Tuesday 3 April 2018

விமர்சகர்கள் ஏன் டைட்டானிக்கைப் புகழ்கிறார்கள் ?


டேவிட் வால்ஷ் (David Walsh) 





ஜேம்ஸ் கேமரூனால் இயக்கப்பட்டு 1997 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஹாலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமான டைட்டானிக்அதே பெயரில் ஏப்ரல் 10, 1912இல் பயணப்பட்ட கப்பலின் நூற்றாண்டைக் குறிப்பதையொட்டிஅது ஏப்ரல் 4-ல் முப்பரிமாணத்தில்  (3D) திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறதுஇந்த திரைப்படம் முதலில் வெளியிடப்பட்ட போது, ஆச்சரியப்படும்படியான விமர்சன எண்ணிக்கையோடு பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றதுதகுதியற்ற வகையில் இருந்தபோதினும் அது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல அகாடெமி விருதுகளை வென்றது.


1998இன் ஆரம்பத்தில் உலக சோசலிச வலைத்தளம் தொடங்கப்பட்ட போது அதனால் விமர்சிக்கப்பட்ட முதல் திரைப்படங்களில் டைட்டானிக் படமும் ஒன்றாகும்எமது விமர்சனம் வாசகர்களிடமிருந்து அதற்கான கணிசமான எதிர்வினைகளைக் கொண்டு வந்தது. ஜனவரி 30, 1998-ல் பதிப்பிக்கப்பட்ட விமர்சனத்தையும்அதை தொடர்ந்து வந்த மறுமொழிகளையும் இன்று நாம் மறுபிரசுரம் செய்கிறோம்.

*** *** ***

ஜேம்ஸ் கேமரூனின் டைட்டானிக் படத்தைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கின்ற விமர்சகர்களின் விஷயத்தில் சில குறைகள் உள்ளன. அதுவொரு மோசமான படைப்பு - வலுவற்ற கதைவலுவற்ற நடிப்புவலுவற்ற இயக்கத்தைக் கொண்டுள்ளது. அதனுடைய தயாரிப்பிலும் விநியோகத்திலும் அத்தோடு ஊடக பிரச்சாரத்திலும் நூறு மில்லியன் கணக்கான டாலர்கள் செலவிடப்படாமல் இருந்திருந்தால்ஒருவர் சுலபமாக இந்த படத்தைத் தவிர்த்திருப்பார்.



டைட்டானிக்

"கேமரூனின் பிரமாண்ட திரைப்படமான டைட்டானிக்மிக நேர்மையோடு Gone With the Wind உடன் ஒப்பிடக்கூடிய தசாப்தங்களிலேயே ஒரு முதல் படைப்பாக உள்ளது," என்று நியூயார்க் டைம்ஸின் திரைப்பட விமர்சகர் ஜானெட் மாஸ்லின் அவருடைய டிசம்பர் 19 திறனாய்வில் குறிப்பிட்டார். "அத்திரைப்படம் பார்வையாளர்களை அதன் அழகிலும்இதயத்தை கீறும் அதன் அழிந்துபோன உலகிற்குள்ளும் ஈர்த்து வைக்கும் ஒரு பிரமாண்டவியப்பூட்டும் மூன்றேகால் மணி நேர படமாகும்," என்று அவர் தெரிவித்தார். லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் கேட் வின்ஸ்லெட் "நட்சத்திரங்களுக்கு இடையில் அற்புதமான பொருத்தம்" இருந்ததாக எழுதிய மாஸ்லின், "கண்மூடித்தனமான பிடிவாதம் மற்றும் அதன் கொடூரமான விளைவுகளைக் குறித்த ஒரு மறக்கமுடியாத மனதைப் பிழியும் கதையை டைட்டானிக் அளிக்கிறது. அதுவொரு அரிய ஹாலிவுட் சாகச திரைப்படமாகும். அது Fall of Icarus, Ruin of Ozymandias போன்ற பழங்கால துயர பிம்பங்களைச் சாதாரணமாக நினைவிற்கு கொண்டு வருகின்றது,"என்று புகழ்ந்தார்.

இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது ? சமயம் கிடைக்கும் போது ஒரு படைப்பை மிகை மதிப்பீடு செய்யும் ஒரு விஷயமாகஒருவேளை முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் அல்லது போராடி கொண்டிருக்கும் ஒரு கலைஞரை ஊக்குவிக்கும் மற்றும் ஒரு நல்ல செயலில் கொஞ்சம் நல்லெண்ணத்தோடு  செயல்படச் செய்யும்  ஒரு விஷயமாக  இது   இருக்கிறது.  
ஆனால்   இதுபோன்ற மிகைப்படுத்தல் எதார்த்தத்தில் சில அடித்தளங்களைக்கொண்டிருக்க வேண்டும்விமர்சனம் என்பது முற்றிலும் தனிநபரைச் சார்ந்த ஒரு வியாபார முயற்சியல்லஎந்தவொரு புறநிலை தரத்தின்(objectivestandard) அடிப்படையிலும் மாஸ்லினோ அல்லது ஏனையவர்களோஅதில் இருப்பதாக கூறும் விஷயங்களில் எதுவுமே டைட்டானிக்கில் இல்லை.

சிறப்பான விதத்தில் பெரும் வேலை செய்யப்பட்டும்நடுத்தரமான முயற்சியையும் கொண்டிருக்கும் கேமரூனின் சமீபத்திய திரைப்படம் எந்த ஆச்சரியத்தையும் கொண்டு வரவில்லை. 

இதில் மலர்வதற்கு காத்திருக்கிற ஒரு  ஆழ்ந்த கலைத்திறமை இருந்தது என்று   கூறும் அளவிற்கு Aliens, True Lies, The Abyss அல்லது Terminator திரைப்படங்கள் போன்று எதுவுமில்லைகதையைத் தேர்ந்தெடுக்கும் எவ்வித தெளிவோ அல்லது சமூக  அல்லதுஉளவியல்   வாழ்விற்குள் ஊடுறு பார்க்கும் பார்வையோ இல்லாமல்அந்தஇயக்குனர் வெளிப்படையாக ஓர் உத்வேகமுள்ளவராகதிறமையான தொழில்நுட்ப வல்லுனராக மற்றும் ஆதார வளங்களை ஒருங்கிணைப்பவராக இருக்கிறார்.

டைட்டானிக்அது வெளியான டிசம்பர் 19இல் இருந்து நூறு மில்லியன் கணக்கான டாலர்களை உலக அளவில் ஈட்டியிருக்கிறதுஇது இதுவரையிலான காலத்தில் இல்லாதளவிற்கு அநேகமாக ஏறக்குறைய ஒரு பில்லியனுக்கும் நெருக்கமாக மிக அதிகளவில் பணம் திரட்டிய படமாக இருக்கலாம். இந்த வெற்றி வியப்பானதல்லஎல்லாவற்றிற்கும் முதலாவதாக கேமரூனின் திரைப்படம் பரந்த அளவிலான ஊடகத் திரையிடல்களைப் பெற்றுள்ளது
டைட்டானிக் மூழ்குவது குறித்து அங்கே பொது மக்களிடையே பொதுவான ஆர்வமும்அத்தோடு அதை காணவேண்டுமென்ற விருப்பமும் (இது ஊடகங்களின் மூலமாக ஊதி பெரிதாக்கப்பட்டனஇருந்தது.




வெளிப்படையாக இத்திரைப்படம் குறிப்பாக இளைஞர்களை இழுக்கிறதுபாராமவுண்ட் பிக்சர்ஸால் நடத்தப்பட்ட ஆய்வின்படிஇதை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறைப் பார்த்திருப்பவர்களுள் 63 சதவீதம் பேர் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்நடிகர் டிகாப்ரியோ நடித்த ஜாக் லண்டனெஸ்க் கதாபாத்திரமும் மற்றும் ஒரு கொழுத்த மில்லினியரைத் திருமணம் செய்து கொள்ளும்படி தன் தாயாரால் கட்டாயப்படுத்தப்படுகிற ஒரு மகிழ்ச்சியற்ற முதல்தர பயணியும் (வின்ஸ்லெட்) டைட்டானிக்கில் கேமரூனின் பிரதான கதாப்பாத்திரங்கள்எதிர்ப்பை சந்திக்கும் காதலர்களின் முறிந்துபோகும் அந்த காதல் கதை இயல்பாகவும்வழக்கமாகவும் இளைஞர்களின் ஆர்வத்திற்குள் இருப்பதும் தான்.

ஆனால் இந்த பிரச்சினை பொருத்தமாகவோ அல்லது திருப்திகரமான விதத்திலோ தீர்க்கப்படுகிறதா?

காதல் கதை உட்பட ஏறத்தாழ திரைப்படத்தின் ஒவ்வொரு அம்சமும் வழக்கத்தில் நைந்து போனதாகவும்ஊகிக்க கூடியதாகவும் வழங்கப்பட்டுள்ளதுநடந்துகொள்ளும் விதங்களையும்தனிமனிதவியல்பின் பண்புகளையும்முகபாவனைகளையும் ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்துகின்றன. அவை உடனடியாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பதோடுதிரைப்படம் முழுவதிலும் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றனதிருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அந்த வில்லன்நாம் அவரை முதலில் பார்ப்பதிலிருந்து கடைசி வரையிலும் ஓய்வில்லாமல் கொடூரமானவராகவும், சுயநலவாதியாகவும் நடந்து கொள்கிறார்துர்குணமுடையஅடக்கி வைக்கும் தாய் ஓய்வில்லாமல் துர்க்குணமுடையவராகவும்ஒடுக்குபவராகவும் இருக்கிறார்; "மூழ்காத "மோலி பிரௌன் ஒட்டாதவகையில் மிதந்து கொண்டே இருக்கிறார்.



கட்டுக்கடங்காத ஜாக் (டிகேப்ரோமேல்-வர்க்க ரோஸை (வின்ஸ்லெட்)சந்தித்து காதலில் விழுகிறார்பின்னர் அவர்களுக்குள் ஊடல் ஏற்படும்,அதை சரிகட்டுவார்கள்காதலிப்பார்கள்கடுங்கோபமுடைய திருமண-நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளையை எதிர்கொள்வார்கள்பின் அவரை எதிர்த்து வெற்றி பெறுவார்கள்இப்படியான இன்னும் இதர பிற விஷயங்கள் நடக்கும் என்பதில் நமக்கேதேனும் சந்தேகம் உண்டா?

தற்கால இளைய தலைமுறையின் ஆர்வங்களுக்காக அவர்களைக் கூறுவதற்கில்லை. தற்போதைய ஸ்டூடியோ அமைப்புமுறையின் மிக அற்பத்தனமான படைப்புகளைத் தவிர அவர்கள் வேறு எதை பார்த்திருக்கிறார்கள்சில தசாப்தங்களுக்கு முன்னர் இருந்த ஜனரஞ்சக சினிமாவே இதுபோன்ற கதையைக் கூடுதல் சிந்தனையுடனும் அறிவுநுட்பத்துடனும் சித்தரித்ததுஅவற்றின் எல்லா பிழைகளுக்கும் Bonnie and Clyde, The Graduate (இரண்டும் 1967ல் வெளி வந்தனஅல்லது ஃப்ரேங்கோ ஜெப்ரெல்லியின் Romeo and Juliet (1968) படத்தையே ஒருவர் நினைத்து பார்க்கிறார்.

டைட்டானிக் கப்பலின் விதிமுழுக்க முழுக்க திகைப்பூட்டும் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கிய ஒரு அசாதாரணமான நிகழ்வாகும். உயிர் வாழ்க்கை அல்லது வரலாற்றோடு அலுத்து போன அல்லது அதன் சாத்தியக்கூறுகளுக்கு கண்மூடி போயிருக்கும் ஒரு இயக்குனரைக் குறித்து ஒருவரால் என்ன கூற முடியும்வெளிப்பார்வைக்கு ஒருசில மனக்கிளர்ச்சியை அவர் காட்டுகிறார். அதாவது ஒரு மூழ்கி கொண்டிருக்கும் கப்பலில் ஆயிரக்கணக்கானவர்கள் நிச்சயமாக மரணத்தை எதிர்கொண்டிருக்கின்ற போது பாதியளவிற்கு மூழ்கிய ஒரு கப்பலையும்ஒரு துப்பாக்கி சண்டையையும் அவர் காட்டுகின்றார். காமரூனின் கற்பனைத்திறன் குறைபாடு அவ்விஷயத்தில் ஏதோ கிட்டத்தட்ட அபத்தத்தைக் கொண்டுள்ளது. (உண்மையான மயிர்கூச்செறியும்படியான கப்பல் மூழ்குவதைக் காண ஆண்ட்ரிவ் எல்ஸ்டோனின் The Last Voyage (1960) படத்தைப் பார்க்கலாம். இது வீடியாவிலேயே காண கிடைக்கிறது.)

அதற்கடுத்தாற் போல் படத்தில் மறைமுகமாக "தீவிரமான" அரசியல் குறிப்பீடு இருக்கிறதோ என்று கருதச் செய்கிறது. இது டைட்டானிக் சார்பான அனைத்து விவாதங்களிலும் தட்டி கழிக்க முடியாததாய் உள்ளது. "இது ஏழை மற்றும் பணக்காரர்களின் வெவ்வேறு நிலைமைகளைப் பாரபட்சமின்றி சித்தரிக்கும் ஒரு படமாகும்," என்று மாஸ்லின் விவரிக்கிறார். அத்தோடுநகைச்சுவையாக கேமரூனையும் சேர்த்து கொண்டு, "நாங்கள் மார்க்சிச வறட்டுவாதத்தையும் கொஞ்சம் பிடித்துக் கொண்டிருக்கிறோம் என்று குறிப்பிடுகிறார். இது முட்டாள்தனமாக இருக்கிறது. 1912-ல் ஏழைகளும் பணக்காரர்களும் வித்தியாசமாக நடத்தப்பட்டார்கள் என்பதும், 86 ஆண்டுகளுக்குப் பின்னரும் அதுவே தொடர்கிறது என்பதும் பெரும்பாலான நபர்களுக்கு அனேகமாக தெரியும்.



கேமரூன் அவரது பார்வையாளர்களுக்கு என்ன அளிக்கிறார் என்றால் ஒருபுறம் வர்க்க உறவுகளின் ஒரு மேலோட்டமான விமர்சனத்தை அளிக்கிறார்ஆனால் மறுபுறம் அதையே அவர் புளித்துபோன மற்றும் அனுசரித்து போகும் கண்ணோட்டத்தோடு அளிப்பதை அதிகளவில் கையில் எடுக்கிறார். டைட்டானிக்கின் நிஜமான கரு என்னவென்றால் இவை தான்மனிதர்களின் நடத்தையில் எந்த தடுமாற்றங்களும் இருப்பதில்லைவலி நிறைந்தமுறுக்கி பிழியும் முடிவுகள் அவசியப்படும் பிரச்சினைகளே கிடையாதுசமூகம் மற்றும் வாழ்க்கை குறித்த அனைத்தும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ளதுமுதல் பார்வைக்கு தெரிவதைப் போலவே உலகம் அதேபோன்று உள்ளதுஒருவர் மகிழ்ச்சியைக் காண வேண்டுமானால் அவருக்கு வெறுமனே சிறிது அதிஷ்டமும்கொஞ்சம் அறிவுக்கூர்மையும் இருந்தால் போதுமானது ஆகியவை. இந்த படம் வெறுமனே வர்த்தகரீதியில் வெற்றி பெறுவதற்கான அதிஷ்ட தேவையாக உள்ளது. இவற்றுள் எது ஆழ்ந்த விமர்சன சிந்தனையை உண்டாக்கும்?

நியூயார்க் திரைப்பட விமர்சகர்களின் "மேற்தட்டு" குழுவின் பல அங்கத்தவர்கள் இத்திரைப்படத்தில் அதிகம் கவனம் செலுத்தி இருப்பது ஏன்என்பதில் தான் உண்மையான பிரச்சினை இருக்கிறது. டைட்டானிக்கின் வெற்றி அல்லது தோல்வியில் சவாரி செய்கிற மில்லியன் கணக்கான டாலர்கள் எல்லா விமர்சகர்களின் முடிவுகளின் மீதும் நேரடியாக  தங்கியுள்ளது என்று கூறுவது தவறானதாக இருக்கும்ஆனால் இன்னும் அதிக சிக்கல்கள் இதில் உள்ளடங்கி உள்ளன.



கேமரூனின் திரைப்படத்திற்கான பாராட்டு ஒரு நல்லெண்ண அம்சத்தைக் கொண்டுள்ளது. திரைப்பட திறனாய்வாளர்கள் பார்க்க பரிந்துரைக்கும் ஒரு படம் என்பது போல பல முக்கிய செய்திகள் கூறுகின்றனதுரதிர்ஷ்டவசமாகஇந்த கற்பனைபூர்வ படைப்பு டைட்டானிக்குடன் வெகு குறைவாக தான் ஒத்திருக்கிறதுஅனைத்திற்கும் மேலாகதற்போது என்ன இருக்கிறதோ அந்த மங்கி போயிருக்கும் சில சிறப்புகள்திரைப்பட இயக்கத்தின் நெருக்கடியை மற்றும் அதன் வரலாற்று ரீதியிலான மற்றும் புத்திஜீவித ஆதாரங்களை ஆராய்வதன் மீதான ஓர் ஆழ்ந்த பார்வையைக் கையாளாமல் இருப்பதற்கான விருப்பம் தான் அந்த நல்லெண்ணத்தில் தங்கியுள்ளது.

அனைத்திற்கும் மேலாக அமெரிக்க வெகுஜன சினிமா உலக திரையரங்குகளில் ஆதிக்கம் செலுத்துகிறது என்ற உண்மை முற்றிலுமாக அதன் தாக்கத்தைக் கொண்டுள்ளது. அதன் பலம் வெற்றி பெறுகிறது என்பது மட்டுமல்லஅது விஷயங்களை நம்ப வைக்கிறது என்பதையும் நாம் அறிவோம். ஒரு வெளிப்பார்வையாளர் போன்று பல வருடங்கள் இருந்த பின்னர், சந்தேகத்திற்கு இடமின்றி "கலை" விமர்சகர் தற்போதைய நிலைமைகளின்கீழ் இணங்கி நடக்கவும், சார்பற்ற ஒரு எதிர்பாளராக கடந்து செல்லவும், கூட்டத்தில் ஒருவராக இருக்கவும் வெளியிலிருந்தும், உள்ளிருந்தும் கணிசமான அளவிற்கு அழுத்தத்தை உணர்கிறார். டைட்டானிக் பலிபீடத்தில், ஹாலிவுட் திரைப்பட இயக்கத்தின் பெரும் பாரம்பரியத்தோடு ஒருவராக ஆகி எதிர்ப்பின்றி இணங்கி நடக்க வேண்டியுள்ளது என்ற வாதத்தோடு அந்த "கலை" விமர்சகர் அவரது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறார்.

டைட்டானிக்கின் செல்வாக்கும்அதன் மீதான விருப்பமும் வேகமாய் மறைந்து போக கூடியதென்று நாம் நம்புகிறோம். ஏனைய குரல்களும்ஏனைய கண்ணோட்டங்களும் எழுந்து கொண்டிருக்கின்றன. கேமரூன் திரைப்படத்திற்குரிய பாராட்டுகள் ஒருசில ஆண்டுகளில் ஒரு வறிய புத்திஜீவிய சகாப்தத்திற்கான ஓர் அறிகுறியாக முதன்மையாக நினைவு கூரப்படும். அதை கடந்து செல்வோர்களில் வெகு சிலர் மட்டுமே அதுகுறித்து புலம்பி கொண்டிருப்பார்கள்

நன்றி : World Socialist Website




No comments:

Post a Comment