Tuesday, 17 April 2018

ஒரு ஆழமான திரைப்படம் ஒரு தீர்க்கமான சமூகப் பார்வையை வேண்டி நிற்கின்றது : இயக்குநர் பேட்ரிஸ் சேரோவின் INTIMACY (2001)

டேவிட் வால்ஷ் 


அந்தரங்கம் (Intimacy) திரைப்படம்  ஹனீப் குரைஷி (Hanif Kureishi) இன் கதைகளை அடிப்படையாக் கொண்டது. திரைக்கதை வசனம் சேரோ மற்றும் ஆன் லூயிஸ் த்ரிவிடிக் (Chéreau, Anne-Louise Trividic), இயக்கம் பட்றீஸ் சேரோ (Patrice Chéreau).




அந்தரங்கம் (இன்டிமஸி) வெளிப்படையான அதனது பாலியல் செயற்பாடுகளை கொண்ட காட்சிகளால் பரந்தளவில் புகழ் பெற்றுள்ளது. தெற்கு லண்டனின் ஒரு ஏழ்மையான குடியிருப்பு பகுதியில் அண்மையில் விவாகரத்து செய்துகொண்ட ஒரு மதுபானசாலை பணியாளனான ஜேய் (Mark Rylance) இக்கும், ஒரு குடும்பத் தலைவியும், பகுதிநேர நடிகையுமான கிளேர் (Kerry Fox) இற்கும் இடையில் அவை இடம் பெறுகின்றன. வாரத்திற்கு ஒரு தடவை அநாமதேய முறையிலும் அற்பத்தனமான வகையிலும் ஜேயும், கிளேரும் சந்தித்துக்கொள்கிறார்கள். தெளிவாகக் கூறுமிடத்து, இருவருக்கும் மற்றவரது வாழ்வுபற்றி எதுவேமே தெரியாது இருக்கின்றது. ஜே அவளை மதுபான சாலையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் ஒரு நாடக அரங்கத்தினுள் அழைத்துச் செல்லும் போது ஒரு டாக்சி ஓட்டுனரும், க்லேரின் கணவனான அன்டி (Timothy Spall) அவர்களது இரகசிய உறவை சாவகாசமாக அறிந்துகொள்கிறார். அறிந்துகொள்கிறார். 




பிரதானமாக பிரெஞ்சு நாடக அரங்கில் அவரது படைப்புகளுக்காக அறியப்பட்டவரான, திரைப்பட இயக்குனரும் மற்றும் இணை திரைக்கதை எழுத்தாளருமான பட்ரீஸ் சேரோ''அந்தரங்கம் என திரைப்படம் அழைக்கப்படுவதால், நீ அந்தரங்கமான விடயங்களை காட்டியே ஆக வேண்டும்'' என அறிவுறுத்திக் கொண்டு (அநேகமாக, திரைப்படத்தின் மூன்றிலொருபகுதியை உள்ளடக்கிய) தொடர்ந்து வரும் பாலியல் காட்சிகளை ஆதரிக்கின்றார்).


ஆபாசமற்ற திரைப்படங்களில் பாலுறவுகளை விளக்குகின்ற விடயம் தொடர்பாக இதுவரை காலமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதெனக் கருதப்பட்ட வரையறையை அண்மைய வருடங்களில் வெளிவந்த பல பிரெஞ்சு திரைப்படங்கள் தாண்டியுள்ளன. எப்படியிருந்தபோதும், குருட்டுத்தனமான படைப்பான காத்ரின் ப்ரைலாவின் (Catherine Breillat) (காதலின் இரகசிய உறவு (Romance) ஒரு உண்மையான இளம் பெண் (Une vraie jeune fille), இலாப நோக்க படமான Coralie Trinh Thi மற்றும்Virginie Despentes இன் என்னை முத்தமிடு (Baise-moi), மற்றும் ஏனையவர்களின் படமான (ஆபாச உறவு, (Une Liaison Pornographique) இத்தியாதி இத்தியாதி) இவைகளைவிட சேரோவின் படமானது, ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் வித்தியாசமான வகையறாவை சேர்ந்ததாக இருக்கிறது.அந்தரங்கம் (Intimacy) முதற்பார்வையிலேனும் சற்று தீவிரமான தன்மையுடையதாக உள்ளது.எவ்வாறிருப்பினும், ஒரேமாதிரியான பல கேள்விகள் எழுகின்றன.




முதலாவதாக, எந்தவொரு படைப்பிலும் இப்படியான பாலியல் காட்சியை படம்பிடிப்பதன் மூலம் பெற்றுக்கொள்வது என்ன என்பது கேள்விக்குரியதாக இருக்கிறது. அப்படியான ஏதொவொன்றுதான்அந்தரங்கத்திலும் இருக்கின்றது. உதாரணமாக, அது பாத்திரங்களின் பாலியல் நடவடிக்கைக்கு முன்னரான உள்ளார்ந்த வாழ்வின் நடப்பினை வெளிச்சம்போட்டு காட்டுகிறது: எதிர்பார்ப்பின்மை, தனிமை, மூர்க்கம், இத்தியாதி இத்தியாதி. இத்தகைய ஒரு ஆராய வேண்டிய விடயத்தில், சமீபத்தில் ஒரு படத்தயாரிப்பாளரை மற்றொரு நாளிலோ சகாப்தத்திலோ ஒரு இரவு மேசையை அல்லது காற்றில் பறக்கும் யன்னல் திரைகளை படமாக்கச்செய்தது தணிக்கைக் குழுவின் பிரத்தியேகமான ஜாக்கிரதை உணர்வோ பயமோ அல்ல. 

இத்தகைய மதிநுட்பம் கலையைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியுமான குறிப்பிடத்தக்களவு விளக்கத்தினை பிரதிபலித்துள்ளது. கருதப்படக்கூடிய விதத்தில், இத்தகைய கிளர்ச்சிகளை விரும்பாத திரைப்பட ரசிகர்கள், உடலியலைத் தவிர்த்து சமூகவியலிலும் உளவியலுமே ஆர்வமாக உள்ளனர். அதைத்தவிர, இயற்கைக்கு மாறான சில பாலியல் தன்மை தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது -பிறரை துன்பப்படுத்தி இன்பம் பெறும் பாலியல் நடவடிக்கைகள், பிறர் தன்னை துன்படுத்துவதில் மகிழ்ச்சியடையும் காமவிகாரம் அல்லது எதுவாயினும்-போன்றயாதேனுமொரு அசாதாரணமான தன்மை வெளிப்படுத்தப்படும் வரை, பாலுறவானது (மற்றும் இந்தப்படத்தில் அது ஒப்பீட்டளவில் பொதுவாக இருக்கிறது) பொதுவாக எதையும் அதிகமாக எமக்கு சொல்லவில்லை.

இது உண்மையில் விக்டோரியன் (காலத்து) ஒழுக்க மதிப்பீடுகளுக்கு திரும்புவதற்கான ஒரு விவாதமல்ல ஆனால் பாலியல் வாழ்க்கை ஏனைய போக்குளைப்போலவே, சில மட்டத்தில் கலைத்துவ விகிதாசாரத்துடன் கையாளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. பாலுறவை, தற்போதுதான் கண்டறியப்பட்ட ஒன்று என்பது போன்று வர்ணிப்பவர்கள் பெருமளவில் எங்கள் நேரத்தை வீணடிக்கின்றார்கள். மேலும், மத்தியவிடயமான அதி முக்கியாமான பிரச்சனைகளை கையாளுவதில் இருந்து அவர்கள் தம்மை வேறுவழியில் திசைதிருப்புவதாக இருக்கலாம்.



பொதுவான புத்திஜீவித சூழ்நிலையும், இத்திரைப்படத்தின் மீதியைப் பார்ப்பதற்கான அனுகூலத்தையும்பெற்ற ஒருவர், வேறு எந்த விடயம் தொடர்பாகவும் அதிகம் குறிப்பிடுவதற்கு இயலாத நிலைமையிலேயே செரோ பாலியல் விளைவுகளில்கவனம் செலுத்த முடிவுசெய்தார் என்று எண்ணுவது மன்னிக்கக் கூடியது ஆகும். எத்தகைய தீவிரமான மூடிமறைப்புகளை திரைப்படம் கொண்டுள்ள போதும், இறுதியான அந்தரங்கமான ஒன்று கூடல்கள், படத்தயாரிப்பாளர் வாழ்க்கையின் மிக அடிப்படையானதும் முக்கியமானதுமான கேள்வியை சமாளிக்கப் போராடுகிறார் என பிரதானமாக விமர்சகர்களையும் பார்வையாளரையும் திருப்திப்படுத்துவதற்காக உள்ளடக்கப்பட்டுள்ளனவாகத் தெரிகின்றன. எனினும் இவர் அதனை அற்ப அளவேனும் செய்யவில்லை.

அப்படத்தில் பரந்த அளவில், பாலியல் காட்சிகள் தான் தென்படுகின்றன. இவற்றை சேர்த்துக்கொண்டும் விலக்கியும் ஒருவர் திரைப்படத்தை விளங்கிக் கொள்ள முயல்கின்றார். இது ஒரு வீண் முயற்சியாகும். பேர்லின் படவிழாவின் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் சேரோ ''தனியே பாலியல் காட்சியை மட்டும் இல்லாமல், ஒரு முழுக்கதையுடனும் சேர்த்து படத்தை பற்றி சிந்தியுங்கள்'' என பத்திரிக்கையாளர்களை கேட்டுக்கொண்டார். எப்படியிருந்தபோதும், துரதிருஷ்டவசமாக படம் என்பதே 'ஒரு முற்றான கதை' தான் மற்றும் நடைமுறையில் ஒரு குறிப்பிட் தருக்க ஒழுங்காக மற்றும் ஒத்திசைவானவான-- கூடியோ அல்லது குறைந்த பட்சமோ மனித உயிரியலால் நிர்பந்திக்கப்பட்ட-- ஒன்றாக பாலியல் காட்சிகள் மட்டும் தான் படம் முழுவதிலும் இருக்கின்றன. ஒரு ஆழ்ந்த கலையை ஒரு ஆழமான சமூக கண்ணோட்டம் இன்றி படைப்பது ஏறத்தாழ சாத்தியமில்லை. அதற்கான நிரூபணங்கள் எதுவும் இருந்திருக்காவிடில் செரோவின் திரைப்படமானது இவ்வாறான ஒரு நிரூபணமாக தேர்ந்தெடுக்கப்படும்.

இதனுடைய நாடகபாணி பலவீனங்களும் உண்மையற்ற தோற்றங்களும் எண்ணற்றவை. ஜேய் (Jay) ஆன ரயிலன்ஸ் ஒவ்வொரு வரியிலிருந்தும் பின்வாங்கும் அவரதுபோக்கும் சிறிதளவு சங்கடப்படுவதுபோன்ற சைகைகளும் எரிச்சலை உண்டாக்குகின்றன. ஒரு கெளரவமான மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த வாழ்ககை நாடத்திய மற்றும்இன்னும் ஒரு நாகரீகமான மதுபானசாலையில்பெருமளவு பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு அழுக்கு குவியல் நிறைந்த வீட்டில் என்னசெய்கின்றார்? இவை அடிப்படையில் பொதுஉணர்விற்காக செய்யப்பட்டவையாகும்.

பல நடிகர் நடிகைகள், குறிப்பாக நம்பிக்கைத்துரோகம் செய்த கணவனாக நடிக்கும்,இனிமையாக பேசும் சபோல் (மைக்லே வின் பல திரைப்படங்களில் நடித்தவர்)மற்றும் ரே லன்ஸ் வேறு திரைப்படங்களில் உள்ளனர். இவர்கள் இருவரும் ஒருமிக்கத்தோன்றும் காட்சிகள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. கிளேயரின் சினேகிதியான மரியன் பெய்த்புள் (Marianne Faithfull)முற்றிலும் வினோதமானவர். தனது எல்லாம் அறிந்தபாவனையால் எமக்கு எரிச்சலை ஏற்படுத்துவது அன்றி தன்னினச் சேர்க்கையாளரான பிரெஞ்சு மதுபான சாலை தொழிலாளியினால் பயன் என்ன?

இப்படமானது பொழுதுபோக்காக தயாரிக்கப்பட்டது, மனத்திருப்தியை அளிக்காததோடு மொத்தத்தில் எந்தவிதமான உளரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்துவதாக இல்லை.

அந்தரங்கம் பிரெஞ்சு குட்டி முதலாளித்துவ நோயினால் பாதிக்கப்பட்டிருப்துடன், இது தனிமைப்படுத்தப்பட்ட, சந்தோசமற்ற மற்றும் அந்நியப்படுத்தப்பட்ட தம்பதிகளுக்கும் மற்றும் பரந்த உலகத்திற்கும் இடையிலான எந்தவொரு தொடர்பையும் வரைய விடாப்பிடியாக மறுக்கிறது. நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல், அப்படியான ஒரு தொடர்பை உருவாக்குவது தற்காலிக பிரெஞ்சு படங்களில் மறுக்கப்பட்டுவருகிறது. மேலோட்டமாக பார்ப்பதற்கு, லேயின் நிர்வாணம் இனை ஒத்த ஒன்றாக இந்தப்படம் இருக்கிறது. ஆனால் அந்தப்படம் அதனது பலகீனங்கள் என்னவாக இருந்தபோதும் தட்சரால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானகரமான கொள்கைகளின் விளைவுகளை ஆவணப்படுத்தியிருந்ததுடன், ஒரு குறிப்பிட்ட வரலாற்று கணத்தின் ''உணர்வுகளின் கட்டுமானத்தை'' உள்ளடக்கியிருந்தது. இந்தப்படத்தில் அப்படி எதுவுமே இருக்கவில்லை. உரையாடல்கள் ஆழமானவையாக இருந்திருக்கவேண்டும் ஆனால் முற்றிலும் முட்டாள் தனமான வரிகளைச் சிந்திய வண்ணம் மனம்போனபோக்கில் கதாபாத்திரங்கள் அலைந்து திரிகின்றனர். படம் முற்றாக ஒரு வரலாற்று அர்த்த்தத்தை இழந்திருந்ததது.

சேரோ முயன்றும் முடியாது போனது என்ன மற்றும் இதை செய்ய முயன்ற முதலாவது நபரும் இவரல்ல அல்லது அதிக திறமையானவரும் இல்லை. உண்மையில் விடாப்பிடியான வகையில் ஒரு முழுச்சமூகம் பற்றியும் அல்லது சமூக வாழ்வின் அர்த்தத்தை உருவாக்க முயல்வதற்கான எந்தவொரு தீர்ப்பையும் நிராக்கரிப்பதுடன், ஒரு மக்கள் குழுவினை பற்றி ஒரு ஆழமான பார்வையையும் மற்றும் எந்தவித தீர்வையும் உச்சரிக்காமல் அவர்களது அந்தரங்கமான உறவுகளை உருவாக்க இவர் விருப்பப்படுகிறார். பாலியல் உணர்ச்சியானது மனித நிலைக்கு முன்னரே இருந்து வருகிறது. ஆகையால் பால்களுக்கிடையிலான உறவும் மற்றும் பால்களுக்குள்ளான உறவும், எப்படியிருந்தபோதும் பாலியல் உறவுகள் குடும்பத்தின் அபிவிருத்தியுடனும் மற்றும் இறுதியில் சமூக பொருளாதார உறவுகளாலும் வித்தியாசமான வடிவங்களை எடுத்தது.

படத்தில் பிரதிநித்துவப்படுத்தப்படும் பாலியல் எதிர்பார்ப்பின்மையின் இருப்பை இட்டு யாருமே முரண்படமாட்டார்கள் ஆனால், அதனது தற்கால 'மலர்ச்சி' அற்புதமான பொருளாதார மாற்றத்திற்கு சில சகாப்பதங்களுக்குப் பின்னர் குடும்ப நிலைமைகள் உள்ளடங்கலாக உலக நிலைமைகளுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லையா? சேரோ இந்த விடயங்களுடன் தன்னை தொந்தரவு படுத்திக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, ''எப்போதும் காதல் கதையை தொடங்குவது இலகுவானது. ஒரு காதல் கதையை தொடர்வது கடினமானது'' என்ற இப்படியான அர்த்தமற்ற வெளிப்பாட்டைத்தான் அவர் கொடுத்திருக்கிறார். 




இந்த குறிப்பிட்ட மத்தியதர வர்க்கத்தின் 'கலைத்துவ' முறையினை பற்றிய ஆழமான பழமைவாதம் இதில் இருக்கிறது.அத்துடன் அவர்களின் இந்த பங்களிப்பை விட தற்போது உலகம் அதிகமானதைக் கொண்டிருக்கிறது. எந்த சக்திமிக்க பூகம்பமும் இப்படியான நனவுகளில் ஒருபோதும் ஊடுருவிச் செல்லாது. இது தன்னளவில் திருப்திபட்டுக் கொள்வதுடன் மற்றும் மிகக் குறுகியதாகவும் இருக்கிறது. பட இயக்குனர் தனது சிறிய Bohemian (புத்திஜீவித) உலகைக் கொண்டிருக்கிறார், அவரது 'அதிர்ச்சி' பார்வையின் நிலை ஒரு குறிப்பிட்ட விடயத்தை நோக்கி ஒருபோதுமே விரிவாகாது, 'சுதந்தரமான' பட இயக்குனர் என்ற அவரது நிலை மற்றும் அது அப்படியே தான் எப்போதும் இருக்கும். சோகமானமுறையில், உண்மையான புதிய இந்த விடயம் தொழில் நுட்பத்திற்கு அல்லது பூகோள வர்த்தகத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பத்திரிக்கையில் வெளிவந்ததைப்போன்று இருக்கின்றது.

உதாரணமாக பாரம்பரிய குடும்பங்களின் உடைவுகளினை பற்றிய எமது விளக்கத்தினை சொல்வதற்கு அப்பால், சேரோவின் சில விமர்சனங்கள் குறிப்பிடும்படியானது, பரந்தமட்டத்தில் அவர் அந்த அபிவிருத்தியினால் அதிர்ந்துபோனதாக தெரிகிறது. முற்றிலும் ஒழுக்கவிதிகளுக்கு உட்பட்டதும் மரபை அனுசரிக்கும்அம்சங்களும் இத்திரைப்படத்திற்கு உள்ளன. ஜேயின் திருமணமாகத இருப்பும், அதோபோல் அவரது குடிகார அல்லது போதை வஸ்த்துகளுக்கு அடிமையான நண்பனும் ஒரு பயங்கரக் கனவாக இருக்கின்றன. ஒப்பீட்டளவில் அவரது முன்னைய திருமண வாழ்க்கை காட்சிகள் கிட்டதட்ட பேரின்பமயமானதாக தெரிகிறது. அவரது படத்தில் பாலியலை பற்றி எடுத்தற்காக இயக்குனர் என்னதான் உறுதிப்பாட்டின்மையை கோரியிருந்தபோதும் (''அது வாழ்க்கையாக இருப்பதால் அழகானதாக இருக்கிறது''), உண்மையில் ஜோடிகள் திருப்தியற்றவர்களாகவும் மற்றும் சந்தோசமற்றவர்களாகவும் இருப்பதற்காக உருவாக்கப்பட்டிருந்தார்கள் (அது உண்மையில் அவசியமற்று இருந்தது. ஏனெனில் சந்தோசமற்ற மனிதர்ககள் கூட அற்புதமான சந்தோசத்தின் கணத்தினை அறிவார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் உடலியல் தனது சொந்த கோரிக்கையை கொண்டிருக்கிறது).

தனது பாத்திரங்களின் உடைகளை களைவதன் மூலம் தான் ''அடிப்படைக்கு இறங்கிப்போகிறார்'' என சேரோ நம்புகிறார். ஒரு குறிப்பிட்ட அர்த்தத்தில் இது உண்மையே. பாலியல் உணர்வு வாழ்வின் ஒரு அடிப்படையான உண்மையாகும். எப்படியிருந்தபோதும், தீர்மானகரமான நிபந்தனைக்குள் தான் அது எப்போதும் இடம்பெறுகிறது. அவ்வகை தீர்மானகரமான நிபந்தனைகளின் பாத்திரங்களை வழமையான மற்றும் திரித்த முறையிலும் எமக்கு காட்டுவதன் பாகமாக மிகவும் சிக்கலான மற்றும் மதிப்புவாய்ந்த ஏற்கனவே நாம் அறிந்த கேள்வியை சேரோ புறக்கணிக்கிறார்.

மீண்டும் மீண்டும் நியாயமான வெளிப்படையான கருத்தைதாக்காமல் அடிப்படையாக சொற்பநேரத்தில் குறித்துக் கொள்ள வேண்டியது என்னவெனில் பாலியல் நடத்தையில் எல்லாவகைகளையும் பற்றி வர்ணிப்பதை தற்கால படத்தயாரிப்பில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் இருக்கும் சமூக ஒழுங்கு பற்றியநியாயமான விமர்சனங்களையும் மாற்றுவழி இருக்கக் கூடும் என்ற பிரேரணைகளையும் உத்தியோகபூர்வமற்ற விதத்தில் ஆனால் சக்திவாய்ந்த முறையில் தடைசெய்யப்பட்டுள்ன.

எமது சகாப்தத்தின் சமூக உளவியல் மற்றும் அது ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வு என்பவை உட்பட எமது காலத்தில் கலைஞர்கள் சகாப்தத்தின் பாத்திரத்தைகணக்கில் எடுக்காது புறக்கணிக்கும் விதத்திலேயே பிரதானமாக ஒருவரிலிருந்து ஒருவர் வேறுபடுகின்றனர். சிலர் இதனை மலிவான கற்பனைக்கதை மூலமும் ஆழமற்ற விதத்திலும் செய்கின்றனர். சிலர் தற்போதைய நிலைமைகளுக்கு வெளிப்படையாக அடிபணிவதன் மூலமும் மற்றவர்கள் "தூய களங்கமற்ற" என்ற எண்ணத்துடன் கலையை வணங்கும் நடவடிக்கைகள் மூலமும் மற்றவர்கள் வரலாற்று அல்லது புறநிலை உண்மை அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது என்ற கருத்தினை நிராகரிப்பதன் மூலமும் இன்னும் சிலர் பாலியல் மூலமும்செய்கின்றனர். இப்படியான தப்பிக்கும் (நழுவும்) வழிமுறைகளுக்கிடையில் தேர்வு செய்வதற்கு அதிகமாக எதுவுமில்லை
  
நன்றி : World Socialist Website



No comments:

Post a Comment