Thursday, 26 April 2018

CONVICTION

Joanne Laurier



டோனி கோல்ட்வெனால் (பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளரும், செயலதிகாரியுமான சாமுவேல்சாமுவேல் கோல்ட்வெனின் பேரன்) இயக்கப்பட்ட Conviction, நாடகபாணியில் அமைந்திருக்கும் ஒரு கருத்தாழம்மிக்க படமாக இருக்கிறது. மாசசூசெட்ஸில் தம்முடைய சகோதரரின் மீது ஒரு பெண்ணைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டி சிறைக்கு அனுப்பிய தீர்ப்பை மாற்றுவதற்காக நடைபெறும் ஒரு பெண்ணின் 18 வருட போராட்டத்தை நினைத்துப் பார்ப்பது போன்று இப்படம் அமைந்துள்ளது.

ஹிலாரி ஸ்வான்க்கினால், பெட்டி அன் வாட்டர்ஸ் (Betty Anne Waters) கதாபாத்திரம் மனப்பூர்வமாக நடிக்கப்பட்டிருக்கிறது. அவருடைய சகோதரர் கென்னி மாசசூசெட்ஸின் சிறிய நகரத்தில் ஒரு கடினமான சூழலில் வளர்க்கப்பட்டவராக இருக்கிறார். அவர்களின் ஆழமான உறவும், [கென்னி வஞ்சம் நிறைந்த பொலிஸ் ஒருவரால் (மெலிசா லியோவின் கதாபாத்திரம்) கட்டம் கட்டப்படுகிறார்] பொலிஸின் மற்றும் சட்ட அமைப்புமுறையின் அநீதிகளும் பெட்டி அன்-ஐ சட்டத்துறையில் ஒரு பட்டம் வாங்கும் நிலைக்கு தள்ளிச் செல்கின்றன. இது அவருடைய தனிப்பட்ட வாழக்கையைப் பெரிதும் இழந்துவிடச் செய்கிறது.

சிறுவயது சகோதர-சகோதரியின் பழைய நினைவுகள் சிறிது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், கென்னி ஒரு குற்றவாளி அல்ல என்பதை நிலைநாட்ட படத்தில் காட்டப்பட்டிருக்கும் பெட்டி அன்-இன் தீவிர போராட்டம் மிக அருமையாக செய்யப்பட்டிருக்கிறது. இது சுவாரசியப்படுத்துகிறது என்றாலும் கூட, நிதானமான உத்வேகமாக காட்டப்படுகிறது. லியோ, மின்னி டிரைவர், பீட்டர் கலாஹர் மற்றும் ஜூலியட் லிவிஸ் போன்ற துணை நடிகர்கள் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு, படத்தைச் செறிவூட்டுவதற்காக அவர்களின் கதாபாத்திரத்தில் அவர்கள் கொண்டிருந்த பொறுப்புணர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

Innocence Project இல் (குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதற்கான ஓர் அரசுசாரா அமைப்பின் திட்டம்) வாட்டர்ஸ் பணியாற்றுகிறார். பின்னர் DNA பரிசோதனை மூலமாக 2001இல் அவருடைய தம்பியை அவர் சிறையிலிருந்து விடுவித்து கொண்டு வருகிறார். (ஆனால் சோககரமாக, தான் செய்யாத ஒரு குற்றத்திற்காக தம்முடைய வாழ்நாளின் மூன்று மடங்கிற்கும் மேற்பட்ட காலத்தைச் சிறையில் கழிக்கும் கென்னி வாட்டர்ஸ் விடுதலை ஆன ஆறு மாதங்களிலேயே 47 வயதில் இறந்துவிடுகிறார்.)


No comments:

Post a Comment