ரிச்சர்ட் மைனிக் (Richard Mynick)
பிரபல பேரகராதியில் "ஓவெல்லியன்" எனும் வார்த்தை
முதன்முதலில் சேர்க்கப்பட்டதிலிருந்து, அது "சர்வாதிபத்திய அரசின்" ஒரு முன்மாதிரியைக் கண்முன்னால்
கொண்டு வந்துவிடுகிறது: அதாவது, இரகசிய போலிஸூடன்
இணைந்தியங்கும், தனது சொந்த மக்களையே ஒற்று பார்க்கும்,
விருப்பப்படி கைது செய்யும், கைதிகளை
சித்திரவதை செய்யும், யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தி
கொண்டே இருக்கும், விரும்பத் தகுந்தவைகளை மட்டும் வரலாறாக
திருத்தி எழுதும், தனது சொந்த உழைக்கும் மக்களை வறுமையில்
தள்ளும், இரட்டை நிலைப்பாட்டு (Doublethink) அரசியல் விளக்கங்களில் வேரூன்றிய ஒரு கட்சி சர்வாதிகாரமாகும். இரட்டை
நிலைப்பாடு என்பது, ஒரே நேரத்தில் இரண்டு முரண்பட்ட
நம்பிக்கைகளை ஒரே நேரத்தில் ஒருவரின் மனதில் கொண்டிருக்கும் சக்தியை கொண்டதும்,
அவை இரண்டையும் ஏற்றுக் கொள்வதுமான சிந்தனை முறையாகும்."
இருபதாம் நூற்றாண்டு மத்தியில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஆங்கில நாவல்களில் ஒன்றான Nineteen Eighty-Four நாவலில் ஜோர்ஜ் ஓவெல், நிலைப்படுத்தி காட்டியிருந்த, “ஒஷியானியாவின்” (ஜோர்ஜ் ஓவெலின் 1984 நாவலில் குறிப்பிடப்படும் பிராந்தியம்) இந்த நிரந்தரமான எதிர்காலத்தின் படுமோசமான நிலைமையை அமெரிக்கர்கள் பலர் எளிமையாக உணரக்கூடும்.
தங்களின் சொந்த சமூகத்திற்கு இந்த நிலைமை பொருந்தும் என்பதை பல அமெரிக்கர்கள் ஏற்று கொள்கிறார்களா இல்லையா என்பது, வேறு விஷயம். ஆனால் 2000ஆம் ஆண்டு தேர்தலை களவாடியதிலிருந்தே--இது 9/11 தாக்குதல்கள், போலியாக எடுத்துக்காட்டப்பட்ட "WMD"-இன் (பேரழிவு ஆயுதங்கள்) அடிப்படையில் ஈராக் தாக்குதல், சித்திரவதை துஸ்பிரயோகங்கள், 2008 நிதி நெருக்கடி போன்ற நிகழ்வுகளால் குறிக்கப்பட்ட காலம்--பெருமளவிலான அமெரிக்கர்கள் தொடர்ந்து இதனால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஒரு புள்ளியாக உள்ளது.
அதிகரித்து வந்த பனிப்போர் பதட்டங்களுக்கு இடையில், Nineteen Eighty-Four நாவல் ஜூன் 1949-இல் பிரசுரிக்கப்பட்டது. பெரும்பாலான மேற்கத்திய வாசகர்களுக்கு, அப்போதைய கம்யூனிச எதிர்ப்பின் அரியமாக (Prism) அந்த புத்தகம் விளக்கமளிக்கப்பட்டது.
அந்த நாவலின் போலிஸ் அரசு ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த ஒத்த தோற்றத்தை வெளிப்படையாகத் துருவிக்காட்டியது. ஸ்ராலினிசத்திற்கு முற்றிலும் விரோதமாக தன்னைத்தானே ஜனநாயக சோசலிசவாதி என்று கூறிக்கொண்ட ஓவெலிடமிருந்து வந்த இந்த வெளிப்பாடு, ஆச்சரியமூட்டவில்லை. சோசலிசத்துடன் இருந்த ஸ்ராலினிசத்தின் வெவ்வேறு ஆக்கக்கூறுகளில் ஓவெல் மிகவும் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். (சான்றாக, அவர் எழுதுகையில், "என்னுடைய சமீபத்திய நாவல் ['1984'] சோசலிசத்தின் மீதான ஒரு தாக்குதலை நோக்கம் கொண்டதல்ல... மாறாக, அது நெறிப்பிறழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது... இது ஏற்கனவே கம்யூனிசத்திலும், பாசிசத்திலும் சிறிது உணரப்பட்டுள்ளது..." [1]), அவருடைய பனிப்போர் சகாப்த வாசகர்கள் பெரும்பாலும் இந்த வேறுபாட்டை அறியாமல் இருந்தார்கள். அவருடைய எச்சரிக்கை குறிப்புகள் ("ஆங்கிலம் பேசும் இனங்கள் ஏனையவைகளை விட சிறந்தவையல்ல என்பதையும்... சர்வாதிபத்தியம் (Totalitarianism) எங்கு வேண்டுமானாலும் வெற்றியடையக்கூடும் என்பதையும் வலியுறுத்த... அந்த புத்தகத்தின் காட்சி பிரிட்டனில் அமைக்கப்பட்டது") பெருமளவிற்கு கவனிக்காமல் விடப்பட்டன. மேலும் அந்த நாவலின் எச்சரிக்கை செய்யும் குறிப்புக்கள் ("எதிர்காலத்தைப் பற்றிய ஒரு வரைபடத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், எப்போதும் ஒரு மனித முகத்தில் ஒரு காலணித்தடம் பதிக்கப்பட்டிருப்பதைப் போல கற்பனை செய்து பாருங்கள்"), பொதுமக்கள் எண்ணத்தில், முக்கியமாக மேற்கத்திய-பாணியிலான முதலாளித்துவ "ஜனநாயகங்களின்" எதிரிகளாக பார்க்கப்பட்ட அரசியல் அமைப்புமுறைகளோடு அதை கொண்டு வந்து சேர்த்தது. (2)
இருப்பினும், Nineteen Eighty-Four நாவல் மேற்கில் ஆதரவைப் பெறவில்லை. தன் சொந்த நலன்களுக்காக ஆளுகின்ற, மற்றும் அதன் அதீத தர்க்கத்திற்கேற்ப மனங்களை அரசு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து அதிகாரத்தைத் தக்க வைக்கும் ஒரு புதிரான மேற்தட்டை அது எடுத்துக்காட்டுகிறது. சுரண்டும் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக, செயல்முறைவடிவில் மக்களைக் கட்டாயப்படுத்துவதில் எது தொடர்புபட்டிருக்கிறது என்பதை, பொதுவான பொருளாதார அமைப்பு வடிவத்தைச் சாராமல், அது ஆராய்கிறது. சற்று வித்தியாசமாக கூற வேண்டுமானால், ஓர் ஆளும் அதிகாரத்துவத்திலிருந்து தொடங்குகிறதா அல்லது நிதி மூலதனத்திலிருந்து தொடங்குகிறதா என்பதைச் சாராமல், ஒரு புதிரான அரசு அதிகாரத்தின் சமூக-உளவியல் இயந்திரத்தை அந்த புத்தகம் எடுத்தாண்டுள்ளது. மேலும் வெவ்வேறு ஒடுக்குமுறை வடிவங்களின் மூலமாகவும், மக்களின் நனவை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் மட்டுமே உயர்ந்த சமத்துவமற்ற சமூகத்திற்குள் சமூக ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முடியும் என்ற பொதுவான பிரச்சினையை அது வெளிப்படுத்திக் காட்டுகிறது.
கொடூரமான கொடுங்கோல் ஆட்சிகள் ஒடுக்குமுறையைத் தான் முதன்மையாக சார்ந்திருக்கும். நவீன கொடுங்கோல் ஆட்சிகள் நனவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நுட்பமான கருவிகளைக் கையாளுகின்றன. முறைப்படி, நனவானது சமுதாயத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் மொழியோடு ஆழமாக பிணைந்துள்ளது. ஒஷியானியாவும், அமெரிக்காவும் நனவின் நவீன வடிவங்கள். இதனால் தான் இந்த இரண்டு சமுதாயங்களும் தொடர்ந்து அவற்றின் மையப் பாத்திரங்களை பகிர்ந்து கொள்கின்றன என்பதோடு, மொழி, நனவு, இணங்கி நடத்தல் மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளுக்குள் இருக்கும் அதன் ஆழமான பார்வைக்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் காலத்தின்போது பொருந்தியதைவிட, Nineteen Eighty-Four நாவலானது, அதன் வாசகர்களுக்கு 2010இல் மிக அதிகமாக பொருந்துகிறது.
ஓவெல்
காலத்திய ஒஷியானியாவில், சமூக-உளவியல் இயந்திரம் ஓரளவு பின்வருமாறு
இருந்தது: அனைத்து அதிகாரங்களும் Partyஇன் (ஒஷியானியாவில்
இருந்த கட்சியின் பெயர்) கரங்களில் இருந்தன. தொடர்ச்சியான யுத்தம் தான் அரசு
கொள்கையின் முக்கிய உந்து விசையாக இருந்தது. ஊடகமென்பது அரசு பிரச்சாரத்திற்கான
ஒரு வாய்க்காலாக இருந்தது. மக்கள் இரகசிய போலிஸின் தொடர் கண்காணிப்பில்
வைக்கப்பட்டிருந்தார்கள். Thought Police (சிந்தனைக்குற்றம்)
(நாவலில் அரசாங்க கட்டுப்பாடுகளைத் தாண்டிய சிந்தனை இவ்வாறு அழைக்கப்பட்டது)
மூலமாகவும் சாத்தியப்படாத வகையில், சிந்தனைகளைக்
குறுகச்செய்யும் நோக்கத்தில் ஒரு புதிய மொழியான நியூஸ்பீக்கை (Newspeak) அபிவிருத்தி செய்ததன் மூலமாகவும் வேறுநம்பிக்கையுள்ள (சிந்தனைகளை
நெறிப்படுத்த தேவையான கட்டமைப்பே அந்த மொழியில் இருக்காது) மக்கள் தொடர்ச்சியாக
கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்கள்.
கொடூரமான தேசியவாதம் மற்றும் யுத்தம் விரும்பும் சோவனிசத்தை (Chauvinism) தூண்டிவிட, கைதிகளைப் பொதுவிடத்தில் தூக்கிலிடுதல் மற்றும் "இரண்டு நிமிட வெறுப்பு நேரம்" (Two minutes Hate - கட்சியின் எதிரிகளைக் குறிப்பிட்டுக் காட்டி, வெறுப்பை எடுத்துரைக்கும் படங்களை கட்சி உறுப்பினர்கள் பார்க்க வேண்டிய தினசரி நேரம்) போன்ற சடங்குகளை அரசு கொண்டிருந்தது. ஓவெல்லின் நாவலில் "Proles" என்றழைக்கப்படும் ஒஷியானியா மக்கள்தொகையில் 85 சதவீதத்தினரான பாட்டாளி வர்க்கம் அதன் அரசியல் நனவை அபிவிருத்தி செய்யாமலிருக்க, மனதை-மரத்துப் போக செய்யும் ஊடக திசைதிருப்புதல்களில் (முக்கியமாக விளையாட்டுக்கள், குற்றங்கள், இலாட்டரி, மற்றும் பாலியல் போன்றவற்றில்) மூழ்கடிக்கப்பட்டிருந்தது. "அதை தவிரவும் வேறு உலகம் இருக்க முடியும் என்பதை உள்வாங்கும் சக்தி கூட இல்லாத அளவிற்கு" அந்த தொழிலாள வர்க்கம் இவ்வாறு வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், Party உறுப்பினர்கள் (மொத்த மக்கள்தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த உள்கட்சி (Inner Party) மற்றும் குறைவான அதிகாரங்களைக் கொண்ட கட்சி அங்கத்தவரற்ற (Outer Party) இரண்டின் உறுப்பினர்களும்) சிந்தனைக்குற்றத்தில் (Thoughtcrime) ஈடுபடாமல் இருக்க, அவர்கள் இரட்டை நிலைப்பாட்டில் (Doublethink) நிபுணத்துவம் பெற வேண்டி இருந்தது. நாவலில் வரும் Party இன் உறுப்பினர் ஒருவர், "விரோதம் கொண்ட வெளிநாட்டு எதிரிகளின் தொடர்ச்சியான ஆத்திரத்திற்கு ஊடாகவும், உள்ளேயிருந்த உளவாளிகள் மத்தியிலும், அதேசமயம் வெற்றிகளால் கிடைக்கும் சந்தோஷத்தோடும், Party இன் அதிகாரம் மற்றும் அறிவுநுட்பத்திற்கு முன்னால் தலைகுனிந்தும் வாழ வேண்டி இருந்தது." தங்களின் சிந்தனைகளைச் சுயமாக நெறிப்படுத்தும் திறமையற்றவர்கள், இதனால் மரபுகளுக்கு அஞ்சியதுடன், படிப்படியாக மக்கள் கூட்டத்திலிருந்தே விலக்கப்பட்டார்கள். கீழ்ப்படியாதவர்களின் மனிதத்தன்மையை நசுக்க வடிவமைக்கப்பட்ட விஞ்ஞானரீதியான வழிகளில், அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
2010இல் இது எவ்வாறு அமெரிக்காவில் செயல்படுகிறது மேலே குறிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தற்போது, 2010இல், அமெரிக்க சமுதாயத்தில் வாழ்கிறார்கள். சிலர் முழு-வீச்சில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மிக ஆரம்ப வடிவத்தில் (பரிணமித்து வரும் நிலையில்) இருக்கிறார்கள். இதற்கு இணையாக இருக்கும் பல நவீன-காலத்தவர்களின் ஒரு முழுமையான பட்டியலை எழுதினால், அதுவொரு முழு புத்தகத்தையே நிரப்பிவிடும். ஒஷியானியாவில் எதிரிடையான பொருளில் பெயரிடப்பட்ட "அமைதிக்கான அமைச்சகம்" என்பது அமெரிக்காவின் "பாதுகாப்புத்துறை" என்பதன் ஓவெல்லியனில் இடக்கரடக்கல் சொல் என்பதைவிட வேறொன்றுமல்ல என்பது போன்ற சிறிய தகவல்களைக் கூட அதுபோன்றதொரு புத்தகம் சேர்த்து கொண்டிருக்கும்.
"மரபுசாரா சிந்தனைகள்" (அதாவது, தற்போதிருக்கும் அரசியல்சார்-பொருளாதார அமைப்புமுறை மீதான பகுந்தறிவார்ந்த விமர்சனங்கள்) அபிவிருத்தி அடைய தேவையான கருத்துருக்கள் மற்றும் முன்னோக்குகள் குவிவதைத் திட்டமிட்டு தடுக்க முயற்சிக்கும், பல வழிகளில் Newspeak இன் ஒருவகையாகவே செயல்படும் அமெரிக்க ஊடகத்தைப் போலவே, அமெரிக்கா பல கணிசமான சமாந்திரத்தை உட்கொண்டிருக்கிறது. முக்கியமாக, சர்வதேச நிதி நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு இழப்புக்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான இழப்பைச் செலுத்த வேண்டும் என்ற கொள்கையை, பாதிக்கப்பட்டவர்கள் மீது (அதாவது ஏறத்தாழ ஒட்டுமொத்த மக்களின் மீதும்) அவர்களாலேயே "ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால்" திணிக்கப்பட வேண்டும் என்ற வோல்ஸ்ட்ரீட் பிணையெடுப்பை அடிக்கோடிடும் தர்க்கத்தையும் இது உட்கொண்டிருக்கிறது. (மார்க்ஸ் : "ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒடுக்கும் வர்க்கத்தின் எந்த குறிப்பிட்ட பிரதிநிதிகள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், ஒடுக்க வேண்டும் என்பதை ஒடுக்கப்பட்டவர்களே முடிவெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.")
ஓவெல் ஓர் எதிர்கால புனைவை உருவாக்கியதிலிருந்தும், நிபந்தனைக்குட்பட்ட முதலாளித்துவ "ஜனநாயகத்தின்" மேற்கு வடிவங்கள், ஒவெல்லியன் பாணியிலான கொடுங்கோலாட்சிக்கு எதிரான தடைச்சுவராக கருதப்பட்டதிலிருந்தும், இந்த சில தசாப்தங்களில் நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை அடிக்கோடிடும் சில சமாந்திரங்கள் கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
பாசிச ஜேர்மனி அல்லது இத்தாலி விஷயத்திலும், அல்லது சோவியத் ஒன்றியத்தில் ஒரு புரட்சிக்கு எதிரான அதிகாரத்துவம் அதனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட விஷயத்திலும் தொழிலாள வர்க்கம் அனுபவித்து வந்த நிலைமைகள் ஒரு வரலாற்று ரீதியான தோல்வி என்பதை ஓவெல் தம் மனதில் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். விஷயங்கள் ஒரு குழப்பமான விதத்தில் நிகழ்ந்தாலும் கூட, இன்று அமெரிக்காவில் விஷயங்களைப் பார்க்கும் உத்தியோகபூர்வ பார்வை அதிகளவில் வாதத்திற்குட்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றன. அமெரிக்க ஆட்சியாளர்களின் அதிகார ரீதியான நோக்கங்களையும், ஆசைகளையும் பொறுத்த வரையில், ஓவெலின் கருத்தில் எதையுமே நிச்சயமாக மாற்ற வேண்டியதிருக்காது.
தொடர் யுத்தம் (Perpetual War) : ஒஷானியாவில் போலவே, இன்றைய அமெரிக்காவிலும் ஓர் இடைவிடாத யுத்த நிலைமை நிலவுகிறது. அதாவது, இரண்டு சமுதாயத்தினாலும் வெகு "சாதாரணமாக" ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நிலைமையாக உள்ளது. முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி சென்னி பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தம் "ஒருபோதும் முடிவுக்கு வராது. குறைந்தபட்சம் எங்களுடைய காலத்தில் முடிவுக்கு வராது" என்று 2001இல் தெரிவித்தார். இதற்கு பெரு முதலாளித்துவ கட்சியிடமிருந்தோ அல்லது பெருநிறுவன ஊடகத்திடமிருந்தோ மறைமுகமாக கூட எந்த சத்தமும் வரவில்லை. இன்றைய வரைக்கும் இந்த கருத்து கேள்விக்குட்படாமலேயே போய்விட்டது. சென்னி அந்த கருத்தைத் தெரிவித்ததில் இருந்து, அதற்கு பின்னர் நடந்த நான்கு தேசிய தேர்தல்களிலும் கூட, இந்த தொடர் யுத்தம் பற்றிய பிரச்சினை போதிய முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படவில்லை.
சமுதாயத்தின் வர்க்க கட்டமைப்பை தக்க வைப்பதற்கான யுத்தம்: அவருடைய "கோல்ட்ஸ்ரைன்" என்ற கதாபாத்திரம் (ஓரளவிற்கு இது ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுரீதியான பாத்திரத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டிருந்தது) மூலமாக பேசுகையில், ஓவெல் எழுதினார்: "யுத்தமானது, ஒவ்வொரு ஆளும் குழுவினாலும் அதனால் ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டது. யுத்தத்தின் நோக்கம் அரசுகளை வெற்றி கொள்வதோ அல்லது அதை தடுப்பதோ அல்ல, மாறாக சமுதாயத்தின் கட்டமைப்பைச் சேதப்படுத்தாமல் தக்க வைப்பதற்காகவே அது நடந்தது. ஆனால் உண்மையான தன்மையில், யுத்தத்தில் சிறிய எண்ணிக்கையிலானவர்களே, அதாவது பெரும்பாலும் நன்கு-பயிற்சியளிக்கப்பட்ட நிபுணர்களே பங்கெடுப்பதுடன், ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்... ஆனால் அதே நேரத்தில் யுத்தத்தில் இருக்கிறோம் என்ற நனவு அபாயத்திற்குட்பட்டுளதுடன், அனைத்து அதிகாரத்தையும் ஒரு சிறிய குழுவிடம் ஒப்படைப்பது என்பது உயிர்வாழ்வதற்கான இயற்கையானதும் மற்றும் தவிர்க்க முடியாததுமான நிலைமையாகின்றது." 37
இந்த கருத்துக்கள், முறையே, அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும்"; "சிறப்பு படைகள்" மற்றும் ஆளில்லா ஏவுகணை தாங்கிய கண்காணிக்கும் விமானம் (predator drones) என்றழைக்கப்பட்டதை பயன்படுத்துவதிலும்; மற்றும் பயவுணர்வை ஏற்படுத்துவதும் மற்றும் அச்சுறுத்தும் பிரச்சாரங்களோடு தொடர்புபட்ட கொடூரங்களுக்கும் மிகச் சரியாக பொருந்துகின்றன. உண்மையில் அமெரிக்காவின் யுத்தம், பிராந்திய நலனை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதை விடுத்து, குறிப்பாக, எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களை அல்லது எண்ணெய் குழாய் பாதைகளின் ஆக்கிரமிப்பு மற்றும்/அல்லது இராணுவ தளங்களை அமைப்பதற்காக மூலோபாய மதிப்பு ஆக்கிரமிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது என்ற ஒரேயொரு வாசகம் மட்டும் குறைந்தபட்சம் மாற்றப்பட வேண்டியதாக உள்ளது. இந்த விதிவிலக்கும் கூட, "யுத்தத்தின் நோக்கம் [குறைந்தபட்சம் ஒரு பகுதியாகவாவது] சமுதாயத்தின் கட்டமைப்பை சேதமுறாமல் தக்கவைப்பதற்காக நடத்தப்படுவது" என்ற, மற்றும் "யுத்தமானது, ஒவ்வொரு ஆளும் குழுவினாலும் அதன் சொந்த மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டது" என்ற ஓவெல்லின் புள்ளிகளை, எந்த வகையிலும் மதிப்பிழந்துவிடச் செய்யவில்லை. 36
ஒரு-கட்சி ஆட்சி: ஒஷானியாவைப் போன்றே, அமெரிக்காவிலும் வடிவத்தில் ஒரே-கட்சி ஆட்சி நிலவுகிறது. அதன் இரு பெரு வர்த்தக கட்சிகளும், தவறாக இரண்டு "எதிரெதிர்" கட்சிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. உண்மையில், பொருளாதார முக்கியத்துவம் மற்றும் மூலவள பயன்பாட்டின் அனைத்து விஷயங்களிலும், எவ்வித கேள்வியுமின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரே நிஜமான கட்சியான --நிதியியல் மேற்குடியின் மென்மையான-- வார்த்தைஜால மற்றும் கடுமையான-வார்த்தைஜாலங்களை காட்டுவதைவிட அவை வேறொன்றும் செய்யவில்லை. ஒரு-கட்சி ஆட்சியின் அமெரிக்க மாற்றுரு உண்மையில் ஒஷானியாவின் மாற்றுருவை விட மிக அபாயகரமான ஓவெல்லியனாக இருக்கிறது. ஏனென்றால், ஆழமில்லாத ஏதோவொன்றை அது மேலோட்டமாக காட்டுகிறது. குறைந்தபட்சம், ஒஷானியாவிலாவது ஜனநாயகத்தின் நடிப்பைக் குறித்து கவலைப்படாத "நேர்மை" இருந்தது. 35
அமெரிக்கா ஒரு "ஜனநாயக நாடு" என்பதற்கு "சான்றாக", குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயக் கட்சியினருக்கும் இடையிலான குறைந்தளவிலான வித்தியாசங்களை-பெரும்பாலும் வார்த்தைஜால வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான நிகழ்வுகள் சகிக்கமுடியாத குறைபாடுகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக இந்நிலைமை ஏற்கப்பட்டிருப்பதால், (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிதமிஞ்சிய வலிமையையும், AFL-CIO மற்றும் பல்வேறு "இடது" சக்திகள் ஆற்றிய பங்களிப்பையும் கணக்கிலெடுத்து கூறுவதானால்) பெருந்திரளான மக்களின் நனவை வடிவமைப்பதிலும், ஆதிக்கம் செலுத்துவதிலும் இவை உத்தியோகப்பூர்வ அரசியல் கலாச்சாரத்தின் அதிகாரத்திற்குச்சான்றுகளாக உள்ளன. (மார்க்ஸ்: "ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் கருத்துக்களாகவே இருக்கின்றன.") 34
அரசு பிரச்சாரத்திற்கான வடிகாலாக விளங்கும் ஊடகம்: ஒஷியானியாவில் இருந்தது போன்றே, இன்றைய அமெரிக்க ஊடகமும் அரசு பிரச்சாரத்திற்கான முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. கடந்த தசாப்தங்களின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய செய்தி சேகரிப்பு குறித்த சுருக்கமான ஆய்வு ஒன்றே, இந்த பாத்திரத்தைப் போதுமான அளவிற்குத் தாங்கிப் பிடிக்கும். மேலும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் இந்த நடவடிக்கையின் கணக்கிலடங்கா சான்றுகளை அள்ளித் தருகின்றன. ஒஷியானியாவின் தொலைக்காட்சித்திரையானது, தொடர்ந்து இரும்பு உற்பத்தி உயர்வுகள் மற்றும் சாக்லெட் வினியோகம், "மலபார் போரரங்கின் கதாநாயகர்களால்" வெல்லப்பட்ட பிரமாண்டமான வெற்றிகள் பற்றிய வெற்றி அறிக்கைகளின் கலவைகள் போன்றவற்றைத் தாங்கிப்பிடித்தது. 33
இவற்றிற்கும், அமெரிக்க செய்தி நிகழ்ச்சிகளுக்கும் இடையில் சிறிது வேறுபாடு உண்டு (ஒருவேளை விளம்பரங்கள் இல்லாமல் இருந்தது, இவற்றின் வலுக்கட்டாயமான உற்சாகம் ஒஷியானியாவில் வெளியான வீர "செய்தி வெளியீடுகளை" விட, ஒரு துடிப்பான ஒலியை உண்டாக்குகின்றன). ஈரானில் ஒரு சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட தேர்தல் குறித்த தொடர்ச்சியான "அட்டூழியத்தை" 2009 இல் அமெரிக்க ஊடகம் வெளிப்படுத்தியது. ஆனால் அதில் தேர்தல் மோசடி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த முக்கிய ஆதாரமும் அளிக்கப்படவில்லை; அதுவே, 2000இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த வெளிப்படையான மோசடிகளை, இந்த ஊடக வடிகால்கள் ஒன்று கூட ஒப்பு கொள்ளவில்லை. (உண்மையில், வன்முறை இல்லாமல் அதிகாரம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில்--வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குடிமக்களின் எதிர்ப்பில்லாமல் மேற்தட்டுக்களால் தேர்தலை வென்றெடுக்க முடிந்தது என்பதன் அடிப்படையில்--"இந்த அமைப்புமுறை சரியானதே" என்பதற்கு ஆதாரமாகவே 2000 தேர்தலின் விளைவு அமைந்திருக்கிறது என்று அவை ஒருமித்து பாராட்டின.) 32
கண்காணிப்பு: நாவலின் இரண்டாவது பக்கத்தில், நமக்கு Thoughtpolice அறிமுகப்படுத்தப்படுகிறது. "எந்தளவிற்கும் அல்லது எந்த முறையிலும், எந்தவொரு தனிநபரின் தொலைதொடர்பு கம்பியிலும் Thoughtpolice குறுக்கிடுவதாக நாவலில் புனையப்பட்டிருந்தது. எல்லா நேரத்திலும் ஒவ்வொருவரையும் அவர்கள் கண்காணித்ததாக கருதக்கூடிய அளவிற்கு இருந்தது." ஏறத்தாழ 2004இல் இருந்தே, அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆணையம் போன்ற அமைப்புகளால் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தொலைதொடர்புகளின் மீது அவற்றின் பெரும் மறைமுக கண்காணிப்புகளுடன் இதேபோன்ற கண்காணிப்பு செயல்பாடுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் 2004இல் இருந்து நடந்த மூன்று தேசிய தேர்தலில்களில் ஒன்றில் கூட இந்த பிரச்சினை குறிப்பிட்டுக்காட்டப்படவில்லை. நியூயோர்க் டைம்ஸ் திட்டமிட்டே, 2004 தேர்தலுக்கு முன்னர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் மறைமுக கண்காணிப்பு திட்டங்கள் மீது ஓர் அறிக்கையை தயாரித்தது (புஷ் நிர்வாகத்தின் ஒரு கோரிக்கைக்கு உடன்பட்டு இதை செய்தது). இறுதியாக அந்த செய்தியிதழ் ஓர் ஆண்டுக்கு பின்னர் அதை "வெளியிட்டது" (ஏனென்றால், இது குறித்து ஜேம்ஸ் ரிசனினால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளிவருவதாக இருந்தது. டைம்ஸ் செய்தியாளராக இருந்த இவருடைய செய்தியை அந்த இதழ் வெளியிடாமல் மறைத்திருந்தது). 31
மக்களின் அரசியல் நனவை முடமாக்கும் மேற்தட்டால் வழிநடத்தப்படும் கலாச்சாரம்: மக்களின் அரசியல் நனவை முடமாக்குவதற்கான ஒரு கருவியாக மக்களின் கலாச்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்கும் ஓவெல்லின் கண்ணோட்டத்தை, அமெரிக்க ஆளும் மேற்தட்டின் முயற்சிகளில் உணரலாம். "விளையாட்டு, குற்றங்கள், ஜோதிடம், உணர்வைத்தூண்டும் நாவல்கள்.... காமத்துடன் கூடிய திரைப்பட காட்சிகள்... (மற்றும்) மலிந்த இழிபொருள் இலக்கியம் ஆகியவை தவிர ஏறத்தாழ வேறெதையும் கொண்டிராத வெற்று செய்தியிதழ்களையும்," லாட்டரியையும் முக்கிய மனதைத் திசைதிருப்பும் கருவிகளாக அவர் பெயரிட்டுக்காட்டினார். பிரபலங்களைப் பற்றிய வதந்தி மற்றும் பங்குச்சந்தை வெற்றுப்பேச்சு போன்ற முக்கிய பிரிவுகளையும் அவர் முன்கூட்டியே கணித்தார். அவை குறிப்பிடத்தக்களவில் துல்லியமாகவே இருந்தன. பிரபலங்களைப் பற்றிய இதழ்களை வாசிக்கும் மற்றும் பொழுதுபோக்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்கள், அவர்களின் வாழ்க்கைத் தரங்களை கீழுக்குக் கொண்டு செல்லும் சமூக சக்திகளைப் புரிந்து கொள்வதில் மிகவும் பின்தங்கி விடுகிறார்கள். இதனால் அவர்களால் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ளவும் முடியாமல் போகிறது. 30
தலைவர் வழிபாடு: நாவல், பொலிவற்ற "எதிர்கால" இலண்டனில் ஏப்ரல் 1984இல் அமைக்கப்படுகிறது. "விக்டரி மேன்சன்ஸ்" என்றழைக்கப்படும் ஒரு சிதைந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து கொண்டிருக்கும் ஓவெல்லின் முக்கிய கதாப்பாத்திரமான வின்ஸ்டன் ஸ்மித், வேக வைத்த முட்டைகோஸை முகர்ந்து பார்க்கிறார். "ஒரு பெரிய கரும்மீசையுடனும், கரடுமுரடான தோற்றத்துடனும் கூடிய சுமார் நாற்பத்தி ஐந்து வயது மதிப்புடைய ஒரு மனிதரின் பெரிய முகத்தை" எடுத்துக்காட்டும் பெரிய வண்ண சுவரொட்டி ஒன்று, கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணில்படும் வகையில் இருப்பதாக காட்டப்படுகிறது. நாவலில் வரும், சேதமடைந்த இலண்டனில் பிக்பிரதரின் (Big Brother) (ஓஷியானியாவின் சர்வாதிகாரி பாத்திரம்) சுவரொட்டிகள் எங்கெங்கும் ஒட்டப்பட்டிருப்பது குறித்து 2010இல் படிக்கும் போது, இன்று வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்க நகரங்கள் முழுவதும் காணக்கிடைக்கும், "பாரக் ஒபாமாவின் நம்பிக்கை" சுவரொட்டிகளைக் குறித்து ஒருவரால் சிந்திக்காமல் இருக்க முடியாது. 29
"இது Party தன்னைத்தானே உலகிற்கு காட்டிக்கொள்ள தேர்ந்தெடுக்கும் புறத்தோற்றமாகும். ஒரு நிறுவனத்தை விட ஒரு தனிநபரைச் சார்ந்து சாதாரணமாக காணக்கூடிய அன்பு, அச்சம், செல்வாக்கு, உணர்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் அதன் செயல்பாடுகள்" என்பதாக பிக் பிரதர் வர்ணிக்கப்படுகிறது. இந்த வரிகள் தான் 2008இல் அமெரிக்க வாக்காளர்களிடம் ஒபாமாவை--வோல் ஸ்ட்ரீட்டின் வேட்பாளர்--விற்க பயன்படுத்தப்பட்ட முக்கிய மக்கள்தொடர்பு மூலோபாயமாக இருந்தது. உண்மையில், யாருடைய நலன்களை முக்கியமாக ஒபாமா பிரதிநிதித்துவப்படுத்துகிறாரோ அந்த வங்கிகள் போன்ற நிறுவனங்களை விட, அன்பு, நம்பிக்கை போன்ற உணர்வுகளைத் "தனிநபர்களிடம் மிக எளிதாக காணலாம்" என்ற யோசனையை தமக்கு சார்பாக ஒபாமாவின் ஒட்டுமொத்த பிரச்சாரமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. 28
"நிகழ்காலத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவர்களே கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்....": "ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமான அடக்குமுறை வேலைகளுக்காக... கடந்த காலத்தை ஒவ்வொரு நாளும் திரிப்பதையே" நோக்கமாக கொண்டு வின்ஸ்டன் உண்மைக்கான அமைச்சகத்தில் வேலை செய்கிறார். ஒஷியானியாவின் உண்மைக்கான அமைச்சகத்தின் செயல்பாடுகள், அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களால் கையாளப்படுகின்றன. இவை ஒவ்வொரு கணமும் அல்-கொய்தா மற்றும் தாலிபான் போன்ற குழுக்களை அரக்கத்தனமாக மாற்றுகின்றன. அதேசமயம், இந்த இரண்டு குழுக்களுமே சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் நிதியுதவியின் மில்லியன்கணக்கான டாலர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டன என்பதை , இந்த ஊடகங்கள் மிக கவனமாக "மறந்துவிடுகின்றன". இதுபோன்ற அசௌகரியமான உண்மைகள் ஒருபோதும் அரசாங்க கொள்கையுடன் ஒத்து வருவதில்லை என்பதால், பொதுவாக இவை ஞாபக துளைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுவிடும். ஆகவே இந்த உண்மைகள் நிகழ்கால சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை "சரியாக்க" திருத்தப்படும். ("பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள்-WMD" குறித்து பிரிட்டிஷ் MI6இன் தலைவர் 2002இல் புஷ்ஷை பாராட்டியதுடன், ஈராக் தாக்குதலுக்கும் திட்டமிட்டார்: "அறிவுக்கூர்மையும், உண்மைகளும் இந்த கொள்கையைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்தன"). ஒஷியானியா ஒருநாள் கிழக்கு ஆசியாவுடன் நட்பு கொண்டாடும், மறுநாளே கிழக்குஆசியாவுடன் யுத்தம் தொடுக்கும் அதைப் போலவே, அமெரிக்காவும் ஒருநாள் சதாம் ஹுசேனுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனும் போரிடுகிறது, ஒருசமயம் றேகன் காலங்களில் தீவிரமாக இரண்டிற்கும் ஆதரவு காட்டியது. (ஆப்கானிஸ்தானில் இருக்கும் முஹாஜீன்களை றேகன் "சுதந்திர போராட்ட வீரர்கள்" என்றும், "நியாயமாக இவர்கள் ஸ்தாபக தந்தைகளுக்குச் சமமானவர்கள்" என்றும் அழைத்தார்.) 27
அரசாங்க எதிரிகளை ஒழிப்பதில் பொதுச்சடங்குகள்: அமெரிக்க தொலைக்காட்சியில் சதாம் ஹுசேன், ஹமாஸ், அஜ்மதினிஜத், காஸ்ட்ரோ மற்றும் ஹூகோ சாவீஜ் போன்ற உத்தியோகப்பூர்வ எதிரிகளின் பெயர்களைக் குறிப்பிட்ட போதெல்லாம் என்ன நடந்ததோ, அது தான் "இரண்டு நிமிட வெறுப்பு நேரமாக" நாவலில் இடம்பெற்றுள்ளது. FOX News மற்றும் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலின் தலையங்க பக்கம் போன்ற வலதுசாரி வெளிப்பாடுகளில் பெரும் ஆர்பாட்டத்துடன் இது நிகழ்ந்தது. இது "தாராளவாத" வெளியீடுகளிலும் குறைவாக இருந்துவிடவில்லை. இவற்றில் இந்த கூப்பாட்டு ஒலி குறைந்திருந்தது என்றாலும், அதன் கண்ணோட்டம் கணிசமாக அதேபோன்று தான் இருந்தது.ஒஷியானியாவில் பொது தூக்கிலிடுதலின் போது இருந்த இரத்தவெறி வேட்கை - சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்ட போதும், அதேபோன்று மூச்சுபேச்சில்லாமல் அமெரிக்க ஊடகத்தாலும் பாராட்டப்பட்டது. ஒருநாள் அமைச்சக உணவகத்தில் மதிய உணவிற்காக உட்கார்ந்திருக்கும் போது, "நேற்று சிறைக்கைதிகள் தூக்கிலிடப்பட்ட போது நீ சென்று பார்த்தாயா?" என்று வின்ஸ்டனின் நண்பர் சைம் அவரிடம் கேட்கிறார். 26
இந்த காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி அதே போன்று இப்போதுள்ளவர்களிடம், 2006 டிசம்பரில் ஹுசேன் தண்டிக்கப்பட்ட போது அமெரிக்கா முழுவதும் இடம் பெற்றிருந்தது. 25
பொழுதுபோக்காக, உள்ளூர் "எதிரிகள்" மீது குண்டுவீசி தாக்குதல்: பக்கம் 7இல் வின்ஸ்டன் திரைப்படத்திற்குச் செல்கிறார். அங்கே ஒரு யுத்த செய்திபடத்தைப் பார்க்கிறார்; ஒஷியானியாவின் குண்டுவீசும் ஹெலிகாப்டரால் ஆதரவற்ற குடிமக்கள் துண்டுதுண்டாக சிதைக்கப்படும் காட்சியால், பார்வையாளர்கள் "மிகவும் கொடூரத்தை நோக்கி திருப்பப்படுகிறார்கள்" என்று அவர் தம்முடைய நாளேட்டில் குறித்து கொள்கிறார். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பரந்த அடித்தளங்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ விளையாட்டுக்களின் வார்த்தெடுக்கும் முயற்சியும், ஊக்குவிப்பும் அதே அடிப்படை உள்ளுணர்வுகளைக் கொண்டிருக்கிறது. 24
ஓர் அரசியல் கலாச்சாரம் அதன் எதிர்மறையான நற்பண்புகளைக் காட்டி தன்னைத்தானே மூடி மறைக்கிறது: "நிஜமான சோசலிச போராட்டம்... அல்லது சோசலிசத்தின் பெயரில் நிலைநிற்கும் ஒவ்வொரு கொள்கையையும் Party (நாவலில் வரும் கட்சியின் பெயர்) நிராகரிக்கிறது, நிந்திக்கிறது" என்பதாக "கோல்ட்ஸ்ரைன்" காண்கிறார். இது 1949இல் ஸ்ராலினிசத்தைப் பற்றிய ஓவெல்லின் தீர்க்கமான மதிப்பீடாக இருந்தது. இந்த வரிகள் பின்வரும் அதன் நவீன-கால ஒப்பீட்டை விளக்குகிறது: "அமெரிக்க அரசாங்கம் ஜனநாயகத்தின் நிலையான சாரத்தைக் குழிதோண்டி புதைக்கிறது அல்லது மறைக்கிறது. மேலும் அதையே ஜனநாயகம் என்ற பெயரில் செய்கிறது." 23
குடிமக்களின் மீது போலிஸின் அச்சுறுத்தல்: ஒஷியானியாவில் மிகவும் அச்சுறுத்தலாக இருந்த, ஸ்தூல வடிவில் அரசாங்க அமைச்சகத்தை நிறுவுவதுமான அன்பிற்கான அமைச்சகம் என்பது "கருப்பு சீருடைகள் அணிந்த, லத்திகள் இணைக்கப்பட்ட ஆயுதங்களுடன் கெரில்லா காவலர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது." இந்த காவலர்களைப் போன்றே நிஜ-வாழ்வின் எதிர்பலத்தில் அமெரிக்க அரசியல் கூட்டங்களிலும் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் கூட்டங்களுக்கு வெளியிலும் கவச உடையணிந்து, அச்சுறுத்தும் வகையில், அசுரத்தனமாக நடந்து கொள்ளும் அல்லது நிராயுதபாணியான போராட்டக்காரர்களை லத்திகளால் அடிக்கும் அளவிற்குக் கூட காட்சிகள் காணப்படுகின்றன. அஹ்மடினிஜாட்றிற்கு எதிரான ஈரானிய போராட்டங்களையும், சாவெஸிற்கு எதிரான வெனிசூலா போராட்டங்களையும் "நியாயமான எதிர்ப்புகளுக்கான" உதாரணங்களாக சித்தரிக்கும் ஊடகங்கள், பொதுவாக போராட்டக்காரர்களை "இளம் குற்றவாளிகளாகவும்" "அரசு ஒழிப்பு ஆதரவாளர்களாகவும்" குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ("ஓவெல்லியனைப்" பற்றி பேசுகையில்: சமீபத்திய அமெரிக்க அரசியல் கூட்டங்களில் எதிர்ப்பைக் காட்ட விரும்பிய யுத்த எதிர்ப்பு போராட்டக்காரர்கள், சுருள்சுருளாக சுற்றப்பட்ட முள்வேலிகளுக்குப் பின்னால் ஊடகங்களின் பார்வையில் தெரியாமல், கூட்ட அரங்குகளிலிருந்து வெகு தூரத்திலேயே நிறுத்தப்பட்டார்கள். இந்த முள்வேலிகள்--எவ்வித அவமதிப்பையும் பொருட்படுத்தாமல்--"சுதந்திர பேச்சு மண்டலங்கள்" என்று அழைக்கப்பட்டன.) 22
அரசு கொள்கையாக இருக்கும் சீரழிப்பும், இழிவுபடுத்தலும்: சித்திரவதை குறித்த புனைவுகளில் நாவல் திகிலூட்டும் கற்பனைகளைக் கொண்டிருக்கிறது. ஒரு புள்ளியில், வின்ஸ்டெனின் எதிர்ப்புணர்வு எந்தளவிற்கு தாக்குபிடிக்கிறது என்பதையும், அனுதாபகரமாக இருக்கிறது என்பதையும் காட்ட, புலனாய்வாளர் ஓ'பிரென் வின்ஸ்டெனின் பற்களில் ஒன்றை பெயர்த்துவிடுகிறார். பின்னர் அறை எண் 101இல் பிரபலமான உச்சக்கட்ட சித்திரவதைக் காட்சியைத் தொடர்கிறார். அங்கே, எலி போடப்பட்ட முகமூடியை வின்ஸ்டனின் தலையில் இட்டு கட்டுகிறார். சமீபத்திய அமெரிக்க சித்திரவதை செயல்பாடுகளில், ஓர் ஆதரவற்ற, அச்சுறுத்தப்பட்ட கைதி இருக்கும் ஒரு மூடிய பெட்டியில் "வெறியோடு கூடிய உயிரினங்கள்" விடப்பட்டன. அந்த "உயிரினங்களின்" வெளிப்பாடுகளை, இன்றைய ஒரு வாசகர் உடனடியாக சிந்தித்து பார்க்க முடியும். அதன் முழு நோக்கத்திற்கு பாலியல் வல்லுறவு, பாலியல் இழிவு, மத நம்பிக்கைகளை திட்டமிட்டு ஒடுக்குவது, மாதவிடாய் இரத்தத்தில் தோய்ந்த பெண்களின் உள்ளாடைகளை எடுத்து முஸ்லீம் கைதிகளின் தலையில் போடுவது ஆகியவற்றையும் உட்கொண்டிருந்த அமெரிக்க சித்திரவதை முறைகளுக்கு, இவையும் கூட குறைவாகவே இருக்கின்றன. மனச்சாட்சியின்மை மற்றும் சித்திரவதை என்று வரும்போது, "ஓவெல்லியன்" என்ற அடைமொழியும் கூட அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்புகளின் சூழ்ச்சித்திறனுக்குப் போதியளவிற்கு பொருந்துவதாக இல்லை. 21
வர்க்க நனவும், சமூக சமத்துவமும்
ஓவெல்லின் புத்தகம் அமெரிக்காவில் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. அது பிரசுரிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், டைம் இதழ் அதை "அருமையான திகில் படைப்பு" என்று குறிப்பிட்டது. ஆனால் தொடக்கத்தில் (விலங்கு பண்ணையுடன் இணைத்து) அதை "கம்யூனிசம்" மீதான ஒரு தாக்குதலாக வடிவமைத்து காட்டியது. (3)
எவ்வாறிருப்பினும் (முந்தையதற்கு மறைமுகமாக குறிப்புகளை அளித்திருந்ததைப் போன்றே) ஓவெல், மேற்கத்திய ஜனநாயகங்களின் போக்குகள் குறித்து இரண்டு புத்தகங்களிலும் எச்சரிக்கைகளை அளித்திருந்தார். அந்த புத்தகம் சமுதாயத்தின் உந்துசக்தியாக இருக்கும் ஒரு தெளிவான மற்றும் வலுக்கட்டாயமான வர்க்க அடிப்படையிலான பகுப்பாய்வை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்காவில் அது வரவேற்பைப் பெற்றதென்பது ஏதோவொருவகையில் முன்னுக்குப்பின் பொருந்தாமல் இருந்தது. வர்க்க விழிப்புணர்வு அமெரிக்க சிந்தனையிலிருந்து திட்டமிட்டு தூக்கியெறியப்படும் நிகழ்வுமுறை இருந்த 1949இல் எழுந்துவந்த அரசியல் சட்டவரைவுகளை, இந்த முன்னோக்கு மறுத்துரைத்தது. நாவலின் வர்க்க நனவிற்கு எதிராக ஏற்பட இருந்த ஒரு பின்னடைவிலிருந்து, அதன் வெளிப்படையான "கம்யூனிச-எதிர்ப்பு" அதை பாதுகாத்திருக்கலாம். வர்க்க நனவானது, 1949இல் அமெரிக்காவில் ஒரு சட்டவிரோத சிந்தனையாக இருந்தது, இன்றும் அது அவ்வாறு தான் இருக்கிறது. 20
வின்ஸ்டன் சந்தேகத்திற்கிடமின்றி "ஒஷியானிய தொழிலாள வர்க்கத்தின்" (proles) மீது அனுதாபமும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். ஒஷியானிய தொழிலாள வர்க்கத்திடம் எதிர்காலத்தைப் பற்றிய வெறும் நம்பிக்கை மட்டுமே இருந்தது என்று குறைந்தபட்சம் நான்கு முறையாவது பின்வரும் வார்த்தைகளில் விவரித்திருந்தார்: "அங்கே நம்பிக்கை இருந்ததென்றால், அது ஒஷியானிய தொழிலாள வர்க்கத்தில் தான் நிச்சயம் தங்கி இருக்க வேண்டும், ஏனென்றால் அங்கே, அந்த மதிப்பிழந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தில், அதாவது ஒஷியானியாவின் மக்கள் தொகையில் எண்பத்து-ஐந்து சதவீதம் மக்கள் மட்டும் தான் Partyஐ ஒருபோதும் மீண்டும் உருபெற முடியாத அளவிற்கு அழிக்கும் சக்தியாக இருக்க முடியும்." அந்த ஒஷியானிய தொழிலாள வர்க்கம், ஏதோவொருவகையில் அவர்களின் சொந்த வலிமை குறித்து நனவு பெற்றுவிட்டால்... மேலெழுந்து நின்று, ஒரு குதிரை உடலை குலுக்கி ஈக்களை விரட்டுவது போல அவர்களால் அசைத்துவிட முடியும். அவர்கள் முடிவெடுத்துவிட்டால், அடுத்தநாள் காலையே கட்சியை அவர்களால் துண்டுதுண்டாக உடைத்துவிட முடியும்" என்று வின்ஸ்டன் நம்பினார். "ஒஷியானியதொழிலாள வர்க்கம் மனிததன்மையோடு நின்றிருந்தோடு, அவர்கள் எதிர்ப்புணர்வோடு இல்லை" என்ற நிலையில், கட்சி உறுப்பினர்களின் தனிமனித இறையாண்மை உணர்வுகளை நசுக்குவதில் ஒஷியானியாவின் ஆளும் தட்டு வெற்றி பெற்றிருந்தது. கட்சி பகிர்ந்து கொள்ளாத, அதேசமயம் அழிக்க முடியாத ஒரு பலத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்... எதிர்காலம் ஒஷியானியா தொழிலாள வர்க்கத்திற்குச் சாதகமாக இருந்தது." 19
"எங்கெல்லாம் சமத்துவம் நிலவுகிறதோ, அங்கெல்லாம் புரிந்துணர்வு இருக்கும்" என்பதை வின்ஸ்டன் பிரதிபலிக்கிறார்--விண்ணைத்தொட்டு வரும் சமுக சமத்துவமின்மையால் பாத்திரப்படுத்தப்பட்ட ஓர் அமெரிக்காவிற்கு இதுவும் ஒரேமாதிரி இணக்கமுள்ள ஒரு புள்ளியாக உள்ளது. சமுதாய படிநிலைக்கும், செல்வசெழிப்பின் பகிர்விற்கும் இடையிலான தொடர்பைப் பின்வரும் வார்த்தைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன: "எல்லாவழியிலும் செல்வசெழிப்பு அதிகரித்து வருவதென்பது, ஒரு படிநிலை சமுதாயத்தின் பேரழிவை அச்சுறுத்தியது.... சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு சிறிய தனிச்சலுகைப்பெற்ற குழுவின் கைகளில் 'அதிகாரம்' இருந்த போதினும், 'செல்வவளத்தை' சமமாக பகிர்ந்தளிக்கும் ஒரு சமுதாயத்தைக் கற்பனை செய்து பார்ப்பது சாத்தியமாகவே இருந்தது. ஆனால் அதுபோன்ற ஒரு சமுதாயம் நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்க முடியாது. அதிலிருந்த ஓய்வும், பாதுகாப்பும் அனைவராலும் அனுபவிக்கப்பட்டது, வழக்கமாக ஏழ்மையால் ஏமாற்றப்பட்டு வரும் மனிதயினத்தின் பரந்த மக்கள், அவர்களைக் குறித்து அவர்களே சிந்திக்க தேவையான கல்வியறிவை அடைவார்கள்; பின்னர் அவர்கள் அதை அடைந்த உடனேயே, அவர்கள்... தனிச்சலுகைப் பெற்ற சிறுபான்மையினர் எந்த செயல்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்வார்கள், பின்னர்... அதை துடைத்தெறிவார்கள்." ஓர் உயர்ந்த சமத்துவமற்ற சமுதாயத்தில், ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில், இதுவோர் அபாயகரமானதாகவும், உண்மையில் நிலைகுலையச் செய்யும் சிந்தனையாகவும் இருக்கிறது. 18
இயல்பிலேயே இவை தீவிர கருத்துக்களாக இருக்கின்றன--ஆனால் ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக POUM உடன் சேர்ந்து சுயவிருப்புடன் போராடிய ஓர் எழுத்தாளருக்கு (ஓவெல்) இது ஆச்சர்யமூட்டுவதாக இல்லை. குறிப்பாக, தொழிலாள வர்க்கம் மட்டுமே உண்மையான புரட்சிகர சமூக சக்தி என்ற அதன் அடையாளம் நேரடியாக மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸை எதிரொலிக்கின்றன. ஒஷியானியா தொழிலாள வர்க்கமான Proles, நனவுபூர்வமாக எழுச்சி பெற்று, "ஒரு குதிரை தன்னைத்தானே குலுக்கி அதன் மீதிருக்கும் ஈக்களை விரட்டுவதைப் போல" Partyஐ துண்டுதுண்டாக உடைக்கிறது என்ற வரிகள் தொழிலாள வர்க்கம், அதன் சொந்த நலன்களின் ஒரு சுயாதீனமான உணர்வோடு, தானே ஒரு வர்க்கம் என்ற அதன் சொந்த விழிப்புணர்வின் மூலம் பெறப்பட்ட அதன் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதில் ஒரு பெருந்திரளான மக்கள் கீழிருந்து மேலே எழுச்சியுறும் கருத்தை விளக்கிக் காட்டுகிறது. 17
மக்களை "இரட்டை நிலைப்பாட்டில்" பழக்குதல்
"Partyஐ பற்றிய உலக-கண்ணோட்டம், அதை புரிந்துகொள்ள முடியாத வகையில், மக்கள் மீது மிக வெற்றிகரமாக திணிக்கப்பட்டது. அவர்கள்... என்ன நடந்து கொண்டிருந்தன என்பதை கவனிக்க பொது நிகழ்வுகளில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதால், யதார்த்தத்தின் மீதான மிக மோசமான புறக்கணிப்புகளை ஏற்றுகொள்ளுமாறு அவர்கள் செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்பதை வின்ஸ்டன் பிரதிபலிக்கிறார். பின்னர் சிறிது கழித்து: "Partyஇன் கீழ்நிலை உறுப்பினரும் கூட போட்டியாளராக, தொழில் அதிபராக, குறுகிய வட்டத்தில் புத்திசாலியாவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பயம், வெறுப்பு, முகஸ்துதி, மற்றும் சின்றின்ப வெற்றி போன்ற உணர்வுகளோடு ஓர் ஆராய்ச்சி சிந்தனையற்ற, அலட்சியமான கொள்கை வெறிபிடித்தவராக அவர் இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் யுத்தம் கோரும் ஓர் ஆட்சிக்கு உளவியல்ரீதியாக ஒத்து வருபவராக இருக்க வேண்டும்." நவீன-கால அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அரசியல் கலாச்சாரத்தால் ஊக்குவிக்கப்பட்ட மனோநிலைகளின் மிக துல்லியமான விளக்கத்தை, இதைவிட வேறெங்கும் காண்பது மிகவும் சிரமமாகும். 16
இரட்டை நிலைப்பாட்டின் முழுவிளக்கம் என்னவென்றால்: "மனதில் ஒரேநேரத்தில், இரண்டு முரண்பட்ட நம்பிக்கைகளை வைத்திருப்பதும், அவை இரண்டையுமே ஏற்றுக்கொள்வதுமாகும்.... உண்மையில் அவற்றை நம்புகின்ற அதேவேளையில், திட்டமிட்டு பொய் கூறுவது, அசௌகரியமான எந்த உண்மையையும் மறந்துவிடுவது, பின்னர் மீண்டும் தேவைப்பட்டால், அது தேவைப்படும் வரைக்கும் அதை மீண்டும் திரும்ப பற்றிக் கொள்வது, புறநிலை உண்மைகளின் இருப்பை மறுப்பது, பின்னர் ஒருவிஷயம் தடுக்கும் போது உடனே உண்மையைக் கணக்கில் எடுப்பது--இவை அனைத்தும் இன்றியமையாத அவசியமாக இருக்கிறது. இரட்டை நிலைப்பாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கும் கூட இரட்டை நிலைப்பாட்டில் பயிற்சி தேவைப்படுகிறது. இந்த சொல்லைப் பயன்படுத்துவதன் மூலமாக, ஒருவர் யதார்த்தத்துடன் முரண்படுகிறார். இரட்டை நிலைப்பாட்டை புதிதாக செய்யும் போது, ஒருவர் இந்த அறிவையும் கூட இழந்துவிடுகிறார். இவ்வாறு வரையறையில்லாமல், எப்போதும் பொய்யானது உண்மையை ஒருபடி தாண்டி செல்கிறது." 15
இந்த வரிகள், 2000ஆம் ஆண்டு தேர்தலில் உச்சநீதிமன்றம் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை ஜனாதிபதியாக நியமித்ததில் இருந்து, அமெரிக்க அரசியலில் நிகழ்ந்து வரும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் அறிகுறிகளைப் பாத்திரப்படுத்துகின்றன. தோற்றப்பாட்டளவில், அந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் இரட்டை நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் பொதுமக்கள் முன்னால் முன்வைக்கப்பட்டன. 14
சான்றாக, ஈராக் தாக்குதலுக்குப் பின்னர் சில மாதங்களிலேயே, அங்கே பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள் என்பதே இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு அமெரிக்க ஊடகங்கள் தள்ளப்பட்டன. ஆனால் அர்த்தத்தை அல்லது விளைவை கைவிட்டுவிட்டாலும், இந்த உண்மை அங்கே நிகழ்ந்தது. "குறைபாடுடைய உளவுத்திறனின்" (flawed intelligence) ஒரு விஷயமாக ஊடகம் சாதாரணமாக அதை புறக்கணித்துவிட்டது. (நூரன்பேர்க்கால் வரையறுக்கப்பட்டது போன்று) ஒரு பெரிய யுத்த குற்றத்திற்கு இதுபோன்றதொரு சொல்லை பொருத்துவது தான் இரட்டை நிலைப்பாடு. ஏனென்றால் ஒருபுறம், அது தவறை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தவறை ஏற்றுக்கொண்ட உடனேயே இரண்டு புதிய பொய்கள் உருவாகின்றன. ஒன்று: உளவுத்திறனின் தவறு மிகவும் சிறியது என்பது. இரண்டாவது, அமெரிக்க உளவுத்திறனின் துல்லியப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருந்தது என்பது ("பொய் எப்போதும் உண்மையை விட ஒருபடி மேலாக தான் இருக்கும்"). 13
யுத்தம் தொடுக்கப்படுவதற்கான காரணமே தவறாக இருக்கும்போது அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்ற நிலையில், யுத்தத்தின் பொதுவான பாத்திரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள் இருக்கவில்லை என்று ஒத்துக்கொள்வதென்பது இரட்டை நிலைப்பாட்டிற்கான மற்றொரு எடுத்துக்காட்டாகும். இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் தாவுவதன் மூலமாக--ஒன்றை விவாதிக்கும் போதே மற்றொரு நம்பிக்கையை முற்றிலுமாக சிலநிமிடத்திற்குக் கைவிடுவதன் மூலமாக--மட்டுமே ஒரேநேரத்தில் ஒருவர் இரண்டு நம்பிக்கையையும் வைத்திருக்க முடியும். 12
இந்த நாவலில், புலனாய்வாளர் ஓ'பிரென் நான்கு விரல்களைத் தூக்கி காட்டி, ஐந்து என்று கூற வின்ஸ்டனை நிர்பந்திக்கிறார். இந்த முறையீடு, தர்க்கரீதியாக, தேசிய ஆவணங்களின் உரைகளில் இடம் பெற்றிருக்கும், மே 21, 2009-இல் ஒபாமா வெளிப்படுத்திய உரையில், சித்திரவதைப் பற்றிய அவரின் நிலைப்பாட்டை விட மோசமானதாக இல்லை. சட்டவிதிகளில் முன்னோடி என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் நிஜமான சாசனத்திற்கு அடுத்து நிற்பது போலவும் காட்டிகொண்டு, சித்திரவதை என்பது தவறானது; நாம் நம்முடைய அரசியலமைப்பின் மதிப்புகளைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்; "நாங்கள் சித்திரவதையில் ஈடுபட மாட்டோம்" என்று ஒபாமா அறிவித்தார். ஆனால் அதற்கு பின்னர், சித்திரவதைக்கு உத்தரவிட்ட அமெரிக்க அதிகாரிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதையும், அமெரிக்க சித்திரவதையை ஆவணப்படுத்திய புகைப்படங்கள் பொதுமக்களுக்கு மறைத்துவைக்கப்படும் என்பதையும் சேர்த்துக் கொண்டார். அதே உரையில் அவர், "அசாதாரண போலித்தனங்களைக்" காப்பாற்றவும், காலவரையற்ற "தடுப்புக் காவலின்" (preventive detention) இடைக்கால கொள்கையை அறிவிக்கவும் தவறவில்லை. 11
"யுத்தமே அமைதி"
டிசம்பர் 10, 2009 இல் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டு இதே தொனியில் தொடர்ந்த ஒபாமா, ஒரு வித்தியாசமான ஓவெல்லியன் காட்சியை அருமையாக விளக்கினார். இதை உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே கூடிய கவனமெடுத்து மதிப்பாய்வு செய்திருக்கிறது. வரலாற்றின் மிக விசித்திரமான பெரிய யுத்த இயந்திரத்தின் தலைமை தளபதியும் (commander-in-chief), தற்போது இரண்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு (ஒன்றை அவரே வலிந்து ஏற்படுத்தி இருந்தார்) மத்தியில் இருப்பவரும், ஈரான் "நிர்மூலமாக்கப்படும்" என்று எச்சரித்த முதன்மை இராஜாங்க அதிகாரியை கொண்ட ஒரு நிர்வாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, உலகின் சிறந்த சமாதானதூதர் என்ற புகழாரம் அளிக்கப்பட்டது. மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் மற்றும் காந்தி ஆகியோரின் "அறநெறிகள் மற்றும் வாழ்க்கை" ஆகியவற்றிலிருந்து தேவைப்பட்ட மிக மேலோட்டமான கருத்துக்களுடன் அவருடைய உரையைத் தொடங்கிய ஒபாமா, அடுத்த வாசகத்திலேயே, அவர்களின் மெய்யியல் (philosophy) அவரின் சொந்த வெளிநாட்டு கொள்கையில் தாக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்ற எவ்வித நப்பாசைகளையும் துடைத்தெறிவதிலும் கவனமாக இருந்தார். ("ஆனால் ஓர் அரசின் தலைவராக இருந்து என்னுடைய நாட்டை பாதுகாக்கவும், காப்பாற்றவும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டிருப்பதால், அவர்களை மட்டுமே எடுத்துக்காட்டுகளாக கொண்டு நான் வழிநடக்க முடியாது" என்றார்.) 10
அமெரிக்க ஜனாதிபதி பின்னர் நேரடியாகவே அரச வன்முறையை முழுமையாக நியாயப்படுத்த குரல் கொடுத்தார் (நிச்சயமாக, அது அமெரிக்காவால் தான் முன்னெடுக்கப்படுகிறது). அவர் கூறுகையில், "பால்கனில் செய்தது போல, மனிதாபிமான அடித்தளத்தில் பலத்தினை நியாயப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்" (அதாவது, அமைதிக்கான யுத்தம்). சர்வதேச கருத்துக்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் கருத்தையும் புறகணித்துவிட்டு ஈராக்கில் தாக்குதல் நடத்திய ஜனாதிபதி, "அவருடைய நாடோ அல்லது வெறெந்த நாடோ, தாங்கள் பாதையின் ஒழுங்கை கைவிடும்பட்சத்தில், பாதை விதிகளைப் பின்தொடர வேண்டும் என்று மற்றவர்களை வற்புறுத்த முடியாது" என்று முறையிட்டார். சவூதி அரேபியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அரசாங்கங்களுடன் மிக நெருக்கமாக இணைந்திருந்த ஜனாதிபதி, "தங்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கங்கள் எங்களின் நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்" என்று முறையிட்டார். இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து பல ஜனநாயகங்களைத் தூக்கி எறிந்திருக்கும் மற்றும் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரங்களால் மாற்றி அமைத்திருக்கும் இராணுவத்தையும், புலனாய்வு அமைப்பையும் (CIA) கொண்டிருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதி, "அமெரிக்கா ஒருபோதும் ஒரு ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு யுத்தத்தைத் தொடுத்ததில்லை" என்று முறையிட்டார். 9
மூச்சடைக்கும் பகட்டாராவாரங்களுடன், அவர் கூறினார், "இப்போதிருக்கும் உலகில், இன்று எங்கோ, இங்குமங்குமாக, ஒரு படைவீரர் தாம் துப்பாக்கிச்சூடு நடத்தாமல், ஆனால் அமைதிக்காக உறுதியாக நிற்பதைப் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவருடைய ஆன்மாவிற்குள்ளும் இன்றும் கிளர்தெழும் அந்த தெய்வீக உயிர்ப்பைக் கொண்டிருக்கும் உலகை நாம் எட்டுவோம்... இந்த உலகில் இன்று எங்கோ, ஓர் இளம் எதிர்ப்பாளர் அவருடைய அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்கிறார். ஆனால் அதை எதிர்த்து நடைபோடும் தைரியத்தையும் அவர் கொண்டிருக்கிறார். இன்று எங்கோ ஓரிடத்தில், ஓர் அன்னை தன்னுடைய குழந்தையைப் படிப்பிக்க இன்றும் வறுமையை முகங்கொடுத்து வருகிறார். அந்த குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப அவருக்குத் தேவையான சில நாணயங்களுக்காக அவர் பாடுபட்டு வருகிறார். ஏனென்றால், இந்த கொடூரமான உலகில் அந்த குழந்தையின் கனவிற்கும் இடமிருக்கிறது என்று அவர் நம்புகிறார்." 8
இந்த வகையான வார்த்தைஜாலங்கள் --2008 பிரச்சாரத்தின் போது அமெரிக்க ஊடகத்தால் இந்த "நாவன்மை" பெரிதும் மதிக்கப்பட்டது-- ஓவெல்லின் காட்சிகளை நினைவுகூரச் செய்கின்றன. அதாவது, "அரசியல் மொழி... பொய்களை உண்மையாக்கவும், மதிக்க வேண்டியதை அழிக்கவும், ஒரு தூய்மையான இறையாண்மை போன்ற தோற்றத்தைக் காட்டவுமே அமைக்கப்படுகின்றன." (4) ஒபாமாவின் "அமைதியைக் காப்பாற்றும்" வீரர், வழக்கமான சூறையாடும் காரணங்களுக்காக ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் பெருமைவாய்ந்த அமெரிக்க வீரராக (அல்லது நேசநாட்டு வீரராக) இருப்பார். அந்த "இளம் எதிர்ப்பாளர்" இயல்பாகவே, ஈரான் அல்லது வெனிசூலா போன்று, வாஷிங்டனால் ஓர் உத்தியோகபூர்வ எதிரியாக கருதப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருப்பார். 7
"அரசாங்க காட்டுமிராண்டிதனத்தின்" மீதான ஒபாமாவின் அதிருப்தி சந்தேகத்திற்கிடமின்றி, நேரடியாக அமெரிக்க இராணுவத்தையோ அல்லது பிறநாட்டிற்காக போராடும் துருப்புகளால் அல்லது அமெரிக்க ஆதரவிலான கைப்பாவை அரசாங்கங்கள் மற்றும் ஏனைய மாற்றீடுகளால் குடிமக்களுக்கு எதிராக செய்யப்படும் வன்முறையையும், சித்திரவதையையும் குறிப்பிடவில்லை. "வறுமையால் தண்டிக்கப்பட்ட தாய்" என்பது கொள்கையளவில், அருவமாக உள்ள ஒரு தாயாக அல்லாது "இங்கும் அங்கும்" வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், ஸ்திரமான நிலைமைகளின் விளைவால், அதாவது பணிகள் வெளியிடங்களுக்கு அனுப்பட்டதால் (outsourcing) ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை அல்லது வோல்ஸ்ட்ரீட்டால் தோற்றுவிக்கப்பட்ட நிதி நெருக்கடி, அல்லது அந்த நெருக்கடியின் விளைவாக சமூக சேவைகளின் வெட்டுக்கள் போன்றவைகளால் ஏற்பட்ட வறுமையில் இருப்பவராவார். அதாவது ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் ஆதரவுடன் பெருநிறுவன அமெரிக்காவால் அமெரிக்க உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிலைமைகளில் இருந்து உருவானவர். 6
"உலகளவில் பொய்ம்மை நிறைந்த காலக்கட்டத்தில்..."
"கோல்ட்ஸ்ரைன்" குறிப்பிடுவதைப் போல, "எவ்வித அபாயகரமான சிந்தனையையும் அதன் உச்சக்கட்ட எல்லையில்...
சட்டென்று நிறுத்துவதற்கான நுட்பத்திறமையே கிரைம்ஸ்டாப் (Crimestop) எனப்படுகிறது. ஒப்புமையை உள்வாங்கும் ஆற்றலின்மை, தர்க்கரீதியான குறைபாடுகளை உணரத் தவறுதல், Ingsoc-கிற்கு ["ஆங்கில சோசலிசம்," ஒஷியானியாவில்
சர்வாதிபத்திய ஆட்சியின் உத்தியோகபூர்வ கருத்தியல்] தீங்கிழைக்கும் என்றால்,
எளிய வாதங்களைக் கூட தவறாக புரிந்து கொள்ளுதல், மேலும் ஒரு கருத்து வேறுபட்ட திசையில் இட்டுச் செல்லும் எவ்வித
சிந்தனையின் சங்கிலித் தொடராலும் வெறுப்பேற்பட்ட அல்லது எதிர்ப்பைக் கொண்டவைகளை
இந்த கிரைம்ஸ்டாப் உட்கொண்டிருந்தது. சுருக்கமாக கூறுவதானால், கிரைம்ஸ்டாப் என்பது பாதுகாப்பிற்கான முட்டாள்தனமாகும்." 5
"Ingsoc" என்பதை "உத்தியோகபூர்வ அமெரிக்க கொள்கை" என்பதைக் கொண்டு மாற்றினால், அந்த பத்தி அமெரிக்க ஊடகம் இன்றைய பிரச்சினைகள் குறித்து "விவாதிப்பதாக" நடிக்கும் நிகழ்முறைக்கு மிகப் பொருத்தமாக பொருந்தி நிற்கும். சான்றாக, அமெரிக்கா அல்லது அதன் நேச நாடுகளின் தாக்குதலாக இல்லை என்றால், "இராணுவ தாக்குதல்" என்பதையே அமெரிக்க ஊடகங்கள்பயன்படுத்தும். அமெரிக்கா அல்லது அதன் நேச நாடுகளின் தாக்குதல் என்றால் அந்த நடவடிக்கையானது ஸ்திரப்படுத்தல், அமைதி-நிலைநாட்டல், அல்லது சுதந்திரப்படுத்தல் என்றும் கூட மாறிவிடுகிறது. அமெரிக்க இராணுவ தாக்குதலை ஒரு "தாக்குதலாக" பார்க்கத் தவறும், ஒப்புமையை உள்வாங்கா கலையில் ஒருவர் நிபுணத்துவம் பெற வேண்டும். அதேபோல இராணுவ சதிக்கு அமெரிக்கா ஒத்துழைத்தால் ஒழிய, இராணுவ சதியும் விரும்பப்படுவதில்லை. ஆனால் அதுவே அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நடந்தால் அதுவொரு ஜனநாயக போராட்டமாக ("வண்ண" புரட்சிகள் அல்லது இதர பிறவாக) மாறிவிடுகிறது. அதேபோல, பொதுமக்களின் மரணம் அமெரிக்க கொள்கை அல்லது அமெரிக்க அதிகாரிகளால் நிகழ்ந்துவிட்டால், அது வருந்தத்தக்கதும் ஆனால் தவிர்க்கமுடியாத உடனிகழ்வின் விளைவுகளாகவும் மாறிவிடுகின்றன; சித்திரவதை என்பது நவீன புலனாய்வு நுட்பங்களாக ஆகிவிடுகின்றன. அப்பாவித்தனமான "மங்கல வழக்கிலிருந்து" வெகுதூரத்தில் விலகி நின்று, இதுபோன்ற மொழி திரித்தல்கள் அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தில் நிலவும் சக்திவாய்ந்த சிந்தனை-முறையின் முக்கிய பாத்திரத்தை எடுத்துகாட்டுகின்றன. 4
அன்புசார் அமைச்சகத்தில் "மீண்டும் கற்பிக்கப்பட்ட" நிலையில், வின்ஸ்டன் "கிரைம்ஸ்டாப்பில் பயிற்சிபெற வேலையில் அமர்த்தப்படுகிறார். 'உலகம் தட்டையாக உள்ளது என்று Party கூறுகிறது,' 'நீரை விட பனி கனமானது என்று கட்சி கூறுகிறது' என்பது போன்ற முன்மொழிவுகள் அவருக்கு வழங்கப்பட்டு, அவர்களோடு முரண்படும் வாதங்களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதில் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதில் அவருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது சாதாரண விஷயமில்லை... இதற்கு ஒருவகையான மனவலிமை பயிற்சியும், ஒருசமயத்தில் தர்க்கத்தை மிகவும் சுவாரசியமாக பயன்படுத்தும் திறமையும், வேறொருசமயத்தில் கொடூரமான தர்க்க குறைபாடுகளுக்கு நனவின்றி இருக்கும் திறமையும் தேவைப்படுகிறது." 3
ஒபாமா அவருடைய பதவியேற்பு விழாவிற்குச் சற்று முன்னர் அளித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்ட ஒரு முற்சேர்கையின் தர்க்கத்தை ஜீரணிக்கவும் கூட இதேபோன்ற "மனவலிமை" தேவைப்படுகிறது. சித்திரவதை மற்றும் முன்னனுமதியின்றி ஒட்டுகேட்டல் போன்றவை உட்பட, புஷ் நிர்வாகத்தின் குற்றங்களைச் சுயாதீனமாக விசாரிக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பீர்களா என்று கேட்கப்பட்ட போது, ஹாவர்டில் பயிற்றுவிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட முன்னாள் பேராசிரியர், "நாம் பின்நோக்கி திரும்பி பார்க்காமல், முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாக" பதிலளித்தார். அதாவது, எதற்காகவும் யாரையும் ஒருபோதும் தண்டிக்காமல் தள்ளுபடி செய்துவிடும் கொள்கை - ஆனால் இது அமெரிக்க அரசால் அல்லது அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியியல் கோஷ்டிகளால் நடத்தப்படும் குற்றங்களுக்கு மட்டுமே ஏற்றுகொள்ளப்படும் என்பதை ஒருவர் உறுதியாக நம்பலாம். 2
இந்த நாவலின் தொடக்கத்தில், வின்ஸ்டன் ஒரு நிலைகுலையும் முடிவை எடுக்கிறார். அதுவாவது: அவர் ஒரு பிரத்யேக நாட்குறிப்பேட்டை எழுத தொடங்குகிறார். அதற்கு அவர் வருத்தத்துடன் தலைப்பிடுகிறார், "எதிர்காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ, சிந்தனை சுதந்திரமாக இருக்கும் ஒரு காலத்திற்காக." "உலகளவில் பொய்ம்மை நிறைந்த காலக்கட்டத்தில்...உண்மையை கூறுவதும் ஒரு புரட்சிகர செயல் தான்" என்று ஓவெல் வேறெங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. அமெரிக்க அரசியல் வர்க்கத்தின் Newspeakஆல் தாக்கப்பட்டு, வெளிப்படையாக நாம் உலகளவில் பொய்ம்மை நிறைந்த ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே வின்ஸ்டன் ஸ்மித் தான். சிந்தனை சுதந்திரமாக இருக்கும் ஒரு காலக்கட்டத்திற்கான பாதையில் வெளிச்சமிட, உண்மைகளைக் கூறும் புரட்சிகர செயல்களில் நாம் திரும்ப வேண்டும்.
Notes :
இருபதாம் நூற்றாண்டு மத்தியில் மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்திய ஆங்கில நாவல்களில் ஒன்றான Nineteen Eighty-Four நாவலில் ஜோர்ஜ் ஓவெல், நிலைப்படுத்தி காட்டியிருந்த, “ஒஷியானியாவின்” (ஜோர்ஜ் ஓவெலின் 1984 நாவலில் குறிப்பிடப்படும் பிராந்தியம்) இந்த நிரந்தரமான எதிர்காலத்தின் படுமோசமான நிலைமையை அமெரிக்கர்கள் பலர் எளிமையாக உணரக்கூடும்.
தங்களின் சொந்த சமூகத்திற்கு இந்த நிலைமை பொருந்தும் என்பதை பல அமெரிக்கர்கள் ஏற்று கொள்கிறார்களா இல்லையா என்பது, வேறு விஷயம். ஆனால் 2000ஆம் ஆண்டு தேர்தலை களவாடியதிலிருந்தே--இது 9/11 தாக்குதல்கள், போலியாக எடுத்துக்காட்டப்பட்ட "WMD"-இன் (பேரழிவு ஆயுதங்கள்) அடிப்படையில் ஈராக் தாக்குதல், சித்திரவதை துஸ்பிரயோகங்கள், 2008 நிதி நெருக்கடி போன்ற நிகழ்வுகளால் குறிக்கப்பட்ட காலம்--பெருமளவிலான அமெரிக்கர்கள் தொடர்ந்து இதனால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பது ஒரு புள்ளியாக உள்ளது.
அதிகரித்து வந்த பனிப்போர் பதட்டங்களுக்கு இடையில், Nineteen Eighty-Four நாவல் ஜூன் 1949-இல் பிரசுரிக்கப்பட்டது. பெரும்பாலான மேற்கத்திய வாசகர்களுக்கு, அப்போதைய கம்யூனிச எதிர்ப்பின் அரியமாக (Prism) அந்த புத்தகம் விளக்கமளிக்கப்பட்டது.
அந்த நாவலின் போலிஸ் அரசு ஸ்ராலினின் சோவியத் ஒன்றியத்திற்குள் இருந்த ஒத்த தோற்றத்தை வெளிப்படையாகத் துருவிக்காட்டியது. ஸ்ராலினிசத்திற்கு முற்றிலும் விரோதமாக தன்னைத்தானே ஜனநாயக சோசலிசவாதி என்று கூறிக்கொண்ட ஓவெலிடமிருந்து வந்த இந்த வெளிப்பாடு, ஆச்சரியமூட்டவில்லை. சோசலிசத்துடன் இருந்த ஸ்ராலினிசத்தின் வெவ்வேறு ஆக்கக்கூறுகளில் ஓவெல் மிகவும் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார். (சான்றாக, அவர் எழுதுகையில், "என்னுடைய சமீபத்திய நாவல் ['1984'] சோசலிசத்தின் மீதான ஒரு தாக்குதலை நோக்கம் கொண்டதல்ல... மாறாக, அது நெறிப்பிறழ்வுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது... இது ஏற்கனவே கம்யூனிசத்திலும், பாசிசத்திலும் சிறிது உணரப்பட்டுள்ளது..." [1]), அவருடைய பனிப்போர் சகாப்த வாசகர்கள் பெரும்பாலும் இந்த வேறுபாட்டை அறியாமல் இருந்தார்கள். அவருடைய எச்சரிக்கை குறிப்புகள் ("ஆங்கிலம் பேசும் இனங்கள் ஏனையவைகளை விட சிறந்தவையல்ல என்பதையும்... சர்வாதிபத்தியம் (Totalitarianism) எங்கு வேண்டுமானாலும் வெற்றியடையக்கூடும் என்பதையும் வலியுறுத்த... அந்த புத்தகத்தின் காட்சி பிரிட்டனில் அமைக்கப்பட்டது") பெருமளவிற்கு கவனிக்காமல் விடப்பட்டன. மேலும் அந்த நாவலின் எச்சரிக்கை செய்யும் குறிப்புக்கள் ("எதிர்காலத்தைப் பற்றிய ஒரு வரைபடத்தை நீங்கள் பார்க்க விரும்பினால், எப்போதும் ஒரு மனித முகத்தில் ஒரு காலணித்தடம் பதிக்கப்பட்டிருப்பதைப் போல கற்பனை செய்து பாருங்கள்"), பொதுமக்கள் எண்ணத்தில், முக்கியமாக மேற்கத்திய-பாணியிலான முதலாளித்துவ "ஜனநாயகங்களின்" எதிரிகளாக பார்க்கப்பட்ட அரசியல் அமைப்புமுறைகளோடு அதை கொண்டு வந்து சேர்த்தது. (2)
இருப்பினும், Nineteen Eighty-Four நாவல் மேற்கில் ஆதரவைப் பெறவில்லை. தன் சொந்த நலன்களுக்காக ஆளுகின்ற, மற்றும் அதன் அதீத தர்க்கத்திற்கேற்ப மனங்களை அரசு கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து அதிகாரத்தைத் தக்க வைக்கும் ஒரு புதிரான மேற்தட்டை அது எடுத்துக்காட்டுகிறது. சுரண்டும் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக, செயல்முறைவடிவில் மக்களைக் கட்டாயப்படுத்துவதில் எது தொடர்புபட்டிருக்கிறது என்பதை, பொதுவான பொருளாதார அமைப்பு வடிவத்தைச் சாராமல், அது ஆராய்கிறது. சற்று வித்தியாசமாக கூற வேண்டுமானால், ஓர் ஆளும் அதிகாரத்துவத்திலிருந்து தொடங்குகிறதா அல்லது நிதி மூலதனத்திலிருந்து தொடங்குகிறதா என்பதைச் சாராமல், ஒரு புதிரான அரசு அதிகாரத்தின் சமூக-உளவியல் இயந்திரத்தை அந்த புத்தகம் எடுத்தாண்டுள்ளது. மேலும் வெவ்வேறு ஒடுக்குமுறை வடிவங்களின் மூலமாகவும், மக்களின் நனவை கட்டுப்படுத்துவதன் மூலமாகவும் மட்டுமே உயர்ந்த சமத்துவமற்ற சமூகத்திற்குள் சமூக ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட முடியும் என்ற பொதுவான பிரச்சினையை அது வெளிப்படுத்திக் காட்டுகிறது.
கொடூரமான கொடுங்கோல் ஆட்சிகள் ஒடுக்குமுறையைத் தான் முதன்மையாக சார்ந்திருக்கும். நவீன கொடுங்கோல் ஆட்சிகள் நனவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நுட்பமான கருவிகளைக் கையாளுகின்றன. முறைப்படி, நனவானது சமுதாயத்தில் பொதுவாக பயன்படுத்தப்படும் மொழியோடு ஆழமாக பிணைந்துள்ளது. ஒஷியானியாவும், அமெரிக்காவும் நனவின் நவீன வடிவங்கள். இதனால் தான் இந்த இரண்டு சமுதாயங்களும் தொடர்ந்து அவற்றின் மையப் பாத்திரங்களை பகிர்ந்து கொள்கின்றன என்பதோடு, மொழி, நனவு, இணங்கி நடத்தல் மற்றும் அதிகாரம் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்புகளுக்குள் இருக்கும் அதன் ஆழமான பார்வைக்காக, ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் காலத்தின்போது பொருந்தியதைவிட, Nineteen Eighty-Four நாவலானது, அதன் வாசகர்களுக்கு 2010இல் மிக அதிகமாக பொருந்துகிறது.
1984 -ல் ஒஷியானியாவில் மனத்தை கட்டுப்படுத்தல்
கொடூரமான தேசியவாதம் மற்றும் யுத்தம் விரும்பும் சோவனிசத்தை (Chauvinism) தூண்டிவிட, கைதிகளைப் பொதுவிடத்தில் தூக்கிலிடுதல் மற்றும் "இரண்டு நிமிட வெறுப்பு நேரம்" (Two minutes Hate - கட்சியின் எதிரிகளைக் குறிப்பிட்டுக் காட்டி, வெறுப்பை எடுத்துரைக்கும் படங்களை கட்சி உறுப்பினர்கள் பார்க்க வேண்டிய தினசரி நேரம்) போன்ற சடங்குகளை அரசு கொண்டிருந்தது. ஓவெல்லின் நாவலில் "Proles" என்றழைக்கப்படும் ஒஷியானியா மக்கள்தொகையில் 85 சதவீதத்தினரான பாட்டாளி வர்க்கம் அதன் அரசியல் நனவை அபிவிருத்தி செய்யாமலிருக்க, மனதை-மரத்துப் போக செய்யும் ஊடக திசைதிருப்புதல்களில் (முக்கியமாக விளையாட்டுக்கள், குற்றங்கள், இலாட்டரி, மற்றும் பாலியல் போன்றவற்றில்) மூழ்கடிக்கப்பட்டிருந்தது. "அதை தவிரவும் வேறு உலகம் இருக்க முடியும் என்பதை உள்வாங்கும் சக்தி கூட இல்லாத அளவிற்கு" அந்த தொழிலாள வர்க்கம் இவ்வாறு வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், Party உறுப்பினர்கள் (மொத்த மக்கள்தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக இருந்த உள்கட்சி (Inner Party) மற்றும் குறைவான அதிகாரங்களைக் கொண்ட கட்சி அங்கத்தவரற்ற (Outer Party) இரண்டின் உறுப்பினர்களும்) சிந்தனைக்குற்றத்தில் (Thoughtcrime) ஈடுபடாமல் இருக்க, அவர்கள் இரட்டை நிலைப்பாட்டில் (Doublethink) நிபுணத்துவம் பெற வேண்டி இருந்தது. நாவலில் வரும் Party இன் உறுப்பினர் ஒருவர், "விரோதம் கொண்ட வெளிநாட்டு எதிரிகளின் தொடர்ச்சியான ஆத்திரத்திற்கு ஊடாகவும், உள்ளேயிருந்த உளவாளிகள் மத்தியிலும், அதேசமயம் வெற்றிகளால் கிடைக்கும் சந்தோஷத்தோடும், Party இன் அதிகாரம் மற்றும் அறிவுநுட்பத்திற்கு முன்னால் தலைகுனிந்தும் வாழ வேண்டி இருந்தது." தங்களின் சிந்தனைகளைச் சுயமாக நெறிப்படுத்தும் திறமையற்றவர்கள், இதனால் மரபுகளுக்கு அஞ்சியதுடன், படிப்படியாக மக்கள் கூட்டத்திலிருந்தே விலக்கப்பட்டார்கள். கீழ்ப்படியாதவர்களின் மனிதத்தன்மையை நசுக்க வடிவமைக்கப்பட்ட விஞ்ஞானரீதியான வழிகளில், அவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
2010இல் இது எவ்வாறு அமெரிக்காவில் செயல்படுகிறது மேலே குறிக்கப்பட்ட ஒவ்வொருவரும் தற்போது, 2010இல், அமெரிக்க சமுதாயத்தில் வாழ்கிறார்கள். சிலர் முழு-வீச்சில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மிக ஆரம்ப வடிவத்தில் (பரிணமித்து வரும் நிலையில்) இருக்கிறார்கள். இதற்கு இணையாக இருக்கும் பல நவீன-காலத்தவர்களின் ஒரு முழுமையான பட்டியலை எழுதினால், அதுவொரு முழு புத்தகத்தையே நிரப்பிவிடும். ஒஷியானியாவில் எதிரிடையான பொருளில் பெயரிடப்பட்ட "அமைதிக்கான அமைச்சகம்" என்பது அமெரிக்காவின் "பாதுகாப்புத்துறை" என்பதன் ஓவெல்லியனில் இடக்கரடக்கல் சொல் என்பதைவிட வேறொன்றுமல்ல என்பது போன்ற சிறிய தகவல்களைக் கூட அதுபோன்றதொரு புத்தகம் சேர்த்து கொண்டிருக்கும்.
"மரபுசாரா சிந்தனைகள்" (அதாவது, தற்போதிருக்கும் அரசியல்சார்-பொருளாதார அமைப்புமுறை மீதான பகுந்தறிவார்ந்த விமர்சனங்கள்) அபிவிருத்தி அடைய தேவையான கருத்துருக்கள் மற்றும் முன்னோக்குகள் குவிவதைத் திட்டமிட்டு தடுக்க முயற்சிக்கும், பல வழிகளில் Newspeak இன் ஒருவகையாகவே செயல்படும் அமெரிக்க ஊடகத்தைப் போலவே, அமெரிக்கா பல கணிசமான சமாந்திரத்தை உட்கொண்டிருக்கிறது. முக்கியமாக, சர்வதேச நிதி நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு இழப்புக்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், ஆனால் சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான இழப்பைச் செலுத்த வேண்டும் என்ற கொள்கையை, பாதிக்கப்பட்டவர்கள் மீது (அதாவது ஏறத்தாழ ஒட்டுமொத்த மக்களின் மீதும்) அவர்களாலேயே "ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால்" திணிக்கப்பட வேண்டும் என்ற வோல்ஸ்ட்ரீட் பிணையெடுப்பை அடிக்கோடிடும் தர்க்கத்தையும் இது உட்கொண்டிருக்கிறது. (மார்க்ஸ் : "ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒடுக்கும் வர்க்கத்தின் எந்த குறிப்பிட்ட பிரதிநிதிகள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும், ஒடுக்க வேண்டும் என்பதை ஒடுக்கப்பட்டவர்களே முடிவெடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.")
ஓவெல் ஓர் எதிர்கால புனைவை உருவாக்கியதிலிருந்தும், நிபந்தனைக்குட்பட்ட முதலாளித்துவ "ஜனநாயகத்தின்" மேற்கு வடிவங்கள், ஒவெல்லியன் பாணியிலான கொடுங்கோலாட்சிக்கு எதிரான தடைச்சுவராக கருதப்பட்டதிலிருந்தும், இந்த சில தசாப்தங்களில் நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்பதை அடிக்கோடிடும் சில சமாந்திரங்கள் கீழே எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
பாசிச ஜேர்மனி அல்லது இத்தாலி விஷயத்திலும், அல்லது சோவியத் ஒன்றியத்தில் ஒரு புரட்சிக்கு எதிரான அதிகாரத்துவம் அதனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட விஷயத்திலும் தொழிலாள வர்க்கம் அனுபவித்து வந்த நிலைமைகள் ஒரு வரலாற்று ரீதியான தோல்வி என்பதை ஓவெல் தம் மனதில் கொண்டிருந்தார் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். விஷயங்கள் ஒரு குழப்பமான விதத்தில் நிகழ்ந்தாலும் கூட, இன்று அமெரிக்காவில் விஷயங்களைப் பார்க்கும் உத்தியோகபூர்வ பார்வை அதிகளவில் வாதத்திற்குட்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றன. அமெரிக்க ஆட்சியாளர்களின் அதிகார ரீதியான நோக்கங்களையும், ஆசைகளையும் பொறுத்த வரையில், ஓவெலின் கருத்தில் எதையுமே நிச்சயமாக மாற்ற வேண்டியதிருக்காது.
தொடர் யுத்தம் (Perpetual War) : ஒஷானியாவில் போலவே, இன்றைய அமெரிக்காவிலும் ஓர் இடைவிடாத யுத்த நிலைமை நிலவுகிறது. அதாவது, இரண்டு சமுதாயத்தினாலும் வெகு "சாதாரணமாக" ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நிலைமையாக உள்ளது. முன்னாள் அமெரிக்க துணை ஜனாதிபதி சென்னி பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்க யுத்தம் "ஒருபோதும் முடிவுக்கு வராது. குறைந்தபட்சம் எங்களுடைய காலத்தில் முடிவுக்கு வராது" என்று 2001இல் தெரிவித்தார். இதற்கு பெரு முதலாளித்துவ கட்சியிடமிருந்தோ அல்லது பெருநிறுவன ஊடகத்திடமிருந்தோ மறைமுகமாக கூட எந்த சத்தமும் வரவில்லை. இன்றைய வரைக்கும் இந்த கருத்து கேள்விக்குட்படாமலேயே போய்விட்டது. சென்னி அந்த கருத்தைத் தெரிவித்ததில் இருந்து, அதற்கு பின்னர் நடந்த நான்கு தேசிய தேர்தல்களிலும் கூட, இந்த தொடர் யுத்தம் பற்றிய பிரச்சினை போதிய முக்கியத்துவம் கொடுத்து கவனிக்கப்படவில்லை.
சமுதாயத்தின் வர்க்க கட்டமைப்பை தக்க வைப்பதற்கான யுத்தம்: அவருடைய "கோல்ட்ஸ்ரைன்" என்ற கதாபாத்திரம் (ஓரளவிற்கு இது ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுரீதியான பாத்திரத்தின் அடிப்படையில் படைக்கப்பட்டிருந்தது) மூலமாக பேசுகையில், ஓவெல் எழுதினார்: "யுத்தமானது, ஒவ்வொரு ஆளும் குழுவினாலும் அதனால் ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டது. யுத்தத்தின் நோக்கம் அரசுகளை வெற்றி கொள்வதோ அல்லது அதை தடுப்பதோ அல்ல, மாறாக சமுதாயத்தின் கட்டமைப்பைச் சேதப்படுத்தாமல் தக்க வைப்பதற்காகவே அது நடந்தது. ஆனால் உண்மையான தன்மையில், யுத்தத்தில் சிறிய எண்ணிக்கையிலானவர்களே, அதாவது பெரும்பாலும் நன்கு-பயிற்சியளிக்கப்பட்ட நிபுணர்களே பங்கெடுப்பதுடன், ஒப்பீட்டளவில் குறைந்த பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்... ஆனால் அதே நேரத்தில் யுத்தத்தில் இருக்கிறோம் என்ற நனவு அபாயத்திற்குட்பட்டுளதுடன், அனைத்து அதிகாரத்தையும் ஒரு சிறிய குழுவிடம் ஒப்படைப்பது என்பது உயிர்வாழ்வதற்கான இயற்கையானதும் மற்றும் தவிர்க்க முடியாததுமான நிலைமையாகின்றது." 37
இந்த கருத்துக்கள், முறையே, அமெரிக்காவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கும்"; "சிறப்பு படைகள்" மற்றும் ஆளில்லா ஏவுகணை தாங்கிய கண்காணிக்கும் விமானம் (predator drones) என்றழைக்கப்பட்டதை பயன்படுத்துவதிலும்; மற்றும் பயவுணர்வை ஏற்படுத்துவதும் மற்றும் அச்சுறுத்தும் பிரச்சாரங்களோடு தொடர்புபட்ட கொடூரங்களுக்கும் மிகச் சரியாக பொருந்துகின்றன. உண்மையில் அமெரிக்காவின் யுத்தம், பிராந்திய நலனை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதை விடுத்து, குறிப்பாக, எண்ணெய் வளமிக்க பிராந்தியங்களை அல்லது எண்ணெய் குழாய் பாதைகளின் ஆக்கிரமிப்பு மற்றும்/அல்லது இராணுவ தளங்களை அமைப்பதற்காக மூலோபாய மதிப்பு ஆக்கிரமிப்பதையே நோக்கமாக கொண்டிருக்கிறது என்ற ஒரேயொரு வாசகம் மட்டும் குறைந்தபட்சம் மாற்றப்பட வேண்டியதாக உள்ளது. இந்த விதிவிலக்கும் கூட, "யுத்தத்தின் நோக்கம் [குறைந்தபட்சம் ஒரு பகுதியாகவாவது] சமுதாயத்தின் கட்டமைப்பை சேதமுறாமல் தக்கவைப்பதற்காக நடத்தப்படுவது" என்ற, மற்றும் "யுத்தமானது, ஒவ்வொரு ஆளும் குழுவினாலும் அதன் சொந்த மக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டது" என்ற ஓவெல்லின் புள்ளிகளை, எந்த வகையிலும் மதிப்பிழந்துவிடச் செய்யவில்லை. 36
ஒரு-கட்சி ஆட்சி: ஒஷானியாவைப் போன்றே, அமெரிக்காவிலும் வடிவத்தில் ஒரே-கட்சி ஆட்சி நிலவுகிறது. அதன் இரு பெரு வர்த்தக கட்சிகளும், தவறாக இரண்டு "எதிரெதிர்" கட்சிகள் என்று குறிப்பிடப்படுகின்றன. உண்மையில், பொருளாதார முக்கியத்துவம் மற்றும் மூலவள பயன்பாட்டின் அனைத்து விஷயங்களிலும், எவ்வித கேள்வியுமின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் ஒரே நிஜமான கட்சியான --நிதியியல் மேற்குடியின் மென்மையான-- வார்த்தைஜால மற்றும் கடுமையான-வார்த்தைஜாலங்களை காட்டுவதைவிட அவை வேறொன்றும் செய்யவில்லை. ஒரு-கட்சி ஆட்சியின் அமெரிக்க மாற்றுரு உண்மையில் ஒஷானியாவின் மாற்றுருவை விட மிக அபாயகரமான ஓவெல்லியனாக இருக்கிறது. ஏனென்றால், ஆழமில்லாத ஏதோவொன்றை அது மேலோட்டமாக காட்டுகிறது. குறைந்தபட்சம், ஒஷானியாவிலாவது ஜனநாயகத்தின் நடிப்பைக் குறித்து கவலைப்படாத "நேர்மை" இருந்தது. 35
அமெரிக்கா ஒரு "ஜனநாயக நாடு" என்பதற்கு "சான்றாக", குடியரசுக் கட்சியினருக்கும், ஜனநாயக் கட்சியினருக்கும் இடையிலான குறைந்தளவிலான வித்தியாசங்களை-பெரும்பாலும் வார்த்தைஜால வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான நிகழ்வுகள் சகிக்கமுடியாத குறைபாடுகளை வெளிப்படையாக எடுத்துக்காட்டுகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக இந்நிலைமை ஏற்கப்பட்டிருப்பதால், (அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிதமிஞ்சிய வலிமையையும், AFL-CIO மற்றும் பல்வேறு "இடது" சக்திகள் ஆற்றிய பங்களிப்பையும் கணக்கிலெடுத்து கூறுவதானால்) பெருந்திரளான மக்களின் நனவை வடிவமைப்பதிலும், ஆதிக்கம் செலுத்துவதிலும் இவை உத்தியோகப்பூர்வ அரசியல் கலாச்சாரத்தின் அதிகாரத்திற்குச்சான்றுகளாக உள்ளன. (மார்க்ஸ்: "ஆளும் வர்க்கத்தின் கருத்துக்கள் ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் கருத்துக்களாகவே இருக்கின்றன.") 34
அரசு பிரச்சாரத்திற்கான வடிகாலாக விளங்கும் ஊடகம்: ஒஷியானியாவில் இருந்தது போன்றே, இன்றைய அமெரிக்க ஊடகமும் அரசு பிரச்சாரத்திற்கான முக்கிய வடிகாலாக விளங்குகின்றன. கடந்த தசாப்தங்களின் முக்கிய நிகழ்வுகளைப் பற்றிய செய்தி சேகரிப்பு குறித்த சுருக்கமான ஆய்வு ஒன்றே, இந்த பாத்திரத்தைப் போதுமான அளவிற்குத் தாங்கிப் பிடிக்கும். மேலும் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் இந்த நடவடிக்கையின் கணக்கிலடங்கா சான்றுகளை அள்ளித் தருகின்றன. ஒஷியானியாவின் தொலைக்காட்சித்திரையானது, தொடர்ந்து இரும்பு உற்பத்தி உயர்வுகள் மற்றும் சாக்லெட் வினியோகம், "மலபார் போரரங்கின் கதாநாயகர்களால்" வெல்லப்பட்ட பிரமாண்டமான வெற்றிகள் பற்றிய வெற்றி அறிக்கைகளின் கலவைகள் போன்றவற்றைத் தாங்கிப்பிடித்தது. 33
இவற்றிற்கும், அமெரிக்க செய்தி நிகழ்ச்சிகளுக்கும் இடையில் சிறிது வேறுபாடு உண்டு (ஒருவேளை விளம்பரங்கள் இல்லாமல் இருந்தது, இவற்றின் வலுக்கட்டாயமான உற்சாகம் ஒஷியானியாவில் வெளியான வீர "செய்தி வெளியீடுகளை" விட, ஒரு துடிப்பான ஒலியை உண்டாக்குகின்றன). ஈரானில் ஒரு சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட தேர்தல் குறித்த தொடர்ச்சியான "அட்டூழியத்தை" 2009 இல் அமெரிக்க ஊடகம் வெளிப்படுத்தியது. ஆனால் அதில் தேர்தல் மோசடி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக எந்த முக்கிய ஆதாரமும் அளிக்கப்படவில்லை; அதுவே, 2000இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த வெளிப்படையான மோசடிகளை, இந்த ஊடக வடிகால்கள் ஒன்று கூட ஒப்பு கொள்ளவில்லை. (உண்மையில், வன்முறை இல்லாமல் அதிகாரம் மாற்றப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில்--வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குடிமக்களின் எதிர்ப்பில்லாமல் மேற்தட்டுக்களால் தேர்தலை வென்றெடுக்க முடிந்தது என்பதன் அடிப்படையில்--"இந்த அமைப்புமுறை சரியானதே" என்பதற்கு ஆதாரமாகவே 2000 தேர்தலின் விளைவு அமைந்திருக்கிறது என்று அவை ஒருமித்து பாராட்டின.) 32
கண்காணிப்பு: நாவலின் இரண்டாவது பக்கத்தில், நமக்கு Thoughtpolice அறிமுகப்படுத்தப்படுகிறது. "எந்தளவிற்கும் அல்லது எந்த முறையிலும், எந்தவொரு தனிநபரின் தொலைதொடர்பு கம்பியிலும் Thoughtpolice குறுக்கிடுவதாக நாவலில் புனையப்பட்டிருந்தது. எல்லா நேரத்திலும் ஒவ்வொருவரையும் அவர்கள் கண்காணித்ததாக கருதக்கூடிய அளவிற்கு இருந்தது." ஏறத்தாழ 2004இல் இருந்தே, அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆணையம் போன்ற அமைப்புகளால் அமெரிக்க குடிமக்களின் தனிப்பட்ட தொலைதொடர்புகளின் மீது அவற்றின் பெரும் மறைமுக கண்காணிப்புகளுடன் இதேபோன்ற கண்காணிப்பு செயல்பாடுகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆனால் 2004இல் இருந்து நடந்த மூன்று தேசிய தேர்தலில்களில் ஒன்றில் கூட இந்த பிரச்சினை குறிப்பிட்டுக்காட்டப்படவில்லை. நியூயோர்க் டைம்ஸ் திட்டமிட்டே, 2004 தேர்தலுக்கு முன்னர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் மறைமுக கண்காணிப்பு திட்டங்கள் மீது ஓர் அறிக்கையை தயாரித்தது (புஷ் நிர்வாகத்தின் ஒரு கோரிக்கைக்கு உடன்பட்டு இதை செய்தது). இறுதியாக அந்த செய்தியிதழ் ஓர் ஆண்டுக்கு பின்னர் அதை "வெளியிட்டது" (ஏனென்றால், இது குறித்து ஜேம்ஸ் ரிசனினால் எழுதப்பட்ட ஒரு புத்தகம் வெளிவருவதாக இருந்தது. டைம்ஸ் செய்தியாளராக இருந்த இவருடைய செய்தியை அந்த இதழ் வெளியிடாமல் மறைத்திருந்தது). 31
மக்களின் அரசியல் நனவை முடமாக்கும் மேற்தட்டால் வழிநடத்தப்படும் கலாச்சாரம்: மக்களின் அரசியல் நனவை முடமாக்குவதற்கான ஒரு கருவியாக மக்களின் கலாச்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்று பார்க்கும் ஓவெல்லின் கண்ணோட்டத்தை, அமெரிக்க ஆளும் மேற்தட்டின் முயற்சிகளில் உணரலாம். "விளையாட்டு, குற்றங்கள், ஜோதிடம், உணர்வைத்தூண்டும் நாவல்கள்.... காமத்துடன் கூடிய திரைப்பட காட்சிகள்... (மற்றும்) மலிந்த இழிபொருள் இலக்கியம் ஆகியவை தவிர ஏறத்தாழ வேறெதையும் கொண்டிராத வெற்று செய்தியிதழ்களையும்," லாட்டரியையும் முக்கிய மனதைத் திசைதிருப்பும் கருவிகளாக அவர் பெயரிட்டுக்காட்டினார். பிரபலங்களைப் பற்றிய வதந்தி மற்றும் பங்குச்சந்தை வெற்றுப்பேச்சு போன்ற முக்கிய பிரிவுகளையும் அவர் முன்கூட்டியே கணித்தார். அவை குறிப்பிடத்தக்களவில் துல்லியமாகவே இருந்தன. பிரபலங்களைப் பற்றிய இதழ்களை வாசிக்கும் மற்றும் பொழுதுபோக்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் மக்கள், அவர்களின் வாழ்க்கைத் தரங்களை கீழுக்குக் கொண்டு செல்லும் சமூக சக்திகளைப் புரிந்து கொள்வதில் மிகவும் பின்தங்கி விடுகிறார்கள். இதனால் அவர்களால் தங்களைத் தாங்களே பாதுகாத்து கொள்ளவும் முடியாமல் போகிறது. 30
தலைவர் வழிபாடு: நாவல், பொலிவற்ற "எதிர்கால" இலண்டனில் ஏப்ரல் 1984இல் அமைக்கப்படுகிறது. "விக்டரி மேன்சன்ஸ்" என்றழைக்கப்படும் ஒரு சிதைந்த அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து கொண்டிருக்கும் ஓவெல்லின் முக்கிய கதாப்பாத்திரமான வின்ஸ்டன் ஸ்மித், வேக வைத்த முட்டைகோஸை முகர்ந்து பார்க்கிறார். "ஒரு பெரிய கரும்மீசையுடனும், கரடுமுரடான தோற்றத்துடனும் கூடிய சுமார் நாற்பத்தி ஐந்து வயது மதிப்புடைய ஒரு மனிதரின் பெரிய முகத்தை" எடுத்துக்காட்டும் பெரிய வண்ண சுவரொட்டி ஒன்று, கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் கண்ணில்படும் வகையில் இருப்பதாக காட்டப்படுகிறது. நாவலில் வரும், சேதமடைந்த இலண்டனில் பிக்பிரதரின் (Big Brother) (ஓஷியானியாவின் சர்வாதிகாரி பாத்திரம்) சுவரொட்டிகள் எங்கெங்கும் ஒட்டப்பட்டிருப்பது குறித்து 2010இல் படிக்கும் போது, இன்று வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்க நகரங்கள் முழுவதும் காணக்கிடைக்கும், "பாரக் ஒபாமாவின் நம்பிக்கை" சுவரொட்டிகளைக் குறித்து ஒருவரால் சிந்திக்காமல் இருக்க முடியாது. 29
"இது Party தன்னைத்தானே உலகிற்கு காட்டிக்கொள்ள தேர்ந்தெடுக்கும் புறத்தோற்றமாகும். ஒரு நிறுவனத்தை விட ஒரு தனிநபரைச் சார்ந்து சாதாரணமாக காணக்கூடிய அன்பு, அச்சம், செல்வாக்கு, உணர்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது தான் அதன் செயல்பாடுகள்" என்பதாக பிக் பிரதர் வர்ணிக்கப்படுகிறது. இந்த வரிகள் தான் 2008இல் அமெரிக்க வாக்காளர்களிடம் ஒபாமாவை--வோல் ஸ்ட்ரீட்டின் வேட்பாளர்--விற்க பயன்படுத்தப்பட்ட முக்கிய மக்கள்தொடர்பு மூலோபாயமாக இருந்தது. உண்மையில், யாருடைய நலன்களை முக்கியமாக ஒபாமா பிரதிநிதித்துவப்படுத்துகிறாரோ அந்த வங்கிகள் போன்ற நிறுவனங்களை விட, அன்பு, நம்பிக்கை போன்ற உணர்வுகளைத் "தனிநபர்களிடம் மிக எளிதாக காணலாம்" என்ற யோசனையை தமக்கு சார்பாக ஒபாமாவின் ஒட்டுமொத்த பிரச்சாரமும் வடிவமைக்கப்பட்டிருந்தது. 28
"நிகழ்காலத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டிருப்பவர்களே கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்....": "ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமான அடக்குமுறை வேலைகளுக்காக... கடந்த காலத்தை ஒவ்வொரு நாளும் திரிப்பதையே" நோக்கமாக கொண்டு வின்ஸ்டன் உண்மைக்கான அமைச்சகத்தில் வேலை செய்கிறார். ஒஷியானியாவின் உண்மைக்கான அமைச்சகத்தின் செயல்பாடுகள், அமெரிக்க பெருநிறுவன ஊடகங்களால் கையாளப்படுகின்றன. இவை ஒவ்வொரு கணமும் அல்-கொய்தா மற்றும் தாலிபான் போன்ற குழுக்களை அரக்கத்தனமாக மாற்றுகின்றன. அதேசமயம், இந்த இரண்டு குழுக்களுமே சமீபத்திய தசாப்தங்களில் அமெரிக்க புலனாய்வுத்துறையின் நிதியுதவியின் மில்லியன்கணக்கான டாலர்களால் ஊட்டி வளர்க்கப்பட்டன என்பதை , இந்த ஊடகங்கள் மிக கவனமாக "மறந்துவிடுகின்றன". இதுபோன்ற அசௌகரியமான உண்மைகள் ஒருபோதும் அரசாங்க கொள்கையுடன் ஒத்து வருவதில்லை என்பதால், பொதுவாக இவை ஞாபக துளைகளிலிருந்து தூக்கி எறியப்பட்டுவிடும். ஆகவே இந்த உண்மைகள் நிகழ்கால சூழ்நிலைக்கு ஏற்ப அவற்றை "சரியாக்க" திருத்தப்படும். ("பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள்-WMD" குறித்து பிரிட்டிஷ் MI6இன் தலைவர் 2002இல் புஷ்ஷை பாராட்டியதுடன், ஈராக் தாக்குதலுக்கும் திட்டமிட்டார்: "அறிவுக்கூர்மையும், உண்மைகளும் இந்த கொள்கையைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்தன"). ஒஷியானியா ஒருநாள் கிழக்கு ஆசியாவுடன் நட்பு கொண்டாடும், மறுநாளே கிழக்குஆசியாவுடன் யுத்தம் தொடுக்கும் அதைப் போலவே, அமெரிக்காவும் ஒருநாள் சதாம் ஹுசேனுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதத்துடனும் போரிடுகிறது, ஒருசமயம் றேகன் காலங்களில் தீவிரமாக இரண்டிற்கும் ஆதரவு காட்டியது. (ஆப்கானிஸ்தானில் இருக்கும் முஹாஜீன்களை றேகன் "சுதந்திர போராட்ட வீரர்கள்" என்றும், "நியாயமாக இவர்கள் ஸ்தாபக தந்தைகளுக்குச் சமமானவர்கள்" என்றும் அழைத்தார்.) 27
அரசாங்க எதிரிகளை ஒழிப்பதில் பொதுச்சடங்குகள்: அமெரிக்க தொலைக்காட்சியில் சதாம் ஹுசேன், ஹமாஸ், அஜ்மதினிஜத், காஸ்ட்ரோ மற்றும் ஹூகோ சாவீஜ் போன்ற உத்தியோகப்பூர்வ எதிரிகளின் பெயர்களைக் குறிப்பிட்ட போதெல்லாம் என்ன நடந்ததோ, அது தான் "இரண்டு நிமிட வெறுப்பு நேரமாக" நாவலில் இடம்பெற்றுள்ளது. FOX News மற்றும் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலின் தலையங்க பக்கம் போன்ற வலதுசாரி வெளிப்பாடுகளில் பெரும் ஆர்பாட்டத்துடன் இது நிகழ்ந்தது. இது "தாராளவாத" வெளியீடுகளிலும் குறைவாக இருந்துவிடவில்லை. இவற்றில் இந்த கூப்பாட்டு ஒலி குறைந்திருந்தது என்றாலும், அதன் கண்ணோட்டம் கணிசமாக அதேபோன்று தான் இருந்தது.ஒஷியானியாவில் பொது தூக்கிலிடுதலின் போது இருந்த இரத்தவெறி வேட்கை - சதாம் ஹுசேன் தூக்கிலிடப்பட்ட போதும், அதேபோன்று மூச்சுபேச்சில்லாமல் அமெரிக்க ஊடகத்தாலும் பாராட்டப்பட்டது. ஒருநாள் அமைச்சக உணவகத்தில் மதிய உணவிற்காக உட்கார்ந்திருக்கும் போது, "நேற்று சிறைக்கைதிகள் தூக்கிலிடப்பட்ட போது நீ சென்று பார்த்தாயா?" என்று வின்ஸ்டனின் நண்பர் சைம் அவரிடம் கேட்கிறார். 26
இந்த காட்சி சந்தேகத்திற்கு இடமின்றி அதே போன்று இப்போதுள்ளவர்களிடம், 2006 டிசம்பரில் ஹுசேன் தண்டிக்கப்பட்ட போது அமெரிக்கா முழுவதும் இடம் பெற்றிருந்தது. 25
பொழுதுபோக்காக, உள்ளூர் "எதிரிகள்" மீது குண்டுவீசி தாக்குதல்: பக்கம் 7இல் வின்ஸ்டன் திரைப்படத்திற்குச் செல்கிறார். அங்கே ஒரு யுத்த செய்திபடத்தைப் பார்க்கிறார்; ஒஷியானியாவின் குண்டுவீசும் ஹெலிகாப்டரால் ஆதரவற்ற குடிமக்கள் துண்டுதுண்டாக சிதைக்கப்படும் காட்சியால், பார்வையாளர்கள் "மிகவும் கொடூரத்தை நோக்கி திருப்பப்படுகிறார்கள்" என்று அவர் தம்முடைய நாளேட்டில் குறித்து கொள்கிறார். அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பரந்த அடித்தளங்கள், திரைப்படங்கள் மற்றும் வீடியோ விளையாட்டுக்களின் வார்த்தெடுக்கும் முயற்சியும், ஊக்குவிப்பும் அதே அடிப்படை உள்ளுணர்வுகளைக் கொண்டிருக்கிறது. 24
ஓர் அரசியல் கலாச்சாரம் அதன் எதிர்மறையான நற்பண்புகளைக் காட்டி தன்னைத்தானே மூடி மறைக்கிறது: "நிஜமான சோசலிச போராட்டம்... அல்லது சோசலிசத்தின் பெயரில் நிலைநிற்கும் ஒவ்வொரு கொள்கையையும் Party (நாவலில் வரும் கட்சியின் பெயர்) நிராகரிக்கிறது, நிந்திக்கிறது" என்பதாக "கோல்ட்ஸ்ரைன்" காண்கிறார். இது 1949இல் ஸ்ராலினிசத்தைப் பற்றிய ஓவெல்லின் தீர்க்கமான மதிப்பீடாக இருந்தது. இந்த வரிகள் பின்வரும் அதன் நவீன-கால ஒப்பீட்டை விளக்குகிறது: "அமெரிக்க அரசாங்கம் ஜனநாயகத்தின் நிலையான சாரத்தைக் குழிதோண்டி புதைக்கிறது அல்லது மறைக்கிறது. மேலும் அதையே ஜனநாயகம் என்ற பெயரில் செய்கிறது." 23
குடிமக்களின் மீது போலிஸின் அச்சுறுத்தல்: ஒஷியானியாவில் மிகவும் அச்சுறுத்தலாக இருந்த, ஸ்தூல வடிவில் அரசாங்க அமைச்சகத்தை நிறுவுவதுமான அன்பிற்கான அமைச்சகம் என்பது "கருப்பு சீருடைகள் அணிந்த, லத்திகள் இணைக்கப்பட்ட ஆயுதங்களுடன் கெரில்லா காவலர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது." இந்த காவலர்களைப் போன்றே நிஜ-வாழ்வின் எதிர்பலத்தில் அமெரிக்க அரசியல் கூட்டங்களிலும் மற்றும் உலக வர்த்தக அமைப்பின் கூட்டங்களுக்கு வெளியிலும் கவச உடையணிந்து, அச்சுறுத்தும் வகையில், அசுரத்தனமாக நடந்து கொள்ளும் அல்லது நிராயுதபாணியான போராட்டக்காரர்களை லத்திகளால் அடிக்கும் அளவிற்குக் கூட காட்சிகள் காணப்படுகின்றன. அஹ்மடினிஜாட்றிற்கு எதிரான ஈரானிய போராட்டங்களையும், சாவெஸிற்கு எதிரான வெனிசூலா போராட்டங்களையும் "நியாயமான எதிர்ப்புகளுக்கான" உதாரணங்களாக சித்தரிக்கும் ஊடகங்கள், பொதுவாக போராட்டக்காரர்களை "இளம் குற்றவாளிகளாகவும்" "அரசு ஒழிப்பு ஆதரவாளர்களாகவும்" குறிப்பிட்டுக் காட்டுகின்றன. ("ஓவெல்லியனைப்" பற்றி பேசுகையில்: சமீபத்திய அமெரிக்க அரசியல் கூட்டங்களில் எதிர்ப்பைக் காட்ட விரும்பிய யுத்த எதிர்ப்பு போராட்டக்காரர்கள், சுருள்சுருளாக சுற்றப்பட்ட முள்வேலிகளுக்குப் பின்னால் ஊடகங்களின் பார்வையில் தெரியாமல், கூட்ட அரங்குகளிலிருந்து வெகு தூரத்திலேயே நிறுத்தப்பட்டார்கள். இந்த முள்வேலிகள்--எவ்வித அவமதிப்பையும் பொருட்படுத்தாமல்--"சுதந்திர பேச்சு மண்டலங்கள்" என்று அழைக்கப்பட்டன.) 22
அரசு கொள்கையாக இருக்கும் சீரழிப்பும், இழிவுபடுத்தலும்: சித்திரவதை குறித்த புனைவுகளில் நாவல் திகிலூட்டும் கற்பனைகளைக் கொண்டிருக்கிறது. ஒரு புள்ளியில், வின்ஸ்டெனின் எதிர்ப்புணர்வு எந்தளவிற்கு தாக்குபிடிக்கிறது என்பதையும், அனுதாபகரமாக இருக்கிறது என்பதையும் காட்ட, புலனாய்வாளர் ஓ'பிரென் வின்ஸ்டெனின் பற்களில் ஒன்றை பெயர்த்துவிடுகிறார். பின்னர் அறை எண் 101இல் பிரபலமான உச்சக்கட்ட சித்திரவதைக் காட்சியைத் தொடர்கிறார். அங்கே, எலி போடப்பட்ட முகமூடியை வின்ஸ்டனின் தலையில் இட்டு கட்டுகிறார். சமீபத்திய அமெரிக்க சித்திரவதை செயல்பாடுகளில், ஓர் ஆதரவற்ற, அச்சுறுத்தப்பட்ட கைதி இருக்கும் ஒரு மூடிய பெட்டியில் "வெறியோடு கூடிய உயிரினங்கள்" விடப்பட்டன. அந்த "உயிரினங்களின்" வெளிப்பாடுகளை, இன்றைய ஒரு வாசகர் உடனடியாக சிந்தித்து பார்க்க முடியும். அதன் முழு நோக்கத்திற்கு பாலியல் வல்லுறவு, பாலியல் இழிவு, மத நம்பிக்கைகளை திட்டமிட்டு ஒடுக்குவது, மாதவிடாய் இரத்தத்தில் தோய்ந்த பெண்களின் உள்ளாடைகளை எடுத்து முஸ்லீம் கைதிகளின் தலையில் போடுவது ஆகியவற்றையும் உட்கொண்டிருந்த அமெரிக்க சித்திரவதை முறைகளுக்கு, இவையும் கூட குறைவாகவே இருக்கின்றன. மனச்சாட்சியின்மை மற்றும் சித்திரவதை என்று வரும்போது, "ஓவெல்லியன்" என்ற அடைமொழியும் கூட அமெரிக்க இராணுவ-உளவுத்துறை அமைப்புகளின் சூழ்ச்சித்திறனுக்குப் போதியளவிற்கு பொருந்துவதாக இல்லை. 21
வர்க்க நனவும், சமூக சமத்துவமும்
ஓவெல்லின் புத்தகம் அமெரிக்காவில் உற்சாகமான வரவேற்பைப் பெற்றது. அது பிரசுரிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், டைம் இதழ் அதை "அருமையான திகில் படைப்பு" என்று குறிப்பிட்டது. ஆனால் தொடக்கத்தில் (விலங்கு பண்ணையுடன் இணைத்து) அதை "கம்யூனிசம்" மீதான ஒரு தாக்குதலாக வடிவமைத்து காட்டியது. (3)
எவ்வாறிருப்பினும் (முந்தையதற்கு மறைமுகமாக குறிப்புகளை அளித்திருந்ததைப் போன்றே) ஓவெல், மேற்கத்திய ஜனநாயகங்களின் போக்குகள் குறித்து இரண்டு புத்தகங்களிலும் எச்சரிக்கைகளை அளித்திருந்தார். அந்த புத்தகம் சமுதாயத்தின் உந்துசக்தியாக இருக்கும் ஒரு தெளிவான மற்றும் வலுக்கட்டாயமான வர்க்க அடிப்படையிலான பகுப்பாய்வை வெளிப்படுத்தி இருந்த நிலையில், அமெரிக்காவில் அது வரவேற்பைப் பெற்றதென்பது ஏதோவொருவகையில் முன்னுக்குப்பின் பொருந்தாமல் இருந்தது. வர்க்க விழிப்புணர்வு அமெரிக்க சிந்தனையிலிருந்து திட்டமிட்டு தூக்கியெறியப்படும் நிகழ்வுமுறை இருந்த 1949இல் எழுந்துவந்த அரசியல் சட்டவரைவுகளை, இந்த முன்னோக்கு மறுத்துரைத்தது. நாவலின் வர்க்க நனவிற்கு எதிராக ஏற்பட இருந்த ஒரு பின்னடைவிலிருந்து, அதன் வெளிப்படையான "கம்யூனிச-எதிர்ப்பு" அதை பாதுகாத்திருக்கலாம். வர்க்க நனவானது, 1949இல் அமெரிக்காவில் ஒரு சட்டவிரோத சிந்தனையாக இருந்தது, இன்றும் அது அவ்வாறு தான் இருக்கிறது. 20
வின்ஸ்டன் சந்தேகத்திற்கிடமின்றி "ஒஷியானிய தொழிலாள வர்க்கத்தின்" (proles) மீது அனுதாபமும், நம்பிக்கையும் கொண்டிருந்தார். ஒஷியானிய தொழிலாள வர்க்கத்திடம் எதிர்காலத்தைப் பற்றிய வெறும் நம்பிக்கை மட்டுமே இருந்தது என்று குறைந்தபட்சம் நான்கு முறையாவது பின்வரும் வார்த்தைகளில் விவரித்திருந்தார்: "அங்கே நம்பிக்கை இருந்ததென்றால், அது ஒஷியானிய தொழிலாள வர்க்கத்தில் தான் நிச்சயம் தங்கி இருக்க வேண்டும், ஏனென்றால் அங்கே, அந்த மதிப்பிழந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தில், அதாவது ஒஷியானியாவின் மக்கள் தொகையில் எண்பத்து-ஐந்து சதவீதம் மக்கள் மட்டும் தான் Partyஐ ஒருபோதும் மீண்டும் உருபெற முடியாத அளவிற்கு அழிக்கும் சக்தியாக இருக்க முடியும்." அந்த ஒஷியானிய தொழிலாள வர்க்கம், ஏதோவொருவகையில் அவர்களின் சொந்த வலிமை குறித்து நனவு பெற்றுவிட்டால்... மேலெழுந்து நின்று, ஒரு குதிரை உடலை குலுக்கி ஈக்களை விரட்டுவது போல அவர்களால் அசைத்துவிட முடியும். அவர்கள் முடிவெடுத்துவிட்டால், அடுத்தநாள் காலையே கட்சியை அவர்களால் துண்டுதுண்டாக உடைத்துவிட முடியும்" என்று வின்ஸ்டன் நம்பினார். "ஒஷியானியதொழிலாள வர்க்கம் மனிததன்மையோடு நின்றிருந்தோடு, அவர்கள் எதிர்ப்புணர்வோடு இல்லை" என்ற நிலையில், கட்சி உறுப்பினர்களின் தனிமனித இறையாண்மை உணர்வுகளை நசுக்குவதில் ஒஷியானியாவின் ஆளும் தட்டு வெற்றி பெற்றிருந்தது. கட்சி பகிர்ந்து கொள்ளாத, அதேசமயம் அழிக்க முடியாத ஒரு பலத்தை அவர்கள் கொண்டிருந்தார்கள்... எதிர்காலம் ஒஷியானியா தொழிலாள வர்க்கத்திற்குச் சாதகமாக இருந்தது." 19
"எங்கெல்லாம் சமத்துவம் நிலவுகிறதோ, அங்கெல்லாம் புரிந்துணர்வு இருக்கும்" என்பதை வின்ஸ்டன் பிரதிபலிக்கிறார்--விண்ணைத்தொட்டு வரும் சமுக சமத்துவமின்மையால் பாத்திரப்படுத்தப்பட்ட ஓர் அமெரிக்காவிற்கு இதுவும் ஒரேமாதிரி இணக்கமுள்ள ஒரு புள்ளியாக உள்ளது. சமுதாய படிநிலைக்கும், செல்வசெழிப்பின் பகிர்விற்கும் இடையிலான தொடர்பைப் பின்வரும் வார்த்தைகள் படம் பிடித்துக் காட்டுகின்றன: "எல்லாவழியிலும் செல்வசெழிப்பு அதிகரித்து வருவதென்பது, ஒரு படிநிலை சமுதாயத்தின் பேரழிவை அச்சுறுத்தியது.... சந்தேகத்திற்கு இடமின்றி, ஒரு சிறிய தனிச்சலுகைப்பெற்ற குழுவின் கைகளில் 'அதிகாரம்' இருந்த போதினும், 'செல்வவளத்தை' சமமாக பகிர்ந்தளிக்கும் ஒரு சமுதாயத்தைக் கற்பனை செய்து பார்ப்பது சாத்தியமாகவே இருந்தது. ஆனால் அதுபோன்ற ஒரு சமுதாயம் நீண்டகாலத்திற்கு நிலையாக இருக்க முடியாது. அதிலிருந்த ஓய்வும், பாதுகாப்பும் அனைவராலும் அனுபவிக்கப்பட்டது, வழக்கமாக ஏழ்மையால் ஏமாற்றப்பட்டு வரும் மனிதயினத்தின் பரந்த மக்கள், அவர்களைக் குறித்து அவர்களே சிந்திக்க தேவையான கல்வியறிவை அடைவார்கள்; பின்னர் அவர்கள் அதை அடைந்த உடனேயே, அவர்கள்... தனிச்சலுகைப் பெற்ற சிறுபான்மையினர் எந்த செயல்பாட்டையும் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்வார்கள், பின்னர்... அதை துடைத்தெறிவார்கள்." ஓர் உயர்ந்த சமத்துவமற்ற சமுதாயத்தில், ஆட்சியாளர்களின் கண்ணோட்டத்தில், இதுவோர் அபாயகரமானதாகவும், உண்மையில் நிலைகுலையச் செய்யும் சிந்தனையாகவும் இருக்கிறது. 18
இயல்பிலேயே இவை தீவிர கருத்துக்களாக இருக்கின்றன--ஆனால் ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக POUM உடன் சேர்ந்து சுயவிருப்புடன் போராடிய ஓர் எழுத்தாளருக்கு (ஓவெல்) இது ஆச்சர்யமூட்டுவதாக இல்லை. குறிப்பாக, தொழிலாள வர்க்கம் மட்டுமே உண்மையான புரட்சிகர சமூக சக்தி என்ற அதன் அடையாளம் நேரடியாக மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸை எதிரொலிக்கின்றன. ஒஷியானியா தொழிலாள வர்க்கமான Proles, நனவுபூர்வமாக எழுச்சி பெற்று, "ஒரு குதிரை தன்னைத்தானே குலுக்கி அதன் மீதிருக்கும் ஈக்களை விரட்டுவதைப் போல" Partyஐ துண்டுதுண்டாக உடைக்கிறது என்ற வரிகள் தொழிலாள வர்க்கம், அதன் சொந்த நலன்களின் ஒரு சுயாதீனமான உணர்வோடு, தானே ஒரு வர்க்கம் என்ற அதன் சொந்த விழிப்புணர்வின் மூலம் பெறப்பட்ட அதன் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதில் ஒரு பெருந்திரளான மக்கள் கீழிருந்து மேலே எழுச்சியுறும் கருத்தை விளக்கிக் காட்டுகிறது. 17
மக்களை "இரட்டை நிலைப்பாட்டில்" பழக்குதல்
"Partyஐ பற்றிய உலக-கண்ணோட்டம், அதை புரிந்துகொள்ள முடியாத வகையில், மக்கள் மீது மிக வெற்றிகரமாக திணிக்கப்பட்டது. அவர்கள்... என்ன நடந்து கொண்டிருந்தன என்பதை கவனிக்க பொது நிகழ்வுகளில் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதால், யதார்த்தத்தின் மீதான மிக மோசமான புறக்கணிப்புகளை ஏற்றுகொள்ளுமாறு அவர்கள் செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்பதை வின்ஸ்டன் பிரதிபலிக்கிறார். பின்னர் சிறிது கழித்து: "Partyஇன் கீழ்நிலை உறுப்பினரும் கூட போட்டியாளராக, தொழில் அதிபராக, குறுகிய வட்டத்தில் புத்திசாலியாவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பயம், வெறுப்பு, முகஸ்துதி, மற்றும் சின்றின்ப வெற்றி போன்ற உணர்வுகளோடு ஓர் ஆராய்ச்சி சிந்தனையற்ற, அலட்சியமான கொள்கை வெறிபிடித்தவராக அவர் இருக்க வேண்டும் என்பதும் அவசியமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் யுத்தம் கோரும் ஓர் ஆட்சிக்கு உளவியல்ரீதியாக ஒத்து வருபவராக இருக்க வேண்டும்." நவீன-கால அமெரிக்காவின் உத்தியோகபூர்வ அரசியல் கலாச்சாரத்தால் ஊக்குவிக்கப்பட்ட மனோநிலைகளின் மிக துல்லியமான விளக்கத்தை, இதைவிட வேறெங்கும் காண்பது மிகவும் சிரமமாகும். 16
இரட்டை நிலைப்பாட்டின் முழுவிளக்கம் என்னவென்றால்: "மனதில் ஒரேநேரத்தில், இரண்டு முரண்பட்ட நம்பிக்கைகளை வைத்திருப்பதும், அவை இரண்டையுமே ஏற்றுக்கொள்வதுமாகும்.... உண்மையில் அவற்றை நம்புகின்ற அதேவேளையில், திட்டமிட்டு பொய் கூறுவது, அசௌகரியமான எந்த உண்மையையும் மறந்துவிடுவது, பின்னர் மீண்டும் தேவைப்பட்டால், அது தேவைப்படும் வரைக்கும் அதை மீண்டும் திரும்ப பற்றிக் கொள்வது, புறநிலை உண்மைகளின் இருப்பை மறுப்பது, பின்னர் ஒருவிஷயம் தடுக்கும் போது உடனே உண்மையைக் கணக்கில் எடுப்பது--இவை அனைத்தும் இன்றியமையாத அவசியமாக இருக்கிறது. இரட்டை நிலைப்பாடு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கும் கூட இரட்டை நிலைப்பாட்டில் பயிற்சி தேவைப்படுகிறது. இந்த சொல்லைப் பயன்படுத்துவதன் மூலமாக, ஒருவர் யதார்த்தத்துடன் முரண்படுகிறார். இரட்டை நிலைப்பாட்டை புதிதாக செய்யும் போது, ஒருவர் இந்த அறிவையும் கூட இழந்துவிடுகிறார். இவ்வாறு வரையறையில்லாமல், எப்போதும் பொய்யானது உண்மையை ஒருபடி தாண்டி செல்கிறது." 15
இந்த வரிகள், 2000ஆம் ஆண்டு தேர்தலில் உச்சநீதிமன்றம் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷை ஜனாதிபதியாக நியமித்ததில் இருந்து, அமெரிக்க அரசியலில் நிகழ்ந்து வரும் உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் அறிகுறிகளைப் பாத்திரப்படுத்துகின்றன. தோற்றப்பாட்டளவில், அந்த நேரத்திலிருந்து ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் இரட்டை நிலைப்பாட்டின் அடிப்படையில் தான் பொதுமக்கள் முன்னால் முன்வைக்கப்பட்டன. 14
சான்றாக, ஈராக் தாக்குதலுக்குப் பின்னர் சில மாதங்களிலேயே, அங்கே பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள் என்பதே இருக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு அமெரிக்க ஊடகங்கள் தள்ளப்பட்டன. ஆனால் அர்த்தத்தை அல்லது விளைவை கைவிட்டுவிட்டாலும், இந்த உண்மை அங்கே நிகழ்ந்தது. "குறைபாடுடைய உளவுத்திறனின்" (flawed intelligence) ஒரு விஷயமாக ஊடகம் சாதாரணமாக அதை புறக்கணித்துவிட்டது. (நூரன்பேர்க்கால் வரையறுக்கப்பட்டது போன்று) ஒரு பெரிய யுத்த குற்றத்திற்கு இதுபோன்றதொரு சொல்லை பொருத்துவது தான் இரட்டை நிலைப்பாடு. ஏனென்றால் ஒருபுறம், அது தவறை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தவறை ஏற்றுக்கொண்ட உடனேயே இரண்டு புதிய பொய்கள் உருவாகின்றன. ஒன்று: உளவுத்திறனின் தவறு மிகவும் சிறியது என்பது. இரண்டாவது, அமெரிக்க உளவுத்திறனின் துல்லியப்பாடு மட்டுமே பிரச்சினையாக இருந்தது என்பது ("பொய் எப்போதும் உண்மையை விட ஒருபடி மேலாக தான் இருக்கும்"). 13
யுத்தம் தொடுக்கப்படுவதற்கான காரணமே தவறாக இருக்கும்போது அதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்ற நிலையில், யுத்தத்தின் பொதுவான பாத்திரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், பாரிய அழிவுக்குரிய ஆயுதங்கள் இருக்கவில்லை என்று ஒத்துக்கொள்வதென்பது இரட்டை நிலைப்பாட்டிற்கான மற்றொரு எடுத்துக்காட்டாகும். இரண்டு நம்பிக்கைகளுக்கும் இடையில் தாவுவதன் மூலமாக--ஒன்றை விவாதிக்கும் போதே மற்றொரு நம்பிக்கையை முற்றிலுமாக சிலநிமிடத்திற்குக் கைவிடுவதன் மூலமாக--மட்டுமே ஒரேநேரத்தில் ஒருவர் இரண்டு நம்பிக்கையையும் வைத்திருக்க முடியும். 12
இந்த நாவலில், புலனாய்வாளர் ஓ'பிரென் நான்கு விரல்களைத் தூக்கி காட்டி, ஐந்து என்று கூற வின்ஸ்டனை நிர்பந்திக்கிறார். இந்த முறையீடு, தர்க்கரீதியாக, தேசிய ஆவணங்களின் உரைகளில் இடம் பெற்றிருக்கும், மே 21, 2009-இல் ஒபாமா வெளிப்படுத்திய உரையில், சித்திரவதைப் பற்றிய அவரின் நிலைப்பாட்டை விட மோசமானதாக இல்லை. சட்டவிதிகளில் முன்னோடி என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் நிஜமான சாசனத்திற்கு அடுத்து நிற்பது போலவும் காட்டிகொண்டு, சித்திரவதை என்பது தவறானது; நாம் நம்முடைய அரசியலமைப்பின் மதிப்புகளைத் தாங்கிப்பிடிக்க வேண்டும்; "நாங்கள் சித்திரவதையில் ஈடுபட மாட்டோம்" என்று ஒபாமா அறிவித்தார். ஆனால் அதற்கு பின்னர், சித்திரவதைக்கு உத்தரவிட்ட அமெரிக்க அதிகாரிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதையும், அமெரிக்க சித்திரவதையை ஆவணப்படுத்திய புகைப்படங்கள் பொதுமக்களுக்கு மறைத்துவைக்கப்படும் என்பதையும் சேர்த்துக் கொண்டார். அதே உரையில் அவர், "அசாதாரண போலித்தனங்களைக்" காப்பாற்றவும், காலவரையற்ற "தடுப்புக் காவலின்" (preventive detention) இடைக்கால கொள்கையை அறிவிக்கவும் தவறவில்லை. 11
"யுத்தமே அமைதி"
டிசம்பர் 10, 2009 இல் நோபல் பரிசை ஏற்றுக்கொண்டு இதே தொனியில் தொடர்ந்த ஒபாமா, ஒரு வித்தியாசமான ஓவெல்லியன் காட்சியை அருமையாக விளக்கினார். இதை உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே கூடிய கவனமெடுத்து மதிப்பாய்வு செய்திருக்கிறது. வரலாற்றின் மிக விசித்திரமான பெரிய யுத்த இயந்திரத்தின் தலைமை தளபதியும் (commander-in-chief), தற்போது இரண்டு ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு (ஒன்றை அவரே வலிந்து ஏற்படுத்தி இருந்தார்) மத்தியில் இருப்பவரும், ஈரான் "நிர்மூலமாக்கப்படும்" என்று எச்சரித்த முதன்மை இராஜாங்க அதிகாரியை கொண்ட ஒரு நிர்வாகத்தின் தலைவராக இருப்பவருக்கு, உலகின் சிறந்த சமாதானதூதர் என்ற புகழாரம் அளிக்கப்பட்டது. மார்ட்டீன் லூதர் கிங் ஜூனியர் மற்றும் காந்தி ஆகியோரின் "அறநெறிகள் மற்றும் வாழ்க்கை" ஆகியவற்றிலிருந்து தேவைப்பட்ட மிக மேலோட்டமான கருத்துக்களுடன் அவருடைய உரையைத் தொடங்கிய ஒபாமா, அடுத்த வாசகத்திலேயே, அவர்களின் மெய்யியல் (philosophy) அவரின் சொந்த வெளிநாட்டு கொள்கையில் தாக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்ற எவ்வித நப்பாசைகளையும் துடைத்தெறிவதிலும் கவனமாக இருந்தார். ("ஆனால் ஓர் அரசின் தலைவராக இருந்து என்னுடைய நாட்டை பாதுகாக்கவும், காப்பாற்றவும் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டிருப்பதால், அவர்களை மட்டுமே எடுத்துக்காட்டுகளாக கொண்டு நான் வழிநடக்க முடியாது" என்றார்.) 10
அமெரிக்க ஜனாதிபதி பின்னர் நேரடியாகவே அரச வன்முறையை முழுமையாக நியாயப்படுத்த குரல் கொடுத்தார் (நிச்சயமாக, அது அமெரிக்காவால் தான் முன்னெடுக்கப்படுகிறது). அவர் கூறுகையில், "பால்கனில் செய்தது போல, மனிதாபிமான அடித்தளத்தில் பலத்தினை நியாயப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்" (அதாவது, அமைதிக்கான யுத்தம்). சர்வதேச கருத்துக்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையின் கருத்தையும் புறகணித்துவிட்டு ஈராக்கில் தாக்குதல் நடத்திய ஜனாதிபதி, "அவருடைய நாடோ அல்லது வெறெந்த நாடோ, தாங்கள் பாதையின் ஒழுங்கை கைவிடும்பட்சத்தில், பாதை விதிகளைப் பின்தொடர வேண்டும் என்று மற்றவர்களை வற்புறுத்த முடியாது" என்று முறையிட்டார். சவூதி அரேபியா, எகிப்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அரசாங்கங்களுடன் மிக நெருக்கமாக இணைந்திருந்த ஜனாதிபதி, "தங்கள் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கங்கள் எங்களின் நெருங்கிய தோழர்களாக இருக்கிறார்கள்" என்று முறையிட்டார். இரண்டாம் உலக யுத்தத்தில் இருந்து பல ஜனநாயகங்களைத் தூக்கி எறிந்திருக்கும் மற்றும் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரங்களால் மாற்றி அமைத்திருக்கும் இராணுவத்தையும், புலனாய்வு அமைப்பையும் (CIA) கொண்டிருக்கும் ஒரு நாட்டின் ஜனாதிபதி, "அமெரிக்கா ஒருபோதும் ஒரு ஜனநாயகத்திற்கு எதிராக ஒரு யுத்தத்தைத் தொடுத்ததில்லை" என்று முறையிட்டார். 9
மூச்சடைக்கும் பகட்டாராவாரங்களுடன், அவர் கூறினார், "இப்போதிருக்கும் உலகில், இன்று எங்கோ, இங்குமங்குமாக, ஒரு படைவீரர் தாம் துப்பாக்கிச்சூடு நடத்தாமல், ஆனால் அமைதிக்காக உறுதியாக நிற்பதைப் பார்க்கிறோம். நம் ஒவ்வொருவருடைய ஆன்மாவிற்குள்ளும் இன்றும் கிளர்தெழும் அந்த தெய்வீக உயிர்ப்பைக் கொண்டிருக்கும் உலகை நாம் எட்டுவோம்... இந்த உலகில் இன்று எங்கோ, ஓர் இளம் எதிர்ப்பாளர் அவருடைய அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொள்கிறார். ஆனால் அதை எதிர்த்து நடைபோடும் தைரியத்தையும் அவர் கொண்டிருக்கிறார். இன்று எங்கோ ஓரிடத்தில், ஓர் அன்னை தன்னுடைய குழந்தையைப் படிப்பிக்க இன்றும் வறுமையை முகங்கொடுத்து வருகிறார். அந்த குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப அவருக்குத் தேவையான சில நாணயங்களுக்காக அவர் பாடுபட்டு வருகிறார். ஏனென்றால், இந்த கொடூரமான உலகில் அந்த குழந்தையின் கனவிற்கும் இடமிருக்கிறது என்று அவர் நம்புகிறார்." 8
இந்த வகையான வார்த்தைஜாலங்கள் --2008 பிரச்சாரத்தின் போது அமெரிக்க ஊடகத்தால் இந்த "நாவன்மை" பெரிதும் மதிக்கப்பட்டது-- ஓவெல்லின் காட்சிகளை நினைவுகூரச் செய்கின்றன. அதாவது, "அரசியல் மொழி... பொய்களை உண்மையாக்கவும், மதிக்க வேண்டியதை அழிக்கவும், ஒரு தூய்மையான இறையாண்மை போன்ற தோற்றத்தைக் காட்டவுமே அமைக்கப்படுகின்றன." (4) ஒபாமாவின் "அமைதியைக் காப்பாற்றும்" வீரர், வழக்கமான சூறையாடும் காரணங்களுக்காக ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் பெருமைவாய்ந்த அமெரிக்க வீரராக (அல்லது நேசநாட்டு வீரராக) இருப்பார். அந்த "இளம் எதிர்ப்பாளர்" இயல்பாகவே, ஈரான் அல்லது வெனிசூலா போன்று, வாஷிங்டனால் ஓர் உத்தியோகபூர்வ எதிரியாக கருதப்பட்டு, அரசாங்கத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருப்பார். 7
"அரசாங்க காட்டுமிராண்டிதனத்தின்" மீதான ஒபாமாவின் அதிருப்தி சந்தேகத்திற்கிடமின்றி, நேரடியாக அமெரிக்க இராணுவத்தையோ அல்லது பிறநாட்டிற்காக போராடும் துருப்புகளால் அல்லது அமெரிக்க ஆதரவிலான கைப்பாவை அரசாங்கங்கள் மற்றும் ஏனைய மாற்றீடுகளால் குடிமக்களுக்கு எதிராக செய்யப்படும் வன்முறையையும், சித்திரவதையையும் குறிப்பிடவில்லை. "வறுமையால் தண்டிக்கப்பட்ட தாய்" என்பது கொள்கையளவில், அருவமாக உள்ள ஒரு தாயாக அல்லாது "இங்கும் அங்கும்" வாழ்ந்து கொண்டிருக்கும் இவர், ஸ்திரமான நிலைமைகளின் விளைவால், அதாவது பணிகள் வெளியிடங்களுக்கு அனுப்பட்டதால் (outsourcing) ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை அல்லது வோல்ஸ்ட்ரீட்டால் தோற்றுவிக்கப்பட்ட நிதி நெருக்கடி, அல்லது அந்த நெருக்கடியின் விளைவாக சமூக சேவைகளின் வெட்டுக்கள் போன்றவைகளால் ஏற்பட்ட வறுமையில் இருப்பவராவார். அதாவது ஒட்டுமொத்த அரசியல் அமைப்பின் ஆதரவுடன் பெருநிறுவன அமெரிக்காவால் அமெரிக்க உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்பட்ட நிலைமைகளில் இருந்து உருவானவர். 6
"உலகளவில் பொய்ம்மை நிறைந்த காலக்கட்டத்தில்..."
"Ingsoc" என்பதை "உத்தியோகபூர்வ அமெரிக்க கொள்கை" என்பதைக் கொண்டு மாற்றினால், அந்த பத்தி அமெரிக்க ஊடகம் இன்றைய பிரச்சினைகள் குறித்து "விவாதிப்பதாக" நடிக்கும் நிகழ்முறைக்கு மிகப் பொருத்தமாக பொருந்தி நிற்கும். சான்றாக, அமெரிக்கா அல்லது அதன் நேச நாடுகளின் தாக்குதலாக இல்லை என்றால், "இராணுவ தாக்குதல்" என்பதையே அமெரிக்க ஊடகங்கள்பயன்படுத்தும். அமெரிக்கா அல்லது அதன் நேச நாடுகளின் தாக்குதல் என்றால் அந்த நடவடிக்கையானது ஸ்திரப்படுத்தல், அமைதி-நிலைநாட்டல், அல்லது சுதந்திரப்படுத்தல் என்றும் கூட மாறிவிடுகிறது. அமெரிக்க இராணுவ தாக்குதலை ஒரு "தாக்குதலாக" பார்க்கத் தவறும், ஒப்புமையை உள்வாங்கா கலையில் ஒருவர் நிபுணத்துவம் பெற வேண்டும். அதேபோல இராணுவ சதிக்கு அமெரிக்கா ஒத்துழைத்தால் ஒழிய, இராணுவ சதியும் விரும்பப்படுவதில்லை. ஆனால் அதுவே அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நடந்தால் அதுவொரு ஜனநாயக போராட்டமாக ("வண்ண" புரட்சிகள் அல்லது இதர பிறவாக) மாறிவிடுகிறது. அதேபோல, பொதுமக்களின் மரணம் அமெரிக்க கொள்கை அல்லது அமெரிக்க அதிகாரிகளால் நிகழ்ந்துவிட்டால், அது வருந்தத்தக்கதும் ஆனால் தவிர்க்கமுடியாத உடனிகழ்வின் விளைவுகளாகவும் மாறிவிடுகின்றன; சித்திரவதை என்பது நவீன புலனாய்வு நுட்பங்களாக ஆகிவிடுகின்றன. அப்பாவித்தனமான "மங்கல வழக்கிலிருந்து" வெகுதூரத்தில் விலகி நின்று, இதுபோன்ற மொழி திரித்தல்கள் அமெரிக்க அரசியல் கலாச்சாரத்தில் நிலவும் சக்திவாய்ந்த சிந்தனை-முறையின் முக்கிய பாத்திரத்தை எடுத்துகாட்டுகின்றன. 4
அன்புசார் அமைச்சகத்தில் "மீண்டும் கற்பிக்கப்பட்ட" நிலையில், வின்ஸ்டன் "கிரைம்ஸ்டாப்பில் பயிற்சிபெற வேலையில் அமர்த்தப்படுகிறார். 'உலகம் தட்டையாக உள்ளது என்று Party கூறுகிறது,' 'நீரை விட பனி கனமானது என்று கட்சி கூறுகிறது' என்பது போன்ற முன்மொழிவுகள் அவருக்கு வழங்கப்பட்டு, அவர்களோடு முரண்படும் வாதங்களைப் புரிந்துகொள்ளாமல் இருப்பதில் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதில் அவருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது சாதாரண விஷயமில்லை... இதற்கு ஒருவகையான மனவலிமை பயிற்சியும், ஒருசமயத்தில் தர்க்கத்தை மிகவும் சுவாரசியமாக பயன்படுத்தும் திறமையும், வேறொருசமயத்தில் கொடூரமான தர்க்க குறைபாடுகளுக்கு நனவின்றி இருக்கும் திறமையும் தேவைப்படுகிறது." 3
ஒபாமா அவருடைய பதவியேற்பு விழாவிற்குச் சற்று முன்னர் அளித்த ஒரு தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்ட ஒரு முற்சேர்கையின் தர்க்கத்தை ஜீரணிக்கவும் கூட இதேபோன்ற "மனவலிமை" தேவைப்படுகிறது. சித்திரவதை மற்றும் முன்னனுமதியின்றி ஒட்டுகேட்டல் போன்றவை உட்பட, புஷ் நிர்வாகத்தின் குற்றங்களைச் சுயாதீனமாக விசாரிக்க ஒரு சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பீர்களா என்று கேட்கப்பட்ட போது, ஹாவர்டில் பயிற்றுவிக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்ட முன்னாள் பேராசிரியர், "நாம் பின்நோக்கி திரும்பி பார்க்காமல், முன்னோக்கி பார்க்க வேண்டும் என்பதில் தாம் நம்பிக்கை வைத்திருப்பதாக" பதிலளித்தார். அதாவது, எதற்காகவும் யாரையும் ஒருபோதும் தண்டிக்காமல் தள்ளுபடி செய்துவிடும் கொள்கை - ஆனால் இது அமெரிக்க அரசால் அல்லது அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் நிதியியல் கோஷ்டிகளால் நடத்தப்படும் குற்றங்களுக்கு மட்டுமே ஏற்றுகொள்ளப்படும் என்பதை ஒருவர் உறுதியாக நம்பலாம். 2
இந்த நாவலின் தொடக்கத்தில், வின்ஸ்டன் ஒரு நிலைகுலையும் முடிவை எடுக்கிறார். அதுவாவது: அவர் ஒரு பிரத்யேக நாட்குறிப்பேட்டை எழுத தொடங்குகிறார். அதற்கு அவர் வருத்தத்துடன் தலைப்பிடுகிறார், "எதிர்காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ, சிந்தனை சுதந்திரமாக இருக்கும் ஒரு காலத்திற்காக." "உலகளவில் பொய்ம்மை நிறைந்த காலக்கட்டத்தில்...உண்மையை கூறுவதும் ஒரு புரட்சிகர செயல் தான்" என்று ஓவெல் வேறெங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. அமெரிக்க அரசியல் வர்க்கத்தின் Newspeakஆல் தாக்கப்பட்டு, வெளிப்படையாக நாம் உலகளவில் பொய்ம்மை நிறைந்த ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே வின்ஸ்டன் ஸ்மித் தான். சிந்தனை சுதந்திரமாக இருக்கும் ஒரு காலக்கட்டத்திற்கான பாதையில் வெளிச்சமிட, உண்மைகளைக் கூறும் புரட்சிகர செயல்களில் நாம் திரும்ப வேண்டும்.
Notes :
- The Collected Essays, Journalism and Letters of George Orwell Volume 4 (in Front of Your Nose_), 1945-1950 p. 546 (Penguin)
- For analysis of Orwell's political trajectory, see Vicky Short, and Fred Mazelis
- Time Magazine, June 20, 1949
- Politics and the English Language,”
நன்றி : World Socialist Website
No comments:
Post a Comment