Tuesday 24 April 2018

தேன்சிட்டு - உலகின் குட்டிப் பறவை

ஆத்மாநாம்

அமெரிக்காவில் உள்ள ஓசனிச்சிட்டு என்ற ரகத்தைச் சேர்ந்த பறவை இனம் தான் தேன்சிட்டு. 
தேன்சிட்டுகளில் 132 வகையினங்கள் உள்ளன. 
இப்பறவைகள் உருவத்தில் சிட்டுக்குருவியைவிடச் சிறியவை. ஓசனிச் சிட்டை விட பெரிய்வை.
தேன்சிட்டு மலர்களில் உள்ள தேனை உணவாக உட்கொள்ளும். பூச்சிகளையும் சாப்பிடும்.
ஆப்ரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் தேன்சிட்டுகள் காணப்படுகின்றன.
தேன்சிட்டுகளின் அலகு மலர்களில் உள்ள தேனை எடுப்பதற்கு ஏற்றவாறு நீண்டதாய் வளைந்திருக்கும்.
பெரும்பாலான தேன்சிட்டுகள் கிளைகளில் அமர்ந்து மலர்களில் தேனை எடுக்கும். சில தேன்சிட்டுகள் மலருக்கு இணையாக ஹெலிகாப்டரைப் போல காற்றில் பறந்துகொண்டே அலகை மலரில் வைத்து தேன் குடிக்கும்.
ஆண் தேன்சிட்டுகள் ஆபரணங்களைப் போல மின்னும் வண்ணங்களை உடலில் கொண்டிருக்கும். பெண் தேன்சிட்டுகளின் நிறம் ஆண் தேன்சிட்டுகளைவிட பழுப்பாக இருக்கும்.
தேன்சிட்டுகள் பகலில் உற்சாகமாக இருக்கும்.
செடிகள் மற்றும் மரங்களில் தேன்சிட்டுகள் கூடு கட்டும். தேன்சிட்டுகளின் கூடுகள் மணிபர்ஸைப் போலவே இருக்கும். காய்ந்த சருகு, வேர்களைக் கொண்டு கூடுகளைக் கட்டும். சிலந்தி வலையைக் கொண்டு சருகு, வேர்களை ஒட்டவைத்து விடும்.
கூட்டின் வாயிலில் மூன்று அல்லது நான்கு சென்டிமீட்டர் அளவிலான துவாரம் இருக்கும். துவாரத்திற்கு நம் வீடுகளில் அமைப்பதைப் போல சிறிய வாயில் இருக்கும்.
ஆண் தேன்சிட்டுதான் கூடுகட்டும் இடத்தை முதலில் தேர்வு செய்யும். கூடு கட்டப்படும் கிளை வலுவுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்கும். பின்னர் பெண் தேன்சிட்டு அந்த இடத்தைப் பரிசோதிக்கும். அதற்கும் இடம் பிடித்துவிட்டால் பெண் தேன்சிட்டு அங்கே கூட்டைக் கட்ட மூன்று வாரங்கள் தேவைப்படும். கூடு கட்டப்பட்ட பின்னர் ஆண் தேன்சிட்டு வந்து வீட்டைப் பரிசோதித்துப் பார்க்கும். குறைபாடுகள் இருந்தால் சரி செய்யப்பட்டு, இரண்டு பறவைகளுக்கும் மனநிறைவு ஏற்பட்டால் மட்டுமே இரண்டும் அதில் வசிக்கும்.

கூட்டில் தங்கிப் போதுமான உணவை எடுத்துக்கொண்ட பின்னர் பெண் தேன்சிட்டு முட்டைகளை இடும். ஒரு சமயத்தில் ஒன்று முதல் மூன்று முட்டைகளை இடும்.
முட்டைகளை அடைகாக்க ஆகும் காலம் மூன்று வாரங்கள். உணவுச் சேகரிக்க மட்டுமே கொஞ்சம் நேரம் வெளியே செல்லும். பெண் பறவை வெளியே செல்லும்போது ஆண் பறவை அருகில் உள்ள மரத்திலிருந்து முட்டைகளைப் பாதுகாக்கும். ஏதாவது அபாயம் தென்பட்டால் பெண் பறவையை சத்தமிட்டு அழைக்கும்.

முட்டை பொரித்த பின்னர் சில நாட்கள் ஆண் பறவை உணவைச் சேகரிப்பதற்கு உதவும். தேன்சிட்டின் குஞ்சுகள் இரண்டு வாரங்களிலேயே வளர்ந்துவிடும். அடுத்து ஒரு வாரம் பெற்றோருடன் இருக்கும். பிறகு தன் வழியைத் தேடத் தொடங்கிவிடும்.
5 கிராம் எடை அளவே கொண்ட கரும் வயிறு தேன்சிட்டுதான் மிகவும் சிறியது. 45 கிராம் அளவுள்ள சிலந்திவேட்டை தேன்சிட்டுதான் மிகப்பெரியது. தேன்சிட்டு உலகின் மிகச் சிறிய பறவையினம்.
ஆண் தேன்சிட்டுகளின் வால் நீளமாக இருக்கும்.
தேன்சிட்டுகளின் ஆயுட்காலம் சராசரியாக ஐந்து ஆண்டுகள்.

தேன்சிட்டுகளுடன்
உங்களுக்கு
பரிச்சயமுண்டா ?
குச்சிக் கால்களுடன்
தத்தித்தாவும் அழகை
நீங்கள் ரசித்ததுண்டா ?
செடிக்கு நோகாமல்
நான்கு இலைகளை
சுருட்டிக்கொண்டு வாழ்வதை
பார்த்ததுண்டா ?
காற்று உதிர்த்த
ஒவ்வொரு இலையின் மீதும்
அதன் காலடித் தடங்கள்
பதிந்திருப்பதை கண்டதுண்டா ?
அடர் மரங்களின்
குளுகுளு நிழற் கிளையில்
கீச்..கீச்சென இசையெழுப்பும் 
இந்த சிறிய பறவையை
பார்த்துக் களித்ததுண்டா?

நட்சத்திரவாசி

No comments:

Post a Comment