Saturday 10 March 2018

புரட்சி




















உனக்குத் தெரியாதா?
அவர்கள் ஒரு புரட்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அது குகுசுப்பதைப் போல் ஒலிக்கிறது.
சலுகைகள் வாங்குவதற்காக வரிசையில் நிற்கையில்
பாவவிமோசனம் தருபவர்களின் நுழைவாயில்களில் 
கண்ணீர் விடுகையில்
வேலையில்லாதவர்களுக்கான வரிசையில் நின்று
காலத்தை வீணாக்குகையில்
பதவி உயர்வுக்காக காத்திருக்கையில்
உனக்குத் தெரியாதா?
அவர்கள் ஒரு புரட்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அது குகுசுப்பதைப்போல் ஒலிக்கிறது.
ஏழைகள் எழுகிறார்கள்
தமது பங்கினைப் பெறுகிறார்கள்.
ஏழைகள் எழுகிறார்கள்
தங்களுக்கானதை எடுக்கிறார்கள்.
ஆமாம், கடைசியில், (அதிகார) மேசைகள் திரும்பத் தொடங்குகின்றன.

ட்ரேஸி சாப்மன்



No comments:

Post a Comment