Friday 27 April 2018

It’s Kind of a Funny Story


Joanne Laurier


Ned Vizzini எழுதிய சுயசரிதம் போன்ற 2006 ஆம் ஆண்டு நாவலை அடிப்படையாகக் கொண்ட It’s Kind of a Funny Story திரைப்படம், ரெயன் பிளெக் மற்றும் அன்னா போடனின் (Half Nelson and Sugar) சுவாரசியமான எழுத்து மற்றும் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் சமீபத்திய திரைபடமாகும். இப்படம் மன உளைச்சலுக்கு உள்ளான மற்றும் தற்கொலைக்கு முயன்ற விடலைச்சிறுவன் கிரெய்கை (Keir Gilchrist) பற்றிய படமாக இருக்கிறது. இவர் Executive Pro-Professional High Schoolஇல்—“நாளைய தலைவர்களை உருவாக்கும் பள்ளிசேர்வதற்காக தம்மைத்தாமே மன உளைச்சலில் இருந்து விடுபடுத்திக் கொள்ளும்உத்திக்குள் தள்ளப்படுகிறார். பெரும்பாலும் வாடிக்கையாளர் நெருக்கடிகளில்சிக்கி இருக்கும் ஒரு தொழிலதிபரான தம்முடைய தந்தையை மகிழ்விக்க கிரெய்க் இதை முயற்சிக்கிறார்.

It’s Kind of a Funny Story


புரூக்லின் பாலத்திலிருந்து குதிக்க முயற்சிக்கும் அளவிற்கு அவர் நெருங்கி வந்த பின்னர், அமைதியைத் தேடி நகரத்தின் ஒரு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அறைக்குச் செல்கிறார். மனநல பிரிவில் அனுமதிக்கப்படும் அவர் அங்கே பரிதாபகரமான நோயாளிகளையும்அபாயகரமான நோயாளிகளையும் கூட சந்திக்க நேரிடுகிறது. இது அவருக்குள் அவருடைய பிரச்சினைகளில் தெளிவு கிடைக்க உதவுகிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, அங்கிருக்கும் நிலைமை நிஜத்தில் இருப்பதின் ஒரு மாற்று பதிப்பாகஊறுவிளைவிக்காத ஒரு பதிப்பாகஇருக்கிறது.

இருந்தபோதினும், விரக்தி மிகுந்த நகைச்சுவை பாணியில் இப்படம் ஒரு கருத்தாழமிக்க விஷயத்தை இனிமையாக கையாள்கிறது. பாபியாக நடித்திருக்கும் ஜேக் கலிபியானாகிஸ்சின் நடிப்பால் படம் மெருகூட்டப்பட்டிருக்கிறது. ஆறுமுறை தற்கொலைக்கு முயலும் அவர், “சிலர் ஹேம்ப்டன்ஸிற்கு (சுற்றுலாத்தளம்) விடுமுறைக்குச் செல்வதைப் போல,” வழக்கமாக அவர் தம்மைத்தாமே மருத்துவமனையில் அனுமதித்து கொள்கிறார். “He not busy being born is busy dying,” பாடல் உட்பட பாப் டெய்லனின் பாடல்களை ஒப்பிப்பதில் பைத்தியமாக இருக்கும் அவர், அவற்றை தம்முடையது என்றும் கூறிக் கொள்கிறார்.

ஏனைய பிற விஷயங்களோடு சேர்ந்து இரண்டு யுத்தங்களையும் மற்றும் ஒரு குழப்பமான சமூகத்தையும்எதிர்க்கொள்ளும் ஒரு விடலைச்சிறுவனின் மீது விழும் தனிப்பட்ட மற்றும் சமூக அழுத்தங்களைக் குறித்து குறிப்பிட்ட அளவிலான உணர்வுகளை இப்படம் கையாண்டிருக்கிறது. மேலும், தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் ஒரு விடலைச்சிறுமி (Emma Roberts), அனாதையாக்கப்பட்ட ஓர் எகிப்திய புலம்பெயர்ந்தவர் மற்றும் பேட்ரியாட் சட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் மனம் குழம்பி போன, ஒரு கௌரவம்மிக்க பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற ஒரு கருப்பின பகுத்தறிவு கல்வியாளர் ஆகியோர் மருத்துவமனையில் மறுவாழ்வு அளிக்கப்படுபவர்களாககாட்டப்படுகிறார்கள். இடுப்பை அசைத்து அசைத்து வரும் ஜெர்மி டேவிஷூம் படத்திற்கு வர்ணம் கூட்டுகிறார்.

நிஜத்தைக் குறித்து கிரெய்க் புதிதாக புரிந்து கொள்ளும் காட்சிகள், படத்தின் சில விஷயங்களை மேலும் பலப்படுத்த உதவி இருக்கின்றன. குறிப்பாக இது, 1980களில் பிரபலமாக இருந்த Queen “Under Pressure” இல் இருந்து “She been around/Kicked my brains around the floor/These are the days it never rains but it pours” போன்ற பாடல்களைக் காட்டும் போது, நோயாளிகளின் கவர்ந்திழுக்கும் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுகிறது.



No comments:

Post a Comment