Thursday 8 March 2018

மீறல்களிலிருந்து பிறந்த மனித உயிரி



இயற்கையின் ஆளுகை விதிகளுடன் தமது இயல்பூக்கங்கள் இயைந்து போக மிருகங்கள் என்பவை இயற்கையின் பகுதிகளாய் சமைந்துள்ளன. இந்த ஒழுங்கிலிருந்து தவறுவது என்பது அவற்றின் இருப்பை மிரட்டுதலுக்குள்ளாக்கும். இயற்கையுடன் தம்மை இயைபுபடுத்திக் கொள்ள மறுத்தபோதே மிருகங்களினது மூளைப்பகுதி வளர்ச்சியுற்றதென்பதையும், அதிலிருந்தே பரிணாமத்தில் மனிதனின் தோற்றம் நிகழ்ந்த்தென்பதும் அறிவியல் நமக்கு புலப்படுத்துகிறது

இவ்விதம் ஒழுங்கிலிருந்து குலைவு என்பதில் தோற்றம் கொண்ட மனித உயிரியானது மீண்டும்ஒழுங்கமைவுக்குட்படுதல்மூலமே தனது இருப்பை காத்துக்கொள்ள முடியும் என்ற கருத்தாக்கத்தைப் பெற்று, தன்னை ஒடுக்குகின்றஅரசுஎன்னும் நிறுவனத்தையே தனக்கு இதமென எண்ணிக்கொள்ளும் நிலையில் மீண்டும் விலங்கின் நிலைக்கு முழுமையாக தள்ளப்படுகிறது. இதுவே அதிகாரப் பகுதியின் பரவலுக்கும், இருத்தலுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது.

No comments:

Post a Comment