Friday 20 April 2018

லியனார்டோ டா வின்சி : அறிவு இயலை ஓவியமாக்கியவர்

ஆத்மாநாம் 



லியனார்டோ டா வின்சியின் இரு சுவடிகளில் காணப்படும் நூற்றுக்கணக்கான அரிய வரைபடங்களில் இது ஒன்றாகும். நீண்ட காலமாக மறைந்து கிடந்த இச்சுவடிகள் அனமையில் மாட்ரிடிலுள்ள தேசிய நூலகத்தில் கண்டெடுக்கப்பட்டன. இப்படம் லியனார்டோ செய்ய ஒப்புக்கொண்ட மாபெரும் வெண்கலக் குதிரை சிலையின் தலை, கழுத்து ஆகியவைகளின் வெளி வார்ப்படம்.

மாட்ரிட் குறிப்பேடுகள் மற்றும் வரைபடங்கள்

லியனார்டோவின் உள்ளம் இடயறாது இருளைத்துழாவி ஒரு பொருளில் ஒளிவீசி, உடனே மற்றொரு பொருளுக்கு தாவும் சுடரொளி போன்றது. சுருக்கமான குறிப்புகளும், நுட்பமான வரைபடங்களும் செறிந்த இந்த மாட்ரிட் குறிப்பேடுகள் பொறியியல், படைத்துறை பொறியியல், வடிவியல், தொலைக்காட்சி, காட்சியியல், வார்ப்பியல், போன்ற பல துறைகளில் லியனார்டோ பெற்றிருந்த திறமையை தெளிவாக விளக்குகின்றன.  





No comments:

Post a Comment