1996 ரொறோன்ரொ படவிழாவில் வியட்னாமிய படங்களுக்கான பிரேத்தியேகமான நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப்படடிருந்தது. ஒரு சுருக்கமான வரலாற்று விமர்சனத்தில், வியட்னாமியர்கள் தமது சினிமா வரலாற்றை மூன்று காலகட்டங்களாக பிரித்துள்ளார்கள் என டேவிட் ஓவர்பே (David Overbey) குறிப்பிடுகிறார்.
தேசிய வாதத்தையும் காலனித்துவ எதிரிகளுக்கு எதிரான போராட்டத்தையும் "யுத்தகாலப்பகுதி" (1953-75)ப் படங்கள் பேசின, "சமூக யதார்த்தம்" காலப்பகுதிப் (1975-86) படங்கள் வட தென் பகுதியின் மறுஐக்கியம் மற்றும் மறுகட்்டுமானத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தன. மூன்றாவது "புனருத்தாரன" (1986) காலப்பகுதிப் படங்கள் வியட்னாமிய ஸ்ராலினிச அரசு வெளிநாட்டு மூலதனத்திற்கு உள்நாட்டு பொருளாதார சந்தையை திறந்துவிட்டதுடன் படத்துறையின் மீதான அரசாங்க கட்டுப்பாடு இழந்தது தொடர்பாக இவை பேசின.
எட்டு இயக்குனர்களின் பதினொரு வியட்னாமிய படங்கள் ரொறோன்ரொ திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. து ஓ (Tu Hau) வின் -1963்ல் பிரான்சுக்கு எதிரான யுத்தக்காலப் பகுதியில் பாம் கி நாம் (Pham Ky Nam) இனால் எடுக்கப்பட்ட படத்தை தவிர அனைத்துப் படங்களும் 1980லும் 1990லும் எடுக்கப்பட்டவையாகும். திரையிடப்பட்ட அதிகமான படங்கள் யுத்தகாலத்தின் பொருளாயதமற்றும் உணர்ச்சிகளின் பாதிப்புக்களை உள்ளடக்கி இருந்தமை வியப்பான ஒன்றல்ல. குறிப்பாக 1986ல் எடுக்கப்பட்ட ஏனைய படங்கள் ஊழல், ஏமாற்று, புதியனவிற்கும் பழமையின் மதிப்புக்களுக்கும் இடையிலான மோதல், அத்துடன் "சுதந்திர சந்தைப்" புதிய பொருளாதாரத்தினுள் இருக்கும் அபாயம் பற்றியும் விவரித்தன.
டாங் நாற் மின் (Dang Nhat Minh) வியட்னாமின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் 1938ம் ஆண்டு ஹானுவா வில் பிறந்தார். மின், மொஸ்கோவில் இருக்கும் ரஷ்ய மொழிக்கான மேல்நிலை பாடசாலையில் பட்டம் பெற்றதுடன் வியட்னாமிய சினிமா கல்லுாரியில் ரஷ்ய விரிவுரைகளுக்கான ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். அவர் 1963ல் விவரண [டாக்குமென்றி] படங்கள் எடுக்க ஆரம்பித்தார். விழாவில் அவரது நான்கு படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவையாவன: "பத்தாவது மாதங்கள் வரும்போது (1984, When the tenth month comes), ஆற்றோரப்பெண் (1987, The girl on the river ),மறுவருகை (1984,The return ) மற்றும் கிராமிய பற்று (1996, The nostalgia for countryland ).
கடைசிப் படமானது இன்றைய வியட்னாமின் குக்கிராமம் ஒன்றில் தனது தாயுடனும் அண்ணியுடனும் வசித்துவரும் நாம் (Nham) எனும் 17வயது பையனின் கதையாகும்.
அவர்கள் தமது வயலில் நெல்பயிரிட்டு வருகிறார்கள். அவனது சகோதரன் வேலை தேடுவதற்காக கிராமத்தை விட்டு போயிருந்தார். "பணம் ்சம்பாதிப்பதற்கான ஒரேவழி வியாபாரம் செய்வதுதான்" என்பதால், தான் கிராமத்தை விட்டு வெளியேறியதாக கடிதமொன்றை எழுதியிருந்தான். அது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமம் ஆகும். ஆனால் அவர்களிடம் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. அந்த தொலைக்காட்சியில் அவர்களுக்கு சம்பந்தமற்ற முறையில் ஒரு அழகுராணி போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
நீண்ட வருடங்களாக கிராமத்துக்கு வெளியில் வாழ்ந்து வந்த பெண்ணான குயெனின் (Quyen)வருகையின் மூலம் நாம் (Nham) மற்றும் நுா (Ngu) இற்கும் இடையில் உள்ளூர வளர்ச்சியடைந்து வந்த உறவு தடைப்பட்டது. குயெனின்் துாய்மையற்ற, "பழமையான" ஒரு பெண்ணாக கிராமவாசிகளால் சந்தேகத்துடன் நோக்கப்பட்டாள். நாம் (Nham) அவள்பால் ஈர்க்கப்பட்டதுடன் அவளும் அவனுக்காக ஏங்கத்தொடங்கினாள். அவள் கிராமப்புற வாழ்வு பற்றி ஒரு பிரமையுடன் திரும்பி வந்திருந்தாள். ஒரு கட்டத்தில் குயென் நெற்செய்கை பற்றி குறிப்பிடும்போது, "இது ஒரு சந்தோசமானவேலை" என்றாள். அப்போது, "நீ வயலில் வேலை செய்ததுகிடையாது என்பதால் தான் உனக்கு அப்படித் தோன்றுகின்றது, ஒரு பேணி நெல்லில் உள்ள ஒவ்வொரு நெல்மணிக்கும் எக்கச்சக்கமான வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது" என நுா பதிலுரைத்தாள். குயென் கிராம வாழ்க்கைக்கு திரும்பியதானது அவளுக்கு நிறைய அனுபவங்களை கொடுத்திருந்து, அது அவள் வெளியேறுவதுடன் தெளிவாகிறது.
படத்தின் இறுதிக் கட்டம் தாக்கம் நிறைந்ததாக இருந்தது. நுா பிரிந்துபோன கணவனைத்தேடி போயிருந்தாள். அவளை விட்டுப் பிரிந்து போயிருக்கலாம் அல்லது இறந்து போயிருக்கலாம். நாம் இராணுவத்தில் இணைவதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தான். பஸ்சில் அவன் பிரியும் நேரத்தில் அவள் அதன் பின்னால் கையசைத்துக் கொண்டு ஓடுகிறாள். பஸ்சின் யன்னலின் வழியாக அவள் அவனுக்கு அன்பளிப்பாக ஒரு கொப்பியையும், பென்சிலையும் கையளித்தாள்.
அதன் பின்னர் இராணுவ வண்டியில் இருந்துகொண்டு, "நான் எனது குக்கிராமத்தை இழந்துவிட்டேன். ஒரு நாள் நான் திரும்பிவருவேன், "என எழுதி அதைக் கசக்கி காற்றில் பறக்க விட்டான். அவன் திரும்புவானா? அவன் திரும்பவேண்டுமா?
டாங் நாற் மின் படைப்புக்கள் எளிமையானவை ஆனால் பாதிக்கக்கூடியவை. யாராவது மின் னை குறைகூறுவார்களானால் அது சோவியத்தின் "சோசலிச யதார்தவாத" படத்தாயாரிப்புத்துறை பாடசாலையின் பட்டதாரி என்ற வகையில் மின் பார்வையாளர்களின் கற்பனைக்கு விட்டுவிடாத முறையில் தனது படத்தை எடுத்தும் எடிற் ்[மறுபதிவு] செய்தும் இருக்கிறார் என்பதுதான். அவர் எங்களை கொண்டு செல்ல விரும்பிய முடிவுக்கு மிக இதமான முறையில் நாம் கொண்டு செல்லப்பட்டோம்.
படத்தினது முக்கிய சிறப்பம்சம் அதனது நடிப்புத்திறனாக இருந்தது. அது கதாபாத்திரத்தை செய்த நடிகையின் ஆளுமையாக இருக்கலாம். படத்தின் இறுதிக்காட்சி -வயலில் வேலை செய்துகொண்டிப்பதாக அவளது முகத்தை காட்ட எடுக்கப்பட்ட ஒரு சுமாரான கமெராவிற்கு நெருக்கமான [குளோஸ்அப்] காட்சி படத்தினது மிகுதியான பலவீனங்களில் ஒன்றை எடுத்துக்காட்டுகின்றது.
டாங் நாற் மின் (Dang Nhat Minh) பார்ப்பதற்கு வரலாற்றினால் பலதடவை தாக்கங்களுக்கு உள்ளான மனிதரைப் போன்று இருக்கிறார். வியட்னாமின் கடந்த கால்நுாற்றாண்டின் நிகழ்வுகளை நீங்கள் கவனத்தில் கொள்ளும்்போது சிறு ஆச்சரியத்திற்குரியது என்னவெனில் அந்தக் காலங்கள் முழுவதுமாக மின் வாழ்ந்தார் என்பதே. முடிந்தால் அவரைப் பற்றிய ஒரு சுருக்கமான சுயசரிதையை கூறும்படி நான் அவரைக் கேட்டிருந்தேன்.
"எனது வரலாறு மிகவும் எளிமையானது. இன்று யதார்த்தமாகி இருப்பதுபோல் எனக்கு சினிமா ஒரு குழந்தைப்பருவ கனவாக இருக்கவில்லை. நான் ஒரு தற்செயலான நிகழ்வாகத்தான் படமெடுக்க ஆரம்பித்தேன். நான் முதலில் விவரண [டாக்குமெண்டரி] படங்களே எடுத்தேன்.
"1973ல் நான் எனது முதல் படத்தை எடுத்தேன். முதல் மூன்று படங்களுக்கான திரைக்கதை வேறு திரைக்கதை ஆசிரியர்களால் எழுதப்பட்டது. நான் வெறுப்படைந்திருந்தேன், ஆனால் நான் மிக அமைதியாக இருந்தேன். ஏனெனில்் நான் செய்து கொண்டிருந்தது எனக்கு பிடித்திருக்கவில்லை. ஆகையால் நானே சொந்தமாக ஒரு திரைக்கதை எழுத முயற்சிக்க முடிவெடுத்தேன். முதலாவது படத்தின் பின்னர் நான் மகிழ்ச்சியடைந்தேன். அத்துடன் அதைத்தொடர்ந்து வேறு ஐந்து படங்களும் எடுத்தேன்."
வியட்னாமிய படத்துறையின் நிலைமை பற்றி நான் மி்ன் இடம் விசாரித்தேன். "புனரமைப்பு" காலத்திற்கு முன்னர் அரசாங்கத்தின் நிதியில் இருந்தே எல்லாப் படங்களுமே தயாரிக்கப்பட்டன, குறைந்த பட்சம்் ஒரு வருடத்திற்கு 15 படங்கள் என்ற விகிதாசாரத்தில் படங்கள் எடுக்கப்பட்டன.1989ன் புதிய கொள்கைக்குப் பின்னர் அரசாங்கம் அரைவாசி நிதி உதவி வளங்கியது. அத்துடன் மிகுதி நிதியை தயாரிப்பாளர்களும் இயக்குனர்களுமே வேறெங்காவது பார்த்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது" "1989ன் புதிய கொள்கைக்கு பின்னர் பாரியளவில் ஒரு வருடத்திற்கு 7 தொடக்கம் 5 வரை என வீழ்ச்சியடையத் தொடங்கியது. இது, ஹொலிவுட் மற்றும் கொங்கோங் போன்ற வெளிநாட்டு படங்களின் ஆக்கிரமிப்பின் விளைவால் ஏற்பட்டதாகும். அரசாங்க ஆதரவு இல்லாமல் அங்கே வியட்னாமிய படத்துறை இயங்க முடியாது.
தொழிற்துறையிலும் வியாபாரத்திலும் அங்கு வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்டு இருக்கின்றன ஆனால்! படத்துறையில் அப்படி ஒன்றும் செய்யப்படவில்லை. யாருக்குமே கலாச்சார துறைகளில் முதலீடு செய்ய விருப்பமில்லை. ஏனெனில் அதில் இலாபம் கிடையாது என்பதால்." என பதிலளித்தார். அவரைப் பொறுத்தவரை எது முக்கிய பிரச்சனைகளாக இருந்தது என நான் அவரைக் கேட்டேன். வியட்னாமிய சமூகத்தையும் அதன் யதார்த்தத்தையும் நான் படமாக எடுக்க வேண்டியதுதான் எனவும், எனது படங்கள் தொழில்நுட்பம் குறைந்ததாக இருக்கலாம், ஆனால் அவை நுாறுவீதம் வியட்னாமின் யதார்த்தமாகும்" என்றார்.
வியட்னாம் யுத்தம் பல அமெரிக்கர்களுக்கு முக்கிய விடயமாக இருந்தது எனக்் குறிப்பிட்டு அந்த அனுபவங்களை எப்படி அவர் இன்று உணர்கிறார்? என கேட்டதற்கு, "அது மிகவும் சோகமானது" என சாதரணமாய் பதிலளித்தார். வியட்னாமில் தற்போதைய நிலைமை என்னவாக இருந்தது? என்ற கேள்விக்கு "யுத்தம் தொடர்பாக அங்கு எவ்வித கொள்கைப் பிடிப்புகளும் இல்லை, மக்கள் எதிர்காலத்தையே பார்க்கின்றார்கள் என்றார். யுத்தத்தின் தழும்புகள் இன்னும் இருக்கின்றன, ஒவ்வொரு குடும்பத்திலும் தழும்புகள் இருக்கின்றன. மிக முக்கியமான விடயம் என்னவெனில் அவர்கள் வேலை செய்யவேண்டும் என்பதும், தொழில் செய்வதும், பணம் சம்பாதிப்பதும், தமது குடும்பத்தை பராமரிப்பதும், குழந்தைகளை படிப்பிப்பதுமேயாகும். புதிய கொள்கையுடன் வியட்னாமிய பொருளாதாரத்தினை திறந்து விட்டதானது அதை இலகுவாக்கி இருப்பதுடன் அங்கே மிகப் பெரிய சாத்தியங்கள் இருக்கின்றன."
"அது ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் பாரிய இடைவெளியை உருவாக்கியிருக்கின்றதா?" என நான் கேட்டேன். "அங்கே ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் மாபெரும் இடைவெளியுண்டு, அங்கே நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலும் மிகப்பெரிய இடைவெளி உண்டு. கிராம வாழ்க்கை முன்னேறியிருந்ததுடன் அது முதலிலும் பார்க்க நன்றாக இருக்கிறது. ஆனால் அது நகரங்களைப் போல் விரைவான வேக விகிதத்தில் அபிவிருத்தியடையவில்லை" என இயக்குனர் பதிலளித்தார்.
எப்படி நிறைய பணங்களை மக்களால் திரட்ட முடிந்தது என நான் கேட்டேன். "அங்கே புதிய பணக்காரர்கள் இருக்கிறார்கள், ஒரு பரந்தளவிலான புதிய பணக்காரர்கள். அவர்கள் எப்படி பணத்தை திரட்டினார்கள் எப்படி பணக்காரர்களானார்கள் என்பது பற்றி எனக்கு தெரியாது. யாருக்கும் தெரியாது. அது ஒரு இரகசியமாகவே இருக்கிறது."
நீண்டகாலமாக போராடியவர்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் மாறவில்லை, அவர்கள் மக்கள் பணக்கார்கள் ஆவதை காண்பதுடன் இவையெல்லாம் யாருக்கு என அவர்கள் அறிய விரும்பவில்லையா? "ஆம், நிட்சயமாக மக்கள் அப்படியான முறையில் உணர்கிறார்கள். மக்கள் சோகமாக இருக்கிறார்கள், அவர்கள் தாம் ஏன் நாட்டிற்காக போராடினோம் என அறிய ஆவலாக இருக்கிறார்கள். அவர்களது வாழ்க்கை இன்னமும் முன்னேறவில்லை, இன்னும் மற்றவர்கள் நிறைய பணத்தை சம்பாதிக்கக் கூடியதாக இருக்கிறது. அவர்கள் தமது குழந்தைகளின் மூலம் ஏதாவது கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எல்லோரும் அதை செய்யமுடிவதில்லை.
பிரத்தியேகமாக கிராம மக்கள் ஏழைகளாக குழந்தைகளை படிப்பிக்க பணம் ஏதும் அற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். "அமெரிக்க இராணுவத்திற்கும் அவர்களது திட்டங்களுக்கும் எதிராக போராடிய மக்களுக்கு தற்போது அமெரிக்க வியாபாரம் வந்து பணம் திரட்டுவது துக்கக்கரமானதாகவும் வஞ்சமானதுமாகவும் இருக்கிறது என நான் சுட்டிக்காட்டினேன். "அது தான் வாழ்க்கை! இன்று வியட்னாமில் கொக்கோகோலாவுக்கும் பெப்சிக்கும் இடையில் யுத்தம் நடக்கிறது. இந்த யுத்தத்தின் நல்ல விடயம் என்னவென்றால் குறைந்த பட்சம் அங்கே இரத்தமும் இல்லை மரணமும் இல்லை என்பதேயாகும்" என மின் சிடுமூஞ்சித்தனமான முறையில் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment