Friday 19 January 2018

சிறுபான்மையினர்

எப்போதும்
ஒரு வேண்டாத கிருமியை
துரத்துவது போல
விரட்டுகின்றனர்.
தேசப்படங்களின்
கோடுகளைத் தாண்டி
நாங்களும்
எப்போதும் போல
ஓடிக்கொண்டேயிருக்கிறோம்.
கால்கள் துவளும்போது
ஏதாகிலும் ஓர்
எல்லைக் கோட்டருகில்
விழுந்து கிடக்கிறோம்.
அவர்கள் விடுவதாயில்லை.
வலிய இழுத்துக் கொண்டுபோய்
இன்னொரு
கோட்டுக்கு பக்கத்தில்
தள்ளுகின்றனர்.
அங்கும் வந்து
பிறாண்டி இழுக்கிறது
சில எல்லைப்புற நாய்கள்.
அதன் கூர் நகங்களுக்கு தப்பி
கோட்டுக்குள்ளே போனால்
அழகான விசாரிப்புகளுடன்
மீண்டும்
கோட்டுக்கருகிலேயே
கொண்டு வந்து விடப்படுகிறோம்.
எவ்வளவு தான்
மன்றாடியும்
அவர்களால் சொல்ல முடிந்தது
இது தான்.
நீங்கள் சிறுபான்மையினர்.

No comments:

Post a Comment