டேவிட் வால்ஷ்
இத்திரைப்படம்
லிங்க்லேடர் மற்றும் ஸ்கிப் ஹோலண்ஸ்வோர்த்தால் இணைந்து எழுதப்பட்டு, ரிச்சர்ட் லிங்க்லேடரால் இயக்கப்பட்டது.
BERNIE
ஒரு சுயாதீனமான
அமெரிக்க இயக்குனரான ரிச்சர்ட் லிங்க்லேடரின் சமீபத்திய திரைப்படம் பெர்ன் (Bernie). ஏனையவைகளில் Slacker (1991), Dazed and
Confused (1993) மற்றும் The Newton Boys (1998) ஆகியவை இவர் பொறுப்பேற்ற பிற படங்களாகும். பெர்ன்
திரைப்படம் இறுதி சடங்கு நிகழ்ச்சியின் ஓர் உதவி இயக்குனரான பெர்ன் டெய்டின் (ஜேக் ப்ளேக்)கதையைச் சித்தரிக்கிறது. துயரமான விளைவுகளால் ஒரு பணக்கார எண்ணெய் வியாபாரியின் விதவை மனைவியான
மார்ஜோரீ நுஜெண்ட்டுக்கு (ஷெர்லி மேக்லைன்) அவர் நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் ஆகிறார். இத்திரைப்படம் 1990களில் கிழக்கு
டெக்ஸாஸில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
எனது பார்வையில், Tape, Waking Life, The School of
Rock, Before Sunset, Bad News Bears and Me மற்றும் Orson
Welles உட்பட கடந்த
பத்தாண்டுகளில் லிங்க்லேட்டரின் திரைப்படங்கள் அவர் 1990களில் செய்த
திரைப்படங்களை விடவும் குறைந்த வெற்றி பெற்றவையாக இருக்கின்றன. புஷ் மற்றும்
ஒபாமா ஆட்சிகாலத்தில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், அரசு மற்றும் பெருநிறுவன உலகம் இரண்டிலுமே, வெளிப்படையாகவே
குற்றங்கள் வழக்கமான செயல்முறையாக ஆகியிருந்த கடினமான, மிகவும் சிக்கலான
நிலைமைகளுக்கு தன்னைத்தானே நிலைநிறுத்தி கொள்வதிலும், சமாளித்து நிற்பதிலும்
ஒப்பீட்டளவில் நல்லுறவுமிக்கவராக இருந்த அந்த இயக்குனர் ஒரு கடினமான
காலக்கட்டத்தைச் சந்தித்தார் என்பதை ஒருவரால் உணர முடியும். ஆனால் இந்த குழப்பத்தை
முகங்கொடுத்த ஒரேயொரு கலைஞர் அவர் மட்டுமே என்று கூற முடியாது.
லிங்க்லேடரின்
சிக்கல்களோடு இணைந்த விதத்தில், தற்போது மிகவும் உறுதியோடு மாபெரும் வெற்றிப்படங்களை உருவாக்குவதை
நோக்கி நிலைகொண்ட விரல்விட்டு எண்ணக்கூடிய ஜாம்பவான்களின் கட்டுப்பாட்டின்கீழ்
நிற்கும் திரைப்படத்துறையின் திசைமாறிய பொருளாதாரங்கள், அவர் செய்ய விரும்பிய
அமைப்புமுறைக்கு-எதிரான ஒருவித
படைப்புகளுக்கான நிதியுதவிகளைப் பெறுவதை அவருக்கு கடினமாக ஆக்கியிருந்தது.
Tribune நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், பெர்ன் 20ஆண்டுகளுக்கு முன்னரே பரந்தளவில் வெளிவர வேண்டியதென்பதைக்
குறிப்பிட்டார்: “ஓ, 12 ஆண்டுகளுக்கு
முன்னால்! பத்து
ஆண்டுகளுக்கு முன்னால்! பல ஆண்டுகளுக்கு முன்னால், பெர்ன் கதை எங்களுக்கு முதன்முதலில் கிடைத்த அந்த தருணத்தில், அப்போது அதுவொரு
சிறிய தயாரிப்பு நிறுவனத்திற்கான படமாக இருந்திருக்குமென்று நினைக்கிறேன்.Dazed and Confused படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்காக வெறும் 6மில்லியன் டாலரில் மட்டும் செய்து முடித்தேன். பெர்ன் படம், 12 அல்லது 15 மில்லியன்
டாலர் வரை தான் ஆகக்கூடும் என்று நான் நினைத்தேன்.ஆனால்,
2000களின் தொடக்கத்தில், தயாரிப்பு
நிறுவனங்கள் இதுபோன்ற படங்களைத் தயாரிப்பதை நிறுத்திவிட்டன. உண்மையில் அந்த நேரத்தில்,எனக்கு படமெடுப்பதற்கு
போதிய நேரம் இருந்தது. அதை செய்வதற்கு எனக்கு 22 நாட்கள்
இருந்தன. ஆனால் திரைப்படத்துறையில் சுத்தமாக எந்த
ஆர்வம் இருக்கவில்லை.”
பெர்ன் ஒரு விரும்பத்தக்க
திரைப்படமாக உள்ளது. இதன் மையக் காதாப்பாத்திரம் செழுமையானது; பிணத்தை அடக்கம் செய்யும் ஒரு துல்லியமான தொழிலாளி. அவரின் பெருந்தன்மையும், வசீகரமும்
வெளிப்படையாகவே, லூசியானா எல்லையிலிருந்து சிறிது
தூரத்தில் உள்ள டெக்சாஸின் கார்தாஜில் உள்ள சிறிய சமூகத்தில் இருந்த பலரின் இதயத்தைக்
கொள்ளைக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் உலகின் மிகப்
பெரிய இயற்கை-எரிவாயு எண்ணெய்வயல்கள் நிரம்பியிருந்த
ஓரிடத்தில் அந்த நகரம் அமைந்துள்ளது. கார்தாஜ் நகரம்
அமெரிக்காவின் எரிவாயுவிற்கான தலைநகராக அறியப்பட்ட 1940கள் மற்றும் 1950களில் அது
வளர்ச்சியைக் கண்டது. அது குறிப்பிடத்தக்க பல
செல்வசெழிப்பான விதவை பெண்கள் வசிக்கும் நகரமாக உள்ளது.
லிங்க்லேடரின்
படைப்பிலிருந்த நிகழ்வுகளில், பெர்ன் டெய்ட் (கருப்பினத்தவர்) ஒரு ஓரின சேர்க்கையாளராக இருந்தபோதினும்,தங்களின்
கணவன்மார்களை இழந்த குறிப்பாக வயதான பெண்களுக்கு அனுதாபத்துடன் சிகிச்சை
செய்வதனால், அவர் கார்தாஜின் குடிமக்களுக்கு
பிரியமானவராக இருக்கிறார். சவக்கிடங்கில் பணிபுரிவதற்கு
அப்பாற்பட்டு,பெர்ன் தேவாலயத்தில் ஒரு பாடகராகவும்
இருக்கிறார். அவர் தன்னைத்தானே ஓர் உள்ளூர் இசை
தயாரிப்பு குழுவினோடும் ஈடுபடுத்தி கொள்கிறார். அவர்
அவர்களுக்குத் தேவையான திரைச்சீலைகளைத் தைத்து அளிப்பதோடு, மற்றவர்களுக்கு அவர்களின் வரிப்பணத்தைச் செலுத்துவதிலும் உதவுகிறார்.
மர்ஜோரி நுஜெண்ட்டை
அவருடைய இறந்துபோன கணவரின் இறுதிச்சடங்கில் பெர்ன் சந்திக்கிறார். கார்தாஜிலேயே
மிகவும் பணக்கார விதவையாக திருமதி. நுஜெண்ட் முற்றிலுமாக வெறுக்கப்படுகிறார். அவரது கணவரின்
இறப்பிற்குப் பின், அவர் சொந்தமாக வாங்க இருந்த அந்த வங்கியின்
தலைவராக அப்பெண்மணி பொறுப்பேற்று, கடன்கள் வழங்குவதை
மறுக்கிறாள். “ஒரு பொழுதுபோக்கிற்காக" அவர் பொறுப்பேற்றிருப்பதாக ஓர் உள்ளூர்வாசி கூறுவதாக காட்டப்படுகிறது.
”அவள் எல்லா பணிகளிலும் மூக்கை நுழைத்தால், அவள் புயல் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட வேண்டும்,” என்று மற்றொரு உள்ளூர்வாசியும் குறிப்பிடுகிறார். மர்ஜோரி அவரது சகோதரி மற்றும் அவருடைய மகன் உட்பட ஏறக்குறைய அனைத்து
உறவினர்களுடனும் சண்டையிட்டு வாழ்கிறார்.
பெர்ன் வழக்கம் போல, அந்த விதவையின்
வீட்டில் மரியாதை செலுத்துவதற்காகவும் அவள் எவ்வாறு தேறி வருகிறாள் என்று
பார்ப்பதற்காகவும் வருகிறார். அவ்வாறு விஜயம் செய்வதில் பெர்ன் விடாப்பிடியாக இருப்பதால், இறுதியாக
திருமதி. நுஜெண்ட் அவரை
உள்ளே அழைக்கிறார். இறுதியாக, அவர்கள் பிரிக்கமுடியாதபடி ஆகிவிடுகிறார்கள்.அவர்கள்
இசை நிகழ்ச்சிகளிலும், சமூக நிகழ்ச்சிகளிலும் இணைந்து
சென்று கலந்து கொள்கிறார்கள். அவர்கள் உலகின் பல்வேறு
பகுதிகளுக்கும் இணைந்து பொழுதுபோக்க செல்கிறார்கள். இறுதியாக
மர்ஜோரி பெர்னுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் அளிப்பதுடன், தனது
விருப்பத்தை மாற்றி கொண்டு,தம்முடைய வசதியான பொருட்களையும்
பெர்னுக்கு விட்டுக் கொடுக்கிறார்.பெர்ன் அப்பெண்மணியின்
மீதமுள்ள வாழ்க்கையின் ஆதார இணைப்பாக மாறிவிடுகிறார்.
பெர்ன் இவை
அனைத்திற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.மர்ஜோரி மற்றவர்களிடம் எவ்வாறு
கடினமாக நடந்து கொள்கிறாளோ அதேபோல பெர்னிடமும் நடக்க ஆரம்பிக்கிறாள். அவள் பெர்னிடம்
குறை கண்டுபிடித்து, நச்சரிக்கிறாள். அவன் 24 மணி நேரமும் அவளது கையசைப்பிலும், அழைப்பு
எல்லைக்குள்ளும் இருக்க
வேண்டியிருக்கிறது.பெர்னை
எரிச்சலூட்டுவதற்காக அவள் உணவை 25 முறை
மென்று சாப்பிடுமாறும் செய்கிறாள். ஒரு கதாப்பாத்திரம் தெரிவிப்பது போல, “கடுமையானவளாக, ஆடம்பரமானவளாக, மற்றும் வில்லத்தனமானவளாக”
அவள் இருக்கிறாள்.
கடைசியில், திருமதி. நுஜெண்ட்
பெர்ன்னை வெகு தொலைவிற்கு தள்ளுகிறாள் அல்லது ஒரு வகையான முறிவை அவன்
அனுபவிக்கிறான்.அதனால் அவன் அவளை ஒரு
கைத்துப்பாக்கியால் சுட்டுவிடுகிறான். பிறகு அவளது பிணத்தை ஒரு உறைவூட்டியில் (freezer) அடைத்துவிட்டு, அவளது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அவளுக்கு உடல் நலமில்லை
என்றும் அதனால் வந்து பார்க்கவும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் முடியவில்லை என்றும்
சொல்கிறான். இதற்கிடையில், சமய
போதகர்களிடம் புதிய தேவாலயத்திற்காக 1 லட்சம் டாலர் பணத்தைக் வலுக்கட்டாயப்படுத்தி கொடுத்துவிட்டு, வழக்கமான அவனது மனம் விரும்பிய வேலைகளில் ஈடுபட செல்கிறான். இருந்தாலும்,தவிர்க்கவியலாமல் சந்தேகங்கள் எழுகின்றன. ஒன்பது மாதங்களுக்குப் பின்னர், மர்ஜோரியின்
பிணம் கண்டுபிடிக்கப்படுகிறது.
பெர்ன் மிக பிரபலமானவனாக இருக்கிறான்—மேலும் அவன் தண்டிக்கப்படுவது விரும்பப்படுவதாக இல்லை—அதனால் பகட்டான மாவட்ட நீதிபதி டேனி பக் (மேத்திவ் மெக்கனாகி) எந்த உள்ளூர் நீதிவிசாரணையும் டெய்டை விடுதலை செய்து விடக்கூடுமென அஞ்சுகிறார். எண்னற்ற நகரவாசிகள் பக்கை அணுகி பெர்ன் மீதான குற்றச்சாட்டை கைவிடும்படியும் அல்லது குறைந்தபட்சம் பெர்ன் விஷயத்தில் கனிவாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்துகின்றனர்.
பெர்ன் மிக பிரபலமானவனாக இருக்கிறான்—மேலும் அவன் தண்டிக்கப்படுவது விரும்பப்படுவதாக இல்லை—அதனால் பகட்டான மாவட்ட நீதிபதி டேனி பக் (மேத்திவ் மெக்கனாகி) எந்த உள்ளூர் நீதிவிசாரணையும் டெய்டை விடுதலை செய்து விடக்கூடுமென அஞ்சுகிறார். எண்னற்ற நகரவாசிகள் பக்கை அணுகி பெர்ன் மீதான குற்றச்சாட்டை கைவிடும்படியும் அல்லது குறைந்தபட்சம் பெர்ன் விஷயத்தில் கனிவாக நடந்துகொள்ளுமாறும் வலியுறுத்துகின்றனர்.
பக் மற்றொரு சிறிய
நகரமான சான் அகஸ்டைனுக்கு விசாரணை இடத்தை மாற்றுவதோடு, வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள ஒரு பிற்போக்குத்தனமான நீதிவிசாரணையின்
முன்னால், பெர்னை ஒரு நேர்மையற்ற சர்ந்தர்ப்பவாத
மேற்தட்டு நபராக (எந்த
ஒயினை மீன் உணவுடன் சேர்ந்து அருந்த வேண்டுமென்றும், Les
Miserablesஐ எவ்வாறு உச்சரிக்க வேண்டுமென்றும் தெரிந்த ஒருவராக) சித்தரித்து நிறுத்துகிறார்.
லிங்க்லேடர்
சம்பவங்களின் சூழல்களை நகைச்சுவையுடன் அமைத்துள்ளார்.பெர்ன் சிலவேளைகளில் கிண்டலாக பேசுபவராக இருந்தாலும், வெட்டியான் பெர்னியாக பிணமனை (mortuary) மாணவர்களின் ஒரு குழுவின் முன்னால் (கையில் superglueஐ வைத்துக்கொண்டு) பொதுமக்கள் பார்வைக்கு
இறந்துபோனவர்களுக்கு சிறப்பாக முன்னேற்பாடு செய்து வைப்பது குறித்து ஒரு சிறப்பு
விரிவுரையாளராக மகிழ்ச்சியோடு பேசுவது கவர்ந்திழுப்பதாக உள்ளது. சுமார் ஆறு தசாப்த காலமாக திரையுலகத்தில் சுழன்றுவரும் ஷெர்லி
மேக்லைனுக்கு ஒப்பீட்டளவில் நடிப்பதற்கு சிறியளவே வாய்ப்பு
கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரைப் பார்ப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஜனவரி 1998இல் Texas Monthlyஇல் ஸ்கிப்
ஹோலன்ட்ஸ்வோர்த்தால் (“Midnight in the Garden of East Texas”) எழுதப்பட்ட
ஒரு கட்டுரையை ஒட்டி இப்படத்தின் மூலக்கதை அமைந்துள்ளது. படத்தின் திரைக்கதை
எழுதுவதிலும் அவர் இணைந்திருக்கிறார். படைப்பாளிகள் வண்ணமயமான மொழியைத் தக்கவைப்பதற்கும், உள்ளூர்
மக்களின் முகபாவங்களுக்காகவும் கடுமையாக முயற்சித்திருக்கிறார்கள். படத்தில் வரும்
நகரவாசிகளில் சிலர் நடிகர்களாகவும் சிலர் உண்மையான நகரத்தார்களாகவும் நேரடியாக
கேமராவுடன் பேசி, நடப்புகள்
குறித்த அவர்களின் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். லிங்க்லேடர் Redsஇல் வாரன்
பீட்டியால் பயன்படுத்தப்பட்ட உத்தியை ஒப்பிடுகிறார்.
நேரடியாகவும், குறிப்பாகவும்
காட்டப்பட்ட சில உட்பார்வைகள், கதையின் போக்கினை சிதைக்கும் அணுகுமுறையாக உள்ளன. முழுமையாக வேலை
செய்யப்பட்டிருக்கும் ஒரு சம்பவமென்று தோற்றப்பாட்டளவில் குறிப்பிட்டு காட்ட
நீடிக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சி, நிச்சயமாக படத்தின் முக்கியமான பகுதியாக உள்ள நீதிமன்ற விசாரணை
காட்சியாகும். லிங்க்லேடர் அவரது
தொழில்வாழ்வின் ஆரம்பகாலத்தில் இணைந்து வேலை செய்த McConaughey இங்கே
மிகவும் சிறப்பாக இருக்கிறார். நீண்ட நேரம் வரும் மிகவும் சிக்கலான காட்சிகள், அரைகுறை இதழியல் துண்டு
துணுக்குகளாக அல்லாமல் பெரும்பாலும் உள்ளபடியே காட்டப்படுகின்றன.
அனைத்திற்கும் மேலாக, நகர மக்களைக் குறித்த லிங்க்லேடரின் குணாம்சம் அவ்வபோது எரிச்சலூட்டுவதாக
உள்ளது. நகரவாசிகளைக் குறித்து அல்லது அவர்களோடு
சேர்ந்து நாம் சிரிப்பதா அல்லது வேண்டாமா என்பது எப்போதுமே குழப்பமாக உள்ளது. மேலும் சில இடங்களில் இயக்குனரின் உள்ளெண்ணம் எதுவாக இருந்தாலும்,ரசிகர்களின் கேலிக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாத வகையில் அவரின் காட்சிகள்
அமைந்துள்ளனவா என்று சந்தேகிக்க வைக்கிறது.
படத்திலும் சரி, இயக்குனரிடத்திலும்
சரி அவசியமான வேகம் சில இடங்களில் தவறுகிறது.
2000இல் அந்நகரின் ஒரு நடுத்தர குடும்பத்து வருமானம் $31,822 ஆக மட்டுமே இருந்த போதினும், அங்கே
குழந்தைகளில் ஆறில் ஒருவர் உத்தியோகப்பூர்வமாக வறுமையில் வசித்தாலும், ஒப்பீட்டளவில் கார்தாஜ் ஒரு செல்வசெழிப்பான நகரமாக இருந்திருக்கலாம். ஆனால்
சமகாலத்திய அமெரிக்க வாழ்க்கையின் விரக்தியும், வலியும்
குறித்த ஏதோவொன்று பெர்னில் தவறுகிறது. மேலும் டெய்ட்
குறித்தே என்ன கூறுவது?லிங்க்லேடரின் திரைப்படத்தால் மட்டுமே
குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கும் வேதனையூட்டும் எத்தனையோவிதமான உள்ளார்ந்த
முரண்பாடுகளால் அவரும் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். உண்மையில், திரைப்படத்தின் மிகவும் உணர்ச்சிகரமான தருணம் முடிவில் வருகிறது—சிறைக் கம்பிகளுக்கு பின்னால், ஜேக் பிளாக்கை எதிர்கொள்ளும் போது,முதல்முறையாக, அசட்டை சிரிப்பற்ற, ஓர் உண்மையான டெய்டை நாம்
பார்க்கிறோம்.
இருந்தபோதிலும், ஒரு
நாவலாசிரியர் கூறுவதைப் போல,
“மனித வாழ்வின் நிஜமான நிகழ்வுபோக்குகளில்" வேரூன்றியுள்ள ஒரு
விஷயத்தை எடுத்துக்காட்ட ரிச்சர்டு லிங்க்லேடர் திரும்பியிருப்பது
மகிழ்ச்சியூட்டுகிறது.அவருடைய முயற்சிகளை அவர் இன்னும் ஆழப்படுத்துவார் என்று நம்புகிறோம்.
No comments:
Post a Comment