Thursday, 8 March 2018

நாமும் இப்படித்தான்…?


கரைபுரளுது காட்டாற்றில் தண்ணீர்
ஆற்றங் கரையினிலே நான்
ஆற்றுக்குள்ளிருந்து உயிருக்கான அபயக்குரல்
உடனே குதித்து அந்த மனிதரைக்
காப்பாற்றிக் கரை சேர்க்கிறேன்
முதலுதவி
அவர் மூச்சு விடத் தொடங்கியதும் தான் தாமதம்
ஆற்றுக்குள்ளிருந்து இன்னுமொரு மரண ஓலம்
உடனே குதித்து அந்த மனிதரையும்
காப்பாற்றிக் கரை சேர்க்கிறேன்
முதலுதவி
அவர் மூச்சு விடத் தொடங்கியதும் தான் தாமதம்
ஆற்றுக்குள்ளிருந்து மறுபடியும் மரண ஓலம்
இப்படியே தொடருது நான்
ய்ந்து விழும்வரை.
மூழ்கினவர்களையெல்லாம் காப்பதிலேயே
என் முழுக் கவனமும் இருந்ததால்
எவன்/எது இப்படி
ஆற்றின் கரையில் இருந்தபடி
அப்பாவிகளை எல்லாம் ஆற்றில் தள்ளிவிட்டு
சாகடித்து வேடிக்கை பார்க்கிறது
என்பதை கவனிக்க எனக்கு
நேரமில்லாமலே போய் விட்டது.

இர்விங் ஜோலா

நன்றி : தலித் இதழ்

No comments:

Post a Comment