Friday, 27 April 2018

கென்லோச்சின் ’ரூட் ஐரிஷ்’ (ROUTE IRISH) திரைப்பட மதிப்புரை

டேவிட் வால்ஷ்


                              ’ரூட் ஐரிஷ்’ (ROUTE IRISH)


பிரிட்டிஷ் இயக்குனர் கென் லோச் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட இயக்குனர்கள் வரிசையில் ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார். Cathy Come Home (1966)—"100 மிகச்சிறந்த பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்" எனும் ஒரு பட்டியலில் சமீபத்தில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்ததுமற்றும் The Big Flame (1969) போன்ற தொலைக்காட்சி படைப்புகளையும்Poor Cow (1967) மற்றும் குறிப்பாக Kes (1969) போன்ற திரைப்படங்களையும் இயக்கியதன் மூலமாக 1960களின் பிற்பகுதியில் அவர் முதன்முதலாக பிரபலமானார்.

தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளின் மீதிருந்த ஆர்வத்தையும், அனுதாபத்தையும் மற்றும் நம்முடைய காலத்தில் சோசலிசத்தின் மீதான பெரும் நம்பிக்கையையும் லோச்சிடம் அடையாளம் காண முடியும். அவருடைய படங்கள் கடந்த கால மற்றும் நிகழ்கால ஸ்ராலினிசத்தையும், 1926இன் பிரிட்டிஷ் பொது வேலைநிறுத்தத்தையும், அயர்லாந்தில் பிரிட்டிஷ் அடக்குமுறை மற்றும் எழுச்சியையும், மற்றும் மிகப் பெரும்பான்மையாக, உழைக்கும் மக்களின் உடல்ரீதியான மற்றும் உளவியல்ரீதியான நிலைகளையும் எடுத்தாண்டு இருக்கின்றன.

1960களின் பிற்பகுதியிலும், 1970களின் ஆரம்ப காலக்கட்டத்திலும் ஏனைய பல இயக்குனர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், படத்தொகுப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்துபிரிட்டனில் இருந்த ட்ரொட்ஸ்கிச இயக்கத்துடனான இந்த இயக்குனரின் தொடர்பு சில குறிப்பிட்ட பிரச்சினைகள் மீதான அதாவது, தொழிலாள வர்க்கமே சமூக மாற்றத்திற்குரிய வாகனமாக இருக்கிறது; சோசலிசம் என்பது ஸ்ராலினிசத்தின் முற்றிலும் எதிர்தரப்பில் இருக்கும் ஒன்று; காட்டுமிராண்டித்தனத்திற்குள் நுழைவதிலிருந்து சமுதாயத்தைத் தடுக்க சோசலிச மாற்றம் தேவையாக உள்ளது ஆகியவைக் குறித்த புரிதலை அவருக்கு அளித்தன,

கடந்து சென்ற ஆண்டுகளும், நிகழ்வுகளும் அவருடைய கண்ணோட்டங்களை ஒரு பொதுவான இடதுவாதத்திற்குள் (இந்த போக்கு தொழிற்சங்கங்களுடன் தொடர்ச்சியான மற்றும் நிபந்தனையற்ற இணைப்பையும் உட்கொண்டிருந்தன) சுற்றி வளைத்திருந்தன என்ற போதினும், ஒடுக்கப்பட்டவர்கள் மீது லோச் ஓர் ஆழமான உணர்வைத் தக்க வைத்திருக்கிறார் என்பதுடன், அவர்களின் சூழ்நிலைகளையும், எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிநிதித்துவப்படுத்த அவர் விரும்பினார். அவருடைய பரிணாமத்தை ஒருவர் வலுக்கட்டாயமாக பல்வேறு முந்தைய "தீவிர இடது கொள்கையுடைய" இயக்குனர்களால் பிரதிபலிக்கப்பட்ட காட்சியமைப்புகளில் இருந்து வேறுபடுத்திப்பார்க்க வேண்டியதாகி விடுகிறது. André Breton வார்த்தைகளில் கூறுவதானால், “இத்தகையவர்கள் அவர்களின் கருத்துக்களை தீவிரமாக மாற்றிக் கொள்கிறார்கள் என்பதுடன் அவர்களின் சுயசான்றுகளை காமவடிவத்திலும், பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும் கைவிட்டார்கள். அவர்கள் பெரும் கேலிக்கூத்துடன் எதற்கு சேவை செய்ய தொடங்கினார்களோ அதற்கு முற்றிலும் முரணான ஒரு காரணத்தின் சாதனையாளர்களாக மாறினார்கள்.

பிரிட்டிஷ் நிர்வாகமைப்பு லோச்சை அதன் தரப்பில் ஓர் எரிச்சலூட்டும் நபராகவே ஏற்கிறது. 2006இல், The Wind That Shakes the Barley திரைப்படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து, ஐரிஷ் சுதந்திர யுத்தம் (1919-1921) மற்றும் உள்நாட்டு யுத்தம் (1922-1923) ஆகியவற்றிற்காக, லோச்சும் திரைக்கதையாளர் போல் லாவர்டியும் வன்முறை தாக்குதலுக்கு உள்ளானார்கள். படுகொலைகள் மற்றும் சித்திரவதை காட்சிகள் உட்பட, ஐரிஷ் மக்களுக்கு எதிரான பிரிட்டிஷ் ஒடுக்குமுறையின் காட்டுமிராண்டித்தனத்தை இந்த திரைப்படம் காட்சி விளக்கங்களில் வெளிப்படுத்துகிறது.

Route Irish


2006இல் ஊடகங்களின் கடுமையான பிரதிபலிப்பானது, இரத்தக்கறைப்படிந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாற்றை மூடிமறைப்பதற்கும், மற்றும் ஈராக்கில் அதன் தற்போதைய நவ-காலனித்துவ நடவடிக்கைகளை காப்பாற்றுவதற்குமான ஒரு முயற்சியாக இருந்தது. இவற்றைத் தான் அந்த திரைப்படம் தெளிவாக வெளிப்படையான ஆதாரமாக காட்டியது.

பிரிட்டிஷ் கூட்டணி அரசாங்கத்தின் தற்போதைய கல்வித்துறை செயலாளர் மைக்கேல் கோவ், கேனஸ் திரைப்பட விழாவில் The Wind That Shakes the Barley முதல் பரிசை பெற்ற போது,“தங்களின் சொந்த நாட்டின் நன்மதிப்பைக் கெடுப்பவர்கள்" என்று லோச்சையும், ஏனையவர்களையும் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி Times இதழில் வன்மையான துணுக்கை எழுதினார். லோச்சின் 堵lamourise the IRA” போன்ற திரைப்படங்களுக்கு ஜனநாயக பாதை எப்போதுமே திறந்திருக்கும் என்ற போதினும், அவற்றின் எல்லைகளை எட்ட அவை கொடூரமான வன்முறையைப் பயன்படுத்தி இருந்தனஎன்று கூறியதன் மூலம், கோவ் வரலாற்றை திரித்து காட்டினார்.

அதே நேரத்தில், Times இதழில் டிம் லுக்ஹர்ஸ்ட் அந்த "பொறுப்பார்ந்த மார்க்சிய இயக்குனரை" பலமாக மறுத்துரைப்பதில் இன்னும் ஒருபடி மேலாக சென்றார். அவர் குறிப்பிடுகையில்,“நாஜிகளுக்கு ஆதரவான திரைப்பட இயக்குனர் லெனி ரெஹ்பின்ஸ்டாஹ்ல் ஓரளவிற்குப் புரிதலைக் கொண்டிருந்தார். ஏனென்றால் அந்த பெண்மணி அவரின் படைப்பு கொடூரமான விளைவிற்கு பங்களிப்பளித்தது என்பதை முழுவதுமாக புரிந்து கொள்ளவில்லை... ஆனால் அதுபோன்ற சலுகை வழங்குவதற்கான தகுதியும் கென் லோச்சிற்கு இல்லை என்றார்.

அந்த நேரத்தில் உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, மற்றொரு முர்டோக் செய்தியிதழான Sun, அந்த திரைப்படத்தை (The Wind That Shakes the Barley)“IRAக்கு ஆதரவான" ஒரு திரைப்படமாக குறிப்பிட்டது. Daily Mail இதழ் அத்திரைப்படத்தை "ஒரு கேலிக்குரிய" படமாக குறிப்பிட்டது. சைமன் ஹெஃப்பர், Telegraph இதழிலில் எழுதுகையில், அந்த திரைப்படத்தை "அபாயகரமானது" என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும் அப்படத்தை தாம் பார்க்கவில்லை என்று கூறிய அவர், ஓர் இரத்தம் உறிஞ்சும் பூச்சியைப் போன்ற ஹிட்லர் எப்படி இருந்தார் என்பதை அறிந்து கொள்ள எனக்கு Mein Kampf ஐ படித்து கொள்ள வேண்டி இருப்பதை விட வேறெதும் எனக்கு தேவையில்லை" என்று அறிவித்தார்.

மற்றொருபுறம், சமகாலத்திய சினிமாவில் மிகவும் வியந்து பாராட்டப்பட்ட பிரபல திரைப்பட இயக்குனர்களை நான் கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கேட்டு வந்திருக்கிறேன். (பிரான்ஸ், ஈரான், க்ரீஸ், ஸ்பெயின் மற்றும் ஏனைய பிற இடங்களிலும் உள்ள) ஆழமான சிந்தனையாளர்களிடையே பெரும்பாலும் அதிகளவில் சொல்லப்பட்ட பெயர் அவருடையது என்பதை டொரொண்டோவில் கென் லோச்சுடனான என்னுடைய கலந்துரையாடலின் போது எடுத்துரைத்தேன்.

அவருடைய இயக்கத்தைக் குறித்து எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதோ அல்லது ஆச்சரியப்படுவதற்கோ அவசியமில்லை என்று சொல்லப்படுகிறது. சில குறிப்பிட்ட திரைப்படங்கள் குறித்து (எடுத்துக்காட்டாக, Bread and Roses, The Navigators) நான் மிகவும் ஆழமாக விமர்சனம் செய்திருக்கிறேன். மிகப் பொதுவாக, அவர் எதைச் சார்ந்தவரோ அந்த பிரிட்டிஷ் நவ-யதார்த்தவாத போக்கைக் குறித்து விமர்சனம் செய்திருக்கிறேன். அவற்றின் தேசிய குறுகிய மனப்போக்கு மற்றும் அவற்றின் கற்பனைவளத்தில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் வேதனை கலந்த உண்மை கதையை அமைப்பது ஆகியவற்றைக் குறித்து நான் விமர்சித்திருக்கிறேன்.

அக்டோபர் 2005இல் நான் எழுதியதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் :

திகில் படங்களில் உள்ள அணுகுமுறைகளில் ஒன்று நவ-யதார்த்தவாத பிரிட்டிஷ் சிந்தனைக்கூடத்தோடு அல்லது இயற்கைவாதம், அல்லது 'ஆவணப்படக்கதை' ஆகியவற்றோடு தொடர்புபட்டு தொடர்கிறது. பல தசாப்தங்களுக்கு பின்னரும் கூட, கென் லோச்சின் பெயர் இன்றும் முன்னனியில் பிரபலமாக இருக்கிறது. எவ்வாறிருப்பினும், அவரின் கலைத்துவ வரம்புகள் மற்றும் அரசியல் வளைவரைவுகோடுகள் குறித்து ஒருவர் கவலைக் கொள்ளலாம்; சில பிரச்சினைகளும் அதில் இருக்கக்கூடும். ஆனால் அவரின் படைப்புப்பணி கணிசமாக ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்தாலும் கூட, அது ஆழமான ஒன்றாக இருக்கிறது.

தனக்கு பொருத்தமான மற்றும் அவருடைய தன்னியல்பை அனுமதிக்கும் இடங்களில், வலுக்கட்டாயமான பாத்திரப்படைப்புகளுடன் ஒரு நாகரீகமான கதையையும், நடிகர்களையும் வெளிக்காட்டிய லூச், நினைவுகூரத்தக்க ஓர் ஒட்டுமொத்த கதையையும் இல்லையென்றாலும், பாதிப்பை ஏற்படுத்தும் சிறந்த காட்சிகளைக் காட்டுவதில் திறமையுடன் இருந்தார். இவ்வாறு, My Name Is Joe மற்றும் Ae Fond Kiss இன் பகுதிகள் குறிப்பிடத்தக்கவையாகவும், நம்பத்தகுந்தவைகளாகவும் இருந்தன. மற்றொருபுறம், அதன் பலவீனங்களில், பழக்கத்தில் இல்லாத மற்றும் நம்பத்தகாத சூழ்நிலைகளுடன், அவருடைய படைப்பு அரசியல்ரீதியாக சுருக்க விளக்கத்தை அல்லது உணர்வுரீதியாக உளைச்சலுக்கு உள்ளானதை (Bread and Roses, The Navigators, Sweet Sixteen) நோக்கி சாய்ந்திருந்தது.

உலகம் முழுவதும் பெரும்பாலும் தன்னல மறுப்பு கொள்கைகள் நிலவிய காலக்கட்டத்தில், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைப் பிரச்சினைகளை காட்டுவதிலும், காட்சியமைப்பதிலும் லோச்சின் தொடர்ச்சியான பொறுப்பானது ---முந்தைய தசாப்தங்களில் புரட்சிகர சோசலிச இயக்கத்துடனான அவரின் அனுபவங்களால் உந்தப்பட்டிருந்த அவரின் பொறுப்புணர்வு--- திரைப்பட கலைஞர்களின் ஒரு கணிசமான அடுக்கிற்கு கவர்ந்திழுக்கும் ஒரு துருவமாக இருக்கிறது. சில நேரங்களில் ஒன்றுக்கும் உதவாத திரைப்பட இயக்குனர்களின் பேட்டிகளில், அவர் "விற்கப்பட்டுவிடவில்லை" என்பதாலும், இதர பிறவற்றாலும் லூச்சின் மீது வியப்பை ஒரு காட்டுகிறார். சமூகரீதியில் பிணைந்திருக்கும் பிரெஞ்சு திரைப்பட இயக்குனர்கள், குறிப்பாக... சுய-மதிப்பின் மற்றும் பாசாங்குத்தனத்தின் கடலில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாக தங்களைத்தாங்களே காண்கிறார்கள். ஆனால் லோச் ஏதோவகையில் 'வேறொருவராக' நிற்கிறார். இதை வெறுமே குருட்டாம் போக்காக அல்லது தவறான புரிதலில் சொல்லப்படுவதாக கைவிட்டுவிடக்கூடாது.

திரைப்படங்களில் சமுக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேறு அணுகுமுறைகளும் சாத்தியமாகும் என்பதற்கு லோச்சை நீங்கள் குறிப்பிட்டுக் காட்டினால்,“நல்லது, இது தான் நான் செயல்படும் முறை. இப்படி மட்டும் தான் என்னால் செய்ய முடியும்என்று தான் அவர்கூறுவார் என்று நான் நினைக்கிறேன். போலித்தனமோ அல்லது கலைத்துவத்தில் நேர்மையின்மையோ அவரிடம் இல்லை. கடந்த 30 ஆண்டுகால சினிமாவின் மொக்கையான சினிமாத்தனமான இயற்கைக்காட்சிகளில் இருந்து விலகி இருக்கிறார்.

ஒரு புதிய திரைப்படம்

போல் லாவர்டியின் எழுத்தில் வெளியான Route Irish எனும் புதிய படத்தின் வெளியீட்டிற்காக கென் லோச் இந்த ஆண்டு டொரொண்டோ வந்திருந்தார். பாக்தாத்தின் சர்வதேச மண்டலத்தை அந்நகரத்தின் விமானத்தளத்தோடு இணைக்கும் நெடுஞ்சாலை முழுவதிற்கும் அமெரிக்க இராணுவத்தின் அடையாளப்பெயரைக் குறிப்பது தான் இந்த படத்தின் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது (“the most dangerous road in the world”).

2007இல் நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கும் இப்படம், இஃபெர்கஸை (மார்க் உமேக்) மையமாக கொண்டு நகர்கிறது. இவர் பிரிட்டிஷ் இராணுவ மேற்தட்டு SASஇன் ஒரு முன்னாள் உறுப்பினராக இருந்த இவர், பின்னர் ஈராக்கில் ஒரு தனியார் ஒப்பந்த-தொழில்வழங்குனராக இருந்தார். தற்போது மீண்டும் லிவர் பூலிற்குத் திரும்பி இருக்கும் இவருக்கு, சிறுவயதிலிருந்தே அவருடைய நண்பராக இருந்த பிரான்க் (ஜோன் பிஷாப்) “Route Irish”இல் கொல்லப்பட்டார் என்பது தெரியவருகிறது. பிரான்க்கை இவர் தான் பாக்தாத்தில் உள்ள அவருடைய பாதுகாப்புக்குழுவில் சேர இணங்கச் செய்திருந்தார்.

பிரான்கின் மரணத்திற்கு அளிக்கப்படும் உத்தியோகபூர்வ விளக்கத்தை நிராகரிக்கும் இஃபெர்கஸ் இறுதியில் அவருடைய நண்பரின் விதவை ரகேலின் (ஆண்ட்ரியா லோவ்) உதவியுடன் அவருடைய சொந்த புலனாய்வைத் தொடங்குகிறார். அவர் ஈராக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்த குற்றங்களையும், அந்த குற்றங்களை மூடிமறைப்பதற்கான சதிவேலைகளையும் கண்டறிகிறார். அட்டூழியங்களுக்கு காரணமான முக்கிய நபர் பிரிட்டனுக்குத் திரும்பும்போது, இஃபெர்கஸ் கொடூரமான செயலில் இறங்குகிறார். ஈராக்கிய அனுபவத்தால் பாதிக்கப்படும், பிரான்கின் மரணத்தால் குற்ற உணர்ச்சிக்கும் ஆளாகியிருந்த நிலையில், அவருடைய சொந்த கரங்களிலேயே இருக்கும் இரத்தம் இஃபெர்கஸின் எண்ணத்தைக் மிகவும் குறுகியதாக ஆக்கிவிடுகிறது.

இந்த திரைப்படம் குறித்த அவரின் குறிப்புகளில், தனியார்மயமாக்கப்படும் யுத்தம் குறித்து ஏதோவொரு விஷயத்தை எழுத்தாளர் போல் லாவர்டி விளக்குகிறார். ஈராக்கிய ஆக்கிரமிப்பில் உயர்ந்தளவில் சுமார் 160,000 வெளிநாட்டு ஒப்பந்ததாரர்கள் இருந்தார் என்று ஒரு விமர்சகர் மதிப்பிட்டதாக அவர் எழுதுகிறார். அவர்களில் பலர்ஒருவேளை 50,000 நபர்கள் இருக்கலாம்கன ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு சிப்பாய்களாக இருந்தனர்....

அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட கூட்டணி அமைப்பு ஆணையத்தின் தலைவர் போல் பிரெமெருக்கு நன்றி, அந்த ஒப்பந்ததாரர்களில் ஒவ்வொருவரும் Order 17இன் வடிவத்தில் ஈராக்கிய சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தனர். இந்த ஈராக்கிய சட்டம் புதிய ஈராக்கிய நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டதாகும்.
லாவர்டி தொடர்கிறார்: தனியார் ஒப்பந்ததாரர்களால் எத்தனை ஈராக்கிய குடிமக்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காயப்படுத்தப்பட்டார்கள் என்பதைக் குறித்து யாருக்கும் அக்கறை இல்லை. ஆனால் அங்கே பரந்தளவில் முறைகேடு இருந்தது என்பதை எடுத்துக்காட்டும் பெரும் ஆதாரங்கள் இருக்கின்றன. பாக்தாத்தின் மையப்பகுதியில் 17 குடிமக்கள் உயிரிழந்த கருந்தண்ணீரின் படுகொலை மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாகும். ஆனால் இதுபோல் எத்தனையோ வெளியில் கொண்டு வரப்படாமலேயே இருந்தன.....

“Order 17 ஈராக்கில் பின்னர் நீக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதன் உத்வேகம் இன்றும் அரியணையில் தங்கியிருக்கின்றது: மோசமான விதிவிலக்கு, பொய்மைகள், சர்வதேச சட்டமீறல்கள், ஜெனீவா தீர்மானம் குழிதோண்டி புதைக்கப்பட்டது, இரகசிய சிறைகள், சித்திரவதைகள், படுகொலைகள்.... நூறாயிரக்கணக்கானவர்களின் உயிரிழப்புகள்.

இரக்கமற்றதன்மையையும், ஆழமான கொடூரத்தையும், கோபத்தையும் Route Irish திரைப்படம் காட்டியது. அது சட்டரீதியாக அந்த விஷயத்தைக் கையாள்கிறது. ஈராக்கில் நடந்த பயங்கரமான நிகழ்வுகளில் இருக்கும் உண்மைகளில் தான் அதன் கதை சுற்றி வருகிறது. ஈராக்கிய யுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பை அணுகுவதற்கு ஓர் அசாதாரணமான மற்றும் கலைத்துவத்துடன் கூடிய சுவாரசியமான கருவியை லாவர்டியும், லோச்சும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதாவது, ஈராக்கின் சொந்த வரலாற்றில் தண்டனைக்கு வரவேண்டிய ஒரு பிரிவினராக இருக்கும் ஒரு கொடூரமான ஒப்பந்தகொலைகாரர்களின் மீது கவனத்தை ஒருமுனைப்படுத்தி இருந்தார்கள்.

அவருடைய சமீபத்திய பல கதைகளில், கவனத்தைக் கவரும் பிரபலங்களின்மீது அவருடைய கதையை மையப்படுத்தி இருக்கிறார்—It’s a Free World படத்தில் நம்பிக்கையிழந்த புலம்பெயர்ந்தவர்களைச் சுரண்டும் ஒரு நிறுவனத்தை நடத்தும் ஒரு தொழிலாள வர்க்க பெண்மணியைக் காட்டியிருந்தார்; Even the Rain படத்தில் யாரை பலிக்கொடுத்தாவது ஒரு திரைப்படத்தை முடிக்க நினைக்கும் ஒரு தீய திரைப்படத் தயாரிப்பாளரைக் காட்டியிருந்தார். மிகச் சரியாக சொல்வதானால், இதுபோன்ற சிக்கலான தவிர்க்கமுடியாத நிகழ்வுகளினூடாக பணியாற்றியும், வேலைகளில் சமூக புறநிலை முரண்பாடுகளுக்கு நெருக்கமான அவரையும், அவருடைய பார்வையாளர்களையும் ஆரம்பத்தில் ஈர்ப்பற்ற கதாபாத்திரங்களினூடாகவும் பணியாற்றி அந்த திரைக்கதை எழுத்தாளர் விளக்குகிறார் என்றே நான் நினைக்கிறேன்.

எவ்வாறிருப்பினும், ஈராக்கில் நல்ல ஊதியத்தைப் பெற்றுவந்த ஒரு முன்னாள் SAS மனிதரான இஃபெர்கஸ், பறவையின் மற்றொரு இறகாக இருக்கிறார். பிறர்மீது தீவிரமான பாதிப்பைச் சுமத்தி இருக்கும் ஒருவர், இங்கே தீவிரமாக சேதமாக்கப்பட்டுள்ளார். இதுபோன்ற ஒரு மனிதர் எட்ட முடியாத இடத்திலா இருக்கிறார்? இல்லை, ஆனால் அவரும் ஏனையவர்களும் என்ன செய்தார்களோ அதை நேர்மையாக முகங்கொடுக்க இதுபோன்ற ஒரு பிரமுகருக்காக நடக்கக்கூடிய ஒருவகையான உள்புரட்சியை லாவர்டியும், லோச்சும் கதையாக்கவில்லை.

ஓர் உண்மையாக, யுத்தத்தைக் குறித்தும், அவரைக் குறித்தும் கூட, ஒப்பந்தகொலைகாரர்களின் தொழிலைக் குறித்தும் இஃபெர்கஸ் என்ன நினைக்கிறார் என்பது ஒருபோதும் முற்றிலும் தெளிவாக இல்லை. ஒருவேளை உளவியல்ரீதியான யதார்த்தம் என்ற பெயரில் திரைப்பட இயக்குனர்கள் தங்களின் முக்கிய கதாபாத்திரம் அதன் முன்னாள் தொழில்வழங்குனர்களுடன் அதன் பழைய நிறத்தை விட்டுவிடாமல் ஒரு முரண்பாட்டிற்கு நுழைவதை அனுமதிக்கிறார்கள் போலும். ஒரு நீண்டகால நண்பருக்கு அளிப்பதற்காக ஒப்பந்த-இராணுவ நிர்வாகத்தை ஒரு ஒப்பந்தபாதுகாப்பு அதிகாரிக்கு அளிக்க முடியுமா? ஒருசில காட்சிகளில் தவிர, அவர்களுடைய நட்பைப் போதியளவிற்கு நம்மால் பார்க்க முடியவில்லை. நம்பிக்கையின் மீது இஃபெர்கஸின் மனமாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறோம். ஆனால் அது போதியதாக இல்லை.

ஒரு திரைப்பட அரசியல் அனுதாபியைச் சார்ந்து, அவரை நோக்கிய தம்முடைய மனோபாவங்களை முற்றிலுமாக மாற்றிக் கொள்ள ஒரு பார்வையாளரால் முடியும். ஆனால், இந்த விஷயத்தில், திரைப்பட இயக்குனர்களின் சில குறிப்பிட்ட சொந்த மனோபாவத்தை விட்டுவிட முடியவில்லை. இஃபெர்கஸின் கதாபாத்திரத்தின் வெவ்வேறு பக்கங்களைக் கூர்மையாக வெளிக்காட்டுவதற்கு மாறாக, பார்வையாளர் இந்த அவருடைய உள்ளார்ந்த முரண்பாட்டின் தீவிரத்திலிருந்து கீழிறங்கி நின்றாலும் கூட, திரைப்படம் இஃபெர்கஸ் கதாபாத்திரத்தை மேலோட்டமாகவும், ஓரங்கப்பட்ட நிலையிலும் காட்டுகிறது. படத்தில் இவரைக் குறித்து தான் ஒருவர் பல்வேறு உணர்வுகளைப் பெறுகிறார்.
இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தில், தண்ணீர் கலங்கலான ஏரியில் இருப்பதைப் போல அமைதியாக இருக்கும்இந்த கலங்கலான ஏரியின் காட்சிகள் மட்டுமே இரண்டு நீர்நிலைகளின் ஒன்றையொன்று சமப்படுத்தும் சக்தியை உள்வாங்க ஒருவருக்கு உதவாது. Route Irish படத்தில், முடமாக்கப்பட்டிருப்பதற்கு இடையிலும் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு சமநிலையும் இருக்கிறது என்பது தான் முடிவாக உள்ளது.

அவருக்கு இந்த பிரச்சினையை அறிந்திருந்தார் என்பதாகவே தெரிகிறது. லோச்சுடனான எம்முடைய நேர்காணலில், வெளியாகும் இந்த குறிப்பிட்ட திரைப்படங்கள் முகங்கொடுக்கும் சவால்களைக் குறித்து பலமுறை முறையிட்டுள்ளோம். ஒருமுறை அவர் கூறினார்,“ஒரு சிக்கலான படம் உருவாக்கப்பட இருக்கிறது, ஒரு சிக்கலான படம் வெளியிடப்பட இருக்கிறது என்பது நமக்கு எப்போதுமே தெரியும் என்றே நான் நினைக்கிறேன்.மகிழ்ச்சியின்றி, திரைப்பட இயக்குனர்கள் அதை வெளியிட்டார்கள் என்று நான் நினைக்கவில்லை.
எந்த நிகழ்விலும், லோச்சும் லாவர்டியும் நம்முடைய நவீன யதார்த்தத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்ச அவர்களின் முயற்சியை தொடரவே முயன்றிருக்கிறார்கள். நாமும் அவர்களுடைய திரைப்பட இயக்கத்தை கணிசமான ஆர்வத்துடன் தொடர்வோம். கலாச்சார சூழல் சந்தேகத்திற்கு இடமின்றி சிறப்பாகவே மாறி வருகிறது, ஆனால் அவை அசாதாரணமானவையாகவும், வியக்கத்தக்க குழுமமாகவும் தங்கியிருக்கின்றன.




No comments:

Post a Comment