Monday, 2 April 2018

2009 - ன் மற்றும் இந்த காலகட்டத்தின் சிறந்த திரைப்படங்கள்

டேவிட் வால்ஷ் (David Walsh)

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், "1995 முதல் 2005 வரையிலான ஆண்டுகள் சினிமா வரலாற்றின் மிக மோசமானவையாக இருந்தன என்று கூறப்படும்" என்று நான் குறிப்பிட்டிருந்தேன். துரதிருஷ்டவசமாக, இந்த நூற்றாண்டின் முதல் தசாப்தத்தின் முடிவில், அந்த தன்மையை விரிவாக்காமல் இருப்பதற்கான எந்த ஆறுதலான காரணமும் தென்படுவதாக தெரியவில்லை.

ஓர் ஆழமான கலாச்சார அதிருப்தி நம்மோடு இருந்து வருகிறது. திறமை வாய்ந்தவர்களும், புதுமைகளைக் கண்டறிபவர்களும் பல ஊடகங்களில் பணியாற்றி வந்தாலும் கூட, முன்னோக்கின்மை மற்றும் ஆழமான கலைத்துவ அல்லது சமுதாய நோக்கமின்மையே கோலோச்சி வருகின்றன.

முதலாம் உலக யுத்தத்திற்குப் பின்னர், ஆண்ட்ரீ ப்ரெடென் மற்றும் அவருடைய சக-கூட்டாளிகள் பிரான்ஸின் பிரபல இலக்கியவாதிகளிடம், "நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்? என்ற கேள்வியை எழுப்பினார்கள். அவர்களை அவர்களே பிரபலப்படுத்திக் கொள்வதும் இந்த கேள்வியின் ஒரு பகுதி-நோக்கமாக இருந்தது என்றாலும், பெரும்பாலான சமகாலத்திய திரைப்பட எழுத்தாளர்களாலும், இயக்குனர்களாலும் இந்த கேள்விக்கு ஒரு திருப்திகரமான பதிலை அளிக்க முடியவில்லை. நேர்மையான பதில்கள் இவ்வாறு இருந்தன: "சும்மா இருக்க முடியாமல் எழுதுகிறேன்," "ஒரு தொழில் வேண்டுமென்பதற்காக எழுதுகிறேன்," "புகழ் பெறுவதற்காக எழுதுகிறேன்," "ஏனென்றால் இது கணிசமான இலாபத்தைக் கொடுக்கிறது," இன்னும் இதுபோல பல.


இவையெல்லாம் தனிநபரின் பலவீனங்களல்ல; மாறாக வரலாற்றுரீதியாக தீர்மானிக்கப்பட்ட பிரச்சினைகள். கடந்த அரை-நூற்றாண்டு அல்லது அதற்கு மேலான காலங்களில் நிலவிய சமூக மற்றும் அரசியல் சிக்கல்கள், காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளை உருவாக்குவதற்கான பொறுப்பின்மீதும், ஆய்வுத்தன்மையின்மீதும் நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கின்றன. எவ்வாறிருப்பினும், சமுதாயத்தின் மற்றும் மனிதயினத்தின் வளமான மாற்றங்களால் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பல கலைஞர்கள் எழுச்சி பெற்றிருந்தார்கள் என்பது மட்டும் தான் ஆறுதலாக இருந்தது.

ஜேர்மனியில் பாசிசத்தின் வெற்றியும், 1930களில் சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலினிசத்தின் குற்றங்களும் மற்றும் காட்டிக்கொடுப்புகளும், தெளிவின் மற்றும் ஏமாற்றத்தின் ஒரு நிகழ்முறையைக் கொண்டு வந்தது. அது அதற்குரிய விளைவுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யுத்தத்திற்கு பிந்தைய அமெரிக்காவின் கலாச்சாரத்திலிருந்து எழுந்த இடதுசாரி கருத்துக்கள், ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான சிந்தனையை ஒடுக்குவதில் அவற்றின் சொந்த பங்களிப்பை அளித்தன. அவற்றின் பிரதிபலிப்புகளைக் கொண்டிருந்த சமீபத்திய தசாப்தங்களும் ஒரு குறிப்பிட்ட நிகழ்முறையை முடித்துக் கொண்டிருக்கின்றன.

(பரந்தளவில் எங்கும் நிறைந்திருந்த, "இடது" ஆதரவுகளையும் கொண்டிருந்த) ஸ்கெப்டிசிசம் (அவநம்பிக்கைச் சிந்தனைமுறை) மற்றும் பெசிமிசம் (எதிர்மறைச் சிந்தனைமுறை), வரலாற்று மற்றும் சமுதாய அறிவு குறைபாடு, கலாச்சார மற்றும் கல்வித்துறை மேற்தட்டு பிரிவுகளால் குவிக்கப்பட்ட செல்வவளம்இவை அனைத்தும் தொடர்ந்து ஒரு நாசகரமான பாத்திரத்தை வகித்து வருகின்றன.

ஊடகத்துறையும், பொழுதுபோக்குத்துறையும் பெருமளவிற்கு ஏகபோக உரிமையாக்கப்பட்டுள்ளன. மில்லியன்கணக்கானவர்கள் கேட்க போகும், பார்க்க போகும் விஷயங்கள், தமது ஒட்டுமொத்த இருப்பையும் கலை, விமர்சனம், அரசியல் எதிர்ப்பு ஆகியவற்றிற்கு விரோதமாக கொண்டிருக்கும் ஒருசில பெருநிறுவன பிலஸ்டெனியர்களால் (கலை, கலாச்சாரம் போன்றவற்றில் ஈடுபாடற்றவர்கள்) தீர்மானிக்கப்படுகின்றன. முட்டாள்தனமும், குறுகியபார்வையும் இங்கே வெறுப்பு மனோபாவம் மற்றும் போராசையோடு போட்டியிடுகின்றன.

நிகழ்கால பாதையை ஒட்டி செல்வதென்பது, திரைப்படக் கலைஞர்களுக்குச் சிந்திக்க இயலாததாக இருக்கிறது. தற்போதைய நிலைமைகள் மற்றும் விளை "பொருட்களை" விட கீழானதாக வேறெதுவும் இருக்க முடியாது.

அனைத்து விதமான புதிய தொழில்நுட்ப சாத்தியக்கூறுகளும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் உருவாகின. (பெரிய பெரிய திரைப்படத் தயாரிப்புகள் வெற்றுத்தனமாக இருந்தாலும் கூட) ஒரு தனிமனிதரோ அல்லது ஒரு சிறு குழுவோ, தாங்கள் விரும்பிய விதத்தில் ஒரு படத்தை எடுப்பதையும், தொகுப்பதையும் டிஜிட்டல் வீடியோநுட்பம் சாத்தியமாக்கி இருக்கிறது. எவ்வாறிருப்பினும், பார்வையாளர்களுக்கு எடுத்துக்காட்டுவதற்கு இன்னும் எத்தனையோ விஷயங்களும் இருக்கின்றன; ஆனால் அதுதான் மிக "சுயாதீனமான" திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் கூட மேலெழுந்து வருவதற்குத் பொதுவான ஒரு தடையாக இருக்கிறது.

கடந்த தசாப்தத்தில் வெளிப்பட்டிருக்கும் ஆசிய திரைப்படத்துறையின் எழுச்சி, அதுவும் குறிப்பாக சீன திரைப்படத்துறையின் எழுச்சி கலாச்சார மற்றும் சமுதாய முக்கியத்துவத்தின் ஓர் உண்மையாக இருக்கிறது. நிலவும் சமீபத்திய சர்வதேச பொருளாதார போக்குகளிலும், மற்றும் சீனாவிலேயே கூட நிலவும் கொந்தளிப்பான வெளியுறவு நிலைமைகளிலும், இது பெரும் ஆச்சரியமின்றி வெளிவரும். இந்த தசாப்தத்தின் சிறந்த சீன-மொழி திரைப்படங்களின் பட்டியலுக்கான (கீழே பார்க்கவும்) ஒரு முறையீட்டிற்கு விடையிறுக்கும் வகையில், நான் பின்வரும் புள்ளியை அளித்தேன் :

"கடந்த தசாப்தத்தில் சீனா பல சிறந்த திரைப்படங்களைத் தயாரித்தது (ஒருவேளை இது நீண்டகாலமாகவே கூட இருக்கலாம்) என்ற நியாயமான வெளிப்பாடாக எனக்கு தெரிந்த என்னுடைய கருத்துக்களைச் சந்தர்ப்பவசத்தால் நான் சேர்க்கவில்லை."

"அதற்குத் தகுந்தாற்போல், துரதிருஷ்டவசமாக, அதை ஓர் அவமானச் சின்னமாக மாற்றுவதென்னவென்றால், திரைப்பட ஊடகம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இதுவரையில், (உறுதியாக சமுதாய-வரலாற்று காரணங்களால்) 1990கள் மற்றும் அவற்றுடன் 2000ஆம் ஆண்டுகளில் (தாய்வானும் ஈரானும் மிகவும் பேரார்வமூட்டுகின்ற தயாரிப்புகளை உருவாக்கிய போது) தயாரிக்கப்பட்ட படங்கள் சர்வதேச படத்தயாரிப்பின் கேவலமான தசாப்தமாக இருந்தது தான் என்று நான் நினைக்கிறேன்."

எமது பார்வையில், பொதுவாக திரைப்படத்துறையும், கலையும் சமுதாய எதிர்பெழுச்சிகளை நோக்கி ஒருமுனைப்படத் தொடங்கும் போது மட்டும் தான், அவை அவற்றின் தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டு வரமுடியும். "என்ன விலை கொடுத்தாவது, கலையை அரசியலாக்கக் கூடாது" என்பது போன்ற எல்லா பேச்சுக்களும், ஒருவிதத்திலோ அல்லது வேறொருவிதத்திலோ, கலை ஏதோவொரு விதத்தில் அரசியலாக இருக்கிறது என்ற நிஜத்தை புறக்கணிக்கின்றன என்பதுடன், "என்ன விலை கொடுத்தாலும் சரி, கலைப்படகு பாறையில் மோதிவிடக்கூடாது" என்று வாதிடுகின்றன. உபயோகமான எதையும் உருவாக்க தகுதியற்றவர்களால் தான் அவ்வாறு சிந்திக்கப்படுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போதைய இக்கட்டான நிலைமையில் கலை அதன் சொந்த வழியைக் கண்டறிவதென்பது விரும்பத்தக்கதல்ல. ஒரு பெரும் பிரச்சினை வர்க்க போராட்ட நிலையைச் சார்ந்துள்ளது. முதல் போராட்டங்களில், அவற்றின் உடனடி விளைவு என்னவாக இருந்தாலும், ஒரு சுயாதீனமான மற்றும் துடிப்பான சக்தியுடன் இறங்கும் தொழிலாளர் வர்க்கம், குறிப்பாக அமெரிக்க தொழிலாளர் வர்க்கம், ஓர் உயிர்ப்பான விளைவை ஏற்படுத்தும். டிரொட்ஸ்கி கணித்தது போல, இத்தகைய போராட்டங்கள் "மனிதயினத்தின் அனுபவமெனும் வானத்தை மூடும் ஸ்கெப்டிசிசம் மற்றும் பெசிமிசம் போன்ற மேகங்களைக் கலைத்துவிடும்.

திரைப்படத்தயாரிப்பில், குறிப்பாக அமெரிக்க திரைப்படத் தயாரிப்பில், 2009ஆம் ஆண்டை ஒரு மிக மோசமான ஆண்டாக நான் நினைத்தேன். 1930களுக்குப் பின்னால் ஏற்பட்ட மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி மற்றும் மிகப் பரந்த சமுதாய துக்கத்தை முகங்கொடுத்திருக்கும் நிலையில், அமெரிக்க எழுத்தாளர்களும், இயக்குனர்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் மிக சிறியளவிலேயே பங்களிப்பு அளித்திருக்கிறார்கள்.

மனசாட்சியுள்ள பிரபலங்களைப் பொறுத்த வரையில், தவிர்க்கமுடியாத கலைத்துவ பின்னடைவின் கூறுபாடு இருக்கலாம் என்பதாக இருக்கிறது. மற்றவர்களைப் பொறுத்த வரையில், இதுவொரு சமுதாய ஏற்றத்தாழ்வு சார்ந்த விஷயமாகவும், மனநிறைவிற்காக செய்யப்படும் விஷயமாகவும், அதில் தங்களுக்குத் தொடர்பில்லை என்பதாகவும் இருக்கிறது. எப்படியாயினும், ஏதோவொரு புள்ளியில் திரைப்பட படைப்பாளிகளால் சமகாலத்திய உலகம் ஆழமாக ஆராயப்படும்.

அது தான் சொல்லப்படுகிறது...


2009ஆம் ஆண்டின் சிறந்த படங்கள் (ஜோன்னெ லௌரியருடனும், ஹிராம் லீயுடனும் இணைந்து தொகுக்கப்பட்டது)

இந்த ஆண்டு வட அமெரிக்க திரையரங்குகளில் வெளியிடப்பட்டவைகளில், நான் பார்த்த (அல்லது முன்னரே பார்த்திருந்த) படங்களிலேயே இரண்டு படங்கள் மட்டுமே வலுவானவையாக நான் உணர்கிறேன் :

இந்த ஆண்டு வட அமெரிக்க திரையரங்குகளில் வெளியிடப்பட்டவைகளில்


நான் பார்த்த (அல்லது முன்னரே பார்த்திருந்தபடங்களிலேயே இரண்டு படங்கள் மட்டுமே வலுவானவையாக நான் உணர்கிறேன் :
Maria Larssons eviga ögonblick (Everlasting Moments), Jan Troell
Of Time and the City, Terence Davies

அறிவுபூர்வமாகவும்சுவாரசியமாகவும் இருந்த ஏனையவை :

Venkovsky ucitel (The Country Teacher), Bohdan Sláma
Eid milad Laila (Laila's Birthday), Rashid Masharawi
Where the Wild Things Are, Spike Jonze
Serbis, Brillante Mendoza

ஓரளவிற்கு சுமாராக இருந்த அல்லது குறைந்தளவில் வெற்றிபெற்ற முயற்சிகளின் பட்டியலில் இடம் பெறுபவை :

The Men Who Stare at Goats, Grant Heslov
Er shi si cheng ji (24 City), Jia Zhangke
A Serious Man, Ethan மற்றும் Joel Coen
Bright Star, Jane Campion

குறிப்பிட வேண்டிய மதிப்புடைய சில கதாபாத்திரங்கள் :

Jason Bateman, State of Play
Emily Blunt, Sunshine Cleaning
Bill Nighy, Pirate Radio
Peter Sarsgaard, An Education
Paul Schneider, Bright Star
Alec Baldwin, Lymelife

வட அமெரிக்காவில் இதுவரை வெளியாகாதஆனால் இந்த ஆண்டில் நாங்கள் பார்த்த சிறந்த திரைப்படங்கள் :

How To Fold a Flag, Michael Tucker மற்றும் Petra Epperlein
Vincere, Marco Bellocchio
Jean Charles, Henrique Goldman
Life During Wartime, Todd Solondz
Köprüdekiler (Men on the Bridge), Asli Özge
The Unloved, Samantha Morton
Shirley Adams, Oliver Hermanus
Ajami, Yaron Shani மற்றும் Scandar Copti
The Time That Remains, Elia Suleiman
River People, He Jianjun
Don’t Let Me Drown, Cruz Angeles
Z32, Avi Mograbi
El olvido (Oblivion), Heddy Honigmann
Billy the Kid, Jennifer Venditti

இந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்கள் (அல்லது சிறந்த இயக்கத்தைக் கொண்ட படைப்புகள்) :

Mike Leighஇன் படங்கள்: All or Nothing, Vera Drake மற்றும் Happy-Go-Lucky
Terence Daviesஇன் படங்கள்: House of Mirth மற்றும் Of Time and the City
Jia Zhangkeஇன் படங்கள்: Zhantai (Platform) மற்றும் Shijie (The World)
Wim Wendersஇன் படம்: Land of Plenty
Roman Polanskiஇன் படங்கள்: The Pianist மற்றும் Oliver Twist
Philippe Fauconஇன் படங்கள்: Dans La Vie (Two Ladies) மற்றும் La Trahison (The Betrayal)
Jan Troellஇன் படம்: Maria Larssons eviga ögonblick (Everlasting Moments)
Jafar Panahiஇன் படங்கள்: Talaye sorkh (Crimson Gold) மற்றும் Offside
Michael Tucker மற்றும் Petra Epperleinஇன், Gunner Palace, The Prisoner or: How I Planned to Kill Tony Blair மற்றும் How To Fold a Flag
Steven Spielbergsஇன், Munich மற்றும் Catch Me If You Can
Ari Folmanஇன், Vals Im Bashir (Waltz With Bashir)
Phillip Noyceஇன், Rabbit-Proof Fence மற்றும் The Quiet American
Bahman Ghobadiஇன், Zamani barayé masti asbha (A Time for Drunken Horses), Lakposhtha parvaz mikonand (Turtles Can Fly) மற்றும் Niwemang (Half Moon)

இந்த தசாப்தத்தின் சிறந்த சீன மொழித் திரைப்படங்கள் :

இதில் நான் ஒரு வல்லுனன் இல்லை என்பதுடன்நிறைய படங்களை நான் பார்த்திருக்கவும் இல்லைஇருந்தும்பட்டியலிடுமாறு ஓர் ஊடகத்தால் நான் கேட்டுக் கொள்ளப்பட்டேன்இந்த தசாப்தத்தில் (என்னுடைய விருப்பமான பிரிவில்நான் பார்த்த சிறந்த சீன மொழித்திரைப்படங்கள் அல்லது சிறப்பாக இயக்கப்பட்ட படைப்புகள் இவை :

Platform, Jia Zhangke (ஆங்கிலத்தில் Unknown Pleasures, The World)
Good Cats, Ying Liang (ஆங்கிலத்தில் Taking Father Home, The Other Half)
Little Moth, Peng Tao (China)
Blind Shaft, Lang Yi (China)
Cry Woman, Liu Bingjian (China)
Bing Ai, Feng Yan (China)
Durian, Durian, Fruit Chan (ஹாங்காங் ஆங்கிலத்தில், Little Cheung, 1999—நான் இதை 2000இல் பார்த்தேன்!)
River People, He Jianjun (China)
Grain in Ear, Zhang Lu (China)
The Orphan of Anyang, Wang Chao (China)
பதினொன்றாவதாக, Yi Yi, Edward Yang (தாய்வான்)
பன்னிரென்டாவதாக, Bundled, Singing Chen (தாய்வான்)
West of the Tracks (சீனாமற்றும் Fengming: A Chinese Memoir (சீனாஆகியவற்றிற்காக ஒரு துல்லியமான படத்தொகுப்பாளராக Wang Bingஐ குறிப்பிட முழு தகுதிப் பெற்றிருக்கிறார்.
உலக சோசலிச வலைத் தளத்தின் ரிச்சர்டு பிலிப்ஸ் பின்வரும் இந்த கருத்தையும்பின்வரும் படங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் :

இந்த ஆண்டோ அல்லது தசாப்தமோ சிறந்த ஒன்றாக இல்லை என்றபோதினும்இந்த தசாப்தத்தின் சிறந்தவைகளில் அடங்குவனமுதலில் இருக்கும் ஏழும் குறிப்பாக மிகவும் விருப்பமானவை 

Yi Yi (Edward Yang)
Land of Plenty (Wim Wenders)
Good-bye Lenin (Wolfgang Becker)
Turtles Can Fly (Bahman Ghobadi)
Gosford Park (Robert Altman)
The New World (Terrence Malick)
The Quiet American (Phillip Noyce)
Blind Shaft (Li Yang)
Legends of Rita (Volker Schlöndorff)
The Insider (Michael Mann)
Letters from Iwo Jima (Clint Eastwood)
Battle for Haditha (Nick Broomfield)
Pan's Labyrinth (Guillermo del Toro)

கடந்த தசாப்தத்தின் சிறந்த ஆவணப்படங்கள் :

Capturing the Friedmans (Andrew Jarecki)
Fahrenheit 9/11 (Michael Moore)
Molly & Mobarak (Tom Zubrycki)
Roman Polanski: Wanted and Desired (Marina Zenovich)
2009இல் சிறந்தவை:
Everlasting Moments (Jan Troell)
Vincere (Marco Bellocchio)
Of Time and the City (Terence Davies)
Tulpan (Sergei Dvortsevoy)
Samson and Delilah (Warwick Thornton)

The Missing Star (2007இல் வெளியாகி இருந்த போதினும்) (Gianni Amelio)

நன்றி : World Socialist Website

No comments:

Post a Comment