Sunday 21 January 2018

அகதிகள் தேசம்


நமக்கென்றொரு பூமி
எமக்கென்றொரு நாடு

உறங்க நினைத்தால்
படுத்துவிட
சில அடி நிலம்.
பசியெடுத்தால்
பிய்த்துத் தின்ன
காய்ந்த ரொட்டித்துண்டின்
பாகம் சில.
புணர்வதற்கும்
புரிந்து கொள்வதற்கும்
ஒரு சக தோழி.
மொழி கிடக்கட்டும்
சைகையை
புரிந்து கொள்ளவாவது
சில மனிதர்கள்.


நமக்கென்றொரு பூமி
எமக்கென்றொரு நாடு

No comments:

Post a Comment