Sunday 29 April 2018

கலை பற்றிய கம்யூனிஸ்ட் கொள்கை (1923)

லியோன் ட்ரொட்ஸ்கி


தொழிலாளர்களால் தான் புரட்சிகரக் கலையை தோற்றுவிக்க முடியும் என்பது உண்மையல்ல. நாம் முன்னரே கூறியதை மறுபடியும் கூறுவோமாயின்புரட்சி என்பது ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சி என்பதாலேயேஅது கலைக்காக தொழிலாள வர்க்க ஆற்றலை மிகக் குறைந்தளவில் தான் செலவிடுகிறது. பிரெஞ்சு புரட்சிக் காலத்தில்அதை நேரடியாகவோ மறைமுகமாகவோ பிரதிபலித்த உயர்ந்த படைப்புக்கள் பிரெஞ்சு கலைஞர்களால் தோற்றுவிக்கப்படவில்லைமாறாகஜேர்மனியஆங்கில மற்றும் ஏனைய நாட்டவரால் தோற்றுவிக்கப்பட்டன. புரட்சி உருவாக நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்த பிரெஞ்சு பூர்ஷூவாஅதன் அடிச்சுவட்டை மீண்டும் தோற்றுவித்துநிலைநிறுத்துவதற்கு அதன் வலிமைக்குப் போதிய தரத்தை அளிக்க முடியவில்லை. இது பாட்டாளி வர்க்கத்திற்கு இன்னும் சரியாக பொருந்துகிறதுபாட்டாளி வர்க்கம் அரசியலில் கலாச்சாரத்தைக் கொண்டிருந்த போதினும்கலையில் சிறிதளவே கலாச்சாரத்தைக் கொண்டிருக்கிறது. வடிவத்தில் தங்களின் தகுதிகளின் செல்வாக்கிற்கு அப்பாற்பட்டுஅறிவுஜீவிகள் ஓர் செயலற்ற அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்திருந்ததில் வெறுக்கத்தக்க முன்னுரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இதை அக்டோபர் புரட்சியில் அவர்கள் காட்டிய கூடிய விரோதப் போக்கு அல்லது குறைந்த நட்புத்தன்மையில் காணமுடிகிறது.

ஆகவேபுரட்சியைத் தோற்றுவித்த பாட்டாளி வர்க்கத்தைவிட இந்த சிந்தனைவயப்பட்ட அறிவுஜீவிகள் கூட்டத்தால் புரட்சியைப் பற்றிய ஒரு சிறந்த கலைத்துவ உருவாக்கங்களை (அவை சற்றே பிறழ்ந்து இருந்தன என்ற போதினும்) கொடுக்க முடிந்ததுடன்கொடுத்தும் வருகின்றன என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உடன்பயணிப்பவர்களின் அரசியல் மட்டுப்படுத்தல்கள்உறுதியற்ற தன்மைபொறுப்பின்மைகள் நமக்கு நன்றாக தெரியும். ஆனால் பில்ன்யக்கின் The Naked Year ஐயும்அத்துடன் அவரையும் நாம் நீக்கிவிடுவோமேயானால்சிவ்லோட் இவானோய்திக்கோனோய்போலன்ஸ்கியா ஆகியோருடன் “Serapion Fraternity” ஐயும் ஒதுக்கிவிடுவோமேயானால்மாயாகோவ்ஸ்கி மற்றும் யென்னின் ஆகியோரையும் நீக்கிவிட்டால்வருங்கால பாட்டாளி வர்க்க இலக்கியத்திற்கு கடந்தகாலத்தின் அருமையான குறிப்புகளில் ஏதேனும் மிஞ்சுமாஅதிலும் குறிப்பாக டெம்யன் பெய்ட்னியை உடன்பயணிப்பவர்களுடன் சேர்க்க முடியாது என்றும்புரட்சிகர இலக்கியத்துடன் தொடர்புபடுத்த முடியாது என்றும்குஜ்னிட்சா அறிக்கையில் (manifesto of the Kuznitsa) வரையறுக்கப்பட்ட விதத்தில்பாட்டாளி வர்க்க இலக்கியத்தோடு அவரை தொடர்புபடுத்த முடியாது என்றும் நாம் நம்புகிறோம். அப்படியானால்பின்னர் நமக்கு என்ன எஞ்சியிருக்கும்?

கட்சிஅதன் இயல்புக்கு மாறாகமுற்றிலும் ஓர் பல தத்துவங்களின் கருத்துக்களை தேர்ந்தெடுத்து இணைத்துக் கொள்கின்ற (eclectic) நிலைப்பாட்டைக் கலைத்துறையில் கொண்டிருக்கிறது என்பதையா இது குறிக்கிறதுமிக கடுமையாக தெரியும் இந்த வாதம்உண்மையில் மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. புதிய கலையின் வளர்ச்சியை மதிப்பிடுவதற்கான மற்றும் அதன் அனைத்து ஆதாரங்களையும் ஆராய்வதற்கான மற்றும் அதன் பாதையில் ஓர் அதிநுட்பமான வெளிச்சத்தையளித்து மிகவும் முற்போக்கான போக்குகளுக்கு உதவுவதற்கான வாய்ப்புகளை மார்க்சிச அணுகுமுறை அளிக்கிறது. ஆனால் அதைக் கடந்து அது எதையும் அளிப்பதில்லை. கலை தன்னுடைய சொந்தக் கருவிகளை கொண்டுஅதன் சொந்தப் பாதையை உருவாக்கி கொள்ள வேண்டும். மார்க்சிச அணுகுமுறைகள் கலைத்துறையைப் போன்றதல்ல. கட்சிபாட்டாளி வர்க்கத்தை வழிநடத்துகின்றதே தவிர வரலாற்றின் வரலாற்று நிகழ்சிபோக்குகளுக்கு அல்ல. நேரடியாகவும்கட்டாயமாகவும் கட்சி தலைமையெடுத்துச் செல்வதற்கான துறைகள் (domains) உள்ளன. அதேசமயம்சில துறைகளுக்கு அது ஒத்துழைப்பை மட்டுமே அளிக்க முடியும். இறுதியாகவேறுசில துறைகளோடு அது தன்னைத்தானே ஒன்றுபடுத்திக்கொள்ள மட்டுமே முடியும். கட்சி அதிகாரம் செலுத்த முடியாத துறைகளில் ஒன்று தான் கலைத்துறை. கட்சியானது கலையைப் பாதுகாத்துஅதற்கு உதவ வேண்டும்அதனால் அவ்வாறு செய்ய முடியும். ஆனால் அதனால் கலைக்கு மறைமுகமாக மட்டுமே தலைமை கொடுக்க முடியும். புரட்சியை அணுக நேர்மையோடு போராடி கொண்டிருக்கும் பல்வேறு கலைக்குழுக்களுக்குக் கூடுதலான நம்பிக்கையை அதனால் அளிக்க முடியும்அளிக்கவும் வேண்டும். அதன் மூலம் அது புரட்சியின் ஒரு கலைத்துவ வடிவத்திற்கு உதவுகிறது. ஏனைய இலக்கிய வட்டங்களுடன் போராடிக் கொண்டிருக்கும் மற்றும் போட்டியிட்டு கொண்டிருக்கும் ஓர் இலக்கிய வட்டத்தின் இடத்தை எவ்விதத்திலும் கட்சியால் எடுக்க முடியாதுஎடுக்கவும் எடுக்காது.

தொழிலாள வர்க்கத்தின் முழுமைத்தன்மையில்அதன் வரலாற்றுரீதியான நலன்களுக்கு கட்சி பாதுகாப்பளிக்கிறது. ஏனென்றால்அது நனவுபூர்வமாகவும்படிப்படியாகவும் ஒரு புதிய கலாச்சாரத்திற்கும்அதன் மூலம் ஒரு புதிய கலைக்கும் அடித்தளத்தை அமைக்கிறது. அவ்வாறான கலைஉடன்பயணிக்கும் இலக்கியவாதிகளை தொழிலாள வர்க்க எழுத்தாளர்களின் போட்டியாளர்களாக அல்லாமல்மறுகட்டமைப்பெனும் பெரும்பணியில் தொழிலாள வர்க்கத்திற்கு நிஜமாகவும்ஆக்கபூர்வமாகவும் உதவக்கூடியவர்களாக மதிக்கும். ஒரு இடைமருவு காலத்திலிருக்கும் இலக்கியக் குழுக்களின் தற்காலிகத் தன்மையை கட்சி நன்கு புரிந்துகொண்டுஅவற்றை மதிப்பிடுகிறது. தனிப்பட்ட அருமையான இலக்கியவாதியின் வர்க்க நிலைப்பாடுகள் என்ற கண்ணோட்டத்தில் அல்லாமல்இக்குழுக்கள் இடம்பெற்றிருக்கும் இடத்தையும்ஒரு சோசலிச கலாச்சாரத்தை உருவாக்குவதில் அவை ஏற்கக்கூடிய இடத்தையும் பற்றிய கண்ணோட்டத்தில் இதைச் செய்யும். எந்த குழுவினதும் இருக்கும் இடத்தை கட்சியால் இன்று தீர்மானிக்க சாத்தியப்படவில்லை என்றால்பின்னர் அந்த கட்சியானது கட்சியென்ற முறையில் பொறுமையாகவும்சகிப்புணர்வோடும் காத்திருக்கும். தனிப்பட்ட விமர்சகர்களும்வாசகர்களும் முன்கூட்டியே ஏதேனும் ஒரு குழுவிடம் பரிவுணர்வு காட்டலாம். ஆனால்மொத்தத்தில்கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களைப் பாதுகாக்கிறதுமேலும் அது கூடுதலான புறநிலைத்தன்மையோடும்புத்திசாலித்தனத்தோடும் இருக்க வேண்டும். இதன் எச்சரிக்கையுணர்வு இருபுறமும் கூர்மையாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் அதற்காக எழுதுகிறார்கள் என்பதற்காக குஜ்னிஸ்டா (Kuznista) மீது தன்னுடைய ஒப்புதல் முத்திரையைக் கட்சி அளிக்காவிட்டால்முன்கூட்டியேஅது அறிவுஜீவிகள் மத்தியிலும் கூடஎந்த இலக்கியக் குழுவையும் ஒதுக்குவதில்லை. இவ்வாறு இதுபோன்றதொரு குழு புரட்சியை அணுக முயற்சிக்கிறதுமேலும் நகரத்திற்கும்கிராமத்திற்கும் இடையிலான அல்லது கட்சி உறுப்பினருக்கும்கட்சி-சாராதவருக்கும் இடையிலானஅல்லது அறிவுஜீவிக்கும்தொழிலாளர்களுக்கும் இடையிலான பிணைப்புகளில் (ஒரு பிணைப்பென்பது எப்பொழுதும் ஒரு பலவீனமான புள்ளியாகவே இருக்கிறது) ஒன்றை வலுப்படுத்த முயற்சிக்கிறது.

எவ்வாறிருப்பினும்கலைத்துறைக்குச் சாதகமாக ஒரு பாதுகாப்பற்ற நிலைப்பாட்டை கட்சி எடுக்கும் என்பதையா இதுபோன்றவொரு கொள்கை குறிக்கிறதுஇது பெரிதும் மிகைப்படுத்தலாக இருக்கிறது. கலையில் வெளிப்படையாக இருக்கும் நச்சுத்தன்மையையும்சிதைக்கும் போக்குகளையும் கட்சி விலக்கி ஒதுக்கும்அதேசமயம்அதன் அரசியல் தரமுறைகளைக் கொண்டு அதுவே கலைத்துறைக்கு வழிகாட்டும். எவ்வாறிருப்பினும்அரசியல் அணியிலிருப்பதைவிட கலையின் ஒருபகுதி குறைவாகவே பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் இது விஞ்ஞானத்திற்கும் உண்மையாக இல்லையாகலப்படமில்லா பாட்டாளி வர்க்க விஞ்ஞானத்தின் மாறாநிலைவாதிகள்சார்புவாத தத்துவம் குறித்து என்ன கூறப்போகிறார்கள்இதை சடவாதத்துடன் சமரசப்படுத்தப்பட முடியுமாமுடியாதாஇந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுவிட்டதாஅப்படியானால்எங்கேஎப்போதுஎவரால்எமது உடற்கூறு வல்லுனர் பாவ்லோவ் முற்றிலும் சடவாத வழிவகையில்தான் இருக்கிறார் என்பது எவருக்கும்இது குறித்து அறிந்திராதவர்களுக்கும் கூடதெளிவாகத் தெரியும். ஆனால் பிராய்டின் உளப்பகுப்பாய்வு (psychoanalytic) தத்துவம் குறித்து ஒருவர் என்ன கூறுகிறார்கார்ல் ரடெக் நினைப்பது போல் (நானும் கூட)சடவாதத்துடன் இதை சமரசப்படுத்தப்பட முடியுமா அல்லது இது அதற்கு விரோதமாக உள்ளதாஇதே கேள்வியை அணு அமைப்பின் மற்றும் இதரபிற அனைத்து புதிய தத்துவங்களின் மீதும் எழுப்ப முடியும். இந்த புதிய பொதுக்கருத்துக்களை முறையாக உள்வாங்கக்கூடிய மற்றும் உலகின் இயங்கியல் சடவாத கருத்துருவிற்குள் அவற்றை அறிமுகப்படுத்தக்கூடிய ஒரு விஞ்ஞானி வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதேநேரம்இதன்மூலம் அவரால் இந்த புதிய தத்துவங்களை பரிசோதிக்கவும்இயங்கியல் முறையை ஆழமாக அபிவிருத்தி செய்யவும் முடியும். ஆனால் இத்தகைய படைப்பை-ஒரு செய்தித்தாள் கட்டுரை அல்லது இதழியல் கட்டுரைப் போலில்லாமல்உயிரினங்களின் தோற்றம் மற்றும் மூலதனம் (Origin of Species,Capital) போன்றுஒரு விஞ்ஞான மற்றும் மெய்யியல் படைப்பாக இருக்கக்கூடியதை-இன்றோ அல்லது நாளையோ செய்துவிட முடியாது என்பதையும்மாறாகஇதுபோன்ற சகாப்தத்தை-உருவாக்கும் புத்தகங்கள் இன்று உருவாக்கப்பட்டாலும் கூடபாட்டாளி வர்க்கம் அதன் கரங்களில் இருந்து ஆயுதங்களை அப்பால் வைக்கமுடியும் காலம் வரைஅபாயம் நீங்காமல் தான் இருக்கும் என்பதையும் நினைத்து நான் வருந்துகிறேன்.

இந்த கலாச்சாரத்தை தாங்கிபிடித்திருக்கும் படைப்பானதுஅதாவதுபாட்டாளி வர்க்கக் கலாச்சாரத்திற்கு முந்தைய ஆரம்ப அடிப்படைகளை எடுத்துக்கொள்ளும் படைப்பானதுவிமர்சனம்விருப்பத்தேர்வு மற்றும் ஒரு வர்க்கத்தரம் இருப்பதாக கருதுகிறதாநிச்சயமாக அது கருதவில்லை. ஆனால் இந்த நிலைப்பாடானது அரசியல்ரீதியாக இருக்கிறதேயொழியஅருவமான கலாச்சாரரீதியான ஒன்றாக இல்லை. புரட்சி தான் ஒரு புதிய கலாச்சாரத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது என்ற ஒரேயொரு அர்த்தத்திலேதான் அரசியல் நிலைப்பாடானதுகலாச்சாரத்துடன் பரந்த தன்மையில் ஒத்திசைகிறது. ஆனால்அத்தகைய ஒத்திசைவு அளிக்கப்படும் அனைத்து விஷயத்திலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றாகிவிடாது. தேவைப்படும்போது பாலங்களையும்கலைச்சின்னங்களையும் அழிப்பதற்கான உரிமையை புரட்சி கொண்டிருக்கிறது என்றால்கலையின் எந்த போக்கிலும்வடிவத்தில் அதன் சாதனை எத்துணை உயர்ந்திருந்தாலும் பொருட்படுத்தாமல்அதன் கரங்களை ஊடுருவத் தயங்காது. இது புரட்சிகர சூழலைச் சிதைக்கும் அல்லது புரட்சியின் உட்சக்திகளைஅதாவது பாட்டாளிகள்விவசாயிகள் மற்றும் அறிவுஜீவிகளை ஒன்றுக்கொன்றை விரோதமாக எழுப்பிவிடுவதற்கான அச்சுறுத்தலைக் கொண்டிருக்கிறது. எமது நிலைப்பாடானதுதெளிவாகஅரசியல்ரீதியானதுதவிர்க்க முடியாததுபொறுத்துக்கொண்டிருக்காதது. ஆனால் இந்தக் காரணத்திற்காகவேஅது தன் செயற்பாட்டின் வரம்புகளைத் தெளிவாக வரையறுக்க வேண்டியுள்ளது. என்னுடைய கருத்தை மிகத் துல்லியமாக வெளியிடுவதானால்நான் இவ்வாறு கூறுவேன்: நாம் கவனிப்பிற்குட்பட்ட ஒரு புரட்சிகர கட்டுப்பாட்டுமுறையைமற்றும் அற்பத்தனமான கட்சி மோசடிகளிலிருந்து சுதந்திரமானகலைத்துறையில் ஒரு பரந்தவளைந்துகொடுக்கும் கொள்கையை கொண்டிருக்க வேண்டும்... .

தனிநபர்வாதம் (individualism) பழைய இலக்கியம் வடிவத்தில் பழமைவாத சின்னமாக இருக்கிறது என்பதற்காக மட்டுமில்லாமல்மாறாக அது பாட்டாளிகளின் ஒட்டுமொத்த இயல்பிற்கும் முரண்படுகிறது என்பதற்காகஎதிர்காலவாதிகள் (futurist) அதை ஒதுக்கி தூக்கியெறிய விரும்பும்போதுஅவர்கள் தனிநபர்வாதத்திற்கும் கூட்டியியல்புவாதத்திற்கும் (collectivism) இடையிலிருக்கும் முரண்பாடுகளின் இயங்கியல் இயல்பை போதியளவிற்கு புரிந்துகொண்டிராத ஒரு புரிதலை வெளிப்படுத்துகிறார்கள். இதில் அருவமான உண்மைகள் என்று ஏதுமில்லை. தனிநபர்வாதம் பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அதிகளவிலான தனிநபர்வாதம் இருப்பதாலேயேபுரட்சிக்கு முந்தைய அறிவுஜீவிகளின் ஒரு பிரிவு தன்னைத்தானே புதிர்வாதத்திற்குள் (mysticism) தள்ளிக் கொண்டதுஆனால் மற்றொரு பிரிவு-அவர்களைக் கௌரவிக்கும் முறையில் கூறுவதானால்-பாட்டாளிகளுக்கு அருகில் வந்த புரட்சியால் ஈர்க்கப்பட்ட மற்றொரு பிரிவு எதிர்காலவாதத்தின் குழப்பங்களோடு கைகோர்த்து நகர்ந்தது. ஆனால் தனிநபர்வாதத்தால் அவர்களின் பற்கள் பிடுங்கப்பட்டிருந்ததால்பாட்டாளிகளிடம் மதிப்பைக் கொண்டு அவர்கள் அருகில் வந்தபோதுதன்முனைப்புவாதத்தின் கொடுமைகளை அவர்கள் காட்டினார்கள்அதாவது அதீத தனிநபர்வாதத்தை காட்டினார்கள். பிரச்சினை என்னவென்றால்சராசரி பாட்டாளி இந்த தரத்தில் பின்தங்கியிருந்தார். பெருந்திரளான கூட்டத்தில்பாட்டாளியின் தனித்துவம் போதியளவிற்கு உருவாக்கப்படவும் இல்லைவேறுபடுத்திக் காட்டப்படவும் இல்லை.

புறநிலை தரத்தை உயர்த்துவதும்தனிநபரின் அகநிலை நனவை உயர்த்துவதுமேஇன்று நாம் நின்றிருக்கும் விளிம்பிலிருந்து கலாச்சாரத்தை முன்னேற்றுவதில் செய்யக்கூடிய மிக மதிப்புடைய பங்களிப்பாக இருக்கிறது. பூர்ஷ்வா இலக்கிய படைப்புகள் வர்க்க ஐக்கியத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று சிந்திப்பது சிறுபிள்ளைத்தனமானது. ஷேக்ஸ்பியர்கோத்தேபுஷ்கின் அல்லது டாஸ்டோயேவ்ஸ்கியிடமிருந்து ஒரு தொழிலாளர் எதை எடுத்துக் கொள்ளக்கூடியதுமனிதகுல சிறப்பியல்புஅதன் உணர்வுகளின் வடிவங்கள்மனிதனின் உளச் சக்திகள் பற்றிய ஆழ்ந்ததீவிர அறிந்து கொள்ளுதல்ஆழ்மனத்தின் பங்கு போன்றவைதான். இறுதிப் பகுப்பாய்வில் தொழிலாளி செழிப்புத்தான் அடைவார்.

ஆரம்பத்தில்கோர்க்கி தனிநபர்வாத காதலுடன் பொறுப்பற்றதன்மைக்கு ஆட்பட்டிருந்தார். இருந்த போதினும், 1905க்கு சற்று முந்தைய காலப்பகுதியில்பாட்டாளிகளின் மிதமான ஆரம்பகால புரட்சிகரவாதத்தை பரப்பினார். ஏனென்றால்அந்த வர்க்கத்திடையே தனித்துவத்தை தூண்டிவிட அவர் உதவினார்அதில் தனித்துவம் ஒருமுறை தூண்டிவிடப்பட்டுவிட்டால்தூண்டிவிடப்பட்ட ஏனைய தனித்துவங்களுடன் தொடர்பு கொள்ள அது விழையும். பாட்டாளி வர்க்கத்திற்கு கலை உணவும் (artistic food), கல்வியும் தேவைப்படுகிறதுஆனால் இதற்காக பாட்டாளி வர்க்கம் வெறும் களிமண்ணாக இருக்கிறதுஅதை இதற்கு முன்னால் இருந்த மற்றும் பின்னால் வரவிருக்கிற கலைஞர்கள் தான் தங்களின் சொந்த கற்பனையினாலும்தங்களின் சொந்த விருப்பத்தினாலும் மெருகேற்ற முடியும் என்பது அர்த்தமல்ல.
பாட்டாளி வர்க்கம் ஆன்மீகரீதியாக இருப்பதால்அது கலைத்துவத்திலும் மிகவும் நுன்நுணர்வாக இருக்கிறதுஅது அழகியல் உணர்வில் அறிவுபெறாமல் இருக்கிறது. பேரழிவிற்கு உடனடியான பிந்தைய காலத்தில் பூர்ஷூவா அறிவுஜீவிகள் விட்ட இடத்திலிருந்து அவர்களால் தொடங்க முடியும் என்று சிந்திப்பதே பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஒரு மனிதன் தொடக்கநிலையிலிருந்து அவனுடைய அபிவிருத்தியில் உடலளவிலும்மனத்தளவிலும் இனத்தின்ஓரளவிற்கு விரித்து சொல்வதனால்மொத்த விலங்கின உலகின் வரலாறையும் கடந்து செல்கிறான். ஆகவேஒரு குறிப்பிட்டளவிற்குவரலாற்றுக்கு முந்தைய வாழ்க்கையிலிருந்து காலத்திலிருந்து வெகுசமீபத்தில் வெளிவந்திருக்கும் ஒரு புதிய வர்க்கத்தின் மேலெழுந்துவரும் பெரும்பான்மைகலைத்துவ கலாச்சாரத்தின் மொத்த வரலாற்றின் வழியாக கடந்து செல்கிறது. இந்த வர்க்கம் பழைய கலாச்சாரங்களின் உட்கூறுகளை உள்வாங்காமலும்ஏற்றுக்கொள்ளாமலும் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கத் தொடங்க முடியாது. ஆனால் அது குறைந்தபட்சம் கலையின் ஒட்டுமொத்த பழைய வரலாற்றையும் படிப்படியாகமெதுவாகமுறையாக கடந்து செல்ல வேண்டியது அவசியம் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு உயிரியியல் ரீதியான தனிநபர் என்ற வகையில் அல்லாமல்ஒரு சமூக வர்க்கம் என்கிற வகையில்உள்வாங்கும் மற்றும் மாற்றம்பெறும் நிகழ்ச்சிப்போக்கானது ஒரு தடையற்றமிகவும் நனவுபூர்வமான பாத்திரத்தை கொண்டுள்ளது. ஆனால் கடந்த காலத்தின் முக்கிய சுவடுகளை மதிக்காமல் ஒரு புதிய வர்க்கம் முன்னேறி சென்றுவிட முடியாது.

புரட்சிகர கலையும்சோசலிச கலையும்

இதுவரை புரட்சிகரக் கலை என்று ஏதும் இல்லை. இக்கலையின் கூறுபாடுகள் சில உள்ளனஅதைப்பற்றிய குறிப்புக்களும்முயற்சிகளும் உள்ளனமேலும் மிக முக்கியமானது என்னவெனில்புரட்சிகர மனிதன் இருக்கிறான். அவன் ஒரு புதிய தலைமுறையைத் தன் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இந்த கலையின் தேவை மிகமிக அதிகமாக உள்ளது. அத்தகைய கலை தன்னைத் தெளிவாக வெளிப்படுத்திக் கொள்ள எத்தனை காலமாகும்இதைக் கணிப்பதும் கூட கடினம்ஏனென்றால்நிகழ்ச்சிப்போக்கு அளவிடற்கரியதாககணிப்பிடமுடியாததாக உள்ளதுஅதிகளவில் அளவிடக்கூடிய சமூக நிகழ்ச்சிப்போக்குகளை கணிப்பிட முயலும் போது கூடநம்முடைய கணிப்புவேலையில் நாம் வரம்புகளைக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த கலையானதுபுரட்சியின் போது பிறந்தஅதை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் இளம் தலைமுறையின் கலை வெளிப்பாடாககுறைந்தபட்சம் அதன் முதல் பெரிய அலையாக கூட ஏன் ஆகவில்லை?

ஒரு புரட்சிகர சமுதாய அமைப்புமுறையின் அனைத்து முரண்பாடுகளையும் தவிர்க்க முடியாமல் பிரதிபலிக்கும் புரட்சிகரக் கலையானதுஇதுவரை அடித்தளம் அமைக்கப்பட்டிராத சோசலிசக் கலையுடன் குழப்பப்பட்டு விடக்கூடாது. மற்றொருபுறம்இந்த இடைமருவு காலத்திய கலையினூடாகவே சோசலிசக் கலையும் வளரும் என்பதையும் ஒருவர் மறந்துவிடக்கூடாது.

இதுபோன்றதொரு வேறுபாட்டை வலியுறுத்துகையில்ஏதோவொரு அருவமான வேலைத்திட்டத்தின் பள்ளியாசிரியர்முறை கண்ணோட்டத்தை நாம் பின்பற்றி கொண்டிருக்கவில்லை. சோசலிசப் புரட்சியென்பது தேவையின் அரசிலிருந்து சுதந்திர அரசிற்கான ஒரு பாய்ச்சல் என்று ஏங்கெல்ஸ் வெற்றுத்தனமாகக் கூறவில்லை. புரட்சியானது இன்னமும் சுதந்திர அரசாகிவிடவில்லை. ஆனால் அதனோடு ஒப்பிடுகையில்அது தேவையின்” கூறுபாடுகளைப் பெருமளவிற்கு வளர்த்துக் கொண்டுள்ளது. சோசலிசம் வர்க்க முரண்பாடுகளை அழிக்கும்அத்துடன் வர்க்கங்களையும் அழிக்கும்ஆனால் புரட்சியானது வர்க்கப் போராட்டத்தை அதன் மிக உயர்ந்த பதட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.

புரட்சிக் காலக்கட்டத்தில்சுரண்டுபவர்களுக்கு எதிராக தங்களின் போராட்டத்தில் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க உதவும் இலக்கியம் தான் தேவைப்படுகிறதுஅதுதான் முற்போக்கானது. பாட்டாளி வர்க்க சர்வாதிகார சகாப்தத்தில் ஓர் ஆக்கப்பூர்வமான வரலாற்று காரணியாக விளங்கும் புரட்சிகர இலக்கியமானது சமுதாய வெறுப்புணர்வை நிரப்பாதுமாறாக அதிலேயே நிறைந்திருக்கும். சோசலிசத்தின்கீழ்ஐக்கியம் தான் சமுதாயத்தின் அடிப்படைத்தளமாக இருக்கும். இலக்கியமும்கலையும் ஒரு வித்தியாசமான வகையில் ஒலிக்கப்படும். தற்போது புரட்சியாளர்களாகிய நாம் பெயரிடக் கவலைப்படும் எதிர்பார்ப்பில்லாத நட்புஅண்டை வீட்டாரை நேசித்தல்பரிவுணர்வு போன்ற அனைத்து உணர்வுகளும் (இவை வேஷதாரிகளாலும்வஞ்சகர்களாலும் அதிகளவில் போர்த்தப்பட்டிருக்கின்றன) சோசலிசக் கவிதையின் வலிமையான முழக்கங்களாக இருக்கும்.

எவ்வாறிருப்பினும்நீட்ஷேயவாதிகள் (Nietzscheans) பயப்படுவதுபோல்அதிகளவிலான ஐக்கியம் மனிதனைச் சீரழித்து ஓர் உணர்வுபூர்வசெயலாக்கமற்றமந்தை விலங்குகளைப் போலாக்கிவிடுமாஎன்றால் நிச்சயம் அவ்வாறு ஆகாது. முதலாளித்துவ சமுதாயத்தில்சந்தைப் போட்டியின் தன்மையை கொண்டிருக்கின்ற போட்டித்தன்மையின் சக்திவாய்ந்த ஆற்றல்ஒரு சோசலிச சமுதாயத்தில் மறைந்துவிடாதுமாறாகஉளப்பகுப்பாய்வாளர்களின் வார்த்தைகளில் கூறுவதானால்அது மேன்மைப்படுத்தப்படும். அதாவது அதுவொரு உயர்ந்தகூடுதலான ஆழ்ந்த வடிவத்தை எடுக்கும். ஒருவருடைய கருத்தைக் குறித்தோஒருவருடைய திட்டத்தைக் குறித்தோஒருவருடைய ஆர்வத்தைக் குறித்தோ அதிலே போட்டி இருக்கலாம். அரசியல் போராட்டங்களின் அளவுகள் இல்லாதுபோகையில் (வர்க்கங்களிலில்லாத ஒரு சமுதாயத்தில்அத்தகைய போராட்டங்கள் இருக்காது) சுதந்திரமடைந்த உணர்ச்சிகள்தொழில்நுட்பம்கலை உட்பட ஆக்கபூர்வமானவற்றிற்குள் திசை திருப்பப்படும். அதன் பின்னர் கலை இன்னும் பொதுநோக்கம் கொள்ளும்முதிர்ச்சியடையும்பக்குவமடையும்மேலும் ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கையை முற்போக்காக கட்டமைப்பதில் அது மிகச்சிறந்த வழிமுறையாக மாறும். வேறு எதனுடனும் தொடர்பற்றவெறும் அற்பத்தனமாக” அது இருக்காது.

நிலத்தைச் சாகுபடி செய்தல்மனிதர்களின் வசிப்பிடத்தைத் திட்டமிடுதல்அரங்குகள் அமைத்தல்குழந்தைகளுக்கு சமுதாயம் சார்ந்து கற்பிப்பதற்கான முறைகள்விஞ்ஞானப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல்புதிய வடிவங்களை தோற்றுவித்தல் போன்ற வாழ்வின் அனைத்து வடிவங்களும் அனைவரையும்ஒவ்வொருவரையும் உயிர்ப்புடன் ஈர்க்கும். ஒரு புதிய பிரமாண்டமான கால்வாய்கள் பற்றிய பிரச்சினைக்காகஅல்லது சகாராவில் சோலைகளை நிறுவுவதற்காக (இதுபோன்றவொரு பிரச்சினையும் எதிர்கொள்ளப்படும்)வானிலை மற்றும் சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவதன்மீதுஒரு புதிய அரங்கத்தின்மீதுவேதியல் புனைவுகோள்களின் மீதுபோட்டியிடும் இரண்டு இசைப் போக்குகளின் மீதுவிளையாட்டுக்களின் ஒரு சிறந்த முறையின்மீது மக்கள் குழுக்களாக” பிரிவார்கள். ஆனால் இத்தகைய குழுக்கள் வர்க்க அல்லது ஜாதி பேராசைகளால் நச்சுப்பட்டிருக்காது. ஒட்டுமொத்த வெற்றிக்காக அனைவரும் சமமான ஆர்வம் காட்டுவார்கள். போராட்டமானதுமுற்றிலும் ஒரு சித்தாந்த தன்மையைக் கொண்டிருக்கும். அது இலாபத்திற்கு பின்னால் ஓடாதுஅது எந்த கருவியையும் கொண்டிருக்காதுகாட்டிக்கொடுப்புகள் இல்லைஇலஞ்சம் இல்லைவர்க்கங்களாக பிளவுற்ற சமுதாயத்தில் போட்டி” உணர்வை ஏற்படுத்தும் எதுவும் இருக்காது. ஆனால் இது எவ்வகையிலும் முழு ஈடுபாட்டைவியத்தகு முன்னேற்றத்தைதீவிர ஆர்வத்தை இல்லாமல் செய்துவிடாது.

ஒரு சோசலிச சமுதாயத்தில் அனைத்துப் பிரச்சினைகளும்-முன்னர் தன்னியல்பாகவும்தானாகவும் தீர்க்கப்பட்ட வாழ்வின் பிரச்சினைகளும்தனிச்சலுகைப்பெற்ற தெய்வீக ஜாதிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கலையின் பிரச்சினைகளும்- அனைத்து மக்களுக்கும் சொந்தமாக இருக்கும்கூட்டு நலன்களும் மற்றும் ஆர்வங்களும்தனிநபர் போட்டிகளும் மிகப் பரந்த வரவேற்பையும்எல்லையில்லா வாய்ப்புக்களையும் பெறும் என்று ஒருவர் உறுதியாகக் கூறலாம். ஆகவேகலை என்பது புதிய கலைத்துவ போக்குகளின் உருவாக்கத்திற்கும்அவற்றின் வடிவங்களை மாற்றுவதற்கும் தேவையான எந்தவிதமான கூட்டு தூண்டுதல்களோமுறுக்கேறிய சக்தியோஉளவியல்ரீதியான கூட்டு எழுச்சிகளோ இல்லாமல் பாதிக்கப்பட்டுவிடாது. அது அழகியல் உணர்வின் பள்ளியாக இருக்கும்இதைச்சுற்றி குழுக்கள்” அணித்திரளும்அதாவது பண்புநலன்களின்ஆர்வங்களின் மற்றும் உணர்வுகளின் சங்கமங்களாக அவை இருக்கும். படிப்படியாக உயர்ந்து வரும் அடித்தளங்களைக் கொண்டிருக்கும் ஒரு கலாச்சாரத்தில் நிகழும் மிகவும் அதிருப்தியும்அழுத்தமும் நிறைந்த ஒரு போராட்டத்தில்மனித ஆளுமையானதுதொடர்ச்சியான அதிருப்தியிலும் அதன் ஒப்பில்லா அடிப்படை சிறப்புடன்வளரும்அதன் அனைத்து பகுதிகளிலும் மெருகேற்றப்படும். உண்மையில்ஒரு சோசலிச சமுதாயத்தில் தனித்துவம் வீழ்ந்துவிடும் என்றோ அல்லது கலை அதன் சிறப்பை இழந்துவிடும் என்றோ அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை... .




No comments:

Post a Comment