Monday, 2 April 2018

ஷேக்ஸ்பியர் பற்றிய விவாதம் : முன்னாள் ஆஸ்திரேலிய நடிகரும், இயக்குனருமான ஜோன் பெல்லுடன் ஒரு கலந்துரையாடல்

டேவிட் வால்ஷ் - ஜோன் பெல் உரையாடல்



வில்லிம் ஷேக்ஸ்பியருக்கு (1564-1616)  சாட்டப்பட்ட மூன்று  டஜன் நாடகங்களின்  நிஜமான ஆசிரியர்ஆக்ஸ்போர்டு கோமானான (Earl of Oxford) எட்வர்டு டி வெர்  (Edward de Vere) என்று வாதிடும்ரோலண்ட் எமெரீச்சால் இயக்கப்பட்ட  மற்றும் ஜோன் ஓர்லோஃபால் எழுதப்பட்ட சமீபத்திய Anonymous திரைப்படம்பல கேள்விகளை எழுப்புகின்றது. (பார்க்கவும் Anonymous: An ignorant assault on Shakespeare” மற்றும் An exchange: More on the contemporary assault on Shakespeare”) ஷேக்ஸ்பியரும்அவருடைய படைப்பிலிருக்கும் கதாபாத்திரங்களும்  அந்த விவாதத்தின் மையத்தில் உள்ளன


ஆக்ஸ்போர்டு  பிரபுவிற்கு ஆதரவான வாதங்கள் ஆழமானவை அல்ல என்பதோடு  அவரை  பாதுகாப்போர் இந்த விசாரணையில் ஆதாயமடைய, தற்போதிருக்கும்பொதுவான குறைந்த மட்டத்திலான வரலாற்று அறிவின்பலனை  எடுத்துக்கொள்ள  பெரிதும்  முயல்கின்றனர்எவ்வாறிருந்த போதினும், எமது  பார்வையில்அந்த  நாடகங்களின் மற்றும்  ஒட்டுமொத்தமாக ஷேக்ஸ்பியரின்  அசாதாரணமான  பங்களிப்பிற்கு எதிராக நோக்கம் கொண்ட முயற்சியின் முனைவுமிகவும் தீவிரமாக  உள்ளது


ஷேக்ஸ்பியர் மீதான தாக்குதலில்நிஜமான கலைத்துவ மேதைமையை உணராமல்  இருப்பதென்பது, 'எலிசபெத்திய காலத்திய அந்த  நாடகாசிரியரால் எதார்த்தத்தின்  ஒவ்வொரு மூலைமுடுக்கையும் உணர முடியுமென்ற மற்றும் அவற்றை கவிதை நடையில்  வாழ்க்கைக்குள் கொண்டு வர முடியுமென்ற அவருக்கிருந்த  நம்பிக்கை  உட்படஅந்த நாடகங்கள் மற்றும்  அந்த நாடகாசிரியரின்  பரந்த நோக்கம்  (universality) நோக்கிய விரோதத்தோடு இணைந்துள்ளதுஷேக்ஸ்பியர் எனும்  கலைஞரின்  ஆழத்தையும், விரிவையும் குறித்துபெரும்பாலும் பாலினம்  அல்லது  இன அடையாள கொள்கைபிடிப்போடுதன்னைத்தானே  சம்பந்தப்படுத்துவதும்மற்றும் தன்னைத்தானே மையப்படுத்துவதும்  ஒரு குறிப்பிட்ட சமகாலத்திய  சமூக சூழலுக்கு ஏதோவொருவிதத்தில் அச்சுறுத்தலாகவும்குழப்புவதாகவும்உள்ளது.     
இத்தகைய பொதுவான சில கேள்விகளுடனான ஒரு கவலைக்கு அப்பாற்பட்டுசமீபத்தில் நான் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய நடிகரும், இயக்குனரும் மற்றும்  1990இல்  பெல் ஷேக்ஸ்பியர் நாடக கம்பெனியை ஸ்தாபித்தவருமான  ஜோன் பெல்லுடன்  உரையாடினேன்.
அவருடைய உயிரோட்டமுள்ள நினைவுக்குறிப்புகளான The Time of My Time என்பதில்கத்தோலிக்க உயர்நிலை பள்ளியில் அவருடைய ஆசிரியர்களில் ஒருவர்  நடத்திய ஆங்கில வகுப்பில் A Midsummer Night’s Dream  அறிமுகப் படுத்தப்பட்ட போதுஷேக்ஸ்பியரை முதன்முதலில் ஆர்வத்துடன் தெரிந்து  கொண்டதாக  பெல்  (புதிய தெற்கு வேல்ஸின்  மெயிட்லாந்தில் 1940இல்  பிறந்தார்விவரிக்கிறார்அதற்கு மேலாகஒரு உள்ளூர் சினிமாவில் லாரன்ஸ்  ஓலிவரின்  Henry V  பார்த்ததும்அது அவரை  "மலைப்பூட்டியதோடு, ஒளிரூட்டியதாகவும்இருந்ததாக குறிப்பிடும் அவர்பின்வருமாறுதொடர்கிறார், “நான்  என்ன அனுபவபட்டேனென்று என்னால் நம்பவேமுடியவில்லைஅதனால் அதை  மீண்டும் மீண்டும் சென்று பார்த்தேன். … அதற்கடுத்து  வந்த  ஆண்டுகளில்ஓலிவரின்  Hamlet மற்றும் Richard III  வெளியாயினபின்னர் எனது விதி  அடைக்கப் பட்டுவிட்டது.”
         
பெல் பல்கலைக்கழகம் சென்று கொண்டிருந்த காலக்கட்டத்தில்சிட்னியில் தொழில் ரீதியில் எந்தவொரு முழு-நேர நாடக கம்பெனியும்  இருக்கவில்லை. அவர் ஒரு  பேட்டியாளரிடம்  கூறியது: “நாடக கம்பெனியில்  உங்களுக்கு தொழில்வாய்ப்பு  வேண்டுமானால்அங்கே (ஆஸ்திரேலியாவில்) ஒன்றேயொன்று கூட கிடையாது.” 1964இல் இங்கிலாந்திற்கு பயணப்பட்ட பெல்ஆறு மாதங்களுக்குப்  பின்னர்பெருமை மிக்க ரோயல்  ஷேக்ஸ்பியர் கம்பெனியில் சேர்ந்துகொள்ள  அழைக்கப் பட்டார்

1970இல் ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய அவர்தேசிய நாடகக் கலை பயிலகத்தில்  ஆசிரியரானார்பின்னர்சிட்னியில்  நிம்ரோடு (Nimrod)  நாடகக் கம்பெனியை  இணைந்து ஸ்தாபித்தார். 


இருபத்தியொரு  ஆண்டுகளுக்கு  முன்னால் அவர் ஸ்தாபித்த  ஷேக்ஸ்பியர் கம்பெனிக்காக அவர், Shylock, Richard III, Macbeth, Malvolio, Coriolanus, Leontes, Prospero, King Lear  மற்றும்  Ulysses ஆகியவற்றோடு  ஏனைய கதாபாத்திரங்களையும்  ஏற்று நடித்துள்ளார்கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும்அவர்  ஷேக்ஸ்பியரின் Romeo and Juliet, The Comedy of Errors, Macbeth, As You Like It மற்றும் Pericles ஆகிய தயாரிப்புகளை இயக்கி உள்ளதோடு, அவற்றோடு சேர்ந்து  மெல்வெல்லின் (Melville) Moby Dickஹெய்னெர்முல்லரின் மறுபடைப்பான (Heiner Müller) Titus Andronicusகோகோலின் (Gogol) The Government Inspectorபென் ஜோன்சனின் (Ben Jonson) The Alchemist  மற்றும்  ஜோன்வெப்ஸ்டெரின்  (John Webster) The Duchess of Malfi ஆகியவற்றின் தழுவலையும் இயக்கியுள்ளார்.    

பெல் ஷேக்ஸ்பியர் நாடகக் கம்பெனி ஒன்று மட்டுமே ஆஸ்திரேலியா நாடு முழுவதும்  சுற்றுபயணம் செய்யும் ஒரே நாடக கம்பெனியாக உள்ளது. தற்போது அது பல்வேறு  கல்விசார் வேலைதிட்டங்களுக்கு கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும்  ஒவ்வொரு  ஆஸ்திரேலிய மாநிலத்தில் மூன்று நாடகங்களை அரங்கேற்றசுற்றுபயணமும்  செய்து  வருகிறது.

ஷேக்ஸ்பியர்  நாடகங்களை நடத்திய  இந்த  ஓர்  அரை நூற்றாண்டின் அவரின் சிந்தனைகளையும்நினைவுகளையும் பெல்On Shakespeare  என்ற தலைப்பில், 2011இல்  பதிப்பித்தார்.

நாம் தொலைபேசியில் அவருடன் உரையாடினோம்.

David Walsh                       john bell 

டேவிட் வால்ஷ் Anonymous திரைப்படம்இந்த உரையாடலுக்கு  அவசியமானசந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுஆனால் ஷேக்ஸ்பியர் மீதான முறையீடு,அவருடைய பரந்தநோக்கு (universality) தான் நம்முடைய மிகவும் பொதுவான கவலையாக  உள்ளதுஎது இன்றும் பார்வையாளர்களைநடிகர்களை, இயக்குனர்களைஅந்தநாடகங்களை நோக்கி இழுத்து வருகிறதுஉங்கள் நினைவுக்குறிப்பில் நீங்கள் ஷேக்ஸ்பியரை  முதன்முதலில் எதிர் கொண்டதைக்  குறித்து  எழுதியுள்ளீர்கள்அந்த அனுபவத்தையும்அந்த காலகட்டத்தில் உங்களைக் கவர்ந்த அல்லது சக்தியோடு இருந்த சில உட்கூறுகளை  நீங்கள் நினைவுகூர முடியுமா?
  
ஜோன் பெல் ஆம்என்னால் கூற முடியும்நீங்கள் விரும்புவதால் கூறுகிறேன்எனக்கு 12 அல்லது 13 வயதிருக்கும் போதுரேடியோவில் ஜூலியஸ் சீசர்  கேட்டது  தான்எனது முதல் தரிசனமென்று நான் நினைக்கிறேன்அந்தமொழியால்நான் தடுத்தாளப்பட்டேன்அந்த கவிதைதான் பெரும்பாலும் என்னை  நகர்த்தியதுநான் அதுபோன்ற மொழியை ஒருபோதும் கேட்டதே இல்லை.

நான் ஏறத்தாழ 14 அல்லது 15 வயதிருக்கும் போதுஉயர்நிலை பள்ளியில் எனக்கு  இரண்டு நல்ல ஆங்கில ஆசிரியர்கள் கிடைத்ததற்குநான்அதிருஷ்டம்  செய்திருக்க  வேண்டும்அவர்கள் வெறுமனே, 'இதை மனப்பாடம் செய்யுங்கள்என்று கூறிவகுப்பறையில் பாடத்தைக் கடத்த மாட்டார்கள். ஒருவர்எங்களுக்காக வகுப்பறையில்  அந்த நாடகத்தையே நடத்திகாட்டினார்அதன் எல்லா பகுதிகளையும்  நடத்தினார்அரங்கங்களையும், ஆடை வடிவமைப்பையும்ஒளியமைப்பையும்ஒட்டு மொத்தத்தையும்   குறித்து விவரித்தார்.

அடுத்ததுஅதே காலக்கட்டத்தில் என்று நினைக்கிறேன்எனக்கு 14 அல்லது 15  வயதிருக்கும் போதுநான் லாரன்ஸ் ஓலிவரின் Henry V  திரைப்படம்பார்த்துக்கொண்டிருந்தேன்அந்த படம் அந்த அத்தனை உட்கூறுகளையும்ஒட்டுமொத்தமாக கொண்டிருந்ததுஅதன் மொழி மிகவும் மலைப்பூட்டுவதாகஇருந்ததுஇயல்பிலேயே  முரட்டுத்தனமான அந்த காட்சியமைப்போ படுநேர்த்தியாக  இருந்ததுஅது  குளோப்  தியேட்டரின் ஒரு மறுகட்டமைப்பில் தொடங்குகிறதுஅந்த தியேட்டர்  முழுவதும்  களியாட்டம் நிறைந்திருக்கும்; நடிகர்களும்இரசிகர்களும்  ஒருவரோடு ஒருவர்  நேரம்  கிடைக்கும் போது அதுகுறித்து  சிறந்த உணர்வுடன்  அலாவுவார்கள்இதுசைகைமொழி-நடிப்பும் வட்டரங்கும் (circus) கொண்டிருந்த  அந்த நாடக  கம்பெனியோடு  நான்முதன்முதலில் எதிர்கொண்டவைகளை எனக்கு நினைவூட்டின.
எனது 15 வயதில் அல்லது  ஏறக்குறைய  அந்த வயதில்நான்  முற்றிலும் மாறி யிருந்தேன்நான் ஒரு நடிகராக ஆகிஷேக்ஸ்பியர் வேடம் செய்ய விரும்பினேன்.


டேவிட் வால்ஷ் நீங்கள்  வட்டரங்கு (circus)  குறித்து  குறிப்பீட்டீர்கள் என்று நினைக்கிறேன்இது இன்றும் மக்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது: ஷேக்ஸ்பியரில்  உள்ள பாமரநடை மற்றும் கவிநடையின்உயர்-ரக கருத்துக்களின் மற்றும் கீழ்-ரக கருத்துக்களின் குறிப்பிடத்தக்க சேர்க்கையும், நடிகர்கள் மற்றும்  கருத்துருக்களின்தனிமனிதவியல்புகளின் மற்றும் சமூக வகைகளின்செல்வந்தர்களின்  மற்றும்  வாழ்க்கையின் பலவேறுபட்ட வெளிப்பாடுகளின் கலவையும்  எனஇவை  இப்போதும் மக்களை மிகவும் கவர்ந்த ஒன்றாக உள்ளது.

ஜோன் பெல்: முற்றிலும் சரியேஅதுவொரு முழுமையான நாடக கம்பெனி. ஏறத்தாழ  ஏனைய ஒவ்வொரு நாடகாசிரியரும்அது டென்னெஸ் வில்லியம்ஸ் அல்லது நியோல்  கோவர்டாக இருந்தாலும் சரிஹரோல்டு பின்டர் அல்லது சாமுவேல் பெக்கெட்டாக  இருந்தாலும் சரிஒப்பீட்டளவில் அவர்கள் குறுகிய எல்லைகளுக்குள்  வேலை  செய்வதை  நீங்கள் பார்க்கலாம். ஏனைய அனைத்து  கலைஞர்களையும்  கடந்து  செல்லும் ஷேக்ஸ்பியரால், நீங்கள் குறிப்பிட்டதைப் போலஒரேயொரு  காட்சிக்குள்ளேயே  கூடசான்றாக The Winter’s Taleஇல்மிகவும்  பாமரத்தனத்திலிருந்து மிகவும் விழுமிய நடைக்குச் செல்ல முடியும்.    
அதேநேரத்தில்குளோப் தியேட்டரின் கதாபாத்திரத்தினால் தூண்டப்பட்டதாலேயேஅந்த தியேட்டரில் தாம்  இருக்கிறோம் என்பதையும் ஒருவர் எப்போதும் புரிந்து  வைத்திருப்பார்அது எவ்வாறு இருந்ததென்ற ஒருவித உணர்வை  இலண்டனின்  புதிய ஒரு கம்பெனி உங்களுக்கு அளிக்கிறதுஅதாவதுநடிகரைச்  சுற்றியிருக்கும்  பார்வையாளர்கள்பரந்த சூரியவெளிச்சத்தில் இந்த நேரடியான  தொடர்புஉத்திகள்  எதுவுமில்லாமல்,காட்சித்திரைகள் எதுவுமில்லாமல்அழகழகான  ஒளியமைப்புகள் எதுவுமில்லாமல்எவ்வித பிரமைகளும் இல்லாமல்  இருக்கிறது.   

டேவிட் வால்ஷ்ஷேக்ஸ்பியர் தெளிவாக நாளொன்றுக்கு 1,500 முதல் 2,000 மக்களைகுளோப்பிற்கு வரச்செய்ய கூடியவராக  இருந்திருக்கிறார்

ஜோன் பெல்ஒருவேளை நாம் ஷேக்ஸ்பியரின் பார்வையாளர்களைக் குறைமதிப்பீடு  செய்கிறோம்அரங்கத்தின்மீது காய்கறிகளைத் தூக்கிவீசியெறிய  விரும்பிய  ஒரு  பார்வையாளர்கள் கூட்டம்அடுத்த கதவுவழியாக கரடி-வேட்டைக்கு  சென்றிருக்கக் கூடும். மேலும்ஷேக்ஸ்பியர்  பார்வையாளர் தடுப்புக் கம்பியை  தொடர்ந்து  உயர்த்திவந்தார்அது அவருடைய பார்வையாளர்களுக்கே  மிகவும் சிரமத்தை ஏற்படுத்தி  வந்ததுநீங்கள் The Comedy of Errors  மற்றும் Henry Viஇன் கரடுமுரடான மற்றும் ஆயத்தநிலையிலிருந்து Troilus  மற்றும் Cressida வரையில்  பார்ப்பீர்களென்றால்அது பார்வையாளர்களின் வசதிகேட்கும் திறன்பொறுமை  மற்றும் அறிவுக் கூர்மையின்மீது செய்யப்பட்ட அசாதாரணமான  தீவிர  முறையீடுகளாக  உள்ளது
     
டேவிட் வால்ஷ்மொழி முற்றிலும் பகுத்தறிவை கொண்டு செல்வதாகவும், அனைத்து  உணர்வுகளையும் தொடும் வகையில் இருந்ததாகவும்உங்களின் நினைவுக்குறிப்பில்  கூறியுள்ளீர்கள்நான் ஆச்சரியப்படும் விதத்தில், அதுகுறித்து  வேறு ஏதேனும்  சிந்தனைகள்  உண்டா?

ஜோன் பெல்: அந்த மொழி மொத்த  உடலையும்,  ஆன்மாவையும் பிடித்துக் கொள்கிறதுசந்தங்கள்பண்கவிதைக்குப்  பின்னர் அளிக்கப்படும் வெளிப்பாடு  என  அவற்றையெல்லாம் வார்த்தையில் கூற முடியாது. பொதுவாக நம்மால் எதுகை மோனையாக்க  சொற்களையும் எதுகை மோனையாக்குதல்வரிகளைக்  கேட்ட  பின்னரும் உங்களுடனேயே தங்கிவிடும் அந்த சந்தம்என  இவற்றையெல்லாம்  எல்லா  அருமையான கவிதைகளும் செய்கின்றன என்றே நான் கருதுகிறேன்அக்காலக்கட்டத்தின் ஏனைய உரைநடை  நாடகங்களிலிருந்த  பல நல்ல விஷயங்கள் என்னவென்றால்அவை எழுத்து வடிவில் இருந்தனஅவை எளிமையாக இருந்தனஅவை ஒரு கதையையும் கூட புனைந்துரைத்தனஆனால் ஷேக்ஸ்பியரில்  இருந்த  பண்ஒலியின் தரம்செய்யுளின் ஒவ்வொரு  நல்லவரிகளும்உங்களுடனேயே  இருந்துவிடும்.

டேவிட் வால்ஷ்பிரிட்டனில் 1960களில் ரோயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்துடனான  உங்களின் அனுபவம் குறித்து கூற முடியுமா?

ஜோன் பெல்நான் அங்கே சுமார் ஐந்து ஆண்டுகள் இருந்தேன்அதுவரையில் நான்  வெகு-குறைவான நடிப்பு பயிற்சியே  பெற்றிருந்தேன்சுமார்  ஆறுமாதங்கள்  நான்  Bristol Old Vic schoolஇல்  இருந்தேன்பின்னர்  ஸ்ட்ராட்போர்டு நாடகக்  கம்பெனியில் சேர அழைக்கப்பட்டேன்அங்கே நான் இருந்த  ஐந்துஆண்டுகளில்தங்களின் உச்சத்தில் இருந்த பீட்டர் ஹால்ஜோன் பார்டன்,பீட்டர் புரூக் போன்ற  மிகச்சிறந்த இயக்குனர்களோடு பணியாற்றியும், உண்மையிலேயே நடிப்புக்கலை  என்றால் என்னவென்பதையும் கற்றேன். பால் ஸ்கோபீல்டு (எனக்கு மிகவும்  விருப்பமானவர்), ஐயன் ரிச்சர்டுசன், அயன் ஹோல்ம்ஜிலென்டா ஜேக்சன் போன்ற  சில மிக அருமையான நடிகர்களோடும் பணியாற்றினேன்.  



அது மிக அருமையான நடிகர்களின் கலைக்கூட்டமாக இருந்ததுஒத்திகை அறையில்  இருப்பதுஅவர்கள் வேலை செய்வதைப் பார்ப்பதுஅவர்களோடு அப்போது  அரங்கில் இருப்பது என இவ்விதத்தில் உண்மையிலேயே  நான் நடிப்புக் கலையை  பயின்றேன்அத்தோடு இயக்குவது குறித்த விஷயங்களிலும் பெரும் வாய்ப்பைப்  பெற்றேன்ஆகவேஅனுபவமென்பது முற்றிலும் மதிப்பிட முடியாததென்பதைநான்  கண்டேன்மேலும் ஸ்ட்ராட்போர்டில் ஒருவர் அதிக ஆண்டுகள் இருக்கிறார்  என்றால்ஒப்பீட்டளவில் அங்கே அவருக்கு வெகு குறைவான  கவனசிதறல்களே  இருக்கும்உங்களை நீங்களே முற்றிலுமாக வேலையில் அர்பணித்துவிடுவீர்கள் என்பதே  உண்மை  உங்களுக்கு ஓய்வும் கிடைக்கும்வெறுமனே ஒத்திகைகளைப்  பார்க்கும் நேரமும் கிடைக்கும்வேலையைக் குறித்தும்  மற்றும் நடந்து  கொண்டிருக்கும் விஷயங்களைக்  குறித்தும் அசைபோட நேரம் கிடைக்கும்

டேவிட் வால்ஷ்: பீட்டர் புரூக்கின் ஏதேனும் தயாரிப்புகளில் இடம்பெற உங்களுக்கு  வாய்ப்பு கிடைத்ததா?

ஜோன் பெல்: துரதிருஷ்டவசமாக எனக்கு மட்டுமே இடம் கிடைத்தது: ஆஸ்ச்விட்ஜ்  வழக்குகளின் ஒலிபெயர்ப்பு The Investigation என்று  பீட்டர்வெய்ஸினால்  நாடகமாக்கப் பட்டதுஅது [1965இல்நடந்த  ஒரு பொதுவாசிப்பு மட்டுந்தான்
அந்த காலக்கட்டத்தில் மட்டும் தான்நான் அவரை ஒரு இயக்குனராக எதிர்  கொண்டேன்ஆனால்  உண்மையில் கம்பெனியைச் சுற்றிஅவர்  நிறைய  செய்து வந்தார்உண்மையில்நான் அவருடைய அனைத்து தயாரிப்புகளையும் பார்த்தேன் 

டேவிட் வால்ஷ்பால் ஸ்கோபீல்டின் King Lear  குறித்து  நீங்கள்  என்ன நினைக்கிறீர்கள்? (இது 1971இல் பீட்டர் புரூக்கால் திரைப்படமாக இயக்கப்பட்டது)

ஜோன் பெல்: நான் அவருடைய Lear நாடகத்தை அரங்கில் சென்று பார்த்ததில்லைதிரைப்படத்தை மட்டுமே பார்க்க முடிந்ததுஅதைக்கொண்டு அவரை மதிப்பிட  முடியாதென  நினைக்கிறேன்அதுவும் குறிப்பாக, அதுவொரு நல்ல  படமென்றும்  நான் கருதவில்லைஅது மிகவும் கருத்தற்றும்சிதைந்தும் இருப்பதாக  நினைக்கிறேன்அரங்க தயாரிப்பு குறித்து நான் கேள்விபட்டதிலிருந்து  கூறுவதானால்அந்த இயக்குனர் சரியான பாதையில் நகரவில்லைவெறுமனே அவர் அந்தயிடத்தில் ஸ்கோபீல்டை கொண்டிருந்தார்அந்த  திரைப்படத்தின் கேமிரா வேலை குறித்து நான் மிகவும்  நனவுபூர்வமாக  இருந்தேன்அது ஸ்கோபீல்டின்சக்தியை குழிபறித்தது

டேவிட் வால்ஷ்: [பீட்டர் வெய்ஸின்Marat/Sadeஇன்  போது  நீங்கள் எங்கே இருந்தீர்கள்?

ஜோன் பெல்ஆமாம்நான் Marat/Sade பலமுறை பார்த்துள்ளேன்மீண்டும், அது  திரைப்படத்தை விட  மிகமிக சிறப்பானதுஅந்த திரைப்படம்  நிறைய நேர்த்தியை  மற்றும் மூலத்தில் இருக்கும் பலவற்றை இழந்துவிட்டிருப்பதாக நினைக்கிறேன்இலண்டனில் உள்ள Aldwych திரையரங்கில் அதை நான் பலமுறை பார்த்தேன்அப்போது நான் நாடக கம்பெனியில் இருந்தேன்அதை நாடகமேடையில்  பார்த்ததன்  உள்பாதிப்பு மலைப்பூட்டுவதாக இருந்தது. அவையெல்லாம்  திரைப்படத்தில்  கணிசமான  அளவிற்கு  நீர்த்துப்போக செய்யப்பட்டிருந்தன.     

டேவிட் வால்ஷ்: நீங்கள் ஒரு நடிகராக வேண்டுமென ஆர்வப்படத் தொடங்கியபோதுசிட்னியில் நிரந்தரமான தொழில்ரீதியிலான தியேட்டர் எதுவும் இல்லையென்று  உங்களுடைய புத்தகத்தின் ஏதோவொரு புள்ளியில் நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே.

ஜோன் பெல்அது, 1960இல்முதன்முதலில் நான்  தொழிலுக்கு  வந்தபோது அவ்வாறு இருந்ததுஉண்மையில்நான்  அதிருஷ்டசாலியாக  இருந்தேன். ஏனென்றால்அப்போது ஒரு நாடக கம்பெனி  ஸ்தாபிக்கப்பட்டு  இருந்தது. நான்  அதில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினேன்முன்னதாக அங்கே வேறு கம்பெனி களும்  இருந்தனஆனால் அவை அமைக்கப்பட்டு பின்னர் தோற்றுப்போயின. நான் இங்கிலாந்திலிருந்து திரும்பி போது, 1970இல்அங்கே ஒரு  தியேட்டர் தொழில்துறை இருந்ததுஆனால் அது இன்று இருப்பது போல்அருகில் இருக்க வில்லைஆஸ்திரேலியாஅசாதாரணமான விதத்தில்கடந்த  40 ஆண்டுகளின்  விளைபொருளாக  ஒரு  சிறந்த  ஆரோக்கியமான  நாடகக் கலாச்சாரத்தைக்  கொண்டிருக்கிறதென நான் நினைக்கிறேன்.

டேவிட் வால்ஷ்: மிக வெளிப்படையாகவேஅந்நகரமும்நாடும் அசாதாரணமான  மாற்றங்களைக் கண்டுள்ளனஅத்தகைய மாற்றங்களுக்கு பல வழிகளில்  பொறுப்பான ஒரு தலைமுறையை நீங்களும் கூடசேர்ந்தவராகிறீர்கள்உங்கள்  தலைமுறையை நீங்கள் எவ்வாறு காண்கிறீர்கள். அதற்கு முன்னிருக்கும்  சவால்கள்  என்னஅது எதை நிறைவேற்றவேண்டியுள்ளது?  

ஜோன் பெல்: இங்கிலாந்திலிருந்து  நான் திரும்பிய  போது நான்  முக்கியமாக உணர்ந்தது  என்னவெனில்ஆஸ்திரேலியா மிகவும்  இறுகிப்  போயிருந்ததை, அது அதன் சொந்த நாடகங்களை உருவாக்கவில்லை என்பதைநாம் தொடர்ந்து  ஆங்கிலேய முறையை தழுவி கொண்டிருந்ததை உணர்ந்தேன் என்று நினைக்கிறேன்ஒவ்வொரு பிரதான நாடக கம்பெனிகளும் ஒரு ஷேக்ஸ்பியரைஒரு  பேர்னாட்ஷாவைஒரு நெயில் சிமோனைஒருபெய்டியூ பார்சை (Feydeau farce) கொண்டிருந்தது அல்லதுஎன்னவாக இருந்தாலும்இவ்விதத்தில்  ஆஸ்திரேலிய  உள்ளடக்கத்தைப் பொறுத்தவரையில்  மிகவும் குறைவாக  இருந்ததுஆகவே என்னுடைய தலைமுறைஅதை திருப்பிப்போடஒரு  ஆஸ்திரேலிய  நாடகக் குழுவை உருவாக்க தீர்க்கமாக உள்ளது



மெல்போர்னில் ஆஸ்திரேலிய நடிப்பு குழு என்ற ஒரு  குழுஅந்த வேலையைத்  தொடங்கும்  விதத்தில்அப்போது 1970இல்நானும் என்னுடைய ஒரு கூட்டாளியும்  கிங்ஸ் கிராஸில் நிம்ரோட் நாடக கம்பெனி என்ற ஒரு சிறிய நாடக கம்பெனியை  அமைத்துஆஸ்திரேலிய படைப்புகளைத் தயாரிக்க தொடங்கினோம்பின்னர்  நான்  அதை அதற்கடுத்த 14 ஆண்டுகளுக்கு முன்னெடுத்து சென்றேன்அது ஒருவித   தொடக்கமாக இருந்ததுஇங்கே கொடிகட்டி பறக்கும்  ஒரு திரைப்பட  தொழில் துறையும் தொடங்கியிருந்ததுநாடக அரங்கம் திரைப்பட  தொழில்துறைக்கு புதிய திரைக்கதைகளையும்புதிய திறமையாளர்களையும்மற்றும் நம்முடைய சொந்த  பேச்சுவழக்கைக் கேட்க செய்யும் ஒரு விழிப்புணர்வையும் கூட அளித்ததாக நான் நினைக்கிறேன்அதுவொரு முக்கியத்துவம் மிக்க அபிவிருத்தியாக இருந்ததுஅந்தளவிற்கு அதற்கு முன்னர் நடந்ததேயில்லை.இங்கே  ஒரு நாடக கம்பெனியை நடத்திவரும் கேட் பிளான்செட் போன்ற சர்வதேச திறமைசாலிகளையும்  மற்றும்  துரதிருஷ்டவசமாக ஹாலிவுட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்ட இதரபல  நடிகர்களையும்  நாங்கள் உருவாக்கினோம். ஆனால் முன்னொருபோதும்  நம்மிடம் இல்லாத  ஆஸ்திரேலிய திறமையாளர்களை  அங்கீகரிப்பதன் ஆரம்பமாக அது இருந்தது.  

டேவிட் வால்ஷ்: ஆஸ்திரேலிய நடிகர்களின் பிரச்சன்னம் உலகளாவிய திரைப்பட  தொழில்துறையில் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

ஜோன் பெல்அது மலைப்பூட்டுவதாக உள்ளதுஅவர்கள் அனைவரும் அமெரிக்க  பேச்சுவழக்கை திணிப்பதோடுஅமெரிக்களைப் போல காட்டிக்கொள்கிறார்கள்  என்பதே என்னுடைய ஒரே கவலைஉலகின் பெரும்பான்மையினருக்கு அவர்கள்  ஆஸ்திரேலிய கலைஞர்கள் என்பதே தெரியாதுநம்முடைய சொந்த மொழியை  எப்போது  அவர்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்குவார்கள்,  அமெரிக்கர்களைப் போல காட்டிக்கொள்வதை எப்போது நிறுத்துவார்கள்  என்று நான் எதிர்பார்த்திருக்கிறேன்.

டேவிட் வால்ஷ்அது ஒரு பிரச்சினை தான்ஆனால் அது ஆஸ்திரேலியாவில்  மட்டுமல்லசரிமீண்டும் ஷேக்ஸ்பியருக்கு திரும்புவோம்அவருடைய படைப்புகள்  உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும்அவருடைய படைப்புகளுக்காக  அர்பணிக்கப்பட்ட ஒரு நாடக கம்பெனியை  நீங்கள் ஸ்தாபித்ததாகவும்  குறிப்பிட்டீர்கள்ஆகவே மிகவும் தனிச்சலுகை படைத்த பின்புலங்களைக்  கொண்ட  மக்களிடம் மட்டுமின்றிஏனைய மக்களிடமும் அதேயளவிற்கு  தாக்கத்தைக் கொண்டிருக்கும் சக்தியை அந்த நாடகங்கள் பெற்றிருந்ததாக நீங்கள் நம்புகிறீர்களாபல தசாப்தங்களுக்கு முன்னர் ஷேக்ஸ்பியருக்கு இரசிகர்களிடமிருந்து  எந்தளவிற்கு  விடையிறுப்பு  கிடைத்ததோ  ஏறக்குறைய அதேயளவிற்கு சமகாலத்திய  இரசிகர்களிடமிருந்து  விடையிறுப்பு கிடைப்பது சிரமமென்று  நீங்கள்  கருதுகிறீர்களா அல்லது இரசிகர்களிடையே மாற்றங்கள் ஏதேனும் இருந்தால்அவை  என்ன மாதிரியான மாற்றங்களாக இருக்கின்றன என்பதை அறிய நான்  ஆர்வமாக  உள்ளேன்.  

ஜோன் பெல்ஷேக்ஸ்பியரை  நடித்து காட்டுகிறோம் என்று  கூறிக்கொண்டு, 40 ஆண்டுகளுக்கு முன்னால்ஒரு பாரம்பரிய வழியில் நாம் மிகவும் மாட்டிக்கொண்டோம் என்று நான் நினைக்கிறேன்அதாவது, Old Vic அல்லது  ரோயல் ஷேக்ஸ்பியர்  நாடக கம்பெனியை போன்று செய்வதே ஷேக்ஸ்பியரை நடித்து காட்டுவதென்று  மக்கள்  கருதினர் என்பதைக் குறித்ததுஇது  அந்தகாலத்திய உடையலங்காரங்கள்  மற்றும் அப்போதைய ஆங்கில பேச்சுவழக்கை கையாள்வது என்பதைக் குறித்ததுஆகவே  தயாரிப்புகள் மிகவும் பழமையாக இருந்தனஇசைநாடகத்திற்கும்கூட்டு நடனத்திற்கும் சென்ற மக்கள் அத்தகைய தயாரிப்பு விதங்களையே  விரும்பினர்அவர்கள்  அவர்களின்கலாச்சார எதிர்பார்ப்புகளோடு ஒத்திருந்தனர்அதற்குமாறாக  மிதமிஞ்சிகாட்டுவதும்ஆடம்பரமாக காட்டுவதும்நழுவுவதும் வெளிப்படையாகவே'உயர்-ரக கலைஎன்றிருந்ததுகலாச்சாரம் (Culture)  என்பது  'C' என்ற தலைப்பெழுத்தோடு இருந்தது.    

கடந்த 40 ஆண்டுகளில் நாங்கள் அதை உடைக்க முயற்சித்து கொண்டிருக்கிறோம்தற்போது  21 ஆண்டு பழைய என்னுடைய நாடககம்பெனிஎப்போதும்  நவீன  உடைகளோடுமுழுவதும் ஆஸ்திரேலிய பேச்சுவழக்குடன்அல்லது உங்களுடைய  பேச்சுவழக்கு எதுவோ அது போலந்துரஷ்யசீன என்னவாக இருக்கிறதோ  அதற்கேற்ப பயன்படுத்தி, ஷேக்ஸ்பியர் நாடகத்தை நடத்தி வருகிறதுஉங்களின்  பேச்சுவழக்கை அல்லது நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்களோ  அந்த பேச்சுவழக்கை மறைக்க வேண்டியதில்லைமேலும் சமகாலத்தில் அதிகமாக  காணப்படும் பிரச்சினைகளான  இனவாதம்யூத-எதிர்ப்புபாலின முரண்பாடுயுத்த-எதிர்ப்புணர்வு  ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்நாடகங்களில்  என்ன இருக்கிறதோ அதை தற்போதைய இரசிகர்களுக்கு ஒத்தவிதத்தில் நாடகங்களில்  கொண்டுவர கவனம் செலுத்துகிறோம்நாங்கள்  அவற்றில்தான் கவனம் செலுத்தி  வருகிறோம்அதுவொரு உலகளாவிய பிரச்சினை என்பதால்அதில் நாங்கள்  தனித்தில்லைபோலந்து விமர்சகர் ஜேன் கோட்அவரை அழைத்த விதத்தில்ஷேக்ஸ்பியர் நம்முடைய சமகாலத்தவராக உள்ளார்.

ஷேக்ஸ்பியரை பாடசாலைகளில் எப்போதும் போல பொதுவாக மிகமோசமாக கற்றுத் தருகிறார்கள் என்று நான் கருதுகிறேன்எங்களுடைய கம்பெனியில் ஒரு  கல்விக் குழுவைக் கொண்டிருப்பதன் மூலமாகஅதற்கு நாங்கள் எதிர்நடவடிக்கை  எடுக்க  முயல்கிறோம்அந்த எட்டு இளம் நடிகர்கள், ஆஸ்திரேலியா முழுவதிலும்  உள்ள  60,000  மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் பள்ளிகளில்  நடிப்புகலைக்காக  செலவிடுகின்றனர்அவர்கள் அதன்மூலமாக ஷேக்ஸ்பியரை வகுப்பறைக்குள்ளேயே  ஒரு நடிகராக கொண்டுசெல்கின்றனர்குறிப்பாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாககொண்ட குழந்தைகள் நிறைந்த வகுப்பறைகளில்சான்றாக மத்திய கிழக்கு மாணவர்கள் நிரம்பிய வகுப்பறைகளில்ஆசிரியர்கள் ஷேக்ஸ்பியரை கொண்டு  செல்ல  உதவும் வகையில்  நாங்கள் பயிற்சிபட்டறைகளையும், கருத்தரங்கங்களையும்  கூட நடத்துகின்றோம்

பழங்குடியின சமூகங்கள்கிராமப்புற சமூகங்களிடையே நாங்கள்  செல்லும்போதும்அங்கே அவர்களுக்காக ஷேக்ஸ்பியர் நாடகங்களை  நடத்தும்போதும்அவர்கள்  அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்அவர்களுக்கு  அதில் எவ்வித பிரச்சினையும்  இருப்பதில்லை. அவர்கள்  மூன்று அல்லது நான்கு  மொழிகளை அவர்களுக்கென சொந்தமாக கொண்டுள்ளனர்அதில் இதுவும் ஒரு   மொழியாகி விடுகிறதுஅவர்கள் இதை மிகவும் எளிதாக  ஏற்றுக்கொள்கின்றனர்  என்பதோடுபெரிய  பிரச்சினைகள், அடையாளவாதம்புராணவியல்  ஆகியவற்றிற்கும்  விடையிறுப்பு காட்டுகின்றனர்அத்தகை சமூகங்களுக்குள்  நாங்கள் வேலை செய்கையில், நாங்கள் அந்த நாடகங்களை பல்வேறு  பழங்குடியின  மொழிகளுக்குமொழிபெயர்க்கிறோம்அதற்கு கைமாறாக அவர்கள்  அவர்களின்   மொழியை எங்களுக்கு கற்று தருகின்றனர்ஆகவே கற்பிப்பதில்நாடக  பயிற்சியில், மற்றும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அருங்காட்சியக சூழலில்  வைக்கவிரும்பும்  பாரம்பரியவாதிகள் மற்றும் பழமைவாதிகளிடமிருந்து ஷேக்ஸ்பியரை மீட்டெடுப்பதில்  என ஒட்டுமொத்தமாக நிறைய செல்பாடுகள் நடந்து வருகின்றன.  

டேவிட் வால்ஷ்இப்போது  கேட்பதொரு சக்திவாய்ந்த  கேள்வியாக இருக்கும். உங்களைப் பொறுத்தமட்டில்ஒரு ஷேக்ஸ்பியரோ அல்லது வேறொரு பிரதான  கலைஞரோ  ஒரு பார்வையாளர் மீது  எந்தமாதிரியான  அதிகபட்ச தாக்கத்தைக் கொண்டிருக்கிறார்?

ஜோன் பெல்: சுயதிருப்தியை அல்லது சொந்த-பெருமையை பேச  நான் விரும்பவில்லைஆனால் நாங்கள் மக்களிடையே  ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளோம்இந்த கம்பெனி மூலமாகநாங்கள் சுமார் இரண்டு மில்லியனுக்கும்  மேலான  மக்களுக்கு முன்னால் நாடகங்கள் நடத்தியுள்ளோம்இளைஞர்கள்  மற்றும்  முதியவர்களிடம் இருந்து கிடைக்கும் விடையிறுப்பு ஊக்கமூட்டுவதாக உள்ளதுஷேக்ஸ்பியர் இந்தளவிற்கு பொழுதுபோக்கிற்கு ஏற்றஇந்தளவிற்கு  மகிழ்விக்க  கூடிய  ஒருவர் என்பதைக்கூட  அவர்கள்  அறிந்திருக்கவே  இல்லைஇதை நாங்கள் அறிந்து கொள்வோமென்று நாங்களே நினைத்து பார்த்ததில்லையார்  இந்த மொழிபெயர்ப்பை செய்ததெனமக்கள் கேட்பார்கள்யாரும் செய்யவில்லை, அது தான்  ஷேக்ஸ்பியர்ஆகவே பார்வையாளர்களுக்கு சென்றுசேரும் விதத்தில்  மற்றும்  தெளிவான ஒரு வழியில் அவற்றை  நடித்துகாட்டுவதன் மூலமாகநாங்கள்  ஏதோவொன்றை  சாதித்துள்ளோம் என்று நான்கருதுகிறேன்அதுதான் என்னுடைய  இலட்சியம்அதை செய்வதற்காகவே நான் இருக்கிறேன்ஆகவே அவ்விதத்தில்  நாங்கள் ஒரு வெற்றிச்சாதனையைக் கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறேன்

டேவிட் வால்ஷ்ஒரு  நடிகராகஇயக்குனராக  அல்லது  பார்வையாளராக உங்களுக்கென பிடித்த நாடகங்கள் அல்லது பகுதிகள் உண்டா?

ஜோன் பெல்பெரும்பாலும் இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படுவதுண்டு. எந்த  குழந்தை உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று கேட்பது போன்ற இதுவொரு பழைய  கேள்விஒருவர் இயக்கும் அல்லது நடிக்கும் ஒரு நாடகத்தை அவர் நேசிக்க வேண்டும்ஏனென்றால் அது குறித்து சிந்திப்பது, நடிப்பதுஒத்திகை பார்ப்பதுஅதை  வளர்த்தெடுப்பது என்று ஒவ்வொன்றிலும் சுமார் பன்னிரெண்டு மாதங்களாவது  நீங்கள்  அதில் செலவிடவேண்டியதிருக்கும்ஒவ்வொரு  நாடகத்திற்கும்  தம்முடைய  வாழ்க்கையில் ஓர் ஆண்டாவது ஒதுக்கும் ஒருவர்பின்னர் அதனோடு  காதலில் விழுந்து விடுகிறார்.

நான் மிகவும் வியந்த மற்றும் என்னை மிகவும் மலைப்பூட்டியதென்று King Lear  கருதுகிறேன்அதை நான் நிறையமுறை செய்துள்ளேன்இருந்தும், உண்மையில்  நான் ஒருபோதும் அந்த மலையில் வெகுதூரம் ஏறிவிடவில்லைநேர்த்தியிலும்நாடக வகையிலும்அது கொண்டிருக்கும் வெளிப்பாட்டிலும்அனைத்து  நாடகங்களில்  இருந்து எனக்கு மிகவும் பிடித்தது Henry IV, முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் என்று நான் நினைக்கிறேன்.  
   
டேவிட் வால்ஷ்நீங்கள் Henry IV  என்று குறிப்பிடுகிறீர்கள்முன்னொரு நாள் நான்  Anonymous  மற்றும் ஆக்ஸ்போர்டு கோமானைத்  தொடர்புபடுத்தி  சிந்தித்து கொண்டிருந்தேன்அட்டை பூச்சிகள் மற்றும் புல்லரிசியின் விலை ஆகியவற்றைக்  குறித்து பேசி கொண்டேவிடுதியில் தங்களின் குதிரைகளின் மீது  சுமையேற்ற  தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் சுமைதூக்கிகளின் காட்சி [Part I, Act II, Scene I]…  அந்த சில காட்சிகள் ஆக்ஸ்போர்டு கோமானால் எழுதப்பட்டிருக்கும்  என்ற கருத்து  மிகவும் பகுத்தறிவிற்கு ஒவ்வாததாக உள்ளதே.  
   
ஜோன் பெல்நிச்சயமாக அர்த்தமற்றதேநீங்கள் குறிப்பிடும் அந்த காட்சி,வெர்படெம் தியேட்டரின் (verbatim theatre)  ஒரு பகுதியென்று  நான் நினைக்கிறேன்அந்த இரண்டு நபர்களும் ஜன்னலுக்கு வெளியே புல்லரிசியின் விலை குறித்து  பேசிக்  கொண்டிருப்பார்கள்குதிரைகள் குலுங்கிகொண்டிருக்கும்  அல்லது வேறு ஏதோ  நடந்து  கொண்டிருக்கும்அதைஷேக்ஸ்பியர் மெத்தையில்  படுத்துக்கொண்டே  கேட்டு  கொண்டிருப்பார் என்றுநான் நினைக்கிறேன்அது மிகவும்  அழகுணர்ச்சியோடு  இருக்கும்அடுத்து, ஆக்ஸ்போர்டு கோமான்  Bottom மற்றும்  Quince மற்றும் Bardolph மற்றும் Pistol மற்றும் Mistress Quicklyபோன்றவர்களைஅறிந்திருப்பார் என்று எனக்குபடவில்லைஇது அவருடையவரம்பிற்குவெளியில்இருக்கிறதுஅதுமிகவும் அர்த்தமற்றிருக்கிறது என்பதில் நான் உடன்படுகிறேன்.   

டேவிட் வால்ஷ்எங்களுடைய பார்வையில்இது வெறுமனே நாடகங்களை யார்  எழுதினார் என்பதன் மீதான ஒரு தாக்குதல் அல்லநாடகங்கள் மீதே நடத்தப்பட்ட  ஒரு தாக்குதல்அந்த நாடகங்களில் இருக்கும் பிரமாண்டம் மற்றும் பரந்த நோக்கம்  குறித்து  சிலருக்கு ஏதோ சிரமமாக உள்ளதென்று  நான் கருதுகிறேன்அவை மிகவும்  பிரமிப்பூட்டுபவைமேலும் பெண்கள் பெண்களைக் குறித்து மட்டும்  தான் எழுத  வேண்டும்யூதர்கள் யூதர்களைக்குறித்தும்ஆஸ்திரேலியர்கள் ஆஸ்திரேலியர்களைக் குறித்தும் மட்டும் தான்எழுத வேண்டும் என்பதை நிச்சயமாக நாங்கள் மறுக்கிறோம்  இந்த கலைஞரின் உலகளாவிய பிரபலத்திற்கு ஏதோவொன்று  காரணமாக உள்ளது. அது  மிகவும் சக்திவாய்ந்ததாக நான் கருதுகிறேன்

ஜோன் பெல்நான் இதில் முற்றிலும் உடன்படுகிறேன்.

டேவிட் வால்ஷ்:எழுத்தாசிரியர் குறித்த சர்ச்சைகுறித்து உங்களுக்கு ஏதேனும்  கருத்து உள்ளதா அல்லது  அதை வெறுமனே நீங்கள் புறக்கணிக்கிறீர்களா?

ஜோன் பெல்அதை நான் அலட்சியப்படுத்தவே விரும்புகிறேன்அது நீண்ட காலமாகவே  இருந்து வருகிறதுபல்கலைக்கழகத்தில்  நான் அதுகுறித்து  கேள்விபட்டேன்அது கிறிஸ்டோபர் மார்லொவ்அல்லது ஆக்போர்டு, அல்லது  பெம்புரோக்அல்லது எலிசபெத் மகாராணியாக கூட இருக்கட்டும். அது  கிறுக்குத் தனமான  கருத்துகிறுக்குத்தனமான கருத்துக்களாக  உள்ளன. பாருங்கள்மக்களுக்கு பார்லர் (parlor) விளையாட்டுகள் பிடிக்கும்அவர்கள் இரகசிய சதி  தத்துவங்களை விரும்புவார்கள்ஆனால் ஜோனாதன் பேட்,ஜேம்ஸ் ஷாபிரோஸ்டீபன் க்ரீன்பாட்பில் பிரெசன் போன்ற சிறந்த மேதைகளிடமிருந்து  தற்போது நல்ல  எழுத்துக்களின் தொகுப்பு வெளிவருகின்றன என்று நான் நினைக்கிறேன்அவர்கள்  அனைவரும் இந்தஇரகசிய சதி கோட்பாடுகளுக்கு நல்ல பதில்களை வைத்துள்ளனர்அதுஅந்தளவிற்கு முட்டாள்தனமாக உள்ளதுமக்களைப்  பொறுத்த வரையில் ஒரு குறிப்பிட்ட  அளவிற்கு  இரகசியம்  தேவைப்படுவதாக  உள்ளது என்று  நான் கருதுகிறேன்மேலும் ஷேக்ஸ்பியர்  விஷயம் மிகவும்  குழப்பமானது என்பதால்  அங்கே ஒரு குழப்பம் நிலவுகிறது.  

உண்மையில்அந்த காலக்கட்டத்தின் பெரும்பாலான  நாடகாசிரியர்களைவிட அவருடைய வாழ்க்கை குறித்து நிறைய நல்ல விஷயங்களை நான் அறிவேன்சான்றாகஜோன் வெப்ஸ்டெர் குறித்து நமக்கு  ஒன்றுமேதெரியாதுபிரபலத் தன்மையில் அவரும் ஷேக்ஸ்பியர் அளவிற்கு இருந்தார். நமக்கு ஷேக்ஸ்பியர் குறித்து இந்தளவிற்கு தெரிந்திருப்பதே குறிப்பிடத்தக்கதாகும்ஆனால் தனிமனிதவியல்பு ரீதியில் அவர் குழப்பமாக இருப்பதாலும்அவருடைய குணாம்சத்தை  சுட்டிக் காட்டுவது  மிகவும் கடினமாக இருப்பதாலும்மக்கள்  அவர்களின்  சொந்த  ஷேக்ஸ்பியரை உருவாக்க விரும்புகிறார்கள்சிலர் அந்த நாடகங்களின்  ஆசிரியராக  அவரைபார்க்க விரும்புகின்றனர்ஓரினசேர்க்கையாளர்கள்அவர் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருந்திருக்கக்கூடும் என்று கூறுவார்கள்; கத்தோலிக்கர்கள்அவர்  ஒரு கத்தோலிக்கர் என்று கூறுகின்றனர்; நாத்திகர்கள் வெளிப்படையாகவே  அவர்  ஒரு  நாத்திகர் என்றுவலியுறுத்துகின்றனர்நமக்கு என்ன பொருத்தமாக  இருக்கிறதோ  அந்தவொரு ஷேக்ஸ்பியரை உருவாக்க நாம்  அனைவரும்  விரும்புகிறோம்அதனால்தான் அவரோடு இணைப்பதே  மிகவும்  கற்பனையாக இருக்கும் ஒருவரைஅவரோடு இணைப்பதைவிடசில ஆங்கில மேதாவிகளின்  காதல் நயமான கருத்தைக் கொண்டுள்ளனர்.

டேவிட் வால்ஷ்இறுதியாகநீங்கள்  ஏன்  ஷேக்ஸ்பியரில்  நடிப்பதையும், இயக்குவதையும்  தொடர்கிறீர்கள்இது எந்தமாதிரியான  தொடர்ச்சியான முயற்சி  என்று  ஏதேனும் கூற விரும்புகிறீர்களா


ஜோன் பெல்: சில நேரங்களில்அது என்னை மிகவும் இளமையாக வைத்திருப்பதாக  உணர்கிறேன்ஏனென்றால் நடிப்புஇயக்கம்ஆராய்ச்சி ஆகியவற்றோடு  அதுவொரு  தொடர்ச்சியான தேடலாக உள்ளதுஒருவிதமான விடாப்பிடியான  விஞ்ஞானிகளைப்  போலவாழ்வின் ஒரு விஷயத்தால் ஆட்கொள்ளப்பட்ட  ஒருவரைப் போலகண்டு பிடித்துக்  கொண்டேஆராய்ந்துகொண்டேஅதனால் சந்தோஷப்பட்டு கொண்டே  செல்வதாக நான் நினைக்கிறேன்தங்களின் தொழில்வாழ்க்கையில் சலித்துப்போய், 'இதை நான் வெறுமனே பணத்திற்காக செய்கிறேன்,' 'நான் வாழ்வதற்கு  சம்பாதிப்பதற்காக இந்த டிவி சோப்  படத்தில் அல்லது  இந்த  இரண்டாந்தர படத்தில் இருக்கிறேன்என்று  கூறும் நடிகர்கள்  மற்றும்  இயக்குனர்களுக்காக  நான் வருத்தப்படுகிறேன்நான் ஒருபோதும் அவ்வாறு உணர்ந்ததில்லைநான் ஒருபோதும்  சோர்ந்து போய்தளர்ச்சி அடைந்ததில்லைஇது எப்போதும் புத்துயிர் அளிப்பதாக  உள்ளதுஎன்னுடைய 15 வயதில் முதன்முதலாக ஷேக்ஸ்பியரைக்  கண்டறிந்தபோது  எவ்வாறு உணர்ந்தேனோஇப்போதும் நான் அதைபோன்றே உணர்கிறேன்.

நன்றி : World Socialist Website

No comments:

Post a Comment