Saturday 21 April 2018

காடுலியா லோகார்கள் : இந்திய நாடோடிகள்

எஸ்த்பான் கோபாஸ் பெந்த்



இந்த காடுலியா லோகார் இளைஞன் உடல் நலமும், செல்வமும், செழிப்பும், இன்பமும் தரும் காவல் தெய்வம். ராம் தி போஜியின் பெயரால் ஒரு தாயத்தை கழுத்தில் கறுப்பு நூலில் கட்டியிருக்கிறான். ஆண்கள் அணியும் ‘முர்க்கி’ எனும் காதணியும், இடக்காதின் உச்சியில் மகளிர் அணியும் வளையமும் அணிந்திருக்கிறான். அருகிலுள்ள பெண் தான் மணமானவள் எனக்காட்ட தந்த, வெள்ளி வளையல்கள் அணிந்திருக்கிறாள். அவளது காதில் மணமான வெள்ளி வளையம் அணிந்த அடையாளத்தைக் காணலாம். பிற நகைகளைப் போல் இதுவும் கடன் ஈட்டுப் பொருளாக பயன்படுகிறது.

’லோகார்’ என்றால் கொல்லர் என்று பொருள். ’காடுலியா இவர்கள் பயன்படுத்தும் எருது இழுக்கும் ஒரு வகை வண்டி. எனவே ‘காடுலியா லோகார்’ என்பதை ‘அலைந்து திரியும் கொல்லர்’ என மொழி பெயர்க்கலாம். இதே மண்டலத்தில் நிலையாகும் மாரு மற்றும் மால்வியா சாதிகளைச் சேர்ந்த கொல்லர்களில் இருந்து இவர்கள்  வேறுபட்டவர்கள்.

காடுலியா லோகர்கள் தோன்றிய மண்டலம் ராஜஸ்தான். இவர்கள் தங்களைப் புகழ்பெற்ற ராஜபுத்திர மரபை சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். பல கர்ண பரம்பரைக் கதைகள் இதற்கு ஆதாரமாக வழங்குகின்றன.




No comments:

Post a Comment