு செயற்கையான கால்ஒரு வேளை அது இதயமாகக் கூட இருக்கலாம். இவை அனைத்தும் 3D பிரிண்டர் மூலம் இன்று சாத்தியமாகியிருக்கிறது.




3D பிரிண்டிங்கை பொறுத்தவரை இன்றைய நிலையில் அது பரந்த அளவில் செயலாற்றுவதாய் உள்ளதுஅதற்கு தேவையான கச்சாப்பொருட்களாக பெருமளவில் உலோகங்களும்திசுக்களுமே இருந்து வருகின்றனஎனவே இதில் பயனாகும் பொருட்களும்தொழில்நுட்பங்களும் அதற்கேற்றவாறு பரவலாக வேறுபடுகிறது.




சரி இப்போது 3D பிரிண்டிங் எப்படி உலகம் முழுவதும் பிரபலமானது என்று பார்க்கலாம்.

ஒருவர் தனது கற்பனையில் உருவான ஒன்றுக்கு உடனடியாக உருவம் கொடுத்து உருவாக்கிட முடியும் என்பது தான் 3D பிரிண்டரின் தனிச்சிறப்புகடந்த 20 வருடங்களுக்கும் மேலாகபரவலாக எல்லா நிறுவனங்களிலும் விரைவு மாதிரி உருவாக்கக் கருவி பயன்படுத்தப் படுகிறது. இன்று நாம் உபயோகிக்கும் நாற்காலி முதல்அதி நவீன கார்கள் வரை பெரும்பான்மையானவை அவற்றின் வழியே உருவாக்கப்பட்டவைதான்.

3D பிரிண்டர் மூலம் மருத்துவத் துறையும்கட்டிடவியல் துறையும் அதன் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சிக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனபயோ-பிரிண்டர் மூலம் சாதாரண மனிதக்காது முதற்கொண்டு ஸ்டெம்செல் திசுக்கள் வரை தற்போது உருவாக்கப்பட்டு விட்டனஇதன் மூலம் உடலின் பல பாகங்களை முழுமையாக சோதனைக்கூடத்திலேயே உருவாக்கிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.




3D பிரிண்டர் மூலம் பலன் பெற்ற மற்றோர் துறை கட்டிடவியல் துறைஅஸ்திவாரம் போடுவதிலிருந்து அடுக்குமாடி குடியிருப்பின் குட்டிகுட்டி அறைகள் ஒவ்வொன்றின் இறுதி வடிவத்தை சிறு சிறு நுட்பங்கள் வரை கான்செப்ட் லெவலிலேயே மினியேச்சராக வடிவமைத்து பார்த்து விடலாம்அதற்கும் முன்னதாக கட்டுமானத்துறையில் பெரும் அங்கமாக 3D பிரிண்டர் இருந்து வருவதை உதாரணமாக கூறலாம்.




3D பிரிண்டரின் படிப்படியான வளர்ச்சி ( TIME LINE )

1990-ஆம் ஆண்டில் சக்ஹல் நிறுவனம் 3D அமைப்பு அடிப்படையில் தயாரிப்புக்கு அதிக செலவும்அதிககால அவகாசமும் தேவைப்படும் சிக்கலான  உதிரி பாகங்களை ஒரே இரவில் தயாரித்து வெளியிடத் துவங்கியது.

1999-ஆம் ஆண்டு வேக்ஃபாரஸ்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் பயோ-பிரிண்டர் மூலம் செயற்கையான சிறுநீர்ப்பை ஒன்றை உருவாக்கி அதனை வெற்றிகரமாக நோயாளிக்கு பொறுத்துகிறார்கள்.

2002-ஆம் ஆண்டு அதே வேக்ஃபாரஸ்ட் பல்கலைக் கழகம் பயோ-பிரிண்டர் மூலம் சொந்த செல்களை பயன்படுத்தி நன்கு செயலாற்றக் கூடிய சிறுநீரகம் ஒன்றை உருவாக்குகிறது.

2005-ஆம் ஆண்டு RepRap என்னும் திறந்தவெளி (Open Source) திட்டத்தின் அடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் 3D பிரிண்டரை பயன்படுத்தி சுலபமாகவும்மலிவாகவும்சுயமாகவும் அச்சடிக்கும் ஒரு புரட்சிகரமான முறை அமுலுக்கு வருகிறது.



2008-ஆம் ஆண்டு RepRap பெரும்பாலும் சொந்த உதிரிபாகங்களை கொண்டு முதல் சுயமாக பிரதியெடுக்கும் தயாரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்துகிறதுஅதன்மூலம் 3D பிரிண்டரில் செயற்கைகால்பாதங்கள்சிக்கலான மூட்டுகள் வரை தயாரித்து அளிக்கப்படுகிறது.
2009- ஆம் ஆண்டு மனிதத் திசுக்களை ஆராயும் Organovo ஆராய்ச்சி நிலையம் 3D பயோபிரிண்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ரத்தக்குழாய்களை உருவாக்குகிறது.




2011-ஆம் ஆண்டு 3D பிரிண்டர் மூலம் முதன்முதலாக அச்சிடப்பட்டு வெளியான தானியங்கி விமானம்முதன்முதல் உருவான 3D பிரிண்டர் கார்முதன் முதல் 3D பிரிண்டரில் செய்யப்பட்ட தங்கவெள்ளி நகைகள் பயன்பாட்டுக்கு வருகிறது.

2012-ஆம் ஆண்டு 3D பிரிண்டரில் அச்சிடப்பட்ட செயற்கை தாடை 83 வயதான பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தப்படுகிறது.

தற்போது விண்வெளித்துறைவிமானம்ஆட்டோமொபைல்மருத்துவக் கருவிகள்மின்சாரக் கருவிகள்ஆராய்ச்சி மையங்கள்பல்கலைக் கழகங்கள்பொறியியல் கல்லூரிகள்வடிவமைப்பு கல்வி மையங்கள் உள்ளிட்ட அனைத்திலுமே 3D Printer மிகவும் பயனுள்ள ஒன்றாக இன்று மாறியுள்ளது. விண்வெளியில் நாசா அமைத்து வரும் மையத்தில் ஏற்படும் பழுதுகளை நீக்க 3D பிரிண்டரை எடுத்துச் செல்லலாமா என்று கூட நாசா ஆராய்ந்து வருகிறது. அண்மையில் நடந்துமுடிந்த டாவோஸ் உலக பொருளாதார பேரவை மாநாட்டில் கூட 3D Printer அடுத்தகட்ட புரட்சியை ஏற்படுத்த வல்லது என கணித்துள்ளனர்.




நுகர்வோரின் தேவைக்கும்வசதிக்கும் ஏற்ற பொருட்களைத் தொடர்ந்து உருவாக்குவதன் மூலமே ஒரு நிறுவனம் சந்தையில் நிலவ முடியும் என்ற சூழலில் 3D Printer ஒவ்வொரு நிறுவனத்தின் இன்றியமையா முதலீடாக உள்ளது. நமது எதிர்கால வாழ்க்கையிலும் 3D Printing மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரப்போகிறதுஒருவகையில் இந்த நூற்றாண்டில் நமது மதிப்பீடுகளை கலைத்துப் போட்ட கண்டுபிடிப்பாகவும்நமது பார்வையை மாற்றியமைத்த கண்டுபிடிப்பாகவும் அது நம் எல்லோரது வாழ்விலும் நுழைந்தது. வரும் காலங்களில் நமது அன்றாட விஷயங்களில் ஒன்றாகநமது சந்தோஷமான விஷயங்களில் ஒன்றாகநமது தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்றாகஇந்த உலகத்தையே மாற்றியமைக்கூடிய விஷயங்களில் ஒன்றாக அது மாறப்போகிறது.




எதிர்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள மேசையிலும் கணினி மற்றும் பிரிண்டருடன் ஒரு 3D பிரிண்டரும் இருந்தாக வேண்டிய நிலை உருவாகப் போகிறதுஅந்தநாளும் வெகுதொலைவில் இல்லை என்பதை 3D பிரிண்டிங் டெக்னாலஜி தனது படிப்படியான வளர்ச்சியின் மூலம் நிரூபித்துக் கொண்டே வந்திருக்கிறது.


(முற்றும்)

Tuesday 23 January 2018

சூரியபுராணம் : பேராற்றலின் உலக வடிவம் (பகுதி -3) ஆத்மாநாம்


ஒரு காலத்தில் நமது நட்சத்திரக் கூட்டத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது. அந்த வெற்றிடம் மட்டும் இல்லாவிட்டால் நாம் சூரியனை அறிந்திருக்கவே மாட்டோம். பூமியில் பிறந்திருக்கவும் மாட்டோம். அந்த வெற்றிடத்தில் மேகம் போல கவிந்திருந்த ஹைட்ரஜன் மூலக்கூறுகளும் தூசுப்பொருள்களும் நாளடைவில் சின்னசின்ன மேகங்களாக உடைந்து நம்முடைய சூரியனும் அதன் உபகிரகங்களும் தோன்றின. நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் சூரியசக்திகளின் தோற்றம் குறித்து ஐன்ஸ்டீன் போன்ற அறிவியல் மேதைகள் 19ம் நூற்றாண்டுகளிலேயே மாபெரும் சோதனை முடிவுகளை வெளியிட்டனர். அந்த முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க அளவில் பிரபஞ்ச அறிவியல் மற்றும் சோதனைகளில் மாற்றத்தை கொண்டுவந்தன.  

சூரியனின் நடுமையத்தில் நிகழும் தெர்மோநியூக்ளியர் என்று சொல்லக்கூடிய அணுவெப்ப ஆற்றலின் எதிர்விளைவு காரணமாகவே சூரியனிலிருந்து ஒளியும் வெப்பமும் வெளிப்படுகிறது. அதாவது ஹைட்ரஜன் ஹீலியமாக மாறும் அணுப்பிளவு காரணமாக சூரியசக்தி உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை அந்த கண்டுபிடிப்புகள் உறுதி செய்தன. இவையாவுமே சூரியனின் நடுமையத்தில் நடைபெறுகிறது. இந்த மாற்றம் 2.7 கோடி ஃபாரன்ஹீட் வெப்பநிலையில் நிகழ்கிறது. ஒரு வினாடிக்கு 70 கோடி டன்கள் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றமடைகிறது. நாற்பது  லட்சம் எடையுள்ள பொருட்கள் சக்தியாக மாற்றப்படுகிறது. இந்தச் சக்தி சூரியனின் மேற்பரப்பை நோக்கி சென்டிமீட்டர் சென்டிமீட்டராக நகர்ந்து வந்து சேர்வதற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு கோடி ஆண்டுகள் ஆகிறது. சூரியனின் மேற்பரப்புக்கு வந்த இந்த சூரிய சக்தி, நாலாபுறமும் தெரித்து பரவுகிறது. சூரிய ஆற்றலில் ஒரு சதவிகிதமே பூமியை வந்தடைகிறது. இந்த ஒளியிலிருந்து தான் பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் தேவையான ஆதார ஆற்றலே கிடைக்கிறது.

நமது பூமியானது ஆரம்பத்தில் ஒரு வெப்பமான வாயுப்பொருளாக இருந்து, படிப்படியாக குளிர்ந்து இப்போதுள்ள மிகக்குறைந்த வெப்பநிலைக்கு வந்துள்ளது. இந்த வெப்பம் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் கதிர்வீச்சினால் சமனாக்கப்பட்டு எப்போதும் ஒரே நிலையில்தான் இருக்கும். ஆனால் பூமிக்கு வெளியே வேறு ஏதும் மாற்றம் இல்லாத வரைதான் இந்த நிலைக்கு உத்தரவாதம். அப்படி ஏதும் மாற்றம் ஏற்பட்டால் பூமியின் வெப்பத்திலும் மாறுதல் ஏற்படும். இந்த மாற்றம் படிப்படியாக நிகழலாம். இல்லை, பெரிய அளவில் திடீரென ஏற்பட்டுவிடலாம்.


சூரிய ஒளி பூமியை வந்தடைய 8 நிமிடங்கள்  20 வினாடிகள் ஆகின்றன. இந்த ஒளியிலிருந்து தான் தாவரங்கள் ஒளிச்சேர்க்கை மூலம் உணவு தயாரிக்கின்றன. ஒளிச்சேர்க்கை மட்டும் நின்று விட்டால் நம் பூமியில் உயிரினங்கள் வாழவே முடியாது  எல்லா உயிரினங்களுக்கும் தேவையான ஆற்றலின் மூல வடிவம் ஒளிச்சேர்க்கை தான். உயிரினங்களுக்கு தேவையான உணவும், ஆற்றலும் தாவரங்களையே சார்ந்தே உள்ளன. ஏன் நாம் சுவாசிக்க தேவைப்படும் ஆக்சிஜன் தாவரங்களில் இருந்தே கிடைக்கிறது. சூரிய ஆற்றல் பூமியின் அனைத்து உயிர்களுக்கான ஆதார ஆற்றல் ஆகும். மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன.


சூரியனில் இருந்து வரும் புறஊதா கதிர்கள் நுண்ணுயிர் கொல்லியாகும். மேலும் இக்கதிர்கள் மாந்தர்களிடம் வேனிற்கட்டி போன்ற கொடிய விளைவுகளையும், மற்றும் உயிர்ச்சத்து D (விட்டமின் D) உற்பத்தி ஆகிய நன்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. புற ஊதா கதிர்கள் பூமியை சூழ்ந்துள்ள ஓசோன் படலம் மூலம் மட்டுப் படுத்தப் படுகிறது. இக்கதிர்களே மனிதரின் வேறுபட்ட தோல் நிறத்துக்கும் காரணமாக அறியப்படுகிறது. சூரிய ஒளி பூமி மேற்பரப்புக்கு வந்தடைவதற்கு முன் வளி மண்டலத்தால் பெரிதும் மட்டுப்படுத்தப் படுகிறது. குறைவான அளவிலான வெப்பமே தரையை வந்தடைகிறது.  பூமியின்  எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும்  நம அன்றாட வாழ்க்கை, சூரிய உதயத்திலிருந்து தான் தொடங்குகிறது. சூரிய மறைவின் போது ஏறக்குறைய நம்முடைய அன்றாட வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

ஆனால் , நாம் பணத்திற்காக சூரியன் மறைந்த பிறகும் உழைக்கிறோம் . ஒரு நிமிடம் நம் முன்னோர்களை நினைத்து பாருங்கள். மின் விளக்கோ மற்ற எந்தவிதமான மின்சார சாதனங்களோ கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில் அவர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும். சூரிய ஒளியில் தங்கள் இயக்கத்தை தொடங்கி சூரியன் மறைவின் போது தங்கள் இயக்கத்தை நிறுத்தி , ஓய்வெடுத்து  அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கையை அவர்களால் வாழ முடிந்தது.

சிந்தித்து பார்க்கும் போது மது வாழ்க்கையை மின் சாதனங்கள் பிடுங்கி கொண்டு விட்டது போல் தோன்றுகிறது. இன்று மின் சாதனங்கள் இல்லாத  நம் அன்றாட வாழ்க்கையை கற்பனை கூட செய்ய முடியாது. எல்லோரும் மின்சாரத்தின்  அடிமைகளாக மாறி விட்டோம். மின்சாதனங்கள் தான் நம் வாழ்கையை இயக்குவது போல நினைத்துக் கொண்டு அவைகளுடனே வாழ்கிறோம். தினமும் மின் சாதனங்களின் மூலம் எல்லா நேரங்களிலும் நிலையான மகிழ்ச்சியையோ  அமைதியையோ  நம்மால் எப்போதுமே பெற முடியாது . காரணம் அவை இயங்க எப்போதும் மின்சாரம் தேவை.


இந்நிலையில் சூரிய ஒளி மூலம் பெறும் மின் ஆற்றலைப் பற்றி நாம் விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. சூரியனின் அளவற்ற ஆற்றலை முறையாகப் பயன்படுத்தினால் மிகவும் மலிவாக மின்சாரம் பெறலாம். சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாமல் பெறலாம் என்பதும் இதில் முக்கியமான அம்சம். அதனால் தான் இன்றைய வளர்ந்த  நாடுகள் பல மாற்று எரிசக்தியாக சூரிய ஆற்றலை பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுக்கின்றன.


ஒரு மரபு வழிக் கதையின்படி ஆர்க்கிமிடீஸ் மெருகூட்டப்பட்ட கவசங்களை சூரிய ஒளியைக் குவிக்கப் பயன்படுத்தி அதைப் படையெடுத்து வரும் உரோமானிய நாட்டுப் படையினர் மீது செலுத்தி அவர்களை சிராகுசிலிருந்து துரத்தியடித்தார். 1866 ஆம் ஆண்டில், அகஸ்டே மவுசோ முதல் சூரிய நீராவி இயந்திரத்திற்காக, பரவளையத் தொட்டியைப் பயன்படுத்தி நீராவியை உற்பத்தி செய்தார்.
சூரிய ஒளி மின் உற்பத்தியானது மிகவும் முக்கியமான மாற்று எரிசக்தியாகும். ஆண்டில் மிக குறைந்த நாளில் மட்டுமே வெயில் இருக்கின்ற ஜெர்மனியில் 17,000   மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வருடத்தில் 325 நாளுக்கும் அதிகமாய் வெயில் உள்ள இந்தியாவில் இரண்டு லட்சம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால் தற்போது இந்தியா பெரும் மின்சாரம் மொத்த உற்பத்தியில்1%க்கும் குறைவு. நம்முடைய தார் பாலைவனம் மூலம் சதுரமீட்டரில் ஒரு மணிநேரத்திற்கு 6.6கிலோவாட் மின்சாரம் பெற இயலும். தார்பாலைவனம் மற்றும் குஜராத்தின் வடக்கு பகுதியில் கிடைக்கும் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுத்தால் இந்தியா மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவது மட்டுமின்றி அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் இயலும். சூரியனை பற்றி சிந்திக்கும் மனநிலை நமக்கு இல்லை. இயந்திர வாழ்க்கை நம்மை இயற்கையிடமிருந்து பிரித்துக் கொண்டே இருக்கிறது.

பொருள் அழிவதைப் பற்றியும் , பொருள் சேர்ப்பதைப் பற்றியும் கவலைப் படவே நமக்கு நேரம் போதவில்லை . நம் கண் முன்னாலே இயற்கை அழிவதை நாம் கவனத்தில் கொள்வதில்லை. இயற்கை இல்லாமல் ஒரு நிமிட வாழ்க்கை கூட சாத்தியமில்லை . சூரியனிடமிருந்து  நாம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றனஅப்படிப்பட்ட சூரியன் மட்டும் இல்லாவிட்டால் நம் கதி என்ன என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இதற்கும் விஞ்ஞானிகள் விடை கண்டுபிடித்துவிட்டனர். சூரியனின் வயது கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ஆண்டுகள். 450 ஆண்டுகளை கழித்துவிட்ட சூரியன், நடுவயதை எட்டிக் கொண்டிருக்கிறது. இன்னம் மீதமிருக்கிற 550 கோடி ஆண்டுகளை கழித்த பின்னர் சூரியனில் உள்ள எரிபொருள் அனைத்தும் தீர்ந்து விடுவதால் அது சுருங்கி காணாமல் போய்விடும். இந்நிலையில் பூமியின் இருப்பு என்பது மிகுந்த ஐயத்துக்குரியது. ஒரு வகையில் இது அதிர்ச்சியான செய்தியாக இருக்கலாம். ஆனால் இது நிகழப் போவது பத்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு. எனவே கவலைப்படாமல் சூரியனின் மற்ற சங்கதிகளையும் பார்ப்போம்.

சூரியன் ஒரு சிவப்பு பெருங்கோளாக மாறும்பொழுது அதன் ஆரம் தற்போதய ஆரத்தை விட சுமார் 250 மடங்கு பெரியதாக விரிவடையும். அத்தகைய விரிவடைதல் பூமியின் சுற்றுவட்ட பாதையை முழுவதுமாக சூரியனுக்குள் இழுத்து விடும். ஆனால் சூரியனின் நிறை பெரிதும் குறைந்திருப்பதால் கோள் பாதைகள் விரிவடைய வாய்ப்பு உண்டு. நவீன ஆராய்ச்சி முடிவுகளின்படி சூரியன் பூமியை முழுவதுமாக விழுங்கி விடவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.  சில இயற்பியல் விதிமுறைகளின் படி பூமி சூரியனால் விழுங்கப்படாமல் இருப்பினும் அதிக வெப்பத்தினால் பூமியில் உள்ள அனைத்து நீரும் ஆவியாகி வெளியேறி விடும். மேலும் காற்று மண்டலம் முழுவதுமாக அழிக்கப்பட்டு உயிரினங்களின் வாழ்க்கை முற்று பெறும். ஒவ்வொரு பில்லியன் ஆண்டுகளுக்கும் சூரியனின் வெப்பம் 10% அதிகமாகிறது.  ஆயிரம் கோடி ஆண்டுகளைக் கடந்த பின்னர் சூரியன் விரிவடையும்போது அதன் வெளிப்புற வெப்பநிலையை விட பாதியாக குறைந்துவிடும். இப்போதிருப்பதை விட ஐம்பது மடங்கு பெரிதாகவும், கூடுதல் பிரகாசத்துடனும் சூரியன் இருக்கும்.


வானவியலாளர் கூறுவது போல, சூரியன் மிகப்பெரிய சிவப்பு அரக்கன் ஆகிவிடும். பூமியில் அப்போது வாழ்க்கை நரகமாகிவிடும். இதன் விளைவாக பூமியின் கடல்கள் அனைத்தும் பனிக்கட்டிகளாக உறைந்துவிடும். காற்றழுத்த வளிமண்டலம் திரவக்காற்றாகிவிடும். இந்த நிலையில் பூமியில் உயிர்ப்பொருட்கள் ஏதும் இருக்காது.  சூரியனும் சிறுகச் சிறுக ஒளி மங்கி, ஒரு வெள்ளை நட்சத்திரமாக சுருங்கிவிடும். நாளடைவில் அது நட்சத்திர பிசாசுகளில் ஒன்றாகி, புவியில் அலையத் தொடங்கும். எனவே இன்னும் 500 கோடி ஆண்டுகளில் மனிதக்கூட்டம் அனைத்தும் இந்த உலகத்திலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.


இவ்வுலகின் படைப்புகளில் மிக முக்கிய படைப்பு மனிதன். அறிவின் துணை கொண்டு மனிதன் இவ்வுலகத்தில் தினம் தோறும் பற்பல ஆச்சரியங்களை உருவாக்கி வருகின்றான். மனிதர்கள் சிறப்பாய் இருப்பதற்காக இந்த பூமியின் மேற்பரப்பிலுள்ள அனைத்து வளங்களையும் இன்று நாம் பயன்படுத்தி வருகின்றோம். இப்பூமி எல்லையை கடந்து சந்திரனிலிருந்து ஹீலியம் மற்றும் இதர கனிம வளங்களையும் கொண்டு வந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றோம். நாம் வாழும் இந்த பூமியின் இறுதிக்காலம் நாம் முன்பு சொன்னபடி 550 கோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஏற்படும். ஆனால் பல இடை நிகழ்ச்சிகள் மனித வாழ்க்கையை இவ்வளவு காலத்துக்கு நீடிக்க விடாமல் அழித்துவிடலாம். சூரியன் மற்றொரு நட்சத்திரத்தோடு மோதலாம். சிறு கோள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு அதன் பாதையை விட்டு பூமியின் மேல் வந்து விழலாம் அல்லது ஏதாவது ஒரு நட்சத்திரம் தற்செயலாக சூரிய குடும்பத்தில் புகுந்து கோள்களின் சுற்றுப்பாதையை மாற்றி பூமியை வாழத் தகாத ஒரு கோளாக்கி விடலாம்.
இது எப்போது, எப்படி நிகழும் என்பதைக் கண்டுபிடிப்பது விஞ்ஞானத்துக்கே பிடிபடாத ஒரு விஷயம். அதனால் என்ன.. தற்போதைய கணக்குப் படி இன்னும் 10,000 மில்லியன் ஆண்டுகளுக்கு பூமிக்கு அழிவே இல்லை என்பது மட்டும் நிஜம். எனவே, மனிதர்கள் தங்களின் ஒளிமயமான எதிர்காலத்தை தைரியமாக திட்டமிட்டு வருங்காலத்தை வசப்படுத்தலாம்

(முற்றும்)